• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

6.எந்தன் தேன் ஜவ்வே

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu

6.எந்தன் தேன் ஜவ்வே​



நேரமும் காலமும் யாருக்காகவும் காத்து இல்லை அது அதனுடைய வேலையை செய்ய சென்னையில் இருந்து துயமல்லியை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான் பாரி இளவழகன்

இங்க அன்றைய இரவு எப்படி நகர்ந்தது என்றே தெரியாமல் நேரத்தை கடத்தி இருந்தாள் தேன்மொழி, மேகா தான் ஓயாமல் அவளிடமும் வீட்டில் கணவன் குழந்தை என் அனைவரிடமும் பேச்சை வளர்த்து கொண்டு இருந்தாள் ..

மறுநாள் பார்வதி சுறுசுறுப்பாய் மற்ற வேலைகளை பார்க்க சமையலை தான் பார்த்து கொள்வதாக மதி காலையிலேயே வந்து நின்றாள்..

பரவாயில்ல மதி எல்லா நாளும் ஓடுற இந்த மாதிரி நாள்ல தான் உனக்கு ஓய்வு போய் படு

இல்ல அத்தை இருக்கட்டும் இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் மறுபடி ஓடும் போது சலிப்பு தட்டிடும்

அது என்னவோ உண்மை தான் மதி சரி இந்தா இந்த காய்கறியை நறுக்கு..

அத்த உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் என்றதும் ..

இரு வரேன் என்றவர் வேகமாக வந்து அறைக்கதவை வெளியே தாழிட்டு விட்டு சொல்லு மதி

தேனுக்கு நீங்க முதல் தடவை பார்த்த மாப்ள…

அதுக்கு இப்ப என்ன என்றார் கோபமாக..

அது இல்ல அத்தை அந்த பையன் தேனை கட்டிக்க தயாரா தான் இருந்தானாம், அப்புறம் நம்ம வீட்டு சைடுல இருந்து தான் நம்ம தேனை பத்தி பேசி அந்த சம்பந்தத்தை கலைச்சு விட்டு இருக்காங்க..

நம்ம வீட்டு பக்கமா..

ஆமா அத்தை

என்ன சொல்லுற நம்ம தேனு யார்கிட்டேயும் பெரிசா வம்பு வச்சுக்க மாட்டாளே அவளை தான் எல்லாருக்கும் பிடிக்குமே


தேனை எல்லாருக்கும் பிடிச்சது தான் இந்த பிரச்சினைக்கு காரணமே..

என்ன சொல்லுற

ஆமா என்றவள் தேனை குணம் சரியில்லை என்றும் அவள் எல்லோரிடமும் நன்கு பழகியது பயன்படுத்தி அவள் நடத்தை சரியில்லை என்று பேசியதே அவள் தங்கை தான் என்று தனக்கு வந்த தகவலை போட்டு உடைக்க

சரிந்து அமர்ந்து விட்டார் பார்வதி..

பாம்புக்கு பால் வார்த்து இருக்கேன் போல என்று நெஞ்சில் கை வைத்து விட..

அத்த அத்த..

கண்ணீர் வழிய இதை யார் மதி சொன்னா..

என் கூட வேலை செய்யுறங்கா அவங்களும் நம்ம தேனு கூடத்தான் படிச்சு இருக்காங்க அப்ப நடந்த சில விஷயங்களும் பொய் தான் அதையும் இவ தான் செஞ்சு இருக்கா அதை சரியாக பயன்படுத்தி இவ அதுல மாட்டிக்கல அதான்

ஏன் மதி இந்த பொண்ணு இப்படி இருக்கு



நம்ம தேனை எல்லாரும் கொண்டாடுறது அவளுக்கு பிடிக்கல அவளை எல்லோரும் புகழகனும் பேசனும் ன்னு …

ப்ச் என்ன மதி இது புரியாத வயசா அப்ப எல்லாம் இரண்டு பேரும் பெரியவளுங்க ஆயிட்டாங்க..

விடுங்க அந்த முடிஞ்சு போச்சு நீங்க தான் சாமார்த்தியமா மாமா கிட்ட பேசி தேனுக்கு மாப்ள பார்க்கனும் அதுவும் அவ காதுக்கு எட்டாம

ம்ம்

என்ன அத்தை

முடிவு பண்ணிடலாம் மதி


இங்கே எழுந்து வேலைகளை பார்த்து கொண்டு இருந்த தேனுக்கு மனசு படபடவென தான் இருந்தது யாரா இருக்கும் எனக்கு யாரையும் நினைவு வரல அதுல யாரா இருக்கும் என்னைய யார் என்றவள் மனது குழம்பி போய் நின்று இருந்தவள் டீ பொங்கி வழிந்தது கூட உணராமல் நின்று இருக்க


டூயட் பாடிட்டு இருக்கியா தேனு..

என்ன என்றவள் டீ வழிந்ததை பார்த்து அச்சோ என்று அதை நிறுத்திவிட்டு மடமடவென துடைக்க

என்னம்மா உன்னோட எதிர்காலத்தை நினைச்சு பார்த்துட்டு இருந்தியா..

ப்ச் மேகா…

ஆமா ஆமா அதுவா தான் இருக்கும் யாருன்னு கண்டுபிடிச்சிட்டியா?

படக்கென திரும்பியவள் மேகாவை ஆராய்ச்சியாக பார்க்க

என்ன பார்வை



அந்த ஜமீன் வீடுன்னா அவங்க அவங்க என்று தடுமாற..

என்ன இவ்வளவு தடுமாற்றம்

வேணாம் மேகா எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு

என்னடி அசிங்கம்

யாருன்னே தெரியாத இருக்கிறவங்களுக்கு கழுத்தை நீட்ட கூட தயாரா இருக்கேன் என்னைய பத்தி பல விஷயங்கள் உலாவுன இடத்தில் இருந்தவங்க வேண்டாம் அதுக்கு நான் …


நீ என்ன பேசுறன்னு தெரிஞ்சு பேசுறியா தேனு அப்ப உனக்கே உன் மேல நம்பிக்கை இல்ல அப்படித்தானே ஆனா பாரு உன்னையே கட்டிக்க நினைக்குறவங்களுக்கு தெரியும் நீ எப்படின்னு..


எப்படின்னு மேகா உடல் சிலிர்க்க கண்கலங்க அது எனக்கு நான் எல்லாரும் சொன்ன மாதிரி மானங்கெட்டு…என்று முடிக்கும் முன்பே ஓங்கி அறைந்து இருந்தாள்


மேகா..


போதும் நிறுத்து தேனு யாரோ ரோட்டில் போறவங்க சகதியை ஏற்படுத்திட்டா நாம அப்படின்னு ஆகிடுவோமா..இதுவே கடைசி இனி இப்படி ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து இல்ல மனசுல இருந்து வந்ததது… என்று பல்லை கடித்தவள்

வரட்டும் உன்னைய கட்டிக்க போறவங்க வரட்டும் அப்ப உன்னையே பேசிக்குறேன் என்றவள் டீயை ஊத்தி எடுத்துட்டு வா என்றவள் வெளியே வர அவள் போன் ஒலித்தது


அண்ணே…

மதியம் கிளம்புறேன் மேகா..

அது இல்ல இப்ப இவ என்று நடந்ததை கூற


அது ஒன்னும் பிரச்சினை இல்லை சரி பண்ணிடுவேன் கவலையை விடு அப்புறம் கெட் டூ கெதர் வர வாரம் கிராண்டா பண்ணிடலாம் எல்லாருக்கும் குருப் ல போட்டு விடு முக்கியமான உங்களுக்கு அடுத்த பேட்ச் வரனும்

கண்டிப்பா அண்ணா என்றவள் அடுத்த அடுத்த வேலைகளை பார்க்க…


அடுத்த இரண்டாவது நாள் காலை வந்து இறங்கி இருந்தான் பாரி இளவழகன்..

அன்று திங்கள் காலை பரபரப்பாக இருந்தது மதி இங்கிருந்தே ஸ்கூல் கிளம்பியவள் அத்த எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தேனுக்கு மாப்ள பார்க்கலாம் நானும் என் பக்கம் பேசி பார்க்கிறேன்..

சரி சரி என தலையாட்டினாரே தவிர எந்த விஷயத்தையும் சொல்லவே இல்லை

மதி கார்த்தி என ஒருவர் பின் ஒருவராக கிளம்பி விட,

பார்வதி இங்க வா

என்னங்க

அவ இன்னும் அங்கேயே இருக்கா

அதுக்கு என்ன இப்போ?


இங்க இருக்கிற வேலையை யார் செய்யுவா என்று வெளியே வந்தாள் கயல்

இங்க இருக்கிறவங்களோட வேலையை அவ ஏன் செய்யனும்..

ம்மா என்ன பேசுற அவளை மாதிரி நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்..

போதும் நிறுத்து டி அவ ஒன்னும் உனக்கு வேலைக்காரி கிடையாது உன் வேலையை உன்னால முடிஞ்சா செய் இல்லையா வேற ஆளை பாரு என்றவர் திரும்பி உங்களுக்கும் தான் இனி அவளை மட்டம் தட்டி பேசிட்டே இருந்தீங்கன்னா மனுசியா இருக்க மாட்டேன் என்றவர் நகர போக..

கயல், “இரு மா என்ன உன் பேச்சே சரியில்ல என்ன நினைச்சிட்டு இருக்க ?

எதை வேணும்னாலும் நினைக்கலாம் ஆனா இப்ப உன்னையே பத்தி நினைக்கல போதுமா?

என்னம்மா நக்கலா

அதெல்லாம் எனக்கு இல்ல உனக்கும் உங்க அப்பாவுக்கும் தான் இருக்கும்

பார்வதி

சொல்லுங்க


பார்வதி இப்படி நடந்து கொண்டதே இல்லை அதை பார்க்க பார்க்க வேலாயுதத்துக்கே என்ன செய்வது என்று புரியவில்லை அவர் பார்வதியை இமைக்காமல் பார்க்க

உங்களுக்கு எதாவது வேணுமா இல்லை எந்த வேலையாவது செய்யனுமா? ஏன்னா நான் உங்களுக்கு செய்ய கடமை பட்டு இருக்கேன் சோறு போடுறீங்க தங்க இடம் தரீங்க ‌ அப்ப நீங்க சொல்லுறதை செய்யனும் இல்ல

பார்வதி..

ஆமாங்க நான் தான், சொன்னதுல எந்த தப்பும் இல்ல தானே

ஏன் பார்வதி நான் என்னைக்கு உன்கிட்டே அப்படி நடந்து இருக்கேன்

நடந்துக்கிட்டது இல்ல ஆனா நீங்க நினைக்கிறதை செய்ய வச்சுட்டு தானே இருக்கீங்க

வேலாயுதத்திற்கு எப்படி இதை சரி கட்டுவது என்று புரியவில்லை தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்..



கயல், “ ரொம்ப தான் பேசுறம்மா நாங்க மட்டும் என்னம்மோ அவளை பேசின மாதிரி நீ எதுவுமே சொல்லாத மாதிரி என்றவள் நக்கலாக கேட்க

சரி தான் பேசி இருக்கேன் இப்ப தானே அது தப்புன்னு புரியுது இனிமேலும் அப்படி இருந்தா நான் மனுஷ ஜென்மமே இல்ல என்றவர் போன் ஒலிக்க

சொல்லுங்க அம்மா…

வீடு வரை வரியா

வரேன் ம்மா கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு ஒரு மணிநேரத்தில் வரவா..

…..

என்னம்மா சத்தமே இல்ல

உனக்காக வந்தவங்க காத்துட்டு இருக்காங்க…

ம்மா என்று ஆனந்த அதிர்வாய் கேட்க..

வரும் போது வரட்டும் ஒன்னும் அவசரம் இல்ல தம்பியும் என்னைய தானே இங்க இறக்கி விட்டுட்டு வேலைன்னு போய் இருக்கான் அவசரப் படுத்த வேண்டாம் என்று அந்த பக்கம் குரல் கேட்க


அம்மா என்று சின்னதாய் பார்வதி கேட்க

அவங்க பாட்டி தான் பார்வதி நீ மெதுவா வா தம்பி ஏதோ சின்ன வேலை வந்துடுறேன் மேகா கிட்ட சொல்லிட்டு போய் இருக்கு என்றதும்,போனை எடுத்து கொண்டு உள்ளே வந்த பார்வதி அம்மா அங்க தேனு கட்டிக்க புடவை ஏதும்,

அதெல்லாம் எதுவும் வேணாம் பார்வதி பிள்ளையை ஸ்கூல் தாவணில இருந்தே பார்த்துட்டு தான் இருக்கேன் ன்னு அவங்க பாட்டி சொல்லுதாங்க அவங்களுக்கு நம்ம தேனை தெரியும் போல

ஓஓஓ இருந்தாலும்

வா பார்வதி நானு தேனுக்கு ஒரு சுடிதார் எடுத்தேன் இல்ல அது இருக்கு

அவளுக்கா..

ஆமா இங்க தான் இருக்க அங்க வந்தா அது இன்னேரம் என்ன ஆகி இருக்கும்.சரி அதை விடு வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வா

சரிங்க அம்மா என்று அறைக்குள் இருந்து வந்தவர் கடகடவென வேலையை முடித்து விட்டு கிளம்பி வர

கயல் அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தவள் அவள் மூளை என்னவோ நடக்குது என்னனு தெரிஞ்சுக்கணும் என்று படபடக்க

நான் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன் தேனு கூட படிச்ச பிள்ளைங்க எல்லாம் ஒரு கெட் டூ கெதர் வைக்க போறாங்களாம் மேகா வந்து இருக்கா அதோட இன்னும் சில பேர் வராங்க அதான் அம்மா வரச் சொன்னாங்க என்று பாதி விஷயத்தை மறைத்து கிளம்பி விட

இந்த பக்கம் கயல் அவள் வேலையை ஆரம்பிக்க சில பேரை ஏவி விட்டு இருந்தாள்.


வீட்டிற்குள் செல்லாமல் வேலாயுதம் பல விஷயங்களை மண்டையை போட்டு குழப்பி கொள்ள மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைத்து விட கல்யாண வேலை கண் முன்னே வந்து நின்றது.


அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டார் வேலாயுதம். வேலாயுதம் கிளம்பியதும் தேங்க்ஸ் பவன் அப்பா டென்ஷன் குறைஞ்சுடுச்சு அப்ப வேலை பார்க்க கிளம்பிட்டாங்க நான் என்ன பண்ணுவேன் அவளோட குறையில் நான் என்ன பண்ண என்று கண்ணீர் சிந்த அந்த பக்கம் அவனோ அவளை உருகி உருகி சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.


வேகமாக வீட்டிற்குள் நுழைய மெதுவா வா மா பார்வதி

அந்த குரல் எங்கோ கேட்டது போல் இருக்க உள்ளே நுழைந்த பார்வதி சற்றே தளர்ந்து முகம் பிரகாசிக்க அமர்ந்து விட்டார் ..அம்மா நீங்களா…

நானே தான் எப்படி இருக்க

நல்லா இருப்பேன் இனி…

சிரித்தவர் நீ இப்படி சொல்லுற அங்க தேனு பேயை பார்த்த மாதிரி உட்கார்ந்து இருக்கா எந்த கேள்விக்கும் பதில் இல்ல..

ஏன் என்னவாம் அழகன் எப்படி மா இருக்கான்..

நல்லா இருக்கேன் அத்த என்று உள்ளே நுழைந்தான் தேனின் தித்திப்பான அழகன்.




தேன் வருவாள்
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஏற்கனவே பண்ணினது பத்தாதுன்னு இப்ப வேற கயலு மூளை எதையோ செய்ய யோசிக்கிறா 😬 ஆனா இந்த முறை அப்படி எதுவும் நடக்காம இவளோட வண்டவாளம் எல்லாம் வெளியே வரப்போகுது போல 🤩
 

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu
ஏற்கனவே பண்ணினது பத்தாதுன்னு இப்ப வேற கயலு மூளை எதையோ செய்ய யோசிக்கிறா 😬 ஆனா இந்த முறை அப்படி எதுவும் நடக்காம இவளோட வண்டவாளம் எல்லாம் வெளியே வரப்போகுது போல 🤩
மிக்க மகிழ்ச்சி சகோதரி