9.எந்தன் தேன் ஜவ்வே
நேரா சேலம் போய்டலாம் தானே?
போகலாம் அண்ணா என்றவள் போன் பேசிக்கொண்டே சொல்ல
என்ன பதிலே இல்ல உன் பிரண்ட்
ஒரு நிமிஷம் காத்தவராயன் பிள்ளைங்களை அழைச்சிட்டு வந்துடுங்க நான் எங்கன்னு மெஸேஜ் போடுறேன் என்று சொன்னவள் தேனு என்று தோள் தொட
வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தவள் திரும்பாமலே நிறைய புதுசா இருக்கு மேகா ரோடு எல்லாம் போட்டு இருக்காங்க இல்ல
அவள் சொன்ன பதிலில் சடாரென பிரேக் அடித்து வண்டி நின்று விட..
என்னாச்சு என்று தேனு கேட்க
அது வந்து தேனு நீ என்று மேகா ஆரம்பிக்கும் முன்பே
ஒன்னு இல்ல முன்னாடி ஒரு நாய் போச்சா அதான் என்றவன் மேகாவிடம் கண்காட்ட,மேகா அமைதியானவள் என்ன கலர் எடுக்கலாம் தேனு உனக்கு?
எதுக்கு மேகா..
அடியேய் கல்யாணம் உனக்கு தானே?
ஆமா
உனக்கு தானே கல்யாண புடவை எடுக்க போறோம்..
ஓஓஓ அதை கேட்குறியா அது உங்க விருப்பம் மேகா, நான் புடவை எல்லாம் எடுக்க போனது இல்ல அதுவும் இல்லாம இதுவரை நான் புடவை கட்டினதே இல்ல என்று அவள் எல்லா விஷயத்தையும் சாதாரணமாக சொல்ல
மேகா விற்கும் பாரி இளவழகனுக்கும் தான் கணம் கூடிப் போய் இருந்தது.
அடுத்து அங்கே பேச்சே இல்லாமல் அமைதியாக வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டான் பாரி இளவழகன்.
எவ்வளவு தைரியம் இருந்தா பசங்களோட வெளியே போவா இதுக்கு தான் உங்க அம்மா இரண்டு நாள் அங்க இருக்கேன்னு சொன்னாளா என்றவர் வேகமாக கிளம்ப
கயல், “ அப்பா எங்க கிளம்பிட்டீங்க
நான் போய் இரண்டு பேரையும் இழுத்துட்டு வரேன்… உங்க பொண்ணு வெளியே போய் இருக்கா எப்படியும் வீட்டுக்கு அம்மா வருவாங்க அப்ப பேசிக்கலாம் என்று கயல் சொல்ல
இல்ல இதை இப்படியே விட்டா அப்புறம் என் மானத்தை வாங்கிடுவா
அப்பா வேணாம் நான் சொல்லுவதை கேளுங்க எப்படியும் எனக்கு தெரிஞ்சு அவ வரமாட்டா அம்மா தான் வருவாங்க அதனால் என்ன பண்ணலாம் ன்னு யோசிக்கலாம்.
வேலாயுதம் குறுக்கும் நெடுக்கும் நடக்க.
கயல், “என்ன விஷயமா அவங்க வந்து இருக்காங்க”? என்று போனில் கேட்க
அவங்க ஓல்ட் ஸ்டுடண்ட் மீட் ன்னு சொன்னாங்க
ஓஓஓ என்னைக்கு நடக்குது
அது தான் தெரியலை சீனியர் அடுத்த மாசம் ன்னு பேச்சு ஆனா திடீர்னு எல்லாருக்கும் மெஸேஜ் போய் இருக்காம் எங்க அக்கா சொல்லிட்டு இருந்தா இந்த வாரம் ஏதோ ஒரு மீட் இருக்கு போல
சரி சரி எதாவதுன்னா சொல்லு
சரிங்க சீனியர்
யார் கிட்ட கயல் கேட்டுட்டு இருக்க
என்னோட ஜூனியர் ப்பா தேனு கூட படிச்சவங்களோட தங்கச்சி
ஓஓஓ
எதுக்கு வந்தாங்க என்ன விஷயம் என்று வேலாயுதம் கேட்க கயலும் விஷயத்தை சொல்ல
அதுக்கு இவ போய் என்ன செய்யப் போறா வரவங்க எல்லாம் படிச்சவங்களா இருப்பாங்க,அதுவும் இல்லாம இவ பண்ண அசிங்கத்தை அவங்க எல்லாம் மறந்து இருப்பாங்களா என்ன? எனக்கே உடம்பு கூசுது எப்படி யாருமே இல்லாம அங்க ஒரு பையனோட லைப்ரரி உள்ள என்று முணுமுணுப்புடன், ப்ச் இவ போய் அங்க நின்று என்று சலித்து கொள்ள
அப்பா அவ போய்ட்டு வரட்டும் அப்ப தான் அவளுக்கும் எதாவது புரியும்
வேலாயுதம், “என்ன புரியனும் இதுவரை பட்டது போதாதா?
ஆனால் கயல் மனதிலோ அவள் துடிப்பதையும் ஏங்கி நிற்க வேண்டும் என்பதும் தான் எண்ணமாக இருக்கவும் போகட்டும் என்றே சொல்கிறாள் என்று யார் அறிவார்..
இருந்தாலும் பாப்பா நாளைக்கு யாராவது நம்ம கிட்ட வந்து பேசுவாங்க நமக்கு தான் அசிங்கம்
அப்பா இப்ப போனாலும் அவளை பிடிக்க முடியுமா அவ போய் இருக்கிறது ஜமீன் வீட்டு பையன் கூட
என்ன சொல்லுற
ஆமா அப்படித்தான் என் பிரண்ட் சொல்லுறா , வீட்டுக்கு வரட்டும் அப்பா அப்ப பேசிக்கலாம் எதுவும் சரி வரலைன்னா அப்ப அவளை வீட்டை விட்டு அனுப்பிடுங்க என்று ஒரே போடாய் போட
அந்த வார்த்தையில் அதிர்ந்து தான் பார்த்தார் வேலாயுதம் என்னம்மா சொல்லுற
ஆமா ப்பா வீட்டுக்கு அடங்கலன்னா தொரத்தி விட வேண்டியது தான்
அதெப்படி பாப்பா அவளுக்கு வெளியே யாரையும் தெரியாதே?
போய் எங்கேயாவது ஆசிரமத்தில் சேர்ந்துக்கட்டும் அப்பா அதுவும் இல்லாம அவ சம்பாதிச்சு வாங்கின இருக்கான்னு அம்மா நகையை சொல்லுறாங்க இல்ல, அப்ப அவ வாழ்க்கையை அவ பார்த்துக்க மாட்டா
இருந்தாலும்..
பாத்தீங்களா அப்பா இப்ப கூட அவ மேல உங்களுக்கு அவ்வளவு அன்பு,
இவ்வளவு பிரச்சினை உருவாக்கின பொண்ணு மேல தான் உங்களுக்கு பாசமே என்று அடுத்த அம்பை வலிக்க வலிக்க எரிந்து கொண்டே இருந்தாள் வார்த்தையால்..
வேலாயுதமோ இறுகி கொண்டே சென்றார்..
அதெல்லாம் ஒன்னும் இல்ல வரட்டும் பேசிக்கலாம் சாப்பாடு எடுத்து வை வந்ததும் ஒரு கச்சேரி வைக்கனும் இல்ல.
மதிய உணவை முடித்து கொண்டு அவரவர் அவரவர் விஷயங்களுக்காக காத்து இருந்தனர்.
வெளியே சென்ற மூவரில் மேகா கணவனுடன் வீடு சென்று விட இருவர் மட்டுமே திரும்பினர் வரும் வழியில் வண்டியை நிறுத்தியவன் உனக்கு புடவை பிடிச்சு இருக்கா ஹனி.
ம்ம் நல்லா இருக்கு என்று சாதாரணமாக சொல்ல..
ஹனி என்று ஆழ்ந்து அழைக்க படக்கென அந்த ஆழமான அழுத்தமான இனம்புரியாத ஏக்கமான குரலில் நிமிர கை நீட்டி அருகில் அழைத்து இருந்தான் பாரி இளவழகன்.
என்ன என்று தேனு தடுமாற
வாடி பக்கத்துல
என்ன
நான் சொன்னது உன் காதுல விழலையா?
அப்போதும் திருதிருக்க
போச்சு என்னோட காத்திருப்பு எல்லாம் போச்சு இப்படி எதுக்குமே அசைஞ்சு தராம இருக்காளே கடவுளே என்று புலம்ப
முதன் முறை பல வருஷங்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்து இருந்தாள் தேன்மொழி..
ஹனி..
ம்ம்ம
மனசுல எதையும் போட்டு உலப்பிட்டு இருக்காத
ம்ம்ம
என்னம்மா..
ஒன்னு இல்ல வீட்டில் அம்மா எப்படி பேசுவாங்க ன்னு..
அதெல்லாம் பேசனும் அவசியம் இல்ல இன்னேரம் தகவல் போய் சேர்ந்து இருக்கும்
எப்படி?
அதான் உன்னையே பழிவாங்கவே ஒருத்தி பிறந்து இருக்காளே இன்னேரம் அப்பா அப்பா அப்படின்னு கம்ப்ளைண்ட் பண்ணி இருக்க மாட்ட
இளா..
ஆமா ஆமா அவ சொல்லி இருப்பா ஆனா நம்ம கல்யாண விஷயம் தெரிய வாய்ப்பு இல்ல
உண்மையாவே என்னைய கல்யாணம் பண்ண நினைக்குறீங்களா?
…..
அவன் பார்வையை பார்த்தவள் இல்ல அது வந்து என்னைய போய்
முதல்ல உன்னையே நீ நம்பு ஹனி அப்ப தான் மத்தவங்க உன்னையே என்ன நினைக்குறாங்கன்னு உனக்கு புரியும் இதெல்லாம் வெளியே வந்தா தானே தெரியும் அதை தெரிஞ்சுக்க தான் இரண்டு வாரத்தில் கிளம்ப முடிவு பண்ணியா ? இல்ல வேற எதுவும் உன் மண்டையில் ஓடுதா?
அது இல்ல.. என்று இழுக்க
இங்க வரதுக்கு இவ்வளவு யோசிக்குற நீ எப்படி அவ்வளவு தூரம்? யார் வரா உன் கூட என்று பாரி இளவழகன் கேட்ட நொடி அதிர்ந்து தான் பார்த்தாள்…
என்ன சொல்லுறீங்க
தனியா போற அளவுக்கு என் தேனுக்கு தைரியம் இருக்கான்னு கேட்கிறேன்..
அது வந்து என்றவள் தன் சுடிதாரில் இருந்த ஒரு முடிச்சை எடுத்து அதில் இருந்த ஒரு பேப்பரை தர அது ஒரு ஆசிரமத்தின் விலாசமும் அதில் எண்ணும் இருக்க
என்னடி இது?
இந்த ஆசிரமத்துக்கு தான் முதல்ல போகலாம் ன்னு
பைத்தியமா டி உனக்கு என்றவன் பட்டென அந்த நம்பருக்கு அழைக்க அந்த ஆசிரமத்தின் மேலாளர் எடுத்து பேச தன்னை பற்றி சொல்லி தேன்மொழி வரமாட்டாங்க நாங்க எங்க கல்யாணம் முடிஞ்சு உங்களை பார்க்க அழைச்சிட்டு வரேன் என்று முடித்து விட
தேன்மொழி, “ அவங்க தப்பா..
வாயை மூடி தேனு வீட்டில் இருக்கவங்களையே என்னால் நம்ப முடியல இது வெளி ஆட்களா ? நீ தயார இரு நாம சீக்கிரம் கிளம்பலாம்
எங்க?
நம்ம வீட்டுக்கு
இல்ல அது அப்பா
தயவு செய்து உங்க அப்பா பத்தி பேசாதே என்றவன் வண்டியை கிளப்பி கொண்டு வீடு வந்து சேர்ந்த அடுத்த நொடி
அத்த
சொல்லு அழகா
நீங்க பார்த்த தேதிக்கு முன்னாடியே நாள் இருக்கா
ஏன் என்பது போல் பார்க்க
இல்ல மாமாக்கு இன்னேரம் விஷயம் தெரிஞ்சு இருக்கும் அதை வளரவிடாம சீக்கிரம் முடிக்கனும்
ஏன் அழகா எதுவும் பிரச்சினையா…
பிரச்சினை எல்லாம் தூசு மாதிரி தட்டிடலாம் ஆனா என்றவன் தேன்மொழியை ஒரு பார்வை பார்த்தவன் மறுபடி ஒரு வடுவை ஏற்படுத்த நான் விரும்பல அத்த
இல்ல கல்யாணம் பண்ணுறது ஊருக்கே தெரியனும் என் பொண்ணை அவசர அவசரமா கட்டினது போல் இருக்க கூடாதே…
கண்டிப்பா ஊர் அறிஞ்சு தான் கட்ட போறேன் அந்த ஆனா அதுக்கு முன்னாடி தேதி இருந்தா சொல்லுங்க..
துயமல்லி, “ என்ன பிரச்சினை?
பாட்டி அது வந்து
டேய் என்னனு சொல்லி தொலை..
கயல் யாரு என்னனு விசாரிச்சு இருக்கா அதான்
அதை நான் பார்த்துக்கிறேன் அழகா நீ ஏன் பயப்படுற
இன்னொரு காயம் என் தேனுக்கு வரக்கூடாது அத்த அதே நேரம் இடம் பொருள் பார்க்காம சாணியை வாரி இறைக்க அவ தயாரா இருப்பா உங்க சின்ன பொண்ணுக்கு எதை பத்தியும் கவலை இல்ல அவளை பத்தி மட்டும் தான் யோசனை இருக்கும் அதான். என் தேனை இதுவரை விட்டு வச்சே தப்பு இனி யாரையும் நம்புற மனசு எனக்கு இல்ல..
என்ன பேச்சு பேசுறீங்க அம்மா கிட்ட
தேனு அழகன் தப்பா ஒன்னும் சொல்லலையே அம்மா கூட உனக்கு என்ன ஏதுன்னு கேட்காம தானே இருந்துட்டேன்.
உன் சூழ்நிலை அப்படி நான் எதையும் எதிர்ப்பாக்கலமா..
நான் எதிர்பார்க்கவில்லை என்ற சொல்லே சொல்லியது அவள் எதிரிபார்ப்பை..
அப்போதே அந்த பேச்சை விட்டவன் துயமல்லியுடன் ஊர் கிளம்ப, பார்வதி பார்த்து சொல்வதாக சொல்லி இருந்தார்..
வீட்டில் வேலைக்கு பஞ்சமில்லாமல் போக பார்வதி சுழன்று கொண்டு இருந்தார் .கார்த்தி கூட கயல் கல்யாண விஷயத்தில் மெத்தனமாக இருக்க பார்வதி தான் அது இது என்று வந்ததை எல்லாம் கணக்கு பார்க்க சொல்லி கொண்டு இருந்தாள்..
கார்த்தி மதி சில விஷயங்களை சொல்லியதும் சற்றே ஒதுங்கி தான் இருந்தான் ஆனால் தேனுவிற்கு தானே சென்று எதையும் செய்யும் எண்ணம் மட்டும் வரவே இல்லை
அன்று வீட்டிற்கு வந்த பார்வதியை உண்டு இல்லை என்று ஆக்கி இருந்தார் வேலாயுதம்
பார்வதி எதற்கும் எதிர்வினை ஆற்றவே இல்லை. மதி ,மேகா ,பாரி இளவழகன் என்று அனைவரும் சொன்ன விஷயங்களில் திகைத்தது மட்டும் இல்லாமல் இளைய மகளுக்கு எதையும் நம் மூலம் வெளிப்படுத்தி, நடக்கும் காரியத்தில் ஏதும் காயங்களை தேனுவிற்கு ஏற்படுத்த அவருக்கு விருப்பம் இல்லை..
அத்த அப்போ தேதி என்று அன்று அழகன் கேட்டதற்கு
கண்டிப்பா கயல் கல்யாணத்துக்கு முந்தின நாள் சொந்த பந்தோட வந்துடுங்க அங்க எல்லார முன்னாடியும் தான் கல்யாணம் இதுல மாற்றம் இல்ல அதுவரை தேனு என் பொறுப்பு எந்த கஷ்டமும் வர விடமாட்டேன் என்றவர் பார்வதி மட்டுமே கிளம்பி வீடு சென்றவர் தேனு அப்பத்தா வீட்டிலேயே இருக்க வைத்து விட்டார்.
இதோ அதோ என்று கயல் திருமணம் நெருங்கி இருந்தது .இந்த பக்கம் மேற்கொண்டு எந்த வேலையும் நடக்காததால் கயலும் அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.ஆனால் அவள் பார்வை அத்தனையும் தேனுவை சுற்றியே இருந்தது.
அவன் சென்று நான்கு நாட்கள் இருக்கும், தினமும் தாயிடம் பேசுகிறானே தவிர தன்னிடம் பேசவே இல்லை.
தேனு,எவ்வளவு கோவம் வருது இவங்களுக்கு?
நீ என்னடி பண்ணுவ இப்படி இருக்காங்களே இவங்களை சமாளிக்கவே உனக்கு போதும் போதும் ன்னு இருக்கும் போலயே, போன் பண்ணி பார்க்கலாமா எடுப்பாங்களா என்று அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்க அப்பத்தா தான் அவளை பார்த்து சிரித்து கொண்டார்..
அவரும் தேனுவுடன் நேற்று கிளம்பி இங்கே வந்து விட்டார். அவளை தனியாக விட அப்பத்தாவிற்கு மனது இல்லை..
தேனு வீட்டிற்கு வந்து ஐந்து நாட்கள் இருக்கும் அந்த ஐந்து நாளும் வேலாயுதம் பேசாத பேச்சு இல்லை .. நேற்று தான் கார்த்தி வந்தவன் வேலாயுதம் பேசுவதை பார்த்து,எதுக்கு ப்பா இவ்வளவு சத்தம்
பின்ன என்னடா படிக்கும் போது தான் என் உயிரை எடுத்தா இப்ப படிச்ச பசங்க வந்து இருக்காங்க ன்னு இவ அவங்களோட சேர்ந்து ஆட்டம் போடலாம் ன்னு கிளம்பி போய் இருக்கா…
அப்பா என்ன பேச்சு அவ வீட்டில் தான் இருக்கா எங்க போறா ஏதோ பல வருஷம் தாண்டி வந்து இருக்காங்க அவங்களை தானே பார்த்தா அதுவும் இல்லாம அன்னைக்கு நடந்த பிரச்சினை தேனு மேல் தப்பு எதுவும் இல்லன்னு தான் சொல்லிட்டாங்களே என்றதும்
அறையில் இருந்து படக்கென எட்டி பார்த்து இருந்தாள் தேனு..
அப்ப அவங்களே சொல்லிட்டாங்களா ப்பா என்பது போல் அவள் பார்க்க அவள் பார்வையை தவிர்த்து இருந்தார்..
அதிலேயே அவள் புரிந்து கொண்டாள் தெரிந்தே தான் தன்னை பெற்றவர் இத்தனை வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறார் என்று அந்த நிமிடம் புதிதாய் பிறந்த வாழ ஆசை கொண்டது மனது தன் மீது தவறு இல்லை என்று தனக்கு மட்டும் தெரிந்து என்ன பயன் மற்றவருக்கும் தெரிந்து இருக்கிறது என்பதை அறிந்து கொண்டதும் ,
பார்வதி முன் வந்து நின்றாள்
சொல்லு தேனு
அம்மா
சொல்லு என்ன வேணும்
அவர் நம்பர்..
இந்தா இந்த போன்ல இருக்கு
அதை வாங்கி கொண்டவள் இளவழகனுக்கு அழைத்து இருந்தாள் ஆனால் போன் அந்த பக்கம் எடுக்கப்படவே இல்லை மூன்று முறை அழைத்து பார்த்து விட்டு சோர்வாய் வைத்தவள் மீண்டும் அன்னை முன்வந்து நின்றாள்.
பேசிட்டியா தேனு
இல்ல..
ஏன்
பேசனும் அவரு வேலையா இருக்காரு போல..
ம்ம்ம
அம்மா..
சொல்லு தேனு..
அம்மா எனக்கு பார்லர் ல இருந்து ஆள் வரச் சொல்லுறியா?
அப்போது தான் சமையலுக்கு தேவையான காய்கறியை கார்த்தியின் இருந்து வாங்கி வந்து மதி தேனு பார்லர் பத்தி கேட்டதை பார்த்து ஆச்சரியப்பட்டு நான் சொல்லுறேன் அத்த என்றவள் தேனை பார்த்து சிரிக்க …
தேங்க்ஸ் அண்ணி..
தேனு ப்ளீஸ் மதி ன்னே கூப்பிடுங்க நாம ஒரு வயசு தானே?
இல்ல
ப்ளீஸ் தேனு
சரி..
அதற்குள் பார்லர் ஆட்களுக்கு கேட்டவள் தேனு சாயந்திரம் போல் ஆள் வரும் என்று சொல்ல சரி என தலையாட்டி கொண்டு அறைக்குள் சென்றாள்.
அறைக்குள் அவளுக்கு முதல் சம்பாத்தியம் தந்த,அவளின் தன்னம்பிக்கை தூண்டி விட்ட ஓவியத்துடன் உறவாடி கொண்டு இருந்தாள்..
இன்னைல இருந்து நான் புதுசா வாழனும் அதுக்கு முதல்ல புள்ளி வச்சது நீ, இனி அதை அழகா மாத்த வேண்டியது என்னோட சேர்த்து அவருக்கும் பொறுப்பு என்று சொல்லி சிரிக்க
பார்வதி போனுடன் உள்ளே நுழைந்தார் இந்தா அழகன் பேசுது..
சொல்லுங்க என்றாள் தெளிவாக
என்ன ஹனி
…
உன்னைய தான் கேட்கிறேன் இவ்வளவு நாளுக்கு அப்புறம் என் நியாபகம் வந்துட்டு போல
ஏன் இத்தனை நாள் உங்களுக்கு மட்டும் வந்ததா?
வாவ் தெளிவாகிட்ட போல
ம்ம்ம
என்னாச்சு மா
இன்னைக்கு புதுசா பிறந்து இருக்கேன் இனி எந்த உறுத்தலும் இல்லாம நிம்மதியா சந்தோஷமா வாழப் போறேன்..
ஹனி..
இதுவரை என்னைய நானே ஏதேதோ நினைச்சேன் இனி என்மேல் மட்டும் முதல் நம்பிக்கையும் உணரனும் ன்னு சொன்னீங்க இல்ல அதை செயல்படுத்த போறேன் எப்ப வரீங்க..
காலைல அங்க இருப்பேன் இங்க கொஞ்சம் வேலை சரியான நேரத்துக்கு வந்துடுவேன் ஹனி
ம்ம் ம்ம்
சந்தோஷமா இருக்கியா
இருக்கேன் இனியும் இருப்பேன் என்னோட எல்லா செயலுக்கும் துணையா இருப்பீங்க தானே..
என்னோட இணை டி நீ கண்டிப்பா இருப்பேன்..
சரி வச்சுடுறேன் என்றவள் போனை அணைத்து விட..
அடுத்த நாளும் அழகாய் விடிந்தது தேனுக்கு..
தேன் வருவாள்