• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

87 & 88. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயனெக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
இரவு உணவு உண்ட பிறகே, அவர்களை போகவிட்டார் சாந்தி! எல்லாருமாக உணவு மேசையின் அமர்ந்திருந்தனர்! சரியாக சுரேந்திரன் அவன் எதிரே அமர்ந்திருக்க, அவரை அடுத்து, சாருபாலாவும், நிவனும் அமர்ந்திருந்தனர்! வசந்தன் ரிஷியின் அருகில் அமர்ந்திருந்தான்! சாந்தி அவனுக்கு அருகில் அமர்ந்து, வர்ஷனை மடியில் அமர்த்தி அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்! பணிப்பெண் அனைவருக்கும் பரிமாறினாள்!

சாருபாலாவுக்கு மகன் இன்னும் கொஞ்சம் நேரத்தில் கிளம்பிவிடுவான் என்று தவிப்பாக இருந்தது! அருகில் அமர்ந்திருந்த நிவன் ஆதித்யா, அவரது முகபாவங்களை கண்டுவிட்டு யோசனையோடு உண்டு கொண்டிருந்தார்!

கடந்த மூன்று ஆண்டுகளாக நிவன் ஆதித்யா, சாருபாலாவுடன் பழகி வருகிறார்! நல்ல நண்பராக, தொழில் விஷயங்களில் ஆலோசகராக, இருந்து வருகிறார்! ஆயினும் சாருபாலாவின் முந்தைய வாழ்வு பற்றி அவருக்கு தெளிவாக தெரியாது! அவர் கேட்கவில்லை ! சாருபாலாவுக்கு சொல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை!

சாருபாலாவை சந்தித்த நாள் முதலாக, நிவன் கவனித்தவரையில் அவரிடம் ஒரு நிமிர்வும் கமபீரமும் இருக்கும், சீக்கிரமாக அவர் எதிலும் மனதை தளரவிட மாட்டார்! ஆனால் இன்று அவரிடம் மிகுந்த தடுமாற்றம்! எங்கோ கவனமாக அவ்வப்போது லயித்துப் போவதும், கலங்கும் கண்களை பிறர் அறியாமல் துடைப்பதுமாக வித்தியாசமாக தெரிந்தார்!

வர்ஷனுடைய பிறந்த தினத்தில் தான் அவர்கள் நேரடியாக சந்தித்துக் கொள்வது! மற்ற நேரத்தில் அவசியம் என்றால் காணொளியில் சந்தித்துக் கொள்வார்கள்! ஆனால் தினமும் பேசிக் கொள்ளும் வழக்கம் கிடையாது.

அந்த இளைஞர்களை காணும் வரை சாருபாலா மிகவும் இயல்பாகத்தான் இருந்தார்! அவர்களை பார்த்த பின்தான் இந்த மாற்றம்! அதில் அந்த ரிஷிகேசவன் .. அவன் பெயரை சொல்லும் போதுதான் தடுமாறினார்! அவனுக்கும் இவருக்கு என்ன சம்பந்தம்? அதை எப்படி தெரிந்து கொள்வது ? என்று அவர் யோசிக்கும் போதுதான், வசந்தன் திருமணமானவன் என்று சாந்தி,அவனை விசாரித்த போது புரிந்து கொண்டிருந்தார். காணொளியில் இனியாவும், ரிஷியைப் பார்த்ததும் தான் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு போய்விட்டாள்! அவருக்கு சில விஷயம் புரிவது போயிருந்தது!

என்ன இருந்தாலும் அது சாருவின் தனிப்பட்ட விஷயம்! அதில் அவர் தலையிட முடியாது! அதற்கான உரிமை அவருக்கு கிடையாது! ஆனால் சாரு தவிப்பதை அவரால் பார்க்க முடியவில்லை! அதற்கு என்ன தீர்வு என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்!

"அண்ணா, சாப்பிடாமல் என்ன யோசனை ?" என்று சாந்தி கேட்டதும் நிகழ்வுக்கு திரும்பினார்!

வசந்தனும்,ரிஷியும் சாப்பிட்டு முடித்திருந்தனர்! மீண்டும் ரிஷி அந்த வீட்டிற்கு வந்துவிடக்கூடாது என்று சுரேந்திரன் எண்ணினார்! அதற்கு அவர் செய்ய வேண்டியதை செய்தே ஆகவேண்டும்! இத்தனை ஆண்டுகள் எந்த சலனமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த தமக்கையின் வாழ்வில் புதிதாக இந்த பாசப் போராட்டம் தொடங்கிவிட்டதை அவர் உணர்ந்தார்! ஆகவே அதை முளையிலேயே முறித்து விடுவது தான் எல்லோருக்கும் நல்லது!

ஆகவே வசந்தனிடம், "உன்கிட்ட முக்கியமான சில விஷயங்கள் பேச வேண்டும் என்னோடு வா" என்று மாடிக்கு அழைத்துப் போனார்!

சாந்தியை சாப்பிடச் சொல்லிவிட்டு, ரிஷி, வர்ஷனை தூக்கிக் கொண்டு கூடத்திற்கு வந்தான்!

"நீ.. நீங்க யாரு? என்றான் வர்ஷன்!

"நான் ரிஷி! உன் பெயர் என்ன?

"எம்பேரு.. வர்சன் "

"ஓ! வர்ஷனா? நைஸ் நேம்! உனக்கு என்ன பிடிக்கும்? "

ரிஷியை பின் தொடர்ந்து சாருபாலுவும் கூடத்திற்கு வர, நிவனும் தொடர்ந்தார்!

"எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்!"

"ம்ம்.. எனக்கும் தான்! அப்புறம் சாக்லேட் பிடிக்காதா ?

"பிடிக்காது.. குபொல்ஜாம், பிடிக்கும் சாந்தி பாத்தி செய்வா! சூப்பரா இருக்கும்!"

"ஏதே.. குபொல்ஜாமா? அதென்னடா புது ஜாம்?"

"அது குலாப்ஜாமூன் ! அதைத்தான் அப்படி சொல்கிறான்" என்றார் எதிர் சோபாவில் அமர்ந்திருந்த சாருபாலா!

"ஹா ஹா...ஹா.."ரிஷி வாய்விட்டு, அடக்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரிக்க,

அதை கண்கள் குளமாக பார்த்திருந்தார் அந்தத் தாய்!

அந்த நாடகத்தை மௌனமாக பார்த்திருந்தார் நிவன்!

🧡🧡🧡

அதே நேரம் மாடிக்கு சென்ற சுரேந்திரனும் வசந்தனும் மௌனமாக தூரத்தில் தெரியும், கடலை பார்த்தபடி, வீசும் இதமான காற்றை அனுபவித்தபடி நின்றிருந்தனர்!

வசந்தனுக்கு காலையில் ஊருக்கு கிளம்பியாக வேண்டும்! ஆகவே, அவனே பேச்சை ஆரம்பித்தான்!

"அங்கிள் என்ன விஷயம் ? இவ்வளவு தயக்கம் எதற்கு ?

"எங்கே ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை வசந்த்! ஆனாலும் உனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்! உன் நண்பன் ரிஷியைப் பத்தி உனக்கு என்ன தெரியும் என்று முதலில் நீ சொல்லு!" என்றார்

வசந்தனுக்கு உள்ளம் பரபரத்தது! அவன் எதிர்பார்த்த ருசு கிடைக்கப் போகிறது என்று நினைத்தவன், தனக்கு தெரிந்த அளவில் சொன்னான்!

" ஓ! உன் பெற்றோருக்கு விஷயம் தெரியுமா? சாருபாலாவைப் பற்றி அவர்களுக்கு தெரியுமா?
அப்படியும் ரிஷியை உன்னோடு பழகவிட்டிருக்காங்க! ஆச்சர்யம் தான்!"

"என் அம்மாவுக்கு அது உங்க அக்கா தான் என்று தெரியாது! தெரிந்திருந்தால் நிச்சயமாக என்கிட்டே சொல்லியிருப்பாங்க! அவங்களுக்கு ரிஷி மேல பெற்ற தாயிருந்தும், தெரியாமல் யாரையோ தாயாக பாசம் காட்டுகிறானே என்ற ஆதங்கம் உண்டு!"

ரிஷி, என் நண்பன் என்பதால் நான் அவனுக்கு பரிந்து பேசுவதாக தோன்றலாம்! ஆனால் அப்படி இல்லை! அவனுக்கு என் மீது தனிப் பிரியம் உண்டு! அவனைப் பற்றிய உண்மை தெரிந்த பிறகு, அவன் வீட்டிற்கு செல்ல எனக்கு பிடிக்கவில்லை! நேற்று என்னை அவன் வீட்டில் தங்கச் சொன்னான்" என்ற வசந்த், முன்தினம் நடந்ததைச் சொல்லிவிட்டு,"அங்கிள், அவன் என் மீது பிரியமும், நம்பிக்கையும் வைத்திருக்கிறான்! அதனால் தான் என்னால் அவனை விட்டுத்தர முடியவில்லை!"

"ம்ம்.. என்னைப் பொறுத்தவரை அவன் மீது எனக்கும் தனிப்பட்ட எந்த கோபம் இல்லை வசந்த்! சொல்லப்போனால் அவனுக்கு நடந்த ஏதும் தெரியாது! சொல்லியிருக்க மாட்டாங்க! ஆனால் அவனது தோற்றம் எனக்கு அவன் அப்பாவை ஞாபகப்படுத்துது! அந்த ஆளை நினைத்தாலே எனக்கு கொலைவெறியாகுது! இத்தனை காலமாக என் அக்கா எல்லாத்தையும் புறம் தள்ளிவிட்டு, அவளது வாழ்க்கையை, எங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்! உள்ளூர வருத்தம் இருந்திருக்கலாம்! ஆனால் ஒரு கணம் கூட அவள் காட்டிக்கொண்டது இல்லை! அதற்கு முக்கிய காரணம் இன்பா! ஆனால் இப்போது அவளையும் தொலைத்துவிட்டு, நாங்கள் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை! அப்போதும் அவள்தான் எங்களுக்கு பக்கபலமாக நின்றாள்! ஒரு நாள் அந்த குழந்தையை கொண்டு வந்து கைகளில் கொடுத்து, என்ன, எப்படி என்று காரணம் கேட்காதீங்க, இனி இது நம்ம வீட்டு குழந்தை இதை நாம் சேர்ந்து வளர்ப்போம்" என்றாள்.

"நாங்கள் இருந்த துக்கத்தில் அவன் வந்த பிறகு, எங்களுக்கு அத்தனை ஆறுதலாக இருக்கிறது! இப்போது ரிஷியைப் பார்த்துவிட்டு சாரு தவிப்பதை என்னால பார்க்க முடியவில்லை வசந்த்!"

"அப்படின்னா, ரிஷிக்கிட்ட உண்மையை சொல்லிவிட்டால் என்ன அங்கிள்? என்ன நடந்தது என்று எனக்கு தெரிவதை விட அவனுக்கு தெரிவது தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்!"

"அவன் மீது உரிமை கொண்டாடக் கூடாது என்று அவனோட பாட்டி சொன்னாளாம்! இல்லாவிட்டால் கண்முன்னால் பிள்ளையை பார்த்தும் தன்னை கட்டுப்படுத்த இவ்வளவு கஷ்டப்படுவாளா ஒருத்தி? அவங்க பெரிய அரிச்சந்திர குடும்பம் பாரு, அவங்க சொன்னதை அப்படியே நாம கேட்கணும்னு என்ன நிச்சயம்?" சுரேந்தினின் குரலில் அத்தனை ஆத்திரம்!

மென்மையான மனிதர் என்று அறியப்பட்டவருக்குள், இவ்வளவு கொந்தளிப்பை எப்படித்தான் மறைத்து வைத்திருந்தாரோ என்று நினைத்தான் வசந்தன்!அவர் கேட்பதும் நியாயம் தானே? ஆனால் ரிஷியிடம் உண்மை சொல்லிவிடத்தான் வேண்டும்! முழுவதும் தெரிந்தால் தானே சொல்ல இயலும்?

"சரி, நீங்க தானே உரிமை கொண்டாடக் கூடாது? அவன் உரிமையாக வந்தால், விரட்டி விட மாட்டீங்க தானே?"

"அதெப்படி விரட்டுவோம்? ஆனால் உண்மை தெரியாமல் எப்படி வருவான்?"

"நடந்ததை என்னிடம், அதாவது என் மீது நம்பிக்கை இருந்தால் சொல்லுங்க அங்கிள்! கூடவே எனக்கு ஒரே ஒரு ஆதாரம் தேவைப்படுது! அதையும் தந்தால், நான் அவனிடம் சொல்கிறேன்! ஆதாரமே இல்லாமல் நான் சொன்னால் ரிஷி அப்படியே நம்புவான் என்பது வேறு விஷயம்! ஆயினும், இத்தனை வருடமாக வளர்த்த அன்னை தன்னை பெற்றவள் இல்லை என்பதை அவன் மனது ஏற்றுக்கொள்ள அது தேவைப்படலாம் என்பது என் கணிப்பு!"

சுரேந்திரனுக்கு ஒரு எண்ணம் சமீப காலமாக தோன்றிக் கொண்டே இருக்கிறது! ஒரு வேளை தனக்கு திடீரென ஏதும் ஆகிவிட்டால் மனைவியும், தமக்கையும் தவித்துப் போவார்களே ! அப்போது அவர்களை தாங்குவதற்கு யார் இருக்கிறார்கள்? என்ற கலக்கம்! தமிழரசன் நிச்சயமாக பார்த்துக் கொள்வார்தான்! ஆனால் ஏற்கனவே அவர் திலகத்தின் பொறுப்பை ஏற்று செய்திருக்கும் உதவி மிகவும் பெரிது! மேலும் மேலும் அவர் மீது பாரம் ஏற்றுவது சரியாகப்படவில்லை! நிவன் ஆதித்யா அவர்களுக்கு அறிமுகமான பின், அவரது கலக்கம் சற்று மட்டுப்பட்டிருக்கிறது! ஆனாலும் அவரையும் முழுமையாக எப்படி நம்புவது என்ற எண்ணம் தான்! அதுவே சாருவின் பிள்ளை என்றால் எந்தவித கவலையும் இல்லை" என்று இப்போது தோன்றியது!


88. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!


நிவன் ஆதித்யாவுக்கு ரிஷியைப் பற்றிய சின்ன ஊகம் இருந்தது! சாருபாலவை முதல் முறை அவர் சந்தித்த போது, அவருடன் நடந்த சம்பாஷணை அனைத்தும் இன்றும் நினைவில் இருக்கிறது! அதில் முக்கியமாக, இரண்டு வாக்கியங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து போனவை!
ஒன்று, என் வாழ்வில் ஏனோ எந்தக் குழந்தையும் என்னோடு இருக்கும் கொடுப்பினையே இல்லாமல் போய்விட்டது! "

அடுத்தது,"பெற்ற தாய் குழந்தையை பிரிவது எத்தனை பெரிய வேதனை என்பதை அனுபவித்து அறிந்தவள் நான்!" என்று சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது !

நிவன் ஆதித்யா, மனோதத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர்! ஆகவே, சாரு, ரிஷியிடம் நடந்து கொள்ளும் முறையை பார்க்கையில், அவரது குழந்தை, இவன் தான் என்று தெளிவாக புரிந்தது! ஆனால் ஏன் அதை சொல்லாமல் மருகுகிறார்? பெற்ற பிள்ளையை,கண்ணெதிரே பார்த்துவிட்டு, அவனிடம் உரிமையாய் சொந்தம் கொண்டாட முடியாத அளவிற்கு அப்படி என்ன பிரச்சினை?

ரிஷியோடு விளையாடிய வர்ஷன் பாதி விளையாட்டில் தூக்கத்திற்கு வந்துவிட்டான்! ஆகவே அவனை தன் மடியிலேயே கிடத்தி தட்டிக் கொடுக்க, அவன் தூங்கிப் போனான்!

"பார்த்தீங்களா ஆதி? வர்ஷன் வெளி ஆட்களிடம் சட்னு போக மாட்டான் என்று உங்களுக்கு தெரியும் தானே? இப்ப பாருங்க முதல் தடவையில் கேசவனோடு நன்றாக ஒட்டிக் கொண்டானே" என்றார் சாருபாலா!

"ஆமாம், கவனித்தேன்! சரி நான் அவனை உள்ளே வசதியாக படுக்கப் போட்டுவிட்டு வருகிறேன்!"
என்று நிவன் எழுந்தார்!

"இல்லை நான் கிளம்பும் வரை அவன் என்னோடு இருக்கட்டும்" என்றான் ரிஷி!

"நீயும் காலாகலாத்தில் கல்யாணம் செய்திருந்தால் இப்படி ஒரு பிள்ளை உனக்கு இருந்திருப்பான்" என்றவர், "ஆமா, நீ, ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை கேசவ்?"

ரிஷிக்கு தன்னைப் பற்றி சொல்வதற்கு, ஒரு வாய்ப்பாக தோன்ற,"வீட்டில் சொல்றாங்க! ஆனால் எனக்கு ஒரு சின்ன பிரச்சினை!"

"என்ன பிரச்சினை?" என்றார் சாருபாலா மகனின் முகத்தை கூர்ந்தபடி கேட்டார்!

"சொல்கிறேன் டாக்டர்,"என்றவன், டாக்டர் சார், நீங்களும் கேளுங்க, ஏன் என்றால் என் பிரச்சினை பத்தி உங்களால் தான் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் என்றவாறு நிவனையும் அழைத்து சாருபாலா அருகில் அமரச் செய்தான்!

நிவனுக்கு புதிராக இருக்கும் சில வினாக்களுக்கு விடை கிடைக்கும் என்று தோன்றியது!

"எனக்கு ஒரு விபத்து நடந்தது"

"ஐயோ! எப்போ ? என்று சாருபாலா பதறி எழுந்தவர், மகன் அருகில் சென்று அமர்ந்தவர், தலை முதல் கால் வரை அவரது பார்வை அவசரமாக அலசியது!

சாருபாலாவின் செய்கை அவனுக்கு வித்தியாசமாக தெரியவில்லை! காரணம் அவர் ஒரு மருத்துவர்! ஆகவே இயல்பாகவே ஏற்றான்!

"இப்போ இல்லை டாக்டர், நாலு வருஷம் முன்பு! பெரிசா அடி ஏதும் படவில்லை, ஆனால் தலையில் லேசாக அடி! அதனால இரண்டு வருசம் நடந்தது எல்லாம் சுத்தமாக மறந்துடுச்சு! ஆனால் அந்த இரண்டு வருசம் முன்னாடி நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கு! அதுக்கு பெயர் கூட என்னவோ சொல்வாங்களே? என்ன அது டாக்டர் சார்?

"செலக்டிவ் அம்னிஷியா" என்றார் நிவன் ஆதித்யா!

"எஸ்.. அதே தான்! நான் அந்த இரண்டு வருஷத்தில் நடந்ததை மறந்துட்டேன்! அதைக்கூட என் நண்பன் வசந்தன் தான் சொன்னான்!"

"ஆனால் அதுக்கும் நீ, கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் கேசவ்?" மகனின் கையை தன் கையில் எடுத்து வைத்தபடி சாருபாலா கேட்டார்!

கேசவ் என்ற அந்த அழைப்பு ரிஷிக்கு ஏனோ பழக்கப்பட்டது போல, தோன்றியது! சாருபாலாவின் தொடுகையில் தெரிந்த வாஞ்சை, அவனுக்கு புதிதாக இருந்தது! அவனது மனதை ஏதோ செய்தது!

சாருவின் முகத்தை பார்த்தான்! அவரது கண்களில் தெரிந்த, உணர்வுக் கலவைகள், ஒருகணம் அவனுக்கு சட்டென்று பேச்சு வரவில்லை!

சாருபாலா ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு, புன்னகைத்தார்! "சொல்லுப்பா, மறந்து போனதுக்கும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும், என்ன சம்பந்தம்?"

"அந்த இரண்டு வருஷத்தில் நான் யாரை சந்தித்தேன், என்ன ஏது என்று ஒன்றும் நினைவே இல்லை! முக்கியமான விஷயங்கள் ஏதும் நடக்காதப்போ, பழைய நினைவுகளை நினைவு படுத்த முயலவேண்டாம் என்றுவிட்டார் டாக்டர்! சொல்லப்போனால் இந்த விபத்து பத்தி எங்க வீட்டில் யாருக்கும் சொல்லவில்லை! வசந்த் தான் சொல்ல வேண்டாம் என்றுவிட்டான்! காரணம் ஒரு நோயாளி மாதிரி ட்ரீட் பண்ணுவாங்கனு சொன்னான்! அப்படி நடக்கக்கூடிய சாத்தியம் இருந்தது. அதனால் நானும் சொல்லவில்லை! திருமணப் பேச்சு எடுக்க ஆரம்பித்த பிறகு, என் கனவில் ஒரு பொண்ணு வர ஆரமபிச்சாள்! ஆனால் அவளை நான் பார்த்த நினைவே இல்லை! எனக்கு இதைப் பத்தியும் யார்க்கிட்டேயும் சொல்ல முடியலை! ஏதோ ஒரு தயக்கம்!

வசந்தன், மனைவி குழந்தை என்று சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்கிறான், அவனிடம் இப்போது இதை சொன்னால் அவன் எனக்காக ஓடி வந்துவிடுவான்! அதனால அவனுக்கும் சொல்லவில்லை! ஆனால் எனக்குள் ஒரு சின்ன சந்தேகம், அந்த இடைப்பட்ட காலத்தில் நான் ஏதோ ஒரு பெண்ணை சந்தித்து இருப்பேனோ என்று! எனக்கு முதலில் எல்லாம் காதல் என்று என்னை சுற்றிய பெண்களிடம் வெறுப்பு தான் அதிகம்! காரணம் அவர்கள் பணத்திற்காக என்று பழகியவர்கள்! நிஜமான அன்பு யாரிடமும் இல்லை! ஆகவே இடைப்பட்ட காலத்தில் நான் ஏதேனும் பெண்ணின் மனதை காயப்படுத்தியிருப்பேனோ என்று உறுத்தல் உண்டாகிவிட்டது! அந்த உணர்வோடு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை! அதனால் வீட்டில் எனக்கு திருமண வாழ்வு இல்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டேன்!"

"கேசவ், என்னப்பா இப்படி முடிவு பண்ணிட்டே?" என்ற சாருபாலாவின் முகம் சட்டென்று கலங்கியது!

ரிஷியால் அவரது அந்த முகத்தை பார்க்க முடியவில்லை, தன்னியல்பாய், பற்றியிருந்த கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தவன்," கவலைப்படாதீங்க டாக்டர்! இப்ப நான் முடிவை மாத்திக்கிட்டேன்"! என்று பெரிதாக புன்னகைத்தான்!

"ஓ! ஆனால் எப்படி? உனக்கு பழைய நினைவு வந்துவிட்டதா?" என்றார் ஆவலுடன்! சட்டென்று மாறும் அவரது பாவங்களில் ஈர்க்கப்பட்டான் ரிஷி!

"வசந்தன் தானே காரணம்? என்றார் அதுவரை பார்வையாளராக இருந்த நிவன் ஆதித்யா!

"எஸ்.. டாக்டர்! யூ ஆர் வெரி ஸ்மார்ட் டாக்டர்! என்றான் ரிஷி வியந்த குரலில்

"வசந்தன் என்ன சொன்னான் என்று நான் சொல்லட்டுமா யங்மேன்?" என்றார் நிவன்

"நீங்க என்ன மந்திரவாதியா ஆதி? உங்களுக்கு எப்படி தெரியுமாம்?" என்றார் சாருபாலா!

ரிஷிக்கு, அதுவரை உணர்ச்சிவசப்பட்டவராக பார்த்த சாருபாலா, இப்போது இயல்பாக பேசுவதை உணரமுடிந்தது!

"நான் மந்திரவாதி என்று எப்ப சொன்னேன் பாலா? ஆனால் இது ஒரு சின்ன அனுமானம் தான்! நீ இப்ப நார்மலா இல்லை! அதனால உனக்கு தோன்றவில்லை!"

"என்ன சொன்னீங்க ஆதி? நான் நார்மலா இல்லையா?" என்று சண்டைக்கு கிளம்பினார்!

"ஆமா, நீ கொஞ்சம் எக்சைட்டாக இருக்கிறே! ஆனால் அதைப் பத்தி நான் அப்புறமா விளக்கமா சொல்றேன்! சரி, இப்ப நான் ரிஷிகேசவன் விஷயத்தை, சொல்லட்டுமா வேண்டாமா? என்றார் கண்ணில் சிரிப்புடன்!

"ம் ம்.. உங்களை அப்புறமாக வச்சுக்கிறேன்! இப்ப விஷயத்தை சொல்லுங்க!"

"வசந்தன் வந்திருக்காரில்லையா? அவர் அந்த இரண்டு வருஷம் என்ன நடந்துச்சுன்னு சொல்லியிருப்பார்! அதில் முக்கியமான ஒரு விஷயம் ரிஷி ஒரு பெண்ணை சந்தித்தார் என்பது தான்! அதனால் தான் இப்ப அவர் முடிவை மாத்திக்கிட்டார்!"

"ஓ! மை காட், டாக்டர்! வசந்தன் தான் சொன்னான் என்பது எளிதாக கண்டுபிடித்துவிடலாம்! ஆனால் ஒரு பெண்ணை சந்தித்ததாக சொன்னது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே? அதை எப்படி கண்டுபிடித்தீர்கள்!"

"இதுவும் அனுமானம் தான்! ஆனால் அது எப்படி என்று சமயம் வரும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள் ரிஷி"

"கிரேட் டாக்டர்! என்றவன் மரியாதை பன்மை வேண்டாமே ! டாக்டர் மேடம் மாதிரி வா போ என்று அழைக்கலாமே?

"அவளுக்கு உரிமை இருக்கிறது! எனக்கு, அது இல்லை அல்லவா?"

"ஆதி! எ.. என்ன சொல்றீங்க? ஏதாவது நீங்களாக கற்பனை பண்ணிட்டு சொல்லாதீங்க! " என்று அவசரமாக இடைமறித்தார் சாருபாலா!

"கற்பனை? ஆர் யூ சீரியஸ் பாலா?

Of course it's your personal! But yes,Iam telling the truth! என்று அவர் நேர்பார்வை பார்க்கவும் சாருபாலா வாயடைத்துப் போனார்!

ரிஷிக்கு, சாருபாலாவின் கதை தெரியாது ! மருத்துவப்பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என்று தான் நினைத்திருந்தான்! ஆனால்..

நிவன் ஆதித்யா என்ன சொல்கிறார்? சாருபாலாவுக்கு அவனிடம் உரிமை இருக்கிறதா? எப்படி ? இதென்ன புது திருப்பம்? என்று ரிஷி குழம்பிப் போனான்!