வசந்தன் வெளிநாடு சென்ற பின்னர், வித்யா கருவுற்ற செய்தி கிடைத்ததும், பவானிக்கு மகளை காண செல்வதற்கு மனது துடித்தது! அது ஒன்றும் பக்கத்தில் இல்லையே? நினைத்தாலும் சென்று பார்ப்பதற்கு? இந்த ஒரு சமயம் மட்டுமல்ல, இனி வரும் காலங்களிலும் இப்படித்தான் மகளை காண வேண்டும் என்றால் நேரம் காலம் எல்லாம் பார்த்துதான்போக வேண்டி வரும் என்பது புரிந்தது!
அப்போது தான் அவருக்கு அந்த யோசனை வந்தது! வங்கியில் முன்பு வெளியூருக்கு மாற்றல் கிடைத்த போதெல்லாம் பிள்ளைகளை நினைத்து மறுத்து, உள்ளூர் கிளைகளில் மாற்றல் பெற்று வந்திருந்தார்! இந்த முறை அவராக சென்று மாற்றல் வேண்டி விண்ணப்பித்துவிட்டார்! கூடவே வராதனிடமும் விஷயத்தை தெரிவித்தார்!
வரதனின் சக ஆசிரியர் சாரங்கனுக்கு,ஏற்கனவே திருநெல்வேலிக்கு மாற்றல் வந்திருந்தது! அங்கே உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் வேலை காலியாவதால், அவரை போக சொன்னது பள்ளி நிர்வாகம்!
ஆனால் அவரோ, பிள்ளைகளை அப்போது தான் பெரிய பள்ளியில் சேர்த்திருந்தார்! அத்துடன் சிட்டி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு,
எங்கோ இருக்கும் ஊருக்கு போய், எல்லாம் புதிதாக தொடங்க வேண்டியிருக்கும், தனக்கு பதிலாக, வரதனை அந்த பணிக்கு போக முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார்!
வராதனும் மனைவியை பின்பற்றி மாற்றல் கேட்கத்தான் நினைத்திருந்தார்! ஆனால் சாரங்கன் வந்து கேட்கவும் அவருக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல, மிகுந்த சந்தோஷம்! வரிசைப்படி அடுத்த இடத்தில் இருக்கும் வரதன், அந்த வேலைக்கு தானே செல்வதாக சொன்னார்!
சாரங்கனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ! அதை மேலிடத்தில் தெரிவிக்க ஓடினார்!
இப்படியாக, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில், கணவனும் மனைவியும் திருநெல்வேலிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு, கிளம்பத் தயாராகினர்! அவர்களுக்கு தங்குவதற்கு வீடு பார்த்து, மற்ற வசதிகளையும் தமிழரசன் சிறப்பாக செய்து கொடுத்தார்!
ஆனால் அதற்கு இடையில் நடந்து போன அந்த சம்பவம் தான் எல்லாரையும் உலுக்கிப் போட்டது!

அன்று தான் பவானியும், வரதனும், மகளைப் பார்த்துவிட்டு, நிகிலாவை அங்கேயே சில நாட்கள், இருக்கட்டும் என்று விட்டுவிட்டு ஊர் திரும்பியிருந்தனர்! காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் சுரேந்திரன் வீட்டிற்க்கு தமிழரசன் வீட்டில் கொடுத்துவிட்டிருந்த பழங்கள், பலகாரங்களை கெடுப்பதற்காக வந்திருந்தனர்! சுரேந்திரனும் அப்போதுதான் வேலை முடித்து வந்திருந்தார்!
அனைவருமாக சிற்றுண்டி, காபி அருந்தியபடி பேசிக் கொண்டிருந்த போதுதான் அந்த செய்தி இடி போல வந்து இறங்கியது!
இரண்டு தினங்களுக்கு முன்பு சுற்றுலாவுக்கு சென்ற இன்பாவை காணவில்லை என்ற செய்தி!
அந்த செய்தி கேட்ட சாந்தி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிய, திலகமும் அதிர்ச்சியில் சிலையாக சமைந்து போக..
ஆம்புலன்ஸ்க்கு சொலாலி காத்திருக்க அவகாசம் இல்லை என்று உணர்ந்து, சுரேந்திரன், காரோட்டியிடம் வண்டியை கிளப்பச் சொல்லி, மனைவியை காருக்கு தூக்கிப் போய் படுக்க வைத்தார்!
வரதனும் அவர்கள் வந்திருந்த காரை கிளப்ப,பவானி பின் இருக்கையில் ஏறிக் கொள்ள, திலகத்தை தூக்கி வந்து கிடத்தினார் சுரேந்திரன்!
மருத்துவமனையில்..
இரு பெண்மணிகளுக்கும் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது!
சாந்தியை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு மைல்ட் அட்டாக் என்றார் மருத்துவர்!
திலகத்திற்கு வெகு நேரமாகியும் சுயநினைவு திரும்பவில்லை! அநேகமாக அவர் கோமாவிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது!" என்று மருத்துவர் தெரிவித்தார்!
காத்திருந்த மூவருக்கும் அந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது! ஒருபுறம் பிள்ளையை காணோம்! இன்னொருபுறம் இருவரும் இப்படி படுத்திருப்பது சுரேந்திரன் உள்ளூர நொறுங்கிப் போனார்!
சுரேந்திரனுக்கு கடைசியாக மகளை அனுப்பி வைத்த காட்சி நினைவுக்கு வந்து அழுகையில் குலுங்கினார்!
வரதனுக்கும்,பவானிக்கும் அவரை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை! அவர்களுக்குமே இன்பா காணாமல் போனதை ஜீரணிக்க முடியவில்லை! சுரேந்திரன் இன்னும் விளக்கமாக சொல்லவில்லை, சுருக்கமாக இன்பாவை காணவில்லை என்கிறார்கள்" என்று சொன்ன அளவில் சாந்தியும், திலகமும் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டனர்! அழகான பெண், இளம் குருத்து! அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று பவானியால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை! மேற்கொண்டு என்ன செய்வது என்றும் அவருக்கு புரியவில்லை!
வரதன் சென்று மூவருக்கும் சூடாக டீ வாங்கி வந்தார்! சுரேந்திரனை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்!
"தம்பி, பாப்பாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது! தைரியமாக இருங்க! பாப்பா எப்படி காணாமல் போச்சு? அவங்க என்ன சொன்னாங்க? தெளிவாக சொல்லுங்க! தேடுறதுக்கு நம்மால ஆன மட்டும் முயற்சி செய்வோம்!"
என்றார் வரதன்.
"இன்பா குளிக்கப்போன போது ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறாள்! ஆட்களை வைத்து தேடியும் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை! அவளது உ.. உ.. " அவரால் அதை வாயால் சொல்லக்கூட முடியாது, அழுதார் சுரேந்திரன்!
அந்த செய்தி, வரதனுக்கும் பவானிக்கும் மிகுந்த அதிர்ச்சி தான்! இன்பா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தெரியாத நிலை! சாந்தியும் திலகமும் மீண்டு வந்து பிள்ளையைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் சொல்வது? அவர்கள் உயிருக்கு இதனால் ஏதும் ஆபத்து உண்டாகிவிட்டால்.. உண்மையில் நினைக்கவே பயமாக இருந்தது!
சுரேந்திரனின் கைப்பேசி ஒலிக்க, சுரத்தின்றி எடுத்துப் பார்த்தார்! சாருபாலா!
அக்காவின் பெயரைப் பார்த்ததும் அவருக்கு மேலும் அழுகை பொங்கியது! அவரால் பேச முடியும் என்று தோன்றவில்லை,வரதனிடம்
கைப்பேசியை கொடுத்துவிட்டு, முகத்தை மூடிக் கொண்டார்!
பவானிக்கு அவரைப் பார்க்கவே முடியவில்லை! எப்போதும் ஒரு அமைதியான புன்னகையோடு வலம் வரும் மனிதர் ! இன்றைக்கு இப்படி பொதுவெளியில் அழுவதை பார்க்க மனது கனத்துப் போயிற்று !
வரதன் போனை மனைவியிடம் தந்து பேசும்படி சொன்னார்!
"ஹலோ தம்பி! எல்லாரும் எப்படி இருக்கீங்க? சாருபாலா உற்சாகமாக நலம் விசாரித்தார்.
"சாரு, நான் பவானி பேசுறேன்!" என்றதும் மறுமுனையில் அமைதி நிலவியது!
"ஹலோ! என்று பவானி மீண்டும் குரல் கொடுக்கவும்,
"என்ன ஆச்சு அண்ணி ? யாருக்கும் உடம்புக்கு முடியலையா? இன்பா எங்கே? அவளுக்கு ஏதும் பிரச்சனையா?"
பவானி உண்மையில் ஆச்சர்யப்பட்டுவிட்டார்! சரியாக கணித்து விட்டாரே இந்த பெண்மணி!
"சொல்லுங்க அண்ணி ! எது என்றாலும் மறைக்காமல் சொல்லிடுங்க!"
பவானி விஷயத்தை சொல்லி முடித்ததும்! மறுமுனையில் சாருபாலா ஒரு கணம் அமைதியாகி, அதன் பிறகு, " அண்ணி, நான் இந்தியா வருவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்! நான் விரைவில் வருவதற்கு முயற்சி செய்கிறேன்! அதுவரை கொஞ்சம் அவர்களை பார்த்துக் கொள்ள முடியுமா?"
"நிச்சயம் சாரு, நீங்க இப்படி கேட்க வேண்டுமா என்ன? நீங்க அங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வாங்க !"
"ரொம்ப நன்றி அண்ணி ! இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்! நேரம் கிடைக்கும் போது நான் அழைக்கிறேன்!"
சாருபாலாவிற்கு மருமகளை பிறந்ததும் கையில் வாங்கிய தருணம் நினைவுக்கு வந்தது! "கண்ணம்மா, நீ இல்லாத வாழ்க்கையை நாங்கள் எப்படியாடா வாழ்வோம்? உன் அம்மாவை நான் என்ன சொல்லி தேற்றுவேன்? என்னாலே தாங்க முடியவில்லையே! அவள்.. தவமிருந்து உன்னை பெற்றவள்! உன் இழப்பை என்ன சமாதானம் சொல்லி ஏற்க வைப்பேன்!" முகத்தை மூடிக்கொண்டு, தன்னை மறந்து அழுதார்!

விஷயத்தை கேள்விப்பட்டதும், தமிழரசன் நிகிலாவுடன் அங்கே வந்துவிட்டார்! பொறுப்பை தான் எடுத்துக்கொண்டார்!
நிகிலாவின் தந்தை மதனும் உதவிக்கு வந்துவிட்டார். அனுமதிக்கபட்டிருந்த இரு பெண்களில் சாந்தி, நினைவு திரும்பியதும், மகளின் இழப்பை நினைத்து கதறி அழுதார், சுரேந்திரன் அவரை தேற்ற இயலாமல் கலங்கி அமந்திருந்தார் அப்போது, பவானி உள்ளே வந்தார்!
"பெரியம்மாவை வந்து பாருங்க, தம்பி, என்று அழைக்க, சாந்தியின் அழுகை நின்றுவிட , "என்னாச்சு அக்கா? என்றார்!
"ஒன்றும் இல்லை சாந்தி, அவங்களால பேச முடியலை! எழுந்து உட்காரவும் முடியலை! டாக்டர் செக் பன்னிட்டு இருக்கார்! அதான் தம்பியை கூப்பிட வந்தேன்!"
"ஐயோ, அத்தை, அத்தைக்கு என்னாச்சு?" என்றவர் மற்ற இருவருக்கும் முன்னதாக வெளியே சென்றார்.. பவானியின் யுக்தி வேலை செய்ததை பார்த்து பெருமூச்சுடன் எழுந்து மனைவியின் பின்னால் சென்றார் சுரேந்திரன்!
உண்மையில் திலகத்திற்கு, கைகால்கள் செயல் இழந்து விட்டது. பேசவும் முடியவில்லை. அவர் நடக்க வேண்டும் என்றால் அவர் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்! இல்லை என்றால் ஏதும் செய்வதற்கு இல்லை என்றுவிட்டார் மருத்துவர்!
திலகம் இப்படி ஆனதில், சாந்தி, மகளை இழந்த, துக்கத்தை அடக்கிக் கொண்டு, அவருக்கு சேவை செய்ய முயன்றார்! அவர்களின் பெண்ணை காணோம் என்று தெரிந்ததும், இந்த பெண்மணி இப்படி படுத்துவிட்டாரே! ரத்த உறவு இல்லை, ஆயினும் அவரைப்போல யாராலும் பாசம் வைக்க முடியாது என்று தோன்றியது!
அடுத்த பதினைந்து நாட்கள் எப்படி சென்றது என்று கேட்டால், அவர்கள் யாருக்கும் தெரியாது! பவானி, வரதன், மதன், நிகிலா, தமிழரசன் என்று அத்தனை பேரும்
பாக்கபலமாக நின்றனர்!
சாருபாலா வருவதற்கு தாமதம் ஆகும் என்று தெரிந்ததும், தமிழரசன் அந்த ஏற்பாட்டை செய்தார்!
மூவரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்! சுரேந்திரன் மறுக்கத்தான் செய்தார்!
ஆனால், "தம்பி , அவங்க எனக்கும் அம்மா மாதிரி தான்! இது என்னோட கடமை! அது மட்டும் இல்லை, அங்கே நல்ல கற்று, தண்ணி இருக்கு! சீக்கிரமா அம்மா பழையபடி எழுந்து, நடக்கணும்ல?அதுக்கு,குற்றாலத்தில் மருத்துவம் பார்க்கலாம்! நீங்க இங்கே தனியா இருந்தால் பாப்பா நினைப்பு கஷ்டப்படுத்தும்! எனக்கு நம்பிக்கை இருக்கு, நம்ம பாப்பா எங்கயோ உயிரோட தான் இருக்கும்! நிச்சயமா திரும்பி வருவாள்! நானும் தேடுறதை விட மாட்டேன்!" என்று எப்படி எப்படியோ பேசி சம்மதிக்க வைத்து அழைத்து போய்விட்டார்!
சாந்தியை, சும்மா இருக்க விடாமல் பார்த்துக்கொண்டர் செண்பகம்! திலகத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவரிடம் கொடுத்துவிட்டார்! மற்ற நேரம் வித்யாவிற்கு அவர் கையால் சமைத்து போட்டு அவள் சாப்பிடுவதை ரசிப்பார்! இன்பாவின் இழப்பை அவர் இப்படித்தான் தங்கிக்கொள்ள முயன்றார்!
சரியாக ஒரு மாதம் கழிந்த நிலையில் சாருபாலா இந்தியா வந்து சேர்ந்தார். காவல் நிலையத்தில் இன்பாவை தேடி கண்டுபிடிக்க மனு கொடுத்து மீண்டும் அந்த கேஸை திறக்க செய்தார். அடுத்து தம்பியையும் சாந்தியையும் அழைத்துக் கொண்டு சென்னை கிளம்பினார்! திலகத்தையும் அழைத்துப்போவாதாக சொன்னப்போது, தமிழரசன், இங்கே என்னோடு இருக்கட்டும், நான் வைத்தியம் பார்த்துக்கொள்கிறேன்" என்று விட்டார்.
அதன் பிறகு, சென்னை வந்து சாருபாலா, தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். சுரேந்திரன் அவரது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்! வீட்டில் மனைவியை தனியாக விட அவருக்கு பயம்! இருவருமாக, வீட்டில் தோட்டம் போட்டனர். அவர்கள் இயல்பு வாழக்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஒருவாறு திருப்பினர், கிட்டத்தட்ட இன்பா காணாமல் போய் ஒரு வருடம் கழித்து அந்த சம்பவம் நிகழ்ந்தது!
80. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!
ரிஷி காரை செலுத்திபடி யோசனையில் ஆழ்ந்திருந்தான்! வசந்தனும் அமந்திருந்தான்!
வசந்தனிடம் தனக்கு வரும் கனவு பற்றி சொல்லலாமா? அப்படி சொன்னால், நம்புவானா? அல்லது கேலி செய்வனா ? என்று குழம்பிக்கொண்டிருந்தான் ரிஷி! அவன் அவ்வாறு எண்ணுவதற்கு காரணம், அவர்கள் இருவரும் இடையில்..அதாவது வசந்தனின் திருமணத்திற்கு பிறகு சந்தித்துக் கொள்ள சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை!
பவானியும் வரதனும் வசந்தன் கிளம்பிச் சென்ற சில மாதங்களில் நெல்லைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போனதாக ரகுவின் மூலமாக கேள்விப்பட்டிருந்தான் ரிஷி! ஆகவே வசந்தன் இந்தியா வரும்போது தெரிவித்தாலும் இருவருக்கும் சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை! வசந்தனுக்கு மகள் பிறந்தபோது தெரியப்படுத்தியிருந்தான்! ரொம்பவே சந்தோஷமாக இருந்தது! ரிஷி அப்போது எல்லாம் பிஸினஸ் தவிர வேறு சிந்தனை இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தான்! ஆனந்தனின் பாதி பொறுப்பு அவனைடையதாக மாறியிருந்தது!
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும் நண்பனிடம், முன்பு போல பேச ஏனோ சற்று தயக்கமாக இருந்தஏஜெண்டாகது.
"என்னடா காரில் ஏறியதில் இருந்து எதுவுமே பேசாமல் வர்றே? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க தானே? ஆன்ட்டி, அங்கிள் திருநெல்வேலிக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டதாக ரகு தான் புலம்பிட்டு இருந்தான்! வகை தொகையாக நினைச்சாப்ல போய் சாப்பிட முடியாமல் போனதில் அவனுக்கு ரொம்ப வருத்தம்! " என்று சிரித்தான் ரிஷி!
கூடச் சேர்ந்து சிரித்த வசந்தன்," அது என்னவோ உண்மைதான்! அவன் எங்க வீட்டுல ஒருத்தனா இருந்து பழகிட்டானில்ல! அம்மா அப்பா, அந்தப் பக்கமாக மாற்றல் வாங்கிட்டுப் போனதுக்கு வித்யா தான் காரணம்! நினைச்சபோது போய் மகளையும் பேரக்குழந்தையையும் பார்க்க வேண்டும் என்று தான் மாற்றல் வாங்கிட்டு போயிட்டாங்க! அதனால இரண்டு வருஷம் முன்னாடி, அங்கேயே புதுசாக ஒரு வீட்டை வாங்கித் தந்துட்டேன்! இந்த வருஷத்தோட, நானும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு டாட்டா சொல்லிட்டேன்டா! என் மாமனார், தன்னோட பிஸினஸ் பார்த்துக்கச் சொல்லி வற்புறுத்தினார்! அவருக்கும் முன் போல ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை! பிறகு, பேத்தியை பார்க்காமல் இருக்க முடியலைன்னு இப்ப அவரும் தென்காசிப் பக்கம் தோப்பு வீட்டை வாங்கிட்டு வந்துவிட்டார்!
"ரொம்ப சந்தோஷம் வசந்த்! எல்லாரும் ஒரே இடத்தில இருக்கிறது நல்ல விஷயம் தான்! சென்னைக்கு உன்கூட மனைவி, மகள் வந்திருக்காங்களா?"
"அவங்க வரவில்லைடா, நான் மட்டும் தான் வந்திருக்கிறேன்!
சென்னையில் இருக்கிற மாமாவோட பங்களாவை, பில்டர்ஸ்கிட்டே கொடுத்திருக்கிறார்! அது சம்பந்தமாக, சென்னை வர வேண்டியிருந்தது! அப்படியே உன்னையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்டா!" என்ற வசந்தன், ஆமா நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறேடா! நான்,அசோக், தீபக் எல்லாம் கல்யணம், குழந்தை என்று செட்டில் ஆகிட்டோம்! நீ ஏன்டா இன்னும் தள்ளிப் போட்டுட்டு இருக்கிறே?"
"என் வாழ்க்கையில் கல்யாணம் இல்லை போலடா!" என்றான் ரிஷி !
"டேய் என்ன சொல்றே? ஏன் ? ஏன்? இந்த முடிவு?" வசந்தனுக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது! ஒருவேளை பழைய நினைவு திரும்பிவிட்டதோ என்று!
"ஏன் என்று சொல்லத் தெரியவில்லை! எனக்கு கடந்த சில மாதங்களாக, கனவில் ஒரு பெண்ணின் முகம் வருது ! ஆனால் கண்விழித்து நினைச்சு பார்க்கிறப்போ அந்த முகம் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது! நான் வேலை செய்துட்டு இருக்கும் போது திடுமென என் கண்ணுக்குள் அந்த முகம் தோன்றும்! ஆனால் அதை நினைவு படுத்த முயன்றால் தலைவலி தான் மிச்சம்! "ஏன் அப்படி வருதுன்னு புரிய மாட்டேங்குதுடா!"
வசந்தனுக்கு உள்ளூர சற்று மகிழ்ச்சியாக இருந்தது! அதை காட்டிக் கொள்ளவில்லை! "உனக்கு என்ன தோனுதுடா?" என்றான் வசந்தன்!
"எனக்கு என்ன தோனுதுன்னா , நடுவில் நான் கோவையில் வேலை செய்ததாக சொன்னாய் அல்லவா ? அதெல்லாம் எனக்கு மறந்து போனதாக நீதானே சொன்னே? அந்த சமயத்தில் நான் யாரோ ஒரு பெண்ணை சந்திச்சிருப்பேனோ? அப்படி என்றால் நான் அதை உன்னிடம் சொல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை! சொல்லு வசந்த் நான் ஏதும் பெண்ணைப் பற்றி பேசினேனா? "
வசந்தன் ஒரு கணம் திகைத்தான்! சரியாக ஊகித்து கேட்கிறான் என்று மகிழ்ச்சி தான்! ஆனால் காதலித்தான் என்று சொன்னால் நம்புவானா? என்று கலக்கமாக இருந்தது!
"என்னடா, சத்தத்தையே காணோம்? கோவையில் இருந்த போது நாம் பேசியிருப்போம்! அப்போது நான் ஏதும் பெண்ணைப் பற்றி சொல்லியிருக்கிறேனா?"
"அது, ரிஷி, முன்பு உனக்கு காதல் என்றால் பிடிக்காது தானே? அதனால தான், இதை நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று தெரியவில்லை..!"
"ஆமாடா, பொய்யாக, என் பணத்துக்காக பழகிய பெண்களை பார்த்ததில் எனக்கு அந்த வார்த்தை பிடிக்காமல் போயிற்று! ஆனால் உண்மையான காதல் எது என்கிற அறிவு கூட இல்லாதவன் இல்லைடா! அப்போ நான் காதலித்தேனாடா?" என்றான் ஆர்வமாக!
இன்பாவைப் பற்றிய விஷயத்தை சொல்லும் நேரம் வந்துவிட்டதாக தோன்றியது! அதே சமயம், இப்போது இன்பா எங்கே என்றால் என்ன பதில் சொல்வது? என்று வசந்தன் யோசித்தான்!
"வசந்த் நீ இப்படி யோசிக்கிறதைப் பார்த்தால் என் வாழ்க்கையில் எனக்கு தெரியாத ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று நிச்சயமாக தெரிகிறதுடா! ப்ளீஸ் வசந்த், எதையும் மறைக்காமல் சொல்லுடா! நான் ஏன் இவ்வளவு தூரம் கேட்கிறேன் என்றால் கனவில் வரும் அந்தப் பெண்ணைப் பார்த்தால் என் மனம் அப்படி அலைபாய்கிறது! கண்விழித்தால் எதுவும் நினைவுக்கு வராது! கனவு அப்படியே தொடரக்கூடாதா என்று ஏக்கமாக இருக்கும்! அதனால் தான் கொஞ்சம் நாளாக எனக்குள் சந்தேகம், யாரோ என் வாழ்வில் வந்திருக்கிறாள் என்று! நான் இதை யாரிடமும் சொல்ல முடியாது! சொன்னால் நேராக பைத்தியகார ஆஸ்பத்திரில சேர்த்து விடுவார்கள்!
"நீயே ஒரு மனநல மருத்துவரைப் பார்த்திருக்கலாம்ல? பைத்தியம் பிடிச்சவங்க தான் போகணும்னு இல்லை! இந்த மாதிரியான கனவு ஏன் வருதுன்னு தெரிஞ்சுக்க கூட டாக்டர்கிட்ட போகலாம்டா!"
" டேய், நீ பேச்சை மாத்தாதே! உனக்கு தெரிஞ்சதை சொல்லு!
இன்றைக்கு காலையில்கூட, அம்மா கல்யாணம் செய்து கொள்ள சொன்னப்போ "முடிவா என் வாழ்க்கையில் கல்யாணம் கிடையாது" என்று சொல்லிவிட்டேன்! ஆபீஸ் வந்து வேலை பார்க்கும் போது, திடுமென அந்த முகம் மனசுக்குள் வந்து போனது! நான் எங்கோ பார்த்த நினைவும் அவ்வப்போது வருது! ஆனால் எங்கே என்று தான் தெளிவாக நினைவில்லை! இதுக்கெல்லாம் எனக்கு அவசியம் விடை தெரியணும்டா! நீ என் ஆருயிர் நண்பன்! உனக்கு தெரியாத ரகசியம் ஏதும் இருக்க முடியாது!"
"ஆமாம் ரிஷி! கோவையில் நீ ஓரு பெண்ணை சந்தித்தாய்! ஆனால்..!
"நிஜமாகவா வசந்த்? யார் அவள்? ஏன் அவள் என்னை விட்டுப் போனாள் ? அவளாக போனாளா ? அல்லது எங்களுக்குள் ஏதும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்துவிட்டோமா? என்று பரபரத்தான்!
"நீங்கள் பிரிந்தது உண்மை தான்! ஆனால் அது நீ நினைப்பது போன்ற காரணம் இல்லை! எல்லாம் சொல்கிறேன்! ஆனால் இப்படி காரில் உட்கார்ந்து சொல்ல முடியாது! நீ வண்டியை கெஸ்ட் ஹவுஸ்க்கு விடு! " என்று இறுகிய குரலில் சொன்னான் வசந்தன்!
ரிஷி யோசனையாய், நண்பனைப் பார்த்துவிட்டு, ஏதோ நினைவு வந்தவனாக, "வசந்த், உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன்! அந்த நேரம், நீ ரொம்ப பிஸியாக இருந்தாய்! அப்புறமாக மறந்தே போச்சு! இப்ப நீ கெஸ்ட் ஹவுஸ் போகலாம்னு சொன்னதும் ஞாபகம் வந்துடுச்சு! வித்யா கல்யாண வரவேற்பின்போது இங்கே வந்து தங்கியிருந்தேன்ல, அப்போ அங்கே காவலுக்கு இருக்கிற பரமன், போன தடவை நான் அங்கே விட்டுப் போன உடைகள் என்று ஒரு செட் உடையை கொண்டு வந்து கொடுத்தான்! நான் வெளிநாடு போன பிறகு , அந்த வீட்டிற்கு போகவே இல்லைடா! அந்த ட்ரெஸ் கூட எப்போ எடுத்தது என்று எனக்கு தெரியலை! அதனால, நான் கடைசியாக எப்போ வந்தேன்? என்று கேட்டேன்! இரண்டு வாரம் முன்பாக என்று தேதி கூட சொன்னான்! அது விபத்து நடந்த தேதி என்று புரிந்தது! எவ்வளவு யோசித்தும் எனக்கு ஒன்றும் நினைவுக்கு வரவில்லை!" என்றபடி கெஸ்ட் ஹவுஸ் முன் காரை நிறுத்த, பரமன் ஓடி வந்து கதவை திறந்தான்!
"வாங்க தம்பி, என்றவன், வசந்த் தம்பி உங்களை பார்த்து கொள்ளை வருசமாகிடுச்சு! படிக்கிறப்போ தம்பி கூட வந்தது, அப்புறமாக நீங்க இங்கே வரவே இல்லை! எப்படி இருக்கீங்க தம்பி? என்று பரமன் பேசப்பேச குழப்பமாக நண்பனைப் பார்த்தான் ரிஷி!