• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

7.எந்தன் தேன் ஜவ்வே

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu

7.எந்தன் தேன் ஜவ்வே​



நல்லா இருக்கேன் அத்த..

அந்த சத்தத்தில் தான் அறைக்குள் இருந்தவள் சுவாசிக்க ஆரம்பித்தது போல் உணர்ந்தாள், இந்த குரல் அவனா அவங்களா என்னைய பத்தி என்று அவளின் பள்ளி வாழ்க்கைக்குள் நுழைந்து இருந்தது..

சரியாக அது ஒன்பதாம் வகுப்பு காலாண்டு முடிந்து இடைப்பரீட்சை நடந்து கொண்டு இருந்த சமயம் அப்போது தான் பள்ளியில் ஒரு தகவல் நோட்டீஸ் போர்ட்டில் இருப்பதாக ..

கிளாஸ் கட் அடிக்க நோட்டீஸ் போர்டில் இருப்பதை பார்க்க ஆர்வமாக செல்வது போல் ஒரு கூட்டம் செல்ல,உண்மையாகவே அங்கே இருப்பது என்ன என்று தெரிந்து கொள்ளவும் ஒரு கூட்டம் நகர்ந்தது…

மேம் நைன்த் ஏ தேன்மொழி…

எஸ் என்ன விஷயம் சித்ரா மிஸ் வரச் சொன்னாங்க..

இப்பவே வா ..

அது வந்து மிஸ் கேட்டு சொல்லட்டுங்களா..

நந்தினி மிஸ் கிளாஸ் முடிஞ்சதும் அனுப்புறேன் ன்னு சொன்னாங்கன்னு சொல்லு…

சரிங்க மிஸ் என்றவள் சென்றுவிட..

என்ன தேன்மொழி படிக்கிற எண்ணம் எதுவும் இல்லையா..

மிஸ் அப்படி எதுவும் இல்ல மிஸ்..

பின்ன என்ன இப்படி கிளாஸ் டைம் ல கூப்பிட்டு விட்டு இருக்காங்க நினைச்சேனு நோட்டீஸ் போர்ட்ல இருக்கிறதை பார்த்ததும் எதை வேணும் ன்னாலும் பண்ணு ஆனா மார்க் குறைஞ்சது அவ்வளுவுதான் என்றவர் முறைத்து விட்டு வகுப்பை தொடர


அப்ப அது டிராயிங் காம்பிட்டேஷனா டி என்றாள் மேகா..

இருக்கலாம் சித்ரா மிஸ் கூப்பிட்டா அப்ப அதுவா தான் இருக்கும்..

அப்ப உனக்கு ஜாலி தான்

அமைதியா இருடி என்றவள் பாடவேளை முடிந்ததும் கிளம்பிவிட்டார் பிரசை பிடித்து கொண்டு…


மேம் கூப்பிட்டு விட்டீர்களா?

ஆமா தேன்மொழி நோட்டீஸ் ஃபோர்ட் பார்த்தியா

இல்ல மிஸ் இப்ப தான் கிளாஸ் இருந்து வரேன்..

ஒரு டிராயிங் காம்பிட்டேஷன் நீ கண்டிப்பா கலந்துக்கனும்


ஓகே மிஸ்..


சரி நீ நோட்டீஸ் போர்டில் பாரு ஒரு ஐடியா கிடைக்கும்

சரிங்க மிஸ்..

அதை பார்த்து விட்டு அவளும் அதற்கு தயாராக வேண்டும் என்று நினைத்தவள் தேதியை பார்க்க அன்று தான் ஒரு இடை பரீட்சை இருந்தது…

மீண்டும் சித்ரா மிஸ்ஸை பார்க்க சென்று விஷயத்தை சொல்ல

நான் பர்மிசன் வாங்கி தரேன் நீ போ என்றவர் அந்த விஷயத்தை செய்தும் முடித்தும் இருந்தார்.


ஆனால் தேனுவின் கெட்ட நேரம் அந்த தகவலை கொண்டு சென்றது என்னவோ கயல் தான் ..இந்த காம்பிடேஷன் வந்ததில் இருந்து பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தார் சித்ரா மிஸ்…

கண்டிப்பா நமக்கு பரிசு கிடைக்கும் மேம் அவளுக்கு நாம் ஒத்தழைச்சா போதும் கண்டிப்பா…

என்ன செய்யனும் ன்னு சொல்லுங்க

மேம் அன்னைக்கு மிட் டேர்ம் எக்சாம் அதுக்கு அவளுக்கு எகஸ்கியூஸ் குடுத்தீங்கனா…

ஓஓஓ சரி பேசுறேன்

அவளுக்கு அப்புறம் எக்சாம் வைக்கட்டும் மேம்..

ஓகே நான் சொல்லிடுறேன் என்று அந்த பக்கம் வந்த கயலிடம் சொல்லி அனுப்ப அங்கே ஆரம்பித்தது சனி தேனுக்கு..

ஏற்கனவே பாராட்டு மழையில் நனையும் தமக்கையை அவளுக்கு பிடிக்கவில்லை..

அதோடு அவள் டிராயிங் செல்வது தந்தைக்கு தெரிந்தால் என்று பல திட்டம் இட்டு காரியத்தை சாதித்து கொண்டு தான் ஓய்ந்தாள்…

நந்தினி மிஸ்..

வா என்ன விஷயம்

மிஸ் தேன்மொழி டிராயிங் காம்பிட்டேஷன் போகனுமாம் அதனால் நீங்க உங்க பரீட்சையை தேதி மாத்தி வச்சுப்பீங்களாம் சித்ரா மிஸ் சொல்லி அனுப்பினாங்க என்றவள் பாவம் போல் நின்றாள்..

சுருக்கென கோவம் ஏன் சரி நீ கிளம்பு

தேங்க்யூ மிஸ்..

அப்பாடா விஷயத்தை இப்படி சொல்லிட்டோம் இந்த மிஸ் தனக்கு மரியாதை தரலன்னு குதிக்கிற கேஸ் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு..

நந்தினி டீச்சரிடம் தகவலை மாற்றி தந்து விட்டு அதோடு அவள் டிராயிங் சென்று வந்த பிறகு மொத்தமாக முடித்து இருந்தாள் கயல்.. எப்போது வெடிக்கும் என்று காத்து இருந்தவனுக்கு சரியாக ஒரு வாரத்தில் அந்த நாளும் வந்தது


தேனு, “மேம்..

உன்னோட பேரண்ட் வரச் சொல்லு

ஓகே மேடம் என்றவள் நடக்க போகும் விபரீதம் தெரியாமல் தந்தையை அழைத்தே வர அன்று தான் அவள் வாங்கிய பரிசை ஸ்கூலில் மேடையில் அறிவித்து சிலாகிக்க

கூடவே பரீட்சை எழுதாமல் தன்னிடம் தகவலையும் தரவில்லை மார்க் இல்லை என்று நந்தினி டீச்சர் வேலாயுதத்திடம் சொல்ல படிப்புக்கு புறம்பான எந்த திறமையும் வேலாயுதத்திற்கு உடன்பாடு இல்லை அதிலேயே ஏக கடுப்பில் தேனுவை ஸ்கூல் என்றும் பாராமல் அடி வெளுத்து எடுத்து விட்டார்…


அன்று ஆரம்பித்தது தேனுவை ஒதுக்கி வைக்கும் புள்ளி…

இதோ இத்தனை இன்னல்களும் அவளின் திறமைக்கு கிடைத்த பரிசு.

ஒன்னுமே இல்லாத உப்பு சப்பான மேட்டருக்கு தான் இவ்வளவு பிரச்சினை அன்று தான் வேலாயுதத்தை தடுக்க வந்தனர் அந்த இருவரும் பதினொன்றில் படிக்கும் அவனும் அவர்களும்..

அதில் இந்த குரலுக்கு சொந்தமானவர் யார் என்று தான் குழம்பி போய் அந்த கடந்த காலத்திற்கு சென்று திரும்பியவளை உலுக்கி கொண்டு இருந்தாள்..

என்னடி இன்னமும் மாப்ளையை பார்க்கல அதுக்குள்ள கனவா..

அங்க இருக்கிறது யார் மேகா அந்த இரண்டு பேர்ல

இன்பமாய் அதிர்ந்து இருந்தாள் மேகா..

இன்னமும் அந்த இரண்டு பேரை மறக்கலையா தேனு…

எப்படி மறப்பேன் ஒருத்தன் என்னைய காயப்படுத்தும் ன்னு தெரிஞ்சோ தெரியாமலோ மறுபடி என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைச்சவன் இன்னொருத்தர் எனக்காக அந்த இடத்தில் அசிங்கப்பட்டவர்

தேனு


கண்ணீரோடு கேட்டாள் என்கிட்டே என்ன குறை மேகா படிப்பு வரல அது மட்டும் தானே வேற எதுல நான் தவறா நடந்துகிட்டேன் அவங்க குடும்ப மானம் போற மாதிரி நான் என்ன செஞ்சுட்டேனு என்னைய தினம் தினம் ஒதுக்கினாங்க மேகா…

அண்ணா கல்யாணம் ஆனா அண்ணி வீட்டு ஆட்கள் என்னைய எப்படி தெரியுமா பார்த்தாங்க அன்னைக்கு புழுவை விட கேவலமா நான் ஆகிட்டேன் அந்த கல்யாணத்துக்கு கூட நான் சாதாரண சுடி போட்டு இருந்தேன் டி

தேனு விடு டி


என்னால் முடியல மேகா நான் அண்ணா கல்யாணத்தில் ஒரு போட்டோ ல கூட இல்லடி அந்த அளவுக்கு நான் அந்த குடும்பத்தில் வேண்டாதவளா போய்ட்டேன் அதுக்கு அப்புறம் எதுலையுமே நான் இல்லாம போய்ட்டேன் இதுக்கு மொத்தமா நான் அன்னைக்கு போய் சேர்ந்து இருக்கலாமா மேகா அவர் என்னைய பாதுகாத்து இருக்க வேண்டாம் அப்படி போய் இருந்தா கூட அந்த வீட்டில் நடு ஹால்ல எனக்குன்னு ஒரு இடம் இருந்து இருக்கும்.

தேனு என்ன பேச்சு டி இது உனக்காக ஒரு வாழ்க்கை இருக்கு உன்னையே நீ விரும்பு தேனு,வாழ்க்கையில் அது தான் முதல்ல மத்தவங்க உன்னையே விரும்ப ஆரம்ப புள்ளியே உன்னையே நீ விரும்பனும் அதே நேரம் உன்னால முடியும் ன்னு நிமிர்ந்து நிற்கனும்.


என்னால முடியும் ன்னு நான் நிமிர்ந்தாலும் அதுக்கான வழியை தடைபடுத்தும் போது எங்கடி போகட்டும்


சரி விட்டு தொலை இந்த நரகத்தில் இருந்து உனக்கு விடுதலை தான் இனி


அப்படின்னு நாம் நினைக்கலாம் ஆனா காலம் என்ன நினைக்குதுன்னு யாருக்கு தெரியும்..

காலமும் நேரமும் நாம் முடிவு பண்ணலாம் தேனு…

ப்ச் நீ வேற ஏன் டி எரிய நெருப்பில் எண்ணையை ஊத்துற


தேனு


இப்ப அம்மா இப்படி சம்மதம் சொன்னதால் இதெல்லாம் பேசுறியா அவங்களை முழுசா அந்த வீட்டில் ஒரு நாள் இந்த விஷயமா பேசச் சொல்லு அவங்க அந்த பக்கம் பேசுறது சரின்னு நின்னுடுவாங்க



அதை கேட்ட பார்வதி அழுதுவிட..

விடு பார்வதி அவ மனசில் இருக்கிறதை இன்னைக்கு தான் கொட்டுறா எவ்வளவு அழுத்தம் எத்தனை நாள் கவலை அவளை பேச விட்டா தானே லேசா இருப்பா..

சரி தான் அம்மா அவ சொல்லுற மாதிரி இத்தனை வருஷமா நான் அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி தானே இருந்து இருக்கேன்..

அது அவளுக்கு எவ்வளவு வேதனையை குடுத்து இருக்கும் நான் ஒரு வார்த்தை என்ன ஏதுன்னு கேட்டு இருந்து இருக்கலாம் தப்பு எல்லாம் என் மேல் தான்..

உண்மை தான் அத்த உங்க தப்பு தான் யார் என்ன சொல்லி இருந்தாலும் உங்க பொண்ணை நீங்க நம்பி இருக்கனும் அதை விட்டுட்டீங்க அந்த ஏக்கம் தான் அவளுக்கு

இனி அது மாதிரி நடக்காம சரி பண்ணிடுறேன் தம்பி…

……..



ஏன் தம்பி இப்படி சிரிக்குறீங்க ?


இனி நீங்க எதை செஞ்சாலும் அவ மனசு எதுக்காக இது பண்ணி இருப்பாங்க அப்படி ன்னு தான் யோசிக்கும் அவ அனுபவிச்ச வலி அப்படி..நான் இந்த இரண்டு வருஷம் அவளை தவற விட்டுட்டேன் இல்லன்னா இந்த நாலு மாசம் தேடி இருக்க மாட்டேன் இந்த கெட் டூ கெதர் அரேஞ்ச் பண்ணதே என் தேனை தேடத்தான் எல்லாரும் எனக்கு உறுதுணையாக இருந்தாங்க இந்த இரண்டு ஊரை தாண்டி இருக்க இந்த இடத்தை கண்டுபிடிக்க நாலுமாசம் ஆகிடுச்சு.


அப்பத்தா தான் ஆச்சரியமாக பார்த்தார். என் பேத்தி வாழ்வு செழித்து விடும் என்று தெம்பே வந்து விட்டது

துயமல்லி, “என்ன பேரனை இப்படி பார்க்கிற”

அப்பத்தா, “ என் பேத்தி இத்தனை வருஷம் கஷ்டப்பட்டது இந்த பலனுக்காக தான் போல என்று மாப்பிள்ளையை காட்ட

அதெல்லாம் சரி தான் என் பேரன் வந்து இவ்வளவு நேரம் ஆகுது இப்ப இவ வெளியே வருவாளா இல்லையா?

ஏன் இவ்வளவு தூரம் வந்த உன் பேரனுக்கு உள்ள போய் என் பேத்தியை பார்க்க முடியாதா?

அது சரி ஊர் வழக்கம் எல்லாம் மாறி போச்சு அப்படித்தானே..

ஆமா ஆமா எம் பேத்தி எவ்வளவு பெரிய ஆளு இதோ இங்க நிக்கிறவரு தேடி இல்ல களைச்சு போய் இருக்காங்க அப்ப அவரு தானே அந்த சந்தோஷத்தை தேடிப் போகனும் என்று இரு பாட்டிக்கும் வம்பு வளர்க்க


கண்ணீரோடு புன்னகைத்து கொண்டு இருந்தார் பார்வதி


அத்த நான் சொன்னது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் ஆனா அது தான் உண்மை அவளை தனியா விட்டுட்டீங்க இப்ப சேர்க்கிறது கொஞ்சம் கஷ்டம் அது அவளே அவளை மாத்திக்கிட்டா தான் உண்டு நீங்க அதுவரை பொறுத்து தான் ஆகனும்..

அதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்ல தம்பி அவளுக்காக வாழ் நாள் முழுக்க காத்து இருப்பேன் என் பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும்.

சரி சரி நேரத்தை கடத்த வேண்டாம் தேனை கூப்பிடலாம் என்று துயமல்லி சொல்ல

மேகா, “ அண்ணா என்று சத்தமாக அழைக்க

என்னாச்சு மேகா என்று கதவை தள்ளிக் கொண்டு உள்ளே போனவன் உறைந்து தான் போய் இருந்தான் தேனை பார்த்து…

என்னாச்சு என்று பின்னே வந்த பார்வதியும் அய்யோ தேனு என்னாச்சு என்று அருகில் வர வாயில் நுரை தள்ளி உடல் இழுக்க இருந்தாள் தேனு…

அவசரமாக வந்தவன் ஜன்னல் அனைத்தையும் திறந்து விட்டு அவளுக்கு காற்றோட்டத்தை ஏற்படுத்திவிட்டு அவள் கையை பிடிக்க அந்த உடல் எதை உணர்ந்ததோ சற்றே சமநிலை அடைய ஆரம்பித்து இருந்தது அடுத்த அரைமணி நேரத்தில்…



தேனு வருவாள்

 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அச்சோ தேனுக்கு என்னாச்சு? 😢

மனசுல இருந்த அழுத்தத்தால இப்படி ஆகிருச்சோ 🤔
 

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu
அச்சோ தேனுக்கு என்னாச்சு? 😢

மனசுல இருந்த அழுத்தத்தால இப்படி ஆகிருச்சோ 🤔
எங்க நிம்மதியா இருக்க விட்டாங்க மிக்க மகிழ்ச்சி சகோதரி