சாருலதாவுக்கு இருந்த சந்தேகம் இப்போது அதிகமாக வலுத்தது! ஆயினும் இன்பா அப்படிப்பட்ட பெண் இல்லை! எதுவானாலும் பெற்றவர்களிடம் கூட சொல்லாத போதும், அவரிடம் சொல்லிவிடுபவள்! அப்படிப்பட்ட பெண்ணிற்கு இப்போது மட்டும் என்ன புதிதாக தயக்கம்? அப்படி வெளியே சொல்லக்கூட முடியாதபடிக்கு என்ன பிரச்சினை? அதுதான் அவருக்கு கலக்கமாக இருக்கிறது! அவர் இன்பாவை சோதித்துப் பார்த்தவரை, அவள் உடம்பில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை! வேறு ஏதோ ஒரு விஷயம் தான் அவள் மனதை மிகவும் பாதிக்கிறது! நிகிலாவிடம் கேட்கலாம் என்றால், அதுவும் சங்கடமாக இருந்தது! அவர் யோசனையோடு மெதுவாக நடந்து கொண்டிருக்க, சற்று தூரத்தில் பவித்ரன் நிற்பதை இன்பா கவனித்தாள்! அவள் நிகிலாவிடம், " பவித்ரன் அண்ணா, நிற்கிற கடையில் ஏதாவது வாங்குவது போல நீ முன்னாடி போ! நான் அத்தையிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன்" என்று அவளை அனுப்பி வைத்தாள்!
இன்பா முகத்தை இயன்றவரை இயல்பாக வைத்தபடி, அருகில் இருந்த கடை பக்கமாக திரும்பினாள்,"அத்தை, இந்த பாசி மாலை எனக்கு வேண்டும் !" என்றாள்!
சிந்தனையில் இருந்த சாருபாலா, அவள் இரண்டு முறை அழைத்த பிறகே நிகழ்வுக்கு வந்தார்!
"உனக்கு பிடிச்சிருந்தால் வாங்கிக்கோ இன்பா! வேறு ஏதும் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளடா பணத்தை நான் கொடுத்து விடுவேன்!"என்றார்!
அப்போதுதான் இன்பாவிற்கு, அவருக்கு வாங்கிய பரிசு நினைவுக்கு வந்தது! கூடவே ரிஷிக்காக ஆர்டர் கொடுத்த நகையும் ! அது இப்போது வசந்தனிடம் பத்திரமாக இருக்கிறது!
அன்றைய தினமும் நினைவுக்கு வந்துவிட, சில கணங்கள் அவளால் அசையக்கூட முடியவில்லை! அவளது முகத்தை பார்த்த சாரு," என்னடாம்மா? என்னாச்சு? ஏன் உன் முகம் இப்படி மாறிடுச்சு?"என்று, சாரு கேட்க,
"ஒன்றும் இல்லை அத்தை, உங்களுக்காக ஒரு பரிசு வாங்கினேன்! அதை உங்ககிட்டே கொடுக்க மறந்துட்டேன்!"என்றவள் கைப்பைக்குள் இருந்து அந்த பரிசுப் பொருளை அவரிடம் தந்தாள்!
"அட, என் இன்பாக்குட்டி எனக்கு பரிசெல்லாம் வாங்கியிருக்கிறாளா? என்று உற்சாகமாக அதை ஒரு கையால் வாங்கிக் கொண்டவர், மறுகையால் அவளை தோளோடு அரவணைத்துக் கொண்டார்!
அங்கே பவித்ரனை பார்க்க சென்ற நிகிலாவுக்கு, தடுமாற்றம் உண்டாயிற்று! அவள் பேசுகிற ஆண்கள் வட்டம் மிக குறைவு, அத்தோடு தந்தையின் கெடுபிடியில் அவள் மிகவும் ஒதுங்கியிருந்தாள்! ஆனால்.. பவித்ரன் அவளை அதிகமாக சங்கடப்படுத்தாமல், தன் முகவரி அட்டையை அவளிடம் தந்து, "சிஸ்டர், இன்பா சிஸ்டரை எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க!" என்றுவிட்டு சென்றுவிட்டான்! நிகிலாவுக்கு அப்பாடா என்றிருந்தது! பெண்களைப் பார்த்தாலே வழியும் ஆண்களைத்தான் அவ்வப்போது அவள் பார்த்து வந்திருக்கிறாள்! இவன் சந்தர்ப்பம் கிடைத்தும் பேசாமல் ஓடுகிறானே? அவள் பெயரைக்கூட கேட்டுக் கொள்ளவில்லையே? அவன் மீது மரியாதையும் உண்டாயிற்று!
முகவரி அட்டையை தன் கைப்பையில் பத்திரப் படுத்திக் கொண்டவள், அருகில் இருந்த கடையில் ஒரு தாயும்,சேயும் அணைத்தபடி இருந்த சின்ன பீங்கான் சிலை ஒன்றை வாங்கிக் கொண்டு திரும்பினாள்!

அடுத்து அவர்கள் மாலையில் தென்காசிக்கு கிளம்பினர்! தமிழரசன் அங்கே வருமாறு அமைத்திருந்தார்! திருச்செந்தூர்,பாபநாசம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர்,என்று ஆங்காங்கே இருந்த கோவிலகளுக்கு சென்று வரலாம் என்று தெரிவித்திருந்தார்!
சாருவுக்கு, முன்பு நிறைய கடவுள் நம்பிக்கை இருந்தது! அவரது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களின் காரணமாக இப்போது அதிகமில்லை! இந்தப் பயணம் அவரது மருமகளின் மனமாற்றத்திற்காக என்பதால் தான் அவரும் சேர்ந்து கொண்டார்! இல்லாவிட்டால், அவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஏதாவது ஒரு சுற்றுலா தலத்திற்கு கிளம்பியிருப்பார்!
தென்காசிக்கு சென்றதும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் சற்று நேரம் பேசியிருந்தபோது, தூக்கம் வருவதாக இன்பா தனக்கான அறைக்கு சென்று விட்டாள்!, பவித்ரனின் முகவரி அட்டையை தந்துவிட்டிருந்தாள் நிகிலா! அவனை அழைத்தாள்! அவள் அழைப்பதற்காக காத்திருந்தவன் போல உடனே எடுத்துப் பேசினான்!
"சிஸ்டர், என்னாச்சு ? உங்க முகமே சரியில்லையே ! பத்து நாளில் ஆளே மாறிப் போயிட்டிங்களே?"
இன்பாவிற்கு அழுகை வந்தது, அடக்கிக் கொண்டு,"அண்ணா, என் தலைவிதி அண்ணா! வேறு என்னவென்று சொல்வது?"
"உங்ககூட வந்தவர் டிஸ்சார்ஜ் ஆகிப்போய்விட்டார் என்று ஹாஸ்பிடலில் சொன்னாங்களே? அப்புறம் என்ன பிரச்சினை சிஸ்டர்? அண்ணா என்று நீங்க கூப்பிட்ட உரிமையில் தான் கேட்கிறேன்! சொல்லலாம் என்றால் சொல்லுங்க!"
"நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம்! அந்த விஷயம் வீட்டுக்கு தெரியக்கூடாது என்று வைத்திருந்தோம்! அன்றைக்கு சந்தித்து பேசிவிட்டு திரும்பும் போது அந்த விபத்து ஏற்பட்டுப் போச்சு! இப்ப அவர் நல்லா குணமாகிட்டார்! ஆனால் என்னைப் பற்றிய ஞாபகம் எதுவும் அவருக்கு இல்லை அண்ணா! அதாவது செலக்டிவ் அம்னீஷியா! நான் முன்னால் போனாலும் அவருக்கு தெரியாது! என்னால இதை ஜீரணிக்க முடியவில்லை! ஊமை கண்ட கனவு போல ஆகிவிட்டது என் நிலைமை!
"கேட்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது மா! ஆனால் நீங்க,
வீட்டில் விஷயத்தை சொல்லி அவர்கள், வீட்டில் பேசி திருமணத்தை நடத்தலாமே மா?"
"அப்படி செய்யலாம் என்றுகூட தோன்றியது அண்ணா! அவரோட நண்பர் வசந்தன் வந்திருந்தாரே, அவர்கிட்ட சொன்னப்போ தான், "அவனுக்கு லவ் பிடிக்காதுமா! அதுவும் பெண்கள் எல்லாம் அவனது பணத்துக்காகத் தான் காதலிப்பதாக நினைக்கிறவன்! அப்படி சில பெண்கள் இருந்தாங்க! அதனால அவன்கிட்ட சொல்றது வீணான வேலை! தேவை இல்லாமல் இரண்டு குடும்பத்துக்கும் மனவேதனை ! அதனால தான், அவன் வேலை பார்த்த விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு, உன்னைப் பற்றிய விஷயத்தை அவனிடம் சொல்லவில்லை!" என்று சொன்னார்! அதனால இன்னும் என் மனது நொறுங்கிவிட்டது! அன்றைக்கே ஜுரம் வந்து நாலு போல நான் படுக்கையில் கிடந்தேன்! அதற்கு பிறகு தான் இந்த பக்தி பயணம்!"
"மனசை தளரவிடாதீங்க சிஸ்டர்! போன நினைவு அவருக்கு சீக்கிரமாக திரும்பிவிடும்! உங்களுக்கு என்ன உதவி என்றாலும் தயங்காமல் என்னை கேட்கலாம்! ஒரு அண்ணனாக உங்களுக்கு உதவ எப்போதும் காத்திருக்கிறேன்!"
"நிச்சயமாக, எங்க விஷயம் தெரிந்தவர்கள், நாலு பேர்தான்! வசந்த் அண்ணா, அடுத்த மாதம் வெளிநாடு சென்றுவிடுவார்! நிகிலாவும் ஜாப் கிடைத்து கிளம்பிவிடலாம்! நான் இருக்கும் மனநிலையில் ஜாப் செய்ய முடியுமா என்று தெரியவில்லை! அதை அப்போது தான் தீர்மானிக்க முடியும்!"
"சரிம்மா, உடம்பை பார்த்துக்கோங்க! நாளைக்கு நான் சென்னை கிளம்பணும்! நீங்க சென்னை திரும்புனதும், எனக்கு தகவல் மட்டும் சொல்லுங்க, குட் நைட்!"
"சொல்கிறேன் அண்ணா! குட் நைட் !"
இன்பாவின் மனது இப்போது, ரிஷியின் பிரிவை தாங்கிக் கொள்ளும் அளவு தேறியிருந்தது! உள்ளூர வலி இருக்கத்தான் செய்தது! ஆனால் அதை மற்றவர் அறியாமல் தனக்குள்ளே வைத்துக் கொள்ள பழகிவிட்டாள்!
அடுத்து வந்த நாட்களில் கொஞ்சம் பழைய இன்பாவாக மாறியிருந்தாள்! சாருவுக்கு உண்டான சந்தேகம், இப்போது சற்று தளர்ந்து போயிற்று! நல்ல வேளையாக அவர் வாய்விட்டு எதையும் கேட்டு வைக்கவில்லை என்று ஆசுவாசம் கொண்டார்!
பக்திப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர்கள் சென்னை திரும்பிய பிறகு இன்பாவின் முகத்தில் சற்று தெளிவு வந்திருந்தது! அடுத்த இரண்டு நாட்களில் ப்ரியன் - வித்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது!
புதுமணத் தம்பதிகள் தேனிலவை முடித்துக் கொண்டு,நேராக சென்னையில் மறுவீடு விருந்துக்காக வித்யாவின் வீட்டிற்கு வந்துவிட்டனர்! பவானிக்குத் தான் ஒரே படபடப்பாக இருந்தது! மாப்பிள்ளை பெரிய வீட்டுப் பிள்ளை. அவர்கள் வீட்டு வசதியை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று உள்ளூர கொஞ்சம் தவிப்பு! அவருக்கு உதவிக்கு, சாந்தி வந்திருந்தார்! இன்பாவையும் அழைத்தார் தான், ஆனால் அவள் சாருவுடனும், திலகத்துடனும் இருக்கப் போவதாக தெரிவித்து மறுத்துவிட்டாள்!
விருந்திற்கு தமிழரசனும், செண்பகமும் கூட வந்து கலந்து கொண்டனர்! வரவேற்பிற்கு வருபவர்களுக்கு தாம்பூலப் பை தர வேண்டிய வேலைகளை ரிஷியிடம் ஒப்படைத்துவிட்டான் வசந்தன்! காரணம் விருந்து சமயத்தில் அவனிடம் வந்தவர்கள் பேசும்போது அவன் விழிப்பான்! வந்தவர்களிடம் விளக்க வேண்டும், ஆகவே, அதை தவிர்க்க எண்ணி இப்படி அவனை அனுப்பி விட்டான்! கூடவே மணமக்கள் வீட்டில் தங்குவதால் இடப்பற்றாக்குறை வேறு உண்டாயிற்று! அதையும் சொல்லி, இரண்டு நாட்களுக்கு, அவனது ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொள்ள சொன்னான்! ரிஷி எப்போதுமே மற்றவருக்கு தொந்தரவாக இருக்க மாட்டான்! அதிலும் வசந்தன் எது சொன்னாலும் அவன் அதை அப்படியே ஏற்றுக் கொள்வான்! காரணம் அவன் மீது அத்தனை பாசம்!
திருமண வரவேற்பிற்கு, ரிஷி ஒரு நண்பனாக வந்து, மணமக்களிடம் பரிசை தந்துவிட்டு, சாப்பிட்டதும் கிளம்பியும் விட்டான்! இன்பாவின் கண்கள் அவனை அந்த சில கணங்களில் தன்னுள் நிரப்பிக் கொண்டாள்! வசந்தன் இன்னும் ஒன்றும் செய்தான்! ரிஷி மேடை ஏறும்போது இன்பாவையும் அழைத்து வந்து வித்யாவுடன் நிறுத்தியவன், வேலை இருப்பது போல விலகிச் சென்றுவிட்டான்! எல்லாம் புகைப்படத்திலும் வீடியோவிலும் பதிந்தது!
வசந்தன் செய்தது ரிஷிக்காக மட்டும் இல்லை!இன்பாவுக்காகவும் தான்! அதை இன்பா சரியாக புரிந்து கொண்டாள்! அந்தப் புகைப்படம் தான் அவளுக்கு பின்னாளில் துணை புரியப் போகிறது என்பதை அப்போது யாரும் நினைக்கவில்லை!
72. சொந்தமடி நானுக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!
ப்ரியன் - வித்யா திருமண வரவேற்பு வெகு விமரிசையாக நடந்தேறியது! அதில் அனைவருக்கும் மன நிறைவு!
வசந்த், ரிஷியின் நண்பர்களான, அசோக் மற்றும் தீபக்கும் வந்து கலந்து கொண்டனர்! அப்போது மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த இன்பாவின் அழகு தீபக்கை வெகுவாக கவர்ந்தது! வசந்தனிடம் அவளைப் பற்றி விசாரிக்கவும் செய்தான்! அவனோ அவளுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகிவிட்டதாக தெரிவித்து அந்த பேச்சை முடித்துவிட்டான்!
பவித்ரனை சந்தித்த விபரத்தை வசந்தனிடம் தெரிவித்திருந்தாள் இன்பா! நிகிலாவும் அவனைப் பற்றி உயர்வாக சொல்லியிருந்தாள்! உயிர் நண்பனை காப்பாற்றியதற்காக, வசந்தன் பிரத்தியேகமாக அழைத்ததால் பவித்ரனும் கலந்து கொண்டான்!
அடுத்து வந்த வாரத்தில் எல்லாரும் தினப்படி வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள்! ரிஷியின் பெற்றோர், தம்பி வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டனர்! வசந்தன் ரிஷியை அழைத்துப் போய் அவனது வீட்டில் விட்டுவிட்டு, ஆனந்தனை தனியாக பார்த்து, " ரிஷியிடம், கோவை அலுவலகம் பத்தி, அந்த வேலைகள் பத்தி தயவு செய்து கேட்காதீங்க ! அதைப் பற்றிக் கேட்டால் அவன் ரொம்ப அப்செட் ஆகிடுவிடுகிறான்! அதனால் முடிந்தவரை அவனை பிஸினஸ்ல கவனம் செலுத்த வைங்க, சரியாகிடுவான்" என்று சொல்லிவிட்டுப் போனான்!
ஆனந்தனுக்கும், மகன் உடன் இருந்தால் போதும் என்பதால் அவர் ரிஷியிடம் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை!
அங்கே..
சுரேந்திரன் வீட்டில், அன்று ஓய்வு நாள் என்று எல்லாருமாக மாலையில், சிற்றுண்டியும் டீயுமாக ருத்தபடி பேசிக் கொண்டிருந்தனர்!
அப்போதுதான் சாருபாலா," இன்பா, நீ மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய்? படிக்க வேண்டுமா? அதை எங்கே படிக்கணும் என்பது உன் சாய்ஸ்! அல்லது ஜாப் போகணுமா? அதுவும் நான் எங்கே போகணும் என்று ஸஜஷன் சொல்றேன்!" என்று மருமகளிடம் கேட்டார்!
முன்பு வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்பது தான் அவளது விருப்பமாக இருந்தது! ரிஷியை சந்தித்தப் பிறகு இந்தியாவில் எங்காவது படிக்கலாம் என்று நினைத்தாள்! ஆனால் இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு மேலே படிக்க முடியுமா என்று தெரியவில்லை! அவளது தேர்வு முடிவுகள் வந்ததும், எங்காவது ஒரு மருத்துவமனையில் சேர்ந்துவிடாலாம் என்றால், நிச்சயமாக வெளியூர் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்! அடுத்ததாக சாந்தியும், திலகமும் அவளது திருமணப் பேச்சை எடுப்பார்கள்! அது அவள் படிக்கும் போதே, காலாகாலத்துல அது அது நடக்க வேண்டியது நடந்துடணும்! என்று திலகம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்! சாந்திக்கும்கூட ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்று, வழக்கமான தாயாக நினைத்தார்!குற்றாலத்தில் ரிஷியை பார்த்தது முதல் அவனை மகளுக்கு மணமுடிக்கலாம் என்ற ஆவலும் கூடியிருந்தது! ஏனோ அவருக்கு, ரிஷிதான் இன்பாவிற்கு பொருத்தமாக இருப்பான் என்று தோன்றியது! அதை அவர் திலகத்திடம் சொல்லியும் வைத்திருந்தார்! அவரோ சமயம் பார்த்து பேசுவதாக தெரிவித்திருந்தார்!
"என்னடாம்மா, என்ன யோசனை? எதுவானாலும் சொல்லுடாமா, அத்தை உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்!" என்றார் சாருபாலா.
"ரிசல்ட், இன்னும் பத்து நாட்களில் வந்துவிடும் என்கிறார்கள்! வந்தப் பிறகு டிசைட் பண்ணிக்கலாம் அத்தை!" என்றாள்!
"உனக்கு உன் மேலே நம்பிக்கை இல்லையா? ஆனால் நீ டாப் ரேங்க் எடுப்பாய் என்று அத்தைக்கு பூரண நம்பிக்கை இருக்கு! அதனால நான் கிளம்பறதுக்கு முன்னாடி உனக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு கிளம்பினேன் என்றால் எனக்கு நிம்மதியாக இருக்கும் கண்ணம்மா!"
" நீங்கள் சொல்வது சரிதான் அத்தை ! ரிசல்ட் வந்ததும் நீங்கள் சொல்றதை நான் செய்கிறேன்!"
"ஓ! உனக்கு விஷயம் தெரியாதில்லையா? இந்த தடவை அத்தைக்கு லீவு அதிகமில்லைடா! இன்னும் நான்கு நாட்களில் நான் கிளம்ப வேண்டும்! நான் வந்தப்போ நீ உடம்புக்கு முடியாமல் இருந்தாய், அதனால உன்கிட்ட அதை சொல்லவிலலை!"
"என்ன அத்தை இப்படி சொல்றீங்க? நீங்க இருப்பீங்க, உங்ககூடவே போறதோ, இல்லை இங்கேயே படிப்பதோ எல்லாம் நீங்க கூடவே இருந்து பார்த்துக் கொள்வீர்கள் என்றிருந்தேனே? இன்பா சொல்லும் போதே திலகம், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார்!
சாருபாலா பரிசோதித்து விட்டு, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்! எல்லாருமாக உடன் சென்றனர்!
மருத்துவமனையில் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் திலகம்! அவருக்கு கடந்த சில தினங்களாக மனதுக்குள் மறைந்த கணவரின் நினைவு அடிக்கடி வந்து கொண்டிருந்தது! பெறாமல் பெற்ற பிள்ளைகளான சுரேந்திரனும், சாருபாலாவும், பெற்ற பிள்ளைகளைவிட அதிகமாகவே அவரிடம் பிரியமாக நடந்து கொள்கிறார்கள்! அதிலும் சாந்தியைப் பற்றி சொல்லவே வேண்டாம்! அவர் ஆசைப்பட்ட குடும்பம் அமைந்து அதில் இத்தனை காலம் பேதமின்றி வாழ்ந்ததே பெரும் பாக்கியமாக கருதினார்! இன்பாவின் திருமணம் பார்க்கத்தான் அவருக்கு மிகுந்த ஆவல்! ஆனால் அது சீக்கிரமாக நிறைவேறும் என்று அவருக்கு தோன்றவில்லை!
பேத்திக்கு, வசந்தனை திருமணம் செய்து வைக்க எண்ணி, அவனிடமே பேச்சை எடுத்துப் பேசினார்! ஆனால் அவன் யாரையோ ஒருத்தியை காதலிப்பதாக சொல்லிவிட்டான்! அடுத்து,எப்போதும் இரண்டு மாதங்களுக்கு குறையாமல் தங்கிப் போகும் மகள் சாருபாலா, இந்த முறை தாமதமாக வந்ததும் இல்லாமல், சீக்கிரமாகவும் கிளம்பப்போகிறாள்! ஏனோ அவரது மனதில் ஒருவித நிராசை பரவியதால் நெஞ்சில் வலி உண்டாகிவிட்டது.
🩷
🩵
மருத்துவர்களுடன் சாருபாலாவும், இன்பாவும் உள்ளே சென்றனர். தலைமை மருத்துவர் திலகத்தை பரிசோதித்துவிட்டு, " இவங்களுக்கு,மன அழுத்தம், காரணமாக ஏற்பட்ட மயக்கம்தான்! வயது ஆகிவிட்டதால் வேறு ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்று சில டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும்! அவங்க சரியாக தூங்கிறது இல்லை போல ! இப்போ அவங்களுக்கு பூரண ஓய்வு தர வேண்டும்! அதனால வேற தனி அறைக்கு மாற்ற ஏற்பாடு செய்கிறேன்! நாளை மாலை ரிப்போர்ட்ஸ் வந்ததும் மேற்கொண்டு பார்க்கலாம் !" என்றதும், சாருவுக்கும் இன்பாவுக்கு ஒருபுறம் ஆசுவாசமும் மறுபுறம் கவலையும் உண்டானது!
வெளியே, காத்திருந்த சுரேந்திரனுக்கும்,அழுது கொண்டிருந்த சாந்திக்கும் விபரம் சொன்னார் சாருபாலா!
"அத்தைக்கு, இன்பா படிப்பை முடிச்சு வந்ததும், கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப ஆசை! ஆனால் அவளுக்கு வேற ஆசை இருக்கிறது என்பதால் அதை அவகிட்டே சொன்னதில்லை! இது மட்டும் இல்லை அண்ணி, அவங்களுக்கு உங்களைப் பத்தின கவலையும் தான்!"
" என்ன சொல்றே சாந்தி? என்னைப் பற்றி நினைச்சு கவலைப்பட என்ன இருக்கு?" என்றார் சாருபாலா யோசனையோடு!
"புதுசாக என்ன அண்ணி? உங்கள் வாழ்க்கை இப்படி தனியாக வாழும்படி ஆயிற்றே என்பது தான்! அப்போது தான் உங்களுக்கு, ஆத்திரமும் வெறுப்பும் இருந்தது! ஆனால் இப்போது உங்களுக்கு உரிமையானதை நீங்க பெற வேண்டாமா? உங்களுக்கு கடைசி காலத்தில் ஊன்றுகோல் தேவை தானே அண்ணி? அவர்களிடம் கேட்கக்கூட வேண்டாம், சம்பந்தப்பட்டவரிடம் விஷயத்தை சொன்னாலே எல்லாம் தானாக நடந்து விடுமே அண்ணி?"
"போதும் சாந்தி!" சாருபாலா கோபம் காட்டவில்லை , ஆனால் அழுத்தமான குரலில் உரைத்தார்.
சாந்தி தடுமாறவில்லை, தளராமல் அவரை நேருக்கு நேர் பார்த்தார்!
"சாந்தி, என் வாழ்க்கையில் மருத்துவமும் சேவையும் தான் முக்கியமானவை! மற்ற ஆசாபாசங்களுக்கு இடமில்லை! இவள் இருக்கிறாளே? இவள் போதும் நமக்கு! என்ன வீட்டோடு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைத்து நம்முடைய வைத்துக் கொண்டால் போயிற்று!"
அவர்களின் சம்பாஷணையை கேட்டிருந்த சுரேந்திரன், லேசாக நகைத்துவிட்டு," அக்கா, நீயும் சாந்தியைப் போலவே பேசுகிறாயே? பெண் பிள்ளை என்றைக்கு இருந்தாலும் அடுத்த வீட்டுப் பெண் தானே?"
"அப்படி என்று சட்டமா தம்பி? அப்படியே இருந்தாலும் நாம் அதை மாற்றுவோமே? இன்னும் ஒரு வருஷம் போகட்டும், வீட்டோடு ஒரு மாப்பிள்ளையை கண்டுபிடித்து நானே கட்டி வைக்கிறேன்! அதனால கவலையை விடுங்க! சரி வாங்க அம்மாவைப் போய் பார்க்கலாம்!" என்று சாருபாலா எழுந்து செல்ல, பெரியவர்கள் இருவரும் பின்னே தொடர்ந்தனர்.
இன்பாவிற்கு ஏதோ மர்ம நாவல் படிப்பது போல இருந்தது, பெரியவர்களின் உரையாடல்! அதில் அவளது திருமணம் பற்றிய பேச்சும் எழுந்ததை அவள் கவனத்தில் பதியவில்லை!
அத்தைக்கு உரிமையானது என்றால் அது என்ன? சொத்தா? பொருளா? அதுதான் ஏற்கனவே இருக்கிறதே! அப்படி என்றால் வேறு என்னவாக இருக்கு? ஏதோ ஊன்று கோல் என்று அம்மா சொன்னார்களே? அத்தைக்கு திருமணம் என்று நடந்ததாக யாரும் பேசிக் கொண்டதே இல்லை... இன்பா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது,
"இன்பா, இங்கே உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்கிறே? போய் அம்மா அத்தை கூட இரு! " என்று சுரேந்திரன் அங்கே வந்தார்!
இன்ப்விற்கு, அப்பாவிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது! பொதுவாக பெண் குழந்தைகள் தந்தையிடம் ஒட்டிக் கொள்வது இயல்பு! ஆனால் இன்பாவுக்கு பாட்டியும் அத்தையும் தான் வேண்டும்! அப்படிப்பட்டவள் இன்று கேட்டால் சொல்வாரா என்று சற்று தயக்கம் தான் ஆயினும் கேட்க துணிந்தாள்!
"அப்பா, உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்! மறைக்காமல் சொல்வீங்களா?" என்ற மகளை யோசனையோடு பார்த்தார் சுரேந்திரன்!
"அப்பா!"
"ம் ..ம்.. எனக்கு தெரியும் இன்பா ! நீ என்ன கேட்க வர்றேனு! அது அத்தையின் ரகசியம்! அதை நான் சொல்ல முடியாது மா! ஒரு நாள் அத்தையே உன்னிடம் சொல்லும் நாள் வரலாம்! அதுவரை நீ பொறுமை காப்பது தான் குடும்பத்தின் அமைதிக்கு நல்லது! என்றவர், "நான் போய் உங்களுக்கு குடிப்பதற்கு வாங்கி வருகிறேன், நீ மனதைப் போட்டு குழப்பாமல் உள்ளே போமா"!
இன்பா ஏமாற்றத்துடன் அறையை நோக்கி நடக்க, ஒரு பெருமூச்சுடன் நடந்தார் சுரேந்திரன்!