• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

49 & 50 சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
154
132
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
நளினியின் ஆசை, கணவன் மனைவி பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ வேண்டும் என்பது! அதிலும் அதிகம் படிக்காத, சராசரியான பெண்களுக்கே உரிய ஒரு நியாயமான விருப்பம்!

நளினிக்கு ஆசை இருந்தாலும், கணவனை நம்ப முடியவில்லை! ஆகவே, அவள் ஒரு நிபந்தனை விதித்தாள்! அவன் ஒரு வருஷம் வெளியே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்! அப்படி செய்தால் கடை வைப்பதற்கு நகையை தருவாதாக சொன்னாள்!

நாகு யானை மாதிரி மனதில் வைத்திருந்து பழிவாங்கக் கூடியவன்! அதை நளினி ஒரு முறை பட்டும் திருந்தவில்லை! சொல்லப்போனால் அவளுக்கு அது புரியவில்லை!

நாகு வேலைக்கு போனானா இல்லையா என்று நளினி அறியாள்! ஆனால் குடிக்காமல், ஒழுங்காக வீட்டுக்கு வந்தான்! வாரம் ஒரு முறை சம்பளம் என்று ஒரு தொகையை கொணர்ந்து, கொடுத்தான்! கணவன் திருந்திவிட்டதாக அந்த பேதை பெண் நம்பினாள்! அவளும் மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டு வீடுகள் கூடுதலாக வேலைக்கு சென்றாள்! இரண்டு பேரின் சம்பளம் வந்ததால், பணத்தை சிக்கனமாக செலவழித்து, கொஞ்சம் சேர்த்தும் வைத்தாள்!

அபிலாஷாவுக்கு முதல் பிறந்த நாளின் போது, நாகு பொம்மை, சின்னதாக கேக் வாங்கி வந்தான்!
நளினிக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது, அதை கணவன் அறியாமல் துடைத்துவிட்டு, அன்று கறி வாங்கி பிரியாணி சமைத்தாள்! அக்கம் பக்கம் வீடுகளுக்கும் தந்து தன் மகிழ்ச்சியை, பகிர்ந்து கொண்டாள்!

நளினி இனியும் கணவனை சந்தேகிக்க கூடாது என்று முடிவு செய்தாள்! பத்து பவுன் நகையை கணவனிடம் கொடுத்து தொழில் தொடங்க சொல்லலாம் என்று நினைத்தாள்! அவள் ஏற்கனவே காதில், கைகளில், கழுத்தில் என்று பத்துபவுன் நகையை போட்டுக் கொண்டிருந்தாள்! மீதி இருந்த நெக்லஸ், ஆரத்தை அவனிடம் கொடுக்க முடிவு செய்தாள்!

பிறந்தநாள் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு, கணவனை கோவிலுக்கு அழத்து சென்றாள் நளினி! அங்கே வைத்து நகையை அவனிடம் கொடுத்தாள்! நாகுவுக்கு மொத்தமாக கொடுக்கவில்லை என்று ஏமாற்றம் தான்!

அதை காட்டிக்கொள்ளாமல், கடைக்கு அட்வான்ஸ் கொடுத்த பிறகு, சரக்கு வாங்க, இந்த பணம் பத்துமானு தெரியலையே?" இழுத்தான்!

"கடை எல்லாம் நமக்கு இப்ப வேண்டாம்யா! ஒரு தள்ளு வண்டியில் சரக்கு வாங்கிப் போட்டு வியாபாரம் பண்ணலாம்! இரண்டு வருடத்துக்குள் பணம் சேர்த்து ஒரு கடையை வாடகைக்கு பிடிச்சுக்கலாம்! " என்று நளினி தன் திட்டத்தை சொன்னாள்!

நாகுவுக்கு தொழில் செய்யும் எந்த எண்ணமும் இல்லை! மொத்த நகையை ஆட்டைய போடலாம் என்று நினைத்தவனுக்கு, பாதி நகை கிடைத்ததில், ஏமாற்றத்தை விட ஆத்திரம் தான் அதிகமாக இருந்தது! ஆனால் இப்போது அதை காட்டினால், உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா என்ற கதையாக கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டால், முதலுக்கே மோசமாகிவிடுமே! அகவே அவளுடன் விவாதிக்காமல், நகையை வாங்கிக் கொண்டு கிளம்பினான்! இனி, அவன் நளினியை திரும்ப சந்திக்கப் போவதில்லை! அதை அறியாத நளினி, தன் வாழ்வில் புதிய விடியல் வரப்போகிறது என்று உற்சாகமாக கடவுளை வணங்கிவிட்டு, வீடு வந்து சேர்ந்தாள்!

காலையில் போனவன், வரவில்லை! அதனால் அவள் பெரிதாக கவலைப்பப்படவில்லை!இதற்கு முன்பு அப்படி அவன் போய்விட்டு திரும்பி வந்திருக்கிறான்! அதனால் ஒரு வாரம் வரை எதிர்பார்த்து காத்திருந்தாள்! அவனது கைபேசிக்கு அழைத்து பார்த்தாள்! அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று பதில் வரவும் தான், தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது! அது மட்டுமின்றி, நல்ல வேளையாக மொத்த நகையை கொடுத்து விடவில்லை என்று சிறு ஆறுதல் உண்டாயிற்று! இனி, அவள் வாழ்க்கை அவளது மகளோடுதான் என்று முடிவிற்கு வந்தாள் நளினி!

மிச்சம் இருக்கும் நகைகளை வைத்து தானே ஏதாவது கடை போடலாமா என்று யோசித்தாள் நளினி! ஆனால், கையில் பெண் குழந்தை இருக்கிறாள்!அவளுக்கு அது வேண்டும்! எவ்வளவு உழைத்தாலும் இந்த காலத்தில் நகை சேர்ப்பது என்பது பிரம்மபிரயத்தனம் என்று அவளுக்கு தெரியும்! ஆகவே நளினி வீடுகளுக்கு சென்று வேலை செய்வதை ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டே ஒரு வருடமாக அவள் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடாக போட்டு,மாலை நேரங்களில் வீட்டிற்கு முன்புறமாக இருந்த திண்ணையில் வடை, பஜ்ஜி என்று செய்து விற்கும் தொழிலை ஆரம்பித்தாள்! அது மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்தது!

ஒருவழியாக நளினியின் வாழ்க்கை தங்கு தடையின்றி செல்லத் தொடங்கியது! அந்த பகுதியை விட்டு சற்று நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் காலனிக்கு மாறிக் கொண்டாள்! வயதானவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு மூன்று வேளை உணவு சமைத்து கொடுக்க ஆரம்பித்தாள், உதவிக்கு ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டாள்! அந்தப் பெண்ணும், காதலனால் கைவிடப்பட்டதால், கடலில் விழுந்து சாகப் போகும் போது, நளினி தான் காப்பாற்றி தன்னுடன் வைத்துக் கொண்டாள்!

அந்த பெண் லலிதா, நன்றாக உழைத்தாள்! இரு பெண்களுமாக சேர்ந்து அபிலாஷாவை வளர்த்தனர்! படிப்பு சுமாராக வந்தது! அப்படியும் ஒரு வகுப்பில் தடம் மாறி, இரண்டு வருசம் படித்து, இப்போது பிளஸ்டூ வந்து
நிற்கிறாள்!

நளினி, இப்போது உதவிக்கு இன்னும் கொஞ்சம் ஆட்களை சேர்த்துக் கொண்டு, அவளது தொழிலை விஸ்தரிக்க எண்ணினாள்! அதற்கு சரியான இடமும் கிடைக்கும் போல இருந்தது! அன்று அது விஷயமாக வெளியே செல்ல வேண்டியிருந்தது! ஆகவே லலிதாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு,சைக்கிளில் கிளம்பினாள்! மகளையும் உடன் அழைத்துக் கொண்டு போகும் வழியில் இருந்த பள்ளியில் விட்டுவிட்டுப் போனாள் !

🩵🧡🩵

இன்பா அறைக்கு வந்த பிறகும், ரிஷியுடன் நடந்த உரையாடலை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்து உள்ளம் பரவசமாக! அன்றைக்கு மழைநாளில் அவனது அரவணைப்பில் இருந்ததும் நினைவில் வர, அவளது கன்னங்கள், கதகதத்தது! அன்றைக்கு உரிமையாக ஒருமையில் பேசியவன் இன்று ஏன் யாரோ போல பன்மையில் பேசினான்? என்ற கேள்வி ஒருபுறம் குடைந்தது! எது நிஜமான ரிஷி? அந்தப் பெண்ணுக்கு அவன் ஏன் துணையாக வரவேண்டும்? அவள் கேட்டால், இவன் மறுப்பதற்கென்ன? பெண்களுக்கு எல்லாம் இவன் தான் காவலனா என்ன? அவளும் அவள் உடையும்... நினைக்கும் போதே ஆத்திரமாக வந்தது! அவளை அவனோடு விட்டு வந்திருக்க கூடாது, அவளுக்கு உதவி செய்து அனுப்பிவிட்டு வந்திருக்க வேண்டும்! அடுத்த முறை அவள் அவனோடு வரட்டும் அவளுக்கு இருக்கு கச்சேரி! என்று மனதோடு அர்ச்சனை செய்து கொண்டிருந்த போதும், இன்னொரு புறம்,ஏனோ மனது ஒருவிதமாக சஞ்சலமாகவே இருந்தது! ஏன் என்று அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை!

அவளுக்கு அன்று இரவு வேலை என்பதால், கிளம்பிக் கொண்டிருந்தாள்! அடிக்கடி அவளது பார்வை, கைப்பேசியில் படிந்து மீண்டது! அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் கூட தெரியவில்லை!

நிகிலாவுடன் வாகனத்தில் ஏறிக் கொண்டு மருத்துவமனையை அடைந்ததும் இறங்கிக் கொள்ள, வண்டியை பார்க்கிங்கில் விடுவதற்கு மற்றவள் செல்ல, சோர்வுடன், நடந்தாள் இன்பா!

அப்போது அவளது கைப்பேசியில் தகவல் வந்ததற்கான ஒலி எழும்பியது! அவசரமாக அதை எடுத்து பார்த்தாள்! ரிஷி, தான் ஏதோ அனுப்பியிருந்தான்! இன்பா பரபரப்புடன் என்னவென்று திறந்து பார்த்தாள்! " சுரபி, பத்திரமாக, போயிட்டியா?" நீ மெஸேஜ் பண்ணுவேனு நினைச்சேன்! நீ பண்ணலை, அதான் நானே பண்ணிட்டேன்!"

இன்பாவிற்கு அதுவரை இருந்த சலனம் எல்லாம் போன இடம் தெரியவில்லை! உடனடியாக பதில் அனுப்பினாள்! அன்றைக்கு இரவு வேலைக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தாள்!

அவனும் பதில் அனுப்பினான்! நிகிலா, வரவும் கைரேகை பதிவு செய்துவிட்டு,மருத்துவர்கள் அறைக்கு சென்றவள், பிறகு பேசுவதாக தகவலை அனுப்பிவிட்டு, அன்றைய பணியை கவனிக்கச் சென்றாள் இன்பா!

அவளது முகமே பல்ப்பு போட்டது போல பிரகாசமாக இருந்தது! உற்சாகமாக வேலையை செய்தாள்! பொதுவாக அவள் மிகவும் பொறுமைசாலி! சிரித்தபடியே நோயாளிகளை கையாள்வாள்! குழந்தைகள் கூட அவளிடம் அடம்பிடிக்காமல் மருந்து சாப்பிடுவார்கள்! இன்றைக்கு அவள் குழந்தைகள் வார்டுக்குள் சென்று ஒவ்வொருவராக பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வாண்டு,"டாக்டர் ஆன்ட்டி, இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றது

இன்பா, ஒருகணம் திகைத்து பின் இயல்புக்கு வந்தாள்! " ஏன்டா, இவ்வளவு நாளும் நான் அழகா இல்லையா? இன்னிக்கு என்ன புதுசா சொல்றே" என்றாள்.

அதற்குள்ளாக அந்த பையனின் தாயார், "நானே அதைத்தான் மா சொல்ல நினைச்சேன்! வழக்கத்தை விட, இன்னிக்கு உன் முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது! வீட்டுல வரன் ஏதும் பார்த்திருக்கிறாங்களா?" என்றாள்

இன்பாவின் முகம், நாணத்தில் சிவந்து போயிற்று! சிறுவனுக்கு மருந்தை கொடுப்பது போல குனிந்து கொண்டவள்," இன்னும் படிப்பு முடியலை அக்கா! அதற்குள் கல்யாணம் எல்லாம் பண்றதா இல்லை!" என்றுவிட்டு, அடுத்த பிள்ளையிடம் சென்று விட்டாள்!

"எனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி நடந்து கொள்கிறேன்? இந்த இனம்புரியாத உணர்வுக்கு என்ன அர்த்தம்? ரிஷியின் தகவல் வந்ததும் நான் ஏன் இப்படி மகிழ்ந்து போனேன்? இது.. இது அதுவா?"

அவனது சுரபி என்ற பிரத்தியேக விளிப்பு, அவளை என்னவோ செய்தது! எல்லாருக்கும் அவள் இன்பா தான் ! ஆனால் அவளது அன்னைக்கு மட்டும் அவள் சுரபி தான்! இன்று அவன் தகவலில் அப்படி விளிக்கவும் அவளது மனது
தகதிமிதா ஆட்டம் போட்டது என்னவோ நிஜம் தான்!

இரவு அவளை சாப்பிட்டாளா என்று கேட்டிருந்தான்! அதற்கு பதில் அனுப்பினாள்
, சற்று நேரம் அவனிடம் இருந்து பதிலில்லை ! அதன்பிறகு குட் நைட் என்ற தகவல் வர பதிலுக்கு அவளும் அனுப்பிவிட்டு, கூடவே சிரிக்கும் ஸ்மைலியும் அனுப்பிவிட்டு, நிம்மதி பெருமூச்சுடன், அவளுக்கான இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்!

அதே நேரம் அங்கே ரிஷியும் கைப்பேசியை மார்போடு அணைத்தபடி ஒருவித பரவச நிலையில் தான் படுத்திருந்தான்! அவனும் காலையில் நடந்ததைத் தான் replay போல நினைத்து நினைத்து, மகிழ்ந்திருந்தான்!

இன்பாவை சில தடவையே பார்த்திருந்த போதும், அவளது முக பாவங்கள் அவனுக்கு அத்துபடி! அதிலும் இன்றைக்கு அவள் பார்த்த பார்வையில் அவன் தொலைந்தே போனான்!

மதிய உணவை கனிகாவுடன் பெயருக்கு உண்டுவிட்டு, தனக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லி, அவளை கொண்டு போய் விடுதியில் விட்டுவிட்டு, அறைக்கு திரும்பி விட்டான்!

ரிஷி வந்தது முதலாக இன்பா பேசுவாள், அல்லது தகவல் அனுப்புவாள் என்று எதிர்பார்த்தான்! ஆனால் ஒருகட்டத்திற்கு பிறகு பொறுக்காமல் தகவல் அனுப்பிவிட்டான்! இதுவும் கூட அவன் இன்பாவுக்கு வைத்த சோதனை தான்! அவள் பதில் சொல்வாளா மாட்டாளா? என்று தெரிந்து கொள்ளத்தான்!

உடனுக்குடன் பதில் வரவும், விடலைப் பயனைப் போல.. அவனுக்கு துள்ளி குதிக்க வேண்டும் போன்று எழுந்த ஆவலை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டான்! பிறகு வீட்டுக்கு சொந்தக்காரருக்கு என்னவென்று பதில் சொல்வான்?

இன்னமும் இருவரும் மனதை பரிமாறிக் கொண்டதாக பறைசாற்ற வில்லைதான்! ஆனாலும் நேரமும் காலமும் கூடிவிட்டால், யாராலும் இருமனம் இணைவதை தடுக்கவும் முடியாது!

அந்த நேரம் வசந்த் அவனை தொடர்பு கொண்டு ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டான்! ரிஷி அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை!


🧡🩷🧡


50. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

இன்பாவின் பெற்றோர் வந்து சென்ற அன்று, அவளை பாதுகாக்க என்று வந்த, ரிஷி, ஏன் அவளை சந்திக்காமல் சென்றான் என்ற நினைப்பிலேயே, மனதை உளப்பிக் கொண்டிருந்த, இன்பாவுக்கு, நிகிலா அதிகம் பேசாதது கருத்தில் படவில்லை!

நிகிலா எப்போதும், கைப்பேசியும் கையுமாக தனிமை தேடி, விடுதியை சுற்றியுள்ள தோட்டத்தில் அமர்ந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தது எல்லாம், தன்னிலேயே மூழ்கியிருந்த, காரணத்தால், இன்பா, கவனிக்க தவறினாள்!

அதன்பிறகு, தோழிகளுடன் ஷாப்பிங் சென்றிருந்த போது ரிஷியை சந்தித்து விட்டு வந்த இன்பாவுக்கு, அவனைத் தவிர வேறு நினைப்பு இல்லாமல் உலகமே அழகு மயமாகிப் போயிற்று!

இரு பெண்களும் தங்கள் உலகில் சஞ்சரித்து இருந்ததால், ஒருவர் அடுத்தவரின் உணர்வுகளையும் மாற்றங்களையும் தெரிந்து கொள்ளவில்லை!

நிகிலாவுக்கு மருத்துவம் படிக்க வந்த பின்பு தான் இன்பாவின் அறிமுகம் கிடைத்தது! அப்படியே சாருபாலாவின் அர்ப்பணிப்பு பற்றியும் தெரிய வந்தது! அவர் மீது மிகுந்த மரியாதை உண்டானது! அதுவரை முகநூல் பற்றி அறிந்து இருந்த போதும் அதில் கணக்கு தொடங்கும் எண்ணம் நிகிலாவுக்கு தோன்றவில்லை! ஆனால் சாருபாலா முகநூல் பக்கத்தில், தனது அனுபவங்களை இன்றைய மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில் பதிவுகளை போடுவதை அறிந்ததும், அவளும் ஒரு கணக்கை ஆரம்பித்தாள்! உடன் படிக்கும் ஒரு சில மாணவ மாணவிகள், தவிர்த்து, வெளி ஆளாக அவள் சேர்த்தது
சாருப்பாலாவை மட்டும்தான்! அவள் முகநூல் வருவதே அவரது பதிவை பார்க்க மட்டும் தான்! மற்றபடி அவளுக்கு பொழுது போக்க நேரம் இருக்காது!

ஆறு மதங்களுக்கு முன்பு அவளுக்கு ஒரு நட்பு விண்ணப்பம் வந்தது! (அதற்கு முன்னும் பின்னும் வந்துகொண்டுதான் இருக்கிறது, அவற்றை அவள் பொருட்படுத்தாமல் கடந்து விடுவாள் என்பது வேறு விஷயம்!)
அந்த கணக்கு ஒரு இளைஞனுடையது! அவன் அவளுக்கு msg போட்டிருந்தான்! அவளது பதிவுகள் பிடித்திருப்பதாகவும், அதனால் அவளையும் பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தான்! அவனது அந்த msg பார்த்து

இது அவளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது! அந்த இளைஞனின் முகம் அவளை காவர்ந்தது என்னவோ உண்மை! ஆனால் அவள் முகத்தை கூட பாராமல் கல்யாணம் வரை போய் விட்டானே? என்று மனதுக்குள் குறுகுறுப்பு உண்டாயிற்று!அது அந்த வயதிற்கே உண்டான உவகையில் அவனது விண்ணப்பதை அவள் ஏற்றாள் எனலாம்! அவள் ஒரு சராசரி பெண் தானே ! இதற்கு முன்னாள் அவளை விரும்புவதாக யாரும் சொல்லவில்லை! அவள் எப்போதும் முகத்தில் ஒருவித கடுமையை அல்லது இருக்கத்தை தான் பிரதிபலிப்பாள்! முசுடு என்று கூட சிலர் அவளை குறிப்பிடுவது அவளுக்கே தெரியும்! ஆனால் அவள் அதை புறக்கணித்து விடுவாள்!

அப்படிப்பட்டவள் முதல் முறையாக தடுமாறினாள்! சில தினங்கள் அவள் முகநூலை, முடக்கியும் போட்டிருந்தாள்! ஆனால் சாருவின் பதிவுகள் பார்க்கவேண்டி மீண்டும் அதற்குள் சென்றாள்! (அதற்காக மட்டும்தானா?) அவன் மீண்டும் திருமணம் செய்துகொள்ள கேட்ருந்தான்! அதோடு தன், வேலை,குடும்ப விவரங்களும் அனுப்பியிருந்தான்! குடும்பப் புகைப்படத்தில் அப்பா அம்மா மகன்,மகள் நால்வரும் காட்சியளித்தனர் ! பெற்றோர் வேலைக்கு செல்கிறார்கள்! தங்கைக்கு, வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவிந்திருந்தான்! அவன் இதெல்லாம் சொல்கிறான் என்றால் அவளை தன்னுடையவளாக நினைக்கிறான் என்று தானே பொருள்?!

சாருபாலா அவ்வப்பொழுது வலியுறுத்தும் ஒரு முக்கியமான விஷயம், காதல் என்று உங்கள் கனவுகளை தொலைத்து விடாதீர் என்பதாக இருந்தது! இருபாலாருக்கும் தான் அந்த அறிவுரை! பெண்கள் திருமண விஷயத்தில், இரக்கப்பட்டோ, ஒருத்தலையாகவோ எந்த முடிவும் எடுக்க கூடாது என்றிருந்தார்!

நிகிலாவை பொறுத்தவரை, அந்த மாதிரியாக ஏதும் இல்லை! அவனை பிடித்திருந்தது, அவனோடு பேசவும் பிடித்தது! அவனது கேள்விக்கு மட்டும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் அவளது தந்தைக்கு கொடுத்த வாக்கு! அதை நினைத்து அவள், தனது உணர்வுகளை மறைத்து கொண்டாள்!

தினமும்,மெசேன்ஜரில் அவனது குட் மார்னிங், குட் நைட்,வரவிட்டால் தவித்து போனாள் நிகிலா! அதை அவன் புரிந்து கொண்டானோ என்னவோ, திட்டுமென ஒரு நாள், (அன்று தான், சுற்றுலா செல்வதற்காக ஷாப்பிங் சென்றது) "நிலா, நான் திருமணம் செய்து கொள்ள கேட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது! நீ அதற்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறாய்! என்னை, பிடிக்காவிட்டால் அதை நேரடியாக சொல்லலாம் நான் தவறாக நினைக்க மாட்டேன்! நிச்சயமாக இந்த ஜென்மத்தில் நீதான் என் மனைவி! அதில் மாற்றம் இல்லை! இன்னும் உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன் நிலா! அதற்குள்ளாக உன் பதிலை சொல்லு! சம்மதம் என்றால் சந்தோஷம்! சம்மதம் இல்லை என்றால், அதற்கு பிறகு நான் உன் வழியில் கூறுக்கிட மாட்டேன்! இது சத்தியம்! இனி நீயாக பேசும்வரை நான் உன்னை தொடர்பு கொள்ள மாட்டேன்! ஒரு வேளை, நீ பேசாமல் இருந்துவிட்டால் உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று நான் புரிந்து கொள்வேன்!" என்று தகவல் அனுப்பிவிட்டு போய்விட்டான்!

அவனது தகவல் வந்து ஒரு நாளை கூட தாண்டவில்லை!நிகிலாவின் காட்டுப்பாடு, தகர்ந்து போயிற்று! மனதோடு வெகுவாக, போராடினாள்! ஆனால், அவனை இழக்க அவளுக்கு மனம் வரவில்லை! அன்று இரவே அவனுக்கு msg அனுப்பிவிட்டாள்!

"பேசாமல் மட்டும் இருக்காதீங்க என்னால் அதை தாங்க முடியவில்லை!" என்று அவளது செய்தி வந்ததும் அவன் அப்படியே அசைவற்று போனான்! அவளை அறியாமல் அவளது மனதை அவனுக்கு தெரிய படுத்திவிட்டிருந்தாள் நிகிலா!

"உனக்கு என்கூட பேச பிடிச்சிருக்கு என்பதே ரொம்ப மகிழ்ச்சி நிலா! உன் மனதை நான் புரிந்து கொண்டேன்! உன் படிப்பு முடியும் வரை நான் வேறு பேசி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்!" என்று உறுதி அளித்தான்! அதன் பிறகே நிகிலா நிம்மதியானாள்!

அது மட்டும் அல்ல, அவனுடன் சற்று நேரம் சகஜமாக பொதுவான விஷயங்களை பேசிய பின்னரே விடை பெற்றாள் நிலா!

❤️❤️❤️

இன்பாவை சந்தித்துவிட்டு வந்த ரிஷி, அதான் பின்னர் அவளுடன் கைபேசியில் msg மூலமாக பேசியதில் மிகுந்த உற்சாகமாக படுத்திருந்தான்! அவனுக்கு தூக்கம் வரும் போல தெரியவில்லை! வசந்தனிடம் அதை சொல்ல வேண்டும் போல இருந்தது! சரியாக அவனும் கைபேசியில் அழைத்தான்!

" டேய்ய் வசந்த், வாட் எ சர்ப்ரைஸ்? இப்போதான் உன்னை நினைச்சேன்! நீயே கூப்டுட்டே!" என்று உற்சாகமாக பேசினான்!

"உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்னு ரொம்ப நாளா நினைக்கிறன்! ஆனால் அதுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கலைடா! இன்னிக்கு தான் அதுக்கான நேரம் வைச்சிருக்கு!" என்ற வசந்தனின் குரலில் ஒரு துள்ளல் இருந்ததை கவனித்தான் ரிஷி!

" என்னடா, மாப்பிள்ளை? யார் அந்த பொண்ணு?" என்று வேண்டும் என்றே சீண்டினான் ரிஷி! வசந்தன் காதலில் எல்லாம் சிக்குகிறவன் இல்லை என்பது ரிஷியின் அபிப்ராயம்! அதற்கு முக்கிய காரணம் வித்யா! அவன் காதலித்தால், தங்கையை யாரும் கல்யாணம் செய்துகொள்ள முன் வரமாட்டார்கள் என்ற அச்சம்! வீட்டில் பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன செய்வது என்று அவனுக்கு அவனே ஒரு வட்டம் போட்டு வாழ்கிறவன் என்பதை அறிந்து இருந்தான் ரிஷி!

ஆனால் ரிஷியின் அந்த அபிப்ராயத்தை, தகர்த்து விட்டது வசந்தனின் பதில்!

"மச்சான் எப்படிடா கண்டு பிடிச்சே?" என்றான் வசந்தன்ஆச்சர்யமாக !

"டேய்ய், என்னடா சொல்றே? நிஜமாவா? நீயாடா? என்னால நம்பவே முடியலையே! உன்னை கூட ஒரு பெண் மாற்றிவிட்டாளே?"ஆமா யாரு அந்த தேவதை? " ஆர்வமாக கேட்டான்!

"ரிஷி, இப்போதைக்கு அவள் படிக்கிறாள்! அப்புறமாக தான், நான் அவகிட்டே எல்லாம் பேசி முடிவு செய்யணும்! ஆறு மாசமா அவள் பிடியே கொடுக்கலை மச்சான்!" என்றான்!

"ஏதே ஆறு மாசமாவா?? என்னடா சொல்றே? "

"ஆமாடா எனக்கு உறுதியா தெரியாம உன்கிட்டே சொல்ல முடியல! இன்னிக்கு தான் அம்மணி அவளோட பீலிங்கை வேற மாதிரி சொல்லிருக்கா! "

"ஓ! சூப்பர் டா! சரி, நீ எங்க அவளை எப்போ? எங்கே? மீட் பண்ணினே? விவரமா சொல்லு!"

"நான் இன்னும் அவளை பார்க்கவே இல்லைடா!"

"அடேய் என்னடா சொல்றே? பார்க்காமல் எப்படிடா?"

"அது அப்படித்தான் டா! ஏனோ,தெரியவில்லை ரிஷி, அவள் முகம் எப்படி இருக்கும்னு நான் இதுவரை கற்பனைக்கூட செய்தது இல்லை! அவள் எப்படி இருந்தாலும் சரி, எனக்கு அவள் தான் மனைவி!"

"கிரேட் மாப்பிள்ளே ! அந்த பொண்ணு ரொம்ப லக்கி டா! பார்க்கவில்லை சரி, பெயராவது தெரியுமா இல்லை அதுவும் அனாமிகாவா?"

"நிகிலா,தமிழ் நாட்டில் ஒரு காலேஜில், கடைசி வருஷம் படிக்கிறாள்! அவ்ளோதான் தெரியும்!"

"அட்ரஸ் சொல்லு மாப்பிள்ளை! கண்டுபிடிச்சு போட்டோ நான் அனுப்பி வைக்கிறேன்!" என்றான் ரிஷி உற்சாகமாக!

"வேணாம் மச்சான், அவளா எப்போ அவள் முகத்தை காட்டுகிறாளோ அப்பவே பார்த்துகிறேன்!"

"மச்சான், காவியக் காதல் தான் போ!" என்றவன் ஏதோ நினைவு வந்தவனாக, "டேய், எந்த காலேஜ் என்றாவது சொல்லு! "

"எந்த காலேஜ் என்று தெரியாது டா ! என்றவன், " நானும் கேட்கலை அவளும் சொல்லவில்லை!என்றவன்,
"ஆனால் இப்போ அப்பா, அம்மா என்ன சொல்வாங்கனு ரொம்ப கவலையா இருக்கு! எப்படியும் நான் ஊருக்கு வரும்போது அவளை சந்திப்பேன்! வித்யா கல்யாணத்துக்கு அப்புறமா, என்னோட விஷயத்தை சொல்லலாம்னு இருக்கிறேன்! அதனால, நீ இது தெரிஞ்ச மாதிரி காட்டிக்கதேடா!"

"சரிடா, இப்படி ஏதும் தெரியாம எப்படிதான் லவ் பண்றியோடா? பட்.. என்று ஏதோ சொல்ல வந்துவிட்டு, சொல்லாமல் நிறுத்திகொண்டான் ரிஷி!"

"ஏதோ சொல்ல வந்தியேடா ?"

"ஒன்னுமில்லைடா, இன்னைக்கு, இன்பாவை பார்த்தேன்டா!, என்று நடத்த விவரத்தை சொன்னான்" ரிஷி!

"வாழ்த்துகள் டா மச்சான்! அப்போ அடுத்த வாரம் நீயும் tour போறேன்னு சொல்லு!

"ஆமாடா, இனி விலகி இருக்க முடியாதுடா! அவள் படிப்பு எப்போ முடியும் என்று வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன்! "

ரிஷியின் ஆவல், எதிர்பார்ப்பு எல்லாம் நடக்குமா? இன்பாவை அவன் கைபிடிப்பானா??
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 6

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,372
577
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வசந்த், ரிஷி திக் பிரண்ட்ஸ் போல நிகிலா, சுரபி திக் பிரண்ட்ஸ் சூப்பர்