சென்னை
மறுநாள் காலையில்..
ஆனந்தன் மருந்தின் வீரியத்தில் கூட சரியாக தூங்கவில்லை. அவரது மனது, முழுவதும் ரிஷியின் நினனவாகவே இருந்தது. கூடவே சாருபாலாவின் நினைவும் அடிக்கடி வந்து போயிற்று. அவளது வாழ்க்கையை அழித்த பாவத்திற்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ என்று அவரது மனது அவ்வப்போது கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தது. பெரிய மகனைப் பற்றிய தகவல் வராத நிலை, அவருக்கு மிகவும் பயத்தை கொடுத்தது. விடிவதற்காக காத்திருந்தார். அவருக்கு தான் செய்த வினைப்பயனால் தூக்கம் தொலைந்துவிட்டது. மனைவி,மகன் தூக்கத்தை வேறு கெடுப்பானேன் என்று நினைத்து, இரவெல்லாம் , பழைய நினைவுகளில் தன்னை இழந்து இருந்தார். சாருவை பிடிவாதமாக கைப்பிடித்ததும்.. அவளோடு அமைதியாக வாழ்ந்ததும்.. அழகிய சித்திரமாக அவருக்குள் ஓடியது..
விடிந்ததும் ரத்த பரிசோதனைக்கு ரத்தம் எடுக்கவும், ரத்த அழுத்தம் பார்ப்பதற்காகவும் நர்ஸ் வந்து நின்றாள்.
அவளிடம் மகனை கூப்பிடும்படி கேட்டுக் கொண்டார் ஆனந்தன்.
🩵
ரகு, இரவெல்லாம் தமயனுக்கு அழைத்துப் பார்த்து சோர்ந்து போனவனாக, அன்னை அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அரைகுறையாக தூங்கியிருந்தான்.
அறைக்கு வெளியே, மக்களின் நடமாட்டத்தின் சப்தத்தில் கண்விழித்தவன், கைப்பேசியை ஆவலாக நோக்கிவிட்டு, எதிர்பார்த்தது வராததால், சலிப்புடன் எழுந்தான். காலைக்கடன்களை முடித்துவிட்டு, வந்த போது, அனிதா விழித்து எழுந்திருந்தார்.
"ரிஷி பேசினானா ரகு?"என்றார் ஆவலாக.
"இல்லை அம்மா. எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. பேசாமல் போலீசில் அண்ணன் காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்"
"என்னடா என்ன என்னவோ சொல்றே? அப்பா அவனை கேட்டால் என்ன பதில் சொல்வது ? எனக்கு உன் அப்பாவை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு ரகு" என்று கண்கள் கலங்கினார் அனிதா.
ரிஷியைப் பற்றிய தகவல் வராவிட்டால், ஆனந்தனின் உடல்நிலை என்னாகுமோ என்று அவருக்கு உள்ளூர மிகவும் அச்சமாக இருந்தது. அவருக்கு மட்டும் ஏதும் ஆகிவிட்டால், இத்தனை காலங்கள்,தொழிலில் பாடுபட்டு சேர்த்த அத்தனை பேரும் புகழும் சரிந்து போகும். சின்னவன் இன்னும் விளையாட்டு பிள்ளையாக இருக்கிறான். அவனை வழிநடத்தவேனும் கணவர், நல்ல சித்த சுவாதீனத்துடன் இருக்க வேண்டும். இந்தப் பையன் ரிஷி அப்படி எங்கேதான் போய் தொலைந்தான் என்று தெரியவில்லையே. நொடியில் எல்லாமும் கணித்துவிடும் மனது, இப்படி எல்லாம் சிந்திக்க வைத்தது.
"அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது அம்மா, என்று அன்னைக்கு சொல்வது போல தனக்கும் சொல்லிக் கொண்டவனின் நினைவில் அண்ணனின் வண்டி வந்தது.
"கொஞ்சம் இருங்க அம்மா, இதோ வர்றேன் "என்றுவிட்டு ரகுவாசன் வெளியே ஓடினான்.
காரின் கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தவன், காரில் டேஷ் போர்டில் பார்த்தான். அங்கே அவனுக்கு உண்மையில் அதிர்ச்சி காத்திருந்தது. ரிஷி உபயோகித்து வந்த பண பரிவர்த்தனைக்கு உபயோகிக்கும், அட்டைகள் அதனுடன் வங்கிப் புத்தகம், இன்னும் அவன் கழுத்து சங்கிலி, கையில் அணியும் பிரேஸ்லெட், என்று எல்லாமும் இருந்தது. அதை பார்த்து அதிர்ந்து விட்டான். கார் வேண்டாம் என்றது கூட வசந்தனுடன் போவதால் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாமல் எப்படி? அண்ணன் மறந்து வைத்துவிட்டு போயிருப்பான் என்று அவனால் நினைக்க முடியவில்லை. இதற்கு ஒரே அர்த்தம் தான் அவனுக்கு தோன்றியது.. அவர்களுடனான மொத்த தொடர்பையும் துண்டித்துக் கொள்ள அண்ணன் முடிவு செய்து விட்டான். திடுமென இப்படி அவன் முடிவு செய்வதற்கு, நிச்சயமாக ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். அது என்ன?"தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு, அவன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கண்கள் கலங்கியது. இப்போது இதற்கு நேரம் இல்லை. உண்மை என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், நேரடியாக தாயிடம் வந்து நின்றான்.
"என்னடா ரகு, ஏன் ஒருமாதிரியாக இருக்கிறே? ரிஷி பற்றி ஏதும் தகவல் கிடைத்ததா?" என்ற அன்னையை தீர்க்கமாக பார்த்தான்.
"டேய், நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கிறேன். நீ என்னடான்னா, பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி சிலையா நிற்கிறே? என்று எரிச்சலுடன் கேட்டார்.
ரகு, கையிலுள்ள அனைத்தையும் தாயிடம் தந்தான்.
"இ...இதெல்லாம்.. டேய் ரிஷிக்கு என்னாச்சுடா?" என்று பதற்றமாக எழுந்து அமர்ந்தார்.
"இதெல்லாம் அண்ணன் காரில் இருந்தது அம்மா. அண்ணன் நம்மை விட்டுப் பிரிந்து போய்விட்டான் என்று நினைக்கிறேன் அம்மா. ஏன் என்று உங்களுக்கு காரணம் தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்க, எனக்கு என் அண்ணன் வேண்டும் அம்மா" என்று ரகு சிறுபிள்ளை போல அழுதான்..!
அனிதா விக்கித்துப் போய் அப்படியே அமர்ந்துவிட்டார். அவரது இதயம் வேகமாக, படபடத்தது.. ! ரிஷிக்கு உண்மை தெரிந்து விட்டதா? அப்படி என்றால் அவன் கோபத்துடன் அல்லவா இங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டும்? அவன் எப்போதும் போல இயல்பாக பேசியிருந்து சாப்பிட்டுவிட்டுத் தானே சென்றான்? அப்படி என்றால் இங்கிருந்து சென்ற பிறகு தான் தெரிந்திருக்கிறது.. இப்போது அது பிரச்சினை அல்லவே. ஆனந்தனுக்கு விஷயம் தெரிந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.. அதன்பிறகு... ? மேற்கொண்டு அவரால் சிந்திக்க இயலவில்லை.. மீண்டுமாக கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..!

🩵
கோவில்பட்டி
காலையில் மகனை காணப் போகும் ஆவலில் சற்று சீக்கிரமாக எழுந்து தயாராகிக் கொண்டிருந்தார் சாருபாலா. அவர் கூந்தலை பின்னலிட்டு முடித்த வேளையில், அறைக் கதவு தட்டப்பட்டது. மணியைப் பார்த்தார், மணி 5 என்றது கைப்பேசி. இந்த நேரத்தில் யார்? என்று யோசித்தவாறு, மெதுவாக கதவைத் திறந்தவரின் விழிகள், வியப்பும் திகைப்புமாக விரிந்தது.
சிலகணங்கள் நம்ப முடியாத வியப்பில் நின்றுவிட்டு, சட்டென்று கதவை விரியத் திறந்து வைத்தவர், " இன்பா கண்ணு" என்று அப்படியே தாவிக் கட்டிக் கொண்டவரின் கண்களில் கண்ணீர் துளிகள்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி நின்றனர். ஒருவாறு ஆசுவாசமாகி, பிரிந்தவர்கள், கட்டிலில் அமர்ந்தனர்.
"நீ, உயிரோடு இருப்பதை ஏன் தெரிவிக்கவில்லை இன்பா? நீ இல்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. போலீசார் சொன்னதைக் கேட்ட பிறகு நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என் பிள்ளை, நீ உயிரோடு எங்கோ இருக்க வேண்டும் என்று நம்புவதாக சொல்லி,தேடிக் கிளம்பவும் தான் எங்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று. ஆனால் நீ செய்தது ரொம்ப தப்பு இன்பா. அத்தை உன்னிடம் தோழியாகத்தானே பழகினேன்? அப்புறமும் உன் காதல் பற்றி ஏன் பொய் சொன்னாய்?"
"மன்னிச்சுடுங்க அத்தை. அந்த சமயத்தில் எனக்கு எல்லாரும் அவமானப்படும்படி ஆகிடக்கூடாது என்று மட்டும் தான் தோன்றியது" இங்கிருந்து நான் விலகிப் போகணும்னு தான் கிளம்பினேன் அத்தை. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த விபத்து நேர்ந்துவிட்டது. உயிர் பிழைத்த பிறகு, அந்த கேஸ் பற்றி நிவன் மாமாவிடம் சொல்லி விசாரிக்க சொன்னேன். அவர் விசாரித்தபோது, நீரில் அவர்கள் ஆட்களை விட்டு தேடியும், நான் கிடைக்கவில்லை. ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட நான், உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கேஸை மூடிவிட்டது பற்றி தெரியவந்தது. நான் அதையே சாதகமாக்கிக் கொண்டேன்.. ப்ளீஸ் அத்தை என்னை மன்னிச்சிடுங்க" கண்ணீருடன் இன்பா கைகளை குவித்தாள்.
"அப்படி என்றால் நிவன் கொண்டு வந்து கொடுத்த குழந்தை உன்னோடது அப்படித்தானே?" என்றார் சாரு தீவிரமான குரலில் கேட்கவும்
இன்பா குற்ற உணர்வில் முகம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள். தாயிடம் கூட அந்த விஷயத்தை எளிதாக சொல்ல முடிந்த அவளால் அத்தையிடம் சொல்ல முடியவில்லை.
"சொல்லு இன்பா, நீங்க இரண்டு பேரும் படிச்சவங்க, பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீ பேய் படம் பார்த்துட்டு வந்ததாக சொன்னாய் அல்லவா? அன்றைக்கு உண்மையில் என்ன நடந்தது என்று தெளிவாக சொல்லு" என்றார் சாருபாலா.
இன்பா விவரமாக சொல்லிவிட்டு அழுதாள். அன்று நான் அவரை பார்க்க போயிருக்க கூடாது அத்தை. வீட்டில், என்றைக்கும் இல்லாதபடிக்கு பொய் சொல்லிவிட்டு போனேன் அல்லவா? அதற்கான தண்டனை தான் அத்தை.. எல்லாமும்" என்று விசும்பியவளை மார்போடு அணைத்துக் கொண்டார்.
"அழாதே கண்ணம்மா. இப்படி நடக்கணும், நாம கஷ்டப்படணும்னு இருந்திருக்கு.. சரி, விடு. நீ ஒன்றும் வேண்டும் என்று எந்த தவறும் செய்யவில்லை, சந்தர்ப்ப சூழல் அப்படி நேர்ந்துவிட்டது. ஆனால் அத்தை ஊரில் இருந்து வந்ததும் அதை நீ எடுத்து சொல்லியிருக்கணும் இல்லையா"என்றார்.
"நான் தெரிந்து செய்யாத போதும், நடந்தது தப்பில்லை என்று ஆகிவிடாது இல்லையா அத்தை? சொல்லப்போனால் அதை நான் நிகிலாவிடம் கூட சொல்லவில்லை அத்தை"
"சரி, போனது பத்தி இப்ப பேசி பயனில்லை. இப்பத்தான் எல்லாமும் சரி ஆகிட்டுதே. அதுவே எனக்கு போதும்.." என்றவர் மணியைப் பார்த்துவிட்டு, "சரி, நான் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புகிறேன். நீ அப்பா அம்மாகூட அப்புறமாக வருகிறாயா?" என்று தன் கைப்பையை எடுத்தார்.
"நானும் உங்ககூட வர்றேன் அத்தை. உங்க பிள்ளையை இன்னும் நான் பார்க்கவே இல்லை" என்றவளின் குரல் கரகரத்தது.
"அவனுக்கு ஒன்றும் இல்லைடா. தலையில் அடிபட்டதினால் டாக்டர் ரிப்போர்ட்ஸ் பார்க்கணும்னு சொல்லியிருக்கார் அவ்வளவுதான். ஆதி தான் கூடவே இருக்காரே. அப்புறம் என்ன பயம் உனக்கு?" என்றவர், சரி வா.. தம்பிக்கிட்டே சொல்லிவிட்டு போகலாம்" என்று மருமகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார் சாருபாலா.
மருத்துவமனையில்..
ரிஷி மருந்தின் உபயத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். அன்றும் அவனது கனவில் இன்பா வந்தாள். கல்லூரியில் படிக்கும்போது, பார்த்த அவளது முகம் ஏதோ எதிரே இருப்பது போலிருக்க, சட்டென்று கண்களை திறந்தான்.
அறைக்குள் மெல்ல காலை வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது. அவனுக்கு எதிராக இருந்த இருக்கையில் அமர்ந்து கைப்பேசியில் ஏதோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்த நிவன் ஆதித்யா, அவனிடம் அசைவைக் கண்டதும் நிமிர்ந்தார்.
அதே நேரம் கதவை திறந்து கொண்டு சாருபாலா உள்ளே நுழைய, பின்னோடு இன்பாவும் நுழைந்தாள்.
ரிஷி, ஆவலுடன் சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.
நிவன், எழுந்து அறையின் விளக்கை, போட்டுவிட்டார்.
இன்பாவின், உதடுகள் துடிக்க, கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
"சுபி, நீ.. நீ எப்படி இங்கே? இது நிஜம் தானா? நான் .. நான் கனவு ஏதும் காண்கிறேனா?" என்றான் தடுமாற்றத்துடன். உண்மையில் அவனால் நம்ப முடியவில்லை..
அவனது சுபி என்ற அழைப்பில், பொங்கிய விம்மலுடன்," கேசவ்" என்று விரைந்து சென்று அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள் இன்பசுரபி.
பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாக பார்த்தபடி, இளையவர்களுக்கு தனிமை தரும் பொருட்டு அங்கிருந்து வெளியேறினர்!