• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
"பாத்துமா அப்படியே கழுத்து ஒரு பக்கம் சுளுக்கிக் போகுது, அப்புறம் எனக்கு தான் எல்லாத்துக்கும் ரொம்ப கஷ்டம் பட வேண்டியதா இருக்கும்".

"என் தலை எப்படி போனா உனக்கு என்ன உன் வேலை வண்டி ஓட்டுவது அதை மட்டும் பாரு, வண்டி கூட ஸ்டார்ட் பண்ண தெரியல வந்துட்டான் வண்டிய தூக்கிட்டு...." கழுத்தை மறுபடியும் முன்பு செய்ததுப் போல் செய்தாள் சாரா .

"மேடம்க்கு நான் டிரைவர் மாதிரி தெரியுதோ!!! " என்றான்.

"என் தலை நான் திரும்பினான் என்ன? உடைஞ்சா உனக்கு என்ன? உன் வேலை மட்டும் பாரு, பதிலே விட்டு போக நினைத்தவனுக்கு எதற்காக இந்த போலி அக்கறை".

"உடைந்தாலும் எனக்கு தான் நஷ்டம் அதுல உனக்கு எதுவுமே இல்லை" என்றாள்.

"ஏன் உனக்கு புரியல எனக்கு தான் கஷ்டம் உனக்கு எதுவுமே இல்லை". அவன் அதையே திரும்ப திரும்ப அவன் சொல்லவும்.....

"அது எப்படி என் கழுத்து போனா உனக்கு என்ன நஷ்டம்".

"உனக்கு சொன்ன புரியவே மாட்டேங்குது நான் டெமோ செய்யவா. அப்போ உனக்கு புரிஞ்சிக்க வசதியா இருக்கும்" என்றான் அவளுக்கு புரியவைக்க.

"போடி மக்கு...!!"

"நான் மக்கு இல்லா நீதான் மங்கா மடையா....போடா".

"சரி சண்டையை அப்புறம் வச்சிக்கோ.. டெமோ காட்டவா?"

"செய்து தொலை இல்லன்னா விடவா போகிறாய் என்னை".

"உன் முகம் கரெக்டா இருந்ததினால் இப்படி முத்தம் கொடுக்க ஈஸி அதுவே யோசிப்பார் வேற பக்கம்...ஓகே உன் மூஞ்சி வேற புறம் திரும்பி இருந்தா எனக்கு இப்படி எட்டி முத்தம் கொடுப்பது ரொம்ப கஷ்டம் ஒரு டைம் என்றால் பரவாயில்லை வாழ்கை முழுவதும் முழுவதும் அப்படி கொடுக்க முடியாது இல்லையா...." என்றான் அறிவாளியா...

"ச்சீய் எச்ச என்று துடைத்து விட்டு அவனை" முறைத்தாள்.

'அடியாத்தி இவர் டெமோ பண்றான் நம்ம சோழி முடிச்சிடுவான் போல', இவன் எந்த விளக்கமும் கொடுக்காமல் இந்த மாதிரி செய்யறத அவளால் ஜீரணிக்கவே முடியல .

"பொறுக்கி!!!!"

தூங்கி கொண்டு இருந்த பூனையை சத்தமில்லாமல் எழுப்பி விட்டுவிட்டாள்.

இதைக் கேட்டதும் எங்க இருந்த அவனுக்கு கோபம் வந்தது என்று தெரியவில்லை "என்னடி நான் பொறுக்கி மாதிரி தெரியுது உனக்கு..."

"ஆமாடா.... பொறுக்கி பொறுக்கி பொறுக்கி..."இடைவிடாது..... அவள் கூறிக்கொண்டே போக...

"மஹாராணி எதுக்கு இந்தபொறுக்கி கூட வரீங்க" என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.

பேசாமல் மௌனம் காத்தாள்.

"என் கோபத்தை அதிகப்படுத்தாமல் இறங்கு.." என்று கர்ஜித்தான்.

"என்ன இப்படி கோவப்படுறீங்க கோபப்பட கூட உனக்கு தெரியுமா அர்ஜுன்" என்றாள் மிரண்டால் விழிகளை உருட்டி.

"இதுக்கு மேல எனக்கு கோபம் வரும் நீ இப்ப இறங்கலாம் உனக்கு ஏதாவது என் கோபத்தை பற்றி தெரியனுமா.... போய் உங்க அத்தைடா போ கேளு".

இன்னும் அவள் இறங்காது அது இவனுக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்த அவனின்

கர்ஜனை மிரண்டால் பாவை...

அவன் குரல் அதிகப்படுத்த..... இவளின் குரல் குறைந்தது.

ஆனா உடனே இவ்வளவு கம்மியா பேச உன்னால தான் மா முடியும்.

"இல்லங்க கோவிலுக்கு போலாம்". பவ்வியமாக பூணகுட்டி பதுங்கியது.

அடி தூள் வாங்க போங்க எல்லாம் கூட இவளுக்கு வருமா!

"நீயும் நானும் கோயிலுக்கு எந்த உபயோகமும் இல்லை ஏதோ புருஷன் கிட்ட பேசுற மாதிரி பேசுற நீ ......எவன் கிட்ட பேசுற மாதிரி பேசுற உள்ள சாமி ரூம்ல நிறைய இருக்கு போட்டோஸ் அதை போய் கும்பிட்டு..."

'நான் சொல்ல வருவதை புரியாமல் குழந்தை தனமா சண்டைக்கு நிற்கும் இவளை என்ன செய்வது...' இன்னும் சாரா மீது கோபம் அதிகரிக்க விட்டால் அடித்துவிடுவான்..அர்ஜுன் சாராவை இறங்க வைப்பதில் நோக்கோடு இருந்தான்.

"சொல்றதுக்குள்ள இறங்கு இல்லன்னா அவ்வளவுதான் கழுத்தை நெரித்து விடுவேன்".

'அடியாத்தி இவன் என்ன கொல்லாம விட மாட்டான் போல.....இப்ப இறங்கி அத்தை கேட்டா இவன மாட்டி விடலாம்' என்று மனதில் திட்டத்தை போட்டுகொண்டு இறங்கினாள்.

அவள் இறங்கிய அடுத்த நிமிடம் கார் பறந்தது, ஒரு நிமிடத்தில் அது கண்ணை விட்டு மறைந்து போனது," வேகமா இந்த எருமை போயி எங்கேயாவது மோதினாப் பரவாயில்லை யார் மீது மோதினால் என்ன ஆகிறது உயிர் மேல பயம் இல்லை".

சாரா தயங்கி வீட்டின் நுழைகிறாள் "என்னமா இன்னும் கிளம்பலையா அத்தை அவரு என்னை இறக்கி விட்டுட்டு போயிட்டாரு".

"நீ என்னம்மா பண்ண...."அவரோ சிரித்தவாறு வினவ...

"எந்த கோவிலுக்கு போறேன் நான் கேட்டேன் அதற்குள் என்னை இறக்கி விட்டுட்டு போயிட்டாரு".

"நார்மலா அவனிடம் பேசினாயா? இல்லை திட்டுனா மாதிரி பேசினாயா?" என்றார்.

"நார்மலா தான் பேசினேன் அவருக்கு நான் பேசினாலே அவருக்கு பிடிக்கவே மாட்டேங்குது அத்தை நான் என்ன செய்வது" என்றாள் சோகமாக.

"வீட்டிலேயே நிறைய சாமி போட்டோ இருக்கு கோவிலுக்கு போனா ஒரு சாமி கும்பிட முடியும். நீ வீட்ல போய் சாமி அறையில் நிறைய சாமி வச்சிருக்கோம் போய் பொறுமையா சாமி கும்பிடுன்னு சொன்னாரு" என்றாள் அப்பாவியாக.

"நானும் வந்துட்டேன் அத்தை அவரு சொல்றது கரெக்ட் தானே"

என்ன ஒரு ஆக்டிங் அவள் மனசாட்சி அவளைக் கேலி செய்தது. எக்ஸ்ட்ரா பிட்டிங் நல்லா இருக்கு...என்று அவளது இன்னோரு மனம் அவளை பாராட்டியது.

"சாரா இப்பதான் பொறுமையா யோசிக்க ஆரம்பிக்கிறான் மென்மையாக இருந்தவனை நான் கடுமையாக மாத்திட்டேன் ஓ... "அவளுக்கு சந்தேகம் வந்தது முதல் முறையாக.

'நல்லாத்தான் இருந்தா நான் தான் உன்னை டென்ஷன் பண்ணிவிட்டு விட்டேன் அவன் சொல்றதும் கொஞ்சம் பொறுமையாக கேட்டு இருக்கலாமோ'.

அவளோட மனசு பண்ணது அவன்தானே எனக்கு புரிய வச்சு இருக்கணும் இல்ல மூணு நாளா என்ன திரும்பி கூட பாக்கல ஒரு வார்த்தை கூட பேசல இன்னைக்கு காலையிலே வந்து சொல்றான்.... எனக்கு கோவம் வரும் இல்ல சரியாக தான் இருக்க சாரா நீ அவளையே சமாதானப்படுத்திக் கொண்டாள் .

"அத்தை அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நுழைகிறார்......"

"இந்த கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் புனிதமான ஒரு கல்யாணமா... ரெண்டு பேரும் கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோங்கமா,

நான் அவனுக்கு சப்போர்ட் பண்ற நீ நினைக்காத மா அவனுக்கு கோபம் வராது கோபம் வந்தது நான் அவன் அவனோட நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும் அதாம்மா கொஞ்சம் பாத்து..."

"எனக்கு நீங்க அடிச்சிக்கிட்டாலும் சந்தோசமா இருந்த போதும் நான் வாழுகின்ற வாழ்கை என் பசங்களுக்காக தானே..."

சாரா ஒரு மாதிரி மனம் ஏதோ போலாக... பதிலேதும் கூட பேசாமல் அமைதியாக இருக்க,

சாரா முகம் மாற்றத்தை பொறுத்துக்கொள்ளாமல் மீரா அர்ஜுனின் புகைப்படத்தை எடுத்து காண்பிக்க...

டெட்டி பியர் கட்டிபிடித்தவாறு தூங்கும் அர்ஜுனை வைத்த கன்வாங்காமல் பார்த்துக்கொண்டு இருக்க...

மீராவிற்கு அந்த மனமாற்றம் போதுமானதாக இருந்தது. விரைவிலே இருவாரும் மனமும் ஒன்றி வாழ்வார்கள் என்று நம்பிக்கை மீராவிற்க்கு தோன்றியது.

மீரா சாராவின் மனமாற்றத்தை கலைக்க விரும்பாமல் அந்த இடத்தை விட்டு சென்றார்.

இதுவரைக்கும் பெருசா ஏதோ ஆசைப்பட்டதில்லை ஆனால் சாரா வாழ்க்கை எல்லாமே அவனா இருக்கவேண்டும் என்று நினைத்தது அர்ஜுனை தான்....

என்ன ஆனாலும் சரி இவை அனைத்தும் இன்று சரிசெய்து ஆகவேண்டும் என்று எண்ணினால் சாரா.

சாரா செய்வது இன்னும் அவனுக்கு எரிச்சலை கிளப்பும் என்று யாருக்கு தெரியும்.

'சரி நம்ம ஆளுதான் செம்மையா சாப்பிடுவாங்க சமையல் அறையை நோக்கிச் செல்ல ஒரு கலக்கு கலக்கலாம் இம்பிரஸ் பண்றோம் அடிச்சு தூக்குரோம்" என்று எண்ணி துள்ளி சென்றாள்.

உனக்கு பல்ப் நிறைய வரப்போகிறது என்று தெரியாமல் கிச்சனில் நுழைந்தாள்.

அவனுக்கு பிடித்தது செய்து வைக்க போன அதற்குள் எல்லாமே முடிச்சிட்டு நீ எனக்கு ஒரு பெரிய பல்பு குடுத்துட்டு அத்தை.

இந்த ப்ளான் கேன்சல் ஆயிடுச்சு நாம போய் அவனோட அறையை சுத்தம் செய்து நல்ல பேரு வாங்குறோம்.

அவனுடைய அறையை நுழைந்ததும் அடுத்த பெரிய பல்பு அவளின் தலைமீது ஒளிர்ந்தது... வடிவேல் துபாய் கமெடிய ஆனது சாராவின் நிலை தரையிலும் மூஞ்சி பார்த்தா கூட தெரியும் போல அந்த ரேஞ்சுக்கு வைத்திருந்தான் அவனோட அறையை.

சரி ரூமுக்கு வந்தது வந்துட்டோம் ஒரு ரவுண்ட் சுத்தி பார்த்துட்டு போயிருவோம்.

அணைத்து பொருளும் அவ்வளவு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தது, அர்ஜுன் ஐயோ இவனோட ரூம் எல்லாம் நான் மெயின்டன் பண்றதுக்கு நான் ஒரு அரை நாள் லீவு எடுக்கணும் போலவே தினமும்...

"நம்ம தான் ஓனர் நாமலே லேட்டா போனா தப்பில்லை..."அவளுக்குள் பேசியவாறு அறையை நோட்டம்விட்டாள்.

அங்கு இருந்த ஒரு கிளாஸ் பெயிண்டிங் அவளது கண்களை பறித்தது கால்கள் தானாகவே அவற்றை நோக்கி சென்றது சாராவின் கால்கள்.

'அழகா இருக்குடா.... எடுக்க கை வைக்கும்போது யாரோ வருவது சத்தம்கேட்டு திரும்பவும் பெயிண்ட் பிரேம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

"ஐயையோ தூள் தூளாக உடைந்து போச்சே... இவன் வந்தானா நம்மளை வறுத்து எடுத்து விடுவான்" என்று பயந்து நின்று கொண்டு இருந்தாள்.

அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவனும் அறையில் நுழைந்தான்.

"அடியாத்தி இவன் முறைக்கிறான் இந்த அளவுக்கு அவன் முகம் சிவந்து நான் பார்த்ததில்லை கோவத்துல வந்திருக்கா வெட்கத்தில் சிவந்து இருக்க நமக்கு தெரியலையே" அவனை பயம் கலந்த குழப்பத்தில் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"அர்ஜுனன் தெரியாம கீழே போட்டுட்டு..." சொல்லி முடிக்கும் முன்பு பளார்னு என்று ஒரு அறை அந்த சத்தம் அறை முழுவதும் நிறைத்தது.

"என்னடி நினைப்புல இருக்க... நானும் பார்த்துட்டு இருக்க கொஞ்சம் கூட அடங்காம அங்கேயும் இங்கயும் சுத்திட்டு இருக்கிற யாரு உனக்கு.... யார் இங்கு வர அனுமதி அளித்தது" என்றான் கோபமாக.

"வந்ததும் இல்லாமல் கைய கால அமைதியா வச்சு இல்லாம என் பேவரிட் பெயிண்டிங் போட்டு உடைத்து வச்சிருக்க,

இது எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா 10 லட்சம் முழுசா கொடுத்து வாங்கி இருக்கேன்".

"இது யாரு வந்து உங்க அப்பா தருவாரா....இரிடேடிங் இடியட்".

"இங்க பாருங்க சும்மா.... அவர் என்னத்துக்கு இங்க இழுகிருங்க".

"தொல்லை விட்டுச்சு உன்ன என் தலையில் கட்டினார்கள் அவரை தான் சொல்ல முடியும்".

"எல்லாமே கரெக்டா அரேஞ்ச் செய்து நடந்த கல்யாணம் மாதிரி பேசி கொண்டு இருக்கீங்க" என்றாள் அடக்கி வைத்த கோவத்தை கொட்டினாள்.

"எப்படி உங்க கல்யாணம் நின்னு போச்சுனு என்ன புடிச்சு கல்யாணம் பண்ணிட்டு பேசுற பேச்சை பாரு" என்றாள் அவனை ஏளன பார்வை பார்த்து.

"விட்ட வரதட்சனை கூட கேட்பான்.

ஹலோ உனக்கு நான் வாழ்க்கை கொடுத்திருக்கேன் டா, ஒரு போட்டோ உடைந்ததற்கு இப்படியா அடிக்கிறாய் வலிக்குது என் கண்ணம்".

"வரதட்சனையும் கேப்ப அதுக்கு பதிலா வரதராஜன் அவங்க பொண்ணையும் கூட்டிட்டு போயிடுங்க சொல்லுவேன்".

"என்ன உனக்கு நான் அடங்கி போகனும் அதற்குதான்.... நீ ஏதோ ட்ரை பண்ணிட்டு இருக்க இங்க" என்றான் அர்ஜூன் சம்மந்தம் இல்லாமல்.

ஐயோடா இவனா அப்படி அலைய விட்டு விட்டாலும் போடா டேய் என்றாகிவிட்டது அவளுக்கு.

"என்னடி உன் கால் கீழே இந்த அர்ஜுன் இருக்கணும்னு நினைக்கிறியா. கனவில் கூட நடக்காது அது புரிந்ததா" அவன் விரலை நீட்டி எச்சரிக்கை.

சாரா அர்ஜுனின் நீட்டிய விரலை பிடித்து கடித்துவைத்தாள்.

"ஆஆஆஆ.... ராட்சசி வலிக்குது... ''அர்ஜுன் கைகளை ஒதறியவாறு.... ''வெளிய போடி ".

"என்ன அர்ஜுன் இப்படி பேசுகிறா, நான் அப்படி எல்லாம் எப்பவாது நினைச்சு இருக்கானா. உன்னை அடிமை படுத்துவது போல? " என்று கேட்டாள்.

"என்னது அர்ஜுனா? எதோ நீதான் எனக்குப் பெயர் வைத்த மாதிரி பெயர் சொல்லி அழைக்கிறாய்.." என்றான் கோபமாக.

"இல்லை என்ன விட பெரிய பொண்ணா அதனால் என் பேர் சொல்லி கூப்பிட்றயா?"

எனது பெயர் சொல்லிக் கூப்பிட பெரிய பொண்ணா தான் இருக்கணுமா என்னடா லாட்ஜிக்கு,இது உனக்கு கோவம் வந்தா லாஜிக் எல்லாம் மிஸ் ஆகுது...அர்ஜுன்

வாங்க போங்கனு கூப்பிட்டு பழகிக்கோ... மரியாதையை கொடுக்க.. உங்க வீட்ல சொல்லி தரவில்லையா".

இதைவிட பேசறது இவளுக்கு ஷாக்கா இருக்கு. இவன் இப்படி எல்லாம் பேசுவானா எப்ப பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே... சுத்தி இருந்தவன் இவனா? என்று சாராவிற்கு சந்தேகம் வந்தது.

ஐயோ அம்மா தப்பா புரிஞ்சுகிட்ட இவனை நம்ம வெளியே போயிருந்தான் கண்ணத்தில் கை வெச்சிட்டே ஹாலில் வந்து உட்கார்ந்துவிட்டாள் ஒரு மூலையில் நாற்காலியை இழுத்துப் போட்டு.

'காலையிலே இருந்து அர்ஜுன் என்ன இப்படி பண்றான் இதைவிடக் கேவலமான அவனது கழுவி கழுவி ஊற்றினாலும் வராத கோபம் இப்போ மட்டும் எப்படி வந்தது ஐயோ மண்டை காயுது.

இவனை புரிந்துக் கொள்ளகூட முடியலையே".

"இவன் என்ன அன்னியனுக்கு டப் கொடுக்கிறான். ஒருநேரம் கொஞ்சுகிறான் ஒருநேரம் கடித்து குதறுகிறான்..." மேடம் க்கு இவங்க பண்றது மட்டும் புரியாது... அர்ஜுன்காக அவளது மனசாட்சி வாதிட,

நம்ம சின்ன வயசுல இருந்து சொல்லி இருக்கு இல்ல உன் வாய் உன் வாயில தான் எல்லாமே இருக்கு இன்னைக்கு பேசினது கொஞ்ச ஓவராயிடுச்சு.

"அதை வேறு ஓடைத்துவிட்டேன் ...... நம்ம சுத்தம் பண்ணாம வந்த தீட்டுவனோ? அவன் அறைக்கு திடும்ப சென்றால் அடிப்பான் ?"

தயங்கி தயங்கி அவரும் அறையின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தாள்.

அங்கு என்னடி செய்ற வந்து சுத்தம் செய். அவன் கர்ஜனைல மிரண்டு விழிகளோடு உள்ளே நுழைந்தாள்.

"என்ன கையால் சுத்தம் செய்ய போராய. போ தேவையானவை எடுதுவா..." என்றான் அதிகாரத்தோடு.

"சரிங்க இதோ வரேன்...." என்று வேகமாக சென்று சுத்தம் செய்ய தேவையான ஆயுதத்துடன் வந்தாள்.

"என்னடி வரவர நீ சரியில்ல நாலடி போடணும் தோணுதா? "

"ஐயோ அழகன்டா நீ உன்னை போய் நான் எதுக்குடா அடிக்க போறேன்" என்று முணுமுணுக்க.

"என்னது கேக்கல...."என்றான்.

"அதுவந்து நீ அழகா இருக்கிற நான் உன்னை அடிக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்" என்றாள் தயங்கி.

இவன் பேசிட்டு இருக்கும் போதே பக்குனு சிரிக்க ஆரம்பிச்சிட்டா.

வேற ஒன்னும் இல்லைங்க அவன் சொன்னத நினைச்சி ட்ரீம் போயிட்டா.

அவனை துரத்தி துரத்தி அடிக்கிறது போல காட்சி நினைக்கும் போதே சிரிப்பு சிரிப்பா வருது உண்மையா அடிச்சா எப்படி இருக்கும்னு யோசிக்கிறார் .....அவளையே மறந்து சிரித்து விடுகிறாள் அதை நினைத்து.

அர்ஜுனின் கர்ஜனையில் நிகழ் உலகத்திற்கு வருகிறாள்

அடியாத்தி உளறிக்கொட்டி விட்டோமோ.

"இவன் என்ன இப்படி பார்க்கிறான். அடிக்க வருவது போலவே தெரிகிறதே... "

ஐயோ கண்ணத்த கன்னத்தைப் முன்னல்லாம் கண்ணாத்த கிஸ் குடுக்க வருவான்னு தோணும் இப்ப எல்லாம் அப்படியே அறை கொடுக்க வர மாதிரி தோணுது, எல்லாம் என் நிலைமை என்று கலவரமா பார்த்தாள்.

"முன்ன லெப்ட் இப்ப ரைடர் ஐயோ கண்ணத்த மறைத்து விடுவோம். அடிவிலுந்தலும் கொஞ்சம் குறைவாக வலிக்கும்" என்று யோசித்து. இரண்டு கைகளால் இரண்டு கன்னத்தை பொத்தி கொடுக்க.

"நீ கன்னத்தை மறைத்தாலும் என்னால உன்னை எதுவுமே செய்ய முடியாது நினைக்கிறயா...." என்றான்.

"அத ரெண்டு கண்ணு இருக்குல்ல நோண்டி எடுத்துடறேன் அந்த ரெண்டு பல்பு வச்சுட்டு தானே ஆள் மயக்குற..."

'எனது கண்ணை நோண்டி எடுக்குறியா' அதிர்ச்சியில் இரண்டடி பின்னால் போய் விழுந்தாள்.
 
Top