8.எந்தன் தேன் ஜவ்வே
என்னாச்சு எப்படி இது திடீர்னு…
பாரி இளவழகன், “இதுக்கு முன்னாடி இது மாதிரி பார்த்து இருக்கீங்களா?
இல்ல அழகா..
அவளுக்கு பன்னிரெண்டாவது படிக்கும்போதே இப்படி வந்து இருக்கே அத்த, அவங்க அப்பா சொல்லல..
என்னது என்று அதிர்ச்சியாக கேட்க..
ஏளனமாக சிரித்தவன் அது சரி உங்ககிட்ட சொல்லி இருப்பார் ன்னு நினைச்சு இருக்க கூடாது என்றவன் மேகா காரை டோரை ஓபன் பண்ணு இவளை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகலாம்..
சரி அண்ணா
அவளை தூக்க என்று குனிய..
கண்ணை திறந்து எழுந்து அமர்ந்து விட்டாள் தேன்மொழி எழுந்தவள் விழிகள் படபடக்க..
என்னைய கட்டிக்க உனக்கு கஷ்டம் இல்லையே…
தேனோ திருதிருவென முழிக்க…
அந்த திருதிருப்பில் புன்னகைத்தவன் அவள் அருகே குனிந்து,அவள் காதில் மெல்ல
“முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்டச் சொல்லி பார்க்குதடி” என்ற வரியை பாட திண்டாடித்தான் போனாள் தேன்மொழி..
அண்ணா டோர் ஓபன் பண்ணிட்டேன்
ஆர் யூ ஓகே தேனு ஹாஸ்பிடல் போகலாமா..
இல்ல வேண்டாம் என்றவள் அதன் பிறகு நிமிர்ந்து கூட அவனை பார்க்கவே இல்லை.
பாரி இளவழகன், “மேகா அவளை பார்த்துக்க நான் டாக்டரை வரச் சொல்லுறேன்”..
தேனு, “வேணாம் மேகா இதுக்கு மாத்திரை குடுத்தாங்க மூணு வருஷம் சாப்பிட்டேன் அதுக்கு பிறகு பிரச்சினை எதுவும் இல்ல இன்னைக்கு தான் என்றவள் கையை பிசைந்து கொண்டு இருக்க
அத்த பாட்டி நான் தேனு கூட தனியா பேசணும் பேசிக்கவா நீங்க நாள் மட்டும் பாருங்க கல்யாணத்திற்கு என்று தேனை பார்த்து கொண்டே பேச..
துயமல்லி, “டேய் உன் போலீஸ் புத்தியை எல்லாம் இங்க பட்டுன்னு காட்டாதா எல்லாரும் பயந்துடுவாங்க
போலீஸ் என்ற வார்த்தையிலும் கல்யாணத்திற்கு தேதி பார்க்க சொன்னதுமே படக்கென அவள் நிமிர்ந்து பார்க்க இவனோ டபக்கென கண்ணடித்து விட மீண்டும் தாழ்ந்து விட்டாள் ..
நீங்க பேசுங்க தம்பி நான் பாட்டிகிட்ட நாள் பார்த்ததை சொல்லுறேன் என்று அழைத்து கொண்டு வெளியேற,
அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான் பாரி இளவழகன்..
என்னைய தெரியுதா ஹனி..
ஆஹ் என்றவள் தலையை மட்டும் மெல்ல அசைக்க…
ரொமான்ஸ் பண்ண வேண்டிய காலத்துல எல்லாம் பல பிரச்சினைகளை சுமந்துட்டோம் இப்ப வயசு ஆகிட்டு அப்ப இருந்த மாதிரி இப்ப ஃபர்வாமன்ஸ் பண்ண முடியல உனக்கு எதுவும் சங்கடம் இல்லையே என்றதும் பேவென தேனு பார்க்க பக்கென சிரித்து விட்டான்…
இளா என்று அவள் சிணுங்க..
அடேங்கப்பா எங்க விரட்டி விட்டு சுத்தல் ல விடுவியோன்னு நினைச்சேன் பரவாயில்ல என்னைய அப்ப பார்த்த மாதிரி தான் இப்பயும் பார்க்கிற போல..
அப்ப எப்படி பார்த்தோம் இவரு இப்படி சொல்லுறாரு என்று பார்க்க..
அட நீ வேற ஹனி அப்படி ஒன்னும் நமக்கு பெரிய ஃப்ளாஷ் பேக் எதுவும் இல்ல என்னைய நம்பி என் தோளை பிடிச்சு நின்ன பாரு அந்த ஒரு நொடி போதும் நீ எனக்கானவன்னு நான் முடிவு பண்ண என்ன கல்யாணம் பண்ண தான் இத்தனை காலம் ஆகிட்டு இந்த போலீஸ்காரன் ஓகே தானா…
போலீஸா என்று அவள் கண்கள் மிரள..
எல்லாத்துக்கும் பதிலே பேசாம இப்படி கண்ணுலையே பேசினா எப்படி ஹனி
இல்ல இது ஒத்து வராது…
ஏன் வராது..
அது வந்து அன்னைக்கு
ஹனி அன்னைக்கு நடந்தது முடிஞ்சது, ஆனா அன்னைக்கு துவங்கின என்னோட நேசமும் உன்னோட நம்பிக்கையும் மாறல தானே…
இல்ல எனக்கு கல்யாணம் அதுல எல்லாம்…
என்ன என்று இளவழகன் அதட்ட
நான் உடைஞ்சு போய்ட்டேன் வேணாம் விடுங்களேன்..
நான் வேணாமா தேனு…
…..
பதில் சொல்லு நீ உடைஞ்சு போய் நிற்கிறது என்னைய ஒதுக்கத்தானா?
அது உங்களை..
சொல்லு தேனு நான் நீ தான் வேணும் நினைக்கிறது அந்த நினைப்பே ஏன் தெரியுமா?
….
அதிகமா பேச நினைப்பதும்
அதிகமா பார்க்க நினைப்பதும்
நாம் உண்மையா நேசிப்பவங்களை தான் அது உன்னையே தான் ன்னு உனக்கு பல வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் நான் எந்த இடத்திலும் பரிதாபப்பட்டு உன்னையே கட்டிக்க நினைக்கிறேன் ன்னு உன் மனசுல இருந்தா தூக்கி போட்டுடு என்னால் முடியாததை என் தேனு பண்ணுறான்னு நான் சந்தோஷப்பட்டேன் அந்த சந்தோஷம் உன்னைய ஆசைப்பட வச்சது நானே தான் உன்னையே தேடி தேடி பேசி இருப்பேன்.ஆனா நீ உடைய நான் தான் காரணமா தேனு?
அப்படி எதுவும் இல்ல என்றவள், நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க ஆசையா ?
அதுல என்ன சந்தேகம்
நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?
நான் பொலிட்டிக்கல் சையின்ஸ் இப்ப ஐபிஎஸ் இனி எப்பவும் உன்னோட இளா..
விழி விரித்து பார்த்தவள் நான் வெறும் ப்ளஸ் டூ.
சோ வாட் என் தேனு நிறைய திறமையை வச்சு இருக்காளே?
உங்களோட வந்தா எனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாது..
நீ பேசனும் அவசியம் இல்ல
இல்ல …
தேனு உனக்கு பேசனும் ன்னு தோணிணா ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கணும் ன்னு நீ முடிவு பண்ணா அதை யாராலும் தடுக்க முடியாது இதோ இப்ப இன்னும் இரண்டு வாரத்துல கிளம்ப போறியே மும்பைக்கு
அவன் சொல்லியதை கேட்டு அதிர்வாய் பார்க்க..
என்ன எனக்கு எப்படி தெரியும் ன்னு பார்க்குறியா?
……
இரண்டு வருஷம் டிரைனிங், முதல் போஸ்டிங் ன்னு வேற வேற வேலையில் சிக்கிட்டேன் ,சூழ்நிலை கவனிக்காம இதோ வந்ததும் உன்னைய தான் தேடினேன் ஊர்ல இல்ல ஏற்கனவே நீ வரைஞ்சு அனுப்பின லிங்க் மூலமா தேடப் பார்த்தேன் அதையும் மாத்திட்ட..அப்புறம் தான் ஸ்கூல் கெட் டூ கெதர் ஃப்ளான் அதுலையும் சொதப்பல் அப்புறம் கருவாயனை பிடிச்சேன்…என்று அவன் சொல்லிக்கொண்டே போக ஆனந்த அதிர்வாய் நின்று இருந்தவள் அன்று எப்படி அவள் தோளை பிடிமானமாக பிடித்து கொண்டாளோ அதே போல் அவன் தோளில் சாய்ந்து விட இப்போது ஆனந்த அதிர்வாவது பாரி இளவழகனின் முறையானது..
ஹனி..
ம்ம்
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் டா..
ம்ம்…
இத்தனை வருஷ காத்திருப்பு எனக்காக தானே
…..
என்னடி பதிலே இல்லாம இருக்க
அவன் டீ போட்டதும் நிமிர்ந்து முறைத்தவளை…
இந்த முறைப்புக்கு எல்லாம் பயப்பட வேற ஆளை பாரு இப்படி பார்த்து பார்த்து தான்டி என்னைய உன் பக்கம் திருப்பின இனி என்னத்த நான் பார்க்க, பார்க்க செய்ய ன்னு நிறைய வேலைகள் இருக்கு உன்கிட்டே…
அவள் ஓரடி பின்னே நகர அந்த வாய் துடுக்கான அதுவும் வெளியே தெரியாம நல்லபிள்ளையாவே எல்லாரையும் கால வாருர தேனை எனக்கு நல்லாவே தெரியும் நீ இப்ப எதுக்கு தள்ளி நின்று யோசிக்கிறியோ அது தான் விஷயம் நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன் .
உதட்டுக்குள் அவள் சின்ன சிரிப்பை பார்த்தவன் ..
பரவாயில்லையே இந்த இரண்டு வருஷத்தில் நிறைய மாற்றங்கள்
ஆமா நிறைய உடைஞ்சு போச்சே உடைய உடைய மாறனும் இல்ல
என்ன அப்படி உடைஞ்சுடுச்சு ஹனி..
ஏன் இத்தனை வருஷம் கண்காணிச்ச உங்களுக்கு தெரியாதா?
நீ தான் சொல்லேன்..
ப்ளீஸ் வேணாம்..
சரி இரண்டு வாரம் வேணுமா இல்ல முன்னாடாயே கிளம்பலாமா?
எங்க
உன்னுடைய தேடலை தேடித்தான்
அது வந்து என்று தேனு இழுக்க
நான் இடையில் வந்து கல்யாண பேச்சு எடுத்ததால் எதையும் மாத்த வேண்டிய அவசியம் இல்ல கல்யாணம் முடிஞ்சாலும் செய்ய வேண்டியதை செய்யனும் இல்ல
தேனு படபடப்பாக இது அம்மாக்கு..
அத்தை க்கு சொல்லமாட்டேன்.
உன்னையே தேடுற மனசுக்கும் உன்னையே நம்புற உறவுக்கும், உலகத்துக்கும் தெரிஞ்சா போதும் நீ யார் ன்னு..
ம்ம்
சரி சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாம் தானே..
இவன் என்ன முதல்ல இருந்து ஆரம்பிக்கிறான் என்று அவள் முழிக்க
முழிக்கதா டி எப்ப பாரு இப்படி பார்த்துட்டு,
நீங்க இப்படி பேசினா
பின்ன காதலிக்கிறேன் நீ உன் பதிலை சொல்லுன்னா கேட்டேன் கல்யாணம் பண்ணிக்கலாம் ன்னு கேட்கிறேன் அதுக்கு கூட முழிச்சா என்ன அர்த்தம். இதுல இவ மனசுலையே வச்சுக்கிட்டு இருப்பாளாம் நாங்க தான் வெளியே கொண்டு வருமாம்
நான் எப்ப அப்படி சொன்னேன்
நீ சொல்லவே வேணாம் ஹனி நீ பார்த்தாலே நான் புரிஞ்சுப்பேன்..ஆனா எதை சொன்னாலும் அதுக்கு ஏத்த மாதிரி ஒரு பாட்டு வச்சு இருப்பியே எங்க அப்படி ஒரு பாட்டு நமக்கு பாடு
போங்க.. அடியேய் எங்க போக பல இடம் திரிஞ்சு இப்ப தான் வந்து சேர்ந்து இருக்கேன் என் தேனு கிட்ட இனி போகிறதா இருந்தா ஹனியோட ஹனிமூன் தான் போகனும்.
ப்ச் முதுகில் தட்டிவிட்டு வெளியே ஓடி வந்து விட
நீ சொல்லுறது எல்லாம் சரி பார்வதி நானும் பேரனும் தான் அவங்க அப்பா வந்தாலும் அவன் என்ன சொல்லுவான் ன்னு தெரியல நமக்கு ஊர் இங்கன தானே கோவில்ல கல்யாணத்தை முடிச்சிட்டு அப்புறம் நான் ஜமீன் ல வரவேற்பு வச்சுக்கிறேன்
சரிங்க அம்மா ரொம்ப சந்தோஷம் என்று பார்வதி வெளியே வந்த மகளை பார்க்க மனதில் மிகப் பெரிய நிம்மதி அவளின் முகம் இப்படி சந்தோஷ பாவனையை காட்டி பார்த்ததே இல்லை.
பல உறவுகள் இருந்தும் பயனில்லை சில உறவுகள் இல்லாமல் இருந்தாலும் மனது அதை எண்ணி பிரகாசிக்க தான் செய்கிறது அதை யாரும் சொல்லி வருவது இல்லையே அது போலத்தான் போல இந்த உறவும் ..
பாரி இளவழகன் தேனுவுடன் பேச வேண்டும் என்று உள்ளே சொன்னதும் வெளியேறிய பார்வதியிடம் அவள் பன்னிரெண்டு படிக்கும் போது நடந்த நிகழ்வை பகிர்ந்து இருந்தாள் மேகா. அவளுக்கு அங்கே தவறு நடக்கப்போகிறது என்று தெரிந்தா லைப்ரரி சென்றாள் ஆனால் மாட்டி கொண்டது என்னவோ தேனு தான் அனைவரும் அவளை நம்பாத போது அவளை நம்பிக்கையோடு அரவணைத்து கொண்டவன் பாரி இளவழகன் தான் அன்று உண்டான பிணைப்பு தான் இது…அதுவும் பெற்றவர் கூட பெண் மீது தவறு இருக்கும் என்று எண்ணி தானே அன்று அவளை தூற்றி இருந்தார்.
அன்று தோள் கொடுத்து அவளை காத்தவர் பாரி இளவழகன் தான் அதை தான் மேகா சொல்லி இருந்தாள்..
பெத்தவன்னு நானு இருந்து என்ன புண்ணியம் பிள்ளைக்கு என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சுக்காம இருந்து இருக்கேன் ஸ்கூல் விஷயமெல்லாம் அவர் கண்காணிப்புல இருந்ததால் எதுவுமே என் கண்ணுக்கு வந்து சேரல என்று தான் சொல்ல முடிந்தது பார்வதியால்..
மேகா, “கேட்டு தெரிஞ்சு இருந்து இருக்கனும்
தப்பு தான் மேகா ஆனா அவரு தான் உன் வேலையை மட்டும் பாருன்னு விரட்டி விடுறாரே..
அட போங்கம்மா சரி இப்ப இந்த விஷயத்தை எப்படி சொல்ல போறீங்க?
அது தான் ஒன்னும் புரியல ஆனா அவளை பெண் அழைக்க சாயந்திரம் வருவாங்க இல்ல அன்னைக்கு முகூர்த்த நாள் தான் அன்னைக்கு காலைல தேனுக்கு கல்யாணம் ஆகி இருக்கனும் சொந்தமெல்லாம் வந்துடும் அதனால் ஆட்கள் எல்லாம் இருப்பாங்க அந்த வீட்டில் இருந்து ஒரு ஐஞ்சு வீடு தள்ளி தான் பெருமாள் கோவில் அங்கேயே வச்சுக்கிட்டா வீட்டில் போடுற பந்தல் மறுவீட்டு அழைப்பா முடிச்சு அவளை உங்க கிட்ட தந்துடுவேன்.
இதை தான் பார்வதி சொல்லி கொண்டு இருக்க தேனு வெளியே வந்தாள்
பின்னே அமைதியாக வந்து நின்ற பாரி இளவழகனை பார்த்து அழகா பேசிட்டீங்களா?
இதோட முடியுதா அத்த இனி காலம் முழுக்க பேசனும் இல்ல…
அதிலேயே புரிஞ்சு போச்சு என்பது போல் மூத்தவர்கள் தலை அசைக்க
முடிவு பண்ணிட்டீங்களா தேதியை
துயமல்லி, “ எல்லாம் முடிஞ்சது நீ மேகாவையும் தேனுவையும் அழைச்சிட்டு பிள்ளைக்கு முகூர்த்த புடவை அதோட இந்தா என்று பாரி இளவழகன் கையில் ஒரு சிறிய பெட்டியை தர..
மென்னகையுடன் அதை பெற்றவன் திரும்பி இதை பத்திரமா வச்சுக்க உனக்காக காத்துட்டு இருந்தது இனி அதை பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு என்று அவள் கையில் தர
தேனு நடுக்கத்துடன் அதை வாங்க..
கண்ணு எதுக்கு பயம் ஜமீன் வீட்டு ராணி நீ, எதை கண்டும் பயப்படக்கூடாது தைரியமா எதுவா இருந்தாலும் துணிஞ்சு செய் ..
சரிங்க ஆத்தா..
அட என்ன என்னைய ஆத்தான்னு சொல்லுறவ..
வேற எப்படி கூப்பிட இவங்க அப்பத்தா அம்மத்தான்னு எப்படி சொல்ல
அம்மத்தான்னே சொல்லு என் பொண்ணு வீட்டில் தானே என் பேரனுக்கு பொண்ணு எடுக்கிறேன் அவன் என் மகனோடு பையன், நீ என் பொண்ணோட பொண்ணு என்று துயமல்லி சிரிக்க
சரி சரி நேரம் கடத்தாம போய்ட்டு வாங்க
மூவரும் கிளம்பி செல்ல , “ வீட்டிலோ வேலாயுதம் ஆயுதமாகவே மாறி இருந்தார் கயல் சொன்னதை கேட்டு…
தேன் வருவாள்