இன்பாவின் மனநிலையை உணர்ந்த போதும், வசந்தனுக்கு அவளை அங்கே தங்க வைப்பது எப்படி என்பது தான் விளங்கவில்லை! அவளது வீட்டினரிடம் பொய் சொல்வது அவனுக்கு சரியாகப்படவில்லை!
இன்பா கண்ணீருடன் அப்படியே அமர்ந்திருந்தாள்!
வசந்தனுக்கு அவளை அப்படிப் பார்க்க கஷ்டமாக இருந்தது! அவர்களது காதல் நிகிலாவுக்கு தெரியாது! இப்போது அதை அவள் அறியும் நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தான்! கூடவே அதை இன்பாவே சொல்வது தான் சரியாக இருக்கும் என்று எண்ணினான்!
"இன்பா, இந்த நிமிஷம் வரை, உங்க விசயம் நிகிலாவுக்கு தெரியாதுமா! உனக்காகத்தான் சொல்லவில்லை! இனி மறைக்க முடியாது என்று நினைக்கிறேன்! அதனால நீயே அவக்கிட்டே விஷயத்தை சொல்லிவிடு! இதனால எங்களுக்குள் ஒருவேளை விரிசல் வரலாம்! அதை பிறகு பார்க்கலாம்! நீ இப்போ அவகிட்டே சொல்லிவிட்டு, ஃபோனை என்கிட்டே கொடு" என்று விலகிப் போய் நின்று கொண்டான்!
இன்பாவிற்கு, மிகுந்த தயக்கம் தான்! ஆனால், வேறு வழி இல்லை என்று புரிந்தது! நிகிலா நல்லவள், அவளுக்கு உதவி செய்வாளே தவிர உபத்திரவம் செய்ய மாட்டாள்! அவளிடம் நம்பி சொல்லலாம்! அவளது எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தாள்!
"சொல்லுப்பா, இன்பா! எங்கே இருக்கிறே? எங்க வீட்டுக்கு நீ வர்றேன்னு சொல்லியிருந்தியே? வர்றே தானே?" என்றாள்!
"அது பத்தி சொல்லத்தான் கூப்பிட்டேன் நிகில்!" என்றாள் இன்பா!
"என்னாச்சு இன்பா? ஏன் உன் குரல் ஒரு மாதிரியாக இருக்கு! உடம்புக்கு முடியலையாப்பா?"
"நா..நான் நல்லாதான் இருக்கிறேன் நிகில், உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன்! நீ என்ன நிலைமை வந்தாலும், அதை யார்கிட்டேயும் சொல்லக்கூடாது! பிராமிஸ் பண்ணுப்பா!" என்ற இன்பாவின் குரல் லேசாக நடுங்கியது.
"என்னப்பா பீடிகை எல்லாம் ரொம்ப பலமாக இருக்கு! அப்படி அது என்ன பெரிய ராஜ ரகசியமா?" என்று கிண்டல் செய்த போதும்,"ஓகேப்பா, பிராமிஸ்,என் மூலமாக யாருக்கும் இந்த விஷயம் போகாது! சரி என்ன விசயம் அது?"என்ற நிகிலாவின் குரலில் எப்போதும் இல்லாத ஒருவித உற்சாகம் தெரிந்தது! அந்த நிலையிலும் இன்பாவிற்கு தெரிந்தது!
"நான் ஒருத்தரை விரும்புகிறேன் நிகில்! "
"அட்ரா சக்கை! நீயும் சிக்கிட்டியா? யார் அந்த லக்கி மேன்?" என்றாள் உற்சாகமாக
"அவர், உனக்கும் தெரிஞ்சவர் தான்!"
நிகிலாவுக்கு திக்கென்றது! எனக்கும் தெரிஞ்சவர் என்றால்.. அவளால் நினைக்கக்கூட முடியவில்லை! கேட்கவும் பயமாக இருந்தது! "யா..யாருன்னு சொல்லுப்பா"
"கேசவ், ரிஷி கேசவ், வசந்த் அண்ணா பிரண்ட்!"
நிகிலாவுக்கு அவள் சொன்ன பிறகே மூச்சு சீராயிற்று! "ஹே! சூப்பர்ப்பா உனக்கு அவர் நல்ல பொருத்தம் தான்! ஆமா எப்ப இருந்து ?"
"அது.. கோவையில் இருந்தப்போவே!"
"அடிப்பாவி! சரியான கல்லுளிமங்கினி தான் ! சரி இப்ப மேட்டருக்கு வா! இவ்வளவு நாள் மறைச்சுட்டு, இப்ப திடீர்னு ஏன் என்கிட்டே சொல்றே இன்பா?"
விம்மல் வெடிக்க, மேலே பேச முடியாது, இன்பா அழுகையில் குலுங்க, சற்று தூரத்தில் நின்றிருந்த வசந்தன் அவளைப் பார்த்துவிட்டு ஓடி வந்தான்!
ஆனால் அதற்குள்ளாக, "ஏய்.. என்னப்பா ஆச்சு இன்பா? எதுக்கு அழறே? அவர் உன்னை ஏமாத்திட்டாரா? ப்ளீஸ் விஷயம் என்னான்னு சொல்லுப்பா!" பதற்றமாக கேட்டாள் நிகிலா.
இன்பா சுதாரித்துக் கொண்டு," சே..சே.. அப்படி ஏதும் இல்லைப்பா! நானும் அவரும் பைக்கில் வரும்போது விபத்து ஏற்பட்டுடுச்சு! இப்போ அவரை ஐசகயூவில் வச்சிருக்காங்க! இன்னும் அவருக்கு நினைவு திரும்பவில்லை! டாக்டர் கூட நானும் ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது இருந்தேன்! அவரோட உயிருக்கு ஆபத்து இல்லை! டாக்டர் 6மணி நேரம் கெடு கொடுத்திருக்கார்! ஆனால் உடனடியாக நினைவு திரும்பாததால் அவர் கோமாவுக்கு போயிடுவாரோ என்று எனக்கு பயமாக இருக்கிறது!"
"பயப்படாதே இன்பா, அவருக்கு ஒன்றும் ஆகாது! எவ்வளவு நல்ல மனிதர் என்று குற்றாலம் போனப்போ பார்த்தேனே! சொல்லு உனக்கு நான் என்ன உதவி செய்யணும்?"
"எங்க விஷயம், நம்ம ரிசல்ட் வர்ற வரை யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைச்சோம்! ஆனால் இப்ப வேற வழியில்லை! அதனால வசந்த் அண்ணாக்கு போன் பண்ணி சொன்னேன்! அவங்க வந்துட்டாங்க! உன்கிட்டே வீட்டுக்கு வர்றேன்னு சொன்னதே மறந்துட்டேன்! இப்பத்தான் ஞாபகம் வந்துச்சு நீ வெயிட் பண்ணிட்டு இருப்பியேன்னு! அதான் கால் பண்ணி விசயத்தை சொலறேன்பா! அப்புறம் அவருக்கு நினைவு திரும்பற வரை என்னால இங்கேயிருந்து நகர முடியாது நிகில்! அதனால நீ தான் எனக்கு ஒரு ஐடியா கொடுக்கணும்!"
"உன்னுடைய நிலைமை எனக்கு புரியுது இன்பா, வெயிட் நான் யோசிக்கிறேன்! ஆ..ங் ! ஐடியா கிடைச்சிடுச்சு," நீ எங்க வீட்டுக்கு வந்து பேசிட்டு இருந்தப்போ," இந்தப்பக்கம், உள்ள தியேட்டரில் நல்ல படம் வந்திருக்கு, இரண்டு பேரும் போயிட்டு, திரும்ப, உங்க வீட்டுக்கு வந்துடறதா சொல்லுவோம்,ஓகேவா!?"
இன்பாவின் முகம் ஒருகணம் மலர்ந்து மீண்டும் சோர்ந்தது! "உன் அப்பா இருப்பாரே? அவரை வச்சுட்டு எப்படி இந்த திட்டம் சரிப்படும்?"
"ஓ! நான் அதை உன்கிட்டே சொல்லவில்லையே! அப்பா மதியமே அவசர வேலை என்று டெல்லி கிளம்பிப் போயிருக்கிறார்! அதனால தான் நான் இந்த ஐடியா சொன்னேன்! சரி, நீ அங்கேயே இரு! லொகேஷன் அனுப்புப்பா! நான் கிளம்பி வர்றேன்! அங்கே இருந்து உங்க வீட்டுக்கு கால் பண்ணி சொல்லிடலாம்! சரிதானா?"
"சரிப்பா, உன்கிட்டே அண்ணா பேசணுமாம்!" என்ற இன்பா, ஃபோனை வசந்தனிடம் தந்துவிட்டு நிம்மதியாக சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டாள்!
"நிலா, உன் அப்பா வீட்டில் இல்லையா? இன்பாக்கிட்டே என்ன சொன்னே?"
"நானே உங்களுக்கு கால் பண்ணனும்னு இருந்தேன் சந்தன்! அப்பாவுக்கு டில்லியில் ஏதோ அவசரமாக வேலை என்று மதியமே கிளம்பிவிட்டார்!" என்றவள்"அவர் ஊருக்கு போயிட்டதால், எனக்கு வழக்கமாக துணைக்கு வருகிற பாட்டியும் இரண்டு நாள் முன்னாடி ஊருக்கு போனவங்க இன்னிக்கு வர்றதா சொல்லியிருந்தாங்க, ஆனால், அவங்க வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று சொன்னாங்க! அதனால இன்பா வந்ததும், அவளை அழைச்சிட்டு அவங்க வீட்டுக்குப் போகலாம் என்று நினைச்சேன் சந்தன்! ஆனால் இப்போ இன்பா விஷயத்தை சொன்னதும், ரொம்ப கஷடமாகிடுச்சு!" என்ற நிகிலா தனது திட்டத்தை அவனிடம் சொன்னாள்!
"நல்ல ஐடியா நிலா! ராத்திரி இரண்டு பேரும் வீட்டுக்கு போயிடலாம்! சரி நீ கிளம்பி வா! நான் டிக்கெட் புக் பண்றேன்!" என்றான் வசந்தன்!
"சந்தன், என்ன சொல்றீங்க ? நிஜமா டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா? எதுக்கு? அது அவங்க வீட்டுக்கு சொல்றதுக்கு தான்பா!" என்று படபடத்தாள்
"அறிவுக் கொழுந்தே, பொய் சொன்னா பொருத்தமா சொல்லணும்! இன்பா போன்ல டிக்கெட் புக் பண்ணிடலாம்! ஆனால் போகப் போறது இல்லை! ஒகே வா! ஒரு வேளை எந்த தியேட்டர் ? என்ன படம் என்று யாரும் கேட்டால் முழிக்கக்கூடாதுல்ல? நாங்களும் யோசிப்போம்ல!" என்றான்
"ம்ம், நீங்க சொல்றதும் ரொம்ப சரிதான் சந்தன்! நான் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை! சரி நான் வரும்போது ஏதும் எடுத்துட்டு வரணுமா? வீட்டில் ஸ்நாக்ஸ் இருக்கு! கூடவே டீயும் போட்டு கொண்டு வர்றேன்!"
" டீ எல்லாம் இங்கேயே வாங்கிக்கலாம் நிலா! ஸ்நாக்ஸ் மட்டும் கொண்டுவா போதும்! பார்த்துவா முக்கியமா ஹெல்மட் போட்டுட்டு வா!" என்றான்.
"ஷ்யூர் ! ஷ்யூர்! டோன்ட் வொர்ரி மை பாய்!" என்று ஃபோனை வைத்துவிட்டாள்!
என்கிட்டே தான் வாய்! அவ அப்பாவைப் பார்த்தால் கம் போட்டு ஒட்டின மாதிரி இருப்பா! என்று தன்னவளை சிலாகித்துக் கொண்டான்!
🩵
🩵
இன்பாவின் வீட்டில், விஷயத்தை சொல்லவும் முதலில் தயங்கினார்கள்!
"ப்ளீஸ் பாட்டி, அம்மா! எனக்கு தெரியும் நீங்க ஸ்பீக்கரில் போட்டிருப்பீங்கனு! என்ற இன்பா, " நிகில், ஊரில் இருந்து வந்ததில் இருந்து எங்கேயும் போகாமல் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறாள் ! அவள் அப்பா ஊரில் இல்லாதப்ப இப்படி வெளியே போனால் தான் உண்டு ! காலையில் அவள் வீட்டுக்கு போகட்டும் சரிதானே? நான் டிக்கெட் புக் பண்ணிட்டேன்! "
" உனக்கு வர வர ரொம்ப தைரியம் கூடிப் போச்சு இன்பா! அது நல்லதுதான்! இனிமே நீ டாக்டர் சர்வீஸ் பண்ண வேண்டும்! தனியாக நாலு இடங்களுக்கு போக வர இருக்கணும்! ஆனால் அதை ஓவர் அட்வான்டேஜ் எடுக்கப் பார்க்காதே சொல்லிட்டேன்! என்றார் சாந்தி!
"விடு சாந்தி, அவள் என்ன இன்னும் சின்ன குழந்தையா? அவளுக்கு நல்லது கெட்டது தெரியாதா என்ன? பத்திரமா போயிட்டு பத்திரமா வந்து சேருங்க பொண்ணுங்களா! காலம் ரொம்ப கெட்டுக் கிடக்குது!" என்று அனுமதி கொடுத்தார் திலகம்!
வசந்தனும் நிகிலாவும் தனித்துப் பேசக் கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்! இன்பா கண்களை மூடி ஒரு இருக்கையில் சாய்ந்திந்தாள்!
இந்த ஒரு நாளில் என்னவெல்லாம் நிகழ்ந்துவிட்டது என்று எண்ணம் ஓடியது! காலையில் எத்தனை மகிழ்ச்சியாக கிளம்பி மாலுக்கு சென்றாள்! அதன்பிறகு ரிஷியுடன் முதல் முறையாக பைக் சவாரி! பிறகு..? நடந்து போனதற்கு இருவரும் தான் பொறுப்பு! திருமணம் என்ற பந்தம் நிகழவில்லை எனும் போது இந்த சங்கமம் பாவம், குற்றம் என்று பார்க்கப்படுகிறது! அதுவே தாலி கட்டியபிறகு என்றால் .. அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது! என்ன செய்வது சமூகத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தானே வாழ்ந்தாக வேண்டியுள்ளது!
இன்பாவிற்கு, ரிஷி கண் விழித்துவிட்டால் போதும் என்றிருந்தது ! ஆனால் அவன் டாக்டர் சொன்ன கெடுவுக்கு முன்பாகவே கண் விழித்தபோது...?
68. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!
சென்னை
இன்று..
தங்கள் நிறுவனத்திற்கு வந்திருந்த வசந்தனோடு வெளியே கிளம்பிய ரிஷி காரை செலுத்திக் கொண்டிருப்பதை உள்ளடக்கிய பெருமூச்சுடன் பார்த்திருந்தான் வசந்தன்!
விபத்து நடந்த அந்த நாளை அவனால் மறக்கவே முடியாது! ஆனால் எந்த சலனமும் இன்றி அருகில் இருப்பவனைப் பார்க்கையில் வேதனையாக இருந்தது!
அன்று..
ரிஷிக்கு மருத்துவர் விதித்த கெடுவுக்கு முன்னதாகவே நினைவு திரும்பிவிட்டது! அவனை மானிட்டர் செய்து கொண்டிருந்த நர்ஸ் எழுந்து அவசரமாக டாக்டரை அழைத்து வர ஓடினாள்!
என்னவோ ஏதோ என்று பதறிப் போனவளாக, இன்பா உள்ளே செல்ல, அவளைத் தொடர்ந்து, வசந்தனும் நிகிலாவும் சென்றனர்! உள்ளே வந்த மருத்துவர், "ப்ளீஸ் இங்கே கூட்டம் போடாதீங்க! நான் அவரை செக்கப் பண்ணிட்டு சொல்றேன். அதுவரை வெளியே இருங்க! "என்று சற்று அழுத்தமான குரலில் சொல்ல, மூவரும் வெளியேறினர்!
அதுவரை விட்டத்திலும் , சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடி இருந்த ரிஷி அவரைப் பார்த்தான்!
"ஹலோ மிஸ்டர் ரிஷி! இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க? மயக்கம் வர்ற மாதிரி ஏதும் இருக்கிறதா?"
"நோ டாக்டர், ஐம் ஆல்ரைட்! பட் நான் இங்கே எப்படி வந்தேன்? யார் என்னை அழைத்து வந்தது? இது எந்த இடம்? "
"ரிலாக்ஸ், ரிலாக்ஸ் மிஸ்டர் ரிஷி! ஒரு பைக் ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு, மயக்கமாகிட்டீங்க என்று இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க! அநேகமாக உங்களுக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கணும்! நீ அதிகமா யோசிச்சு, ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க! ஞாபகம் வரவில்லை என்றால் விட்டுவிடுங்கள்! அது சிலருக்கு நேச்சுரலா நடக்கிறது தான்! " என்று அவனை பரிசோதித்து முடித்தவர், "வெல்! மிஸ்டர் ரிஷி யூ ஆர் 75% ஓகே! பட் நாளை வரை நீங்க இங்கே தங்கியிருக்கணும்! சில டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வரவேண்டியது இருக்கு ! அதுக்கு அப்புறமாக தான் நீங்க 100% ஃபிட் ஆகிட்டிங்களா இல்லையா என்று தெரிய வரும்! இப்ப எதையும் யோசிக்காமல் ஓய்வு எடுங்க! " என்று வெளியேறினார்!
மூவரும் மருத்துவர் பதிலுக்காக காத்திருந்தனர்!
"அவருக்கு எப்படி அடிப்பட்டது என்று நினைவில்லை என்றார்! ஆனால் ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை! இப்ப அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை! ஆனால் நாளைக்கு ரிப்போர்ட்ஸ் வந்ததும் தான் வேறு எதுவும் பிராப்ளம் இருக்கா என்று தெரிய வரும்!
"நாங்க அவனை பார்க்கலாமா டாக்டர்?"
"தனி அறைக்கு இப்ப மாத்திடுவாங்க ! அப்புறமாக போய் பாருங்க!" என்று மருத்துவர் சென்றுவிட்டார்.
வசந்தன் இரு பெண்களையும் கேண்டீனுக்கு அழைத்துப் போய் காபியும் உண்பதற்கு சிற்றுண்டியும் வாங்கித் தந்தான்! இன்பாவிற்கு காபியே தொண்டையில் அடைப்பது போல இருந்தது! !
"ப்ளீஸ், இன்பா கொஞ்சம் சாப்பிடுப்பா! அண்ணாக்கு ஒன்றும் ஆகாதுப்பா!" என்று நிகிலா அவளை வற்புறுத்தி உண்ணவும், குடிக்கவும் வைத்தாள்!
அவர்கள் திரும்பி வந்த போது, ரிஷி தனி அறைக்கு மாற்றப்பட்டிருந்தான்! இன்பாவை உள்ளே போகச் சொன்னான் வசந்தன்!
"அண்ணா, நீங்க முதலில் போங்க, நான் அடுத்து போய் பார்க்கிறேன்!" என்றாள் இன்பா!
வசந்தன் உள்ளே செல்லவும், "நிகில் .. எனக்கு பயமாக இருக்கிறதுப்பா! உனக்கு புறகிறது இல்லையா?"
நிகிலாவுக்கு இன்பாவின் நிலை புரிந்தது! மருத்துவர் சொன்ன வகையில் அவளுக்கும் உள்ளூர ஒரு அனுமானம் இருந்தது! ஆனால் அது ஒரு சதவீதம் தான் என்று தோன்றியது! இன்பா பயப்படும்படி ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பினாள்!
"இன்பா, அப்படி ஆகாதுப்பா ! நீ ஏன் இப்படி நெகடிவ்வா யோசிக்கிறாய்? நாம் மருத்துவர்கள், எப்போதும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது" என்றாள் அழுத்தமான குரலில்.
"நீ சொல்வது சரிதான் நிகில், ஆனால், என்னால என் மனதை கட்டுப்படுத்த முடியவில்லையே ! நான் என்ன செய்வேன்?" இன்பா கண்ணீர் மல்க கேட்டாள்!
"ஷ் ..ஷ்.. அழாதே இன்பா ! அதுதான் உன் அண்ணா போயிருக்காரே! வந்து நல்ல செய்திதான் சொல்வார்!" என்றவாறு அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டு முதுகை ஆறுதலாக வருடினாள்.

அறைக்குள், ரிஷி கண்களை மூடி படுத்திருந்தான்! அரவம் கேட்டு கண் விழித்தவனின் முகம் மலர்ந்தது! "டேய் வசந்த்! எனக்கு எப்படிடா அடிபட்டது? யார் இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள்?
எனக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது! இது எந்த ஏரியா?"என்று படபடத்தான் ரிஷி
"ரிலாக்ஸ் ரிஷி, பைக்கில் வரும்போது தான் விபத்து ஏற்பட்டதுடா, ஈசிஆர் ரோடு தான்! "
"நானும், நீயுமாடா? ஆமா நீ எப்போ ஃபாரின்ல இருந்து வந்தே?"
வசந்தன் துணுக்குற்றான்! இவன் என்ன கேட்கிறான்?
"ரிஷி? என்னடா கேட்கிறாய்? நான் வித்யா கல்யாணத்துக்காக கிளம்பி வந்திருக்கிறேன் என்பது உனக்கு ஞாபகம் இல்லையா?"
"வித்யாவுக்கு கல்யாணமா? டேய் அவள் படிச்சுட்டு இருக்கிறாள் என்றாயே? அதற்குள் எப்படி கல்யாணம்?"
வசந்தன் அதிர்ந்து போனான்! ரிஷிக்கு எதுவும் நினைவு இல்லையா? இல்லையே, என்னை நினைவு இருக்கிறதே! வித்யாவையும் நினைவு இருக்கிறதே! ஆனால் அவள் படித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறானே? என்னாச்சு? அவன் யோசித்துக் கொண்டிருந்த போது, இன்பாவும் நிகிலாவும் உள்ளே வந்தார்கள்!
ரிஷி அவர்களை புரியாமல் பார்த்த பார்வையில் இன்பாவின் மனது அடிவாங்கியது! அப்போதே அவளுக்கு புரிந்தும் போயிற்று! இதயத்தில் யாரோ அழுத்துவது போல வலித்தது! தொண்டை இறுகியது! கண்ணீரை அடக்க பெரும் பாடுபட்டாள்.
நிகிலாவின் கையை இறுகப் பற்றியபடி அவள் நின்றவிதமே.. வசந்தனுக்கு இன்பாவிடம் விளக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிந்தாலும் அவனுக்கும் ரொம்பவே வேதனையாக இருந்தது!
நிகிலாவும் இன்பாவுக்காக உள்ளூர வருந்தினாள்! அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!
ரிஷி அவர்களை யார் என்று கேட்குமுன்பாக, வசந்தன் முந்திக் கொண்டு,"இது நிகிலா, அவளோட தோழி இன்பசுரபி, இரண்டு பேரும் டாக்டர்ஸ்!"
"ஓ! இங்கே வேலை செய்றாங்களா?"
"இல்லை, அது பத்தி அப்புறமா சொல்றேன் ரிஷி! நீ ரெஸ்ட் எடு!" என்றதும் அவன் ஆயாசமாக கண்களை மூடிக் கொண்டான்!
இன்பா, ரிஷியை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்! அவளால் ரிஷி தன்னை மறந்துவிட்டான் என்ற விஷயத்தை ஜீரணிக்க முடியவில்லை! அப்படியே மயங்கிச் சரிந்தாள்!
அவள் கீழே விழாமல் இருவரும் தாங்கிப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தனர்!

இன்பாவின் முகம் அழுதழுது சிவந்து போயிருந்தது! வசந்தன் சற்று தூரத்தில் விலகி நின்றிருந்தான்!
"இன்பா, ப்ளீஸ் இன்னும் டாக்டர் முழு ரிப்போர்ட்ஸ் பார்த்து எக்ஸாமின் பண்ணின பிறகு அவரோட கருத்தை சொல்லவில்லை! அதற்குள்ளாக நீயே ஏன் கண்டதையும் எண்ணி வருத்திக் கொள்கிறாய்? என்று நிகிலா அதட்டினாள்!
"நிகில், எல்லாம் முடிஞ்சு போச்சு! அவர் என்னை மறந்துவிட்டார்! அது ஒரு வேளை திரும்பலாம்! திரும்பாமல் போகலாம்! இதெல்லாம் நாம் படித்தது தானே? உனக்கு நினைவிருக்கிறதா ? போன வருஷம் இதே போல ஒரு விபத்து கேஸ் வந்தது! அந்த பெண் ஒரு கல்லூரி மாணவி! அவளும் அவளது, லவ்வரும் காரில் போகும்போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேருக்கும் நல்ல அடி! அதில் அந்தப் பையனுக்கு காலில் எழும்பு முறிவு ! அந்தப் பெண்ணுக்கு தலையில், கையில் அடிபட்டிருந்தது! அந்தப் பையனுக்கு உடனடியாக நினைவு திரும்பிட்டது! ஆனால் அந்தப் பெண்ணுக்கு இரண்டு தினங்கள் நினைவே திரும்பவில்லை! கோமாவுக்கு போய்விடுவாள் என்று டீன் கூட சொன்னார்! ஞாபகமிருக்கா? ஆனால் அவளுக்கு மூன்றாம் நாள் நினைவு வந்தது! ஆனால் அவள் அந்தப் பையனை மறந்து போயிருந்தாள்! அவளுக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாக மட்டும்தான் நினைவு ! ஆனால் அவள் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவி!
டாக்டர்ஸ் அதை செலக்டிவ் அம்னிஷியா என்றார்கள்! கூட்டத்தில் என்னை பார்த்தாலே, ரிஷியின் முகம் முழுக்க சந்தோஷம் பொங்கும்! இப்ப யாரோ மாதிரி பார்க்கிறார் ! அந்தப் பார்வையை என்னால தாங்க முடியவில்லையே! நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கிறேன்?" இன்பா முகத்தை மூடிக் கொண்டு அழுகையில் குலுங்கினாள்!
மற்ற இருவரும் கூட கண்களில் நீர் வழிய, தூக்கம் தொண்டையை அடைக்க, அவளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் நின்றனர்!
வசந்தன் மணியை பார்த்தான்! பிறகு கேப் புக் செய்தான்! அவர்களிடம் வந்தான்!
"இன்பா, இப்ப கேப் வந்துவிடும், வீட்டில் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்! சீக்கிரமாக போய் முகத்தை கழுவிட்டு வா!"
நிகிலா அவளை அழைத்துப் போனாள்!
ஒரே நாளில் தன் உலகமே அழிந்து போயிற்றே என்று மனதில் வேதனையை சுமந்தபடி வீட்டிற்கு கிளம்பினாள் இன்பா!

அவர்கள் சென்றபோது.. திலகம் தூங்கப் போயிருந்தார்! சாந்தியும், சுரேந்திரனும் அவர்களுக்காக சாப்பிடாமல் காத்திருந்தனர்!
இன்பாவைப் பார்த்த பெற்றோர் துணுக்குற்றனர்! "பாப்பா, என்னாச்சுடா? அழுதியா என்ன?" என்று சாந்தி மகளின் நெற்றியில் கை வைத்து பார்த்தார்! அது நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தது!
"ஐயோ, அத்தான், உடம்பு அனலா கொதிக்குது! சீக்கிரமாக வண்டியை எடுங்க!"என்று கணவருக்கு உத்தரவிட்டவர், தானும் சென்று உடையை மாற்றிக் கொள்ள விரைந்தார்!
"ஏம்மா நிகிலா, என்ன நடந்துச்சு? நீங்க சினிமாவுக்கு தானே போறதா சொன்னீங்க? " என்றார் சுரேந்திரன்!
"ஆமாப்பா, அது பேய்ப் படம்! இன்பாக்கிட்டே எவ்வளவோ சொன்னேன்! கேட்கவில்லை, " நான் என்ன சின்ன பப்பாவா என்று என்னை அடக்கிவிட்டாள். அங்கே போனதும், பாதியில் எழுந்து வரதுக்கும் பயமாக இருந்தது! படம் விட்டதும், கேப் புக் பண்ணி வந்தோம்!"
"நல்ல பொண்ணுங்கம்மா! என்றவர் , "சரி நீ இங்கேயே இரும்மா! பாட்டி தனியா இருக்காங்க! நாங்க போய்ட்டு வந்துடுறோம்!" என்று இன்பாவை அழைத்துக் கொண்டு சென்றார்கள்!
நான்கு நாட்கள் வரை ஜுரத்தில் கிடந்தாள் இன்பா! ஐந்தாம் நாள் சாருபாலா வந்து சேர்ந்தார்!