• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

9.ஃபிளாஷ்பேக்

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
அவளை அள்ளி அணைத்திட கைகள் துடித்தாலும் அவள் மனதில் இருக்கும் பாரத்தை முழுதாய் இறக்கட்டும் என்று அமைதியாய் நின்றான்.

சிறிதுநேரம் அழுதவள் ”ஸ்கூல் முடிச்சிட்டேன், பிளஸ் டூல நான் தான் எங்க மாவட்டத்திலேயே முதல் மார்க்”.

"அந்த ஊரே என்னை தலைல தூக்கி வச்சி கொண்டாடினாங்க. ஆனா, நான் முதல் மார்க் வங்கனதுக்கு எங்க சித்தி கொடுத்த பரிசு ..." என மெளனமாக இருந்தவள் எழுந்து ஷக்தியின் கையை பற்றி காருக்குள் உட்காரவைத்து தானும் அமர்ந்தாள்.

இரண்டு நொடி கண்களை மூடி அமைதியாக இருந்தவள். பெருமூச்சொன்றை விட்டபடி இடது காலில் தன் சேலையை சற்று தூக்க அவளின் கெண்டைக்காலில் பெரியதொரு தழும்பு.

பார்த்து அதிர்ந்து விட்டான் ஷக்தி. ”என்னதிது இவ்வளவு பெரிய காயம்?” என்றான்.

அவனின் துடிப்பில் ஒரு நிமிடம் சந்தோச பட்டு பின் ”எங்க சித்தி எனக்கு கொடுத்த பரிசு. அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகை எடுத்து சூடு வைத்துவிட்டார்" என்று அழுதாள்.

இத்தனையும் மீறி வக்கீல் வந்து என்னிடம் ”மஹா! தாத்தா உன்னை நீ விருப்பப்பட்ட படிப்பு நல்லா படிக்கச் சொல்லிருக்காரு. நீ என்னம்மா படிக்க போறேன்னு?” கேட்டாரு.

நான் உடனே சித்தியை பார்க்க ‘படிக்கச் மாட்டேன் என்று சொல்’ என்று தலையாட்டினார்கள், ஆனாலும் நான் படிக்கவேண்டும் என்ற ஆசையினால் “பி.இ படிக்கச் போறேன் அங்கிள்” என்றேன்.

"சரிம்மா” என்று என்னை உடனே கூட்டி சென்று இன்ஜினியரிங் காலேஜில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

"வீட்டிற்கு வந்தவுடன் என் சித்தி கை வலிக்கும் வரை அடித்து விட்டு என்னை ஒரு இருட்டறையில் இரண்டு நாள் பட்டினியாக அடைந்துவிட்டார்” என்று தேம்பினாள்.

"அந்த இருட்டு அரை ..." என்று அவள் சொல்லும் போதே கண்களில் தெரிந்த பயம் ஷக்தியை கட்டிக்கொண்டாள். அவளை சமாதான படுத்த அவளின் முதுகை ஆதரவாய் தடவி விட்டான்.

சிறிதுநேரம் கழித்து தான் அவனிடம் இதுக்கும் நிலை உணர்ந்து வேகமாக அவனிடம் இருந்து பிரிந்தவள்” என்னை மன்னிச்சிடுங்க நான் ...".

"பரவால்ல அப்புறம்” என்றவனை பாராமல்.

"அதுக்கப்புறம் என்னை எவ்ளோ கொடுமை படுத்தினாலும் பரவால்ல படிக்கணும்னு மட்டும் முடிவு பண்ணிட்டேன். காலேஜ்ம் சேர்ந்திட்டேன். ஆனா, அதுக்கப்புறம் தான் பிரச்சனையே சித்தி காலேஜ் பக்கத்துலேயே வீடு எடுத்து என் கூடயே தங்கிட்டாங்க".

"ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம் தான் இப்படியே நாலு வருஷம் போய் காலேஜ் படிச்சேன். தாத்தா உயில் படி சொத்தை அனுபவிக்க முடியாம தாத்தா மேல இருந்த கோபம் எல்லாம் சேர்ந்து அவங்க போட்ட பிளான் தான் என்னை அவங்க தம்பிக்கே கல்யாணம் பண்ண நினைச்சது. என்ன ஆனாலும் இதுக்கு மட்டும் ஒதுக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணி ..."

"சித்தி எனக்கு கல்யாணம் வேண்டாம்” என்றேன் தைரியத்தை வரவழைத்து கொண்டு.

"ஏன்? என் தம்பிக்கென்ன ராஜா மாதிரி இருக்கான்? உன்னை நான் இப்ப அனுமதி கேக்கலயே” அப்டினு என்னை அடிச்சாங்க.

"நீங்க என்னை எவ்ளோ அடிச்சாலும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று சொன்னேன்.

"அதுக்கு அவங்க சொன்னது...” என்று மறுபடியும் ஷக்தியின் கையை பற்றிக்கொண்டாள்.

"ஒன்னு ஊர்கூட்டி என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வெப்பேன். இல்ல,உன்னை கல்யாணத்த்கு முன்னாடியே என் தம்பிக்கு தாரமாகிட்டு தாலிகட்ட வைப்பேன். என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நினைச்ச உனக்குன்னு இருக்க அந்த கிழவியை கொன்னுடுவேன் நல்லா யோசிச்சு உன் முடிவ சொல்" என்று போய்ட்டாங்க.

"தாலி கட்றத்துக்கு முன்ன ஒருத்தன் என்னை தொடறதை என்னால ஏத்துக்க முடியல அதான் என் தலையெழுத்து இது தான்னு நினைச்சுகிட்டு ஒத்துக்கிட்டேன்”.

"சித்தியின் தம்பி நல்லவனென்றாலும் பரவாயில்லை. எல்லா கெட்ட பழக்கங்களும் தத்து எடுத்தவன். அதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே நிறைய பெண்களுடன் தவறான உறவு வைத்திருக்கிறான் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதனால் தான் அவன் கட்டும் தாலி என் கழுத்தில் ஏறும் முன் இந்த உலகை விட்டு போகலாம் என்று கையில் விஷம் வைத்திருந்தேன். அவனை என் அருகில் பார்த்தவுடன் டென்ஷன் அதிகமாகி மயங்கிவிட எழும்போது நீங்கள் என் கழுத்தில் ..." என்று முடிக்காமல் அவனை பார்த்தாள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையின் வலியையும் அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் தெரிந்தது.

அவளை சட்டென இழுத்து அவனோடு அணைத்து கொண்டான். ”சாரி! நான் முன்னாடியே வந்துருக்கணும்” என்று கண்கலங்கினான்.

"அவங்கள நான் சும்மா விட மாட்டேன்” என்று கோவத்தில் நரம்புகள் புடைக்க கூறினான்.

அவனின் அணைப்பு தனக்கு பாதுகாப்பை தரும் என்று நம்பினாள்
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
அச்சோ சூடு வச்சுருக்காங்களே மஹாவுக்கு சக்தி சும்மா விடுவானா அவ சித்திய 🙄🙄🙄🙄