• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

8.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

8.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​




இப்ப எங்க போறோம் என்று ரிஷி கேட்க…ஆதி அண்ணா அழைச்சிட்டு வரச் சொன்னாங்க ம்மா என்றான் ஒருவன்.

அதான் எங்கன்னு கேட்கிறேன் என்று ரிஷி உறும..

சாரி மா அதை சொல்ல எங்களுக்கு பர்மிஷன் இல்ல, நிமா மேடம் எதையும் சொல்ல பர்மிஷன் தரல என்றவர்கள் வண்டியை கவனமாக ஓட்ட..

விது, “ வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க நான் கிளம்பனும்.

சாரி சார் உங்களையும் தான் அழைச்சிட்டு வரச் சொல்லி ஆர்டர்.

எங்கன்னு சொல்லாம வரச் சொன்னா எனக்கு வேலை இருக்கு இல்ல என்றவன் போனை போட.. சொல்லுடா.. எங்க வாகி வரச் சொல்லுற வீட்டுக்கு தானே வரச் சொன்ன இப்ப எங்க அழைச்சிட்டு போகுறதா இருக்க எனக்கு ரிப்போர்ட் பண்ணனும் வந்த வேலை முடியல இல்ல.

அதை நான் பார்த்துக்கிறேன் விது நீ வா

எங்க?

ஏன் டா சொன்னா தான் நீயும் அம்மாவும் வருவியா?

ஏன் வாகி உன் கட்சியையும் உன்கிட்ட வேலை செய்யுறவங்களையும் நடத்துற மாதிரி நடத்துற என்று விது எகிற..

அடேய் ஐபிஎஸ் போதும் குதிக்காத எல்லாமே சேஃப்டி பர்பஸ் தான் வந்து சேருங்க என்றவள் போனை வைத்து விட..

ரிஷி விதுவை நக்கலாக பார்க்க..

போதும் மம்மி நீ பார்த்தது, பெத்து வச்சு இருக்க பாரு அடங்காத கழுதையை..ஓஓஓ இப்ப தான் அவ அடங்கலன்னு உனக்கு தெரியுதா? இதுக்கு முன்னாடி அவளுக்கு வக்காலத்து வாங்கின என்று ரிஷி விதுனை வார…

வண்டி லெப்ஜா ஜாகெட்டை நோக்கி செல்ல …ரிஷி மெல்ல சாய்ந்து அமர்ந்து விட்டாள். சரி இனி போபோ அவர் கன்ட்ரோலில் எடுத்து கொள்வார் என்று முழுதாக அமைதியாகி விட்டாள். லெப்ஜா ஜாகெட் ஒரு பழங்குடி இன மக்களின் பாரம்பரிய இடம் முழுவதும் சிக்கிம் மக்களின் இடமாக இருந்தது, தற்போது காப்பு காடாக மாறி இருந்தாலும் அங்கு இருக்கும் உள்ளூர் மக்களுக்கு அந்த பாதைகளும் இடங்களும் பழக்கமே அதுவும் போபோ விற்கு சொல்லவே வேண்டாம். ஆனால் விது தான் என்ன செய்வது என்று தவிப்புடன் அமர்ந்து இருந்தான்.


சார் நீங்க இங்க இறங்கிடுவீங்களாம் என்று வண்டியை ஓட்டி கொண்டு இருந்தவன் விதுவை பார்த்து சொல்ல ,என்ன இந்த நடுரோட்டுல எங்கன்னு நான் கிளம்பி போறது என்று சுற்றி பார்த்தவன் …ஒரு பெருமூச்சுடன் ஆரம்பிச்சுட்டா என்ன பண்ண போறாளோ என்று நினைத்து கொண்டு மம்மி உன் பொண்ணுகிட்ட சொல்லி வை இதெல்லாம் நல்லா இல்ல மனுஷனை எப்ப பாரு கடுப்பை கிளப்பிட்டு என்று புலம்பியவன் பட்டென இறங்கி வெளியேறிவிட…அடுத்த கால் மணிநேரத்தில் விதுரிஷியை அழைக்க என ரவி வந்து சேர்ந்தான்.

என்னடா உர்ரூன்னு நடந்துட்டு இருக்க என்ற குரல் கேட்டு திரும்பிய விது ப்ச் போண்ணா வாகி என்ன நினைக்குறான்னு தெரியல என்று வண்டியில் ஏறிவிட…

சரி சரி டென்ஷன் வேண்டாம் உனக்கு வண்டி தயாரா இருக்கு நீ கொஞ்சம் தூங்கு நான் உன்னையே ட்ராப் பண்ணுறேன் அப்புறம் நீ அங்க போனதும் எல்லாத்தையும் பேக் பண்ணிடு..

எதுக்கு என்று விது கேட்க…

வேற என்ன உன்னையே இடம் மாத்தியாச்சு…

என்ன எதுக்கு இப்படி பண்ணுறா என்று போனை எடுக்க …

அவ இப்ப மீட்டிங் ல இருக்க விது எடுக்க மாட்டா என்று ரவி சொல்ல..

விது, “ப்ச் என்ன இவ்வளவு சீக்கிரமா மீட்டிங்? சின்ன சிரிப்பை உதிர்த்த ரவி வண்டியை ஓட்ட..

விது, “ அப்ப அடுத்த டார்கெட் ரெடி ன்னு சொல்லுங்க…

அவ யாருக்கும் எதிராக வேணும் ன்னு எதையும் செய்ய இல்ல தவறை கண்டிக்கிறா அவ்வளவு தான் என்றான் ரவி..

அதெல்லாம் சரி தான் அண்ணா ஆனா..

விடுடா அவளை பத்தி உனக்கு தெரியாதா ?

இப்படியே நீங்க சுத்தி இருந்து அவளுக்கு சப்போர்ட் பண்ணுங்க அப்புறம் பெரிய பூதமாக வந்து நிக்கும்..

நிக்கட்டும் பார்த்துக்கலாம் வரனும் ன்னு தான் எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்கோம் என்றவன் அவனை தனி ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்து விட்டு வர காலை பத்து மணி ஆகி இருந்தது.

இங்கே விடியற்காலையில் மாமனை ஏர்போர்ட்டில் வந்து பார்க்க வந்தவன் இப்ப போகவேண்டாம் மாமா என்று சொல்லி கொண்டு இருக்க… பகலவா என்று ராமைய்யா வந்து நின்று விட்டார்.

அப்பா அங்க அம்பிகா என்று குரல் தழுதழுக்க சொல்ல..

முடிஞ்சு போனது அதைப்பத்தி உனக்கு இப்ப என்ன என்று கேட்ட அடுத்த நொடி மூச்சு விட மறந்து விட்டான் பகலவன் என்ன சொல்லுறீங்க..

ராமைய்யா, “ உனக்கு மாலினி ன்னு ஒரு மனைவி இருக்கா அதோட உனக்கு ஒரு பொண்ணு இருக்கா அதெல்லாம் இல்லன்னு சொல்லுவியா..?

அதுக்கு ..

என்னடா அதுக்கு முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் இதுக்கு மேல நீ அதைப்பத்தி நினைக்கிறது தப்பு என்றவர் வர்மனை பார்த்து அழைச்சிட்டு வா என்று முன்னே சென்று விட … போகலாம் மாமா நேரம் வரும் போது சொல்லுறேன் என்றவனை பார்த்தவன் என் பொண்டாட்டியை பார்க்க யார் அனுமதியும் எனக்கு தேவையில்ல வர்மா என்று ஏர்போர்ட் உள்ளே நுழைந்து விட்டார் பகலவன்.

வர்மன் புன்னகையுடன் மாமனை பார்த்தவன் மாமா என்று அழைக்க அவர் திரும்பிய அடுத்த நொடி ஓடி அவர் கையில் ஒரு கார்டை தந்து இவனை காண்டெக்ட் பண்ணுங்க அழைச்சிட்டு போவான் என்றவன் வெளியே வர ராமைய்யாவை வசைமொழிந்து கொண்டு இருந்தாள் மாலினி..

என்ன நடக்குது இங்க ஒரு வேலையை கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா அவ எப்படி உயிரோட இருக்கா அவ உயிரோட இருக்க கூடாது என்று முடிக்கும் போது வந்து நின்றான் வர்மா..

என்ன சொல்லுறீங்க என்று மாலினியை முறைக்க..

என்ன சொல்லனும் அவளை கொல்ல சொல்லிட்டு இருக்கேன் என்று அடுத்து பேச வர..,மாலினி நீ தான் எப்பவும் இந்த வீட்டு மருமக அதுல எந்த மாற்றமும் இல்லை இப்ப கிளம்பு நீ என்று ராமைய்யா உறுத்து விழிக்க…


மாலினி, “என் வாயை அடைக்க மட்டும் முன்னாடி வந்துடுவீங்க என்று பேசிவிட்டு சென்று விட…

வர்மன், “ என்ன தாத்தா பேசுறாங்க அவங்க அத்தையை கொல்லனும் ன்னு ஆவேசமாக பேசுறாங்க.

அவளுக்கு பைத்தியம் நீ வா அவனை எங்க என்று வர்மனை பார்க்க..

மாமா அத்தையை பார்க்காம வரமாட்டாங்க..

ராமைய்யா, “என்ன வர்மா சொல்லுற”?

ஆமா தாத்தா பிளைட் ஏறி இருப்பாங்க என்றவன் போகலாமா என்று கேள்வி எழுப்ப.. ராமைய்யாவிற்கு படபடவென்றானது இன்னும் என்னென்ன பார்க்க வேண்டியது இருக்கோ என்று..

இவர் பகலவனை தடுக்க இங்கே யோசித்து கொண்டு இருந்த நேரம் அடுத்த வெடியாய் அறிக்கையை வெளியிட்டு இருந்தாள் நிமாவாகினி..

எத்தனை மொழிகளை கற்று கொள்கிறோம் என்பது முக்கியம் இல்லை அவரவர் தாய்மொழியில் பேச மட்டும் இல்லை, எழுதவும் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும் இனி எப்படி அவரவர்களுக்கு அடையாள அட்டை இருப்பது போன்று அந்தந்த பகுதியில் இருப்பவர்கள் அவர்கள் மொழியை அடையாளமாக்க அந்த மொழி படிப்பு கட்டாயம் என்று ஆணை பிறப்பித்து இருந்தாள்.அதுவும் இந்த கல்வியாண்டில் இருந்தே நீங்கள் உங்கள் மொழியில் தேர்வு பெற்றால் மட்டுமே அடுத்த மேல்படிப்பு என்று…

மொத்தமாக உடைந்து போய் இருந்தனர் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இந்த மூன்று மொழி கொள்கையை வைத்து மேலே ஆளுபவர்கள் அவர்களுக்கு ஏதுவாக மக்களை வளைக்க பார்க்க…அந்த துறை அமைச்சரோ குடியரசு தலைவர் ஒப்புதலில் இதை அமல்படுத்தி இருந்தாள்.

காலை அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சி என அனைத்திலும் தலைப்பு செய்தியாக ஓட…

இங்கே அத்தனை பெரும்புள்ளிகளும் புற்றிசலாக ராமைய்யாவை பார்க்க என்று கிளம்பிவிட்டனர். எப்படி இதை சரிகட்டுவது என்று ஒன்றும் பிடிபடவில்லை அவர்களுக்கு..

ராமைய்யா, “ வர்மா ஒன்னும் சரியில்ல நீயாவது நான் சொல்லுவதை கேட்பியா இல்லையா..

என்ன தாத்தா நான் கேட்காம இருந்துட்டேன் இதுவரை நீங்க சொன்னதை தானே கேட்டுட்டு இருக்கேன் ..

அப்படின்னு நீ தான் சொல்லுற வர்மா, எனக்கு எதுவும் சரியா படல.

என்னாச்சு தாத்தா ஏன் இப்படி எல்லாம் சொல்லுறீங்க இதுவரை நான் நீங்க சொன்னதை மட்டும் தானே செஞ்சுட்டு வரேன்.அதான் சொல்லிட்டியே இதுவரை ன்னு, அப்ப நீயும் இனி உன் விருப்பபடி தான் இருப்ப இதோ இப்ப உன் மாமன் கிளம்பி போறானே அதுமாதிரி.

என்ன தாத்தா நீங்க மாமா அத்தை இருக்கிறதை தெரிஞ்சு போறாங்க தப்பு எதுவும் இல்லையே என்று கேள்வியை நிறுத்த…அதற்கு பதில் தர முடியாமல் சீட்டில் சாய்ந்து படுத்தவர் அது முடிஞ்சு போன கதை அதை தூசு தட்டுவது யாருக்குமே நல்லது இல்ல.

இதுல என்ன தாத்தா நல்லது இல்ல அவர் மனைவியை அவர் பார்க்க போறார்.

வர்மா என்று ராமைய்யா அதட்ட..

என்ன தாத்தா என்றவனை இது விஷயமா இனி பேச வேண்டாம் உன்னோட விஷயத்திற்கு வா என்று சொல்ல… முதல்ல நீங்க முடிவு பண்ணதை அந்த பக்கம் சம்மதம் வருமான்னு விசாரிங்க.

ஏன் நம்ம வீட்டில் சம்மந்தம் பண்ண என்ன குறை..

அதை அவங்க சொல்லனும் தாத்தா என்றவன் இன்னொரு பக்கம் மெஸேஜை தட்டிவிட ..அது போய் சேர்ந்து பார்க்கப்பட்டு விட்டதாக தெரிய வண்டியை வீட்டை நோக்கி நகர்த்தினான் வர்மன்.


ப்ச் இருக்கிற பிரச்சினையில் இதுவேறையா இப்ப இதை எப்படி டீல் பண்ணுறது என்று யோசித்தவன் பத்து மணி வரை காத்து இருந்து விட்டு போனை போட..

சொல்லுங்க ரவி..

அடியேய் குட்டிச்சாத்தான் ஊர்ல இருந்து அம்மாவை பார்க்க பகலவன் வரார்.

வரட்டும் ரவி..

வாகி…


என்ன ரவிண்ணா..

என்ன நொண்ண ரவியண்ணா இப்ப அவரை பிக்கப் பண்ண ஏர்போர்ட் போகனும்‌..

ஏன் உன் நண்பன் ஆர்டரா..

ஆமா என்றான் ரவி..

அவர் வரதே வேஸ்ட் எதுக்கு இந்த அலப்பறை..

என்ன வாகி அவர் வந்து என்னென்ன கேட்க போறாரோ..

அவ்வளவு வொர்த் இல்ல ரவி அண்ணா அலசி ஆராய்ந்து செய்யுற ஆளா இருந்து இருந்தா இத்தனை வருஷத்துக்கு அப்புறம் தேடுவாரா.. சும்மா ஏதோ ஒரு ஆர்வத்துல வராங்க விடுங்க என்றவள் நீங்க போக வேண்டாம் ஆள் அனுப்பி விடுறேன் என்றவள் சொன்னது போல் ஆள் அனுப்பி விட்டு ரிஷியை பார்க்க கிளம்பிவிட்டாள்..


வந்து இறங்கியதும் பகலவனால் அவன் அம்பிகையை தேடிபிடிக்க முடியவில்லை.தேட முடியவில்லை என்பதை விட கண்கட்டி வித்தை காட்ட ஆரம்பித்து இருந்தாள் நிமாவாகினி…


தொடரும்



 
  • Love
Reactions: shasri