அந்த உயர்தர உணவகத்தில் அடுத்தடுத்து இருந்த மேசைகளில்
அனைவரும் அமர்ந்தனர் வித்யாவிற்கு எதிரே பிரியன் அமர்ந்திருந்தான்! ஒரு புறம் வித்யா,பவானி, வரதன் அடுத்து சுரேந்திரன், சாந்தி, திலகம் தமிழரசன் அமர்ந்திருக்க, அடுத்த இருக்கைகளில் பிரியன் அவனது தாய் செண்பகம் என்று அமர்ந்திருந்தனர்!
யாருக்கு எது வேண்டும் என்று கேட்டு பிரியன் சிப்பந்தியிடம் தெரிவித்துக் கொண்டிருந்தான்!
வித்யா, அன்று காலை வரையில் இருந்த மனநிலை முற்றிலுமாக மாறிப்போய், வருங்கால கணவனை பார்த்தும் பாராததுமாக ஒருவித மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்! பெரியவர்கள் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்!
சற்று நேரத்தில் சொல்லியிருந்த உணவு வரவும்,பேச்சை நிறுத்தி உணவில் கவனம் செலுத்தினர்,பாதி உணவின் போது தான் வசந்தனின் காணொளி அழைப்பு வரதனின் கைப்பேசிக்கு வந்தது!
அவர் எடுத்து உயிர்பித்தார்! "அப்பா வெளியில் இருக்கீங்களா? நான் நைட் கால் பண்ணட்டுமா?" என்றான்!
வசந்தனுக்கு கோவிலில் வைத்து சந்திப்பு நடக்கப் போவதை அவர்கள் தெரியப்படுத்தவில்லை!
" ஆமாப்பா, நாங்க கோவிலில் வச்சு சம்பந்தம் பேசி முடிச்சோம்! அப்படியே மாப்பிள்ளை சாப்பிட கூப்பிட்டு வந்துட்டார்! என்றவர் எல்லாரையும் அவன் பார்க்கும்படி கைப்பேசியை திருப்பினார்! அப்போது, ரிஷியும் அந்த அழைப்பில் இணைந்திருந்தான்,
"எல்லாருக்கும் வணக்கம், என் பெயர் ரிஷிகேசவன்! வசந்தின் நெருங்கிய நண்பன்! என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்!
"ஹேய், கல்யாணப் பொண்ணு, இப்ப ஹாப்பியா?"என்றான் வித்யாவைப் பார்த்து!
பவானிக்கு அவனை இன்னார் என்று அறிமுகம் செய்ய பிடிக்கவில்லை! சற்று தர்மசங்கடமாக உணர்ந்தார்! அதற்குள்ளாக கைப்பேசி வித்யா கைப்பற்றியிருந்தாள்!
"போங்க,ரிஷி அண்ணா, எங்க வீட்டுக்கு இப்ப எல்லாம் நீங்க வர்றதே இல்லை! தங்கச்சின்னு சும்மா வாய் வார்த்தைக்கு சொல்றீங்க! ஆனால் பாசமே இல்லை!" வித்யா பேசுவதை சுவாரஸ்யமாக பார்த்திருந்தான் பிரியரஞ்சன்!
அதைப் பார்த்த பவானிக்கு மகளின் எதிர்காலம் நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று!
"என்ன தங்கிச்சிமா, இப்படி மாப்பிள்ளை முன்னாடி டேமேஜ் பண்றே! நேரம் இருந்தால் வராமல் இருப்பேனா தங்கச்சிமா? இன்னும் மூன்று மாசம் தான் அப்புறமா நான் சென்னைக்கு வந்து விடுவேன்!"
"டேய், நீங்க பாசப் பயிரை அப்புறமா வளருங்க",என்று குறுக்கிட்ட வசந்த், போனை மாப்பிள்ளைக்கிட்டே கொடு வித்யா, என்றவன் தொடர்ந்தான்"மாப்பிள்ளை, தப்பா நினைக்காதீங்க, அவனுக்கு தங்கை இல்லை! அவள் சின்ன குழந்தையா இருந்ததுல இருந்து
அவள் மேல தனிப் பாசம்!" என்றான்
"எனக்கு இரண்டு மைத்துனர்கள் என்று மறைமுகமாக சொல்றீங்க! அது மகிழ்ச்சிதான்! எனக்கு இப்ப ஒரு விஷயமா தெளிவாகிடுச்சு, என் வருங்கால மனைவிக்கு பேச வராதோ என்று இவ்வளவு நேரமாக ஒரு சின்ன டவுட் இருந்துச்சு! இப்ப அப்படி இல்லை மேடம் சந்தர்ப்பம் கிடைச்சா நல்லா, சண்டை போடுற அளவுக்கு பேசுவாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்!"
பிரியன் குறும்பாக சொல்ல,
அங்கே சிரிப்பலை எழுந்தது!"ஏன்டா என் மருமகளை சண்டைக்காரின்னு சொல்லாம சொல்றியா நீ?" என்றார் செண்பகம் பொய்க் கோபத்துடன் !
"என்னம்மா நீங்க? இப்படி கோர்த்து விடுறீங்க? நான் அந்த அர்த்தத்தில சொல்லவே இல்லை! அப்பா நான் அப்படியா சொன்னேன்?"என்றான் பயந்தவன் போல..
"மகனே, உஷாரா இருந்துக்கோ இத்தனை நாள் உன் அம்மா சோலோவா எப்படி இருந்தாள்னு உனக்கு தெரியும்! இப்ப கூட்டணி சேர்க்கிறாள், ஜாக்கிரதையா இருந்துக்கணும்டா!" என்றார் தமிழரசன் தன் பங்குக்கு பயந்தவர் போல!..
"என்ன நீங்களும் அவன்கூட சேர்ந்துட்டு! "என்று செண்பகம் பொய்யாக கடிந்து கொள்ள!
"நான் .. உள்ளதைத்தான்.." என்றவர், "ம்ஹூம் நான் ஒன்றும் பேசவில்லை" என்று ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்துக்கொள்ள, செண்பகத்திற்கு கணவனின் செய்கையில் சிரிப்பை அடக்க முடியவில்லை,
வசந்தனும், ரிஷியும் சுவாரஸ்யமாக அந்த சம்பாஷனையை பார்த்தவர்கள், அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டனர்!
அவர்களோடு மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர்! சிரித்து முடிக்கவும், வசந்தன் பேசினான்!
"எனக்கு டூட்டிக்கு நேரமாச்சு, என்ற வசந்தன், தொடர்ந்து, "அத்தை மாமா, வித்யாவோட விருப்பத்தை நிறைவேற்ற ஒத்துக் கொண்டதற்கு ரொம்ப நன்றி ! எனக்கும் நீங்க அந்த உறவு தானே அதனால அப்படி கூப்பிட்டேன் தப்பில்லையே?"
"உறவுன்னு சொல்லிட்டு நன்றி சொல்லி தள்ளி நிறுத்தலாமா வசந்தன்? அவள் இனி எங்க வீட்டுப் பெண்! அவளை பத்தின கவலை உங்க யாருக்கும் வேண்டாம்!" என்றார் தமிழரசன்!
இப்போது கைப்பேசியை தன் புறமாக திருப்பினார் வரதன், "நான் காலையில் பேசுறேன்ப்பா!" என்றான் வசந்தன்!
"அங்கிள், கல்யாண தேதி குறிச்சதும் சொல்லுங்க, நான் முன்னாடியே வந்து எல்லா வேலையும் செய்றேன்! நம்ம வித்யா கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திடலாம்!" என்றான் ரிஷி உற்சாகமாக!
அப்போது தான் அருகில் அமர்ந்திருந்த சுரேந்திரன் அவனைப் பார்த்தார்! அந்த முகமும், பெயரும் அவருக்கு உணர்த்திய விஷயம் அவ்வளவு உவப்பாக இல்லை! என்றாலும் மருமகனைப் பார்த்ததும், இப்படி ஒரு பிள்ளை இருக்க அனாதையாக வெளிநாட்டில் போய் கிடக்கிறாளே ஒருத்தி! என்று அவருக்கு உள்ளூர வேதனை உண்டாயிற்று! அது பொது இடம் என்பதும், பிரியனுக்கு சம்பந்தம் பேசியிருக்கும் குடும்பத்திற்கு அவன் நெருக்கமானவன் என்பதாலும் அவர் எதையும் காட்டிக் கொள்ளவில்லை!
அதற்குள்ளாக வரதன் பேசி முடித்து கைப்பேசியை அனைத்துவிட்டிருந்தார்! சற்று நேரத்தில் உணவை முடித்துக் கொண்டு, கலகலப்பாக பேசியபடியே இரண்டு குடும்பத்தினரும் விடைபெற்று அவரவர் வழியில் கிளம்பினர்!
🩵🩷🩵
வீடு வந்தபின் , தமிழரசன் குடும்பத்தினருடன் திலகமும் சாந்தியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்! சுரேந்திரன்,தலை வலிப்பதாக தெரிவித்து, சற்று நேரம் படுத்திக்கப் போவதாக உள்ளே சென்றுவிட்டார்!
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறு,எதிரே இருந்த சுவற்றில் இலக்கின்றி பார்வையை பதித்தபடி இருந்தார் சுரேந்திரன்!
அவரிடம் காபி கோப்பையை கொணர்ந்து நீட்டினார் சாந்தி!
"அத்தான், என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?" என்று அவர் பக்கத்தில் அமர்ந்தார் !
"ஒன்றுமில்லை சாந்தி, சொன்னேன்ல, தலைவலி தான்! காபி குடிச்சா சரியாப் போகும்மா! நீ போய் கொஞ்சம் ஓய்வு எடும்மா!"
என்று அனுப்பி வைத்தார்!
சுரேந்திரனுக்கு அந்த விஷயத்தை யாரிடமும் பகிர்வது சரி என்று தோன்றவில்லை! ஒரு பெண்ணின் வாழ்க்கை நல்லபடியாக அமையப் போகிறது! அதில் தமக்கையின் வாழ்க்கை விஷயம் வெளிப்பட்டால், நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் தமிழரசன் ரிஷியை விலக்க முயற்சி செய்வார்! ஒரு நட்பில் விரிசல் உண்டாகும்! பெற்றவன் செய்த பாவத்திற்கு பிள்ளை தண்டனை ஏற்க வேண்டாம்! என்ன இருந்தாலும் அவன் என் அக்காவின் மகன்! ஒரு நாள் உண்மை தெரியும் போது, அவனாக தாயைத் தேடி வருவான்! அதற்கான கால நேரத்தை இறைவன் நிச்சயமாக கொண்டு வந்தே தீருவான்!"
சுரேந்திரனின் எண்ணம் போல ரிஷி, தன் தாயுடன் சேர்வானா? எப்போது??
43. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!
இரண்டு வாரங்கள் கழித்து,
இன்பாவுக்கு அன்று பகல் வேலை!
அவளது பெற்றோருக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமண நாள் வருகிறது! அவள் படிக்க வந்தது முதலாக அதற்கு ஏதேனும் பரிசு வாங்கி அனுப்புவது வழக்கமாக கொண்டிருக்கிறாள்! ஆகவே அதற்காக பிற்பகலில், அவள் நகரின் எல்லை முடியும் இடத்தில் இருக்கும் பிரபல ஜவுளிக்கடைக்கு செல்ல வேண்டியிருந்தது! அன்றைக்கு வேறு யாரும் உடன் வரவில்லை என்றுவிட்டனர்! ஞாயிறன்றே போகலாம் என்று நினைத்தாள்! அன்றைக்கு சரியான மழை! மறுநாளும் தொடர்ந்தது! இரண்டு நாட்களாகத்தான் கொஞ்சம் வெயில் வரத் தொடங்கியிருக்கிறது! இன்றைக்கு போனால் தான், நாளைக்குள் அனுப்ப முடியும்! இதுவரை அவள் தனியே சென்றது கிடையாது! போக வர நேரம் இரண்டு மணி நேரம் ஆகலாம், கடையில் தேர்வு செய்ய அரைமணி ஆகும்! இன்றைக்கு வேற வழி இல்லை! பகலில் தானே சென்று வரலாம் என்று நினைத்தவள், கால்டாக்ஸியில் போவதை தவிர்த்து, பஸ்ஸில் போவது தான், நல்லது என்று கிளம்பிவிட்டாள்!
அந்தப்பக்கம் பஸ் அதிகம் வராது, அவள் இருக்கும் பகுதியில் இருந்து நடந்து பிரதான சாலைக்கு போவதென்றால், அரைமணி நேரம் ஆகும்! நல்ல வேளையாக தோழி ஒருத்தி இருசக்கர வாகனம் வைத்திருந்தாள்! இன்பாவுக்கு அதை ஓட்டத் தெரியாது! பள்ளிக்கு அவள் காரிலோ, அல்லது தந்தையின் பைக்கிலோ தான் போய் வழக்கம்! ஆகவே அவளுக்கு சைக்கிளும் ஓட்டத் தெரியாது! இன்றைக்கு தான் அவளுக்கு கற்றிருந்தால் இப்போது உபயோகமாக இருந்திருக்குமே என்று ரொம்பவும் தோன்றியது!
பிரதான சாலையில் ஊருக்குள் செல்லும் வழியில், அந்தப் பகுதிக்கான பேருந்து நிலையம் இருந்தது! நிகிலா அங்கே அவளை கொணர்ந்து இறக்கியதோடு, உரிய பேருந்திலும் ஏற்றிவிட்டுச் சென்றாள் ! நிகிலாவுக்கு அன்றைக்கு மாதப் பிரச்சினை! இல்லை என்றால் அவளே அழைத்துப் போய் இருப்பாள்!
இன்பாவிற்கு அது பகல் நேரம் என்பது ஒன்று தான் ஆறுதலாக இருந்தது !ஆயினும் ஏனோ, உள் மனம் எச்சரித்தபடி இருந்தது! அதை புறம் தள்ளிவிட்டு, பயணத்தை ரசிக்க முயன்றாள்
🩷🩵🩷
நிகிலா தான் இன்பாவிற்கு கொஞ்சம் நெருக்கமானவள்! இருவரும் சென்னையில் இருந்து படிக்க வந்திருப்பவர்கள்! அந்த காரணம் தவிர, இருவரும் ஒரே பகுதியில் வசிப்பவர்களும் கூட, அதனாலேயே சாந்தி சற்று நிம்மதியாக இருந்தார் எனலாம்!
நிகிலாவின் தந்தை மதன், சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது! அதற்கு முன்பு புதுக்கோட்டையில் வேலை செய்து கொண்டு இருந்தார்! அவருக்கு மகளைப் பிடிக்காது! ! அதற்கு காரணம் அவரது மனைவி நளினி, அவளை பெற்ற கையோடு, கடிதம் எழுதி வைத்துவிட்டு அவளது காதலனுடன் சென்று விட்டாள்! அன்று முதல், அவருக்கு பெண்களையே பிடிக்காமல் போய்விட்டது!
நிகிலாவை, கிராமத்திற்கு தூக்கிச் சென்று வளர்த்தது அவளது தந்தை வழி பாட்டி தான்! அவர் உயிருடன் இருந்தவரை அவள் சற்று நிம்மதியாக இருந்தாள் எனலாம்!
நிகிலா ருதுவாகி ஒரு வருடம் கழித்து பாட்டியும் மறைந்துவிட்டார் ! பதினான்கு வயதுப் பெண்ணை, கொணர்ந்து வீட்டில் வைத்து பராமரிக்க இயலாது என்பதும், அவள் தாயைப்போல யாரையும் இழுத்துக் கொண்டு போய் விடுவாளோ என்ற அச்சமும் மதனை அந்த முடிவை எடுக்க வைத்தது!
நிகிலாவை அதிக கட்டுப்பாடுகள் கொண்ட பள்ளியின் விடுதியில் சேர்த்துவிட்டார்! விடுமுறைகளுக்கு கூட அவள் அங்கேயே இருந்த கிறித்துவ மடத்தில் தங்கியிருக்க செய்தார்!
தந்தை அவளிடம் ஏன் இப்படி நடக்கிறார் என்று அவளது பாட்டி சொல்லி வைத்திருந்ததால், அவளுக்கு அவர் மீது பரிவு தான் உண்டாயிற்று! தாயின் மீது மிகுந்த வெறுப்பு தான்! தந்தையின் இந்த நிலைக்கு அவள்தானே காரணம் என்று! பாட்டி அவளை தைரியமான பெண்ணாக வளர்த்திருந்தார்!
நிகிலா பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர வேண்டும் என்றபோது, அவர் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்! அத்தோடு தொல்லை தீரும் என்று அவர் கருதினார்!
அதை சரியாக புரிந்து கொண்ட நிகிலா,"நான் கல்லூரியில் படித்த பிறகு, என் சொந்தக்காலில் நிற்க முடியும்! நான் யாரையும் காதலித்து ஓடிப் போக மாட்டேன் அப்பா! எதுவானாலும் உங்கள் அனுமதியோடுதான் செய்வேன்! வேலைக்குப் போன பிறகு, உங்களுக்கு நான் தொந்தரவாக இருக்க மாட்டேன்! அதனால் என்னை படிக்க வைங்க" என்றாள்!
மகளின் பேச்சில் மதன் திடுக்கிட்டார்! தன்னை அவள் கண்டு கொண்டாள் என்பதில் அவருக்கு தலையிறக்கமாக இருந்தது! கூடவே அவள் அவரை மதித்து பேசியது பிடித்திருந்தது! ஆனால் அதை அவள் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை!
நிகிலாவுக்கு கோவை கல்லூரியில் இடம் கிடைத்தது! அவளுக்கு மாதம் தவறாது பணம் போடுவதோடு சரி, மற்றபடி மகள் என்ன ஆனாள் என்று அவர் வந்து பார்ப்பதில்லை! விடுமுறைகளில் நிகிலா வீட்டிற்க்கு வந்துவிடுவாள்! எங்கே போவதானாலும் அவருக்கு தகவல் சொல்லிவிட்டுப் போவாள்!
சமைப்பதற்கு வீட்டில் ஒரு வயதானவர் இருந்தார்! மற்ற வேலைகளுக்கும் கூட ஆட்களை வைத்திருந்தார்!
நிகிலாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இதோ நிறைவேறப் போகிறது! ஆனால் அவளுக்குள் வரப் போகும் காதல் கைகூடுமா??
🩷🩵🩷
ரிஷியின்,மனதில் இப்போதெல்லாம் இன்பாவின் நினைவுகள் அடிக்கடி வந்தது! அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அதிகமாக உண்டானது! ஆனால் அவன் அவளை காண செல்லவில்லை! இந்த ஆவல் எத்தனை தூரம் அவனை கொண்டு செல்கிறது என்று அவன் சுயபரிசோதையில் ஈடுபட்டிருக்கிறான்!
அன்று பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்!
காலையில் இருந்தே அவனுக்கு இன்பாவின் நினைவு தான்! அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை! எந்த வேலையும் ஓடவில்லை ! ஒருவாறு முயன்று தன்னை கட்டுப்படுத்தி, வேலைக்கு கிளம்பி விட்டான்! அன்று மாலையில் உடன் வேலை செய்பவர் வீட்டில் ஒரு பிறந்தநாள் விழா! அதற்கு போக வேண்டாம் என்று அவன் நினைத்திருந்தான்! காரணம், அது அவன் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு மணி நேரம் பயணிக்கும் தூரத்தில் இருந்தது! அங்கே தான் ஊரின் எல்லை முடிகிறது! இரவு, அறைக்கு திரும்ப வெகு தாமதமாகிவிடும் என்று, அவனும், உடன் வேலை செய்கிறவர்களில் அந்தப்பக்கம் குடியிருக்கும் சிலரும் தயக்கம் காட்டியபோது, பார்டியை அவரது வீட்டிற்கு, போவதற்கு முன்னதாகவே இருக்கும் சின்ன ஹாலில் வைத்திருப்பதாகவும், அதே போல சற்று முன்னதாகவே நிகழ்ச்சியை நடத்தி, அனைவரையும் சீக்கிரமாக அனுப்பி விடுவதாகவும் தெரிவித்து வற்புறுத்தவும், எல்லாரும் சரி என்றுவிட்டனர்!
ரிஷிக்கு இன்னமும் மனது டைலமாவில் தான் இருந்தது! அதிலும் இன்பாவின் நினைவு ஒரு புறம் அவளை நேரில் பார்த்துவிட்டால் சரியாகிவிடுமோ என்ற எண்ணமும் தோன்றிக் கொண்டிருந்தது! அவளுக்கு இப்போது டூட்டி நேரம் எப்போது என்று அவனுக்கு தெரியாதே! பகல் வேலை என்றால் அவளு நிச்சயமாக பார்க்க முடியாது! என்று பலவாறு யோசித்தபடி அலுவலகத்திற்குள் நுழைந்தான்!
அவனது இருப்பிடத்தில் அமர்ந்தபின்னும் வேலையில் கவனம் செலுத்த பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது! சே! என்ன கண்றாவிடா இது? என்று ஒரு புறம் எரிச்சலும் உண்டாயிற்று!
அன்றைக்கு ஒருவாறு மதிய உணவு இடைவேளை வரை வேலையில் மூழ்கியிருந்தான் ரிஷி! பிற்பகலில், அதிக வேலை இல்லை! சற்று நேரம் செய்திருந்த வேலையை சரிபார்த்தவன், மூன்று மணிக்கு கேன்டீன் சென்று டீயை வாங்கிக் கொண்டு அமர்ந்தவனின் கைகள் தானாக கைப்பேசியில் கேலரிக்குள் சென்று இன்பாவின் புகைப்படத்தில் போய் திறந்தது! அவளையே சிலகணங்கள் பார்த்திருந்தான்!
ஏனோ அவளை பார்க்காமல் முடியாது என்பது போல உந்துதல் உண்டானது! எப்படி போய் பார்ப்பது? அவன் என்ன ரோட் சைட் ரோமியோவா? கண்ட நேரத்தில் அவளை போய் பார்ப்பதற்கு! தொழிலதிபரின் மகன், பொறுப்பான வேலையில் இருக்கிறவன், திடுமென எங்கே போய் எப்படி பார்ப்பது? இதற்குள் நேரம் ஐந்தை நெருங்க , அந்த விழாவிற்காக அன்றைக்கு எல்லோருமாக சற்று முன்னதாக கிளம்பிக் கொண்டிருந்தனர்! ரிஷியும் கிளம்பி அறைக்கு வந்து குளித்து முடித்து காபியை போட்டு குடித்துவிட்டு, தயாராகி கீழே வந்தான்! வானம் மந்தாரமாக இருந்தது, எந்நேரமும் மழை வரக்கூடும் என்று தோன்றியதும், அவனுக்கு வழக்கமாக வரும் ஆட்டோவை அழைத்தான்! போக வர என்று பேசி ஏறிக் கொண்டான்! அப்போதுதான் பிறந்தநாளுக்கு பரிசு ஒன்றும் வாங்காதது நினைவு வந்தது! பிரதான சாலையை அடைந்து சற்று தூரம் வரை அவன் எதிர்பார்த்தது போல கடை தென்படவில்லை! அப்போது சாலையின் குறுக்கே கையைக் காட்டியபடி அந்த இளம் பெண் வந்தாள்!