• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
உறக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டிருந்த ஷக்தி அவனுடைய பையில் இருந்து ஏதோ எடுக்க போய் மஹா வீட்டிலிருந்து எடுத்து வந்த எல்லா டாக்குமெண்ட்ஸும் இருந்தது, அதை எடுத்து படித்து பார்த்தவனுக்கு கோவம் தலைக்கேறியது.

விடிந்ததும் ஆபிஸ் சென்றுவிட்டு பின் நேராக சுரேஷின் வீட்டிற்கு வந்துவிட்டான்.

மஹா வெளியே வருவதை பார்த்த ஷக்தி காரின் கதவை அவளுக்காக திறந்துவிட்டு தானும் காரில் ஏறி அமர்ந்துகொண்டான்.

மஹா ஏறி அமரும்வரை காத்திருந்த ஷக்தி, எதுவம் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டினான்.

சுரேஷ் வீட்டிலிருந்து கிளம்பி இருபது நிமிடங்கள் ஆகியும் ஷக்தி எதுவும் பேசாதது மட்டும் அல்ல மஹாவின் முகத்தை பார்க்க கூட திரும்பவில்லை.

ஒரு சிறு சிரிப்பு கூட இல்லாததால் லேசான பயம் துளிர்விட்டது மஹாவுக்கு.

காரை நிறுத்தாமல் வேகமாக ஒட்டிக்கொண்டிருந்த ஷக்தி திடிரென்று பிரேக் போட்டு காரை நிறுத்தி கீழே இறங்கி நின்றான்.

“வெளிய இறங்கி வா" என்றான்.

மஹா மெதுவாக கீழே இறங்கி நின்றாள்.

சில நிமிடங்கள் மெளனமாக கழிந்தது கண்களை மூடி அமைதியாக நின்ற ஷக்தி பெருமூச்சொன்றை விட்டு, ”மஹா! நீ என்ன படிச்சிருக்க?" என்றான் கோபமாக ஓரக்கண்ணால் அவளை பார்த்தபடி.

பதிலேதும் வராததால் ”உன்னை தான் கேக்கறேன் என்ன படிச்சி்ருக்க?" என்றான் மீண்டும்.

"பி...இ...கம்ப்யூட்டர்... சயின்ஸ்” என்றாள் அவனை பார்த்தபடி.

கோபத்தில் எரிமலையாய் வெடித்தான்.

"பி.இ படிச்சிருக்க அதுவும் யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் வெட்கமால்ல உனக்கு? ச்சே இவ்ளோ படிச்சிருக்க உன்னோட விருப்பமில்லாம உன்னை கட்டாயப்படுத்தி அன்னைக்கு கல்யாணமேடைல உட்கார வச்சாங்களே, உனக்கு வாயில்ல எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லனு சொல்ல வேண்டியது தான.

இந்த ஒரு மாசமா நீ அவங்கள பார்த்து எவ்ளோ பயந்தன்னு நான் என் கண்ணால பார்த்தேன். கொஞ்ச நாளே அப்டினா இத்தனை வருஷமா சின்ன வயசுலேர்ந்து உன்னை எவ்ளோ கஷ்டபடுத்திருப்பாங்க” என்றவனின் குரல் கரகரத்தது.

“அனுதாபப்படறீங்களா?" என்றாள் மஹா அடக்கிய சோகத்தோடு.

“கண்டிப்பா இல்ல, கோபப்படறேன் இப்ப நீ என்னுடயவள், ஆனா உன்னை எப்படி கல்யாணம் பண்ணேன் தெரியுமா?" என்று அனல் தெறிக்கும் பார்வையை அவளிடம் வீசினான்.

“உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் உனக்கு கல்யாணம்ன உடனே என்னால தாங்கமுடியல. உனக்கு பிடிச்சிருக்கும் அதனால விலகிடலாம்னு நினைச்சேன், அப்புறம் உனக்கு விருப்பமில்லனு தெரிஞ்சப்புறம் எப்படியும் உன்னை என்னுடையவள் ஆக்கணும்னு தான் நான் அங்கு வந்தேன்”

அவனே முழுவதும் சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தாள்.

"உன்னை முதல் முதலா அந்த பிள்ளையார் கோவில்ல தான் பார்த்தேன்.

அப்ப நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த தெரியுமா? சின்ன குழந்தை மாதிரி பிள்ளயார்கிட்ட சண்டை போட்டுட்டு இருந்த".

மஹாவின் நினைவில் ”பிள்ளையாரப்பா நான் என்ன சொன்னேன்? அவங்க நினைக்கறது எதுவும் நடக்க கூடாதுன்னு சொன்னா நீ எனக்கு பிரெண்டா? இல்ல அவங்களுக்கா? எல்லாமே அவங்களுக்கு சாதகாமாவுதே” என்று கூப்பியா இருகரங்களையும் இறக்காமல் மூடிய விழிகளில் ஒன்றை திறந்து பார்த்து மறுபடியும் பேசினாள்.

"அந்த நிமிஷம் என் மனசுல புகுந்திட்ட, அதுக்கப்புறம் ஒவ்வொரு நாளும் நான் உன்னை பார்க்க கோவிலுக்கு வந்துருவேன்.

ஒவ்வொரு நாளும் நீயும் பிள்ளையார்கிட்ட வந்து க்யூட்டா சண்டை போடுவ. ஐ லவ் இட்"

"ஒரு நாள் நீ வந்து சண்டை போடாம அழுத. அப்போ என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்ப நீ, எனக்கு இந்த உலகத்துல ஆறுதலா ஒருத்தர்கூட அனுப்பமாட்டியா? சின்ன வயதுலேர்ந்து எனக்கு கஷ்டத்தை தவிர வேற என்ன கொடுத்திருக்க? ஞாபகம் வச்சுக்க அந்த பாவி மட்டும் என் கழுத்துல தாலி கட்டினான், நான் அந்த நிமிடம் உயிர விட்ருவேன்”னு அழுதுட்டு போய்ட்டடீ. அப்போதான் முடிவு பண்ணேன். உன் கழுத்துல நான் தான் தாலி கட்டணும்னு”.

“என்ன? இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்னு தானே யோசிக்கிற? இதோ உன் டைரி நீ மறந்து வச்சிட்டு போய்ட்ட. அப்போ அது என்கைல கிடைச்சது. அதை படிச்சதுக்கப்புறம் உன்னை பத்தி ஓரளவு தெரிஞ்சது. கல்யாண மண்டபத்துல நீ மேடை ஏறிட்ட, உனக்கு என்னை தெரிஞ்சுருந்தா உன் கை புடிச்சி கூட்டிட்டு போயிருப்பேன். ஆனா, மை பேட் லக் உனக்கு என்னை தெரியாது, அதனால அமைதியாயிருந்தேன். நீ திடிர்னு மயக்கம் போட்டுட்ட கடவுள் எனக்கு கொடுத்த சான்சா நினைச்சு உன்கிட்ட ஓடி வந்தேன்.”

ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"உன்னை அவங்ககிட்டேர்ந்து காப்பாத்துனம்னு... மட்டும தோணுச்சு... அதனால.. நான்... நீ கன்சிவ் ஆகியிருக்க அதுவும் என்னாலன்னு பொய் சொல்லி உன் கழுத்துல தாலி கட்டிட்டேன்." என்றான் வேறு எங்கோ பார்த்தபடி.

சற்றுநேரம் அமைதியாக நின்ற ஷக்தி திரும்ப, அவன் எதிரில் வந்து நின்ற மஹா ஷக்தியின் சட்டைகாலரை பிடித்து, ”இவ்ளோ ஆசையும் அக்கறையும் வச்சிருக்க நீங்க ஏன் என்கிட்ட சொல்லி முதல்லயே கூட்டிட்டு போகல? இத்தனை வருஷமா அவுங்ககிட்ட நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன். நீங்க ஏன் என்னை காப்பாத்த வரல?" என்றாள்.

"நான் பிறந்தப்பவே எங்க அம்மா இறந்துட்டாங்க. அதனால எல்லாரும் அம்மாவை முழுங்கிட்டு வந்துருக்கானு என்னை திட்டினாங்க, அப்பா கூட வேற ஒரு கல்யாணம் பண்ணிகிட்டார். எங்க சித்தி என்னை அடிக்காத நாளே கிடையாது, ஒரு வேளை சாப்பாடு கூட ஒழுங்கா தரமாட்டாங்க, இவங்கள பத்தி தெரிஞ்ச எங்க தாத்தா ஒர் உயில் எழுதினார், அதனாலதான் நான் இவ்ளோ படிக்க முடிஞ்சுது. அதோடு ..." என்று மஹா நிறுத்த.
 
Top