• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
"புடவையை சொர்ணாக்கா மாதிரி கட்டினா கீழ விழுந்து கிடக்கவேண்டியதுதான்".

அவனின் வாய் அவளைத் திட்டிக் கொண்டே இருந்தாலும் சிறிது நேரத்திற்கு அவனின் கண்கள் தடுமாறி நின்றது. அவளின் வெற்றிடையை பார்த்து.

அந்த தடுமாற்றத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவளுக்கு உதவி செய்ய நெருங்க.

அவனை மிண்டும் தவறாக புரிந்துகொண்டு முகத்தை வேறு புறம் பார்க்க.... அவள் திரும்பியது ஏதோ வெட்கத்தில் தான்....அர்ஜுன் புரிந்து கொண்டது என்னவோ வேறுவிதமாக.

இந்த முறையும் அவன் கோபம் அவனின் கண்களை மறைத்தது.

அவளின் "பொறுக்கி'என்ற வார்த்தையின் நினைவு ஒருபக்கம் நினைவில் வர.....

அது ஏதோ தெரியாம சொல்லிட்டா அதற்க்காக இப்பொது அவளுக்கு உதவி செய்யாமல் இருக்க முடியாது என்று அவனின் இன்னொரு மனம் அவனிடம் சாராவிற்காக வாதாடியது .

"ஏய் பொறுக்கி ஹெல்ப் பண்ணு டா....என்றாள் வலி பொறுக்க முடியாமல். அவள் வாய்வழியாக வேறு இப்போ கேட்டுவிட்டது அந்த வார்த்தை அர்ஜுனின் செவிகளை சென்றடைந்த மறுநோடி.

"நம்பிக்கை இல்லாத பொறுக்கியை எந்த ....... கல்யாணம் செஞ்சிகிட்ட " என்றான் ஆக்ரோஷமாக".

"பிடிச்சிதன் லவ் செய்தேன். விட்டு போய்டுவ னு தெரிந்து இருந்தால் நான் கொஞ்சம் உஷாராகி இருப்பேன்" என்றாள் வெறுப்போடு.

"அப்போ அந்த பொறுகி பிடித்தது இப்ப இந்த பொறுக்கி புடிக்கலையா".

நான் அவள் பேச்சை கேட்கப்போவதில்லை... அதேபோல் சாரா சொல்வதும் எனக்கு புரிய போறது இல்ல.....அவன் மனதுக்கு புரிந்தது அறிவுக்கு சென்றடையவில்லை.

அவனையும் மீறி கோபத்தில் வார்த்தையை விட்டான்.

"அந்த பொண்ணை கட்டி இருந்தால் நிம்மதியா இருந்திருக்கலாம் அவள் என்னை தாங்கி இருந்திருப்ப. இவள் என்னை வதைக்கிறாள்" என்றான் அவளை வெறுப்பு ஏற்ற.

இதைக்கேட்டதும் சாராவிற்கு ஏகத்துக்கு கோபம் வந்தது. தன்னிடத்தில் வேறுஒருவளை வைத்து பேசும் இவனது நாவை இழுத்து வைத்து நறுக்கும் அளவிற்கு கோபம் பெருகியது சாராவிற்கு.

"நீ ஒழுங்கு மாதிரி பேசிட்டு இருக்காத" சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தாள்...வலியை பொறுத்துக்கொண்டு... கால்களை தாங்கியவாறு...

நானும் எதை நினைச்சாலே இப்படிதான் ஆகின்றது... ஆமா இவரு சொல்றதும் சரிதான் வேற ஒரு பொண்ணை கல்யாணம் செய்து இருந்தாள் அர்ஜுனின் வாழ்கை மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.

தாங்கி தாங்கி மெதுவா நடந்து போய் சோபாவில் உட்கார்ந்து கைப்பேசியில் ஏதோ பார்க்க ஆரம்பித்தாள்.

"இங்க வந்து படுத்துக்கோஅங்க படுத்த வழி அதிகமாக ஆகிடும்.... காலையில மருத்துவமனை போகலாம் பெருசா ஒன்னும் இல்லை என்று நினைக்கின்றேன் எதற்கும் ஒரு செக் பண்ணிக்கலாம்." என்றான் அக்கறையாக.

வலியால் அவள் முகம் சுருங்கியது எதுவும் பேசவில்லை சாரா பார்வை போனிலேயே எதையோ மேய்ந்தது .

அர்ஜுன் கோவமாக "இங்க வரப் போறியா இல்லையா."

"முடியாது போடா..." வாய் மட்டும் அசைத்தாள்.

"இங்க வான்னு சொன்னேன்.... ஆக்டிங் பண்ணிட்டு இருக்காத....எழுந்து வா".

எவ்வளவு நேரமா பொறுமையா இருப்பது போல் நடிப்பது..... "ஆமாம் நான் ஆக்டிங் தான் பண்றேன்".

"எனக்கு சுளுக்கு இல்லை போதுமா ஆக்டிங் பண்ணிட்டு இருந்தேன் போதுமா...." கோவத்தில் கத்தினாள்.

"என்னிடம் கத்தி பேசாதே.... " சுட்டு விரலை கொண்டு மிரட்டினான்....

முகத்துக்கு நேராக அவன் விரல் வருகையில்... அவன் விரலை நன்கு கடித்து வைத்தாள்......அவனின் பொறுமை எங்கோ காற்றில் பறந்தது....ஒரு கணநேரத்தில் நடந்ததை நினைத்து கோபம் பன்மடங்கு எகிறியது....

அச்சோ அர்ஜுன் போச்சா.... "இரத்தம் வருது பாரு..." அவன் விரலில் ஜாம் இருபது போல அவன் விரலை வாயில் வைத்து சுவைத்தாள்.

டேஸ்ட் அருமையோ அருமை என்று ... அவள் கூறவும்.அவன் கோபமா இருக்கான். சாராவோ அவனை வெறுப்பேற்ற கங்கணம் கட்டி சுற்றிக்கொண்டு இருந்தாள்.

" இரத்த சுவையே சுவை..."

அர்ஜுனை பார்த்தவாறு கூறினாள்.

அவனின் கோவத்தை பார்த்து அந்த இடத்தை விட்டு ஓட பார்த்தாள் ... ஆனால் அவள் கால்கள் ஒத்துழைக்கவில்லை. வலியால் முனகினாள்.

மறுபடி வலியால் கத்தியவளை கைகளை பிடித்துவாரு முறைதான்.

பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "அது திடீர் ஜம் போல தெரிஞ்சது அதன் அப்படி செஞ்சிட்டேன் "என்று தன்னிலை விளக்கம் வேறு குடுத்தால்.

"உன்னை.. அப்படியே என்ன சவடிதுவிடு... நிறைய இரத்தம் கிடைக்கும். குடித்து சந்தோசமா இரு" என்றான் அர்ஜுன்.

இவ எதாவது செய்து அவனை சகாஜ நிலைக்கு கொண்டு வரும் முயற்சி தோற்று போனது மட்டும் இல்லாமல்.... அவள் அவனை சாகடிக்க நினைக்கிறாள் என்று கூறிய அடுத்த நொடி...அவளின் கைகள் அவனின் முரட்டு கன்னத்தை பதம் பார்த்தது...

அவள் கேள்வி கேட்க தொடங்கினாள்.

"செஞ்ச தப்பு எல்லாம் நான்தான் போதுமா. இப்போ உனக்கு சந்தோசம். எதோ வார்த்தை தெரியாம விட்டுட்டேன் அதவே பிடிச்சிட்டு தொங்கிட்டு இரு கடைசிவரை....." இவள் பேசிக்கொண்டே போக.

"அந்த பொண்ணு அவளோ அம்சமா இருந்தது எங்கே சென்றாள் என்று தெரியவில்லை" என்றான் சோகமாக... அவளை வெறுப்பேற்றும் நோக்கத்தோடு.

"இப்போ அந்த பெண் இருந்து இருந்த ஜாலியா கல்யாணம் செய்து சிறப்பாக முதலிரவு கொண்டாடி இருந்து இருப்பேன் " என்றான் அர்ஜுன் ஏக்கமாக.

நான் பேசுறது காதில் விலாது இவனுக்கு இவன் பிரச்சினைதான் முக்கியம்.

இதை அவன் கூரிமுடிக்கும் முன்பே அவன் ஆடையை இறுகி பிடித்து....

"டேய் இன்னும் ஒருமுறை இதை சொல்லி பாரு அப்போ நான் யார் என்று உனக்கு புரிய வைக்கிறேன்" என்றாள் சாரா ஆக்ரோஷமாக.

அவள் சுளுக்கை மறந்து செய்த செயலால்... வலி பொருகா முடியாமல் மீண்டும் அர்ஜுன் மீது சாய்ந்தாள்.

அவள் இருந்த நிலையை பார்த்து "நான் யாரையும் இப்படி தான போய் ஒரசி பழகம் இல்லை" என்று சீண்டினான்.

எந்திரிக்க பார்கிறாள்...முடியவில்லை

"ப்ளீஸ் அர்ஜுன் வலிக்குது ஹெல்ப் பண்ணுடா...."

"நான் உனக்கு ஹெல்ப் பண்ணா என்ன தருவாய்?"

"உனக்கு என்ன வேணும் சொல்லு நான் கண்டிப்பாக தரேன் வலி பொறுக்க முடியல... "அர்ஜுனிடம் வாக்கு கொடுத்துவிட்டாள்.

"நீ போயிடு என்னை விட்டு..."

"என்னால் உன்னை விட்டு போக முடியாது அர்ஜுன்..." என்றாள் வலியை பொறுக்க முடியாமல்.

"நேராக சொல்றேன் எனக்கு உன்கூட இருக்கணும் எனக்கு தோணல என்ன பத்தி எவ்வளவு கீழ நினைச்சுட்டு இருக்கின்ற பொண்ணு கூட என்னால் வாழ்கை வாழ முடியாது" என்றான் அர்ஜுன்.

"நீ உன் வீட்டுக்கு போகலாம், உங்க வீட்டுல என்ன நீ வேற எங்கயாவது போலாம் திரும்ப என்னோட வீட்டுக்கு வரக்கூடாது".

அவளை அர்ஜுனிடம் எதும் பேச முடியவில்லை. ஒரு பக்கம் வலி இன்னொரு பக்கம் இவனின் அவ்வார்த்தை அவளை வதைக்க

சாரா இது தாங்கிக்கொள்ள முடியவில்லை எதுக்கு இந்த வாழ்க்கை.... நீ இல்லாத என் வாழ்க்கையில் இனிக்குமா என்ன?

அவளின் கோபம் போய் வெறுமை சூழ்ந்தது. ஏன் ஒரு வார்த்தைக்காக இப்படி என்ன செய்கிறாய் இவ்வளவு நாள் என் மேல் வைத்திருந்த பாசம் எங்கே? என்று நினைத்துக்கொண்டு இருந்தாள்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் அலைபேசி அவளை அழைத்தது.

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி.... காலிங் ப்ரம் அக்கா...

அவளோட அக்கா கிட்ட இருந்து கால் வரும் அதிர்ச்சியாகி விட்டாள். இவள் எதற்க்காக இப்பொது.. என்ற யோசனையில்.

உயிர்ப்பித்து காதில் வைத்து முன்னே "சாரி சாரி சாரி சாரி சாரி அவர் காதலுக்கு ஹெல்ப் செய்தது இங்க நீ மாட்டிக்கிட்டே என்று சொல்லிட்ட நான் ரொம்ப வருத்தம் ஆக இருந்தேன்.... இருந்தாலும் உனக்கு ரொம்ப பிடித்தவர்களை கல்யாணம் செய்துகொண்டாய். அதுவரைக்கும் எனக்கு ஹாப்பி சாரா" என்று அவளது அக்கா மூச்சி விடாமல் பேசிக்கொண்டு இருந்தாள்.

"சரி நான் அப்புறம் ஒரு நாள் வீட்டுக்கு வரேன் நான் உங்களை தொந்தரவு செய்கிறேன் நினைக்கிறேன் சரி சரி பாய் பாய் பாய்....." என்று அவளை பேசிட்டு அவளே வச்சிட்டா...

இது பேசிட்டு இருக்கும் சமயம் பார்த்து சுழிக்கு எடுத்து விட்டு இருந்தான்.. அவள் போன் வைக்கவும் இவள் கத்தவும் சரியாக இருந்தது.

"இப்போது சரியா போச்சா சூப்பர் மேஜிக் எல்லாம் செய்கிறாய் அர்ஜுன்".

அவள் பாராட்டு எல்லாம் அவன் காதில் எங்கு சென்றடைந்தது "சரி எப்ப கிளம்புறேன்?"

"அர்ஜுன் அக்கா இப்போதுதான் விவரம் சொன்னாள்" என்றாள் தயங்கிக்கொண்டு.

"எப்போ கிளம்பறே"என்றான் மீண்டும்.

"சாரி உங்களை புரிஞ்சுக்கம்மா பண்ணிட்டேன் அதற்க்காக இந்த தண்டனை ரொம்ப அதிகம்".

"காதல் வாழ்க்கையில் நம்பிக்கை ரொம்ப முக்கியம் சாரா எப்பவுமே உனக்கு என்மீது நம்பிக்கை இல்லை".

"அர்ஜுன் வேண்டாம் பேபி ஒரு வார்த்தைக்காக இந்த தண்டனை இரண்டு பேருக்குமே ரொம்ப அதிகம்".

இவள் பேசியது எதுவும் அவன் காதில் விழவே இல்லை.

"உனக்கு இது சாதாரணமான விஷயமா கூட இருக்கலாம்... உனக்கே தெரியும் எனக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம்".

"முன்னாடியே சொல்லி இருந்தால் இவை எதுவும் நடந்து இருக்காது அர்ஜுன்" அவனை குற்றம் சொன்னாள்.

நான் சொல்ல வரும்போது தான் எனக்கு வந்து முதல் இரவு தள்ளி வைத்தார்கள்.

ஏனோ நான் சமாதானப்படுத்த எந்த எல்லைக்கும் போவேன்னு...நான் வந்து உன்னை சமாதானப்படுத்த எக்கு தப்பா ஏதாவது ஆகியிருந்தால்.... வீட்ல இருக்க எல்லாரையும் ஃபேஸ் பண்றது ரொம்ப கஷ்டம் ரிலேடிவ் நிறைய பேர் இருந்தார்கள்.... நான் என்ன சொல்றது புரியுது நினைக்கிறேன்.

"உன்ன நான் செலக்ட் பண்ணது காரணம்.... பிடிச்சு இருந்தது உன்னோட ஆட்டிட்யூட் இப்போது நடந்துகிட்டு எனக்கு சுத்தமா பிடிக்கல. இதுதான் உன்னோட ஒரிஜினாலிட்டி னு நான் நினைக்கிறேன் என்னோட கனிப்பு தவறாக போயிவிட்டது" என்று சலித்தவன்,

நீ போயிடு நீ இருந்தா நான் சந்தோஷமாக இருக்க மாட்டேன்".

"ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் யோசிச்சு பார்க்கலாம் இது வாழ்கை விளையாட்டு இல்லை" என்றாள் சாரா.

சாரா அவனை விடுவதாக இல்லை.

" ஓகே நீ டைம் எடுத்துக்கோ மார்னிங் சொல்லு எங்க வீட்ல இருக்க கூடாது".

"எப்போவும் இந்த முடிவில் இருந்து மாற்றம் அடையாத அர்ஜுன்" என்றாள் ஏக்கமாக.

அவன் சிறு தலையசைத்து தலையணையில் சாய்ந்து படுத்தான் பக்கத்து அறையில்.

நீங்க வரதுக்கு வரைக்கும் இந்த ரூமை உபயோகம் செய்துகோ பக்கத்தில் ரூம் யூஸ் பண்ணிக்கிறேன் இந்த டேபிள் ல ஆயில்மெண்ட் இருக்கு அதை ஆப்பிளை செஞ்சுக்கோ இன்னும் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ.

"இவ்வளவு அக்கறை என் மேல் வைத்துவிட்டு எதுக்கு இந்த பிரிவு..."அவன் முகம் பார்க்காமல் சாரா கேட்க.

"ஏதாவது வேணும் என்றால் கேளு நீங்க இப்போது என்னோட விருந்தாளி" என்றான்... உன்மேல் அக்காரரோ இல்லை நீ எனக்கு மூன்றாம் மனிதன் என்பது போல இருந்தது அந்த பதில்.

"இப்போ நீங்க என்னோட விருந்தாளியை நான்தான் பாத்துக் கொள்ளவேண்டும்" என்றான்.

"அவ்ளோதான் அர்ஜுன் நமக்குள்ளே..." ஏக்கத்தோடு சாரா அவனை பார்க்க... "லவ் செய்த உன்னை விட கூடாது நினைத்த நான்.... என் கணவனை நான் விட்டு விடுவேன் என்று நீ நினைக்கிறாயா? "

"உனக்கு பிடிவாதமும் இருக்கலாம்... உன்னை விட பல மடங்கு அதிகமா எனக்கு இருக்கு" என்றான் அர்ஜுன்.

என்னோட பிடிவாதம் பத்தி உனக்கு தெரியும் சரோ என்பது போலாம் இருந்தது அவனது பேச்சி.

"என்ன நம்பாதவர் கூட என்னால வாழ்க்கை முழுவதும் பொறுத்துக்கொண்டு தான் இருக்க என்னால் முடியாது இதுதான் என்னோட ஃபைனல் ஸ்டேட்மெண்ட்" என்று அந்த பேச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

சிறிது இடைவெளிவிட்டு.... அவனைநோக்கி "அர்ஜுன் நான் போய்டுறேன் " என்றாள்.

அவளால் அவளுடைய வீட்டிற்கு கூட செல்ல முடியாது நிலை. ஏனென்றால் இவள் வளர்ப்பு மகள்.

இப்போ அவளது வீட்டிற்கு சென்றாலும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள், அவர்களுக்கு பாரமாக இருக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

இருந்தாலும் இத்தனை நாட்கள் அர்ஜுனுக்கு சிரமம் கொடுத்தது போதும் இனியும் வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.

வேறு ஏதாவது ஒரு வழி தான் யோசிக்க வேண்டும். இருவருக்கும் தூங்கா இரவானது..

அடுத்த நாள் காலையில்... சாரா அதிகமாக எந்தப் பொருட்களும் எடுத்து வரவில்லை இரண்டு செட் ஆடை மட்டும் எடுத்து வந்திருந்தாள் வைத்த அனைத்து ஆடைகளையும் அவள் பையில் நிரப்பிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள்.

லக்கேஜ் தூக்குற வேலை மிச்சம் அவசரக் கல்யாணம் அவளுக்கு அவளே பேசிக்கொண்டு சிரிக்கும் நிலையை என்னவென்று சொல்வது. ஒரு பெருமூச்சோடு வரவேற்பு அறையை அடைந்தாள்.

அத்தை நான் கிளம்புறேன் அவரை எனக்கு பிடிக்கவில்லை.

உங்க பையனுக்கு அதேமாதிரி விருப்பமில்லை இந்த திருமணத்தில். உங்க பையனுக்கு கல்யாணம் அகவில்லையென்று நினைத்து கொள்ளுங்கள்" என்றாள் மனதை கல்லாக்கி கொண்டு.

"அவருக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைங்க" சொல்லி முடிக்கும் முன்பு ஏதோ ஒன்று அவளது மனதையும் குரலையும் சேர்த்து அடைத்தது.

அர்ஜுனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசல் வரை சென்று திரும்பி அவனை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு சென்றாள்..

சாரி சாரி அர்ஜுன் தேங்க்யூ நான் உன்னை எப்பவும் மறக்க மாட்டேன் நான் உன்னோட மனைவி..... அப்படி என்ற உரிமையில் நான் இனிமேல் நடந்துகொள்ள மாட்டேன் நான் பேசியது தவறுதான் உன்னை நம்பாமல் விட்டதும் கூட தவறு தான். அதற்காக நீ செய்தாது அனைத்தும் சரி என்று ஒருபோதும் ஆகிவிடாது என்பது போல இருந்தது அவளது பார்வை, அவள் கண்கள் ஆயிரம் மொழி பேசியது நீ மட்டும் தான் என்று நினைத்தேன்.

என்னை ஏன் பாதியிலே.... திரும்ப ஒரு அடிப்பட்ட பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள்.

'நான் தொலைந்தாலும் உனக்கு கவலை இருக்காது....'

இவ்வாறு யோசித்துக்கொண்டே நடந்து சென்றாள் பேருந்து நிலையத்தை நோக்கி.

அவள் கிளம்பிய சிறிது நேரத்தில் இவனும் தயாராகி அவனின் அலுவலகத்துக்கு சென்றான். அவன் அங்கு வந்து பார்த்தது என்னவோ சாராவை தான்.

'இவள் இங்கே என்ன செய்துகொண்டு இருக்கா..'

அவளோ அவன் வந்ததைக் கூட கவனிக்காமல் கால் மேல் கால் போட்டு சுழற் நாற்காலியில் சுற்றிக் விளையாடி கொண்டு இருந்தாள்.

வழியில் இருந்த நிம்மதியை இவள் பார்த்ததும் எங்கோ தூரம் பயணித்து சென்றுவிட்டது.

ஜீரணிக்க முடியவில்லை..... கையில் வைத்திருந்த கார் சாவியை அவள் மீது தூக்கி எறிந்தான்.

இது ரெண்டும் திருந்த போறதெல்லாம் திருப்பி அடிச்சுக்க போறாங்க...

நெக்ஸ்ட் சண்டை பார்க்க யார் யாரெல்லாம் வரீங்க....?
 
Top