• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -05

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
அற்புதாவின் முதற்கட்ட கவுன்சிலிங்க்கு ரிஷி வேலை பார்க்கும் மருத்துவமனையில் மருத்துவரின் முன்பு அமர்ந்து இருந்தனர் கமலும் அற்புதாவும்.



கமலை வெளியே இருக்க சொல்லி அனுப்பிய மருத்துவர், இயல்பாக மெல்ல மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்து அவளின் மனதில் உள்ள ஒவ்வொரு விஷயங்களையும் கேட்க,


அவளின் பதின்ம வயதில் தாயர் இறந்தது. தந்தையின் இரண்டாம் திருமணம். பாட்டியின் அலட்சியம். சிற்றணையின் ஒதுக்கம்.


இத்த தனிமையில் இருந்து வெளிவர கமலின் மேல் காதல் கொண்டது.


திருமணத்திற்கு பிறகான மாமியாரின் உடல் நலக்குறைவு,

மாமியாரின் குணம், மாமியாரின் உடல்நலம் இன்மை அதன் பிறகான முற்றிலும் மாறுபட்ட கமலின் அலட்சியப் போக்கு,


தம்பி ஒருவனின் அரவணைப்பு, இப்போது மாமியாரின் மரணம் என்று தொடர்ந்து கூறிக் கொண்டு வந்தவள்,


இப்போது இருக்கும் எதிலும் பிடிப்பற்ற நிலையை எடுத்துக் கூறவும்

அந்த மருத்துவருக்கும் அற்புதாவின் நிலை புரிய ஆரம்பித்தது . சில மருந்துகளை எழுதி கொடுத்தவர்,


கமலையும் ரிஷியையும் அழைத்தவர், அவர்கள் இருவரிடமும் “அவங்களுக்கு இது மன அழுத்தத்தின் ஆரம்பக் கட்ட பிரச்சனை தான், இத ரொம்ப சீக்கிரமா சரி செய்திடலாம்.


இப்போதைக்கு உங்க எல்லாரோட கவனிப்பும் கவனம் முழுவதும் அற்புதாவுக்கு ரொம்ப அவசியம் என்றவர்,


கமலிடம் “அவங்க மொத்த நம்பிக்கையும் நீங்கதான்னு உங்களை நம்பி வந்து இருக்காங்க மிஸ்டர் கமல்,



ஆனா நீங்க அவங்களோட அந்த நம்பிக்கையை காப்பாற்றவே இல்லை.


இனியாவது உங்க முழு கவனமும் காதலும் அற்புத கிட்ட இருந்தா அவங்க சீக்கிரமா நார்மல் ஆகிடுவாங்க” என்றவர்

மேலும் குழந்தைகளையும் அதிகம் அற்புதாவிடம் இருக்கும்படியான சூழலை உருவாக்கக் கூறி அனுப்பினார்.


சல்மாவின் மயக்க நிலையை பார்ப்பதா, வீல்சேரில் இருந்து வெரித்த பார்வையுடன் இருக்கும் மதுவை பார்ப்பதா என்று தடுமாறி போனான் பஷீர்.


தடுமாறன் என்ற பஷீரின் கண்களில் அற்புதா பட, சிறிதும் தாமதிக்காமல் அற்புதவிடம் சென்றவர்,


கையெடுத்து கும்பிட்டு தங்கச்சி மா கொஞ்சம் உதவுங்க என்று விட்டு தன் கையறு நிலையை கூற,


அற்புதா சிறிதும் தாமதிக்காமல் மதுவிடம் வந்துவிட்டாள்.


சல்மாவிற்கு கவலைப்படும்படி எதுவும் இல்லை ரத்த அழுத்தம் மட்டும்தான் ஏகத்துக்கும் ஏகிறி இருந்தது..


பஷீரின் வருகை ரிஷிக்கு உச்சகட்டை எரிச்சலாக இருந்தது.

தன் அக்காவையே சரி செய்ய மருத்துவமனை அழைத்து வந்தால் இங்கே என்ன புது தொல்லை என்பது போல் நினைத்தான்.


தன் மாமனிடம் “யார் அத்தான் இவர்” என்க


கமல் “நம்ம பக்கத்து பிளாட்டில் தான் குடி இருக்காங்க ரிஷி அற்புதாவுக்கு பழக்கம்தான்” என்றதும் தான் தன் அக்கா இருந்த திசையை பார்த்தான்.


ரிஷி பார்த்தவனுக்கு முதலில் பட்டவள் மது தான்.


உலகின் ஒட்டுமொத்த துயரத்தையும் தன் கண்களின் உள் வைத்துக் கொண்டு,

அடுத்து என்னை எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் ஒரு ஆதரவு இல்லாத குழந்தையைப் போல மது அவன் கண்களுக்கு தெரிய


ஏனோ அவன் மனம் பிசைய தொடங்கியது.


சில ஆண்டுகளுக்கு முன்பு தன் தமக்கையும் இதே தோற்றத்தில், இதே போன்று கையறு நிலையில் தான் நின்றாள் என்ற நினைவு வரவுமே,


தன்னால் அவன் மனம் அவளை அணைத்து ஆறுதல் பட படத்து துடித்தது.


மனம் நினைத்தது இன்னதென்று உணரும் முன், அவன் கால்கள் அவளை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்தது சென்றது அவனே அறியாத விந்தை.


மதுவை நோக்கிச் சென்ற ரிஷி அற்புதாவின் விடம்


“அக்கா இங்க பாரு அவளோட பேசு, அவளை சுயநினைவுக்கு கொண்டு வர ட்ரை பண்ணுக்கா, அவ ஷாக்ல இருக்கா கண்டிப்பாக இவ இப்போ அழுதே ஆகணும் இல்லனா ரொம்ப கஷ்டமாயிடும்” என்று விட்டு தமக்கையை பார்க்க



அற்புதாவும் “ஏய் இங்க பாருமா என்று அவள் கவனத்தை கலைக்க முயற்சித்து தோற்க,


ரிஷி மதுவின் கன்னத்தில் தட்டி அவளை கலைக்க எதுவும் அவளின் கவனத்தில் பதியவில்லை.


ரிஷி அவள் இருந்த சர்க்கரை நாற்காலியை தாயின் உடல் அருகில் கொண்டு சென்று


அவளை உலுக்கவும் தான் அவளுக்கு சுயம் உறைத்தது.


தாயின் உடலை கட்டிக்கொண்டு அழுது கரைந்தவளை பார்க்க பார்க்க அற்புதாவிற்கு ஆறவில்லை..

இந்த கதறளும் ஆதரவற்ற நிலையும் அற்புதாவையும் மதுவையும் ஒரே புள்ளியில் இணைத்தது.


கேசவ மூர்த்தியின் இறப்பிலிருந்து சந்தானலட்சுமியும் தனபாக்கியமும் அவ்வளவு சீக்கிரம் வெளிவரவில்லை.


சந்தன லட்சுமி கூட நிதர்சனத்தை உணர்ந்து சற்று தெளிந்து வந்தாலும்,


தன பாக்கியம் தன் மகன் ஒருவனே உலகம் என்று இருந்தவர் அவ்வளவு எளிதாக அவரால் கடந்து வர முடியவில்லை.


கோபத்தில் கிட்டத்தட்ட 20 வருடம் பேசாமல் இருந்தாலும்,


அவரின் காலையும் மாலையும் மகன் முகத்தில் விழிப்பது ஒன்றே வாழ்வின் முக்கியத்துவம் என்று இருந்தவருக்கு இந்த வயதில் பிள்ளையின் இழப்பு பேரிடியாக இருந்தது.



அதுவும் கேசவ மூர்த்தி இறந்து மூன்று நாட்கள் கழித்து பரிதா இறந்து இருந்தாலும்,

தன் மகனின் மற்றொரு குடும்பம் அது அங்குள்ள ஒருத்தி தன் பேத்தி மது என்றெல்லாம் எந்த எண்ணமும் இல்லை தனபாக்கியத்திற்கு.



சொல்லப்போனால் நெஞ்சு முட்ட கோபம்தான் வியாபித்து இருந்தது பரிதாவின் மேலும் மதுவின் மேலும்.

அவர்களுடன் சென்று தானே இந்த விபத்து அவர்களுடன் போகாமல் இருந்தால் தன் மகன் இருந்து இருப்பானே என்றெல்லாம் எண்ணியவர்



யாரும் செய்யாத செயலை செய்தார் தனபாக்கியம்.


தன் பிள்ளையைப் போலே பாசம் காட்டி வளர்த்த மாமனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவனை,


கடைசியாக கேசவ மூர்த்தியின் முகத்தை பார்க்க கூட அனுமதிக்காமல் அவமானப்படுத்தி அனுப்பி வைத்தனர் தனபாக்கியமும் மானவ்வும்.



ஒரு மாதம் கடந்திருந்தது தாய் தந்தையின் இழப்பிலிருந்து மது மீண்டு வந்தாளா என்பது இப்போது வரை கேள்விக் குறிதான்.


அவளை பஷீரும் சல்மாவும் தன்னுடனே தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.


அவளை தனித்து விடவே இல்லை சல்மாவால் முடிந்த மட்டும் மதுவை பார்த்துக் கொள்வாள்.


ஒரு நாள் அற்புதா வந்து மதுவை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல திவ்யா ரம்யாவின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.


அதிலும் ரம்யா செய்யும் சேட்டைகள் சொல்லில் அடங்காது. அவளின் செல்ல குறும்பை ரசிக்க விரும்பியே அற்புதாவின் வீட்டுக்கு செல்கிறாள்.


இப்பொழுது வாக்கரின் உதவியுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறாள்.

சல்மாவிற்கு எட்டாம் மாதம் தொடக்கத்தில் இருப்பதால்,

அவளை ஓய்வில் இருக்க சொல்லியிருக்கும் பட்சத்தில் தன்னால் ஆன சின்ன சின்ன உதவிகளை செய்ய பழகி இருந்தாள் மதுபாலா.

இந்த ஒரு மாத காலத்தில் மது சற்று தெளிந்து வர முழுமையாக உதவியது அற்புதா மட்டும் தான்.



மகப்பேறு மருத்துவன் முழுமையாக மதுவின் பால் ஈர்க்கப்பட்டு இருந்தான்.

பல இரவுகள் அந்த குண்டு கண்கள் அனாதரவாக திக்கு தெரியாமல் கண்ணை விரித்து பார்த்திருந்த அந்த பார்வை அவனை தூங்க விடவில்லை.


ஒரு மாலை நேரத்தில் அற்புத பள்ளி விட்டு வந்த குழந்தைகளை மதுவின் பொறுப்பில் விட்டுவிட்டு கமலுடன் கடைக்குச் சென்றிருக்க,


பிள்ளைகள் இருவரும் தங்கள் வீட்டு பாடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மதுவுடன் சேர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தனர்.


அன்று பார்த்து அதிசயமாக ரிஷி நேரமே வீட்டிற்கு வந்து விட்டான்.


வந்தவனைப் பார்த்ததும் திவ்யாவிடம் “திவி குட்டி அக்கா கிளம்பவா” என்று விட்டு மெதுவாக கைப்பிடியின் உதவியுடன் எழ


திவ்யாவும் “மதுக்கா நான் உங்க கூட வரேன்” என்று விட்டு அவள் எழுவதற்கு உதவ வர



இவர்களை கவனித்த ரிஷி “திவி வெயிட் ஆன்ட்டியை நான் கொண்டு போய் விட்டுட்டு வரேன் நீ ஹோம் ஒர்க் செய்” என்றவன்,


மதுவிடம் திரும்பி “மது இரு நான் வரேன் பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு” என்று விட்டு அரைக்குள் சென்று விட்டான்.


மதுவிற்கு ரிஷியின் பார்வைகள் தெரிந்திருந்தது. என்ன தான் அவள் தூக்கத்தில் மூழ்கிருந்தாலும் ஒரு ஆண்மகனின் பார்வையை அவள் உணர்ந்து இருந்தாள்.

அவன் சொல்லி விட்டு சென்ற அந்த ஐந்து நிமிடங்கள் அவளுக்கு 50 யோசனைகள் வந்தது.

சட்டென்று கிளம்பி விடலாமா என்று தோன்றவும் பிள்ளைகளை பார்த்தாள் .


தேவையில்லாமல் அவர்களிடம் ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என்று நினைத்து மது அமர்ந்திருக்க,

சொன்னபடி ஐந்து நிமிடத்தில் வந்து விட்டான் ரிஷி.

வந்தவன் “கம் மது” என்று அவளிடம் கையை நீட்ட, நீட்டிய கையை ஒரு சில நொடி பார்த்து விட்டு


அவன் கையை பற்றி கொண்டு மெதுவாக அவனுடன் நடந்து கொண்டே அவனை பார்க்கலானாள்.

கூரான நாசியும், அவசரகத்தில் குளித்து வந்ததின் அடையாளமாக ஆங்காங்கே சொட்டிக் கொண்டிருந்த நீரும், தீட்சண்யமான அவன் பார்வையும் என்று சில நொடி நேரத்தில் அவனை ஸ்கேன் செய்து விட்டாள்.


வீட்டின் வாயிலை தாண்டும் போது லேசாக தடுமாறிய மதுவின் கையை இன்னும் இறுக்கமாக பிடித்த ரிஷி


“ பார்த்து மது” என்று விட்டு ஒரு நொடி நிதானித்து “மது என்னை பாரேன்” என்க


மது “இல்ல ரிஷி நான் போகணும் கால் வலிக்குது” என்று தலைகுனிந்து கொண்டே பொய் சொல்ல


ஒரு நொடி சுற்றி முற்றி பார்த்தவன் அடுத்த நொடி அவளின் இரு புறமும் கை கொடுத்து தூக்கி அருகில் இருந்த பாதணிகள் ஸ்டாண்டின் மேல் அவளை அமர வைக்க,

பெண்ணவளோ ஒரே நொடியில் அவன் நிகழ்த்திய இந்த அதிரடியில் அசந்து தான் போனாள்.


ரிஷி “மது ப்ளீஸ் நான் சொல்றது கேளு என்றவன், 5 அடி உள்ள அந்த ஸ்டாண்டின் மேல் இருந்தவள் பயந்து திகைப்பதை பார்த்து


அவளுக்கு பிடிமானத்திற்கு அவள் கால்களின் இடையே நின்று கொண்டு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு,


“மது” என்றவன் அவள் பதில் பார்வைக்காக காத்திருக்க,


அவளோ என்ன ஆனாலும் அவனின் விரல்களை தாண்டி பார்வையை நகர்த்தாமல் இருக்க கண்டவன்


திரும்பவும் “மது எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு. உன்னை முதன் முதலா பார்க்கும்போது இந்த கண்ணுல இருந்த உன் கவலையே போக்கி


உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன்னு சொல்ல சொல்லி

உன்னை பொத்தி வச்சுக்கனும்னு என் உள் மனசு சொல்லுச்சு மது”.


“இப்போ இந்த நொடி புடிச்ச உன் கைய என் கடைசி மூச்சு இருக்கும் நொடி வரைக்கும் விட கூடாதுன்னு தோணுது மது”.


“இன்னும் மிச்சம் இருக்குற என் வாழ்க்கையில என் துணைக்கு நீயும் உன் துணைக்கு நானுமா வாழனும்னு என் மனசு சொல்லுது மது”


என்று அவன் கூறவும்,

மது என்ன மாதிரி உணர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.


பரிதாவின் கடைசி வார்த்தைகள் இதுவாகத்தானே இருந்தது.


அம்மா சொன்னாரே “மது குட்டி உன் வாப்பாவ விட்டு அம்மா எப்படி இருப்பேன் என் துணைக்கு அவர். அவர் துணைக்கு நான்”


என்ற வாக்கியம் நினைவு வந்த நொடி தன்னையும் மீறி அவளிடம் ஒரு கேவல் வந்து விட்டிருந்தது.


மதுவின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்த ரிஷிக்கு இந்த கண்ணீர் ஏன் என்று புரியாத நிலை தான்.

துணை வரும் 💞