• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -09

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
சஞ்சயின் அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாய் கூண்டு புலி போல நடமாடிக் கொண்டிருந்தான் மாணவ்.


நேற்று மதுவின் பெயரில் இருக்கும் திருமண மாலின் மேனேஜரும் கேசவ மூர்த்தியின் நண்பருமான கந்தனை ஒரு விசேஷ வீட்டில் பார்க்க,


இவனாக சென்று அவரிடம் பேச்சுக் கொடுக்க, அந்த வெள்ளந்தி மனிதரும் பேச்சுவாக்கில் திருமண மாலில் வரும் வரவு செலவுகளை உளர,


கேட்ட மாணவ்விற்க்கு அதிர்ச்சி தான். தன் தந்தை இறந்த இந்த மூன்று மாதத்திலேயே இவ்வளவு வருமானமா என்று மனதிற்குள்ளாகவே புகைந்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலைதான்.




மதுவிற்கும் பொழுதுகள் திருமண மண்டபம், வீடு, சல்மாவின் தாய்வீடு, அற்புதாவின் வீடு, ரிஷியுடனான பொழுதுகள் என்று இனிமையாகவே கழிந்தது.


தன்னுடைய சிறு உலகத்தில் சுழண்டு கொண்டு இருந்தவள் அவ்வபோது சில நாட்களாக தன்னை பின் தொடரும் பிளாக் ஸ்கார்பியோ காரை கவனிக்க தவறினாள்.


சல்மாவிற்கு வளைகாப்பு முடிந்த 10 நாட்கள் கழித்து சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருந்தது சல்மாவும் பஷீரும் அந்த கருணையாளனுக்கு நன்றி சொல்லியே ஓய்ந்து போனார்கள்.


மதுவின் மகிழ்விற்கு அளவே இல்லை. குழந்தையை தூக்க பயமாக இருந்தாலும், கீழே அமர்ந்து குழந்தையை மடியில் வைக்க சொல்லி அந்த பிஞ்சு விரல்களை தொட்டு தொட்டு பரவசமடைந்தாள்.



இந்த பூச்சொண்டை பார்க்கும் போதே ரிஷி நினைவுகள் தான். அன்று சொன்னானே என் லைஃப்ல கல்யாணம்னா அது உன்னோட மட்டும்தான். என் குழந்தைகளுக்கு அம்மான்னா அதுவும் நீ மட்டும் தான்னு.



இப்போ இந்த குழந்தையை நான் வச்சிருக்கறத பார்த்தா என்ன நினைப்பான் என்று எண்ணியவள் பஷீரிடம்


“மாமா என்னையும் இந்த குட்டி ஹனி பன்னையும் ஒரு போட்டோ எடுங்க” என்றதும்


பஷீரும் அழகாக அவர்களை அவளின் செல்போனில் கிளிக்கினான்.


இந்த புகைப்படங்களை முதல் வேலையாக ரிஷிக்கு “ஹனிபன் வித் யுவர்……..” என்று அனுப்பி வைக்க



சில நிமிடங்களிலேயே பார்த்துவிட்டவன் “ஹனிபன் வித் மை பப்ளி பொண்டாட்டி” என்று பதில் அனுப்பியவன்


அதோடு மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் சுமந்த தாய்க்கு ஏழாம் மாதத்திலேயே வலி கண்டு பிரிமெச்சூடாக குழந்தை பிறக்க இருப்பதால் அவன் பிசி என்று கூறியவன் அவளுக்கு பத்திரம் சொல்லி ஆஃப்லைன் சென்று விட்டான்.




இரவு 7 மணி வரை மருத்துவமனையில் குழந்தையுடன் கழித்தவளுக்கு வீட்டிற்கு செல்லவே மனமில்லை.


மருத்துவமனையில் இரவு தங்குவதற்கு இரண்டு பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பதால் பஷீர் அவளை வீட்டில் அழைத்துச் சென்று விடுவதாக கூற,


மது “இல்ல மாமா நான் போய்க்கிறேன். நீங்க இங்க பாருங்க என்றவள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வர


லேசாக தூரிக் கொண்டிருந்தது வானம். அந்த இதமான தூரலில் நடந்தபடி அவள் புக் செய்த வண்டிக்கு மருத்துவமனையின் வெளியே காத்திருக்க


மின்னல் என அந்த ஸ்கார்பியோவில் மதுவின் பின்னால் இருந்து ஒருவனின் ஒரே தல்லில் தலைக்குப்புற அந்த காரில் விழுந்தாள் மது.


அவள் பின்னோடு ஏறியவன் முதல் வேலையாக கைப்பையையும் கையில் இருந்த தொலைபேசியையும் பறித்துக் கொண்டான்.

சத்தம் போட்டவுடன் முகத்தில் பளிரென ஒரு அறைவிடவும் அமைதியாகிவிட்டாள் மது.

அறை மணி நேரம் கழித்து அவள் மொபைலில் லாக் எடுக்க சொல்ல முடியாது என்று “ஹெல்ப் ஹெல்ப் என்று கத்து, அரை விழுந்த அதே பக்க கன்னத்தில் இப்பொழுது இன்னும் வலுவான ஒரு அறை விழுந்தது.



இம்முறை விழுந்த அறையில் மதுவின் உதடு கிழிந்து ரத்தம் வந்தது. வாங்கிய அறையில் கப்சிப் என்று ஆகிவிட்டாலும் அவளின் அழகை மட்டும் ஓய்ந்த பாடில்லை.


அவளின் மொபைலில் இருந்து பஷீருக்கு ஒரு மெசேஜ் “ஐ அம் ரீச்டு மாமா” என்று அதோடு அந்த மொபைலை முழுதாக அனைத்து போட்டான் நிதிஷ்.


அந்த கார் பயணம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது. எந்த இடம் என்பது தெரியவில்லை. இந்நேரம் மதுவின் மனமெல்லாம் தன் தந்தையை தான் நினைத்தது. எங்கு சென்றாலும் அவளுக்கான காரில் கொண்டு வருவது கொண்டு விடுவது என்று தகப்பனின் நினைவு வந்தது.



யாருமற்ற அந்த பயத்தில் வாய் விட்டே “டாடி டாடி” என்று கதறலானாள்.



காஞ்சிபுரத்தில் வண்டி நின்றது. நின்ற அடுத்த நொடி கார் கதவை திறந்து கொண்டு ஓட ஆரம்பித்தவளை நாலே எட்டில் ஓடிச் சென்று பிடித்தான் நிதிஷ்.



பிடிக்கும்போது அவள் தோள் பட்டையை பிடிக்க அவன் சுடிதாரின் சிறு பாகம் கிழிந்து அவன் கையோடு வந்தது அவனே எதிர்பாராதது.


அவனுக்கு நிஜமாக இது மிக எரிச்சலாக இருந்தது. இது ஒன்றும் அவன் தொழில் அல்ல.


அவனும் இப்படி ஒரு பெண்ணை அடிக்கும் ரகம் எல்லாம் இல்லையே. அவனிடம் சொல்லப்பட்டது ஒரு இரவும் ஒரு பகலும் அவளை நன்கு பயமுறுத்த வேண்டும் என்பது மட்டுமே.


அவளை அப்படியே தூக்கி வந்து அங்கிருந்த அந்த ஒற்றைப் படுக்கையை கொண்ட வீட்டில் நாற்காலியில் அமர்த்தி அவளின் கால்களையும் கைகளையும் கட்டி போட்டான்.


அவளின் கண்களையும் துணி வைத்து கட்டினான். அவள் இருந்த அதே அறையில் நித்தீஷும் அவனுடன் வண்டி ஓட்டி வந்த நண்பனும் அமர்ந்து மது அருந்து தொடங்க,

அவர்களின் போதையும் அதன் பிறகு அவர்களின் பேச்சும் மதுவிற்கு ஒவ்வொரு நொடியும் நரகமாக கழிந்தது.


அடுத்த நொடி என்ன நடக்கும் என்று பயமும் தவிப்பும் நொடிக்கு நொடி அதிகரித்தது.


அதுவும் அவர்களின் எதிரில் ஒரு பக்கம் கிழிந்த உடையுடன் கண்களை கட்டியிருப்பதும் இந்நேரம் அவர்களின் பார்வை எப்படி தம்மை பார்க்கும் என்பதிலேயே தவித்துப் போனாள்



இரவு முழுவதும் கண்கள் மூடியே இருந்தாலும் சிறு உறக்கம் கூட இன்றி விழித்தே இருந்தவளை,


மூச்சு முட்ட குடித்து காலை 10 மணிக்கு போதை தெரிந்து எழுந்து பார்த்த நிதிஷ்க்கு பாவமாக இருந்தது.


தன்னையே நொந்து கொண்டவன் அவள் கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவளை சுத்தப்படுத்திக்கொள்ள சொல்லிவிட்டு அறையின் வெளியில் வந்து நின்றான்.


அவன் செய்த செயல்கள் அவனாலேயே அவனை மன்னிக்க முடியாதது போல் இருந்தது.


நேற்று இரவு அவளை கடத்தியது அதன் பிறகு அவள் தேவையை கூட அறிந்து கொள்ளாமல் இப்படி கட்டி போட்டது அவனுக்கே குற்ற உணர்வாய் இருந்தது.



குளியல் அறைக்குள் வந்தவள் சுத்தம் சத்தம் போட்டு ஒரு அழுகை அழுது தீர்த்தாள்.

எங்கே இரவில் அழுதாலோ சத்தம் போட்டாலோ அவர்களின் கவனம் தன்னிடம் திரும்பி விடுமோ என்று பெண் மூச்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் .

சற்று நேரம் அழுது கரைந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, குளியல் அறையில் இருந்த நீரையே வயிறு முட்ட குடித்து விட்டு தான் வெளியே வந்தாள் .


அவளை கடத்தியவர்களிடம் இருந்து பச்சை தண்ணீர் குடிக்க கூட பயமாக இருந்தது.


அறைக்கு திரும்பி நித்தீஷ் உணவு பொட்டலத்தை அவளிடம் நீட்ட, “இல்லை எனக்கு பசி இல்லை” என்றவள் மேலும் “ப்ளீஸ் என்னை விட்டுடுங்க உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் மாமா ரெடி பண்ணி கொடுப்பார்”என்க


அடுத்து அவன் “ம்ம் எவ்ளோ கேட்டாலும் கொடுப்பானா உன் மாமா? அப்படி எவ்ளோ பணம் வச்சிருக்கான்? என்ன பண்ணி அவளோ பணம் சம்பாதிச்சு வச்சிருக்கீங்க.?” என்று அவன் பேசி அனைத்தும் இதுவரை மதுபாலா காதில் கூட கேட்டிராத வார்த்தைகள்.


இப்படி யாருமற்று நிற்கும் இந்த அனாதை நிலையை மது அறவே வெறுத்தாள்.


ஒரு இரவு ஒரு பகல் தன்னை தேட யாருமில்லையா? என்று நினைத்து சுய கழிவிரக்கத்தில் அழுது கரைந்து கொண்டு இருந்தவளின் அறையில் ஆறு மணிக்கு மேல் நுழைந்த மாணவ் கண்ணில் பட,


கடலில் மூழ்கி சாக கிடைத்தவனுக்கு ஒரு மரக்கட்டை கிடைத்ததை போல எண்ணியவள் “அண்ணா மாணவ்ண்ணா ப்ளீஸ் காப்பாத்துங்க என்னை யாரோ இங்கு கடத்திக் கொண்டு வந்து அடிச்சி வச்சிருக்காங்க” என்றவள்


“ண்ணா ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என்று ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டவளாய் கடத்தி வைத்தி இருப்பவனிடமே அடைக்கலம் கேட்டாள்.


மதுவின் மாணவ் அண்ணா என்ற ஒற்றை வார்த்தையில் நித்தீஸ்க்கு மது யார் என்று யூகம் வந்து விட்டிருந்தது.


தெரிந்த விடயங்கள் அவனுக்கு அதிர்ச்சியா இருக்க தான் செய்த செயல்கள் ஒவ்வொன்றும் அவனுள் மின்னி மறைய,


அவன் அவளை அடித்தது, அவளை பேசியது, என்று நினைத்துப் பார்த்தவன் இருந்தும் தன் நண்பனின் மேலிருந்த ஒரு சிறு நம்பிக்கையில்


“டேய் மாணவ் மச்சான் இது யாருடா உன்னை அண்ணா சொல்றா” என்று கேட்க

மாணவ் “ம்ம்ம் என் அப்பா வச்சிருந்தாரே ஒரு பொம்பள அவளுக்கு பொறந்தவடா” என்று விட்டு


மச்சி “கொஞ்சம் முன்னாடி சொன்னியே இவ மாமன் எவ்ளோ கேட்டாலும் கொடுப்பான்னு, கொடுப்பாங்கடா குடியை கெடுத்தவங்க ,


எங்க அம்மா வாழ்க்கையை கெடுத்துட்டு, எங்க அப்பா சம்பாதியத்தில கல்யாணம் மண்டபத்தை எழுதி வாங்கிட்டு,


ஊர்மெச்ச வாழுரா எவ்வளவு கேட்டாலும் கொடுக்காமல் என்ன செய்வா? என்றவன்


அடுத்தடுத்து பேசிய வார்த்தைகள் எல்லாம் பரிதாவை பற்றிய தரகுறைவான வார்த்தைகள் தான்.



நிதீஷ் மாணவ்விடம் பேசும் போதே பதட்டத்தில் இருந்து தெளிந்த மதுவிற்கு அவன் எப்படி இங்கே என்ற யோசனை மூளையில் மின்னல் அடிக்க


அவளுக்கு மூளை உணர்த்திய விடயம் அதிர்ச்சியாக இருந்தது. ஒரே வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் கேசவ மூர்த்தியின் பேச்சில் அடிக்கடி வரும் சஞ்சையையும் மாணவ்வையும் மனதளவில் அண்ணன்கள் என்று தான் எண்ணி இருந்தாள் மது

ஆனால் அவனின் இந்த செயல் அவளை புரட்டி போட்டது. அதோடு மாணவ் பேசிய பேச்சுக்கள் அவளால் தலை நிமிர முடியவில்லை.


வேறு எந்த சந்தர்ப்பமாக இருந்திருந்தால் தெளிவு இருந்திருக்கும் ஆனால் இன்று அடுத்தடுத்த அதிர்வுகளால் பெண் மௌனமாகி போனாள் .


அத்துடன் நிறுத்தாத மாணவ் “இன்னும் நீங்க அசிங்கப்பட வேண்டி இருக்குடி உன் அம்மா செத்தாலும் அவளையும் அசிங்கப்படுத்துவேன் கோர்ட்டுக்கு போவேன்.


உன் அம்மாவோட பேரை நாறடிப்பேன் என் அப்பாவோட இறப்புக்கு நீங்க தாண்டி காரணம் என்று பேசிக்கொண்டே போக அவனை நிதிஷால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.



ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத நிதிஷ் மாணவ்வை அறைந்து தள்ளவும் தான் அமைதியானான்..


காஞ்சிபுரத்திலிருந்து எப்படி சென்னை வந்தால் என்பது அவளுக்கு கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. நித்திஷ் தான் கார் புக் செய்து அவளை அனுப்பி விட்டான்.


அவளை அனுப்புவதற்குள் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டான். கேசவமூர்த்தி அங்கிள் மகள் என்று தெரியாமல் இப்படி தவறு செய்து விட்டதாக கூறினான்.


மதுவிடம் அதற்கு எந்த எதிரொலியும் இல்லை.

காரில் ஏறும்போது மட்டும் “கேசவ மூர்த்தியின் மகளுக்கு மட்டும்தான் இந்த சலுகையா நாளைக்கே வேற யாரோ பெத்த பொண்ணை உன் பிரண்டு க்கு பிடிக்கலைன்னா இந்த மாதிரி தான் கடத்தி அடிச்சு துன்புறுத்திவியா”என்றவள் அடுத்து எதுவும் பேசவில்லை.

மதுவின் இந்த கேள்வியிலேயே நித்திஷ் தலைகுனிந்து விட்டான்.



காரில் ஏறியதும் நித்திஷ் கொடுத்த அவளின் தொலைபேசியில் இருந்து பஷீருக்கு அழைக்க,


எடுத்ததும் ஏகத்திற்கும் பதட்டம் பஷீரிடம் “மது குட்டி காலையிலிருந்து உன் போன் நாட் ரீச்சபிள் எங்க இருக்க மது” என்று‌அவள் பதிலுக்காக காத்திருக்க


மது “ஃப்ரண்டோட பர்த்டே பார்ட்டி மாமா. அதோட மொபைல் சார்ஜ் இல்ல. நாளைக்கு ஹாஸ்பிடல் வரேன் என்று விட்டு வைத்தவளுக்கு ரிஷியை பார்க்க வேண்டும் போல் இருந்தது.



தன் வீட்டில் வந்து இறங்கியவள் குளித்து கிளம்பிவிட்டாள் அற்புதாவின் வீட்டிற்கு.


அற்
புதாவும் கமலும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மதுரை சென்று ஒரு வாரமாகி இருந்தது.


இரவு 10 மணிக்கு வீட்டின் காலிங்பெல் சத்தத்தில் அரை தூக்கத்தில் வந்து கதவை திறந்தவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் மதுவின் தரிசனம்…

துணை வரும்
 
  • Love
Reactions: Kameswari