• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

5. காண்டீப(னின்) காதலி

kkp4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
27
32
13
Tamil nadu
eiYCY8N70251.jpg

அத்தியாயம் 5

“அப்போ ப்ரொஃபெஷன் பத்தி பேசுவோமா?” என்று கேட்ட தயாளன், “அடுத்த ப்ராஜெக்ட் என்ன?” என்று இறுக்கமாகவே வினவினான்.

“ப்ச், தயா… நான்…” என்று தன் பேச்சுக்கு விளக்கமளிக்க வந்த தீபனை தடுத்த தயாளனோ, “உன் பெர்சனல் எனக்கு எதுக்கு தீபா? வேலையை பத்தி மட்டும் பேசுவோம்.” என்றான் கறாராக.

ஒரு பெருமூச்சுடன், “அடுத்த வேலை பத்தி கூடிய சீக்கிரம் தகவல் வரும்.” என்று முடித்துக் கொண்டான் தீபனும்.

அதற்கடுத்து வந்த நிமிடங்கள் மௌனமாக கழிய, நண்பர்கள் இருவரின் எண்ணங்களும் பின்னோக்கி பயணிக்க, தாங்கள் இந்த நிலைக்கு வந்ததற்கான காரணங்களை எண்ணிப் பார்த்தனர்.

*****

எம்.எல்.ஏ மாமனாரின் மீது உண்டான கடுப்புடனே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் தர்மராஜ்.

வந்ததும், அமைச்சர் மகள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களை கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டான் தர்மராஜ்.

காவல் ஆய்வாளர் கோபி முதல் வாகன ஓட்டுநர் செந்தில் வரை ஒருவரையும் விடவில்லை.

“சிசிடிவி ஃபூட்டேஜ் எப்போ கிடைச்சது? அப்போ இருந்து இப்போ வரை, அந்த காண்டீபன் மாயமா மறைஞ்சுட்டாங்கிறதை தான் கண்டுபிடிச்சுருக்கீங்க, அப்படி தான? ஒரு போலீஸா இருந்துட்டு, மாயமா மறைஞ்சுட்டான்னு சொல்ற, வெட்கமா இல்ல? ***** ஒண்ணுக்கும் லாயகில்ல!” என்று இன்னும் பல கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க, கோபிக்கு ‘என்னை யாரும் தேட வேண்டாம்’ என்று எழுதி வைத்துவிட்டு ஓடிவிடலாம் என்று கூட தோன்றியது.

அப்போதும் தேடி கண்டுபிடித்து திட்டுவான் என்பதை நன்கறிந்ததால், அனைத்து திட்டுகளையும் வாங்கி விட்டு அமைதியாக நின்றான் கோபி.

“இங்க நின்னு என் வாயை பார்த்துட்டு இருக்கப் போறியா?” என்று அதற்கும் சத்தமிட்ட தர்மராஜ், “அந்த இடத்துக்கு அப்பறம், காண்டீபன் போன கார் எங்கயும் ஸ்பாட் ஆகலைன்னா, வேற யாராவது உதவியோட அவன் அங்கயிருந்து போயிருக்கான்னு அர்த்தம். அந்த நபர் யாருன்னு கண்டுபிடிச்சா, அந்த காண்டீபனை நெருங்கிடலாம். போ போய் அது யாருன்னு கண்டுபிடி.” என்றான்.

அப்போதும் செல்லாமல் அங்கேயே கோபி நிற்க, “என்ன, என்னை சைட்டடிச்சுட்டு நிக்கிறியா? நான் வேணா, ஜன்னல் கதவெல்லாம் மூடிட்டு வரவா, வசதியா இருக்கும்.” என்று தர்மராஜ் கூற, அவன் சொன்னதை நினைத்து பார்த்ததற்கே வியர்த்து விட்டது கோபிக்கு. கொஞ்சம் விட்டால், இதய துடிப்பே நின்றிருக்கும்.

“சார்!” என்று கத்திய கோபி, பின் சுதாரித்து, “அது… காண்டீபனுக்கு உதவி செஞ்ச நபரை எப்படி..” என்று கேள்வியை முடிக்காமல் இழுக்க, அவனை முறைத்து பார்த்த தர்மராஜ், “ஒவ்வொரு வீட்டுக்கும் போய் கதவை தட்டி, ‘நீங்க காண்டீபனுக்கு உதவி செஞ்சீங்களா?’ன்னு கேளு. யாரு ஆமான்னு சொல்றாங்களோ, அவங்களை தூக்கிட்டு வா. என்ன சரியா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

தர்மராஜின் கோப முகம் கண்ட கோபியோ, பயத்தில் எச்சில் விழுங்க, “***** ***** எதுக்கு தான் காக்கி டிரெஸ் போட்டுட்டு என் உசிரை வாங்குறீங்களோ? நீங்க எல்லாம் போலீஸாகலன்னு யாரு அழுதா?” என்று திட்டியவன், “அந்த ஏரியால இருக்க எல்லாரோட கார் லிஸ்ட்டையும் எடு. சம்பவம் நடந்த அந்த நேரத்துல, அந்த கார் லிஸ்ட்ல இருக்க எந்த காரெல்லாம், சிசிடிவில பதிவாகி இருக்குன்னு பார்த்து தூக்கு. இப்போ புரியுதா, இல்ல இன்னும் விளக்கணுமா?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் தர்மராஜ்.

“புரியுது புரியுது சார்.” என்ற கோபியோ, வேகவேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் தான் மூச்சை இழுத்து விட்டான்.

அவனருகே வந்த காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், “சார், என்னாச்சு?” என்று வினவ, கோபியோ, “மனுஷனாயா இவன்? போன ஜென்மத்துல நாயா இருந்துருப்பான் போல, எதுக்கு எடுத்தாலும் வள்ளுன்னு விழறான். இதுல, நான் இவனை சைட்டடிக்கிறேனாம்! என் தலையெழுத்து, இவனுக்கு கீழ வேலை பார்க்கணும்னு!” என்று புலம்பினான்.

“சார், வாசல்ல நின்னுட்டு என்ன பேசுறீங்க? சிசிடிவில பார்த்தாருன்னா அவ்ளோ தான்!” என்று சுரேஷ் கூற, “அட ஆமாய்யா, அதுக்கும் பிடிச்சு கத்துவான். வா வேலையை பார்ப்போம்.” என்றான் கோபி.

*****

மதிய உணவு வேளை…

வாஞ்சிநாதன் அடிக்கு ஒருமுறை வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, நேரமாவதை உணர்ந்த கயல்விழியோ, “ப்பா, சாப்பிட்டு டேப்ளட் போடணும்ல. நீங்க வந்து சாப்பிடுங்களேன் ப்பா.” என்று அழைத்தாள்.

“தனாவை வர சொல்லிட்டு நான் மட்டும் எப்படி மா சாப்பிட? இதோ, இப்போ வந்துடுவான்.” என்ற வாஞ்சிநாதன் மீண்டும் வாசலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

தந்தை அளவுக்கு மகளிடம் அத்தனை பரபரப்பு இல்லை. அவள் அமைதியாக கணவனுக்கு பரிமாற சென்று விட்டாள்.

ஆம், என்றும் இல்லாத திருநாளாக இன்று மதிய உணவுக்கு தர்மராஜ் வீட்டிற்கு வந்திருந்தான். அதன் காரணம், தனஞ்செயன் என்று சொல்லவும் வேண்டுமா?

அவனும் நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

“என்னடி, நீயும் உன் அப்பனும் சேர்ந்து அவனுக்கு விருந்து வைக்குறீங்க? என்ன விஷயம்? என்னை அவமானப்படுத்தனும்னே இதெல்லாம் செய்வீங்களோ?” என்று அருகில் வந்த மனைவியிடம் அடிக்குரலில் சீறினான்.

“இல்லங்க. அப்பா தான்…” என்று கயல்விழி பயத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “வா வா தனா… அச்சோ, இப்போ மிஸ்டர். தனஞ்செயனோ?” என்ற வாஞ்சிநாதனின் சத்தம் கேட்டது.

அதற்கு அமர்த்தலான சிரிப்பை பரிசாக அளித்த தனஜ்செயனோ, “மாமா, நான் எப்பவுமே உங்களுக்கு தனா தான்.” என்றவன், சட்டென்று அவர் பாதங்களில் விழ, அதனை நிறைவுடன் பார்த்தார் வாஞ்சிநாதன்.

வெள்ளை சட்டை, கருப்பு கால்சராயில் கம்பீரமாக இருந்தவனை அணைத்து, பெருமிதத்துடன் பார்த்தவர், “சாதிச்சுட்ட தனா. உன் அப்பா இருந்துருந்தா, எவ்ளோ சந்தோஷப்பட்டுருப்பான் தெரியுமா?” என்றார் வாஞ்சையுடன்.

“அதான் நீங்க இருக்கீங்களே மாமா.” என்று தனஞ்செயன் கூற, தனக்கு தந்தை ஸ்தானத்தை அளித்த தன் சிஷ்யனை அன்புடன் அணைத்துக் கொண்டவர், ஒரு பெருமூச்சுடன், “உன்னை எனக்கு பக்கத்துலயே வச்சுக்கணும்னு நினைச்சு ஏதோ செய்ய போய்…” என்று வருத்தத்துடன் பேசியவரை இடைவெட்டியவன், “பழசெல்லாம் எதுக்கு மாமா?” என்றான் தனஞ்செயன்.

அப்போது அங்கு வந்த தர்மராஜ், இருவரும் பேசியதைக் கேட்டு கோபத்தில் கனன்றவனாக, “வாங்க மினிஸ்டரே. இப்போ எல்லாம் ஆளே பார்க்க முடியல.” என்று கேலியாக வினவினான்.

“அட ஏசிபியா? என்ன பண்றது? எனக்கென்ன உங்களை மாதிரி மாசத்துக்கு ஒரு சஸ்பென்ஷன் கிடைக்குதா என்ன?” என்று தர்மராஜை மூக்கறுத்தான் தனஞ்செயன்.

பின்பு, அவனருகே நின்றிருந்த கயல்விழியிடம், “எப்படி இருக்க விழி?” என்று தனஞ்செயன் வினவ, அவளோ வெறும் தலையசைப்புடன் நிறுத்திக் கொண்டாள்.

அதற்கான காரணம் அறிந்த தனஞ்செயனும், வேறெதுவும் கேட்காமல், வாஞ்சிநாதனுடன் பேசியபடி உணவுண்ணும் அறைக்கு சென்றான்.

இங்கு தர்மராஜ் தான் கோபத்தில் கொந்தளித்தான்.

‘விழியாமே விழி! நானே அவளை அப்படி கூப்பிட்டதில்ல.’ என்று பொறுமியபடி, சொல்லிக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.

சாப்பிட்டு முடித்ததும், வாஞ்சிநாதனும் தனஞ்செயனும் அலுவலக அறைக்கு சென்றனர்.

“மாமா, நான் இங்க வரது, விழி வாழ்க்கையை டிஸ்டர்ப் பண்ணிடக்கூடாது.” என்று தயங்கியபடி அவன் கூற, “அட விடு தனா, இது என் வீடு. இங்க எனக்கு வேண்டப்பட்டவங்க வர எல்லா உரிமையும் இருக்கு. அது அவங்களுக்கு சங்கடமா இருந்தா, அவங்க தனியா போகட்டும்.” என்றார் வாஞ்சிநாதன்.

அவர் கூறியது, வெற்றிலை பாக்கு எடுத்து வந்த கயல்விழிக்கு நன்றாகவே கேட்டது. ஒருநொடி அதிர்ந்தாலும், அடுத்த நொடி எதுவும் நடவாதது போல, தட்டை அங்கு வைத்துவிட்டு சென்று விட்டாள் கயல்விழி.

“மாமா, என்ன இது?” என்று தனஞ்செயன் கேட்டாலும், “விடு தனா, எத்தனையோ தடவை சொல்லியிருப்பேன். அந்த வாழ்க்கை தான் வேணும்னு போனால, இப்போ அனுபவிக்குறா. அவ படுற கஷ்டமெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கா. ஹ்ம்ம், இன்னும் எவ்ளோ தூரம் போகுதுன்னு பார்ப்போம்.” என்றார் வாஞ்சிநாதன்.

“அவளை சொல்ற நீங்களே, உங்க மருமகனை காப்பாத்திட்டு தான இருக்கீங்க!” என்று தனஞ்செயன் குட்டு வைக்க, “தெரிஞ்சுட்டே கேட்குறியே தனா! என்ன பண்றது அரசியல்னு வந்துட்டா, பிடிக்குதோ இல்லையோ, இந்த மாதிரி சில காம்ப்ரமைஸ் பண்ணி தான் ஆகணும்.” என்று வாஞ்சிநாதன் கூற, அதற்கு ஒத்து ஊதவில்லை தனஞ்செயன்.

அவன் அப்படி தான்! தனக்கு பிடிக்காததை யார் கூறினாலும் சரியென்று எடுத்துக் கொள்ள மாட்டான்.

இப்போதும் அப்படியே!

மருமகன் செய்யும் தவறுகளை அரசியல் என்ற போர்வைக்குள் மறைத்து வைக்கும் வாஞ்சிநாதனின் செயல்களை அவன் ஒருபோதும் ஆதரித்தது இல்லை. இனியும் ஆதரிக்க மாட்டான்.

“ஹ்ம்ம், சரி அதை விடு, உன் வேலை எப்படி போகுது? மத்த விளையாட்டுகளை விட இங்க கிரிக்கெட் மோகம் அதிகமா இருக்கே. விளையாட்டு துறை அமைச்சரா, இதை எப்படி சமன்படுத்த போற? எதாவது திட்டம் இருக்கா?” என்று பேச்சை மாற்றினார் வாஞ்சிநாதன்.

“ரீசண்ட்டா இங்க நடந்த செஸ் ஒலிம்பியாட் நல்ல பேரை தந்துருக்கு. இன்னும் சில ஸ்போர்ட்ஸ் அகாடெமி கிட்ட பேசிட்டு இருக்கோம். இந்தியா ஹோஸ்ட் பண்ற மாதிரி இருந்தா, சென்னைக்கு எடுத்துட்டு வர கண்டிப்பா டஃப் ஃபைட் குடுப்போம். அதே மாதிரி, கிரிக்கெட், கபடி, ஃபுட்பால், ஹாக்கி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் வரிசையில அத்லெடிக்ஸுக்கும் பிரிமியர் லீக் கொண்டு வர பிளான் ஓடிட்டு இருக்கு. நேஷனல் லெவல்ல கொண்டு வர முடியலன்னாலும் தமிழ்நாடு லெவல்ல கொண்டு வரனும்.” என்று தன் திட்டங்களை விளக்கினான் தனஞ்செயன்.

“நல்லது தனா. அத்லெடிக்ஸ்னு சொன்னதும் ஞாபகம் வருது. நேஷனல் செலக்ஷன்ல ஏதோ பாலிட்டிக்ஸ் நடக்குறதா பேப்பர்ல நியூஸ் வந்துச்சே.” என்று வாஞ்சிநாதன் கேட்க, “விளையாட்டு அரசியல் உங்களுக்கு தெரியாததா மாமா? மத்த ஸ்போர்ட்ஸ் மாதிரி தான் இங்கயும், இன்ஃப்ளுயன்ஸ் உள்ள ஆளுங்க தங்களுக்கு தேவையானவங்களை செலக்ட் பண்ண வச்சுடுறாங்க. எவ்ளோ கெடுபிடியா இருந்தாலும், இதை தடுக்க முடியுறது இல்ல. விசாரணை போயிட்டு இருக்கு மாமா.” என்று கூறியவனுக்கும் தெரியும், அதன் முடிவு எதுவாக இருக்கும் என்று!

பின்பு பேச்சு வாஞ்சிநாதனின் உடல்நிலைக்கு தாவியது. சில நிமிடங்களில், தனஞ்செயனுக்கு அழைப்பு வந்துவிட, “வேலை கூப்பிடுதா தனா? நீ கிளம்பு.” என்றார் வாஞ்சிநாதன்.

அவரிடம் விடைபெற்று அவன் கிளம்பும் சமயம் கூட, “ஹ்ம்ம், எனக்கு குடுப்பினை இல்லாம போயிடுச்சு.” என்று தான் முணுமுணுத்தார் வாஞ்சிநாதன்.

*****

காண்டீபன் தனக்கு வில்வித்தை பயிற்றுவிக்கப் போகிறான் என்ற நினைவே யாதவியை குஷிப்படுத்த போதுமானதாக இருந்தது.

ஆண்கள் அங்கில்லாதது இன்னும் வசதியாக இருக்க, அவள் கால் தரையில் படாமல் தான் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தாள்.

ரெங்கநாயகி கூட, “என்னம்மா இவ்ளோ சந்தோஷம்?” என்று கேட்க, அவளுக்கு இருக்கும் வில்வித்தை பைத்தியத்தை பற்றி கூற ஆரம்பித்தவள் மதியம் வரை விடவே இல்லை.

மதியம் சமைக்க வேண்டும் என்று வம்படியாக சமையலறைக்கு வந்தவரின் பின்னே வால் பிடித்துக் கொண்டு வந்தவள், தன் வலது கரத்தை நீட்டி, பெருவிரலுக்கு கீழே பக்கவாட்டு பகுதியில் பச்சைக்குத்தி இருந்ததை காட்டினாள்.

அதை பார்த்த ரெங்கநாயகியோ, “என்னம்மா இது நட்சத்திரங்களை பச்சைக்குத்தி இருக்கியா?” என்று வினவ, “வெறும் நட்சத்திரங்கள் இல்ல ரெங்கு. இது ஒரு கான்ஸ்டெலேஷன். அதாவது, நட்சத்திர கூட்டம்.” என்று கூறிவிட்டு அவரைப் பார்க்க, அவரோ புரிந்தும் புரியாதது போல தலையசைத்தார்.

அவளோ அதைக் கண்டு கொள்ளாமல் தன் பேச்சினை தொடர்ந்தாள்.

“இந்த கான்ஸ்டெலேஷன் பேரு சாகிட்டேரியஸ் கான்ஸ்டெலேஷன். அதான் நம்ம தனுசு ராசிக்கு உண்டான நட்சத்திர கூட்டம். தனுசுன்னாலே வில்லும் அம்பும் இருக்குறது தான? இந்த நட்சத்திரங்களை சேர்த்து வச்சு பார்த்தா ஒருத்தன் வில்லையும் அம்பையும் பிடிச்சுருக்க மாதிரி தெரியுமாம். இப்போ புரியுதா ஏன் இதை பச்சைக்குத்தி இருக்கேன்னு?” என்று யாதவி கேட்க, “ஆகா, நல்லா தெரியுதே.” என்ற ரெங்கநாயகி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அதோடு விட்டாள் அவள் யாதவி அல்லவே!

“உங்களுக்கு தெரியுமா? என் ராசி மீனம். ஆனா, எனக்கு தனுசு தான் பிடிக்கும். ஜோசியர் கிட்ட கேட்டேன், என்னை தனுசு ராசிக்கு மாத்த முடியுமான்னு. ஆனா, அவரு இந்த ஜென்மத்துல முடியாதுன்னு சொல்லிட்டாரு.” என்று உதட்டை பிதுக்க, ‘அட பைத்தியமே!’ என்று தான் பார்த்து வைத்தார் ரெங்கநாயகி.

இப்படியே பகல் பொழுது கழிய, மாலை வேளையில், ‘என்ன மிஸ்டர். காண்டை இன்னும் காணோம்?’ என்று சோர்ந்து விட்டாள் யாதவி.

அவ்வப்போது ரெங்கநாயகியிடம், “எப்போ இருந்து ட்ரெயினிங் ஆரம்பிக்கும்னு கேட்காம விட்டுட்டேனே.” என்று புலம்பவும் செய்ய, சில மணி நேரங்களுக்கு மேல் தாங்க முடியாதவராக, அவளுக்கு இரவுணவை கொடுத்து தூங்க அனுப்பி வைத்தார் ரெங்கநாயகி.

அவளின் அலப்பறைகளை எல்லாம் இரவு உணவு உண்டு கொண்டிருந்த தீபன் மற்றும் தயாளனிடம் கூறிய ரெங்கநாயகி, “ஹ்ம்ம், அந்த பொண்ணுக்கு வில்வித்தை கத்துக்கணும்னு அவ்ளோ ஆசை தம்பி. சொல்லிக் குடுத்தா, பெரிய ஆளா வருவா.” என்றார்.

அதற்கு இருவரிடம் இருந்தும் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

‘தீபன் தம்பி எப்பவும் அமைதியா தான் இருக்கும். இந்த தயாக்கு என்னாச்சு?’ என்று தயாளனின் முகத்தையே ரெங்கநாயகி உற்று பார்த்துக் கொண்டிருக்க, அவனோ எதுவும் கூறாமல் சென்று விட்டான்.

*****

நள்ளிரவு நேரம் என்பதை உறுதிபடுத்தும் விதமாக கோட்டான்கள் அலற, அது கேட்காத வண்ணம் ஏசி காற்றில் சுகமாக துயில் கொண்டிருந்தாள் யாதவி.

கோட்டான் அலறும் சத்தமே கேட்கவில்லை என்றால், ஜன்னல் திறக்கப்படும் சத்தமோ, ஒரு உருவம் அவள் அறைக்குள் நடந்து வரும் சத்தமோ கேட்குமா என்ன?

தொடரும்...

ஹாய் மக்களே. இந்த அத்தியாயத்திற்கான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
 
kkp33

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
156
12
43
Tamilnadu
தனாவை தான் கயல்விழிக்கு திருமணம் செய்து வைக்க அவள் அப்பாவுக்கு விருப்பம் போல் தெரியுது. இவள் தான் விரும்பி மணந்திருக்கா பாவம்.

மிஸ்டர் காண்டு, அவள் தேடும் நேரத்தில் வராமல் மயக்கத்தில் இருக்கும் போது வருவது ஏனோ?
 
Last edited:
  • Like
Reactions: kkp4

kkp4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
27
32
13
Tamil nadu
தனாவை தான் கயல்விழிக்கு திருமணம் செய்து வைக்க அவள் அப்பாவுக்கு விருப்பம் போல் தெரியுது. இவள தான் விரும்பி மணந்திருக்கா பாவம்.

மிஸ்டர் காண்டு, அவள் தேடும் நேரத்தில் வராமல் மயக்கத்தில் இருக்கும் போது வருவது ஏனோ?
அப்படி தான் போல 🙄🤔
அப்போ தான அவளை திட்டி, கொட்டி, நோஸ் கட் பண்ண முடியும் 😂😇
 
  • Love
Reactions: kkp33

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
73
28
43
Madurai
தனா மாதிரி ஒருத்தன் இருக்கும் போது இந்த கயல் கண்ணு தெரியாம போயி தர்மா ன்ற புதை குழியிலே விழுந்துட்டா.... 🙁

கோட்டான் கூவுற நேரத்துல விற் வித்தையா.. 😝
 
  • Love
Reactions: kkp4

kkp4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
27
32
13
Tamil nadu
தனா மாதிரி ஒருத்தன் இருக்கும் போது இந்த கயல் கண்ணு தெரியாம போயி தர்மா ன்ற புதை குழியிலே விழுந்துட்டா.... 🙁

கோட்டான் கூவுற நேரத்துல விற் வித்தையா.. 😝
காதலுக்கு கண்ணு இல்லைன்னு இதை தான் சொல்றாங்க போல 🤦😂
ஆமா, காண்டு அப்போ தான் ஃப்ரீ போல 🤪😂
 
  • Haha
Reactions: Indhumathy

kkp17

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
14
8
43
Tamilnadu
View attachment 1070

அத்தியாயம் 5

“அப்போ ப்ரொஃபெஷன் பத்தி பேசுவோமா?” என்று கேட்ட தயாளன், “அடுத்த ப்ராஜெக்ட் என்ன?” என்று இறுக்கமாகவே வினவினான்.

“ப்ச், தயா… நான்…” என்று தன் பேச்சுக்கு விளக்கமளிக்க வந்த தீபனை தடுத்த தயாளனோ, “உன் பெர்சனல் எனக்கு எதுக்கு தீபா? வேலையை பத்தி மட்டும் பேசுவோம்.” என்றான் கறாராக.

ஒரு பெருமூச்சுடன், “அடுத்த வேலை பத்தி கூடிய சீக்கிரம் தகவல் வரும்.” என்று முடித்துக் கொண்டான் தீபனும்.

அதற்கடுத்து வந்த நிமிடங்கள் மௌனமாக கழிய, நண்பர்கள் இருவரின் எண்ணங்களும் பின்னோக்கி பயணிக்க, தாங்கள் இந்த நிலைக்கு வந்ததற்கான காரணங்களை எண்ணிப் பார்த்தனர்.

*****

எம்.எல்.ஏ மாமனாரின் மீது உண்டான கடுப்புடனே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் தர்மராஜ்.

வந்ததும், அமைச்சர் மகள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களை கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டான் தர்மராஜ்.

காவல் ஆய்வாளர் கோபி முதல் வாகன ஓட்டுநர் செந்தில் வரை ஒருவரையும் விடவில்லை.

“சிசிடிவி ஃபூட்டேஜ் எப்போ கிடைச்சது? அப்போ இருந்து இப்போ வரை, அந்த காண்டீபன் மாயமா மறைஞ்சுட்டாங்கிறதை தான் கண்டுபிடிச்சுருக்கீங்க, அப்படி தான? ஒரு போலீஸா இருந்துட்டு, மாயமா மறைஞ்சுட்டான்னு சொல்ற, வெட்கமா இல்ல? ***** ஒண்ணுக்கும் லாயகில்ல!” என்று இன்னும் பல கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க, கோபிக்கு ‘என்னை யாரும் தேட வேண்டாம்’ என்று எழுதி வைத்துவிட்டு ஓடிவிடலாம் என்று கூட தோன்றியது.

அப்போதும் தேடி கண்டுபிடித்து திட்டுவான் என்பதை நன்கறிந்ததால், அனைத்து திட்டுகளையும் வாங்கி விட்டு அமைதியாக நின்றான் கோபி.

“இங்க நின்னு என் வாயை பார்த்துட்டு இருக்கப் போறியா?” என்று அதற்கும் சத்தமிட்ட தர்மராஜ், “அந்த இடத்துக்கு அப்பறம், காண்டீபன் போன கார் எங்கயும் ஸ்பாட் ஆகலைன்னா, வேற யாராவது உதவியோட அவன் அங்கயிருந்து போயிருக்கான்னு அர்த்தம். அந்த நபர் யாருன்னு கண்டுபிடிச்சா, அந்த காண்டீபனை நெருங்கிடலாம். போ போய் அது யாருன்னு கண்டுபிடி.” என்றான்.

அப்போதும் செல்லாமல் அங்கேயே கோபி நிற்க, “என்ன, என்னை சைட்டடிச்சுட்டு நிக்கிறியா? நான் வேணா, ஜன்னல் கதவெல்லாம் மூடிட்டு வரவா, வசதியா இருக்கும்.” என்று தர்மராஜ் கூற, அவன் சொன்னதை நினைத்து பார்த்ததற்கே வியர்த்து விட்டது கோபிக்கு. கொஞ்சம் விட்டால், இதய துடிப்பே நின்றிருக்கும்.

“சார்!” என்று கத்திய கோபி, பின் சுதாரித்து, “அது… காண்டீபனுக்கு உதவி செஞ்ச நபரை எப்படி..” என்று கேள்வியை முடிக்காமல் இழுக்க, அவனை முறைத்து பார்த்த தர்மராஜ், “ஒவ்வொரு வீட்டுக்கும் போய் கதவை தட்டி, ‘நீங்க காண்டீபனுக்கு உதவி செஞ்சீங்களா?’ன்னு கேளு. யாரு ஆமான்னு சொல்றாங்களோ, அவங்களை தூக்கிட்டு வா. என்ன சரியா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

தர்மராஜின் கோப முகம் கண்ட கோபியோ, பயத்தில் எச்சில் விழுங்க, “***** ***** எதுக்கு தான் காக்கி டிரெஸ் போட்டுட்டு என் உசிரை வாங்குறீங்களோ? நீங்க எல்லாம் போலீஸாகலன்னு யாரு அழுதா?” என்று திட்டியவன், “அந்த ஏரியால இருக்க எல்லாரோட கார் லிஸ்ட்டையும் எடு. சம்பவம் நடந்த அந்த நேரத்துல, அந்த கார் லிஸ்ட்ல இருக்க எந்த காரெல்லாம், சிசிடிவில பதிவாகி இருக்குன்னு பார்த்து தூக்கு. இப்போ புரியுதா, இல்ல இன்னும் விளக்கணுமா?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் தர்மராஜ்.

“புரியுது புரியுது சார்.” என்ற கோபியோ, வேகவேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் தான் மூச்சை இழுத்து விட்டான்.

அவனருகே வந்த காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், “சார், என்னாச்சு?” என்று வினவ, கோபியோ, “மனுஷனாயா இவன்? போன ஜென்மத்துல நாயா இருந்துருப்பான் போல, எதுக்கு எடுத்தாலும் வள்ளுன்னு விழறான். இதுல, நான் இவனை சைட்டடிக்கிறேனாம்! என் தலையெழுத்து, இவனுக்கு கீழ வேலை பார்க்கணும்னு!” என்று புலம்பினான்.

“சார், வாசல்ல நின்னுட்டு என்ன பேசுறீங்க? சிசிடிவில பார்த்தாருன்னா அவ்ளோ தான்!” என்று சுரேஷ் கூற, “அட ஆமாய்யா, அதுக்கும் பிடிச்சு கத்துவான். வா வேலையை பார்ப்போம்.” என்றான் கோபி.

*****

மதிய உணவு வேளை…

வாஞ்சிநாதன் அடிக்கு ஒருமுறை வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, நேரமாவதை உணர்ந்த கயல்விழியோ, “ப்பா, சாப்பிட்டு டேப்ளட் போடணும்ல. நீங்க வந்து சாப்பிடுங்களேன் ப்பா.” என்று அழைத்தாள்.

“தனாவை வர சொல்லிட்டு நான் மட்டும் எப்படி மா சாப்பிட? இதோ, இப்போ வந்துடுவான்.” என்ற வாஞ்சிநாதன் மீண்டும் வாசலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

தந்தை அளவுக்கு மகளிடம் அத்தனை பரபரப்பு இல்லை. அவள் அமைதியாக கணவனுக்கு பரிமாற சென்று விட்டாள்.

ஆம், என்றும் இல்லாத திருநாளாக இன்று மதிய உணவுக்கு தர்மராஜ் வீட்டிற்கு வந்திருந்தான். அதன் காரணம், தனஞ்செயன் என்று சொல்லவும் வேண்டுமா?

அவனும் நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

“என்னடி, நீயும் உன் அப்பனும் சேர்ந்து அவனுக்கு விருந்து வைக்குறீங்க? என்ன விஷயம்? என்னை அவமானப்படுத்தனும்னே இதெல்லாம் செய்வீங்களோ?” என்று அருகில் வந்த மனைவியிடம் அடிக்குரலில் சீறினான்.

“இல்லங்க. அப்பா தான்…” என்று கயல்விழி பயத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “வா வா தனா… அச்சோ, இப்போ மிஸ்டர். தனஞ்செயனோ?” என்ற வாஞ்சிநாதனின் சத்தம் கேட்டது.

அதற்கு அமர்த்தலான சிரிப்பை பரிசாக அளித்த தனஜ்செயனோ, “மாமா, நான் எப்பவுமே உங்களுக்கு தனா தான்.” என்றவன், சட்டென்று அவர் பாதங்களில் விழ, அதனை நிறைவுடன் பார்த்தார் வாஞ்சிநாதன்.

வெள்ளை சட்டை, கருப்பு கால்சராயில் கம்பீரமாக இருந்தவனை அணைத்து, பெருமிதத்துடன் பார்த்தவர், “சாதிச்சுட்ட தனா. உன் அப்பா இருந்துருந்தா, எவ்ளோ சந்தோஷப்பட்டுருப்பான் தெரியுமா?” என்றார் வாஞ்சையுடன்.

“அதான் நீங்க இருக்கீங்களே மாமா.” என்று தனஞ்செயன் கூற, தனக்கு தந்தை ஸ்தானத்தை அளித்த தன் சிஷ்யனை அன்புடன் அணைத்துக் கொண்டவர், ஒரு பெருமூச்சுடன், “உன்னை எனக்கு பக்கத்துலயே வச்சுக்கணும்னு நினைச்சு ஏதோ செய்ய போய்…” என்று வருத்தத்துடன் பேசியவரை இடைவெட்டியவன், “பழசெல்லாம் எதுக்கு மாமா?” என்றான் தனஞ்செயன்.

அப்போது அங்கு வந்த தர்மராஜ், இருவரும் பேசியதைக் கேட்டு கோபத்தில் கனன்றவனாக, “வாங்க மினிஸ்டரே. இப்போ எல்லாம் ஆளே பார்க்க முடியல.” என்று கேலியாக வினவினான்.

“அட ஏசிபியா? என்ன பண்றது? எனக்கென்ன உங்களை மாதிரி மாசத்துக்கு ஒரு சஸ்பென்ஷன் கிடைக்குதா என்ன?” என்று தர்மராஜை மூக்கறுத்தான் தனஞ்செயன்.

பின்பு, அவனருகே நின்றிருந்த கயல்விழியிடம், “எப்படி இருக்க விழி?” என்று தனஞ்செயன் வினவ, அவளோ வெறும் தலையசைப்புடன் நிறுத்திக் கொண்டாள்.

அதற்கான காரணம் அறிந்த தனஞ்செயனும், வேறெதுவும் கேட்காமல், வாஞ்சிநாதனுடன் பேசியபடி உணவுண்ணும் அறைக்கு சென்றான்.

இங்கு தர்மராஜ் தான் கோபத்தில் கொந்தளித்தான்.

‘விழியாமே விழி! நானே அவளை அப்படி கூப்பிட்டதில்ல.’ என்று பொறுமியபடி, சொல்லிக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.

சாப்பிட்டு முடித்ததும், வாஞ்சிநாதனும் தனஞ்செயனும் அலுவலக அறைக்கு சென்றனர்.

“மாமா, நான் இங்க வரது, விழி வாழ்க்கையை டிஸ்டர்ப் பண்ணிடக்கூடாது.” என்று தயங்கியபடி அவன் கூற, “அட விடு தனா, இது என் வீடு. இங்க எனக்கு வேண்டப்பட்டவங்க வர எல்லா உரிமையும் இருக்கு. அது அவங்களுக்கு சங்கடமா இருந்தா, அவங்க தனியா போகட்டும்.” என்றார் வாஞ்சிநாதன்.

அவர் கூறியது, வெற்றிலை பாக்கு எடுத்து வந்த கயல்விழிக்கு நன்றாகவே கேட்டது. ஒருநொடி அதிர்ந்தாலும், அடுத்த நொடி எதுவும் நடவாதது போல, தட்டை அங்கு வைத்துவிட்டு சென்று விட்டாள் கயல்விழி.

“மாமா, என்ன இது?” என்று தனஞ்செயன் கேட்டாலும், “விடு தனா, எத்தனையோ தடவை சொல்லியிருப்பேன். அந்த வாழ்க்கை தான் வேணும்னு போனால, இப்போ அனுபவிக்குறா. அவ படுற கஷ்டமெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கா. ஹ்ம்ம், இன்னும் எவ்ளோ தூரம் போகுதுன்னு பார்ப்போம்.” என்றார் வாஞ்சிநாதன்.

“அவளை சொல்ற நீங்களே, உங்க மருமகனை காப்பாத்திட்டு தான இருக்கீங்க!” என்று தனஞ்செயன் குட்டு வைக்க, “தெரிஞ்சுட்டே கேட்குறியே தனா! என்ன பண்றது அரசியல்னு வந்துட்டா, பிடிக்குதோ இல்லையோ, இந்த மாதிரி சில காம்ப்ரமைஸ் பண்ணி தான் ஆகணும்.” என்று வாஞ்சிநாதன் கூற, அதற்கு ஒத்து ஊதவில்லை தனஞ்செயன்.

அவன் அப்படி தான்! தனக்கு பிடிக்காததை யார் கூறினாலும் சரியென்று எடுத்துக் கொள்ள மாட்டான்.

இப்போதும் அப்படியே!

மருமகன் செய்யும் தவறுகளை அரசியல் என்ற போர்வைக்குள் மறைத்து வைக்கும் வாஞ்சிநாதனின் செயல்களை அவன் ஒருபோதும் ஆதரித்தது இல்லை. இனியும் ஆதரிக்க மாட்டான்.

“ஹ்ம்ம், சரி அதை விடு, உன் வேலை எப்படி போகுது? மத்த விளையாட்டுகளை விட இங்க கிரிக்கெட் மோகம் அதிகமா இருக்கே. விளையாட்டு துறை அமைச்சரா, இதை எப்படி சமன்படுத்த போற? எதாவது திட்டம் இருக்கா?” என்று பேச்சை மாற்றினார் வாஞ்சிநாதன்.

“ரீசண்ட்டா இங்க நடந்த செஸ் ஒலிம்பியாட் நல்ல பேரை தந்துருக்கு. இன்னும் சில ஸ்போர்ட்ஸ் அகாடெமி கிட்ட பேசிட்டு இருக்கோம். இந்தியா ஹோஸ்ட் பண்ற மாதிரி இருந்தா, சென்னைக்கு எடுத்துட்டு வர கண்டிப்பா டஃப் ஃபைட் குடுப்போம். அதே மாதிரி, கிரிக்கெட், கபடி, ஃபுட்பால், ஹாக்கி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் வரிசையில அத்லெடிக்ஸுக்கும் பிரிமியர் லீக் கொண்டு வர பிளான் ஓடிட்டு இருக்கு. நேஷனல் லெவல்ல கொண்டு வர முடியலன்னாலும் தமிழ்நாடு லெவல்ல கொண்டு வரனும்.” என்று தன் திட்டங்களை விளக்கினான் தனஞ்செயன்.

“நல்லது தனா. அத்லெடிக்ஸ்னு சொன்னதும் ஞாபகம் வருது. நேஷனல் செலக்ஷன்ல ஏதோ பாலிட்டிக்ஸ் நடக்குறதா பேப்பர்ல நியூஸ் வந்துச்சே.” என்று வாஞ்சிநாதன் கேட்க, “விளையாட்டு அரசியல் உங்களுக்கு தெரியாததா மாமா? மத்த ஸ்போர்ட்ஸ் மாதிரி தான் இங்கயும், இன்ஃப்ளுயன்ஸ் உள்ள ஆளுங்க தங்களுக்கு தேவையானவங்களை செலக்ட் பண்ண வச்சுடுறாங்க. எவ்ளோ கெடுபிடியா இருந்தாலும், இதை தடுக்க முடியுறது இல்ல. விசாரணை போயிட்டு இருக்கு மாமா.” என்று கூறியவனுக்கும் தெரியும், அதன் முடிவு எதுவாக இருக்கும் என்று!

பின்பு பேச்சு வாஞ்சிநாதனின் உடல்நிலைக்கு தாவியது. சில நிமிடங்களில், தனஞ்செயனுக்கு அழைப்பு வந்துவிட, “வேலை கூப்பிடுதா தனா? நீ கிளம்பு.” என்றார் வாஞ்சிநாதன்.

அவரிடம் விடைபெற்று அவன் கிளம்பும் சமயம் கூட, “ஹ்ம்ம், எனக்கு குடுப்பினை இல்லாம போயிடுச்சு.” என்று தான் முணுமுணுத்தார் வாஞ்சிநாதன்.

*****

காண்டீபன் தனக்கு வில்வித்தை பயிற்றுவிக்கப் போகிறான் என்ற நினைவே யாதவியை குஷிப்படுத்த போதுமானதாக இருந்தது.

ஆண்கள் அங்கில்லாதது இன்னும் வசதியாக இருக்க, அவள் கால் தரையில் படாமல் தான் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தாள்.

ரெங்கநாயகி கூட, “என்னம்மா இவ்ளோ சந்தோஷம்?” என்று கேட்க, அவளுக்கு இருக்கும் வில்வித்தை பைத்தியத்தை பற்றி கூற ஆரம்பித்தவள் மதியம் வரை விடவே இல்லை.

மதியம் சமைக்க வேண்டும் என்று வம்படியாக சமையலறைக்கு வந்தவரின் பின்னே வால் பிடித்துக் கொண்டு வந்தவள், தன் வலது கரத்தை நீட்டி, பெருவிரலுக்கு கீழே பக்கவாட்டு பகுதியில் பச்சைக்குத்தி இருந்ததை காட்டினாள்.

அதை பார்த்த ரெங்கநாயகியோ, “என்னம்மா இது நட்சத்திரங்களை பச்சைக்குத்தி இருக்கியா?” என்று வினவ, “வெறும் நட்சத்திரங்கள் இல்ல ரெங்கு. இது ஒரு கான்ஸ்டெலேஷன். அதாவது, நட்சத்திர கூட்டம்.” என்று கூறிவிட்டு அவரைப் பார்க்க, அவரோ புரிந்தும் புரியாதது போல தலையசைத்தார்.

அவளோ அதைக் கண்டு கொள்ளாமல் தன் பேச்சினை தொடர்ந்தாள்.

“இந்த கான்ஸ்டெலேஷன் பேரு சாகிட்டேரியஸ் கான்ஸ்டெலேஷன். அதான் நம்ம தனுசு ராசிக்கு உண்டான நட்சத்திர கூட்டம். தனுசுன்னாலே வில்லும் அம்பும் இருக்குறது தான? இந்த நட்சத்திரங்களை சேர்த்து வச்சு பார்த்தா ஒருத்தன் வில்லையும் அம்பையும் பிடிச்சுருக்க மாதிரி தெரியுமாம். இப்போ புரியுதா ஏன் இதை பச்சைக்குத்தி இருக்கேன்னு?” என்று யாதவி கேட்க, “ஆகா, நல்லா தெரியுதே.” என்ற ரெங்கநாயகி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அதோடு விட்டாள் அவள் யாதவி அல்லவே!

“உங்களுக்கு தெரியுமா? என் ராசி மீனம். ஆனா, எனக்கு தனுசு தான் பிடிக்கும். ஜோசியர் கிட்ட கேட்டேன், என்னை தனுசு ராசிக்கு மாத்த முடியுமான்னு. ஆனா, அவரு இந்த ஜென்மத்துல முடியாதுன்னு சொல்லிட்டாரு.” என்று உதட்டை பிதுக்க, ‘அட பைத்தியமே!’ என்று தான் பார்த்து வைத்தார் ரெங்கநாயகி.

இப்படியே பகல் பொழுது கழிய, மாலை வேளையில், ‘என்ன மிஸ்டர். காண்டை இன்னும் காணோம்?’ என்று சோர்ந்து விட்டாள் யாதவி.

அவ்வப்போது ரெங்கநாயகியிடம், “எப்போ இருந்து ட்ரெயினிங் ஆரம்பிக்கும்னு கேட்காம விட்டுட்டேனே.” என்று புலம்பவும் செய்ய, சில மணி நேரங்களுக்கு மேல் தாங்க முடியாதவராக, அவளுக்கு இரவுணவை கொடுத்து தூங்க அனுப்பி வைத்தார் ரெங்கநாயகி.

அவளின் அலப்பறைகளை எல்லாம் இரவு உணவு உண்டு கொண்டிருந்த தீபன் மற்றும் தயாளனிடம் கூறிய ரெங்கநாயகி, “ஹ்ம்ம், அந்த பொண்ணுக்கு வில்வித்தை கத்துக்கணும்னு அவ்ளோ ஆசை தம்பி. சொல்லிக் குடுத்தா, பெரிய ஆளா வருவா.” என்றார்.

அதற்கு இருவரிடம் இருந்தும் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

‘தீபன் தம்பி எப்பவும் அமைதியா தான் இருக்கும். இந்த தயாக்கு என்னாச்சு?’ என்று தயாளனின் முகத்தையே ரெங்கநாயகி உற்று பார்த்துக் கொண்டிருக்க, அவனோ எதுவும் கூறாமல் சென்று விட்டான்.

*****

நள்ளிரவு நேரம் என்பதை உறுதிபடுத்தும் விதமாக கோட்டான்கள் அலற, அது கேட்காத வண்ணம் ஏசி காற்றில் சுகமாக துயில் கொண்டிருந்தாள் யாதவி.

கோட்டான் அலறும் சத்தமே கேட்கவில்லை என்றால், ஜன்னல் திறக்கப்படும் சத்தமோ, ஒரு உருவம் அவள் அறைக்குள் நடந்து வரும் சத்தமோ கேட்குமா என்ன?

தொடரும்...

ஹாய் மக்களே. இந்த அத்தியாயத்திற்கான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
தூங்கும் போது கோட்டான் அலறும் சத்தம் என்ன?? இடியே விழுந்தாலும் தெரியாது.. யாதவின் நீ நம் கட்சி 🤣🤣🤣