• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
என்ன தான் விரும்பிய பெண்ணை கை பிடித்தாலும், பெற்றோரின் ஆசியில்லாமல் அவர்களுக்கு சொல்லாமல் திருமணம் செய்துகொண்டது அவனின் நெஞ்சத்தில் பெரிய குற்ற உணர்வை மலைபோல் உருவெடுத்து ஆட்டிவைத்தது.

அம்மாவிடம் மழுப்பிவிட்டு கதவை தாழிட்டு உள்ளே வந்தவன், குளித்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றவே ஷவரை திறந்து குளிர்ந்த நீரில் தன் முழு மேனியும் நனைத்தபடி நின்றிருந்தான்.

வெகுநேரம் கழித்து வெளியே வந்து தலையைகூட துவட்டாமல் இரவு உடையில் கட்டிலில் விழுந்தவன் விழிமூடி இன்று நடந்தவைகளை மனதில் அசை போட ஆரம்பித்தான்.

‘இதுவரைக்கும் எந்த பெண்ணையும் மனதால் கூட நினைச்சதில்லையே? இவள் எப்படி இவ்வளவு எளிதில் எனக்குள் வந்து வாசம் செய்கிறாள்’ என்று தன்னை பற்றியே நினைத்து சிரிக்க.

‘என் வாழ்க்கையிலேயே இரண்டு பெண்கள் தான் எனக்கு முக்கியமானவங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்போ அது தப்பு. மஹா, என் வாழ்க்கைக்குள்ள வருவான்னு கனவுல கூட நினைச்சதில்ல.

அவளை பார்த்த முதல் நிமிஷம் இவள் தான் எனக்காக பிறந்தவள்ன்னு தோணிச்சு. ஆனா அவளோட சோகமான பயந்து நடுங்கிய முகமும் உடலும் என்னை ரொம்ப குழப்பமடைய செஞ்சாலும் அதனாலதான் அவளை எனக்கு பிடிக்க ஆரம்பிச்சது’ என்று தான் எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தவனை கலைக்கும்படி ஷக்தியின் போன் அடித்ததால் நினைவிலிருந்து மீண்டவன் கண்களை திறக்காமலே யார் என்று தெரியும் என்பதால், ”சொல்லுடா எரும! இந்த நேரத்துல ஏன்டா போன பண்ண? என்ன வேணும்?” என்றான்.

“ என்ன பண்ற அண்ணா?” என்ற சுரேஷின் குரலில் கடுப்பானவன்.

"டேய் இது என்ன புதுசா? நீ என்னை விட மூணு மாசம் தான சின்னவன். என்னை எதுக்குடா அண்ணான்னு கூப்பிட்டு உயிரை எடுக்குற?” என கோவத்தில் கத்தினான்.

"டேய்! என் காது செவிடாக போகுது, ஏன்டா இப்படி கத்துற?”. என்று தன் காதை தேய்த்து கொண்டு பின் தொடர்ந்தான் சுரேஷ்.

“உன்னைலாம் அண்ணான்னு கூப்பிடணும்னு எனக்கு என்ன ஆசையா? எல்லாம் என் தலையெழுத்து. எங்க அம்மா உன்னை பேர் சொல்லி கூப்பிட்டேன்னு ஒரு மணிநேரம் உக்காரவச்சு கிளாஸ் எடுத்துட்டாங்க. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு இனிமேல் அண்ணி வந்துட்டாங்க அண்ணான்னு தான் கூப்பிடணுமாம்" சுரேஷ் பாவமாய் கூறினான்.

சுரேஷ் கூறியதை கேட்டு கலகலவென ஷக்தி சிரிக்க, ”சிரிடா! நல்லா சிரி!” என்றான் கோவமாக.

"தூங்கிட்டியா?” என்றான் சுரேஷ்.

"இல்ல! கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கேன்! தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிட்டு தூங்கறியான்னு கேக்கற பக்கி" என்றான் ஷக்தி.

"இல்லடா அண்ணா. இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சு. உன் முதல் வெட்டிங் நைட்ல்ல. அதான் சும்மா என்ன பண்றேன்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்" என்றான் சுரேஷ் ஷக்தியை வம்பிழுக்க.

"வாயமூடு! அறிவுகெட்ட முண்டம், எனக்கு தூக்கம் வருது வைடா போனை" என்று உள்ளுக்குள் சிரித்தபடி போனை கட் செய்தவன்.

சுரேஷ் கூறியதை நினைத்து சிரித்துக்கொண்டே, ‘நானே கல்யாணமான முதல்நாளே, என் மனைவியை அங்க விட்டுட்டு வந்து தனியா இருக்கேன். இந்த எருமைக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என்னை போன் பண்ணி கிண்டல் பண்ணுவான்? இப்பயே அவனை நேர்ல போய் ரெண்டு சாத்து சாத்தனும் போல இருக்கு’ திட்டியபடி களைப்பில் உறங்கிப்போனான் ஷக்தி.

சுரேஷின் வீடு..

மஹா தன் அறையில் சற்று பயம் கலந்த நிம்மதியில் தனக்குள்ளே பேசிகொண்டிருந்தாள்.

‘ஒரே நாளில் என் வாழ்க்கையே மாறிடுச்சே! எனக்கு இவங்கள யாரையுமே யாருன்னு தெரியாது. ஆனா இன்னைக்கு ரொம்ப நல்லவங்ககிட்ட தான் வந்து சேர்ந்துருக்கேன்.

பிள்ளயாரப்பா! உனக்கு ரொம்ப நன்றி. நீ தான் என்னை இவங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்க.

நேத்து வரைக்கும் அந்த பாவிங்க கிட்ட மாட்டிகிட்டு இருந்தேன். கடவுள் மாதிரி வந்து என்னை காப்பாத்திட்டாரு.

ஆனா, இவர் யாரு? என்னை எதுக்கு கல்யாணம் பண்ணார்? என்னை எப்படி தெரியும்?’ யோசித்து யோசித்து மஹாவுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது. தலையை பிடித்தபடி தரையில் அமர்ந்தாள்.

திடிரென்று கதவு திறக்கும் ஓசைவர திரும்பி பார்த்த மஹா, அங்கே சுபா சிரித்தபடி நின்றிருந்தாள்.

“ என்ன அண்ணி? கல்யாணம் ஆன முதல்நாள் இப்படி தனியா தூங்க வேண்டியதா போயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?" என்று குறும்பாய் கண்ணடித்தாள்.

"இல்ல! இல்ல! அப்படி எல்லாம் இல்ல, தலைவலிக்கிற மாதிரி இருக்கு” என்றாள் மஹா.

"இருங்க அண்ணி. நான் தைலம் போட்டு விடறேன்" என்று தைலத்தை எடுத்து வந்தவள் போட்டு விடாமல் உதட்டை சுழித்து, ”அண்ணி! நானே போட்டு விடவா? இல்ல, அண்ணாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லவா?" என்று சிரித்தாள்.

அவளின் பேச்சை கேட்டு முகம் சிவந்தவள்.

”ஐயோ சுபா! நீ ஒன்னும் போட வேணாம். நானே போட்டுகிறேன் போ" என்று மஹா தைலத்தை வாங்க போனாள்.

"இல்ல அண்ணி! சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன், இருங்க போட்டு விடறேன், ஆங்! அண்ணி சொல்ல மறந்துட்டேன். இந்த கஃப்போர்டுல உங்களுக்காக வாங்கன டிரஸ் எல்லாம் வச்சிருக்கேன்" என்று தைலத்தை நெற்றியில் தடவி விட்டபின், இருவரும் கட்டிலில் படுத்து உறங்கினர்.

காலை பொழுது விடிந்ததும் சோம்பல் முறித்து எழுந்த மஹா மணியை பார்க்க, மணி ஆறுகாட்டியது. சின்ன குளியல் முடித்து.

பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி காயத்ரி மந்திரம் கூறியபின் அடுக்களைக்கு சென்றாள்

அங்கே சுபாவின் அம்மா சமையல் செய்துகொண்டிருந்தார்.

கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்த்து புன்னகைத்துக்கொண்டே, “ என்னம்மா தூக்கம் வரலையா?.” என்றார்.

"இல்ல! நான் எப்பவும் காலைல சீக்கிரமா எந்திரிச்சிருவேன்" என்றாள் லேசாக நெளிந்தபடி.

"காபி சாபிடறியா?" என்றார்.

"இல்ல! காபி டி குடிச்சி பழக்கமில்லை, நான்... உங்கள... அம்மான்னு கூப்பிடவா” என்று தயங்கியபடி மஹா கேட்க.
 
Top