• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -08

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
என் துணைக்கு நீதான் 💞 08

ரிஷியை மருத்துவமனை நிர்வாகத்தை பரத்துடன் சேர்ந்து கவனித்துக் கொள்ள சிவசங்கரன் அழைத்துக்கொண்டே இருக்க,



அவன் தற்பொழுது மதுரை வரப் போவதாக இல்லை என்றும், தற்சமயம் அற்புதாவிற்கு அவனின் அரவணைப்பு தேவை என்றும்


அதோடு அவன் ஏன் தற்போது அற்புதாவின் வீட்டில் தங்கி இருக்கிறான், என்பதை கூறவும் தான் அவர்களிடம் அற்புதாவிற்கு என்ன என்ற கேள்வியே வந்தது.



தாமரை தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள் . அதிகம் பேசிறாத அற்புதவிடம் தயக்கத்துடனே “அற்புதா என்ன உனக்கு உடம்புக்கு, பார்த்தா ஒன்னும் பெருசா தெரியலையே? என்க


அற்புதா “ஒன்றுமில்லை நான் நல்லா தாங்க இருக்கேன் என்றவளின் கைகள் உணர்ச்சி வசத்தால் நடுங்கத் தொடங்கியது.


முதல் முதலாக அவளிடம் இருந்து வரும் அக்கறையான சொல் பெண்ணை உணர்ச்சிவசப்பட செய்தது .




அக்காவின் கையை ரிஷி தட்டிக் கொடுக்கவும் பிடிமானத்திற்கு அவன் கைகளைப் பற்றிக் கொண்டு அமைதியாக அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.


இது தான் சாரியான நேரம் என்று உணர்ந்த ஆண்டாள் “அப்புறம் என்ன ரிஷி கண்ணா? என் பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு அட்டாக் வந்துருச்சு,

அவனுக்கு இப்போ ஒரு முழு ஓய்வு வேணும். அதோட பரத் சின்ன பையன் அவனும் எவ்வளவு தான் ஆபீஸ் மேனேஜ்மென்ட் பார்ப்பான்.


அதுதான் அவளே சொல்லிட்டாளே. அவ நல்லா இருக்கான்னு இதுக்கு மேல நீ ஏன் இங்க இருக்கணும்?


நாமளே பல பேருக்கு சம்பளம் கொடுக்குறவங்க நீ ஏன் இங்க இருந்து கஷ்டப்படுற” என்க


அதுவரை அமைதியாக இருந்த ரிஷி ,எவ பாட்டி நல்லா இருக்கான்னு சொல்லி சொன்னது


ஹான்ன் ஏன் என் அக்காவுக்கு பெயர் இல்லையா? அவ இவன்னு சொல்றீங்க” என்றவன்


அப்பாவிடம் திரும்பி “ஏம்பா அக்கா உனக்கும் அம்மாவுக்கும் எவ்வளவு ஸ்பெஷல்ப்பா இந்த பேர யாருப்பா அக்காவுக்கு வச்சது நீங்க தானே ?

இன்னும் எனக்கு நினைவு இருக்கு எங்க அம்மா சொல்லி இருக்காங்க. உங்க அக்கா தான் உங்க அப்பாவோட வாழ்க்கையில வந்த அற்புதம்ன்னு அவ்ளோ ஆச்சரியத்தோட உங்க அப்பா வச்ச பேர்ன்னு.


அப்படின்னு சொன்னது இன்னமும் எனக்கு நினைவில் இருக்குப்பா. உங்களுக்கு ஏம்பா இந்த அக்கா பிடிக்காம போயிட்டா” என்கவும் தன்னை மீறிய கேவல் ஒன்று அற்புதவிடமிருந்து வந்தது.



இவ்வளவு நேரம் தன் பாட்டியின் அருகில் அமர்ந்திருந்த பரத் என்ன நினைத்தானோ.! வந்து ரிஷி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து அவன் அற்புதவை தோளோடு அணைத்துக் கொண்டு

“ஷ்ஷ் அக்கா காம்டவுன்” என்க



அதோடு விடுவேனா என்பது போல மேலும் தன் பாட்டியிடமும் பேசலானான் “நம்ம வீட்ல எத்தனை வேலைக்காரங்க இருக்காங்க பாட்டி? எவ்வளவு வேலை செய்றாங்க” என்க அந்த பெரியவரிடம் அமைதி.


ஆனால் அதை பொருட்படுத்தாதவன் “நீங்க அக்காவை விட்டிங்க, ஒரு கடமையா கூட அவளை நீங்க பார்க்கவே வரல.

விளைவு அவ இந்த வீட்ல வேலைக்காரியை விட கேவலமா நடத்தப்பட்டா” என்க


கமல் குனிந்த தலை நிமிரவில்லை.


“நம்ம ஹாஸ்பிடல்ல ஒரு வார்ட்பாய் செய்ற அத்தனை வேலையும் அவங்க மாமியாருக்காக அக்கா தான் செஞ்சா, ஆனா அதை ஒருநாளும் கஷ்டமா நினைச்சது இல்லை அக்கா .


எல்லாம் செய்தும் அவளை எங்கேயும் நம்ம வீட்டிலேயே கூட யாரும் ஒரு பொருட்டா கூட மதிக்கவில்லை என்றவன்


அதனுடைய தாக்கம் தான் என் அக்கா இப்போ மன அழுத்தத்தில் அடுத்து என்ன செய்யறது, என்ன முடிவெடுக்கிறது என்று தெரியாமல் ஒரு குழந்தை போல இருக்கா” என்றவன்


தன் சித்தியிடம் ஆரம்பித்தான் “சித்தி நீங்க உங்க முழு மனசோடு தானே அப்பாவை இரண்டாவதாக கல்யாணம் முடிச்சீங்க.


கல்யாணம் முடிக்கும் போது வரைக்கும் தெரியாத எங்க அப்பாவோட வயசு அதுக்கு பிறகு தான் தெரிந்ததா?


சித்தி நீங்க என் அக்காவுக்கு என்ன பண்ணி இருக்கீங்கன்னு உங்களுக்கு புரியுதா? என்று குரல் எழுப்ப


அதுவரை அமைதியாக இருந்த பரத் ரிஷியிடம் “ரிஷி மம்மி கிட்ட ஏன் ஷவுட் பண்ற பாரு மம்மி வருத்தப்படுறாங்க” என்றதும்


எங்கிருந்து ரிஷிக்கு அவ்வளவு கோவம் வந்ததோ பளீர் என ஒரு அரை விட்டு “அங்க இருக்கிறது நம்ம கூட பொறந்த அக்காடா அவளுக்கு நடந்ததை விட உன் மம்மிக்கு பெருசா எதுவும் நடந்திடலை” என்றவன்



“எல்லாம் இருக்கு பணம் உறவுகள் எல்லாமே இருக்கு. ஆனா இதை எதையும் அக்காவை உரிமை கொண்டாட இவங்க விடல”.

“இவங்க எதிர்பார்ப்பு என்னவோ அதுக்கேத்த மாதிரி கல்யாணம் செய்து இருக்கணும்.


ஆனா இவங்களை சொல்லியும் தப்பு இல்லை. நம்ம பாட்டியோட சுயநலத்துக்கு இவங்க ஒரு பொம்மை போல ஆடுனாங்க அதோட பலன் எல்லாம் அக்கா தலையில வந்து விடிஞ்சது.

என்று இத்தனை வருடங்களாக அவன் மனதின் புழுக்கத்தை தயவு தாட்சன்னியம் பாராமல் அனைவருக்கும் எதிரிலேயே பேசி விட்டான்.



ஏற்கனவே நெடு வருடங்களாக தாமரைக்கு மனதில் இருக்கும் குற்ற உணர்வு ரிஷியின் பேச்சைக் கேட்ட பின்பு மலை அளவு ஏறத் தொடங்கியது.

அற்புதாவின் திருமணம் .அதன்பிறகான சில மாதங்கள் மகிழ்ச்சி. அதன் பிறகு தாமரையின் குழந்தை பட்ட கஷ்டங்கள் . அந்த குழந்தை இறப்பு


என்று தாமரையின் மனதில் எங்கோ ஒளி ஒரு மூலையில் பதிந்து இருந்த அற்புதாவின் கண்ணீருக்கான தண்டனை தான் தன் பிள்ளையின் இந்த இழப்பு என்ற சிறு எண்ணம்



இப்போது ரிஷி பேசவும் நிஜம்தானே என்று நினைத்தவர், கண்ணீருடன் கொஞ்சமும் தயங்காமல் அற்புதவின் கைகளைப் பற்றிக் கொண்டு “என்னை மன்னிச்சிடு அற்புதா நிஜமா நான் உனக்கு செஞ்ச பாவத்துக்கான கூலி தான் என் பொண்ணோட இழப்பு.


இழப்பை விட அவ பட்ட வழிகளை நேரில் பார்த்திருக்கேன். உன்னை ஒரு பொண்ணா அரவணைச்சி இருக்கணும் நான் அரவணைக்காத போனதுக்கு தண்டனையா என் பொண்ணு கூட என் அம்மானு கூப்பிடல.


அதோட உன் அப்பாவ கட்டும் போது தெரியாத வயசு வித்தியாசம் வளர்ந்து நிற்கிற உன்ன பார்க்கும்போது வந்தது .என் அளவில அது எனக்கு அப்போ பெருசா தெரியல.


ஆனா அது உன்னை இந்த அளவு பாதிக்கும்னு எனக்கு தெரியல அற்புதா என் மனசார உங்கிட்ட மண்ணிப்பு கேட்டுகுறேன் என்னை மன்னிசிடுமா என்று தாமரை அழ


அழுத தாமரையை அற்புதா “விடுங்க பழசை எல்லாம் ஏன் பேசிக்கிட்டு என்பதை இடை வெட்டிய தாமரை “அம்மானே கூப்பிடேன் அற்புதா என் வாழ்க்கையில் நீ ஒருத்தி மட்டும் தான் என் பொண்ணுன்னு கடவுள் எழுதி வச்சிருக்கான் போல என்னை மன்னிச்சுட்டு என் அம்மனே கூப்பிடுமா” எனவும்


இந்த அரவணைப்புக்கு அன்பிற்கும் ஏங்கியவள் தானே அற்புதா “விடுங்கம்மா பழசை பத்தி இனி பேச வேண்டாம் என்றுவிட்டாள்


இதை பார்த்த பரத்திற்க்கு பொடு பொடுவென வந்தது. தன்னை ஒரு குறையும் தெரியாமல் வளர்த்த தாமரை எல்லார் முன்னிலையும் மன்னிப்பு கேட்பதை விரும்பாத பரத்

“மம்மி போதும் டோன்ட் க்ரை ப்ளீஸ்” என்று அவரை அணைத்துக் கொண்டவன் அடுத்த தனக்கு சாதகமான முடிவு எதிர்பார்த்து


ரிஷியிடம் “அண்ணா இப்போ தான் அக்கா பிராப்ளம் சால்வ் பண்ணிட்டோமே இனி அக்காவை இங்கிருந்து தனியா விட வேண்டாம். மதுரையில் குடி வச்சுருவோம்” என்று தனக்கு ஏற்றார் போல் முடிவெடுக்க


ரிஷி மதுவை மனதில் நினைத்துக் கொண்டு “நோ பரத் நான் இப்போ அங்க வர மாதிரி இல்ல. அக்காவும் மாமாவும் வரது அவங்க குடும்பம் எடுக்க வேண்டிய முடிவு. நீ அதை முடிவு செய்யாதே என்று விட்டான்.


வந்தவர்களுக்கு வெளியில் இருந்து உணவு வரவழைத்து ரிஷியும் கமலும் தான் பரிமாறினார்கள்.

அதற்கே ஆண்டாள் அலுத்து கொள்ள தாமரைதான் அவரை அடக்கினார்.


சின்ன குட்டி ரம்யாவிற்கு உணவு ஊட்டி கொண்டு இருந்த அற்புதாவிடம் வந்த சிவசங்கரன் சில நொடி அமைதிக்கு பிறகு “அப்பு குட்டி என்று அழைக்க, நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகான தன் தந்தையின் பிரத்தியேகமான அழைப்பை கேட்டதும்


அற்புதா அகம் மகிழ்ந்து போனவளாக “அப்பா போதும்பா எனக்கு நீங்க வேற எதுவும் சொல்ல வேணாம் இது போதும்ப்பா இந்த ஒரு அப்பு குட்டி போதும்பா எனக்கு என் அப்பா இருக்காரு இனி எனக்கு எந்த கவலையும் இல்லை நான் நிம்மதியா இருப்பேன்” என்றாள்


சிவசங்கரனுக்கு தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தது. தன் மகள் எத்தனையாய் தன்னைத்தேடி இருந்தால் தன் ஒற்றை அழைப்பிற்காக இத்தனை உணர்ச்சிவசப்படுவாள் என்று நினைத்தவர் , அவள் தலையை தடவி “உன் மனசுக்கு நீ இனி நல்லா இருப்படா அப்பு குட்டி” என்றார்


சல்மாவின் வீடு அதிக ஆடம்பரமின்றி ஒரு சின்ன விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. பஷிருக்கு தன் அக்கா பரிதாவும் மாமா கேசவ மூர்த்தியும் இல்லாமல் இப்படி ஒரு விசேஷம் செய்ய விருப்பமே இல்லை.


ஆனால் இந்த குழந்தை சல்மாவின் நீண்ட நெடிய பத்தாண்டு தவத்திற்கு கிடைத்த வரம்.


அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எளிமையான இந்த வளைகாப்பை ஏற்பாடு செய்திருந்தார் பஷீர்.


வளைகாப்பிற்கு கிளம்பும் போதே ரிஷியிடம் சொல்லி இருந்தாள் மது.அவர்கள் இருவருமாக சேர்ந்து போக ஆசைப்படுவதாக,



அவளுக்காக அப்பார்ட்மெண்டின் வாயிலிலேயே வந்து காத்திருந்தான் மருத்துவன்.அவனை அதிகம் காக்க வைக்காமல் வந்து இறங்கினாள் மது.

அவளைப் பார்த்தவன் ஒரு முழு நிமிடம் சிலையாக நின்று விட்டான். பச்சை நிற சிந்தடிக் புடவையில் தலை நிறைய மல்லிகை பூவை வைத்து உட்கழுத்தில் ஒரு மரகத கல் பதித்த டாலரும் காதிற்கு பச்சை நிற ஜீமிக்கியும் கையில் அளவான வளையலும் என்று வந்தவளின் அழகில் உரைந்தவன்


அவள் நடந்து வரும்போது சற்றே பிறை நிலவென தெரிந்த இடையில் தெரிந்தே தொலைந்து போக துடித்தான்.


அதிலும் இந்த சிந்தடிக் புடவை அவள் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டியதில் அவளின் அழகில் விழுந்து போனான் என்றே சொல்லலாம்.


ரிஷியின் இடைவிடாத பார்வை அவளுக்கு கூச்சத்தை கொடுக்க “ரிஷி போதும் பாக்காதீங்க எனக்கு கூச்சமா இருக்கு” என்று சினுங்கியவளை இடம்பொருள் பார்க்காமல்


ஒருமுறை இருக்க அணைத்து விடுவித்தவன் “ஏய் பப்ளி ஆள ஆசத்துரடி மது குட்டி இந்த புடவையில் அழகாய் இருக்கடா என்றான்.

மது “அம்மா புடவை ரிஷி.நம்ம வீட்டுல சமைக்கிற தேவி அக்கா கட்டி விட்டாங்க” என்றவள்


சிறிது கண் கலங்கியவளாக “அம்மா பார்த்து இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க என்று கூறிவிட்டு அவனுடன் இணைந்து நடக்கலானாள்


சல்மாவிற்கும் பஷீருக்கும் ரிஷியையும் மதுவையும் ஜோடியாய் பார்த்தது நிறைவாக இருந்தது. சீக்கிரமே தங்கள் மூத்த மகளுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டனர்.


இந்த வளைகாப்பில் கமல் தன் கூட்டில் இருந்து வெளிவந்தான் என்றே சொல்ல வேண்டும். அற்புதா சல்மாவிற்கு எல்லா உதவிகளையும் செய்ய கமலும் அற்புதாவின் பின்னோடு உதவி செய்கிறேன் என்று சுற்ற, ஒரு கட்டத்தில் ரிசஷியை கூப்பிட்டு கமலை அமைதியாக இருக்கச் சொல்லவும்,


ரிஷியும் கமலிடம் “அத்தான் அமைதியா வந்து உட்காருவீங்களாம் அக்கா சொல்லிவிட்டா என்க

கமல் “ஏன் ரிஷி அற்புதாவுக்கு ஹெல்ப் பண்ண தாண்டா போறேன் என்க

ரிஷி “இல்லத்தான் அக்காவுக்கு ஒரு மாதிரி இருக்காம். சோ மூடிக்கிட்டு இருப்பீங்களாம்”என்றான்.

“என்ன மாதிரி இருக்காம்”என்று கமலும் விடாமல் வம்பு வளர்க்க


ரிஷி “ம்ம் வடிவேலு மாலா மாலானு பொண்டாட்டி முந்தானிய புடிச்சு சுத்துற மாதிரி இருக்காம் என்று விட்டான்.


அவன் கைகளை கோர்த்து நின்ற மதுவிற்கு ரிஷி சொன்ன காட்சிகள் அப்படியே கற்பனையாக தோன்ற,

அப்படி ஒரு சிரிப்பு அவளிடம் அவளின் சிரிப்பொலியில் பஷீரும் சல்மாவும் திரும்பி பார்க்க


அவர்களை அகமெல்லாம் அத்தனை நிறைவு தங்கள் பெண் இனி மீண்டு விடுவாள். ரிஷி அவளை பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் தோன்றியது.


அவளின் கலகல சிரிப்பில் கூச்சப்பட்ட கமலும் ரிஷியிடம் “டேய் மதுவ அமைதியா இருக்க சொல்லு” என்று விட்டு அற்புதாவே விடமே ஓடிவிட்டான்


சல்மாவின் வளைகாப்பு நிறைவாகவே முடிந்தது. அவளை தாய் வீடு அனுப்பி விட்டு
பஷீர் தன்னால் முடிந்த அளவு மனைவிடமும் மதுவிடமும் சலிக்காமல் ஓடிக்கொண்டு தன் தொழிலையும் முன்னேற்றியே கொண்டிருந்தான்.


மதுவின் காலை பொழுதே ரிஷியின் பேச்சில் தொடங்கி திருமண மால் வீடு என்று இதமாக சென்று கொண்டிருந்தது.


துணை வரும் 💞
 
  • Love
Reactions: Kameswari