முன் தினம் இரவில்..
மதன் சுரேந்திரனை அழைத்து, நிகிலாவின் சம்மதத்தை தெரிவித்துவிட்டு, "உங்கம்மாவுக்கு இப்போது தானே அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது ! அவரை ஏன் அலைக்கழிக்க வேண்டும்! ? என்றைக்கு என்று சொல்லுங்கள் நாங்களே அங்கே வந்து விடுகிறோம்!" என்றார்!
"அப்படி என்றால், நாளை மாலை, நீங்கள் தயாராக இருங்கள்! நானே வந்து அழைத்துக் கொள்கிறேன்!" என்று சுரேந்திரன் சொன்னார்!
வீட்டினரிடம் விஷயத்தை சொன்னபின், வரதனுக்கும் அழைத்து விபரத்தை சொன்னார் சுரேந்திரன்!
வரதன், சம்பந்தி என்ற முறையில் தமிழரசனுக்கு விஷயத்தை தெரிவித்து, வைபத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்! உடனடியாக, எல்லாருமாக கிளம்புவது சிரமம்! ஆகவே, மகனையும் மருமகளையும் அனுப்பி வைப்பதாகவும் திருமணத்தில், குடும்ப சகிதமாக வந்து கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்!
அதன்படி வித்யா கணவனோடு, முற்பகலில், தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்!
மாலையில், நிகிலாவையும் மதனையும் சுரேந்திரன் அழைத்து வந்துவிட்டார்!
நிகிலாவிற்கு சாருவும் இன்பாவும் எளிமையாக அலங்கரித்தனர். அப்போதே கல்யாணக்களை வந்துவிட்டதாக திலகம் அவளுக்கு திருஷ்டி கழித்தார்!
இருவீட்டாரும் தெரிந்தவர்களாக இருந்ததால்,பொதுவான பேச்சுக்களை பேசிவிட்டு, திருமணத்தை ,நடத்துவது பற்றி திட்டமிட்டனர்! வசந்தனின் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்
🩷
🩷
மூன்று தினங்களுக்கு பிறகு, வந்த பிரம்ம முகூர்த்தத்தில் வசந்தன் - நிகிலா திருமணம் எளிமையாக, உற்றார் உறவினர் சூழ, கோவிலில் இனிதே நடைபெற்றது!
வசந்தனின் நண்பர்கள் அசோக் மற்றும் தீபக் அத்தனை காலையில் வருவதற்கில்லை என்றுவிட்டனர். திருமணத்திற்கு ரிஷியை அழைக்கப் போனபோதே அவன், வெளிநாட்டிற்கு பிஸினஸ் விஷயமாக கிளம்பிக் கொண்டிருந்தான்! ஆனந்தன் தான் போவதாக இருந்தது! ஆனால், அனிதாவுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்திருப்பதால், அவனைப் போகச் சொல்லிவிட்டார்! அது தவிர்க்க முடியாத பயணம் என்பதால், அவனும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை! முன்பாக இருந்தால் வசந்தன் மிகவும் வருந்தியிருப்பான்! ஆனால் இப்போது அவனுக்கு இன்பா தான் முக்கியமாக தெரிந்தாள்! அவன் வராதது வருத்தமாக இருந்தபோதும், இன்பாவின் மனநிலை கலையாமல் இருப்பதே பெரிதாக தோன்றியது!
கடைசி நேரத்தில் அழைத்திருந்த போதும், பவித்ரன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தான்!
மதனுக்கு மகள் முகத்தில் தெரிந்த சந்தோஷம், அவளது புகுந்த வீட்டினர் காட்டிய பிரியம் எல்லாம், பார்க்க, பார்க்க, அவளது வாழ்வில் இனி எந்த துன்பமும் நேராமல் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தார்!
திருமணநாள் இரவே, மணமக்களை தேன்நிலவு கொண்டாட கேரளாவிற்கு, மூன்று நாள் பயணமாக, அனுப்பி வைத்தார் மதன்!
நிகிலாவும், வசந்தனும், அந்த தனிமையை மகிழ்வோடு அனுபவித்தனர்! இருவரும் மனம் விட்டுப் பேசினர்! எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்து ஆலோசித்தனர்! நிகிலாவுக்கு வசந்தனைப் பிரிந்து எப்படி இருக்கப் போகிறோம் என்ற கலக்கம் அவ்வப்போது எழத்தான் செய்தது! அதை உணர்ந்தவனாக, வெகு சீக்கிரமாக அவளை தன்னுடன் அழைத்துக் கொள்வதாக வாக்கு கொடுத்தான்!
அவர்கள் கேரளாவுக்கு கிளம்பிச் சென்ற மறுநாள் சாருபாலா வெளிநாடு கிளம்பி சென்றார்! அரசு மருத்துவமனையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு முன்பாக தேர்வு எழுத வேண்டியிருக்கும்! தனியார் மருத்துவமனையில் என்றால் எங்கே என்றாலும் சேர்ந்து பணியாற்றலாம், இல்லாவிட்டால் சுயமாக கிளினிக் வைத்தும் நடத்தலாம் என்று இன்பாவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்!
இன்பா பாண்டிச்சேரியில் , அல்லது வேலூரில் உள்ள மருத்துவமனையில் வேலை கிடைத்தால் போதும் என்றிருந்தாள்! அதன்படி தன் நட்பு வட்டத்தில் சொல்லி, அவளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக சொன்னார் சாருபாலா!
தேனிலவு முடிந்து திரும்பிய இரண்டாம் நாள் வசந்தன் வெளிநாடு கிளம்பிச் சென்றான்!
மதனை தனியாக இருக்க வேண்டாம்,தங்களோடு வந்திருந்துவிடுமாறு பவானியும் வரதனும் அழைத்தனர்! திலகமும் கூட, அங்கே இல்லாவிட்டால் தங்களோடு வந்துவிடுமாறு வலியுறுத்தினார்!
மதன் தனித்தே வாழ்ந்து பழகிவிட்டவர்! நல்ல நாள் விசேஷம் என்றால் நிச்சயமாக கலந்து கொள்வதாக தெரிவித்து அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
மதன் தனது பிஸினஸ் எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்திவிட்டு, வெளிநாட்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பிய பிறகு பொறுப்புகளை வசந்தனிடம் ஒப்படைக்க எண்ணி, அந்த வேலைகளில் தீவிரமாக இறங்கினார்!
🩷
🩷
நிகிலா புகுந்த வீட்டில் சில நாட்கள் பிறந்த வீட்டில் சில நாட்கள் என்று தங்கியிருந்தாள்!
சில தினங்கள் கழித்து, எல்லோரும் எதிர்பார்த்தது போல் இன்பாவிற்கும் நிகிலாவிற்கும் தேர்வு முடிவுகள் வந்துவிட்டது! கல்லூரியில் முதல் மாணவியாக இன்பா தேர்வாகியிருந்தாள்! நிகிலாவும் மூன்றாம் இடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாள்!
சாருபாலாவிற்கு மருமகளின் தேர்வு முடிவு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது! முடிந்தால் அரசு மருத்துவமனையில் சேர்வதற்கான தேர்வை எழுதும்படி சொன்னார்!
கோவைக்கு, இன்பாவும் நிகிலாவும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது, இரு குடும்பத்தினரும் சென்றிருந்தனர்! அவர்களுடன் மதனும் இரண்டாம் முறையாக மகளுக்காக அவளது கல்லூரிக்கு சென்றார்!
விழா முடிந்தபின், அருகில் இருந்த சுற்றுலா தளங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, இறுதியாக மருதமலை கோவிலுக்கு சென்றுவிட்டு அனைவரும் ஊர் திரும்பினர்!
🩷🩵🩷
அடுத்து வந்த நாட்கள், இயல்பாக சென்றது!
அன்று காலையில் வரதனும் பவானியும் கையில் இனிப்புடன், வீட்டிற்கு வருகை தந்தனர்!
"என்னம்மா விசேஷம், இவ்வளவு காலையில் வந்திருக்கீங்க?" திலகம் அவர்களை வரவேற்று விசாரித்தார்!
"எல்லாம் நல்ல செய்தி தான் மா. உங்க பேத்தி வித்யா, அம்மா அகப்போகிறாளாம்! சம்பந்தியம்மா போன் பண்ணினாங்க! உங்ககிட்டே நாங்க சொல்றதா, சொல்லிட்டோம்!
"வாழ்த்துகள் மா! நல்ல செய்தி சொல்லிட்டே! சாந்தி சீக்கிரமாக பால் பாயாசம் பண்ணுமா! "என்று உற்சாகமானார் திலகம்!
பவானிக்கு, இவர் எந்த வித்தியசமும் பார்க்காமல் அத்தனை பேர் மீதும் எப்படி பாசமாக இருக்கிறார், என்று உள்ளூர வியப்பாக இருந்தது!
"வித்யா ஆரோக்கியமாக இருக்கிறாளா? எத்தனை நாளாகுது தலைக்குளிச்சு? மசக்கை அதிகமாக இருக்கிறதா?" என்றார் திலகம்!
"ஐம்பது நாள் ஆகுதாம்! என்ன சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கிறாளாம்! ரொம்ப பலவீனமாக இருக்கிறதால் டாக்டர் பெட் ரெஸ்ட்ல இருக்கச் சொல்லியிருக்காங்க! உடனே போய் பார்க்கணும்னு தான் மனசு அடிச்சுக்குது! ஆனால் நிறைய லீவு எடுத்தாச்சு! அவருக்கும் ஸ்கூல் திறந்துட்டாங்க! சனி ஞாயிறு பார்த்து போய் வரலாம்னு நினைக்கிறோம்! உங்களுக்கு வசதிப்பட்டால் எல்லாருமாக போய் வரலாம் அம்மா!"
"கோவைக்கு போய் வந்ததுல இருந்து எனக்கு கொஞ்சம் உடம்பு சரியா இல்லைம்மா! டாக்டர் ஓய்வாக இருக்க சொல்லியிருக்கார்! இன்பா வேற பாண்டிச்சேரிக்கு வேலைக்கு போகப் போறேன்னு சொல்லிட்டு இருக்கிறாள்! அவள் கிளம்பறப்போ நான் இங்கே இருக்கணும்னு நினைக்கிறேன் பவானி! அதனால முதலில், நீங்க நிகிலாவை கூட்டிட்டு போய் பார்த்துவிட்டு வாங்க! மூனு மாசம் முடிஞ்சதும், எல்லாருமாக போய் முறை செஞ்சிட்டு வரலாம்!" என்றார் திலகம்!
"சரி அம்மா! நாங்க வேலைக்கு போகிற வழியில் இங்கே வந்தோம்! ஒரு மணி நேரம் அனுமதி வாங்கியிருக்கோம்! இப்ப ட்ராபிக் வேற அதிகமாகிடுச்சு ! அதனால் இப்ப கிளம்பினால் தான் சரியாக இருக்கும்! " என்று வரதனும் பவானியும் விடை பெற்றுக்கொண்டனர்!
மாடியில் நின்று அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த இன்பாவின் கண்கள் தானாக நாட்காட்டியை சென்றடைந்தது! வழக்கமான, நாட்களுக்கு மேலாக ஐந்து நாட்கள் கடந்துவிட்டிருந்தது!
மனதுக்குள் திக்கென்றது! இரண்டு நாட்கள் முன்னே பின்னே எப்போதும் ஆகிறதுதான்! ஆனால் இது போல ஆனதில்லை! பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது! கூடவே அப்படி உறுதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் பூதாகரமாக எழுந்தது!
இன்பா என்ன செய்யப் போகிறாள்? அவளது வீட்டினரிடம் இருந்து மறைப்பாளா? அல்லது வேறு மாதிரியான முடிவை எடுப்பாளா??
78. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!
இன்பா பரிசோதித்த போது, அவளது யூகம் சரியானதாக இருந்தது! ஒரு புறம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! மறுபுறம் அங்கீகாரமற்ற முறையில் உருவான வித்தை, அவள் சுமக்கத்தான் வேண்டுமா? அப்படி சுமப்பதால், சமூகத்தின் முன் அவளும் அவளது குடும்பத்தினரும் அவமானப்பட்டு நிற்க நேரிடும்!
ரிஷிக்கும் அவளுக்குமான உறவுக்கு சாட்சியாக வந்திருக்கும் சிசுவை அவளால் அழிக்க முடியுமா? அவளது வாழ்வில் திருமணம் என்ற ஒன்று நிகழப்போவதில்லை! ரிஷியின் நினைவு ஒருவேளை திரும்பினால்.. அதுவும்கூட உறுதியாக சொல்வதற்கில்லை! அப்படி அவனது நினைவு திரும்பும் போது அவன் வேறு யாருக்கோ கணவனாக இருந்துவிட்டால்? இப்படி அடுக்கடுக்காக யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு என்றுமே பதில் கிடைக்க வழியில்லை! இப்போது அவள் முடிவு செய்யும் கட்டத்தில் இருக்கிறாள்! ரிஷியின் எந்த பொருளும் அவளிடம் இல்லை! இந்தக் குழந்தை தான் அவர்கள் பழகியதற்கான ஒரே அத்தாட்சி! அவளது வாழ்க்கைக்கு ஒரு ஆதாரமாக இந்தக் குழந்தை இருக்கட்டுமே! இன்பா முடிவு செய்து விட்டாள்!
அதே சமயம், இந்த விஷயம் அவளது குடும்பத்திற்கு தெரியக் கூடாது! அதற்கு அவள் இந்த ஊரில் இருக்கக்கூடாது! அவள் எந்த ஊருக்கு சென்றாலும் அவர்கள் தொடர்ந்து வர வாய்ப்பு இருக்கிறதே! பிரிந்து சென்றுவிடலாம் தான் அதற்கு சரியான காரணம் தெரிவிக்க வேண்டும்!
தமிழரசன் எல்லா இடத்திலும் மிகுந்த செல்வாக்கு உடையவர்! அவர் நினைத்தால், இன்பா எந்த மூலைக்கு சென்றாலும் தேடி கண்டுபிடித்து விடலாம்! யாரிடம் இதுபற்றி யோசனை கேட்பது என்று தெரியாமல் திணறினாள் இன்பா!
குடும்பத்தினரை வருத்தப்பட வைத்துவிட்டு அப்படி இந்தக் குழந்தையை பெற்றுத்தான் ஆகவேண்டும் என்று என்ன ? ஒருமனது கேட்டது! பெற்றவர்கள், உறவுகள் எல்லாம் ஒரு காலம் வரைதான் அவளோடு பயணம் செய்ய முடியும்! அவர்களுக்குப் பிறகு வாழும் காலம் யாவும் துணையாக ஒரு ஜீவன் வேண்டுமே! வேறு எந்த சுகமும் அவளுக்கு இல்லை என்று ஆகிவிட்ட பிறகு, இந்தப் பிள்ளைச் சொந்தம் தரும் சுகமாவது இருந்து விட்டு போகட்டும்!
இன்பா, தனக்குள்ளே சுய அலசலில் ஈடுபட்டாள்! இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை! இன்னமும் ஒரு மாதம் அவகாசம் இருக்கிறது! அதற்குள்ளாக அவள் போகும் இடத்தை தீர்மானிக்க வேண்டும்! யார் துணையும் இல்லாமல் எப்படி செய்வது என்பதுதான் ஒரே குழப்பமாக இருந்தது!
நான்கு தினங்கள் சென்றது, இன்பா தினப்படி வழக்கமாக செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தாள்! இப்போது கூடுதலாக, வேலை வாய்ப்பு பகுதியில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள்! அன்றைய செய்தித்தாளில் வந்திருந்த சிறிய துண்டு விளம்பரம் கண்ணில் பட்டது!
கொடைக்கானலில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் தங்கியிருந்து மருத்துவம் பார்க்க பெண் மருத்துவர் தேவை என்ற அறிவிப்பு இருந்தது! உடனடியாக தொடர்பு கொண்டு பேசினாள்! அங்கேயே தங்கிக்கொள்ளலாம்! சாப்பாடும் அவர்கள் பொறுப்பு! ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் முறையில் வேலை செய்ய வேண்டும்! அந்த எஸ்டேட் மேலாளர் தான் பேசினார்! நல்ல இடம் தான்! ஆனால் வீட்டில் அதைச் சொல்லி கிளம்ப முடியாது!
பவித்ரனின் நினைவு வந்தது! அவனிடம் உண்மை சொன்னால் நிச்சயமாக உதவி செய்வான்! ஆனால் அவனும் அவளை தவறாக நினைக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது! ஆகவே வேறு வழிதான் பார்க்க வேண்டும்!
இன்பா தீவிரமாக யோசித்தாள்! ஒரு யோசனை தோன்றியது! பள்ளியில் அவளோடு படித்த மாணவிகளின் தற்போதைய நிலை அவளுக்கு தெரியும், எல்லோரும் படிப்பை முடித்துவிட்டு வெவ்வேறு ஊர்களில் பணி செய்கிறார்கள்! ஒரு சிலர் திருமணம் செய்து குடும்பத்தை கவனிக்கிறார்கள்! திருமணமானவர்களை தவிர்த்து மற்றவர்களிடம் போன் செய்து பேசினாள்! அவர்களும் உற்சாகமாக அவள் சொன்னதைக் கேட்டு சம்மதம் சொன்னார்கள்! தேதி, தங்கும் இடம், வாகன வசதி , சாப்பாடு, என்று அனைத்தையும் பேசி முடிவு செய்து, அவர்களின் ஒருவரிடம் பொறுப்பையும் ஒப்படைத்தாள்! எல்லாருமாக தங்கள் பங்கு பணத்தை முன்னதாக அனுப்பிவிட்டனர்! அனைவரும் கூடும் இடம் திண்டுக்கல் ரயில் நிலையம் ! அங்கிருந்து தான் கார் பயணம் ! பெரியகுளத்தில் இருந்து புறநகர் பகுதியில் அவர்களில் ஒருத்தியின் குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது! அங்கே தான் தங்குவதாக முடிவு செய்திருந்தனர்! சாப்பாடு செய்ய அங்கேயே ஆட்களும் இருந்ததால் அந்தப் பிரச்சினையும் தீர்ந்தது!
அடுத்த இரண்டு நாட்களில் எல்லாம் தீர்மானிக்கப்பட்டது! மறுநாள், சுரேந்திரன் கிளம்பிச் சென்றதும், சாப்பிட வந்து அமர்ந்த இன்பா, "பள்ளியில் படித்தவர்கள் எல்லாருமாக ஒரு கூடுகை(மீட்டிங்) ஏற்பாடு செய்திருக்கிறார்கள்! அதற்காக மூன்று நாள் பயணமாக திருநெல்வேலி போகிறேன்" என்ற மகளை கேள்வியாகப் பார்த்தார் சாந்தி!
"என்ன சுரபி, திடீர்னு சொல்றே? இது பத்தி நீ முன்னாடி எதுவும் சொல்லவில்லேயே? யார் யாரெல்லாம் போறீங்க?"
"நாங்க பத்து பேர் தான் மா! அவங்க எல்லாம் வேலைக்கு போறவங்க! நான் மட்டும் தான் டாக்டர்! இது முன்னாடி நினைச்சது, ஆனால் அது நடக்குமா என்று யோசனையோடு விட்டுவிட்டது! இப்போது பேசும் போது இந்த ஐடியா கிடைச்சது! எப்படியும் நானும் வேலையில் சேர வேண்டும்! அதற்கு முன்னால் பிரண்ட்ஸ்கூட ஜாலியாக ஒரு ட்ரிப் போய் வரலாம்னு நினைச்சேன்! வேலைக்குப் போனால் இதற்காக நேரம் ஒதுக்கிறது சிரமம்!"
"நீ சொல்றது சரிதான்! திருநெல்வேலி என்றால் தமிழரசன் மாமாக்கிட்டே சொல்லி எல்லாம் ஏற்பாடு செய்யலாம். எனக்கும் நிம்மதியாக இருக்கும்! "
"நான் தப்பா சொல்லிட்டேன் அம்மா! திண்டுக்கல் தான் போகிறோம்! அங்கிருந்து, பெரியகுளம் போய் தங்கிட்டு, வைகை அணை, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி போய் வரலாம்னு ஏற்பாடு அம்மா!" நாம் அந்தப் பக்கம் போனது இல்லைதானே? ப்ளீஸ் அம்மா, மறுக்காதீங்க!"
"உன்னை தனியாக எப்படி அனுப்புவது சுரபி! நிகிலாவையும் கூட கூட்டிட்டு போறியா?"
"நான் ஒரு டாக்டர் அம்மா! சின்னக் குழந்தை இல்லை! வெளியூரில் தங்கித்தான் வேலை செய்யப் போறேன்! அத்தோடு நிகிலா, எங்க ஸ்கூல் இல்லைமா! அவள் சனிக்கிழமை பெரியம்மா, பெரியப்பா கூட தென்காசிக்கு போவதாகச் சொன்னாளே! நாங்க அன்றைக்கு தான் கிளம்பறதாக பிளான்! எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு! "
"போய் வரட்டும் சாந்தி! பொத்தி பொத்தி வச்சு வளர்க்கிறது, அவளுக்கே நாளைக்கு சிரமமாகப் போகும்! நீ கவலைப் படாதே! என்று சொன்ன திலகம், " இன்பாக்குட்டி, நீ போகிற இடத்தோட விலாசம், உன் தோழிங்க நம்பர், எல்லாம் பக்காவாக தந்துவிட்டு கிளம்பு சரியா?" என்றார்!
"நிச்சயமாக பாட்டி! தாங்க்யூ செல்ல பாட்டி! என்று அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்! இனி இப்படி திரும்ப எப்போது கொஞ்ச முடியுமோ என்னவோ? என்று உள்ளூர ஏக்கம் உண்டாயிற்று!
கிளம்புவதற்கு முன்பு அவளுக்கு பிடித்த சமையல் செய்யச் சொல்லி சாப்பிட்டாள்! பாட்டியின் மடியில் படுத்து கதைக் கேட்டாள்! தந்தையின் தோளில் சாய்ந்தபடி, காரில் ட்ரைவ் போனாள்! நிறைய புகைப்படங்கள், வீடியோக்களை சேமித்துக் கொண்டாள்!
சனிக்கிழமை காலையில், மதுரை செல்லும் ரயிலில் ஏற்றிவிட வந்திருந்தார் சுரேந்திரன்!
"அப்பா, நான் வர்ற வரைக்கும், பாட்டியையும், அம்மாவையும் நல்லபடியாக பார்த்துக்கோங்க!" நான் போய் இறங்கியதும் போன் செய்கிறேன்!" என்ற மகளிடம் புன்னகையுடன்,
" அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! நீ பத்திரமாக போய் வாடாம்மா! போன் எப்பவும் ஆன்ல வைடா! நீ தான் எங்க எல்லாருடைய உயிர்! அதனால போகிற இடத்தில் கவனமாக இருந்துக்கோ" என்று விடைபெற்றார் சுரேந்திரன்!
இது தான் கடைசி சந்திப்பு என்பதை அந்த பெரியவர்கள் யாரும் அறியவில்லை!
இன்பாவின் திட்டம் தான் என்ன?