5.எந்தன் தேன் ஜவ்வே
என்னப்பா அம்மா எங்கே என்று கேட்டு கொண்டே கார்த்தி படி இறங்கி வர கயல் வெடுக்கென வாசலை தாண்ட சரியாக இருந்தது..
அவ அப்பத்தா வீட்டுக்கு போய் இருக்கா
எப்ப அப்பா..
அவ போய் அரைமணிநேரம் இருக்கும் இரண்டு நாள் இருந்துட்டு வரேன்னு போய் இருக்கா
என்ன திடீர்னு…
எல்லாம் இந்த நகை பிரச்சினை தான்
நகைக்கும் அம்மா போனதுக்கும் என்ன சம்பந்தம்
ஒரு பெருமூச்சுடன் அந்த நகையை எல்லாம் அம்மா அப்பத்தா வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டா போல இப்ப இவ்வளவு நேரம் கயல் ஒரே சத்தம் பீரோல காணோம் ன்னு தேடிட்டு..
என்னது நகையை எடுத்துட்டு போய் இருக்காங்களா அதுக்கு இவ ஏன் சத்தம் போடுறா அது தேனு நகைன்னு சொல்லிட்டாங்க அப்புறம் என்னவாம்?
நாம் தான் செஞ்சு தர்றோம் ன்னு சொல்லிட்டோமே ஏன் கயலு புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பண்ணுறா?
அவளுக்கு அந்த நகையே தான் வேணுமாம்
ப்ச் என்னப்பா இவ..
நானும் எல்லாம் சொல்லிப் பார்த்துட்டேன் என்று இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையை சொல்ல
எதுக்கு அடிச்சேன் ன்னு கேட்டீங்களே இப்ப புரியுதா அவ என்ன நினைக்குறாளோ அது நடந்தே தீரனும் அதான் இப்படி பண்ணுறா என்ற மதி குழந்தையுடன் கீழே வர
என்னம்மா பேத்தி எழுந்துட்டாளா?
ஆமா மாமா இவளை பிடிங்க கார்த்தி அவளுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்.
கார்த்தி, “ மதி அம்மா வீட்டில் இல்ல
அதான் மாமா சொன்னாங்களே
கார்த்தி, “ இல்ல அம்மா வர இரண்டு நாள் ஆகும் நாம இங்கேயே
இருக்கலாம் ப்பா சனி ஞாயிறு தானே ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் கிளம்பலாம் அப்ப தான் மன்டே ஸ்கூல் போக சரியா இருக்கும்..
சரி மதி..
மதி அடுத்த அடுத்த வேலைகளை பார்க்க மாலை ஐந்து மணி போல் வீட்டிற்குள் நுழைந்தார் பார்வதி..
அம்மா…
கிளம்பலையா கார்த்தி
நீ தான் அப்பத்தா வீட்டுக்கு போய்ட்ட ன்னு அப்பா சொன்னாங்க…
அதுக்கு
இரண்டு நாள் அப்பா என்ன பண்ணுவாங்க அதான்
ஓஓஓ பரவாயில்லயே அப்ப நான் ஒரு மாசம் உங்க அப்பத்தா வீட்டுக்கு போறேன் எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவை.
கார்த்தி திருதிருவென விழிக்க..
அத்த சனி ஞாயிறு ன்னு தான் இங்கேயே இருந்துட்டோம் நான் ஸ்கூல் போகனும் இல்ல..
பார்வதி , “ சும்மா தான் கேட்டேன் மதி முடியாத காலத்தில் உதவுனா போதும் இப்ப நல்லா தான் இருக்கேன்.
தேனு வரலையா ம்மா..
அவ வந்தா என்ன வரலைன்னா என்ன கார்த்தி..
ஏம்மா இப்படி பேசுறீங்க
வேற என்ன பேச, விடு கார்த்தி நான் தேவையில்லாம பேசி டென்ஷன் எனக்கு ஏத்திக்க விரும்பல
அப்புறம் எந்த தேதியில் கல்யாணம் என்று பார்வதி வேலாயுதத்தை பார்த்து கேட்க..
ஏன் பார்வதி உனக்கு தெரியாதா?
கேட்டா பதில் சொல்லுங்க என்று கடுகடுக்க..
வர இருபத்தி ஐஞ்சு..
ஓஓஓ இன்னும் இரண்டு வாரம் இருக்கா
ஆமா..
எப்படி மாப்ள ஊர்ல கல்யாணம் அப்படித்தானே
ஆமா
இங்க பந்தல் போடுற வேலை எல்லாம் இருக்கா?
கயல், “ஏன் இப்ப என் நிச்சயம் திருட்டுதனமா நடந்த மாதிரி கல்யாணமும் காதும் காதும் வச்சு பண்ணனும் ன்னு நினைக்கிறியா மா”?
….
உன்னையே தான் கேட்டுட்டு இருக்கேன் அப்படி என்ன ஊர் உலகத்தில் இல்லாத மக அவ
அப்போதும் அமைதியாகவே இருந்த பார்வதி பார்வை அத்தனையும் வேலாயுதம் மேல் தான் இருந்தது.
போடனும் பார்வதி பத்திரிக்கை தான் அடிக்க வேண்டாம் ன்னு நீ சொல்லிட்ட அதான் மத்தது..
சரி பந்தக்கால் நடனும் இல்ல பண்ணிடுங்க பந்தல் கொஞ்சம் நல்ல பெரிசாவே இருக்கட்டும் என்றவர் உள் நுழைந்து கதவை அடைத்து விட,
கார்த்தி வேலாயுதம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க மதி தான் யோசனையில் இருந்தாள்..
கயல், “என்ன திடீர்னு பாசமா இல்ல வேசமா?
கயல் …
அப்பா என்னைய அதட்டி என்ன பண்ண போறீங்க நகை எல்லாம் எங்கன்னு கேளுங்க
மதி , “ இது திருந்தாது என்று அடுப்படிக்குள் நுழைந்து விட அறைக்குள் இருந்த வந்த பார்வதி சமையல் கட்டில் மதியை பார்த்து நீ போய் குழந்தையை பாரு நான் சமைக்கிறேன்…
அத்த நீங்க ரெஸ்ட் எடுங்க நான் குரூமா வச்சிட்டேன் விசில் வந்துட்டா முடிஞ்சது மாவு பிசைஞ்சு வச்சு இருக்கேன் ஏழு மணிக்கு போட்டா போதும் இல்ல இந்தாங்க டீ..
சிரித்தவர் டீயை வாங்கி கொள்ள
அத்த நான் ஒன்னு சொல்லவா
சொல்லு மா
தேனுக்கு மாப்ள யாராவது இருந்தா நான் பார்த்து சொல்லவா
என்ன திடீர்னு என்பது போல் பார்க்க..
என்னைய மன்னிச்சிடுங்க அத்த நான் எந்த விஷயத்திலும் உதவியாக இல்லாம போய்ட்டேன்… இந்த நாலு வருஷத்தில் இதை எல்லாம் சரி பண்ணி இருக்கனும் நான் என் குடும்பத்தை மட்டும் யோசிச்சுட்டு…
என்ன மதி நீ ஏன் உன்னையே தப்பு சொல்லிக்குற பெத்தவங்க , கூட பிறந்தவங்க செய்யாததை உன்கிட்டே நான் எதிர்பார்த்தா அது தப்பு மா
அத்த அப்படி இல்ல நான் ஒரு விஷயம் கேள்விபட்டேன் என்று வெளியே எட்டி பார்த்து திரும்ப..
என்ன விஷயம் என்று பார்வதியும் வெளியே எட்டி பார்த்து விட்டு அப்புறம் பேசலாம் மதி
சரிங்க அத்த இப்ப நீ குழந்தையை பாரு என்று சொல்லிவிட்டு பார்வதி வந்து திண்ணையில் அமர சற்றே தள்ளி மதி குழந்தையுடன் அமர்ந்து கொண்டாள்..
கயல் தான் இருவரையும் பார்த்து கொண்டு வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவள் ம்மா நான் கேட்டதுக்கு பதில் வரல
எதுக்கு கத்துற கயலு..
நகையை கேட்டேன் நீ பதில் தரவே இல்ல
நான் அப்பவே சொல்லிட்டேன் அது உங்க அப்பா சம்பாத்தியம் இல்லன்னு..
அப்ப படிக்காதவ சம்பாதிச்சாளா?
ஆமா என்று அழுத்தமாக பார்வதி கத்த
அவரின் கத்தலில் அனைவரும் அங்கே வந்துவிட
என்னாச்சு பார்வதி..
இன்னும் என்ன ஆகனும் ஒன்னு கூட பெரியவளுக்கு இருக்க கூடாதா அவளுக்கு அப்படி என்ன செஞ்சுடீங்க நீங்க அவளே அவளோட சம்பாத்தியத்தை குடுத்தா அதில் தானே நான் அவளுக்கு நகை வாங்கி வச்சேன் அது இவ கண்ணுக்கு உறுத்துது…
அவளுக்கு இப்ப வயசு என்ன?
ஹான் சொல்லுங்க உங்களைத்தான் கேட்கிறேன்.
பார்வதி…
ஓஓஓ அது கூட தெரியாதா இல்ல சொல்ல விருப்பம் இல்லையா?
ஆச்சு அவளுக்கு இருபத்தி ஐஞ்சு ..எட்டு வருஷமா அவளுக்கு என்ன செஞ்சீங்க போட்டுக்கிற துணி கூட அவளுக்கு வாங்க உங்களுக்கு மனசு வரல அப்படி என்ன அவ தப்பு பண்ணிட்டா அவ விருப்பத்தை அவ செஞ்சா அது தப்பா படிப்பை விட அவளுக்கு டிராயிங் பிடிச்சது குற்றமா? பதில் சொல்லுங்க அவளுக்காக அவ தேவைக்காக அவ எதையும் கேட்டது இல்ல ஒரு பொம்பளை பிள்ளை அவளுக்கான அத்தியாவசிய தேவை கூட நீங்க செய்ய மறந்துட்டீங்க அவளுக்கு அவளே ஏதோ இந்த நாலு வருஷமா சின்ன சின்னதா சம்பாதிச்சு அதையும் என்கிட்டே குடுத்தா அதுல வாங்கின நகை இப்ப இவ கண்ணை உறுத்தும் போது கூட அவளுக்கானதை நீ கேட்காதன்னு சொல்ல வாய் வரல இல்ல
நான் அவளோடதை கேட்கவே இல்ல பார்வதி..
ஓஓஓ அப்ப உங்க பொண்ணுக்கு சொல்லுங்க…
அவ என் வீட்டில் தானே இருக்கா என்று சூடாக வேலாயுதம் கேட்க
அதே சூட்டுடன் பெத்தது நீங்க தானே..
பார்வதி
அப்ப என்ன பேச்சு இது, இவங்களை மாதிரி தானே அவளும் இல்ல அவ என்று முடிக்கும் முன் ஓங்கி அறைந்து இருந்தார் வேலாயுதம்.
தொலைச்சிடுவேன் யாரை அசிங்கப்படுத்துறதா நினைச்சிட்டு இருக்க
நீங்க பண்ணாததையா நானும் அவளும் பண்ணிட்டோம். ஊரே காரி துப்புது இதோ இப்ப இங்க வந்து இருக்கிறோமே எதுக்கு?
சொந்த ஊர் ஜனம் எல்லாத்தையும் விட்டுட்டு..
அப்ப இது நம்ம வீடு இல்லையா?
வீடு தான், இல்லன்னு சொல்லல ஆனா என்றவர் ப்ச் எதை சொன்னாலும் புரியப்போறது இல்ல அப்புறம் எதுக்கு விடுங்க என்றவர் சாய்ந்து அமர்ந்து விட..
அத்த இந்தாங்க என்றாள் மதி
என்னவென்று பார்க்க ஒத்தடம் தர ஐஸ் கியூப் இருக்க இதெல்லாம் பழக்கம் தான் மதி விடு என்றவர் கண்மூடி அமர்ந்தவர் மனக்கண்ணில் இன்னும் இரண்டு நாளை கடத்துவது பற்றியே இருக்க மேகா மாப்ளை இருப்பதை அவ்வளவு அழுத்தமாக கூறவும் அதே சிந்தனையில் இருந்தார்..
இங்கே மேகா போனில் சொல்லிய பிறகு அங்கே இருக்க முடியவில்லை பாரி இளவழகனால் எப்போது வேலை முடியும் கிளம்பலாம் என்று பரபரத்தது கொண்டு இருந்தவனுக்கு அடுத்த நாள் மதியம் போலத்தான் எல்லா வேலையும் முடிந்து இருந்தது ..பாட்டி என்று வந்து நின்றவனை துயமல்லி என்ன என்று பார்க்க மேகா போன் பண்ணா பாட்டி,
எப்போ ஊருக்கு போறோம்
பாட்டி…
நானும் எத்தனை வருஷம் காத்துட்டு இருக்கிறது உனக்கு வயசு என்ன இறங்குதா அவளை கண்டுபிடிக்கவே இத்தனை வருஷம் ஆகிடுச்சு இதுக்கு மேல என்னால காத்துட்டு இருக்க முடியாது என் பேத்தியை சீக்கிரம் அழைச்சிட்டு வரனும்
சாயந்திரம் கிளம்பலாம் பாட்டி ..
கிளம்பலாம் என்றவர் அப்போதே தயாராகி விட துயமல்லியை அழைத்து கொண்டு கிளம்பி இருந்தான் பாரி இளவழகன்
இங்கே பார்வதி கிளம்பி போன பிறகு யார் என்னைய கட்டிக்க நிக்கிறாங்கன்னு அம்மாகிட்ட சொல்லுற மேகா..
உனக்காகவே காத்துட்டு இருக்க ஒருத்தர் தான்..
மேகா…
இரண்டு நாள்ல வருவாங்க பார்த்துக்க..
முத்துக்காடு ஜமீன் ன்னு பாட்டி சொல்லுற, அப்பத்தாவும் சரியா கேட்குது அது நம்ம அது என்று தயங்க
என்னடி கேட்கனும் கேட்டு தொலை…
எனக்கு நீ பார்த்து இருக்க மாப்ள நம்ம சீனியரா…
அட்ரா சக்கை நியாபகம் இருக்கா?
மேகா…
இல்ல உனக்கு ஸ்கூல் விஷயம் எல்லாம் நியாபகம் இருக்கான்னு கேட்டேன் யாரு என்னனு நீ தெரிஞ்சுக்கனுமா தேனு..
ப்ச் ஒன்னு அவசியமில்லை என்னைய கட்டிக்க யாரும் முன்ன வரமாட்டாங்க எல்லாருக்கும் நல்ல படிச்ச பொண்ணு வேணும் நான் தான் படிக்கவே இல்லையே…
அடச்சீ நிறுத்து ஊர் சொல்லுவதை கேட்கிறதை நிறுத்து
உன்னையே நீ உணரலன்னா வெளியே இருக்கவங்க எப்படி உணர முடியும் முதல்ல உன்னையே நீ வெளிப்படுத்த பாரு இன்னொருத்தவங்க கை கொடுக்கனும் ன்னு நினைக்காத..
இதெல்லாம் யார் சொல்லுற வார்த்தைன்னு நியாபகம் இருக்கா தேனு…
இன்னும் நிறைய நிறைய இருக்கு அதையெல்லாம் உனக்கு சொல்லனுமா?
மேகா ப்ளீஸ் விளையாட்டு பண்ணாத அம்மா ரொம்ப உடைஞ்சு போய்டுவாங்க
அப்ப நீ தைரியமா, உடையாம தான் இருக்க ..
பின்ன இல்லையா
அப்ப வெளியே வரவேண்டியது தானே எதுக்கு இந்த தடுப்பு என்று அவளை பார்க்க
என்னால் யார் வாழ்க்கையும் கேள்வி ஆகிடக் கூடாதுன்னு
அப்ப உன் வாழ்க்கையை அவங்க பந்தாடலாம் அப்படித்தானே
என்ன மேகா நீ வந்ததுல இருந்து இப்படியே பேசிட்டு இருக்க..
உன்னையே பத்தி தேடி அலைஞ்சு திரிஞ்சு விஷயம் எல்லாம் கேள்வி பட்டு வந்து இருக்கேன் அப்ப பேசத்தான் செய்வேன்..
தேனு அதிர்வாய் என்ன விஷயம்?
ஒரு மண்ணும் இல்ல நான் கொஞ்ச நேரம் என் காத்தவராயன் கிட்ட பேசிட்டு வரேன் என்றவள் சென்றுவிட..என்ன விஷயத்தை சொல்லுறா என்ன பத்தி என்று குழப்பத்துடன் அமர்ந்து விட்டாள் தேனு…
தேனு வருவாள்
Last edited: