• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

6. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
6. அம்புத நல்லாள்

மீட்டிங்கில் இருந்த பிரதியுமனின் அலைபேசி தொடர்ந்து சினுங்கி கொண்டே இருந்தது.. யார் என்று பாரத்தவனின் நெஞ்சமோ'இப்ப என்ன பண்ண காத்து இருக்காங்களோ' என்று எண்ணியவன் அறையில் இருந்தவர்களிடம் அவகாசம் சொல்லிவிட்டு வெளியே வந்து சலித்தவாறு"சொல்லும்மா" என்றான்.

"என்ன சொல்லனும் பிரதி? நானும் எத்தனை மாசமா பொண்ணுங்க போட்டோ அனுப்பி வைக்குறேன் நீ ஏன் எதுவுமே சொல்ல மாட்டேன்ற? மைத்து கிட்ட கேட்டா அவனும் எதுவும் சொல்ல மாட்டேன்றான்..என்ன நினைச்சிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்? உங்க இரண்டு பேருக்கும் வயசு என்ன ஆகுது தெரியுமா? உங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்கா அதுவாவது நியாபகம் இருக்கா?" அந்த பக்கம் அவர் அர்ச்சித்தபடி பேசினார்.

"அம்மா அம்மா ப்ளீஸ்ம்மா நான் ஆபீஸ்ல இருக்கேன்.. ஈவினிங் வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்.. இப்ப மீட்டிங் இருக்கு"

" பிரதி நீ பேச வேண்டாம் நான் பேசறத ஒரு ஐஞ்சு நிமிடம் கேளு"

" சரி என்ன விசியம்ன்னு சொல்லும்மா"

"உனக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன்.. பார்க்க ரொம்ப லக்ஷணமா மகாலட்சுமி மாதிரி இருக்கா.. நீ ஒரு தடவை பாரு உனக்கு ரொம்ப பிடிக்கும்.. அந்த பொண்ணுக்கு உன்னை ரொம்ப பிடிச்சி இருக்குன்னு சொல்லிட்டாங்க.. நீயும் சரின்னு சொல்லிடு இரண்டு மாசத்துக்குள்ள நிச்சயம் பண்ணிடுவோம்"என்று அவர் இவன் எடுக்க வேண்டிய முடிவு இது தான் என்பதாய் கூறி கொண்டு இருந்ததை கேட்டதும் அவனுக்கு கோபம் எல்லையில்லாமல் வந்தது.

"அம்மா என்ன பேசுறீங்க நீங்க? அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆர்டர் போடுறீங்க எனக்கு பிடிக்க வேண்டாமா? எனக்குன்னு ஆசையே இருக்க கூடாதா? ப்ளீஸ்ம்மா நீங்க மட்டும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க தானே நான் மட்டும் எனக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் செய்துக்கக் கூடாதா?"என்று கோபமாய் ஆரம்பித்தவன் இறுதியில் கெஞ்சலில் முடித்தான் " நான் ஆபீஸ் டைம் முடிஞ்சதும் கால் பண்றேன்"என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

இவன் துண்டிக்கவும் மைத்ரேயனிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது.. அவனும் நான் பேசி பார்க்கிறேன் மாமி என்பதாய் உரையாடலை முடித்துக் கொண்டான்.

அங்கே, அம்புத்ரா வீட்டிலோ அழைப்பு மணியின் ஒலி கேட்கவும் யார் என்று பார்த்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியே.. ஏனெனில் வந்திருந்தது அம்புத்ராவின் தந்தை.. விக்ரமன்.. பிரபல செய்தி சேனலினை வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகிறார்.. இத்தனை நேரமும் அவரைப் பற்றிய இவர்கள் பேசி கொண்டு இருந்தார்கள்.. அவரே இங்கு வரவும் அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.. அவரை கண்ட அடுத்த நொடி ஓடி சென்று அணைத்து கொண்டார் விஜி.. இதனை சற்றும் எதிர்பார்க்காதவர் அதிர்ச்சியில் தன் மனையாளை அணைக்க கூட தோன்றாமல் அப்படியே சிலை போல் நின்றிருந்தார்..

அவரை கண்டு குறுநகை சிந்தியவள் "அப்பா அவங்க மட்டும் எவ்வளவு நேரம் கட்டி பிடிச்சிட்டு இருப்பாங்க நீங்களும் கட்டி பிடிச்சா தானே ஆறுதலா இருக்கும்" என்று சிரித்தவளை மெய்மறந்து பார்த்தார்.. அவளின் அப்பா என்ற அழைப்பு இத்தனை வருடத்திற்கு பிறகு மனதிலிருந்து வருகிறது.. அவளை சந்திக்க வரும் நேரங்களில் கூட அவள் கடமைக்கு அப்பா என்று அழைப்பாள்..ஆனால் இன்று புன்முறுவலுடன் அந்த வார்த்தையைக் கேட்டதும் அவரை அறியாமல் கண்களின் ஓரம் நீர்த்துளி வர ஆரம்பித்தது.. அதை பார்த்த அவளோ" பீலிங்ஸ் போதும் அம்மாவ கவனிங்க அப்பா.. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. நான் வேலைக்கு போறேன்" என்று கிளம்ப ஏத்தனித்தவளை "இரு அம்மு நான் ஒரு பையன பார்த்து இருக்கேன் அவன உனக்கும் ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்.. ஒரு தடவை பார்த்துட்டு போடா அம்மு" என்று சொல்பவரிடம் ஏனோ அவளால் முடியாது என்று சொல்ல இயலவில்லை.. கதிருக்கு அழைப்பு விடுத்து இன்று ஒரு நாள் தன்னால் வர முடியாது என சொல்லியவள் இன்றைய பணிகளையும் அவனுக்கு எடுத்துரைத்தாள்.. இது அனைத்தையும் செய்து முடிப்பதற்குள் அவளின் தாயும் தந்தையும் பழையபடி மகிழ்ச்சியாக இருப்பது அவர்களின் முக மலர்ச்சியே சொல்லியது.. அதைக் கண்டு தானும் மகிழ்ந்தவளாய் அவர்களின் நடுவில் வந்து அமர்ந்தாள் "சொல்லுங்க அப்பா நான் என்ன செய்யணும்?"

"நான் பார்த்து இருக்க பையன நீயும் பாரு அம்மா கூட இந்த இடம் சரிவரும்னு சொன்னா.. அவங்க ரொம்ப நல்ல இடம்டா.. ரொம்ப அன்பா இருப்பாங்க.. பையன் கூட அப்படி தான்.. என பேசி கொண்டு இருந்தவரை"அப்பா போட்டோ காமிங்க முதல்ல அப்பறம் சொல்றேன்"

"இதோ பாரு.. பெயர் பிரதியுமன், சாப்ட்வேர் என்ஜீனியர் இங்க தான் இருக்கான்.. என் கூட படிச்சவனோட பையன் ரொம்ப நல்ல பையன் எனக்கு பர்சனலா அவன தெரியும்.. உனக்கு பிடிச்சி இருக்கா அம்மு" என்று அவர் பேசி கொண்டு இருக்க அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை நிமிர்ந்து பார்த்தவர் அவளின் கண்களில் தெரிந்த அந்த மகிழ்ச்சி அவனை அவளுக்கு பிடித்து இருக்கிறது என்பதை தெளிவாக சொல்கிறது.. ஆனாலும் வாய்மொழியாக கேட்க வேண்டுமே? அதனால் அவளின் சிப்பி வாய் திறந்து ஏதேனும் வாய்மொழிய வேண்டுமே! அதனால் "அம்மு என்னடா ஏதாவது சொல்லுடா உனக்கு பிடிச்சி இருக்கா?"

அவள் அப்பொழுதும் எதுவும் பேசாமல் இருக்கவே விஜி"அம்மு ஏன்டா பேசாம இருக்க? உனக்கு பிடிக்கலையா? உன் விருப்பம் தான்ம்மா.. பிடிக்கலைன்னா அவங்க கிட்ட சொல்லிடலாம்" என்று அவளின் கையை பிடித்து கேட்டு கொண்டு இருந்தார்..

" அம்மா எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.. ரொம்ப" என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.

அதைக் கேட்டதும் அவளின் மகிழ்ச்சி அவர்கள் இருவருக்கும் ஒட்டி கொண்டது.."அப்போ அவங்க கிட்ட உனக்கு ஓகேன்னு சொல்லிடவா அம்மு?" என்றார் விக்ரமன் கேள்வியாய்..

அவளோ வெட்கத்தில்" ஹும்"என்று மட்டும் சொன்னாள்.. இதுவரை அவளை கம்பீரமாய் மட்டும் பார்த்த அவருக்கு இன்று வெட்கபடுவதைப் பார்த்தும் மெய் மகிழ்ந்து போனார்.. விஜியும் கூட இத்தனை நாள் தனது கடமையை முடித்த பிறகே திருமணம் என்று சொல்லி கொண்டு இருந்தவள் இந்த வரனைக் கண்டு நாணத்தால் தலைத் தாழ்த்தி இருப்பதை பார்த்ததும் அவரையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது..

ஏதோ தோன்றியவராய் "அம்மு உன்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்றார் விக்ரமன்.

"என்ன சொல்லனும் சொல்லுங்கப்பா"

"நீ இங்க வந்த அன்னைக்கு ஒரு பையன் உன்கிட்ட மாட்டிக்கிட்டு இருந்தானே நான் கூட அவன் பிரண்ட் கூட போலீஸ்ன்னா பயம்னு சொன்னேனே?"

"ஆமா..நியாபகம் இருக்கு.. ஆனா இப்ப எதுக்கு அதை பற்றி பேசறீங்க?"

" அது வேற ஒன்னும் இல்லை.. அந்த போலீஸ்க்கு பயந்த பையன் வேற யாரும் இல்லை அது பிரதியுமன் தான்" என்றதும் தீ சுட்டதை போன்று எழுந்து நின்றாள் அவள்.

"என்ன சொல்றீங்க நீங்க? அவர் அப்படியில்லை ரொம்ப தைரியசாலி என்னை ஒரு தடவை அவர் காப்பாற்றி இருக்கார்.. அவர் எப்படி பயந்த ஆளா இருக்க முடியும்.. நீங்க பொய் சொல்றீங்க"என்று அவள் தனக்கு தானே பேசி கொண்டு இருந்தாள்.. அவள் பேசிய விதத்தில் அவளுக்கு ஏற்கனவே பிரதியுமனை தெரியும் என்பது தெளிவாக தெரிந்தது..

"உனக்கு பிரதிய ஏற்கனவே தெரியுமா அம்மு?"

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும்" கேட்கிறேன்ல சொல்லு அம்மு"என்றார் சற்றே அதட்டலாய்.

"தெரியும்.. தெரியும் நல்லா தெரியும் கேரளால எனக்கு நடக்க இருந்த அவமானத்தை துடைச்சது அவர் தான்..அப்ப இருந்து நான் அவரை தேடிட்டு இருக்கேன்.. அவர் பெயர் கூட நீங்க சொல்லி தான் தெரியும்.. ஆனா போலீஸ்ன்னா பயம்னு நீங்க சொல்றத என்னால நம்ப முடியல.. அவர் ஏதாவது தப்பு பண்றாரா? அது தான் பயத்திற்கு காரணமா?"

"நோ நோ அவன் ரொம்ப நல்லவன்.. கேரளாக்கு அவன் வந்தது தெரியும் ஆனா நீ அவன மீட் பண்ணது எனக்கு தெரியாது அம்மு.. அவன் பயப்பட அவனுக்கு சின்ன வயசுல நடந்த விசயம் தான் காரணம்"என்று அவன் கடந்த காலத்தை பற்றி கூற ஆரம்பித்தார்.. அதைக் கேட்க கேட்க அது நாள் வரை கண்ணீரே சிந்தாத அவள் கண்களும் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது..

அவர் சொல்லி முடித்ததும் தன்னையும் அறியாமல் சுவற்றில் சாய்ந்து கல்லென நின்றாள்..

"அம்மு நீ அவன் லைப்ல வந்தா நல்லா இருக்கும்னு எனக்கு தோணிச்சு.. ஆனா உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்டா" என்று வாஞ்சையுடன் தலை கோதியவரை தீர்க்கமாக பார்த்தவள் "எனக்கு அவரை பிடிக்கலன்னு நான் சொன்னேனா? ஆனா அவருக்கு.. அவருக்கு.. என்ன.. பிடிக்குமா? என அவளின் வார்த்தைகள் தடுமாறியது.."ஆனா அப்பா நான் அவரோட பயத்த போக்குவேன்.. அவர இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்கள துண்டு துண்டா வெட்டாம விடமாட்டேன்" என சொன்னவளின் கண்களில் அத்தனை ரெளத்திரம்..

அதைக்கேட்டு சிரித்தவர் "சரிடா அம்மு ஆனா நீ போலீஸ்ன்னு.."

"அவரோட பயம் போற வரைக்கும் சொல்ல மாட்டேன்.. வேற யாரையும் சொல்லவும் விட மாட்டேன்.. என்னோட வேலைய பர்மிஷன் வாங்கிட்டு வீட்ல இருந்தே செய்ய போறேன்..நீங்க மத்த ஏற்பாட்ட பாருங்கப்பா.. அதுக்கு முன்னாடி அவரோட சம்மதத்தை கேட்டுக்கோங்க" என்றவள் தன் தாயை நோக்கினாள்" அம்மா உனக்கு ஓகேவா?"

அவள் அருகில் சென்றவர் வாஞ்சையோடு பார்த்தார்" உனக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும் அம்மு.. உனக்கு அந்த பையன பிடிச்சி இருக்குன்னா நீ போ உனக்கு துணையா நாங்க இருக்கோம்.. அவங்க வீட்லையும் இதைப்பற்றி பேசுவோம்..அவன் எந்த தப்பும் பண்ணல அதை அவருக்கு புரிய வைக்கனும்.. அதை நீ செய்வ" என்றதும் தனதறைக்குள் சென்று அவனைப் பற்றிய எண்ணத்திலேயே உறங்கியும் போனாள்..

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டு இருந்தது.. ஒரு நாள் மாலை ஆறு மணி அவன் வேலையை முடித்து விட்டு தனது குடியிருப்புக்கு வந்தான் பிரதியுமன்.. அவன் வந்த சிறிது நேரத்தில் மைத்ரேயனும் வந்து சேர்ந்தான்.. அவனுக்கும் சேர்த்து காபியை தயாரித்தவன்"இந்தா மைத்து" என்று அவன் தனதறைக்கு நடக்க ஆரம்பித்தான்..அவனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன் "பிரதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"எதைப்பற்றி பேச போற மைத்து? அம்மா சொன்னாங்கன்னு அந்த பொண்ண பற்றி பேச போறன்னா எனக்கு வேலை இருக்கு" என்றான் கோபமாய்.

"என்கிட்ட கோபப்படுறத விட்டுட்டு பிராக்டிகலா யோசி பிரதி.. மாமி என்ன கேட்குறாங்க நீ கல்யாணம் செய்துக்கனும் சந்தோஷமா இருக்கனும் அவ்வளவு தானே? நீ விரும்புற பொண்ண உன்னால கண்டுபிடிக்க முடியலைன்னா அவங்க விருப்பபடி அவங்க சொல்ற பொண்ண கல்யாணம் செய்துக்கோ.. உன்னைப் பெற்று வளர்த்து இருக்காங்க பிரதி அவங்கள விட நல்லத வேற யாரால யோசிக்க முடியும்?"

"நீ சொல்றது எனக்கு புரியாம இல்லை.. ஆனா எனக்குன்னு ஆசை ஒன்னு இருக்குல்ல.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்டா.. உடனே மனச மாத்திக்க முடியுமா?"

"என்னடா மனசு?இத்தனை வருஷம் உனக்கான தானே வாழ்ந்தாங்க அவங்களுக்காக அந்த பொண்ண கூட பார்க்க மாட்டியா?கல்யாணம் செய்துக்க மாட்டியா?"

" பிடிக்காத கல்யாணம் செய்துக்கிட்டு ஒன்னா வாழ இது ஒன்னும் சினிமா , சீரியல் இல்லடா வாழ்க்கை.. என்னோட சேர்ந்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கை அழிய நான் காரணமாக முடியாது"

" ஏய் வாய மூடு.. என்ன சும்மா டயலாக் பேசிட்டு இருக்க? அந்த பொண்ணு போட்டோ உனக்கு அனுப்பி ஒரு மாசம் ஆகுது.. போ போய் பாரு.. ரொம்ப அழகா இருக்கான்னு அனன்யா கூட சொன்னா.. நீ பிரிண்ட் எடுத்து வை.. நான் மார்னிங் வரேன்"என்று அவன் உணவு கூட உண்ணாமல் உறங்க சென்று விட்டான்..

அதன் பிறகு நெடு நேரம் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் தாயிடம் சிறிது நேரம் பேசியவன் அவரின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.. மெயில் எடுத்து வந்திருந்த புகைப்படத்தை பார்க்க அதனை திறந்தான் ஆனால் நெட்வொர்க் சரியில்லாமல் போகவே வரும்போது வரட்டும் என்று பிரிண்ட் கொடுத்து விட்டு உறங்க சென்றுவிட்டான்..

மறுநாள் சூரிய பகவான் தன் பணியினை செவ்வனே செய்ய எழும்பி கொண்டிருந்தார்.. எப்பொழுதும் போல எழுந்தவன் தன் காலை கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தான்.. வந்தவனை பிடித்து கொண்டான் மைத்ரேயன் "ஏய் பிரதி பொண்ணு போட்டோ பார்த்தியா? எப்படி இருக்கா?"

"ஓ ஷிட் மறந்தே போயிட்டேன்டா.. இரு பார்த்துட்டு பிடிக்கலன்னு சொல்லிடுறேன்" என்று எழ போனவனை சோபாவில் தள்ளி விட்டு அவன் அறையை நோக்கி ஒடினான்.. அவனின் எண்ணத்தை புரிந்து கொண்டவனாய் அவனும் அவசர அவசரமாக அவன் பின்னே ஒடினான்.. பிரிண்ட் வந்திருந்த புகைப்படத்தை பார்க்கும் முன்னரே அதனை பிடிங்கினான் பிரதி.. இருவரும் சேர்ந்து இழுத்ததில் பாதியாக பிரிந்தது புகைப்படம்.. மைத்ரேயனை முறைத்தவன்"டேய் என்னடா இப்படி பண்ணிட்ட? கொடு சேர்த்து வச்சி பார்ப்போம்" என்று அவன் கையில் இருந்த பாதியை பிடுங்க போனவன் வீசிய காற்றால் தன் கையில் இருந்த பாதியை தவற விட்டான்..

"அடக்கடவுளே போடா டேய் காலையிலேயே அலைக்கழிப்பா இருக்கு வந்து தொல" என்று சலித்துக் கொண்டே படியிறங்கி ஓடியவன் அந்த பாதி ஒரு பெண்ணின் முகத்தில் பட்டு தொங்கவும் பின்னோடு வந்த மைத்ரேயனை முறைத்தவன் "இப்ப என்ன பண்றது? காலையில ஒரு பொண்ணு கையில அடி வாங்க வச்சிடுவ போலையே"

" சரி சரி போ பொண்ண பார்க்கனும்ல"

"டேய் அந்த பொண்ணு எனக்கு பார்த்து இருக்காங்க.. நீ ரொம்ப ஆர்வமா இருக்க?

" பின்ன என் ரூட் கிளீயர் ஆக வேண்டாமா? போ போ"

" எல்லாம் என் நேரம்"என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றவன் அந்த பெண்ணின் முகத்தை பார்த்ததும் சர்வமும் மறந்தான்.. தாயை கண்ட சேயை போல அவளை இறுக்க அணைத்தான்.. அவளும் தான்..

இதை கவனித்த மைத்ரேயன் 'என்ன பண்றான் இவன் யார் இந்த பொண்ணு? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்?' என யோசித்தவாறு அருகில் சென்றவன் அங்கே அம்புத்ரா இருக்கவும் இரண்டடி பின்னே நகர்ந்தான்..

ஆனால் பிரதியுமனோ "உன்னை எவ்வளவு நாளா தேடிட்டு இருந்தேன்? இத்தனை நாளா என்னை தவிக்க விட்டுட்டு எங்க இருந்த? இனியாவது என்னை விட்டுட்டு போகாத.. ப்ளீஸ்"

"கண்டிப்பா போக மாட்டேன்.. இனி நீங்க தான் என் உலகம்.. ஆனா எனக்கு இங்க பக்கத்துல ஒரு வேளை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்" என்று அவனை விலக்கி விட்டு நடந்து சென்றாள் அவள்.. அவளையே பார்த்து கொண்டு இருந்தவனை மைத்ரேயன்" ஏய் பிரதி உனக்கு அம்புத்ராவை தெரியுமா?"

"ஓ அவ பெயர் அம்புத்ராவா? நல்லா இருக்குல்ல? சரி சரி அவ திரும்ப வரேன்னு சொல்லி இருக்கா நான் போய் ரெடி ஆகுறேன் நீயும் வா"என்று ஓடுபவனை கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் மைத்ரேயன்..

தொடரும்..
 
Top