• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

37. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
திருவான்மியூர்!

தரகர் சொன்னபடி நேரத்திற்கு வந்து சேர்ந்தார்!

பையனின் புகைப்படத்துடன் விவரங்களையும் தந்தார்!

"இந்த இடம் நம்ம பாப்பாவுக்கு அமைந்தால், அமோகமா வாழவாள்மா! வசதியான இடம்! நல்ல மனுசங்க! உங்களுக்கு சம்மதம்னா, நான் பாப்பாவோட விவரத்தை அவங்ககிட்டே தந்துடுறேன்! என்னய்யா சொல்றீங்க? "

வரதனுக்கு பையனை பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது! மனைவியின் அபிப்பிராயம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை! ஆகவே முடிவை துணைவியிடம் விட்டுவிட்டார்!

பவானிக்கும், பிடித்துதான் இருந்தது! சொந்தமாக தொழில் செய்யும் குடும்பம், நினைத்தால் போய் பார்க்கும் தூரம் தான்! ஆயினும், வசந்தனிடமும் ஒரு வார்த்தை கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்!

"எங்களுக்கு பையனை பிடிச்சிருக்கு, நாங்க இன்னிக்கு ராத்திரி எங்க மகன்கிட்டே பேசிட்டு நாளைக்கு முடிவு சொல்றோம்!"

"நல்லதும்மா! நல்ல இடம் இது! அதை மனசுல வச்சுக்கோங்கம்மா! !நாளைக்கு எனக்கு தகவல் சொல்லுங்க! அப்ப நான் போய் வர்றேன் ஐயா!" என்று விடைபெற்று அவர் சென்று விட்டார்!

🩵🩷🩵

கொட்டிவாக்கம்!

அதே ஞாயிற்றுக்கிழமை!

பிற்பகலில்.. சுரேந்திரன் உணவை முடித்துவிட்டு, சற்று நேரம் நடந்துவிட்டு அப்போதுதான் போய் படுத்தார்!

பெண்கள் இருவரும், பேசிக் கொண்டிருந்தனர்!

"எனக்கு ஒரு யோசனை சாந்தி! என்றார் திலகம்!

"சொல்லுங்க அத்தை! என்றவாறு அவர் எதிரே வந்து அமர்ந்தார் சாந்தி!

"கோவிலில் பார்த்தேன்னு சொன்னேன்ல, அந்த அம்மாவும் பெண்ணும்! அந்த குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! பங்களாவில் குடியிருந்தாலும், நாமளும் மிடில்கிளாஸ்தான்! அவங்களும் நம்மளைப் போல மிடில்கிளாஸ்! நம்ம அரசு மகனுக்கு அந்த பெண்ணை கட்டி வைக்கலாம்னு எனக்கு தோனுச்சு!
அவனும் பிள்ளைக்கு ஏற்ற மருமகளை தேடிட்டு இருக்கிறான்! இந்த சம்பந்தம் அமைந்தால் எனக்கு சந்தோஷம்! ஆனால் அரசு என்ன சொல்வான்னு தெரியலை!"

"செண்பகம் அக்கா, "பெண் பார்க்க லட்சணமா இருக்கணும், நாலு எழுத்து படிச்சவளா, பிரியனுக்கு தொழிலில் கைகொடுக்கிறவளா இருக்கணும்னு" என்று சொன்னாங்க! அந்த வகையில், நீங்க சொன்னதை வச்சு பார்க்கிறப்போ இந்தப் பெண் நம்ம பிரியனுக்கு ஏற்றவளா இருப்பான்னு தான் தோனுது அத்தை! தமிழரசன் மாமாவும் காசு பணத்தை பெரிசா நினைக்கிறவர் இல்லையே!

"ம்ம்.. நீ சொல்றதும் சரிதான்!
இன்னாருக்கு இன்னார்னு பிறக்கும்போதே எழுதிவைச்சிருக்கும்! பிராப்தம் இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது! நான் அரசுக்கிட்டே பேசுறேன்!" என்றவர், "நான் போய் கொஞ்சம் படுக்கிறேன், என்று எழுந்து நான்கு எட்டு எடுத்து வைத்தவர் தள்ளாடவும், சாந்தி எழுந்தோடி வந்து அவரை தாங்கிப் பிடித்து, ஒரு இருக்கையில் அமர வைத்தார்!

"அத்தை நான் நேத்தே ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டேன்! " என் உடம்புக்கு ஒன்னுமில்லைனு" சொல்லி, நீங்க வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சீங்க! இப்ப பாருங்க மறுபடியும் மயக்கம் வந்துருச்சு! இப்ப, உடனே நீங்க வரலைன்னா நான் இன்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிவிடுவேன்! அப்படியே அண்ணிக்கும் தகவல் அனுப்பிடுவேன்!" என்றவாறு சாந்தி கோபமாக கைப்பேசியை எடுக்கவும்,

"இவ ஒருத்தி, எதுக்கு எடுத்தாலும் மிரட்டிக்கிட்டே இருப்பா! சாதாரண மயக்கம் தானே ? வயசாகுதில்லையா? அதனால் வர்றதுதான் இந்த கோளாறு! அதுக்கு கொஞ்சம் இஞ்சியும் தேனும் கலந்து குடிச்சா சரியாப் போகும்! நீ அதை கொண்டுவா முதல்ல!

"அதைத்தானே நேற்று குடிச்சீங்க! இன்னும் சரியாகலையே அத்தை!
சும்மா ஒரு செக்கப் தானே ? என்னவோ ஆபரேஷனுக்கு அழைச்சது போல அலட்டிக்கிறீங்களே? என்று சலித்துக் கொண்ட போதும், அவர் கேட்டதை செய்து கொணர்ந்து தந்தார் சாந்தி!

"இது சாப்பிட்டும் சரியாகலைன்னா நான் உன் பேச்சை கேட்கிறேன் சாந்தி! சரிதானா?" திலகம் சின்ன குழந்தை போல சமாதானம் செய்து கொண்டிருந்த போது, அழைப்பு மணி ஒலித்தது!

பணிப்பெண் சிந்து, சென்று கதவைத் திறந்தவள், "வாங்கய்யா" என்று வரவேற்றாள்!

தமிழரசன் தான் வந்திருந்தார்! சென்னைக்கு வேலை விஷயமாக வரும்போது அவசியம் ஓர் எட்டு இங்கே வருவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்!

"அடடே அரசு, வாப்பா, உனக்கு நூறு ஆயுசு!" என்று உற்சாகமாக வரவேற்றார் திலகம்!

"வாங்க மாமா, அக்கா, பிரியன் எல்லாம் சௌக்கியமா?" என்று சாந்தியும் வரவேற்றாள்!

"அவ்வளவு வயசு எதுக்கு அத்தை? ஆரோக்கியமா இருக்கணும், பேரன் பேத்தியை கொஞ்சிட்டு, கொஞ்ச காலம் பிள்ளைகளுக்கு வழிகாட்டிட்டு கண்ணை மூடினா போதும்! அப்புறமாக அவங்க வாழ்க்கையை அவங்க வாழப்போறாங்க"என்றவாறு அமர்ந்தார் தமிழரசன்!

"மாமா, இப்படி பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்? என்றவாறு அவர் கையில் தண்ணீர் குவளையை தந்தார் சாந்தி!

"ஆமாப்பா அரசு, இதென்ன நான் நல்ல விசயம் பேசணும்னு நினைக்கிறப்போ இப்படி பேசுறியே? இன்னும் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கலை அதுக்குள்ள, எதுக்கு இப்படி சலிச்சுக்கிறே? நீயும், செண்பகமும் ரொம்ப காலம் பிள்ளைகளுக்கு பக்கபலமாக கூடவே இருந்து அவங்க வளர்ச்சியை பார்க்க வேண்டாமா? பேரன் பேத்திகளை கொஞ்சறதும், அதுகளை பள்ளிக்கூடம் கூட்டிட்டு போறது எல்லாம் கொடுப்பினை இல்லையா?" என்று திலகம் அவர் பங்கிற்கு கண்டித்தார்!

"தெரியாம சொல்லிட்டேன் அத்தை! இனிமே பேசலை சரியா? என்றவர், ஆமா என்னவோ நல்ல விசயம்னு சொன்னீங்களே? என்ன அது ?"

"நம்ம பிரியனுக்கு ஏதும் வரன் அமைஞ்சதாப்பா?"

"இல்லை அத்தை, பொண்ணு அழகா இருந்தால், படிப்பு இல்லை! படிப்பு இருந்தால், வேலைக்கு போவேன்னு கன்டிஷன் போடுது! என்னத்தை சொல்ல?

"இப்ப பொண்ணுங்க தான் கன்டிசன் போடுதுக! என்றவர், உன்கிட்டே ஒரு விசயம் கேட்கிறேன் பதில் சொல்லு!"

தமிழரசன் கேள்வியாக நோக்கினார்!

"கல்யாணத்துக்கு அப்புறமாக பொண்ணு படிக்க ஆசைப்பட்டா நீ அனுப்புவியா?"

"தாராளமாக படிக்க அனுப்புவேன் அத்தை ! படிக்கிற பிள்ளைகளுக்கு நாம தானே ஊக்கம் தரணும்?"

"அப்படின்னா சரிதான்! முந்தா நாள் நான் கோவிலுக்கு போயிருந்தேன் அரசு,"என்று தொடங்கி விவரம் சொன்னார் திலகம்!

"உங்களுக்கு சரி என்றால் நான், செண்பகத்தையும் பிரியனையும் உடனே கிளம்பி வரச் சொல்லட்டுமா?"என்றார் தமிழரசன் ஆவலாக

"அரசு அவசரப்படாதேப்பா, அவங்க வீட்டுல பெத்தவங்க வேலைக்கு போறவங்க! அதனால, லீவு எடுக்க அவகாசம் தரணும் இல்லையா? அதனால, என்ற திலகம் சைகை காட்டவும், சாந்தி நாட்காட்டியை எடுத்து வந்து தந்தார்! அதில் சற்று நேரம் ஆராய்ந்தவர்,தொடர்ந்து சொன்னார்,"வர்ற வெள்ளிக்கிழமை, நல்ல நாள், முறையாக பெண் பார்க்க, எல்லாருமாக,கிளம்பி வாங்க! நாம எல்லாருமாக போய் பார்ப்போம்! சரிதானா?"

"சரி தான் அத்தை!"

"மாமா, நீங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க! நான் அத்தையை கூட்டிட்டு ஆஸ்பத்திரி வரை போய் வர்றேன்!" என்றார் சாந்தி!

"இந்தா சாந்தி, எனக்கு ஒன்னும் இல்லை, நல்லா குண்டுகல்லாட்டம் இருக்கிறேன்! நீ போய் கொஞ்சம் நேரம் படு, எனக்கு ஒரே அசதியா இருக்கு, போய் படுக்கிறேன்!" சாயந்திரம் காபிக்கு எழுப்பு போதும்!" என்ற திலகம், அவரது அறைக்கு விரைந்து விட்டார்!

"அத்தைக்கு என்னாச்சு சாந்தி?"
தமிழரசன் கவலையாக கேட்டார்!

சாந்தி விவரம் சொன்னார்!

"அப்படியா சங்கதி, நீ கவலையை விடும்மா, நான் பார்த்துக்கிறேன்! காலையில் முதல் வேலையாக அவங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் வந்தப்புறமா தான், நான் ஊருக்கு கிளம்புவேன்!" என்று அவருக்காக ஒதுங்கியிருந்த அறைக்கு சென்றுவிட்டார்!

சாந்தி, சிறு புன்னகையுடன் அப்பாடி என்று பெருமூச்சு விட்டார்!

🩷🩵🩷

திருவான்மியூர்

வீட்டினர் மூவரும் அமைதியாக இரவு உணவில் ஈடுபட்டிருந்தனர்! ஆளுக்கு ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்!

அப்போது வரதனின் கைப்பேசி ஒலித்தது! வித்யா எழுந்து சென்று எடுத்து வந்தாள்!

"அண்ணா தான் அப்பா! என்று அவரிடம் தந்துவிட்டு, சாப்பிடுவதை தொடர்ந்தாள்!

"நல விசாரிப்புகள் முடிந்ததும், வித்யாவுக்கு வந்திருந்த வரன் பற்றி விவரம் தெரிவித்தார் வரதன்!

"அப்பா, வரன் பார்க்கிறது இருக்கட்டும்," வித்யா மேலே படிக்கட்டும்! அதற்கான ஏற்பாடு முதலில் செய்ங்க! வரன் வந்தால், பொண்ணு படிக்கிறாள், என்று சொல்லிடுங்க!" என்றான் வசந்தன்!

"என்னங்க சொல்றான்? என்று கைப்பேசியை வாங்கினார் பவானி," வசந்தா, அவங்களை பெண் பார்க்க வரச் சொல்லட்டுமா? பையன் பார்க்க நல்லா இருக்கான்! வசதியான குடும்பம்! எங்களுக்கு பிடிச்சிருக்கு! உனக்கும் அனுப்பி வைத்தேனே படத்தை! பார்க்கலையா நீ?" என்று படபடத்தார்!

"அம்மா, இருங்க இருங்க, எதுக்கு இவ்வளவு வேகமாக பேசுறீங்க, ஐஎஸ்டி என்றா? வித்யா மேலே படிக்கட்டும்!"

"டேய் என்னடா சொல்றே? நாம ஏற்கனவே பேசினோமேடா? இப்ப என்னடான்னா படிக்கச் சொல்றே?"

"எல்லாம் காரணமாக தான்மா! வித்யா ஆசை நிறைவேறட்டும்! இன்னும் இரண்டு வருசத்தில் நானும் நல்லா சம்பாதிச்சிடுவேன்!
நல்லா ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிடலாம்!"

"அப்போ நாளைக்கு தரகர்கிட்டே வேண்டாம்னு சொல்லிடவா? "

தாயின் குரலில் என்ன கண்டானோ?

"இல்லை அம்மா, மாப்பிள்ளை வீட்டுக்கு தகவல் கொடுக்க சொல்லுங்க! பெண் பார்க்க வந்தால், அவள் படிக்கிறதை சொல்லி, திருமணத்துக்கு பிறகு தொடரலாமான்னு கேளுங்க! அவங்க ஒத்துக்கலைன்னா! விட்ருங்க! அதுக்கு பிறகு வேற வரன் பார்க்க வேணாம்னு தரகர்கிட்டே தெளிவா சொல்லிடுங்க! சரிம்மா, வித்யாக்கிட்டே கொடுங்க" என்றதும் பவானி யோசனையுடன் மகளிடம் கொடுத்துவிட்டு, சாப்பிட அமபொற்செல்வி பெயருக்கு ஏற்றவளாக பொன்னால் செய்த சிலை போல அத்தனை அழகு! அவள் செல்வந்தர் வீட்டு இளவரசி என்றால் மிகையில்லை. அப்பேற்பட்ட பெண்ணுக்கு பெற்றவர்கள் சிறு பிராயத்திலேயே தவறியிருந்தனர்.

அவளை வளர்க்கும் பொறுப்பு, தந்தை வழி ததாத்தா,பாட்டியான ஞானசேகர் - துர்காவிடம் வந்தது. பேத்தியை வளர்க்கும் பொறுப்பை மீறி, மகன் மருமகள் அல்பாயுசில்
போனது துர்காவை வெகுவாக பாதித்தது. அதனால் அவரது உடல் நலனும் கெட்டது. பொற்கொடி வயதுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அவரும் போய் சேர்ந்து விட்டார்.

ஞானசேகரனுக்கு வயதுப் பெண்ணை எப்படி போற்றி பாதுகாப்பது என்ற கவலை. தனது நெருங்கிய நண்பரின் ஆலோசனைப்படி, சட்டதிட்டங்கள் அதிகமாக இருக்கும் ஊட்டி கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார். விடுமுறைகளில் வீட்டிற்கு வந்தாலும் கூட அவள் கூண்டு பறவை தான். சிறு வயது முதலாக, வளர்த்த பூவாயி பாட்டி தான் அவளது பேச்சு துணைக்கு. அவளுக்கும் வயது வித்தியாசம் காரணமாக அதிக நேரம் அவளுடன் செலவிட முடியாத நிலை. வீட்டின் பின்னால் பெரிய தோட்டம், ஒருபுறம் நீச்சல் குளம், முன்புறம் அழகான புல்தரையுடன் லாண். அங்கே அமர்ந்து பேச இருக்கைகளுடன் வெயில் படாமல் இருக்கு வண்ணங்களால் குடையும் இருக்கும். ஆனாலும் அங்கே சென்று அமரக்கூட பேத்திக்கு அனுமதி இல்லை.

பொற்செல்வி, பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாள். மேற்கொண்டு அவளுக்கு படிக்க மிகவும் ஆசை. தாத்தாவிடம் கெஞ்சியதில், அவரும் மனமிறங்கி, அவளை பெரிய கல்லூரியில் சேர்த்துவிட்டார். கல்லூரியில் கடைசி வருடம் எல்லோருமாக, கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட்டனர். பொற்கொடிக்கு தாத்தா அனுமதிக்க மாட்டார் என்று நன்றாக தெரியும். ஆகவே அவள் வரவில்லை என்றிருந்தாள். ஆனால் உடன் படித்த அத்தனை பேருமாக சேர்ந்து அவளுக்கான பணத்தை கட்டிவிட்டனர். தாத்தாவிடம் சொல்லாமல் அந்த பயணத்தை மேற்கொண்டாள் பொற்செல்வி.

உள்ளூர சற்று பயமாக இருந்தது. ஆனாலும் அவளுக்கு இந்த வாய்ப்பை விட்டால் இது போல இன்னொரு சந்தர்ப்பம் அமைவது கடினம். ஆகவே இயற்கையை அனுபவித்து ரசித்தாள். அத்தனையையும் தன் கைப்பேசிக்குள் அடக்கிக் கொண்டாள். அனைவரும் துள்ளல் நடை போட்டு முன்னே செல்ல, அவள் மட்டுமாக மெல்ல இயற்கையை ரசிக்கும் பாவனையில் மெதுவாக நடந்து சென்றாள். அவளுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் சாரதா, அவளுடன் பொறுமையாக உடன் வந்தாள்.

"சாரு, அவர்களோடு போப்பா, நான் மெதுவாக வந்து சேர்ந்து கொள்கிறேன்" என்ற பொற்செல்வியின் பேச்சை அவள் காதில் வாங்கவில்லை.

"நீ எங்களோடு இந்த பயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உன் வாழ்க்கையில் பின்னொரு நாளில் திரும்பிப் பார்க்கும் போது இந்த நாட்கள் உனக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அது மட்டுமில்லை.. உன்னை தனியா விட்டுட்டு நகரமாட்டேன் என்று ஊரிலேயே சொன்னேன்ல? என்றாள் சாரதா.

தோழியை அணைத்துக் கொண்டவளின் விழிகளில் கண்ணீர் துளிகள்.

"ஏய், இப்ப எதுக்கு கண் கலங்குறே செல்வி? யாரும் பார்த்தால் என்ன நினைப்பாங்க? கண்ணை துடைச்சிக்கோ" கண்டிப்பும் கனிவுமாக சாரதா சொல்ல, லேசாக புன்னகைத்தாள்.

அந்த சமயத்தில் தான் சத்யன் தன்னுடன் படித்த நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தான்.

காலையில் திருமணம் முடிந்து, விருந்தும் உண்ட பிறகு, உடனடியாக வீடு செல்ல அவசரமில்லை என்று அவன் சுற்றிப் பார்க்க கிளம்பினான்.

பிற்பகல் மூன்று மணி இருக்கும்..

கொடைக்கானலில் உள்ள பூங்கா ஒன்றில், மாணவிகள் இரண்டு அணிகளாக பிரிந்து பந்து போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். பொற்செல்வி, அங்கே உட்கார போடப்பட்டிருந்த பலகையில் அமர்ந்து தோழிகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்தவாறு அங்கே வந்த சத்யசீலன். அந்த பலகையில் சற்று தள்ளி அமர்ந்து கொண்டான்.

சந்தன நிறத்தில் சிலை போன்றிருந்த, பொற்செல்வியை பார்த்த மாத்திரத்தில் அவனால் விழிகளை அகற்ற முடியாமல் சிலகணங்கள் திணறித்தான் போனான் சத்யசீலன்.

அடர் பச்சை நிறத்தில் சுடிதாரும், மேலாக இளம் ரோஜா நிறத்தில் ஸ்வெட்டரும் அணிந்திருந்தாள்.

சத்யன் எப்போதும் பெண்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது தான் வழக்கம். ஆனால் பொற்செல்வி விஷயத்தில் அவன் பார்வையும், மனதும் அவளை விட்டு அகல மறுத்தது. அவன் எத்தனையோ அழகான பெண்களை பார்த்திருக்கிறான் தான். ஆனால் இவளிடம் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று அவனை வெகுவாக ஈர்த்தது.

ஏதோ உள்ளுணர்வின் உந்துதலால், திரும்பிய பொற்செல்வி, சத்யனைப் பார்த்ததும், லேசாக முகம் சிவக்க, சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டாள். அதற்கு மேல் அவளால் தோழிகளின் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுள் இனம்புரியாத படபடப்பு உண்டாயிற்று. அப்போது அவளருகே மூச்சு வாங்க வந்து அமர்ந்தாள் சாரதா!

"ரூமுக்கு போகலாமாப்பா? என்றாள் பொற்செல்வி.

"அதற்குள்ளாகவா? எல்லாரும் டிபன் காபி சாப்பிடப் போறதாகப் பிளான். அது முடிஞ்சதும், எப்படியும் இருட்ட ஆரம்பிசசிடும், குளிரும் கூடிவிடும், அதனால நேராக ரூமுக்கு போயிடலாம், என்றவள், "ஆமா உனக்கு உடம்பிற்கு ஏதும் செய்கிறதாப்பா? "

"சே, சே அதெல்லாம் ஏதும் இல்லைப்பா, காலையில் இருந்து சுத்திட்டு தானே இருக்கிறோம், இப்போதே மணி நாலரை ஆயிடுச்சு, அதான், இனிமே பார்க்கறதுக்கு நாளைக்கு தான் கிளம்புவாங்கனு நினைச்சேன்.. "

அதற்குள்ளாக, அந்த பெண்கள் குழுவில் இருந்த ஒருத்தி," ஏய் செல்வி, சாரதா இரண்டு பேரும் வாங்கப்பா, இப்பவே கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று உரக்க அழைத்தாள்.

"சரி, சரி நீங்க போங்க, நாங்க பின்னாடியே வர்றோம், என்று சாரதா பதிலளித்து விட்டு எழுந்தாள், அவளுடன் பொற்செல்வியும் எழுந்தாள், தன்னையும் அறியாமல் அவள் பார்வை சத்யனிடம் சென்று மீண்டது.. அதன் பிறகு அவள் தோழியுடன் நடக்க,

சத்யனுக்கு வானத்தில் பறப்பது போன்றதொரு உணர்வு. படிப்பை முடித்து வேலையும் பார்த்துக் கொண்டிருக்கும் அவன் ஏதோ விடலைப் பையனைப் போன்ற நிலையில் இருப்பதை எண்ணி, உள்ளூர சற்று லஜ்ஜை உண்டாயிற்று. ஆனால் ஆசை வெட்கம் அறியாது என்று சொல்லுக்கு ஏற்ப, அவனும் எழுந்து அவர்கள் பின்னோடு சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தான்.

பூங்காவிற்கு வெளியே அவர்களின் கல்லூரி பெயர் தாங்கிய துணியிலான பேனருடன் நின்றிருந்தது ஒரு பேருந்து. பேருந்தின் படிகள் சற்று உயரம் என்பதாலோ என்னவோ, கீழே முக்காலி ஒன்றை வைத்து , அதன் துணையுடன் எல்லோரும் ஏறிக் கொண்டிருந்தனர்.

சத்யன் தங்கியிருந்த விடுதியின் உபயத்தில் கொணர்ந்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து உயிர்பித்தான்.

பஸ் கிளம்பவும் ,அவனும் பின்னே சென்றான். ஏனோ இன்னொரு முறை அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தீவிரமாகியது..!

அந்த கல்லூரி பேருந்து ஒரு நடுத்தரமான உணவகத்தில் சென்று நின்றது. சத்யனும் தனது வண்டியை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.

மாலை நேர பரபரப்பில் இருந்தது உணவகம்.

பெண்கள் நான்கு பேராக பிரிந்து மேசைகளை ஆக்கிரமிக்க, பொற்செல்வியும் சாரதாவும் இருவர் அமரும் இருக்கையில் சுவர் ஓரமாக அமர்ந்தனர்.

பொற்செல்வி அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு மேசை முன் அமர்ந்து கொண்டான் சத்யன்.

பொற்செல்வி இப்படி வெளியிடங்களுக்கு வருவது இதுதான் முதல்முறை. பள்ளி கல்லூரி இரண்டு வாழ்விலும் அவளுக்கு படிப்பு மட்டும்தான் பிரதானமாக இருந்தது. கல்லூரியில் சேர்ந்த பிறகே அவளுக்கு சாரதாவின் நல்ல நட்பு கிடைத்தது. அவள் தோழியாக இருப்பதைவிட ஒரு நல்ல சகோதரியாகத்தான் பெரும்பாலான நேரங்களில் நடந்து கொள்வாள். பொற்செல்விக்கு அந்த அன்பான கண்டிப்பு பிடிக்கும்.

சாரதா பேரரை அழைத்து உணவுக்கு ஆர்டர் கொடுக்க, எதிரே அமர்ந்திருந்த பொற்செல்வி, ஏதேட்சையாக பார்வையை ஓட விட்டபோது அவனைப் பார்த்துவிட்டாள். சத்யனின் வசீகரமான தோற்றமும், அவனது பாரவையும் அவளுள் ஏதோ செய்தது. ஆங்கிலத்தில் சொல்வது போல இது பாஸிங் கிளௌட்ஸாக இருக்கலாம்.. ஆனால இந்த அனுபவம் அவளுக்கு புதிது..

சாரதா உணவகம் வந்த பிறகு சத்யனை கவனித்தாள். அதே வயது என்பதால் அவள் அவனை அவ்வப்போது பார்த்ததில் அவன் தோழியை பார்க்கிறான் என்று புரிந்து கொண்டவள்,உதட்டில் புன்னகை உதித்தது. சாரதாவிற்கு ஓரளவிற்கு அவளது தாத்தாவின் கெடுபிடிகள் தெரியும். கல்லூரி படிப்பை முடித்ததும் அவர் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பின்னே தான் அவளை கல்லூரிக்கு அனுப்ப சம்மதித்ததாக தெரிவித்து இருந்தாள்.

"அப்படியானால் நீ படிக்க போகணும் என்று தானே தாத்தாவின் நிபந்தனைக்கு சம்மதித்தாய் செல்வி?"என்றாள் சாரதா குறுகுறுப்புடன்.

"இல்லை சாரு, தாத்தா சொல்வதை செய்து தான் எனக்கு பழக்கம். அவரை மீறி நான் எதையும் செய்தது இல்லை. அப்படி செய்தால் அவருக்கு மிகுந்த கோபம் வரும்..! அப்புறம் என்னிடம் பேச மாட்டார். நான் போய் அழுது மன்னிப்பு கேட்ட பிறகு தான் அவர் என்னிடம் மறுபடியும் பேசுவார். ஒரு முறை அப்படி நடந்தது முதல் நான் இதுவரை மீறியதே இல்லை " என்றிருந்தாள் பொற்செல்வி.

ஆணழகன் போலிருக்கும இவன் பார்வை அவளை தவறாக பார்க்கவில்லை. அவள் மீது ஆர்வமும், பேசத துடிக்கும் பாவனையுமாக, அவனது விழிகள் அவளது முகத்தில் தான் நிலைத்திருந்தது.

"செல்வி, சார் உன்னை ரொம்ப நேரமாக லுக்கு விட்டுட்டு இருக்கார் போல?" என்றாள் அவளுக்கு மட்டும் கேட்கும்படி..

பொற்செல்வியின் முகம் குப்பென்று சிவந்து போயிற்று.. "ஷ் .. சும்மா இருப்பா.. அவர் ஏதோ பார்த்தால் நமக்கு என்ன? சீக்கிரமாக சாப்பிடு, கிளம்பலாம் " என்றாள்.

சாரதா வியப்புடன் அவளது முகத்தை பார்த்தாள். "எனக்கு ஒன்றும் இல்லை தாயே..என்றவள், ஏய்.. செல்வி, அப்போ நீ முதல்லேயே பார்த்துட்டியா?" என்றாள் பரபரப்புடன்.

"இவ்வளவு பக்கத்துல ஒருத்தர் நம்மளை பார்த்தால் தெரியாமல் போகுமாப்பா, ச்சு.. நீ தட்டைப் பார்த்து சாப்பிடு" என்றவளின் கைப்பேசக்க, அவசரமாக எடுத்தவளின் கை நடுங்கியது.. முகமும் பதற்றத்திற்கு சென்றது.. ர்ந்தார்!

சிலகணங்கள் தங்கையுடன் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டான் வசந்தன்!

வித்யாவின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது!
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 17