திலகம் கேட்ட கேள்வி நியாயமான ஒன்று தான்! அதைக் கேட்ட மாத்திரத்தில் தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டது! புரையறி கண்ணில் நீர் வழியவும், சாருபாலா ,அவளது தலையில் லேசாக தட்டி, அருந்த நீரை கொடுத்தார்! ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டவள்,
"நானும் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் பாட்டி! ஆனால் என் விதி இப்படி எழுதப்படும் என்று நான் என் கனவிலும் நினைச்சுப் பார்க்கவில்லையே? என்று மனதோடு சொல்லிக் கொண்டவள், " நிகிலாவுக்கு வசந்த் அண்ணா மாப்பிள்ளையாக கிடைச்சிருக்கார்! அதனால கல்யாணம் பண்ணிக்குவா! அப்படி எனக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருந்தால் நிச்சயமாக கல்யாணம் பண்ணியிருப்பேன் பாட்டி! அப்பவும் ஒரு வருஷம், பிராக்டிஸ் பண்ணினதுக்கு பிறகு தான் ஓகே சொல்லியிருப்பேன்! அதனால ப்ளீஸ், என் செல்ல பாட்டி இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ணுங்க!"
திலகத்திற்கு இன்பா திருமணத்திற்கு சரி, சொன்னதே போதுமானதாக இருந்தது! எப்படியும் நல்ல வரன் தேடி பிடிக்க அவகாசம் வேண்டும் தானே? என்று நினைத்தார்!
"பாட்டிக்கு இன்னொரு சந்தோஷமான செய்தி இருக்கு! அது என்ன என்று சொல்லுங்க பார்ப்போம்!" என்றாள் இன்பா!
"என்ன விஷயம் கண்ணு ! என்றார் திலகம்! ஆர்வமாக
"அப்படி என்ன சந்தோஷமான விஷயம்? இவ்வளவு நேரம் என்கூட தானே இருந்தாய்! சொல்லவில்லையே? என்றவாறு சாருபாலாவும் மருகளை ஆவலாக பார்த்தார்!
"நான் என்ன விஷயம்னு சொல்றேன்! அத்தை நான் சொல்லப் போகிற விஷயத்தை மறுக்கக்கூடாது!
"பாட்டி, இன்னும் மூன்று மாசம் கழிச்சு அத்தை இந்தியாவுக்கு வந்து நம்ம கூடவே தங்கப் போறாங்க! என்ன அத்தை ஓகே தானே?"
சாந்தியும், திலகமும் சந்தோஷத்தில் ஒருசேர முகம் மலர்ந்தார்கள்!
"நிஜமவா சாரும்மா?" திலகம்
"எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு அண்ணி" சாந்தி அவரை அணைத்துக் கொண்டார்
சாருபாலாவுக்கு ஆரம்பத்தில் வெளிநாடு செல்ல, மகன் மீதான ஏக்கம் காரணம் இருந்தது! இன்பா பெரியவளானதும் அந்த ஏக்கம் எல்லாம் கொஞ்சம் தளர்ந்து, போயிற்று! அவள் மருத்துவம் படிக்க தொடங்கியது முதலாக அவருக்கு வீட்டோடு வந்துவிடும் யோசனை இருக்கத்தான் செய்தது! ஆனால் தன்னை பார்த்து திலகமும் மற்றவர்களும் வருந்துவார்களே என்ற காரணத்தால் தான் அதை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்! இப்போது அதற்கு ஒரு தீர்வை இன்பா சொல்லவும் மனதார ஏற்றுக் கொண்டார்!
"இப்ப சொல்லுங்க பாட்டி, ஆபரேஷன் செய்துக்கிறீங்க தானே? உங்க மகள் கூட பேசணும், நாலு இடங்கள் போய் வரணும்னு ஆசை இருக்குதானே? "
"நிச்சயமா, அவள் என் கூடவே இருந்தால் அது போதும்! நாளைக்கே என்றாலும் சரிதான், நான் ரெடி!"
சாருபாலா மருமகளை கட்டி அணைத்து ஆனந்தக் பொழிய..
"ஆத்தாடி , உங்க பாச மழையில் நாங்க வழுக்கி விழுந்துடப் போறோம்" என்ற திலகம் தன் கையால் பேத்திக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார்!
தன் துன்பத்தை ஒதுக்கி வைத்து குடும்பத்தினரை உற்சாகமாக வைத்து கொள்ளும் இன்பாவின் நிலையை எண்ணி வசந்தனின் மனம் கனத்து போயிற்று ! சொல்லப்போனால் இன்பா இப்படியான மனநிலையில் இருக்கும் போது, அவன் திருமணம் பற்றி பேசுவதும், அதை நடத்த திட்டமிடுவதும் கூட அவனுக்கு உவப்பாக இல்லை! ஆனால் ரிஷியை பிரிந்து இன்பா வாடுவதை அவன் கண்முன்னே பார்த்த பிறகு, அதே வேதனையை நிகிலாவும் அனுபவிக்க அவன் காரணமாகிவிடக் கூடாது என்று தான் இந்த முயற்சியை எடுத்திருக்கிறான்!

திலகத்தின் அறுவை சிகிச்சையை மேற்கோள் காட்டி, தன் விடுமுறையை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க கோரிக்கை வைத்திருந்தார் சாருபாலா! வேலையில் திறமையும், நேர்மையுமாக நடந்து கொள்பவர் என்றதால் அவரது கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது!
அதன்பிறகு திலகத்திற்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மளமளவென நடைபெற்றது! வெற்றிகரமாக சிகிச்சை நடந்தேறியது! அடுத்த இரண்டு தினங்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார் !
தொந்தரவு செய்யக்கூடாது என்று அடுத்த இரண்டு நாட்கள் யாரையும் அவரைப் பார்க்க சாருபாலா அனுமதிக்கவில்லை! இன்பாவும் அவருமாக திலகத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்!
திலகம் சற்று தேறவும், சக்ரநாற்காலியின் உதவியோடு வீட்டுக்குள் வளைய வந்தார்!
அன்று
வரதனும் பவானியும் நலம் விசாரித்துப் போக வந்திருந்தனர்! அவர்களோடு வசந்தனும் வந்திருந்தான்!
இன்னும் இருக்கும் நாட்கள் குறைவு என்பதால் நல்ல விஷயத்தை தள்ளிப் போடக்கூடாது என்று நினைத்தார் திலகம்!
வசந்தனோட கல்யாண விஷயத்தை பேசணும்னு நினைச்சேன்! அதற்குள்ளாக என் உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு! நீங்களே வந்துட்டீங்க! என்னடா நம்ம பையன் கல்யாண விஷயத்தைப் பேசறாங்களேன்னு தோன்றும்?"
"அப்படி எல்லாம் இல்லைங்கம்மா! எங்க எல்லாருக்கும் நீங்கதானே பெரியவங்க? இன்னிக்கு வித்யாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குன்னா, கடவுளுக்கு பிறகு நீங்க தான் முக்கியமான காரணம்! யாரோ என்று நீங்க அன்று விட்டிருக்கலாம்! ஆனால் அப்படி செய்யாமல், முன்னெடுத்து எங்கள் வாழ்வில் சந்தோஷத்தை வழங்கினவங்க நீங்கதான்! அதனால நீங்க எங்களுக்கு நல்லது நினைச்சு தான் இந்த விஷயத்தையும் பேச நினைச்சிருப்பீங்க, நீங்க தயங்காமல் சொல்லுங்கம்மா!"
"உன்கிட்ட எனக்கு இந்த வெளிப்படையான பேச்சு தான் பிடிச்ச விஷயம் பவானி, என்றவர், "நான் சுத்தி வளைச்சு பேச மாட்டேன்! வசந்தனுக்கு, நம்ம நிகிலாப் பெண்ணை கட்டி வைக்கலாம் என்று எனக்கு அபிப்பிராயம்! பெண்ணும் பிள்ளையும் ஓரளவுக்கு பரிச்சயமாகி இருப்பாங்க! திருமணம் பெரிய விஷயம், நான் மனசுல நினைச்சேன் சொல்றேன்! நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு யோசிக்க அவகாசம் வேண்டுமா? தாராளமாக யோசித்து முடிவு சொல்லுங்க! அப்படி இல்லை, இந்த இடம் வேணாம் என்றாலும் தயங்காமல் சொல்லிடுங்க!" என்றவர், வாசல் பக்கமாக, இன்பாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த வசந்தனை குறிப்பாக பார்த்தார்! அவனும் அவ்வப்போது அவரைப் பார்த்துக் கொண்டிருந்ததால், அவரது சமிக்ஞையை உணர்ந்தவனாக, பெரியவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்!
"இதோ வசந்த் வந்துட்டான், அவனையே கேட்டுடுங்கம்மா! எங்களுக்கு பரிபூரண சம்மதம் தான்! வாழப் போறவன் அவன் தானே ? அதனால் அவன் முடிவு செய்யட்டும்" என்று வரதன் சொன்னார்!
"என்ன என் தலையை எதுக்கு உருட்டுறீங்க? என்ன விஷயம் பாட்டிம்மா?"
திலகம் விஷயத்தை சொன்னதும், " அம்மா அப்பாவுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் தான்! எதுக்கும் முதல்ல நிகிலா வீட்டில் கேட்டுவிடுங்கள்! " என்றான் வசந்தன்
"நான் சொன்னா நிச்சயமாக மதன் மறுக்க மாட்டார்! ஆமா உனக்கு இன்னும் எத்தனை வருஷம் ஒப்பந்தம் ? "
"இரண்டு வருஷம் இருக்கு பாட்டி! வேண்டும் என்றால் நாம் நீட்டித்துக் கொள்ளலாம்! ஏன் பாட்டி?"
"பெண் வீட்டுல இதெல்லாம் கேட்பாங்களே வசந்தா! அதுக்கு தான்! சரி, உடனடியாக கல்யாணம் பண்ணிட்டு , நிகிலாவை கூட்டிட்டு போகப் போறியா? இல்லை வெறும் பாக்கு வெற்றிலை மாத்திட்டு அப்புறமாக வந்து கல்யாணம் பண்ணிக்கப் போறியா? என்றார் திலகம்
அதற்கு வசந்தன் சொன்ன பதிலில் எல்லார் முகத்திலும் புன்னகை மலர்ந்தது!
76. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!
வசந்தனிடம்,"திருமணத்தை எப்போது வைத்துக்கொள்வதாக இருக்கிறாய்?" என்று திலகம் கேட்டார்!
வசந்தன் சற்றும் யோசிக்கவில்லை, "அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணிட்டு, நான் மட்டும் இப்போ வெளிநாடு கிளம்பலாம்னு நினைக்கிறேன் பாட்டி!" என்றதும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது!
"என்னடா இப்படி கல்யாணத்துக்கு அலைகிறானே என்று நினைக்காதீங்க! நான் பிராக்டிகலாக சொல்றேன்! தெரிந்த பெண், எனும்போது அனாவசியமாக எதற்காக தள்ளிப் போடுவது?" என்றான்!
"பேராண்டி, எனக்கு புரியுது! கல்யாணம் பண்ணிட்டு நிகிலாவை உங்க வீட்டுல விட்டுவிட்டு கிளம்பறதாக முடிவு செய்திருக்கிறாய்!"
"ஆமா பாட்டி, அப்புறமாக அவள் அங்கே வருவதற்கான ஏற்பாடு செய்துவிட்டு கூப்பிட்டுக் கொள்வேன்! அத்தோடு அவளோட மருத்துவ தேர்வு முடிவுகள் வரும்போது அவள் இங்கே இருக்கணும்! அவள் மேலே படிக்கவில்லை என்று சொன்னாள் ! ஆனால் ஒரு வேளை இங்கே அரசு மருத்துவமனையில் அவளுக்கு வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இருந்தால்,அந்த இடைவேளையில் அதை படித்துக் கொள்வாள் !
"நீ கில்லாடி தான் பேராண்டி! நாலையும் யோசிச்சு திட்டம் போடுகிறாய்! என்று சிலாகித்தவர், "நீங்க என்ன ஒன்னும் சொல்லாமல் இருக்கீங்க?" வசந்தனின் பெற்றோரைப் பார்த்தார் திலகம்!
"நாங்க சொல்றதுக்கு ஏதும் இல்லைங்கம்மா! அதான் அவனே சொல்லிட்டானே? எங்க பிள்ளை திருமணத்தையும் முடித்துவிட்டால் எங்களுடைய பெரிய பொறுப்பு முடிந்துவிடும்! அவன் வெளிநாடு கிளம்புறானேனு மனசுக்கு கஷ்டமாக இருந்தது! அடுத்து எப்ப வருவானோ என்ற ஏக்கமும் தான்!
இப்ப எங்களோடு கொஞ்சம் நாள் மருமகள் இருப்பாள் என்பதே சந்தோஷமாக இருக்கிறது! அதனால, ஒரு நல்ல நாளைப் பாருங்க! போய் பெண் கேட்போம்!" என்றார் பவானி.
"பவானி, நாளைக்கே நல்ல நாள்தான், என்றவர், சுரேந்திரா நீ இப்பவே போன் போட்டு மதனுக்கு தகவலை சொல்லிவிடு!"
என்றார் திலகம்!
🩷
மதனுக்கு மகள் மீது பெரிதாக பாசம் உண்டானதில்லை! காரணம்
நளினியின் மீதிருந்த வெறுப்பு ! அவள் பெற்ற பெண் என்பதாலேயே, அவளிடம் பாராமுகமாக இருந்து வந்தார்! சின்ன வயதில் பாட்டி தயவில் அவள் பெரிதாக எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை!
நிகிலா தந்தையின் பொறுப்பில் வந்த பிறகு அவளுக்கு, சிரிக்க, பேச, வெளியே செல்ல என்று எதற்கும் தடை தான்! அதையும் அவள் மௌனமாக ஏற்றுக் கொண்டாள்! வளர வளரத்தான் தந்தை ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்ற விஷயம் புரிந்தது!
சுரேந்திரனின் பழக்கம் கிடைத்த பிறகு, அவர் எந்நேரமும் இன்பாவைப் பற்றித்தான் அதிகம் பேசினார்! இன்பா சின்ன வயதில் செய்த குறும்புகள், அவளது பாசம், அவளுக்கு பிடித்தவை! மருத்துவம் படிக்க பிரிந்தபோது அவள் நலன் கருதி அந்த பிரிவை தாங்கிக் கொண்டது .. இப்படியாக மகள் புராணம் தான்! மதன் மனது கொஞ்சம் கொஞ்சமாக மகளின் புறம் சாய ஆரம்பித்தது!
நளினியின் மகளாகவே அவளை பார்த்தவருக்கு, அவரைப் போல அவருடைய மகள் இருப்பாள் என்று ஏன் நினைக்காமல் போனார் என்று கழிவிரக்கம் உண்டாயிற்று! அதன் விளைவாக நிகிலா நிறைய இழந்து விட்டிருக்கிறாள் என்பது புரிந்தது! ஆனால் அதை திருப்பி தரும் வல்லமை அவருக்கு இல்லை! அதே சமயம், இப்போது எல்லாம் அவளிடம் கடுமை காட்டுவதை குறைத்துவிட்டார்! ஆனால் கலகலப்பாக அவரால் பேச முடியாது! சமூகமாக நடந்து கொள்ள முயன்றார்! அதுவே நிகிலாவுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது!
மதன் கடந்த சில தினங்களாக நிகிலாவின் திருமணம் பற்றி சிந்திக்க தொடங்கியிருந்தார் ! அவள் படிப்பு முடிந்து விட்டது! மேலே படிக்கப் போவதில்லை என்று விட்டாள்! இனி நல்ல பையனாக பார்த்து முடிக்க வேண்டும்! சமீபத்தில் வித்யாவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட போது ரிஷியை பார்த்திருந்தார்! வசதியான இடத்துப் பையன் என்று அவனது தோற்றமே சொன்னது! அவனைப் பற்றி சுரேந்திரனிடம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்!
அன்று பிற்பகலில் சுரேந்திரனின் அழைப்பு வரவும், ஆவலாக பேசினார்! பொதுவான நலன் விசாரிப்புகள் முடிந்ததும், நேரடியாக விஷயத்திற்கு வந்தார் சுரேந்திரன்!
"நிகிலா கல்யாணம் பற்றி, எங்கம்மா உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க மதன்! உங்களுக்கு எப்போது தோதுபடும் என்று சொல்லுங்க! நாங்க கிளம்பி வர்றோம்!"
"நானும் அவள் கல்யாண விஷயமாக உங்ககிட்டே பேணும்னு இருந்தேன், சுரேன் ! உங்க அம்மா இதுல என்கிட்ட என்ன பேசப் போறாங்கனு தெரியலையே!"
"ஒரு நல்ல வரன் இருக்கு சுரேன்! உங்களுக்கும் தெரிஞ்ச பையன் தான்!" என்று சுரேந்திரன் விஷயத்தை தெரிவிக்க, மதன் சிலகணங்கள் யோசித்தவர், " "நானும் அவனை பார்த்தேன், நல்ல பையன், பொறுப்பானவன் என்று அன்று வரவேற்பில் பேசிக் கொண்டார்கள்! அவர்களுக்கு நிகிலாவைப் பிடித்திருக்கிறது என்றாலும், அவளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும்! பெண் பார்த்து பிறகு பிடிக்கவில்லை என்றால், நமக்குள் மனதளவில் விரிசல் வந்துவிடலாம்! ஆகவே நான் என் மகளிடம் இன்று கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன் சுரேன்! உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லையே?"
சுரேந்திரனுக்கு உண்மையில் சற்று நிம்மதியாக இருந்தது! மகளைப் பற்றி விட்டேற்றியாக பேசிக் கொண்டிருந்த மனிதர், இப்போது பெற்ற தந்தையாக, பொறுப்பாக பாசமாக என் மகள் என்று குறிப்பிட்டு பேசுவது நல்ல முன்னேற்றமாக தெரிந்தது!
"நிச்சயமாக மதன்! அவள் தானே வாழப் போகிறவள்! அவளிடம் கேட்டு சொல்லுங்கள்! நாங்கள் காத்திருக்கிறோம்! அவள் முடிவு எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்! " என்று பேச்சை முடித்துக் கொண்டார் சுரேந்திரன்!

மாலை சீக்கிரமாக வீடு வந்த மதன், எப்படி பேச்சை தொடங்குவது தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்! நிகிலாவுடன் அவர் சகஜமாக பேச இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்! இப்போது திடுமென ஒரு தந்தையாக , உரிமை எடுத்துப் பேசினால்.. மகள் என்ன நினைப்பாள் என்று தயங்கினார்!
தந்தையின் நடவடிக்கையை கவனித்த நிகிலாவுக்கு அவர் எதையோ பேச முயன்று , பேச முடியாது தவிப்பது புரிந்தது! இரவு உணவு தயார் ஆனதும்," அப்பா சாப்பிடலாமா? என்றாள்
சாப்பிட வந்து அமர்ந்தவர், "நீயும் கூட உட்கார்ந்து சாப்பிடுமா!" என்றதும், அவளுக்கு கண்கள் குளமாயிற்று! அவளது பல கால ஏக்கம் இது! இன்று அது நிறைவேறுகிறது என்பதை அவளால் நம்ப முடியவில்லை!
"இ.. இல்லை அப்பா, நீங்கள் சாப்பிடுங்க, நான் பிறகு சாப்பிட்டுக்கிறேன்!" என்றவளிடம்
"வாம்மா, உட்கார்ந்து சாப்பிடு, இந்த சந்தர்ப்பம் இனிமே நமக்கு எப்போது வாய்க்கும் என்று சொல்ல முடியாது!"
ஏதேதோ கற்பனையில் நொடியில் உலகை வலம் வந்துவிடக்கூடிய வல்லமை படைத்த மனம் தோற்றுவித்த காட்சிகளில் பதறிப்போனவளாக," என்னாச்சு அப்பா? உங்க உடம்புக்கு ஏதும் பிரச்சினையா? என்னவென்று சொல்லுங்க அப்பா! இல்லை, உடனே என்னுடன் கிளம்புங்க, மருத்துவமனைக்கு போகலாம்!" என்று கண்ணில் நீருடன் படபடத்த மகளைப் பார்த்தவருக்கு, அவள் தன் மீது வைத்திருக்கும் அளவற்ற பாசம் புரிந்தது! அவர் சொன்னதை அவள் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்தவராக..
"எனக்கு ஒன்றும் இல்லைம்மா, நான் நல்லா இருக்கிறேன்! சீக்கிரமாக பேரப்பிள்ளைகள் வந்து, அவர்களோடு ஓடிப்பிடித்து விளையாடும் அளவுக்கு நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்! நீ முதலில் உட்கார்ந்து சாப்பிடும்மா! உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்!"
மதன் சொன்ன பேரப்பிள்ளைகள் என்ற வார்த்தையில் நிகிலாவுக்கு, சட்டென்று விஷயம் புரிந்து போயிற்று! அதைவிட, தந்தையிடம் காணப்பட்ட மாற்றம் அவளுக்கு மேலும் மனநிறைவை தந்தது. இருவருமாக சாப்பிட்டு முடித்து கூடத்திற்கு வந்து அமர்ந்ததும், மதன் பேச ஆரம்பித்தார்!
"உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கிறேன் நிகிலா! நல்ல இடத்தில் இருந்து கேட்டிருக்காங்க! மாப்பிள்ளை வேற யாருமில்லைமா, அந்தப் பையன் வசந்தன் தான்! இன்பாவோட பாட்டி தான், அவனுக்காக உன்னை பெண் கேட்டிருக்காங்க! நான் உன் விருப்பத்தை கேட்டுவிட்டு சொல்வதாக சொன்னேன்! இது உன் வாழ்க்கை, நீதான் முடிவு செய்யணும்! நீ சரின்னு சொன்னால் நான் தகவல் சொல்லிடுவேன்! மாப்பிள்ளை கிளம்பறதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்றாங்க! அதுதான் எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு!"
"உங்களுக்கு சம்மதமா அப்பா?" என்றாள் நிகிலா
அந்தக் கேள்வியே மதனின் மனதை புரட்டிப் போட்டது! மகளிடம் சம்மதம் கேட்டால், அவள் தன்னுடைய சம்மதத்தை கேட்கிறாளே?
"எனக்கு சம்மதம் இல்லை என்றால் நீ இந்த கல்யாணத்தை பண்ணிக்க மாட்டியாமா?"
"நிச்சயமாக அப்பா! எனக்கு உங்க மனப்பூர்வமான சம்மதம் வேண்டும்!" காதலித்து ஓடிப் போக மாட்டேன் " என்று உங்களுக்கு நான் கொடுத்த வாக்கு நினைவிருக்கிறதா அப்பா? நீங்க கேட்டதால் சொல்கிறேன் அப்பா, வசந்தனை மணக்க எனக்கு சம்மதமே! ஆனால் உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் எனக்கு திருமணம் என்ற ஒன்று வேண்டாம் அப்பா!" என்றாள் திடமான குரலில்
மதன் பிஸினஸ் மேன்! அவருக்கு மகள் சொல்லாமல் சொன்னது புரிந்தது! வசந்தன் மீது அவளுக்கு விருப்பம் இருக்கிறது! அதே சமயம், தந்தையின் சம்மதத்தோடு தான் அவனை கைப்பிடிப்பேன் என்கிறாள்! இதற்கு மேலாக தந்தையான அவருக்கு என்ன வேண்டும்?
மதன் எழுந்து நின்று தன் இரு கரங்களை விரித்தார், ஒருகணம் புரியாமல் விழித்தவள், மறுகணம் அவரது அணைப்பில் மௌனமாக கண்ணீர் வழிய நின்றாள் நிகிலா! சிலகணங்கள், பாசப்பிணைப்பில் கட்டுண்டு நின்றனர் இருவரும்
"போதும் நிகிலா, இனிமே நீ எதுக்காவும் அழவே கூடாது! நாளைக்கு அவங்க வரும்போது, எனா மகள் தேவதை போல நிற்க வேண்டும்! அதனாலநீ போய் சீக்கிரமாக தூங்கு மா! அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு! குட் நைட்" என்று மகளை உச்சியில் முதல் முறையாக முத்தமிட்டு அனுப்பினார்!
நிகிலா அன்று வெகு காலத்திற்கு பிறகு நிம்மதியாக, வண்ணக் கனவுகளோடு நித்திரையில் ஆழ்ந்தாள்!

Last edited: