• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

4.எந்தன் தேன் ஜவ்வே

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu

4.எந்தன் தேன் ஜவ்வே​



இரண்டு வரியிலேயே வெட்கம் வர,

ப்ச் தேனு போதும் டி நீ பாடும் போது தான் புதுசா கல்யாண ஆசை வரும் ன்னு ஸ்கூல் ல எல்லாம் உன்னையே சுத்தி உட்கார்ந்து பேசி சிரிச்சுட்டு இருப்போம்..

ஸ்கூலயேவா என்பது போல் அப்பத்தா பார்வதி இருவரும் விழி விரித்து பார்த்து கொண்டு இருக்க,

தேனு, “உங்களுக்கு ஆசை ன்னு சொல்லுங்க என்னைய ஏன் டி கூட்டு சேர்க்கிற


இருந்தாலும் நீயும் தானே கல்யாணம் குடும்பம் எல்லாம் வரம் ன்னு சொல்லுவ?

ஆமா வரம் தான் இல்லன்னு சொல்லல அது சரியான வாழ்க்கை துணையும் உறவுகளும் இருந்தா தான்

ஆமா அப்ப அது இல்லாமயா, ஆனா சின்னதா ஒரு திருத்தம் சரியான அப்படிங்குறது இருக்குமா தெரியல ஆனா வாழ்க்கை துணை உறவுகள் இருக்கும் அவ்வளவு தான் என்றாள் மேகா.

தேனு, “ஏன் டி சலிச்சுக்குற”?


சலிப்பு எல்லாம் இல்ல தேனு எதார்த்தம் நாம் வெளியில உங்க அன்பை கொட்டலன்னு ஏங்குறோம் அவங்க அன்பு இல்லாமையா எல்லாத்தையும் செய்யுறோம் ன்னு நினைக்குறாங்க எப்பவுமே இந்த உறவு மட்டும் ஒரு கானல் நீர் மாதிரி


இருக்கு ஆனா இல்ல அப்படின்னு கண்ணுக்கு காட்டுது..


என்னடி ஒரே தத்துவமா இருக்க..

பின்ன இருக்க வேண்டாமா கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகிடுச்சு இல்ல இரண்டு பெத்து வச்சு இருக்கேன் இல்ல அப்ப இவ்வளவு கூட பேசலன்னா..அதுசரி நீ எப்ப கல்யாண சாப்பாடு போடலாம் ன்னு இருக்க

அதுவரை சிரித்த முகமாக இருந்த தேனு முகம் சுருங்கி யோசனையாய் பார்த்தவள் கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல மேகா..

ஏன் டி அப்படி சொல்லுற..

ப்ச் தெரியல ஏனோ கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்ல

தேனு..நீயாடி இப்படி பேசுற

ஆமா காலம், மாற்றம் இதெல்லாம் உண்மை அப்படின்னா இப்ப நான் சொல்லுற வார்த்தையும் உண்மை தான்.

என்னாச்சு தேனு..

ஒன்னு இல்ல

சொல்லிவிடு வெள்ளி
நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா ஓ ஓ
கனவுகள் கலைந்ததம்மா…என்று விரக்தியாய் சிரிக்க..

ஏய் என்றால் மேகா..

அவள் அந்த வரிகளை முடிக்கவும் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்து இருந்தார் பார்வதி தாயின் குரலில் பதறி திரும்பியவள் பார்வதி தன்னை பார்த்து தான் அழுகிறார் என்று உணர்ந்து தலையில் தட்டிக்கொண்டவள்,ம்மா…

தப்பு பண்ணிட்டோம் தேனு உனக்கு எங்களை எல்லாரையும் விட்டு போச்சு இல்ல..

அச்சோ அம்மா அதெல்லாம் ஒன்னு இல்ல நீ ஏன் இப்படி, உட்காரு முதல்ல அழுகையை நிறுத்து…

ஏன் தேனு இப்படி ஒரு அம்மா அப்பா உனக்கு தேவையா நீ எங்கேயாவது போய் சந்தோஷமா இரு டா..

சிரித்தாள் அப்படி நான் நினைச்சு இருந்தா எப்பவோ போய் இருப்பேனே..நீ முதல்ல அழுகையை நிறுத்து மா எதுக்கு இப்ப இந்த அழுகை ஆமா நிச்சயம் நல்லபடியா முடிஞ்சதா கயல் ஹாப்பியா

மேகா, “என்னடி சொல்லுற ?

இன்னைக்கு கயலுக்கு நிச்சியம் மேகா அதான் கேட்டுட்டு இருக்கேன்

மேகா மனசு ஒரு நிமிடம் பாரம் ஏறி இறங்கியது.

அம்மா அப்ப தேனுக்கு..

பார்வதி புடவை தலைப்பை பிடித்து கொண்டு அழுதார் என்னைய என்ன பண்ண சொல்லுற கண்ணு எல்லாம் அவங்க எடுக்கிற முடிவு தான்.


தேன்மொழி அமைதியாக இருப்பதை பார்த்தவள்,அம்மா தேனை நான் என்னோட அழைச்சிட்டு போகவா?

ஏதே.. ஹேய் என்ன கிறுக்கு பிடிச்சு இருக்கா உனக்கு எங்க போகனும் என்ன நினைக்கிற ஒழுங்கா இருக்க பாரு உன் வேலையை நீ பாரு நான் இங்க அப்பத்தா அம்மான்னு எல்லாரையும் விட்டு இருக்க மாட்டேன் உனக்கு தெரியாதா?

ச்சே உளறாத என்ன இருக்க மாட்டா உனக்கு மாப்ள பார்த்து கட்டி குடுத்தா போகனும் இல்ல..

அது வேற ..

அதே தான் அம்மா தேனு க்கு நான் மாப்ள பார்த்தா நீங்க சம்மதம் சொல்லுவீங்களா?

கண்ணு..

ஹேய் மேகா..

நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா நீங்க சொல்லுங்க அம்மா.

நான் என்ன சொல்ல

அம்மா இப்பவும் நீங்க இப்படி அமைதியா இருந்து ஒரு தவறான முற்றுப்புள்ளி வைக்க போறீங்களா?

நீங்க இப்ப வச்சு இருக்க முற்றுப்புள்ளி காலத்தின் கட்டாயம் ஆனா,நான் சொன்ன விஷயத்திற்கு நீங்க வைக்க போற முற்றுப்புள்ளி காயத்தின் கட்டாயம் அந்த காயம் தொடர்ந்துட கூடாதுன்னு வைங்க இதுக்கு மேல் என்ன சொல்லுறது ன்னு தெரியலம்மா


அவளோட வாழ்க்கை இனி நீங்கள் சொல்லுற முடிவுல தான் இருக்கு தேனு எனக்கு கொஞ்சம் டீ தாடி தலைவலிக்குது…

மேகாவை முறைத்தாள் இவ்வளவு பேச்சு பேசி மனசை கஷ்டப்படுத்தினது நீ ஆனா உனக்கு தலைவலிக்குதா?

அடப் போடி என் பிரண்ட் வாழ்க்கை இப்படி இருந்தா நான் கவலைபடாம யார் படுவா அதான் தலைவலி நான் உன்கிட்டே நிறைய விஷயம் கேட்கனும் அதென்ன நீ இருக்கும் போது அவளுக்கு கல்யாண பேச்சு ஏன் உனக்கு ஜாதகத்தில் எதுவும் பிரச்சினையா?

பிறப்பே பிரச்சினை தான் அதை விடு இந்தா டீ …

அம்மா என்ன தான் மா பிரச்சினை?

அவ சரியா படிக்கல அதான் பிரச்சினை, அவ தினமும் பிரசை கையுமாக இருந்தா அதான் பிரச்சினை, அவங்க அப்பா எதிர்பார்த்த பொண்ணா அவ இல்லை அதான் பிரச்சினை என்று அவர் பேசிக்கொண்டே போக..

என்னது அவ சரியா படிக்கலையா?

ஆமா என் வீட்டுக்காரர் அப்படித்தான் இத்தனை வருஷமா வதைச்சிட்டு இருக்காரு…


என்னடி பேசுறாங்க டென்த் ல நீ எவென்டி பர்சண்ட் டூவெல்த் ல 75% உன்னையா படிக்கல்லன்னு சொல்லுறாங்க ?

தேனு அமைதியாகவே இருக்க..

எதாவது பேசுடி


ஒன்னுமில்லை விடேன்..


மேகா, “ஒரு மேற்கோள் சொல்லுவாங்கலாம் நான் ஒரு பேஜ் ல படிச்சேன்

ஒன்றுமில்லை அப்படின்னு சொல்லுற ஒரு வார்த்தைக்குள்ள ஓராயிரம் உணர்வுகளையும் வலிகளையும் அடக்கிடலாம் ன்னு அப்படி ஒரு வலிமையான வலியான வார்த்தையாம் அதை தான் நீ பயன்படுத்திட்டு இருக்கியா தேனு…

அம்மா எந்த விதத்தில் அவ படிக்காதவன்னு சொல்லுறாங்க அவளுக்கு எத்தனை மொழி பேசத் தெரியும் தெரியுமா?

என்ன சொல்லுற கண்ணு…

அவ பிரெஞ்சு ஹிந்தி மராட்டி மலையாளம் பேசுவா தெரியுமா உங்களுக்கு? அதுவும் சரளமா அவளுக்கு பிரெஞ்சு ஹிந்தி எழுத படிக்க தெரியும் அது தெரியுமா?

பார்வதி அனைத்தையும் ஆச்சரியமாக கேட்டு கொண்டு இருக்க

மேகா..

நீ வாயை திறந்த கொன்னுடுவேன் பேசாம போய்டு இத்தனை வருஷம் இப்படி தானே இருந்த ஒரு ஒருமணிநேரம் அப்படியே இரு

கண்ணு

ப்ளீஸ் மா நீங்க படிச்சவங்க தானே ஏன் அப்பா கூட படிச்சவர் தானே இவளோட அண்ணன் பத்தாவது பெயில் ஏன் அவரை எதுவும் சொல்லல ஏன் கயல் கூட படிப்புல கம்மி தான் ஆனா அவ மார்க் எடுத்துட்டான்னு விட்டுட்டாங்க மா அவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் போட்டு தான் அவ்வளவு மார்க் அது உங்களுக்கு தெரியுமா?

என்ன சொல்லுற மேகா

மேகா வேணாம் விடு

எதுக்கு விடனும் இதுக்கு எனக்கு பதில் தெரிஞ்சு ஆகனும் இவ்வளவு உன்னையே பேசுற உங்க அம்மா உன்னையே என்னைக்காவது என்ன ஏதுன்னு கேட்டு இருக்காங்களா? எதுவுமே கேட்டு தெரிஞ்சுக்காம எப்படி அவமேல குறை கண்டுபிடிக்கலாம்..

இதுவரை சொன்னதே போதும் என்று மனதில் நினைத்து பார்வதி கண்ணை துடைத்து கொண்டவர் கண்ணு,

என்னம்மா என்பது போல் மேகா பார்க்க..

பையன் யாராவது இருந்தா தேனுக்கு பார்த்து சொல்லு அவ படிப்பு பன்னிரெண்டு தான் ன்னு சொல்லு அப்படியே அவளுக்கு எங்களால் இவ்வளவு தான் செய்ய முடியும் ன்னு..

அம்மா ….

என்ன கண்ணு..

அவளை அவளுக்காகவே கட்டிக்க மாப்ள இருக்கு உங்க முடிவுல மாற்றம் இல்லையே ..

இல்ல கண்ணு நீ யார் அந்த தம்பி ன்னு…

இன்னும் இரண்டு நாள்ல பையனை நீங்க பார்க்கலாம்…

தேனு, “ மேகா என்று அதிர..

எதுக்கு இப்ப அலர்ற


என் விஷயத்தில் தலையிட நீ யாரு?

ஓ என்ன ஈகோ டச் பண்ண பார்க்குறியா நீ என்ன இழவ வேணும் ன்னாலூம் ட்ரை பண்ணு எனக்கு வெக்கம் மானம் சூடு சுரணை எதுவும் இல்ல ஏன்னா நான் தான் உன்னோட கூட்டு சேர்ந்து பல வருஷம் ஆகுதே உனக்கு இருக்கிறது தானே எனக்கும் வரும் என்றவள் உதட்டை சுழித்து விட்டு அம்மா நான் பையன் கிட்ட சொல்ல சொல்லி சொல்லுறேன் .

மேகா ஒரு உதவி

என்னம்மா

சீக்கிரம் கல்யாணம் வைக்க முடியுமா ன்னு…

சரி பேசிடலாம்…

பார்வதி

என்னம்மா

என்ன இப்படி உடனே உடனே முடிவு எடுக்கிற இது நம்ம தேனு வாழ்க்கை பையன் யாரு என்ன ஏதுன்னு தெரியாம

பெத்தவரை நம்பினேன் அவரு இவளை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு கூட பொறந்தவன் என்னனு எட்டி கூட பார்க்கல கடைசியில் இருக்கவ நம்ம அக்காவுக்கு வந்த மாப்ள ஆச்சேன்னு கொஞ்சம் கூட யோசிக்கல அவங்களை எல்லாம் இத்தனை வருஷம் நம்பினேனே இதோ தேனை பத்தி இவ்வளவு தெரிஞ்ச நம்ம மேகா அவளுக்கு ஏத்த பையனை தான் முடிவு பண்ணி பேசுவான்னு நம்புறேன் ம்மா..

அம்மா என்று மேகா பார்வதியை கட்டிக்கொள்ள..

தேனு கண்ணீர் சிந்தி இருந்தாள்..


இப்ப எதுக்கு அழற?

அம்மா என்று தேம்ப…

அம்மா தான்டி நீயும் வாயை திறந்து பேசாத அவங்களும் கேட்கமாட்டாங்க இப்படியே தியாக செம்மலா இருக்கலாம் ன்னு எண்ணமா?

அதெல்லாம் இல்ல கயல் கல்யாணத்துக்கு க்காக காத்துட்டு இருந்தேன் ..

அப்படின்னா…

அது ப்ச் ஒன்னு இல்ல விடுங்க


மேகா யோசனையாக பார்க்க பார்வதி எதையும் உணரும் நிலையில் இல்லை அவர் மனதில் அவர் ஒரு கணக்கு போட்டு கொண்டு இருந்தார் அதை செயல் படுத்த இரண்டு நாட்கள் காத்து இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இரண்டு நாட்கள் சென்று என்ன பேசும் என்ன செய்ய வேண்டும் எதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று தீவிர யோசனையில் அவர் இருக்க தேனு சொன்ன வார்த்தைகள் அவர் மூளையில் சென்று பதிவே இல்லை


அம்மா..

என்ன பார்வதி

இந்த நகையெல்லாம் இங்கேயே வைங்க அம்மா அதோட இந்த பணமும் இங்கேயே இருக்கட்டும்..

தேனு, “ அம்மா இதை எதுக்கு இப்ப எடுத்துட்டு வந்து?

அவசியம் வந்துட்டு அதான் எடுத்துட்டு வந்தேன்..

இது வீட்டுல அப்பா..

எல்லாருக்கும் தெரியும் என்று பார்வதி முடித்து விட


ஏன் மா இப்படி பண்ணுற


அம்மா இதை உள்ள வை அப்புறம் மேகா எனக்கு இரண்டு நாள்ல பதில் தெரிஞ்சிடும் தானே?

இரண்டு நாள் எதுக்கு அதான் இன்னைக்கே சொல்லிட்டேனே

அந்த பையன் வீட்டில் பேச வேண்டாமா?

அவங்களே பேசிப்பாங்கா அவங்களுக்கு அம்மா இல்ல அப்பா மட்டும் தான் அவரும் இன்னொரு கல்யாணம் பண்ணி தனியா இருக்கார் இவங்க பாட்டி தாத்தா கூட வளர்ந்தாங்க பாட்டி தான் இருக்காங்க அவங்க தான் எல்லா முடிவும் சொல்லுவாங்க அதனால் பிரச்சினை இல்ல..

குடும்பம்..

அவங்க நல்ல வசதியான குடும்பம் தான் இப்ப அவங்க வேலை காரணமா சென்னையில் இருக்காங்க கல்யாணம் முடிச்சிட்டா அவருக்கு எங்க வேலையோ அங்க போக வேண்டியது தான்..

ஓஓஓ


அப்ப அவங்க பாட்டி


அவரோட தான் ஆனா பாட்டி ஊருக்கு வந்துடும்

எந்த ஊர் டா


இங்க தான் கெங்கவல்லி பக்கத்துல முத்து காடு ஜமீன்..

பார்வதி ஆச்சரியமாக பார்க்க

அப்பத்தா தான் துயமல்லி ஜமீன் குடும்பமா

ஆமா பாட்டி…

கடைசியாய் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து படபடத்து நின்று இருந்தாள் தேனு


தேனு வருவாள்






 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வாவ் எவ்வளவு திறமை இருக்கு தேனுகிட்ட😍 ஆனா மறைக்க வேண்டிய அவசியம் என்ன🤔

அவளுக்காகவே அவளை விரும்பின மாப்பிள்ளை ஜமீனா🤔

எப்படி தெரியும் தேனுவ🧐

தேனு ஏன் ஊர்பேரைக் கேட்டு ஷாக் ஆகுறா🤔
 

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu
வாவ் எவ்வளவு திறமை இருக்கு தேனுகிட்ட😍 ஆனா மறைக்க வேண்டிய அவசியம் என்ன🤔

அவளுக்காகவே அவளை விரும்பின மாப்பிள்ளை ஜமீனா🤔

எப்படி தெரியும் தேனுவ🧐

தேனு ஏன் ஊர்பேரைக் கேட்டு ஷாக் ஆகுறா🤔
மிக்க மகிழ்ச்சி சகோதரி