• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -07

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
என் துணைக்கு நீதான் 💞

மதுவின் வருகை அறிந்த மேனேஜர் கந்தன் அவசரமாக வந்து, “வாங்க மது மேம்” என்று அழைக்க

மது “அங்கிள் எத்தனை முறை சொல்லி இருக்கேன் மதுன்னு சொல்லுங்கன்னு” என்று விட்டு


அவரின் பாதம் பணிந்தவள் “என்னை பிளஸ் பண்ணுங்க அங்கிள் என்று விட்டு சிரிக்க”


கந்தன் “என்னடாமா பண்ற நீ நல்லா இருப்படா. ஏன் என் காலில் விழுற” என்று பதற


மது “இருக்கட்டும் அங்கிள் நீங்களும் என் அப்பா மாதிரிதானே” என்ற


இந்த பெண்ணை நினைத்து கந்தனுக்கு மனபாரம் தான்.


தன் நண்பன் எத்தனை பாசமாக இருப்பான் இவள் மேல். இந்த வயதில் யாருமற்று தனித்து நிற்பதை பார்த்து மனதிற்குள்ளாகவே வருந்தியவர் அதை முகத்தில் காட்டவில்லை.


கந்தன் அவர்களை தன்னுடன் மன்டபத்தை மேற்பார்வையிட அழைத்து சென்றார்.



நேரமாக ஆக அங்கிருந்து பஷீரை வற்புறுத்தி அனுப்பி அவன் வேலைகளை கவனிக்க அனுப்பி வைத்தவள், கடைசியாக மணமேடையை பார்க்க,


ஆறு மாதங்களுக்கு முன்பு திருமண மண்டபத்திற்கு திறப்பு விழா செய்த அன்று கேசவ மூர்த்தி கூறிய விஷயங்கள் வந்து அவளை மென்மையாக சிரிக்க வைத்தது.


கேசவன் “பரி இந்த மண்டபமே என் பொண்ணுக்காக தான் வாங்குனது இதுல நடக்கிற முதல் கல்யாணம் கூட நம்ம மது குட்டியோட கல்யாணமா இருந்தா எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்”



என்றதற்கு பரிதாவும் “சரிதாங்க பெண்ணு இருக்கு. மேரேஜ் ஹாலும் இருக்கு. மாப்பிள்ளை தான் வேணும். மாப்பிள்ளை வேணும்னா அமேசான்ல ஆர்டர் போட்டு சட்டுனு முடிச்சிடலாமா” என்றதும்,


அதற்கு மது சினுங்கிது என்று ஒவ்வொரு நினைவாக வரவும், பெண்ணிற்கு சொல்லாமல் கொல்லாமல் மருத்துவனின் நினைவு வந்தது.



அற்புதாவிடம் அன்று தன் வீட்டிற்கு செல்வதை சொல்லி விட்டு வரப் போனவள் மனம் நிச்சயமாய் அவனை எதிர்பார்த்து தான் சென்றது.


அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ரிஷியும் ஹால் ஷோபாவில் குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.


சமையலறை சென்று அற்புதவிடம் தான் தன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறவும்,


அற்புதாவுக்கும் சல்மாவின் நிலை புரியும் என்பதால் “போயிட்டு வா மது நாங்களும் ஃப்ரீ டைம் அங்கு வரோம்.


பழைய எதையும் நினைச்சு கவலைப்படாமல் இருக்கணும். உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம்.


என் தம்பி விஷயத்தை வச்சு சொல்லல நிஜமாவே நீ எஸ் சொன்னாலும், நோ சொன்னாலும், உனக்காக இங்க ஒரு அக்கா இருக்கேன்.


என்ற அற்புதா அவளை இறுக்கி அணைத்து விடுவிக்க, அவளிடம் விடைபெற்றவள்,


ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த ரிஷி அருகில் சென்று அவனின் அருகில் இருந்த டீபாயில் அமர முயன்றவள்,

அதிலிருந்த அவன் மொபைலை எடுக்க அவள் கைப்பட்டதும் முகப்பில் இருந்த மதுவின் படம் பளிச்சென்று இருந்தது.


பார்த்ததுமே பாவை கரைய தொடங்கினாள். எப்போது இந்த படம் பிடித்தான் என்று யோசிக்க, நினைவில் இல்லை.


ஆனால் திவ்யா ரம்யாவுடன் விளையாடும்போது எடுத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.


மெதுவாக அவன் அருகில் இருக்கும் டீப்பாயில் அமர்ந்தவள் பார்வை முழுக்க அவனுடைய முகத்தில் நிலை பெற்று இருக்க



சுறுள் சுறுளான அவன் முடிகள் பேன் காற்றில் மெல்ல அசைந்தாட மதுவின் கைகள் தன்னால் மேலே எழும்பியது அவன் சிகை கோத,



ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு ஏதோ உள்ளுணர்வில் விழிப்பு வர


திடீரென்று விழித்தவனின் முன்னால் குண்டு குண்டு விழிகளுடன் தன் தலை கோத கை கொண்டு வரும் மதுவை பார்த்து இன்பமாய் அதிர்ந்தவன்


ரிஷி “ஹேய் மது மை பப்ளி” என்கவும் அவன் திடீரென்று விழிப்பான் என்று எதிர்பாராத
மது டீப்பாயிலிருந்து லேசாக தடுமாற


ஒரே இழுப்பில் அவளை தன் மேல் இழுத்துக் கொண்டான். நிச்சயமாக இவனின் இந்த அடாவடி எதிர்பார்க்காத மது அதிர்ந்து


“ரிஷி என்ன பண்றீங்க விடுங்க” என்று எழ


அற்புதா கிச்சனில் தான் இருக்கிறாளா என்பதை எட்டி பார்த்தவன்


“ச்சு அமைதியா இருடி பப்ளி என்று லேசாக அவன் உடலை வளைத்து அவன் அருகிலேயே அவளை வாகாய் அமர்த்திக் கொண்டு,

அவள் விரல்களை எடுத்து அவன் தலையில் வைத்து விட்டு அவள் முகம் பார்க்க,


இவன் அடாவடியில் முகம் சிவந்தவளாய் மது “நான் அங்க போறேன்” என்று திக்கி திணறியவளாக

“நம்ம வீட்டுக்கு போறேன் ரிஷி” என்க, அந்த “நம்ம வீடு” என்ற ஒற்றை வார்த்தை இருவருக்கும் அத்தனை நிறைவாக இருந்தது.


ரிஷி “ம்ம்ம் சரி போயிட்டு வா மது” என்றவன், அவனின் தொலை பேசியை எட்டி எடுத்து அதிலிருந்து அவள் நம்பருக்கு டயல் செய்துவிட்டு,


“என் நம்பர் மது வச்சுக்கோ, எப்பவும் எந்த நேரமுமா இருந்தாலும் கூப்பிடனும் நீ கூப்பிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் நான் உன் முன்னாடி இருப்பேன்” என்றவன்


அவள் கை விரல்களை உதட்டில் ஒற்றி எடுத்து விட்டு “தேங்க்ஸ்டா பப்ளி” என்று இடைவெளி விட்டு


“இனி எதுக்காகவும் எப்பவும் நீ கலங்கி நிக்காதடி உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன்” என்றவன்


“ மத உன் மாமா கிட்ட, அக்காவையும் மாமாவையும் பேச சொல்லி சொல்லவா” என்றவன்


“அங்க உன்னை தனியா விட எனக்கு இஷ்டம் இல்லை மதுமா” என்க


மது “இருக்கட்டும் ரிஷி மாமியோட டெலிவரி முடியட்டும். அதுக்கு பிறகு மாமா கிட்ட பேசுங்க. இப்போ மாமாக்கு ரொம்ப அலைச்சல் என்க


அவள் சொல்வதும் சரிதான் என்று உணர்ந்தவன் கிச்சனில் தான் அக்கா இருக்கிறாளா என்று மறுபடியும் எட்டிப் பார்த்துவிட்டு


அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டவன் நம்ம ஃபர்ஸ்ட் கிஸ் என்று அனுப்பி வைத்த நினைவில் திளைத்தவள்



நெற்றியில் கை வைக்க இன்னும் அந்த ஜில்லிப்பு இருப்பதாக உணர்ந்தாள் மது.

அவள் சிரித்ததையும் நெற்றியில் கைவைத்து வைத்ததையும் பார்த்த கந்தன் “மது என்னடாமா” என கேட்கவும் தான் மது நிகழ்வுக்கு வந்தாள்.


அற்புதாவின் வீட்டு கூடம் அமைதியாக இருந்தது.


பிள்ளைகள் சத்தம் கூட கேட்கவில்லை. பிள்ளைகள் இருவரும் தங்கள் மாமனின் அறையில் இருக்க


அற்புதாவின் தந்தை சிவசங்கரன் தாமரை ஆண்டாள் இவர்களோடு உலக அதிசயமாக பரத்தும் வந்திருந்தான்.


ஆண்டாளின் மறு பிரிதிபலிப்பு அவன். தன் காரியம் நிறைவேற எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவன்.


வந்தவர்களுக்கு குடிக்க கொடுத்துவிட்டு, கமலுக்கும் ரிஷிக்கும் இடையில் வந்து அமைதியாக அமர்ந்தவளின் மேல் தான் தாமரையின் பார்வை மொத்தமும் இருந்தது .

அற்புதாவை பார்த்து தாமரைக்கு தன்னால் பழைய நினைவுகள் வந்து விட்டிருந்தது.


தாமரையின் வாழ்வு வண்ண மயமாகத்தான் போனது …


அற்புதா இருந்தவரை அவள் கண்ணில் விழுந்த தூசியாக உறுத்தி கொண்டு இருக்க,


அற்புதாவை திருமணம் முடித்து அனுப்பிய நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை வண்ணமயமாக இருந்தது தாமரைக்கு.



அது எதுவரை என்றால் அவளுக்கு பிறந்த பெண் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாக பிறந்து, அதை அவள் தெரிந்து கொள்ளும் வரை தான் அவளது சந்தோஷம் இருந்தது.



குழந்தை பிறப்பிற்கு பிறகான நாட்கள் எல்லாம் நரகத்திற்கு ஒப்பானவை தாமரைக்கு.


ஆம் அந்த குழந்தையை கவனித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் அது படும் வேதனைகளை பார்க்க முடியாமல் அத்தனை கஷ்டப்பட்டு விட்டாள் தாமரை.



சொந்த அத்தை மகனான சிவசங்கரனை திருமணம் முடித்தது ஒரு காரணம் என்றால்


அந்த குழந்தையை பார்க்க வந்த ஒவ்வொரு சொந்தங்களும் அற்புதாவை தள்ளி வைத்து


இவர்கள் குடும்பமாக வாழ்ந்ததன் பலன் தான் இவளுக்கு இப்படி ஒரு குழந்தை வந்தது என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேச பேச

நிஜத்திற்கும் இருக்குமோ என்ற எண்ணம் தாமரையின் மனதில் விழுந்து விட்டது.


அந்தக் குழந்தையின் ஆறு வயது வரை தாமரை வெளியிடங்களுக்கு கூட சென்றது இல்லை. ஏனென்றால் அந்த குழந்தைக்கு நிச்சயமாக ஒருவர் துணை வேண்டி இருந்தது.



என்ன தான் பணபலம் இருந்தாலும் தன் குழந்தையை தாமரையே கவனித்துக் கொண்டாள். அந்த குழந்தை படும் வேதனையை வெளி ஆட்கள் பார்க்க கூட அவள் விரும்பவில்லை.


ஆண்டாளின் அகங்காரங்கள் மொத்தமாய் ஒடுங்கியது அந்த குழந்தையிடம் தான். அவர் எத்தனை எத்தனையாய் இந்த குழந்தையை எதிர்பார்த்தாரோ,


எவ்வளவு அற்புதாவை கரித்துக் கொட்டினாரோ, அதெற்க்கெல்லாம் சேர்த்து சிகரம் வைத்தது போல் அற்புதாவின் கண்ணீருக்கு பலனாக அவர்களுக்கு இந்த தண்டனை கிடைத்ததாக நிஜத்திற்கும் எண்ணினார் ஆண்டாள்.


அந்தக் குழந்தை ஒரு நாளும் அம்மா என்று கூட சொன்னது இல்லை அழுகையோ கோபமோ பசியோ எதுவென்றாலும் அந்த குழந்தை ஒரு வித சத்தத்துடன் தான் அழும்.




அவர் ஆசையாக எதிர்பார்த்த குழந்தையை ஒரு நாளும் அன்பாக தூக்கி வைத்து கொஞ்ச கூட அவருக்கு கொடுத்து வைக்கவில்லை.


அதன் பிறகான நாட்கள் எல்லாம் ஆண்டாளிற்கு அற்புதாவின் மேல் ஒரு எண்ணம் இருந்தாலும் எங்கே அவள் இந்த குழந்தையை சுட்டிக்காட்டி பேசி விடுவாளோ என்று அவளிடம் இருந்து சுத்தமாக விலகி விட்டார்



அந்த குழந்தைக்கு ஆறு வயது இருக்கும் போது ரிஷியின் இருபதாம் வயதில் அற்புதாவின் வீட்டிற்கு சென்றிருக்க பரத் தாமரையை விட்டு நகரவில்லை.


ஓர் பகல் முழுவதும் அந்தக் குழந்தை படும் கஷ்டத்தையும் தாமரையின் கண்ணீரையும் பார்த்தவன் அதன் பிறகு தாமரையை எவ்விடத்திலும் தனித்து இருக்க விட்டதில்லை

ஏற்கனவே தாமரை என்றால் அவனுக்கு உயிர் தான். தாயின் பிம்பமாக அவன் பார்த்தது தாமரையை தான்.


சும்மாவே தாமரையின் மேல் பாசமாக இருப்பவன் அந்த குழந்தையின் இறப்பின் பிறகு தாமரை விட்டு விலகியதில்லை.




அந்த குழந்தைக்கு தாரணி என்ற பெயரிட்டனர் அந்தப் பெயர் கூட அந்த குழந்தைக்கு தெரியுமோ என்னவோ,


ஆறு வயது வரை இந்த பூவுலகில் கஷ்டப்பட்டு விட்டு அந்த தெய்வக் குழந்தை ஏழாம் வயதில் தன் உயிரை நீர்த்து தெய்வத்திடம் சரண் அடைந்தது.



அதன் பிறகான ஆண்டாளின் நாட்கள் அந்த குழந்தையின் நினைவிலேயே நரகமாக நகர்ந்தது ஏதோ வாழ்கிறேன் என்று கடமையான ஒரு வாழ்வை வாழ்ந்தார்..


இவ்வளவு நடந்த பிறகும் கூட அவர்கள் அற்புதாவை சென்று பார்க்கவில்லை. அதற்கு அவர்களின் மனதிற்குள் இருந்த ஒரு குற்ற உணர்வாக கூட இருந்திருக்கலாம்.



அதன்பின்பு தாமரைக்கும் ஆண்டாளுக்கும் மொத்தமாக உலகமாக மாறியவன் பரத் மட்டுமே. அவர்கள் காட்டிய அன்பு பரத்திடம் அடமும் சுயநலமுமாக வளர்ந்தது.


எப்பொழுதும் எந்த முடிவு எடுத்தாலும் அதில் தனக்கு சாதகமான ஒரு முடிவே எடுப்பான். அதன் தொட்டு தான் இப்பொழுது அவர்கள் அற்புதாவின் வீட்டிற்கு வந்து இருக்கின்றனர்.



பரத்திற்கு இந்த மருத்துவமனை மேலாண்மை பார்ப்பதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை.


அவன் உலகம் தனி. ட்ரெக்கி
ங், சுற்றுலா பயணம், நண்பர்களுடன் ட்ரிப் என்று அவன் ஒரு பாதையில் செல்ல இந்த மருத்துவமனை மேலாண்மை பார்ப்பது இதற்கு தடையாக இருந்தது.


எப்படியாவது தன் அண்ணன் ரிஷியை சரிகட்டி மதுரை அழைத்துச் செல்லவே குடும்பமாக வந்து இருக்கின்றனர்.
 
  • Love
Reactions: Kameswari