• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -06

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
மதுவின் கண்ணீரைப் பார்த்து பதறிய ரிஷி “டேய் மது ஈசியா , டேக் யுவர் ஒன் டைம், பட் என் லைஃப்ல கல்யாணம்னா அது உன்னோட மட்டும் தான்,


என் குழந்தைகளுக்கு அம்மான்னா அது நீ ஒருத்தி மட்டும் தான்” என்றவன்


“மது நான் என்னோட லவ்வை சொல்லி இருக்கேன். டைம் எடுத்து நல்ல முடிவா சொல்லு” என்கவும்



அற்புதாமும் கமலும் லிப்டில் இருந்து வரவும் சரியாக இருந்தது.


அற்புதாவிற்கு தம்பியின் மனது முன்னமே புரிந்து இருந்தாலும் எதுவும் கேட்டு ரிஷி சங்கடப்படுத்தவில்லை.


காரணம் தன் தம்பியே அவன் மனதில் உள்ளதை சொல்லுவான் என்று நினைத்திருந்தாள்.


கமலும் அற்புதாவும் இவர்களை நெருங்கவும் மதுவின் பதட்டம் அதிகரிக்க அவளை கவனித்தவன்


“மதுமா ச்ச்ச்சு அமைதியா இருடி”என்று விட்டு அவளின் இரண்டு உள்ளம் கையிலும் இரு முத்தங்களையும் தந்துவிட்டு,


“இது நம்ம காதலுக்கான முதல் அச்சாரம்” என்று அதிரடி காட்ட கமல் அதிர்ந்து நின்று விட்டான்.


தன் வீட்டிற்கு தன் மனைவியின் பெயரில் நம்பிக்கை வைத்து வந்த பெண்ணிடம் மைத்துனன் நெருங்கி நிற்கும் தோரணையும்,


தங்கள் எதிரே முத்தம் தருவதும் என்று இருக்க, கமல் “என்னடி பண்றானா உன் தம்பி.


உன்னை நம்பி நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு கிட்ட என்க,


அவனை மேலும் கீழும் பார்த்த ரிஷி “உங்களை நம்பி எங்க அப்பா வீட்டுல வாடகைக்கு விடும் போது எங்க அக்காவை நீங்க என்ன பண்ணீங்க ,


எங்க அக்காவையே லட்டு மாதிரி லவ் பண்ணி , கல்யாணம் பண்ணிக்கிட்டு வரலையா?

உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? அத்தான் என்க


கமல் ங்ங்கே என்று முழித்தான். அடுத்து கமல் எதுவும் பேச வாய் திறக்கும் முன்பே


மது “கமல் அண்ணா அற்புதா அக்கா ப்ளீஸ் என்னை இறக்கி விடுங்க” என்று மது கேட்க,


கமல் ஒரு அடி எடுத்து வைத்து முன் வரவும்


ரிஷி “ஏன் மேல ஏத்தி உட்கார்த்தி வச்சவனுக்கு இறக்கி விட தெரியாதா என்று அவளிடம் கேட்டவன்,


மெதுவாக அவளை இறக்கி விடவும் கால் வலித்தாலும் பரவாயில்லை என்று

வேகமாக அற்புதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அக்கா என்னைக் கொண்டு மாமா வீட்டில் விட்டுடுங்க” என்று படபடக்க,


மெலிதாக சிரித்துக் கொண்டே ஓடிப்போய் அவளின் மற்றொரு கைப்பிடித்தவன்


“மது குட்டி நம்ம யார்கிட்ட என்ன கொஞ்சம் சந்தோஷமா பார்த்துக்கோன்னு முழுசா சாரணடையுறோமோ, அவங்க மட்டும் தான் நம்ம வாழ்க்கையின் மொத்த உலகமும்டா.



என்னையும் என் அக்காவையும் நீ சந்தோஷமா பார்த்துக்கோ மதும்மா. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உன்ன பாத்துக்கிறோம்.



நீ இன்னைக்கு இருக்குற இந்த வலியை, எங்களோட சின்ன வயசுல அனுபவிச்சவங்க நாங்க.


அந்த வலி எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும்.


எங்களுக்கு துணையா நீயும் உனக்கு துணையாக உன் வலியையும் சந்தோஷத்தையும் பகிர்ந்துக்க நாங்களும் இருக்கோம் மது யோசிடா” என்றவன்


அவள் மாமனின் வீடு வந்ததும் அவளை அக்காவிடம் விட்டுவிட்டு கிளம்பி விட்டான்.



அற்புதாவும் மதுவிடம் “யோசி மது ரிஷி என் தம்பின்றதுக்காக மட்டும் நான் சொல்லல, நிஜமாவே அவன் ரொம்ப நல்லவன்.


என் 16 வயசுல எனக்கு தாயா தந்தையா எனக்காக நின்னவன்.

இப்ப வரையிலும் அந்த தாய் ஸ்தானத்தில் இருந்து தான் என்னை பார்த்துக்கிறான். என்று விட்டு வீட்டிற்கு வந்து விட்டாள்


தங்கள் வீட்டிற்கு வந்த மதுவை சல்மா மெதுவாக கொண்டு அவள் அறையில் விட,


தனிமை மதுவை நிரம்ப யோசிக்க வைத்தது. ரிஷியை இந்த ஒரு மாதமாக தெரியும்.


அவனுடைய அக்காளுக்காக அவனின் மெனக்கடல்கள் எல்லாம் ஏற்கனவே அற்புதா மூலம் மதுவிற்கு தெரிய வந்தபோதே அவன் மேல் நல்ல மரியாதை வந்து இருந்தது.



இன்று அவனின் மென்மையான அணுகுமுறையும் அவன் காதலை சொல்லிய விதமும் பெண்ணின் உள்ளத்தை சற்று அசைத்து தான் பார்த்தது.


அவனின் கண்களை பார்த்து பேசும் தோரணை அவனின் காதலை பெண்ணிற்கு உணர்த்தியது.

அதோட அவன் விலகிச் செல்லும் ரகமும் இல்லை என்பது புரிந்தது.


பஷிருக்கு நிற்க நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தான்.


அவனின் ட்ரான்ஸ்போர்ட் அனைத்தும் கேசவமூர்த்தியின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளுக்கு என்றே அதிகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.



கேசவனின் மறைவில் இருந்து சஞ்சய் தலைமையில் செயல்பட்டாலும் மாணவியின் தலையீட்டினால் சுத்தமாக கே எம் பில்டர்ஸ் இருந்து பஷீரின் டிரான்ஸ்போர்ட் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.




அந்த நஷ்டத்தில் இருந்து மீண்டுவதற்கான முனைப்பில், அவனிடமிருந்த வாகனங்களை வைத்து வெளி மாநிலங்களுக்கு லோடு ஏற்றுவதற்கான ஏற்பாட்டில் முனைப்பாக இருக்கிறான் பஷீர்.




சல்மாவிற்கு இப்போது ஒன்பதாம் மாதம் தொடக்கத்தில் இருப்பதால் அவளின் தாய் வீட்டில் அவளை அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


10 வருடங்கள் கழித்து தன் 35 வயதுக்கு மேல் வந்த குழந்தை என்பதால், அவளும் இப்போது கவனமாக இருக்க வேண்டிய நேரம் தான்.


ஆனாலும் மதுவை மனதில் வைத்துக்கொண்டு ஷல்மா இதை வளைகாப்பு விஷேசத்தை தவிர்க்க,

ஷல்மாவின் அம்மா நேரிலேயே வந்துவிட்டார்.


அவரின் வருகைக்கு பிறகு தான் தன்னிலிருந்து மது தன்னை சுற்றி நடப்பதை அவதானிக்க ஆரம்பித்தாள்.


சல்மாவையும் குறை சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தாயின் இழப்பிலிருந்து மதுவை வெளிக் கொண்டு வர முயல்கிறாள்.


அவளின் நலன் குறித்து ஷல்மாவிடமும் பஷீர்டமும் நேரடியாகவே

மது “மாமி நீங்கள் அம்மா வீட்டுக்கு போய் குட்டி பாப்பா பெத்துகிட்டு வாங்க. அதுவரைக்கும் நான் அம்மா அப்பா இருந்த வீட்ல இருக்கேன்.


என்ன நினைச்சு கவலைப்பட வேண்டாம் மாமா இப்போ நமக்கு பாப்பாதான் முக்கியம்” என்றதும்


சால்மாவிற்கும் புரிந்தது. மது தனக்காக மட்டுமே இப்படி யோசிக்கிறாள் என்று. இருந்தும் “மது நான் உன்னை எப்படி குட்டிமா தனியா விடுவேன்” என்க


மது “மாமி நான் எங்க தனியா இருக்க போறேன்? மாமா இருக்கார். அதோட அற்புதா அக்கா இருக்காங்க.


தனியா ஃபீல் பண்ணா கண்டிப்பா உங்களை தேடி வந்திடுவேன் மாமி” என்றாள்.



அதோடு அன்றே மது அற்புதாவின் தம்பி தன்னிடம் காதலிப்பதாக கூறியதைச் சொல்ல,


பஷிருக்கும் சல்மாவிற்கும் யோசனைதான். ஆனால் பஷீர் மட்டும் “பார்க்கலாம் குட்டிமா” என்று விட்டு,


மதுவின் யோசனையான முகத்தை பார்த்து “மது நீ என்னடா யோசிக்கிற உனக்கு விருப்பமா? உனக்கு அவர புடிச்சிருக்கா? என்று அவள் முகத்தை பார்க்க,


மது “தெரியல மாமா ரிஷி மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு பிடிக்குத? பிடிக்கலையா? என்று சொல்ல தெரியல மாமா என்றவள்


ஒரு நொடி தயங்கி “பிடிக்குது மாமா அவரோட கூட பொறந்த அக்காவையே அவ்ளோ அன்பா பாத்துக்கும் போது மனைவியா நான் போன பின்னாடி என் வாழ்க்கைக்கு நல்ல துணையாய் இருப்பார் தானே மாமா,!


என் டாடி என்னை பார்த்துக் கிட்ட மாதிரி அவர் அற்புதா அக்காவை பார்த்துக்கிறார் மாமா” என்று விட்டு மாமன் முகம் பார்க்க,



நிஜத்திற்கும் மது ஒரு வளர்ந்த குழந்தையாக தான் தெரிந்தால் அந்த ஜோடிக்கு.


மதுவின் விருப்பத்திற்கு இணங்க மறுநாளே மதுவின் புது வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றனர்.


வேலை ஆட்களை வைத்து வீடும் தோட்டமும் சுத்தமாக இருந்தது

கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழித்து மது தன் வீட்டிற்கு வருகிறாள் .


தாயில்லாமல் தன் வீடே வெறிச்சோடி இருப்பது போல தோன்றியது.


காம்பவுண்டில் வண்டி நுழைந்த உடனே மதுவின் கண்கள் அவர்களின் ஆஸ்தானமான இடமான பவளமல்லி மரத்தின் கீழ் தான் போனது.



அந்த மரமும் அதிலிருந்து விழும் பவளமல்லி மலர்களும் பரிதாவிற்கு நிரம்ப பிடிக்கும்.


அடிக்கடி பரிதா அங்கு இருப்பதை கவனித்த கேசவமூர்த்தி அங்கு அழகான கல்மேடைகள் அமைத்து தந்தார்.

அவர் வீட்டில் இருக்கும் நேரங்கள் பெரும்பாலும் அந்த மரத்தின் கீழ் தான் இருக்கும்.

கண்களை இருக்க முடிதான் உணர்வுகளை அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் மது.



மிகவும் கடினமான இந்த நொடிகளை கடக்க மிகவும் பிரயாத்தனை பட வேண்டி இருந்தது மதுவிற்கு.

ஹாலின் நடுக்கூடத்தில் மிகப்பெரிய ஒரு போட்டோவில் கேசவ மூர்த்தியும் பரிதாவும் அழகாய் சிரித்துக்கொண்டு இருந்தனர்.


அந்த போட்டோ மதுவின் பதினாறாம் பிறந்த நாளில் மதுவால் எடுக்கப்பட்ட புகைப்படம்.


பரிதாவின் கண்களில் தெரிந்த நிறைவு ஜென்மங்கள் கடந்து கேசவமூர்த்தியுடன் வாழ்ந்து விட்டு நிறைவே காட்டும்.


அந்த புகைப்படத்தை பார்க்க பார்க்க உடைய தொடங்கிய மதுவை சல்மாவும் பஷீரும் இருக்க அணைத்துக் கொண்டனர்.



சல்மாவின் உடல்நிலை மனநிலை இரண்டையும் மனதில் கொண்டு தன்னை அடக்கிக் கொண்டவளாக ஈர விழிகளுடன் மென்மையாக புன்னகைத்தவள்

“ஐம் ஓகே மாமா. ஃபர்ஸ்ட் டைம் அம்மா இல்லாத வீடு இல்லையா கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்”என்று விட்டு

“நீங்க போயிட்டு வாங்க மாமா. நான் இங்கே இருந்துப்பேன். சமையல் செய்யும் தேவிமா வருவாங்க அவங்க கிட்ட பேசி இருக்கேன்.


அவங்க இங்கேயே படுத்துப்பாங்க நீங்க கவலைப்படாமல் போயிட்டு வாங்க மாமா” என்றவள்


சல்மாவிடம் “மாமி குட்டி பாப்பா வந்ததும் நம்ம எல்லோரும் இந்த வீட்டிலேயே ஒன்னா இருப்போமா” என்று விட்டு ஆவலாக அவள் முகம் பார்க்க


சல்மா “நான் வேற எங்க போவேனாம் என் மூத்த பொண்ணு விட்டுட்டு” என்க


அதுவரை அடக்கி வைத்திருந்த உணவுகள் மொத்தமாக வெடித்து ஒரு கேவலாக வந்தது மதுவிற்கு.


சமையல்கார தேவியும் வந்துவிட அவரிடம் ஆயிரம் பத்திரங்களை கூறிவிட்டு சீமந்தத்திற்கான ஏற்பாட்டில் இறங்கினார் பஷீர்.


அந்த இரவு எப்படி போனது என்று கேட்டால் ஒரு யுகமாக போனது என்று மது கூறுவாள்.


தூக்கம் என்பது கிஞ்சித்தும் அவளுக்கு வரவே இல்லை.

பாதி இரவிற்கு மேல் முடியாதவள் அன்னை தந்தையின் அறையில் போய் தாயின் புடவை எடுத்து முகத்தில் மேல் போட்டுக்கொண்டு படுத்தாள்.


பாவம் அந்த வளர்ந்த குழந்தை அந்த புடவையில் தாயின் வாசம் தேடியதோ என்னவோ அன்னையின் புடவை தந்த இடத்தில் மெதுவாக விடியல் நெருங்கும் நேரத்தில் கண்ணயர்ந்து இருந்தாள்.



மது நன்றாக நடந்தாலும் காலில் லேசான வலி இருக்கவே செய்தது. அதை பொருட்படுத்தாத மது குளித்து கிளம்பி அன்னைத் தந்தையின் புகைப்படத்தை முன்னின்று அவர்களை வணங்கி விட்டு,


காலை உணவை முடித்துக் கொண்டு மாமனிடமும் சல்மாவிடமும் பேசிவிட்டு தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருமண மண்டபத்தை மேற்பார்வையிட கிளம்பி விட்டாள்.


என்ன தான் மதுவை தனியாக அனுப்பி இருந்தாலும் பஷீருக்கு மனதே கேட்கவில்லை.


அவள் வருவதற்குள் முன்பாகவே திருமண மண்டபத்தை அடைந்தவன் அவளின் வரவிற்காக காத்திருந்து,


மதுவை வரவேற்று “மது குட்டி எப்படிடா இருக்க” என்று கேட்கவும்


மதுவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. “அச்சோ மாமா நேத்து தானே பார்த்தோம் என்னவோ ஒரு வருஷம் பிரிந்து பார்க்கிற மாதிரி கேக்குறீங்க” என்க

பஷீர் “ஆமாம் மதும்மா எனக்கும் உன் மாமிக்கும் என்னவோ வருஷமா பிரிந்த மாதிரி தான் இருக்கு” என்று அவள் தலையை வாஞ்சியாக தடவி விட்டவருக்கு நெஞ்சமெல்லாம் பாரம்தான்.

துணை வரும் 💞
 
  • Love
Reactions: Kameswari