• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

8. உயில்

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
8. உயில்!

“என்னோட சாபமா என்னனு தெரியல. எங்க சித்திக்கு குழந்தை பிறக்கவே இல்ல. எங்க தாத்தாக்கு என்னை ரொம்ப புடிக்கும். அவர் தான் எனக்கு எப்பவும் ஆறுதலா இருப்பார். என் கையால சாப்பாடு கொடுத்தா தான் சாப்பிடுவார். அப்பாவும் குடிச்சி குடிச்சி உடம்பு முடியாம இறந்துட்டார். எங்க தாத்தா எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தார். எங்க ஊர்லயே நாங்க பெரிய குடும்பம். ஊற சுத்தி நிறைய சொத்து இருந்தது, அதுக்கு ஒரே வாரிசு நான் தான். அதை அனுபவிக்க ஆசைப்பட்டு என்னை கொன்னுட்டாங்கன்னா என்ன பண்றது? அதனால தாத்தா ஒரு பிளான் பண்ணி உயில் எழுதி வச்சிட்டார். அதுல நிறைய கண்டிஷன்ஸ் இருந்தது.

  1. எனக்கோ என் உயிருக்கோ ஏதாவது ஆச்சுனாஅடுத்த நிமிஷம் அந்த சொத்து முழுதும் என் பேர்ல தாத்தா அப்ப ஆரம்பிச்சிருந்த குழந்தைகள் இல்லத்துக்கு போய்டும்.
2 .என் பேத்தி படிப்புல ரொம்ப கெட்டிகாரி. அதனால. அவள் விருப்பதுக்கு கண்டிப்பா படிச்சி ஏதாவது பட்டம் வாங்கியே ஆகணும். அதுவும், அவளுக்கு புடிச்ச படிப்பு தான் படிக்கணும்.

  1. அவளுக்கு தேவையான வெளி உலக அடிப்படை உரிமை கண்டிப்பா இருக்கனும். அதாவது ரேஷன்கார்டு, வோட்டர்ஐ டி, ஆதார்கார்டு, பாஸ்போர்ட் இப்படி எல்லாம்.
  2. பதினெட்டு வயசுலேர்ந்து இருபத்தி மூணு வயசுக்குல கல்யாணம் நடக்கணும்.
  3. என் பேத்திக்கு கல்யாணம் ஆகி அவ புருஷனுக்கும் இந்த சொத்து சேராது. அவங்க மகிழ்ச்சியா இருந்ததுக்கு அடையாளமா பிறந்த குழந்தைக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதுக்கு அப்புறம் தான் இந்த சொத்து முழுக்க் கொள்ளுபேரன் பேர்ல மாறும். இதுக்கு நடுவுல இந்த சொத்த என் பேத்தி அனுபவிக்கலாம், ஆனா யார் பேருக்கும் விக்கவோ மாத்தி எழுதி தரவோ முடியாது. இந்த எல்லா சொத் என் பேத்தியோ அவளை சார்ந்தவங்கள அனுபவிக்க முடியுமே தவிர விக்கமுடியாது. அதுவும் என் கொள்ளு பேரனுக்கு பதினெட்டு வயசுக்கு அப்புறம் அவனுக்கு கல்யாணமாகி பிறக்கப்போற குழந்தைக்கு தான் விக்கிரதுக்குஎல்லா உரிமையும் இருக்கு அதுவும் அவன் மேஜர் ஆனப்புறம்."
"இது தான் எங்க தாத்தா எனக்காக எழுதி வச்ச உயில்.

கொஞ்ச நாள்ல எனக்கு பத்து வயசு இருக்கும்போது தாத்தாவும்உடம்பு முடியாம இறந்துட்டார்.

அதுவரைக்கும் இந்த உயிலைபத்தி யாருக்குமே தெரியாது. தாத்தா இறந்த மூணாவது நாள் நிலத்தை விக்க ஏற்பாடு பண்ணாங்க, அப்ப தான் தாத்தா இது மாதிரி உயில் எழுதி வச்சிருக்கார்ன்றதும் அதுல நிறைய சிக்கல் இருக்கறதும் தெரிஞ்சுது .

அதனால எங்க சித்தி என் மேல பாசமா இருக்க மாதிரி வீட்டுக்கு வெளியே நடந்துக்கிட்டாங்க, ஆனா வீட்டுக்குள்ள வந்தவுடனே பண்ணாத கொடுமையே இல்ல. ஒரு சில விஷயங்கள் வெளிய சொல்ல முடியாத அளவுக்கு கொடுமையா இருக்கும். நான் சின்ன பொண்ணுறதால இந்த உயில்பத்தி எதுவும் தெரியாது.

எனக்கு பதினெட்டு வயசாகும்போது தான் எனக்கு இந்த உயில் பத்தின விஷயம் தெரியும் .தெரிஞ்சும் என்ன? எனக்கு காசுமேல ஆசை இல்ல என்கிட்ட யாராவது அன்பா நடந்துக்க மாடங்களான்னு எவ்ளோ நாள் ஏங்கி இருக்கேன்” எனறு வாய் விட்டு மண்ணில் சரிந்து சாலை என்றும் பாராமல் கதறி அழுதாள்.