• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

9.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

9.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



ஹாய் சார், நான் ரவி சார் அனுப்பினவங்க வாங்க என்று டிரைவர் அழைக்க…

ஹலோ.. என்றவன் நேரா கலெக்டர் ரிஷி பாலா வை பார்க்க வேண்டும் என்று கேட்டே பகலவன் வண்டியில் ஏறி அமர.. நான் ரவி சார் கிட்ட கேட்கிறேன் சார் என்றவன் அழைப்பை ஏற்படுத்த..


சொல்லு பங்கஜ்…

சார் ரிஷி மேமை பார்க்கனுமாம் என்று நிறுத்த…

போனை குடு என்றவன் பகலவன் போனை வாங்கியதும் ஹலோ சார் ஹவ் ஆர் யூ..

யா ஃபைன் மேன் வாட் எபவுட் யூ..

ஃபைன் சார் …சார் இப்ப அவங்களை பார்க்க முடியாதே அவங்க லீவ் ல இருக்காங்க ..

என்னது லீவ் ஆ நேத்து மிட் நைட் ல தானே நியூஸ் குடுத்தாங்க.

ஆமா சார் ஆனா அவங்களுக்கு இந்த கேஸ் இல்ல அவங்களை ரிலீவ் பண்ணி அனுப்பி இருக்காங்க சோ நீங்க அவங்களை பார்க்க முடியாது என்று இன்னொரு லைனில் நிமாவை வைத்து கொண்டு பேச..

ப்ச் மிஸ்டர் அவளை நான் கலெக்டராக பார்க்க வரல என் பொண்டாட்டியா பார்க்க வந்து இருக்கேன் இப்ப எங்க இருக்கான்னு மட்டும் சொன்னா போதும் .

சார் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல நீங்க வேணும் ன்னா கலெக்டர் ஆபிஸ் போய் பார்க்கலாம் என்றதும்.

ஓகே ..

சார் உங்களுக்கு தங்க எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கேன் நீங்க கெஸ்ட் ஹவுஸ் எப்ப வரீங்களோ வந்துடுங்க நீங்க இங்க இருந்து கிளம்புற வரை பங்கஜ் உங்க கூடவே இருப்பான்

ஓகே மிஸ்டர் .ரவி உங்களை தான் வர்மா வரதா சொன்னாங்க இப்ப..

சார் நான் மினிஸ்டர் நிமாவாகினி க்கு கார்டு சோ கொஞ்சம் வேலை இருக்கு..

ஓஓஓ அப்படியா யூ கேரி ஆன் மேன் தேங்க்யூ என்று வைத்து விட..வண்டி நேராக கலெக்டர் ஆபிஸ் செல்ல அங்கே டிஜிபி நாராயணனை ஒப்படைக்கும் பணியில் இருந்தார்.

ஹலோ நான் பகலவன் என்று தன் ஐடி கார்டை நீட்ட ஹலோ சார் வாங்க உட்காருங்க என்றார் அந்த டிஜிபி .ரிஷி ஆறு மாதத்தில் தன் வேலையை முடிக்கும் தருவாயில் இருக்க பகலவனோ ஒரு வருடத்திற்கு முன்பு பணி ஓய்வு பெற்று இதோ இப்போது வேளாண் துறையின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி கொண்டு இருக்கிறார்.

பகலவனை அழைத்து அமர வைத்தவன் எந்த வகையில் உதவ என்பது போல் பார்க்க..

நான் ரிஷி பாலாவை பார்க்க வந்தேன் அவங்க எங்கன்னு என்று கேட்க ..

அவங்க பர்சனல் வொர்க்கா கிளம்பிட்டாங்க இன்னைல இருந்து ஒரு பதினைந்து நாள் லீவ்.

வாட் அவங்க இன்னைக்கு தானே பிரஸ் மீட் என்று பகலவன் கேட்டு கொண்டு இருக்க.. சின்னய்யா என்று நாராயணன் உள்ளே ஒரு போலீசூடன் நடந்து வர..

பகலவன், “ இதெல்லாம் நல்லா இருக்கா நாராயணன் அண்ணா என்று சத்தம் போட.

என்னாச்சு சார் உங்களுக்கு இவரை தெரியுமா என்று டிஜிபி கேட்க.

நாராயணன், “ சார் என்றவன் தமிழ்நாடு சீப் மினிஸ்டர் ராமைய்யா பையன் இவங்க என்று சொல்ல..

சார் என்று எழுந்து விட்டார் டிஜிபி..

சார் உட்காருங்க என்ன நீங்க என்ற பகலவன், என்ன நாரயணா அண்ணா .. சின்னம்மா சின்னம்மா கோவமா இருந்தாங்க. அவங்க பழைய விஷயத்தை எல்லாம் பத்திரமா வச்சு இருப்பாங்க போல

ஏற்கனவே நான் சொன்னது தான் எதுவும் சரியா இல்ல அவ உங்களை சும்மா விடமாட்டான்னு ஆனா என்றவன் ..,நாராயணனை நிமிர்ந்து பார்த்து விட்டு இப்ப இருக்க அம்பிகை என்று நிறுத்திவிட்டு நாராயணனை பார்க்க..

அது வந்து சின்னைய்யா..

அப்ப தப்பு என் பக்கம் தான் இல்லையா?

இல்ல இல்ல என்று நாராயணன் பதற..

தப்பு தான் சுத்தி இருக்கிறது நரி கூட்டம் ன்னு தெரிஞ்சும் நம்பி இருந்தேன் இல்ல அதுக்கான தண்டனை இது என்றவன் சார் அவங்க அட்ரஸ் இருந்தா தாங்க என்று டிஜிபி யை பார்க்க…

அவங்க மிரிக் ல தான் இருக்கிறதா தகவல் ஆனா அவங்க வீடு எதுவும் தெரியாது இது அவங்களோட பிஏ நம்பர் நீங்க அவரை டிரை பண்ணி பாருங்க என்று அழைக்க.

ஹலோ சர்மா பேசுறேன் நீங்க… நான் பகலவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவன் ரிஷியை கேட்க..

சார் மேம் இன்னும் போன் பண்ணல பண்ணா சொல்லுறேன் என்று அவன் சொல்லிவிட.. தாமதிக்காமல் கிளம்பி வந்து இருந்தான் மிரிக் எனும் இடத்திற்கு அங்கு வந்து ஒவ்வொரு இடமாய் கேட்டு நிற்க..அந்த ஊர் மக்கள் பகலவனுக்கு வீட்டை காட்டி செல்ல அங்கே போபோ மட்டுமே இருந்தார்.

பகலவன், “ சார் நான் அம்பிகை யை பார்க்கனும்.

போபோ , “ யாரு அம்பிகை..

ரிஷி பாலா என்று சொல்ல


ஓஓஓ நீங்க என்றவரை நீங்க முதல்ல யாரு என்று பகலவன் பொறுமையிழுந்து கத்த..நான் ரிஷி அப்பா என் பொண்ணை கேட்டு வந்து நிற்கிற நீ யார்.

அப்பாவா அவளுக்கு எல்லாமே நான் தான் .

எல்லாமே வா ?

ஆமா நான் அவளோட புருஷன்.இது எப்ப இருந்து மிஸ்டர்.பகலவன் ராமைய்யா என்று போபோ கேட்கவும் அதிர்வாய் பார்த்த பகலவன் பேச்சில்லாமல் நின்றவர் சுதாரித்து ப்ளீஸ் உங்க உறவு எப்படி என்னனு எனக்கு தெரியாது ஆனா என் மனைவி இங்க தான் எங்கேயோ இருக்கான்னு தெரியும் நான் பார்க்கனும் எங்கன்னு சொல்லுங்க என்று மடிந்து அமர.


ரிஷி இங்க இல்ல அவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவைன்னு போய் இருக்கா இப்ப தொந்தரவு பண்ண முடியாது என்று போபோ சொல்ல நான் தொந்தரவு பண்ணல அவளை ஒரு முறை பார்க்கனும் என்று கேட்க.

எதுக்கு ஒரு முறை பார்க்கனும் ன்னு கேட்குறீங்க பகலவன்?

சார் ப்ளீஸ் அவ இல்லாம இத்தனை வருஷம் என்று தழுதழுக்க..

அதான் இன்னொரு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்தாச்சே அப்புறம் என்ன விஷயம் ன்னு என்று போபோ கேட்க..

என்ன சார் நக்கலா பேசுறீங்களா?

இல்லன்னு சொல்லலையே ஒரு ஐஏஎஸ் நீங்க உங்களால் உங்க பொண்டாட்டி பிள்ளையோட பாடியை கூட தேடி எடுக்க முடியாத அளவுக்கு தான் இருந்தது இல்லையா? அதை விடுங்க ஒரு ஸ்டேட் சிம் மருமகள் அவங்க அவங்களை தேட முடியலன்னு ரிஷியும் அவ குழந்தையும் இல்லன்னு முடிவு பண்ணிட்டு தானே இன்னொரு கல்யாணம் பண்ணீங்க அப்புறம் எங்க இருந்து வந்தது இந்த புருஷன் உரிமை சொல்லுங்க பகலவன்

நான் தேடலைன்னு உங்களுக்கு தெரியுமா தொடர்ந்து நாலு நாள் தேடியும் எந்த விதத்திலும் கண்டுபிடிக்கமுடியல என்று கரகரப்பாய் சொல்ல..

அப்ப இப்பவும் அப்படியே விட்டுடுங்க..

சார்..

அவ்வளவு தான் பேச்சு என்பது போல் போபோ எழுந்து சென்றுவிட .. பகலவன் வர்மாவிற்கு அழைக்க..

மாமா..

இங்க உங்க அத்தையை பார்க்க முடியாத அளவுக்கு ஒன்னு ஒன்னும் இருக்கு டா எனக்கு நீ சொன்ன பையனை வச்சு பார்க்க ஏற்பாடு பண்ணு வர்மா…

நீங்க கிளம்பி வாங்க மாமா நிறைய வேலை இருக்கு என்று

என்னடா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க..

அது உடனே நடக்கிற விஷயம் இல்ல மாமா இங்க அடுத்து ஸ்கூல் பிரச்சினை போய்ட்டு இருக்கு இங்க வாங்க என்று வர்மா சொல்ல..

வர்மா..

ப்ச் மாமா என்னைய நம்புறீங்க தானே..

ம்ம்ம்

அப்புறம் என்ன மாமா வாங்க நீங்க என்றவன் அழைப்பை முடித்து விட்டு ரவிக்கு அழைக்க..

சொல்லு மச்சான்..


உன்னோட பேசவே கூடாதுன்னு தான் இருந்தேன் ஆனா என்றவன் அமைதியாக இருக்க..

சொல்லு மச்சான் என்றான் மீண்டும் ரவி.

மாமா ரிஷி அத்தையை பார்க்கனும் ன்னு சொல்லுறாங்க ஆனா அங்க யாரையும் பிடிச்சு விசாரிக்க முடியல நீ கொஞ்சம் அதை என்னனு பாரேன்.

நான் என்னனு இதுல உனக்கு உதவனும் மச்சான்.

டேய் அவ கிட்ட சொல்லுடா..

எவகிட்ட மாச்சான்..

டேய் வந்தேன்னு வை..


வா மச்சான் நீ வந்தா தான் சரியாய் இருக்கும் என்று சொன்னதும் பல்லை கடித்த வர்மா என்னடா நக்கலடிக்கிறியா?

இல்ல உண்மையை தான் சொல்லுறேன் நீ நேர்ல வந்து பேசு..

என்ன பேசனும்? பாரு காலைலயே அவ வேலையை ஆரம்பிச்சுட்டா எதுக்கு டா இவளுக்கு இந்த வேலை அவனவன் காசை குடுத்து வேற வேற விஷயத்தை கொண்டு வந்துட்டு இருக்கான் .இவ இப்ப தான் அவங்க அவங்க மொழி முக்கியம் ன்னு உயிரை எடுத்துட்டு இருக்கா…நாங்க இதுக்கு நேரடியா ஆதரவு தான் தர்றோம் ஆனா மத்த லாங்குவேஜ் வேணும் ன்னு மக்களும் தானே எதிர்பார்க்கிறாங்க..

அவங்க சொன்னாங்களா மச்சான்..

ரவி…

சொல்லுடா ..

ப்ச் என்ன பேச சொல்லுற அவ கட்சியிலேயே நிறைய பிரச்சினை இருக்கு டா இவ எதுக்கு இந்த வேலை பார்க்கிறா…

ஏன்னு கேட்டா அவளுக்கு சரின்னுபடுறதை அவ செய்யுறா..

இதுல எவ்வளவு பிரச்சினை வரும் தெரியுமா?

தெரியாமலா ஒரு மினிஸ்டர் இந்த வேலையை பார்ப்பா என்று கேட்டதும்..

ப்ச் சரி அதை விடு இப்ப அத்தையை பார்க்கனும் அவளை இதுக்கு ஏற்பாடு பண்ண சொல்லு…

அவ என்ன பண்ணனும் ன்னு அவ தான் மச்சான் முடிவு பண்ணுவா நானோ நீயோ இல்ல வேணும் ன்னா நீ பேசு ..

அவ நம்பர் என்கிட்ட இல்ல ..

ரவி, “ இப்பவும் அவ பர்சனல் நம்பர் பழையது தான் என்றவன் போனை வைத்து விட..


அழைப்போமா வேண்டாமா என்று போனை எடுப்பதும் வைப்பதுமாக வர்மன் இருக்க ராமைய்யா வந்து விட்டார் வர்மனை அழைக்க..

வர்மா..

தாத்தா ..

சீக்கிரம் வா என்றவர் அவனை அழைத்து கொண்டு வேகமாக வெளியேற..

என்னாச்சு தாத்தா எங்க போறோம் எதுக்கு இந்த அவசரம் என்று கேட்க கேட்க எதுவும் சொல்லாமல் அடுத்த அடுத்த அழைப்பை ஏற்படுத்தி விஷயங்களை கேட்க..

அவர் பேசுவதில் இருந்து ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவன் தன் பிஏ வை அழைத்து என்ன ஏது என்று கேட்க அவன் சொன்ன செய்தியில் ஸ்தம்பித்து விட்டான் வர்மன்.


தொடரும்




 
  • Love
Reactions: shasri