• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -03

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
என் துணைக்கு நீதான் 💞 3

கேசவமூர்த்தி பரிதாவின் குடும்பத்தையும் அப்படியே விட்டு விடவில்லை.

பரிதாவின் தம்பிக்கு ஒரு டிரான்ஸ்போர்ட் வைத்துக் கொடுத்து தன் கண் பார்வையிலே வைத்துக் கொண்டார்.


பரிதாவை திருமணம் முடித்த அடுத்த வருடத்தில் அவள் தாய் தந்தை என்று அடுத்தடுத்து இறைவனடி சேர்ந்தனர்.


இப்படியாக பரிதாபை திருமணம் முடித்த அடுத்த இரண்டாம் வருடம் அவரின் கையில் இருந்தவள் தான் மது பாலா.

ஏனோ அவளை கையில் ஏந்தி தருணம் வாழ்வின் ஒட்டுமொத்த சந்தோஷமும் அவரிடம் வந்து சேர்ந்ததாக உணர்ந்தார் கேசவமூர்த்தி.

ஆண் பிள்ளைகள் மேல் பாசம் என்றாலும் கூட அதீத பாசம் என்பது மகள் மதுபாலாவின் மேல் தான்.


அவளின் ஒவ்வொரு சின்ன சின்ன செய்கைகளும் மனிதருக்கு உலக அதிசயங்களில ஒன்று தான்.


அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த போதே பரிதா மதுவிற்கு அனைத்தையும் கூறித்தான் வளர்த்தாள்.

பெண்ணும் தகப்பனுக்கு எந்த சங்கடமான சூழ்நிலையும் ஏற்படுத்த மாட்டாள்.

ஆனால் அப்பாவின் அருகில் இருக்கும் போது நிஜத்திற்கும் அவள் ஒரு வளர்ந்த குழந்தைதான்.


இவளுக்கு அத்தனை எதிர்ப்பதம் தான் மானவ். தனலட்சுமியின் பேச்சுக்கள் அவனை அப்படி மாற்றி விட்டது.


மகனின் காதலுக்காக வேற்று மதத்தில் இருந்த பரிதாவின் வீட்டில் மகனுக்காக பெண் கேட்கப் போனவர் தான்,

ஆனாலும் ஏனோ மகனின் இந்த இரண்டாம் திருமணத்தை அறவே வெறுத்தார்.

அவரின் போதனைகள் மானவ்வின் அழுகையும் அடமுமாக மாறியது.

கேஷவ மூர்த்தி திருமணமான புதிதில் பரிதாவின் வீட்டில் தங்க பழகியவரை அவனின் விடாத அழுகையும்,


அழுகையின் பின்னால் வந்த வலிப்பும் அவரை இரவானால் சந்தன லட்சுமி வீட்டில் கட்டி போட வைத்தது.


இதோ மானவ்விர்க்கு 28 வயது. ஆனாலும் இது பெரியவர்களின் முடிவு இதில் மதுவின் தவறு எதுவுமில்லை என்பதை புரியாமல், அவள் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டுள்ளான்.


அதற்கும் காரணம் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு திருமண மண்டபம் விலைக்கு வந்தது.


அதை மதுவின் பெயரில் வாங்கி, அதை திரும்ப ரினோவோட் செய்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அவள் கையால் திறந்து வைத்தார்.


அதுவே இன்னும் இன்னும் மானவ்வை சீண்டியது போலானது.


ஏனென்றால் அந்த மண்டபம் இருந்த இடமும் அதற்கு ஒரு நாளைக்கு வந்த வருமானமும் தான் அவனை இன்னும் வெறியேற்றியது.


இந்த திருமண மண்டப விஷயத்தில் தனலட்சுமியை தூண்டி விட்டவன், வீட்டில் ஒரு பேச்சை ஆரம்பிக்க, கேசவ மூர்த்தி தெளிவாக கூறிவிட்டார்.


சொத்துக்கள் அவரவர்களுக்கு சரியாக வந்து சேரும் என்று.

அதற்கான ஆவணங்களும் தயார் செய்து, இரு பிள்ளைகளுக்கும் சமமாக சொத்துக்களை எழுதி தந்துவிட்டார்.


பொதுவில் ஒரு பேச்சு வந்ததும் தன் மகனே ஆனாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


இவ்வளவும் செய்தவர் மகளுக்கு என்ன செய்ய இருக்கிறார் என்பதை யாரிடமும் கூறவில்லை.


என்ன நினைத்து சொத்துக்களை எழுதினாரோ யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு எல்லாம் நிகழ இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.


மதுவும் கேஷோ மூர்த்தியும் நடைபயிற்சி முடித்துக் கொண்டு இருவரும் ஒன்றாக வீடு திரும்ப பரிதா எழுந்திருந்தார்..

இது அவர்களுக்கு வழக்கமான காலை பொழுதுதான்.

தன் இருப்பை மகள் தேடுவது தெரிந்து காலைப்பொழுது இங்குதான் கழிப்பார் கேசவமூர்த்தி.

கணவனுக்கு சத்துமாவும் மகளுக்கு பூஸ்டரும் கலந்து கொடுத்த பரிதா


“மதுப்பா இந்த வருஷத்தோட மதுவுக்கு படிப்பு முடிஞ்சது நம்ம நாகூர் தர்காவுக்கு போய் வந்துட்டு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்போமா” என்க


கேசவ மூர்த்தியும் “சரிம்மா தர்காவுக்கு வேணா போகலாம் பரி ஆனா ஏன் இதுக்குள்ள மாப்பிள்ளை என் பொண்ணு இன்னும் குழந்தைடி”

என்றவர் கைகள் பெண்ணின் கைகளை தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டது.

மது “அப்படி சொல்லுங்க டாடி என்று விட்டு தாயிடம் “ஏன் மம்மி எனக்கு இன்னும் கொஞ்சம் வருஷம் டாடி கூட இருக்கணும்.

அதோட உன்ன தனியா விட்டுட்டு எப்படி நான் இருப்பேன்” என்றவள் ஸ்ஸ் என்று நாக்கை கடித்து தகப்பனை பார்த்தாள்.



அந்த ஒரு சொல் அவரை சரியாக தாக்கியது. என்னதான் வசதி வாய்ப்பு செய்து கொடுத்தாலும் இரண்டு பெண்கள் வீட்டில் தனியாக இருப்பது அவர்களுக்குள் என்ன விதமான மனநிலையை உருவாக்கும் என்று அந்நேரம் உணர்ந்தார் கேசவமூர்த்தி.


மது “டாடி சாரி சாரி டாடி நான் ஏதோ யோசிக்கல. சாரி டாடி என்று அவர் தோள் சாய்ந்து கலங்கத் தொடங்கவுமே,


“விடு மது குட்டி அப்பா எதுவும் நினைக்கலடா” என்றார் கேசவ மூர்த்தி.


அற்புதாவின் வீட்டில் முன்பு போல லலிதாவிற்கு முடியவில்லை.

நாள் போகப் போக அவரின் சத்தங்கள் குறைய தொடங்கியது. மாமியாரின் நிலை அற்புதாவிற்கு புரிய ஆரம்பித்தது.


அவளுக்கு இருந்த வருத்தமே கணவனை நினைத்து தான். ஏனோ தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக உள்ளுக்குள் எதுவும் இரக்கமில்லாமல் இருக்க,


தன் ஓரகத்தியை அழைத்து விட்டாள். அற்புதா “அக்கா அத்தைக்கு முடியல மாமாவை அழைச்சிட்டு வந்துடுறீங்களா” என்க


மாலதியோ “ஏய் அற்பு அவங்களுக்கு என்னடி இரண்டு நாளில் சரியாகி வந்து மறுபடியும் உன்னை ஓட விடுவாங்க” என்று விட்டு சிரிக்க


அற்புதா “இல்லக்கா நிஜத்துக்கும் முன்ன மாதிரி இல்ல நீங்க வாங்க” என்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் மாலதியும் பரஞ்சோதியும் கமலின் வீட்டில் இருந்தனர்.



கமலுக்கு நடப்பு புரிய தொடங்க பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தான்.

அந்த வீட்டில் பிள்ளைகள் இருவரின் சத்தத்தை தவிர்த்து எதுவும் கேட்கவில்லை.


அவ்வப்போது மாமியாரின் நிலைமையை தம்பியிடம் விவரித்துக் கொண்டு இருந்தாள் அற்புதா.


ஒரு மாலை வேளையில் லலிதாவிற்கு தெளிவாக நினைவு தெரிய,


பிள்ளைகள் இருவருக்கும் தைரியம் கூறியவர். கமலை நினைத்து மிகவும் வருந்தினார்.


தன் அறை கபோர்ட்டில் இருந்த நகைகளை எடுத்து வரச் சொல்லி மருமகள் இருவருக்கும் சரியே கொடுத்தவர்,


அந்த வீட்டின் பத்திரத்தை அற்புதாவின் கையில் கொடுக்க,

அற்புதா “ஏன் அத்தை என்கிட்ட குடுக்குறீங்க உங்க மகன் கிட்ட குடுங்க” என்க


லலிதா “பிடி அற்புதா இது இந்த வீட்டோட பத்திரம் இது உன் தாய் விட்டு சீரா உங்க அப்பாவும் சித்தியும் கொடுத்தது” என்க


அற்புதா என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.


ஒரு மாதிரி மரத்த நிலைக்கு செல்ல, மாமியாரின் அடுத்த சொல் அவளை நிகழ்விற்கு கொண்டு வந்தது.


அற்புதாவின் கைகளை பற்றி கொண்டு,சில நிமிடங்கள் கண்களை மூடியவர் ஆழ்ந்த மூச்சு எடுத்து மெதுவாக பேசலானார்..

“அற்புதா ரொம்ப நன்றிமா கடந்த பத்து வருஷமா ஒரு அம்மாவை பார்த்துக்கிற மாதிரி என்னை பாத்துட்டு இருக்க.


எனக்கு மகள் இல்லாத குறையை நீதான் போக்கி இருக்க.


என்று விட்டு மூச்சுக்கு ஏங்க, அற்புதவிற்கு கண்கள் உடைப்பெடுக்க தொடங்கியது.



சத்தம் இல்லாமல் ஒரு கதறல். வேணாம் வேணாம் இவ்வளவு நாட்களாக இருந்த அந்த கோப முகமே போதும் என்று தான் தோன்றியது.


இந்த உள்ளன்பு வார்த்தைகள் அவளை உடைத்து விடும் என்பது அவளுக்கு திண்ணம்.


அற்புதா “ஏன் த்த இப்படி பேசுறீங்க? நான் உங்களை என் அம்மாவா தான் நினைக்கிறேன் என்று கூறுவதற்குள் தொண்டை வலிக்க ஆரம்பித்துவிட்டது அற்புதவிற்கு.


லலிதா “நீ நினைக்கலாம் அற்புதா ஏன் இந்த திடீர் அன்புன்னு, இது நிச்சயம் என் குணமில்ல அற்புதா”


“அதிகாரம் செய்தே பழகிவிட்டது இப்போதும் இந்த நன்றியை சொல்லாமல் விடக்கூடாது.


அப்படி நன்றி சொல்லாமலே இருந்தா எனக்கு நிச்சயம் மோட்சம் இருக்காது என்றவர்


அருகில் இருந்தவளின் தலைமீது தன் இரு கைகளையும் வைத்து, “நீ நல்லா இருப்ப அற்புதா” என்றவர்


“என் பிள்ளையை பத்திரமா பாத்துக்கோ, நான் இல்லன்னா அவன் உடைஞ்சு போய்டுவான் என்று விட்டு



மாலதியிடம் “நல்லா இரு மாலதி என்று விட்டு பிள்ளைகள் இருவரின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக தூங்க ஆரம்பித்தார்.

அணையப் போகும் தீபத்தின் முகம் போல அத்தனை பிரகாசமாக இருந்தது லலிதாவின் முகம்.


மறுநாள் காலை தூக்கத்திலேயே லலிதாவின் உயிர் பிரிந்தது.


கதறல் என்றால் அப்படி ஒரு கதறல் அற்புதாவிடம்.


யாரும் அவளிடம் இப்படி ஒரு கதறலை எதிர்பார்க்கவில்லை.

கமல் உட்பட ஏதோ கடமைக்காக மாமியாரை கவனித்துக் கொள்கிறாள்,


என்று எண்ணியவர்களுக்கு எங்கனம் தெரியப்போகிறது அவளின் தனிமையை அந்த வீட்டில் போக்கிய ஒரு ஜீவன் இன்று ஜீவனற்று கூடாக கிடைக்கிறது என்று .


அன்போ அதிகாரமோ அவளை அந்த வீட்டில் ஓட வைத்தது லலித்தாவின் குரல் மட்டும் தான்.


லலிதாவின் இறப்பில் மிகவும் ஓய்ந்து போனவள் அற்புதா மட்டுமே.

லலிதாவின் இறப்பிற்க்கு மதுரையிலிருந்து சிவசங்கரன் தாமரை ஆண்டாள் வந்திருக்க,


இவர்களுக்கு முன்னமே சென்னையில் தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவனாக இருந்த ரிஷி வந்துவிட்டிருந்தான்.

கமலுக்கும் பரஞ்சோதிக்கும் எந்தவித சிரமங்களும் இல்லாமல் ரிஷி ஒருவனே எல்லா காரியங்களையும் முன்னின்று செய்தான்.


சிவசங்கரனும் ஆண்டாளும் தாமரையும் அங்கே ஒரு பார்வையாளராக இருந்து பார்த்துவிட்டு சென்று விட்டனர்.



ரிஷிக்கு எப்போதும் போல தான் பாட்டியின் மீதும் சித்தியின் மீதும் ஆதங்கம் தான்,


தங்கள் குடும்பத்தினர் அக்காவை இன்னும் சற்று சரியாக நடத்திருக்கலாம் என்று.


எல்லாம் முடிந்தது. லலிதாவிற்கு பிறகு அந்த வீட்டில் அவளின் ஓட்டம் சற்று குறைய தொடங்கியது கூட அற்புதவினால் ஏற்க முடியவில்லை.


காலை அலாரம் போல நேரத்திற்கு லலிதாவின் படுக்கை அருகில் டீ வைப்பதும் ,


அறையில் டிவி ஓட விடுவதும் என்று அந்த சூழலில் இருந்து வெளிவர முடியாமல் தனக்குள்ளாகவே சுழல ஆரம்பித்தாள்.


பரிதாபின் ஆசைப்படி நாகூர் ஆண்டவனை தரிசிக்க தங்கள் குடும்பமாக கிளம்பினார்கள்.


கேசவமூர்த்தி “லட்சுமி நான் நாகூர் வர போயிட்டு வரேன் ஒரு வாரம் ஆகும் அதுவரைக்கும் பார்த்துக்க” என்க


இது வருடத்தில் ஒருமுறை வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு தான் என்பதால் எந்தவித அலட்டலும் இல்லாமல் சந்தான லட்சுமியும் “சரிங்க பார்த்து போயிட்டு வாங்க” என்க


இவர்கள் உரையாடல்கள் அனைத்தும் தனபாக்கியத்தின் முன்னிலையிலே நடக்க


அவருக்கு பத்தி கொண்டு வந்தது. இரண்டாம் மனைவி மகளுடன் ஊர் சுற்றப் போகும் கணவனுக்கு பத்திரம் சொல்லி அனுப்பும் மருமகளை பார்க்க ஆத்திரமாக வந்தது.


மற்ற நேரமாக இருந்தால் ஏதேனும் குத்தலாக பேசியிருப்பார்.

ஆனால் இப்போது மகனிடம் பேசியே ஆக வேண்டிய சூழல். பேசவில்லை என்றால் மானவ் விடமாட்டான்.


ம்ம்கும் என்று கனைத்த தனபாக்கியம் “லட்சுமி கொஞ்ச நேரம் இருக்க சொல்லு மானவ் வரட்டும் முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்கு”


என்னும்பொழுதே மானவ் வந்து பாட்டின் பக்கத்தில் அமர

கேசவமூர்த்திக்கு ஏற்கனவே ஒரு அனுமானம் இருந்தது மானவ் எதைப் பற்றி பேசப் போகிறான் என்று

அதை தவிர்ப்பதற்காக தனபாக்கியம் தன்னிடம் பேசுவதில்லை என்றாலும்

எப்போதும் போல நேரடியாக தன் தாயிடமே “எதா இருந்தாலும் நான் போயிட்டு வந்த பிறகு பேசலாம்மா இப்போ வேண்டாம்”

என்று விட்டு எழுந்தவர் ஒரு நொடி நிதானித்து “அந்த கல்யாண மண்டபம் பத்தின பேச்சா இருந்தா அத பத்தி நம்ம பேச வேண்டாம்மா, அதுல பேச எதுவும் இல்லை. அது என் மக உன் பேத்தி மதுபாலாவோட பங்கு” என்று விட்டு தாயின் பாதங்களை வணங்கி விட்டு


“வரேன் லட்சுமி, பாய் மானவ் என்று கூறிவிட்டு மானவ்வின் தலைக்கோத கையெடுத்துச் செல்ல,

பட்டு என்று தந்தையின் கையை தட்டி விட்டு விறுட்டென்ற எழுந்து சென்று விட்டான்.


தனபாக்கியத்திற்கு சட்டென்று கண்கள் கலங்கிப் போனது.

மகனின் அசைவற்ற தோற்றம் ஏனென்றால் அவரின் வாழ்க்கை பிடிமானமாக இருந்தது மகன் மட்டுமே.


சொந்த பேரனாக இருந்தாலும் தன் மகனை அவன் அலட்சியம் செய்தது அவருக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை.


அன்னையின் முகத்தைப் பார்த்து கேசவன் விறு விறுவென்று வெளியில் நடக்க ஆரம்பித்து விட்டார்.

மதுவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆண்டிற்கு ஒரு முறை தங்கள் குடும்பமாக செல்லும் இந்த பயணம் அவளுக்கு எப்போதுமே ஒரு நிறைவை கொடுக்கும்.

கிழக்கு கடற்கரை சாலையில் மதுவின் கையிலும் கேசவன் கையிலும் மாறி மாறி கார் பறந்து கொண்டுதான் இருந்தது.


அங்கங்கே நிறுத்தி இளைப்பாரி நாகப்பட்டினம் சென்று நாகூர் ஆண்டவரை தரிசித்து,


அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானமிட்டு, அவர்களின் சுற்றுலாவை முடித்துவிடு திரும்பும் போது பரிதாவின் மனம் நிறைந்து போயிருந்தது.


இந்த ஒரு வாரமும் பரிதாவுக்கும் மதுவிற்கும் மன நிறைவானதாக அமைந்தது.


கடைசியாக கோவளம் அருகில் உள்ள நித்திய கல்யாணப் பெருமாளை தரிசித்து விட்டு


கார் எடுக்க போன மதுவை தடுத்த கேசவன் “மது குட்டி அப்பா ஓட்டுறேன் நீ கொஞ்ச நேரம் காலை நீட்டி தூங்குடா” என்க

மது “ஏம்பா அம்மாவை சைட் அடிக்க நான் டிஸ்டப்பா இருக்கேனா” என்று விட்டு கிளுக்கிச் சிரிக்க


கேசவன் “ஏன் எனக்கு என்ன தடை நான் முதல் முதலா உன் அம்மாவை பார்த்த நாளிலிருந்து இப்போ வரைக்கும் என் பரியை சைட் அடிச்சுகிட்டு தான் இருக்கேன்” என

இந்த வயதிலும் பரிதாவின் முகம் அத்தனை பிரகாசமாகவும் செம்மை படர்ந்தும் இருந்தது.



கோவிலில் தந்த மாலையை மனைவியிடம் கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்துடன் கேசவ மூர்த்தி கார் எடுக்க

நீண்ட தூர அலைப்பின் காரணமாக பின் சீட்டில் கால்களை நீட்டி படுத்த சில நிமிடங்களில் மது நிம்மதியான உறக்கத்தை தழுவி இருந்தாள் ..

தாய் தந்தையுடன் தூங்கும் கடைசி தூக்கம் என்பது அவளுக்கு தெரியாதே….

துணை வரும்