• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
“நீ என்னை அம்மான்னு தாராளமா கூப்பிடலாம்" என்று சிரித்தபடி அவளை அருகில் அழைத்தார்.

“ரொம்ப தேங்க்ஸ் மா!" என்று அவரை கட்டிக்கொண்டு அழுதாள் மஹா.

"இங்க பாருடா! இதுக்கு முன்னாடி நீ எவ்ளோ வேணா கஷ்ட பட்ருக்கலாம். ஆனால், இனி உன் வாழ்க்கையே நீ நினைச்சி பார்க்காத அளவுக்கு சந்தோஷமா மாறபோகுது. என்கூட வா" என்று பூஜையறைக்குள் கூட்டி சென்று தீபம் ஏற்றிவழிபட்டு அவர் கையால் குங்குமம் எடுத்து மஹாவின் நெற்றி வகிட்டில் வைத்துவிட்டார்.

"இங்க பாருடா. இன்னைலருந்து நீ வெறும் மஹா கிடையாது. திருமதி.மஹாஷக்தி புரியுதா? இந்த குங்குமம் என்னைக்கும் உன் நெத்தில இருக்கனும் சரியா?” என்றார்.

"சரிம்மா" என்று அவரை கட்டிக்கொண்டாள்.

"உங்க ஜோடி பொருத்தம் மாதிரி பேர் பொருத்தமும் ரொம்ப நல்லாருக்கு. மஹா ஷக்தி உண்மையாவே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா மஹாஷக்தி தான்" என்று சிரித்தார்.

"போங்கம்மா!” என்று சிரித்தபடி முகத்தை மூடிக்கொண்டாள்.

"அடி ஆத்தி! என்னடா கொடும இது? உன் ஷக்தியை பார்த்து வெட்கப்படு. என்னை பார்த்து இல்ல" என்று மேலும் அவளை சீண்டி வெட்கத்தில் அவளின் முக அழகை ரசித்தார்.

"அண்ணி” என்று குரல் கேட்ட திசை திரும்பினாள். சுரேஷ் சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.

"அண்ணி நீங்க எதுவும் சங்கடமா பீல் பண்ணாதீங்க, இனி, இது தான் உங்க வீடு. நாங்க தான் உங்க சொந்தங்கள். எந்த தயக்கமும் இல்லாமல் ஃபிரியா இருங்க” என்றான் சுரேஷ்.

"சரி" என்று சிரித்துக்கொண்டே தலையாட்டினாள்.

"ஹலோ! சொல்லுங்க ப்ரோ?” என்றான் சுரேஷ்.

"சுரேஷ்! மஹா எப்படி இருக்கா? இன்னும் டென்ஷனா தான் இருக்காளா?" என்று ஷக்தி சற்று வருத்தமாய் கேட்க.

"அண்ணி நல்லா இருக்காங்க.நீங்க கவலையே படாதீங்க நாங்க பார்த்துகறோம்".

"சரிடா நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன். நீயும் வந்துரு" ஷக்தி.

"சரி! ஒன்றை மட்டும் மறக்காதடா அண்ணா! என் அண்ணி இங்க உனக்காக காத்திட்டு இருக்காங்க. அதனால, உன் தலையை இந்தப்பக்கம் வந்து காட்டிட்டு போடா" சுரேஷ்.

"சரி டா! நான் மூணு மணிக்கு வரேன் போதுமா?” என்று ஷக்தி சிரிக்க.

"ஓகே! ஓகே!” என்று போனை வைத்தவன்.

"அண்ணி!அண்ணன் மூணு மணிக்கு வரேன்னார் உங்களை பார்க்கணுமாம்" என்று அவளை பார்த்து சிரித்தபடி சுரேஷ் சொல்ல.

ஷக்தியின் பெயரை கேட்டவுடன் அவளின்முகம் வெட்கத்தில் சிவப்பதை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர் சுபாவும் சுரேஷும்.

"டேய்! உங்களுக்கு வேற வேல இல்ல? காலங்க்கார்த்தல எதுக்குடா அவளை கிண்டல் பண்றிங்க? போங்கடா” என்று திட்டியவரை அணைத்தபடி.

"சரிம்மா. எனக்கு ரொம்ப பசிக்குதும்மா” என்றான்.

"போய் முதல்ல குளிச்சி ரெடியாகிட்டு வா" என்று சமையல் அறைக்குள் சென்றார்.

எல்லோரும் தயாராகி வந்தவுடன் காலை உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

"சுபா! நான் சொன்னது புரிஞ்சுதா? கரெக்டா செஞ்சுடு" என்று மஹாவை பார்த்து”சுபா கூட போம்மா".

“சரி” என்று தலைஆட்டி சுபாவுடன் சென்றாள்.

“இப்டி உட்காருங்க அண்ணி!" என்று ரூமினுள் சென்றவுடன் கூறிவிட்டு வெளியே சென்று கையில் ஒரு புது பையுடன் வந்தாள்.

அந்த பையில் இருந்த எல்லா பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தாள்.

கரும்பச்சை நிறத்தில் இரண்டு டஜன் வளையல்களை மஹாவிடம் எடுத்து ”அண்ணி! உங்க தங்க வளையல்களை கழட்டி நடுவுல கண்ணாடி வளையல்களையும் சேர்த்து போட்டுக்கோங்க”.

“ எதுக்கு இதெல்லாம்...?" என்று மஹா கேட்க.

"அண்ணி! நீங்க புது கல்யாண பொண்ணு பார்க்க ஜொலிக்கனும். அப்போதான், எங்க அண்ணா உங்கள பார்த்தா ..." என்று முடிக்காமல் கண்ணடிக்க.

"போதும்! சுபா நான் போட்டுகிறேன்" என்ற மஹா.

கைநிறைய வளையல்கள் காலில் முத்துக்கள் வைத்த கொலுசு, கரும் பச்சை நிறத்தில் பட்டுப்புடவை, காதுகளுக்கு அழகான ஜிமிக்கி என எல்லாவற்றையும் கொடுத்து போட்டுக்கசொன்னாள்.

"இன்னும் உங்களுக்கு இருபது நிமிஷம் தான் டைம் போய்ட்டு முகம் நிறைய மஞ்சள் பூசி குளிச்சிட்டு இது எல்லாத்தையும் போட்டுட்டு வாங்க இன்னும் கொஞ்ச வேலை எனக்கு பாக்கி இருக்கு லேட்டா ஆனா அம்மா திட்டுவாங்க அண்ணா வரங்கள்ல” என்று வெளியே சென்றாள்.

குளித்துவிட்டு சுபா கொடுத்த அனைத்தையும் போட்டு கொண்டாள்.

உள்ளே வந்த சுபா, ஒரு நிமிடம் மஹாவை விழிகள் விரிய பார்த்து அசந்து தான் நின்றாள். பின் மஹாவிடம் நெருங்கி தழைய பின்னி தலைநிறைய மல்லிகை பூ சூட்டினாள்.

மெல்லிய மேக்கப் போட்டுவிட்டாள்.

"சுபா! நான் இதெல்லாம் போட்டதில்லை. ப்ளீஸ்! எனக்கு எதுவும் வேண்டாம்”.

"அண்ணி, நீங்க எதுவுமே பேசக்கூடாது. அண்ணா! இன்னைக்கு உங்கள வெளிய கூட்டிட்டு போறாங்க. அதனால, நீங்க புது கல்யாண பொண்ணு மாதிரி இருக்கணும்னு அம்மா ஆர்டர்” என்று சிரித்தாள்.

கழுத்தில் சிறிய ஆரம் ஒன்றை போட்டுவிட்டாள்.

"ம்ம் பினிஷ்! ஒண்ணே ஒன்னு மட்டும் பாக்கி” என்று குங்குமம் எடுத்து மஹாவின் நெற்றி வகிட்டிலும், நெற்றியிலும் வைத்துவிட்டு”யு ஆர் லுக்கிங் கார்ஜியஸ். அண்ணன் இன்னைக்கு நிச்சயம் உங்கள சும்மா விட மாட்டார்" என்று அவளை வம்பிழுக்க.

"சுபா ப்ளீஸ்! நிறுத்து போதும்” என்று குங்குமம் போல் சிவந்தமுகத்தை கைகளால் மூடியபடி திரும்பி நின்றுகொண்டாள்.

"ஐயோ!அண்ணன் கிட்டகாட்டவேண்டிய வெட்கத்தையெல்லாம் என்கிட்டே காட்றிங்களே?அண்ணி ப்ளீஸ் ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துகிறேன்" என்று கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து ஓடிவிட்டாள்.

சுபாவின் இந்த செயலால் சற்று அதிர்ந்தாலும் பின் அவளின் வெகுளித்தனத்தை நினைத்து சிரித்தாள்.

"அவர் வருகிறாரா? இன்று அவரிடம் என்னை பற்றிய எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். ஆனாலும் நான் எப்படி தனியாக ... அவருடன் வெளியே செல்வது? அவனின் பார்வை என் உடலிலும் மனத்திலும் அறியாத தீயை மூட்டுகிறதே? அவன் முகத்தை கண்டாலே நான் என் வசம் இல்லாமல் வார்த்தைக்கூட வர மாட்டேன் என்கிறதே? பிள்ளையாரப்பா! நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்." என்று வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

கார் சத்தம் ஷக்தி வந்துவிட்டதை உணர்தியதால் தன் உடல் நடுங்குவதை அவளால் உணரமுடிந்தது.

"ஆன்ட்டி! எல்லாம் ஓகே தான..." என்ற ஷக்தியை பார்த்து சிரித்தவர்.

"நீ அவளுக்காக வாங்கின எல்லாத்தையும் போட வச்சிருக்கேன். நீயே அதை ஆசையா அவளுக்கு கொடுத்துருக்கலாம்ல?”.

"இல்ல ஆன்ட்டி அவள் என்னை பார்த்து பயப்படறா. இப்போதைக்கு, நான்கொடுத்தா வாங்கமாட்டான்னு தான் உங்ககிட்டகொடுத்து கொடுக்க சொன்னேன்" என்று ஷக்தி லேசாக சிரிக்க.

"சரி கண்ணா!மஹா வெயிட் பண்றா நீ போ" என்றாள்.

சிறிது நேரம் கழித்து, ரூம் கதவை திறந்து கொண்டு ஷக்தி உள்ளே வருவது தெரிந்தது.

குனிந்த தலை நிமிராமல் இருந்ததால் அவனின் கோவம் அவளுக்கு தெரியவில்லை.

"போலாம் வா" என்று மட்டும் கூறிவிட்டு வெளியே நடந்தான்.

“ என்ன? குரலில் ஒரு மாற்றம் தெரிகிறதே? என்னவாக இருக்கும்?” என்று கவலையுடன் யோசித்தபடி வெளியே நடந்தாள்.

"ஆன்ட்டி! நாங்க போயிட்டு வந்துடுறோம்".

"சரி ஷக்தி கண்ணா! நான் சொன்னது ஞாபகத்துல இருக்குல்ல?”.

"இருக்கு ஆன்ட்டி. நான் பார்த்துக்கறேன்”.

"சரி! நீ காருக்கு போ! நான் மஹாவை அனுப்பி வெக்கிறேன்" என்றவளை சரி என்று தலை ஆட்டிவிட்டு வெளியே சென்றான்.

"மஹா! இங்க வாம்மா" என்று அருகில் அழைத்தார்.

"சொல்லுங்கம்மா" என்று அவர் பக்கத்தில் போய் நின்றவள் கையை பிடித்து,

" மஹா நடக்கறது எல்லாமே நல்லதுக்கு தான், இனிமேல் நீ ஷக்தியை பார்த்துப்பயப்படக்கூடாது. அவன் உன்னோட புருஷன். உன் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒருத்தனா மாறிட்டான். எல்லாரையும் எதிர்த்து உன்னை கல்யாணம் பண்ணிருக்கான். உனக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்துருக்கான். அவன் மனச புரிஞ்சி நடந்துக்க. இனி, அவனோட சுகதுக்கங்களில் உனக்கு பெரிய பங்கு இருக்கு. புரிஞ்சி நடந்துக்கம்மா” என்று வாஞ்சையுடன் அவள் தலைகோதி நெற்றியில் முத்தமிட்டாள்.

"சரி! ஷக்தி கார்ல வெயிட் பண்றான் போயிட்டு வா" என்று அனுப்பி வைத்தார்.
 
Top