என் துணைக்கு நீதான்
இந்த இரவு நேரத்தில் அவளை பார்த்து இன்பமாய் அதிர்ந்த ரிஷி “வாடா பப்ளி” என்றவன் லைட்டை போட போக
“வேணாம் ரிஷி நைட்லேம்லயே இருக்கட்டும்” என்றவள்
ஹாலில் இருந்த பெட்டை பார்த்து விட்டு “ஏன் இங்க படுத்து இருக்கீங்க ரூம் போகல” என்க
ரிஷி “இல்ல மது டிவி பார்த்துட்டே படுக்கலாம்னு பெட் மட்டும் கொண்டு வந்துட்டேன்” என்றான்.
இருந்த உடல் அலைச்சலுக்கும் மன அலைச்சலுக்கும் அந்த பெட்டிலையே தொப்பென்று படுத்தவள் “ரிஷி ரொம்ப பசிக்குது” எனும் போது தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
அவள் குரலிலேயே அவளை கண்டு கொண்டவன் “டேய் மது பைவ் மினிட்ஸ் இரு” என்று விட்டு நான்கு துண்டு பிரட்டை டோஸ்ட் செய்து அதில் ஜாமை தடவிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு,
ஒரு பெரிய கப் நிறைய ஓட்ஸ் கொண்டு வருவதற்க்குள் அந்த பிரட் துண்டுகள் காலியாகி இருந்தது.
பெட்டிலேயே அமர்ந்து சாப்பிட்டவள் ரிஷியை விட்டு ஒரு இன்ச் கூட நகர வில்லை.
அவளிடம் ஏதோ சரி இல்லை என்பது மட்டும் தான் அவன் உணர்ந்தான்.
பக்கத்தில் அமர்ந்தவனின் கழுத்தை இறுக்க கட்டிக்கொண்டு அவனை ஒட்டி உட்கார,
இவ்வளவு நேரம் இருந்த அந்த பாதுகாப்பற்ற தன்மை விலகுவது போல இருந்தது.
மதுவிற்கு எங்கோ காடு மேடுகள் சுற்றியலைந்து விட்டு தன் கூடு அடைந்த உணர்வு வந்தது.
மதுவின் நெருக்கம் அவனை சோதிக்க ரிஷி “மது ப்ளீஸ் அமைதியா இரு என்னை நல்ல பையனா இருக்க விடுடி” என்க
மது “ஹேய் ரிஷி நான் உன்னை கெட்ட பையனா ஆக வேண்டான்னு சொல்லலையே என்ற அவளின் வார்த்தைகள் முடிக்கும்போது மதுவின் அதிரங்கள் ரிஷியின் வசமாகி இருந்தது.
ரிஷியன் கைகள் மதுவின் மேல் ஆங்காங்கே ஊர்ந்து போக பெண் மெதுவாக “ரிஷி” என்க
“உன் ரிஷிதாண்டி பப்ளி” என்றவன் அடுத்த தாக்குதல் அவளின் கழுத்து. ஒரே ஒரு சூடான மூச்சுக்காற்றப்பட்ட முத்தத்தில் பெண் விழுந்து போக,
“ரிஷி யூ ஆர் கில்லிங் மீ” என்றவள் உடல் சிலிர்த்து அடங்கியது.
ரிஷி “எஸ் ஐ வில் கில் யூ, அண்ட் ஐ அம் கோயிங் டு ஈட் யூ மது” என்றவனின் கைகள் இடம் மாற
இதழ்கள் நான்கும் முதலில் முத்தம் என்னும் இனிப்பை பரிமாறிக் கொள்ள , அடுத்து அந்த மது என்னும் மாதுவிடம் அடிமையாகி போனான் ரிஷி .
அவளில் இருந்த வெட்கங்களை தகர்த்து, அவள் இறுகிய நேரத்தில் அவளை இலக்கி பூவினும் மென்மையாக அவளை ஆன்டு தாம்பத்தியத்தின் அரிச்சுவடியை அவர்கள் அறிந்து வந்தனர்.
அடுத்து அங்கே நடந்ததெல்லாம்
எந்தப் பேனா கொண்டும் எழுத முடியாத வர்ணஜாலங்களை நிகழ்த்தினார்கள்.
கூடிக் களித்து கலைந்து விழும் போது நேரம் பண்ணிரெண்டை தொட்டு இருந்தது.
கலைந்து கிடந்தவளை தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டு
“மது” என பெண்ணிடம் பேச்சே இல்லை.
“மதுஉஉஉஉ” என்று அவள் இடையில் ஒரு கிள்ளு வைக்க “இஸ் பா ரிஷி வலிக்குது” என்றவள்
அவன் மார்பில் பல் தடம் தெரிய கடித்து வைக்க, “சச்சு மது” என்று விட்டு கிள்ளிவிட்டவனே அவளுக்கு தேய்த்து மருந்திட்டான்
“மது எனக்கு உண்மையை மட்டும் தான் சொல்லணும்” “என் மது குட்டிக்கு இன்னைக்கு என்ன ஆச்சு நீ சரியில்லையே மது” என
பெண்ணிடம் அமைதி “என்னால உன்னை உணர முடியுது மது இது என் மதுவேட இயல்பு இல்லை என்னம்மா ஆச்சு” என்க
அவன் கேள்விக்கு பதில் சொல்லாதவளின் கண்ணீர் அவன் மார்பின் மேல் இறங்க பதறி விட்டான்.
“ஏய் மதுமா ஏன்டா இந்த அழுகை” “எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லணும்னு” என
சிறு இடைவெளி விட்டவள் நேற்று மாலை 7 மணியில் இருந்து இன்று மாலை 7 மணி வரை நடந்த அத்தனையும் கூற கூற
அதோடு நேற்றைய இரவில் அவள் கண்களை கட்டி இருந்ததையும், ஒவ்வொரு நொடியையும் அவள் எத்தனை பயத்துடன் கடந்தாள் என்பதை கூறும் போதே இப்போதும் அவள் உடலில் ஓடிய நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது
படுத்திருந்த ரிஷி சட்சென்று எழுந்து விளக்கை ஒளிர விட, அவன் திடீர் செயலில் ஸ்தம்பித்தவள் போர்வையில் தன்னை புகுத்திக் கொண்டு, “வாட் ரிஷி” என
அவளின் தற்போதைய நிலை எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை . அவசரமாக அவள் கன்னங்களை பார்க்க அந்த குண்டு கன்னங்கள் அடி வாங்கியதற்கான தடம் இன்னும் கரும் பச்சை நிறத்தில் இருந்தது .
உதட்டோர சிறிது காயமும் தெரிய அவனால் நிலை கொள்ளவே முடியவில்லை. ஆங்கிலத்தில் சில கெட்ட வார்த்தைகளை கொண்டு திட்டியவனின் மனம் பொறுக்கவே இல்லை…
ரிஷி “பிளடி பாஸ்டர்ட்.என்ன திமிர் அவனுக்கு, அவனை நான் சும்மா விட போறதில்ல மது, லெட்ஸ் பைல் தி கம்பிளைன்ட்” என்றவன் தேகம் இறுக ஆரம்பித்தது.
“இல்ல மது இந்த விஷயத்தை பரத் கிட்ட சொல்லிடுறேன். இதை அவன் வேற விதமா ஹாண்டில் பண்ணிடுவான்” என
அவனை சமாதானப்படுத்தியவள், அந்த விஷயத்தை தானே பார்த்துக் கொள்வதாக கூற, அதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அத்தோடு மதுவின் சில முடிவுகளை அவனிடம் கூற, எதற்கும் அவன் தடை கூறவில்லை. அவள் உணர்வுகளையும் அவள் மன காயங்களையும் புரிந்து கொள்ள முடிந்ததினால் மட்டுமே அவளின் முடிவிற்கு எந்த மறுப்பும் கூறவில்லை ரிஷி.
திரும்பவும் தன் நேற்றை நினைவுகளில் முழுக ஆரம்பித்தவளை தன் செல்ல சீண்டல்களால் கொஞ்சி திரும்பவும் அவளை ஆட்கொண்டு மது ஓய்ந்து தூங்க அதிகாலை மூன்று மணியானது.
அவளின் துயரங்களை ரிஷி இடம் சொல்லி விட்ட நிம்மதியில் அவள் தூங்க, மதுபட்ட துயரங்களை கேட்ட ரிஷியால் அவ்வளவு எளிதாக கண்மூட முடியவில்லை.
காலையில் 10 மணிக்கு காலிங் பெல் சத்தத்தில் கண்விழித்தவன் போய் கதவைத் திறக்க, ஒரு நொடி அதிர்ந்து விட்டான்.
வெளியில் தன் அக்கா மாமா பிள்ளைகளோடு ஆண்டாலும் தாமரையும் அவர்களுடனே பரத்தும் என்று சிவசங்கரனை தவிர்த்து அத்தனை பேரும் இருந்தனர்.
இவர்களை பார்த்த நிமிடம் தான் அவனிடம் அதிர்வு. அடுத்த நிமிடம் தெளிந்தவன் உள்ளே இருந்தவளை திரும்பிப் பார்க்க அவனின் டி-சர்டில் ஒய்யாரமாக உறங்கிக் கொண்டிருந்தாள் மது .
அக்கா வைட்ட அவ மினிட் என்று கூறிவிட்டு உள்ளே வர, அவன் பின்னோடு திவ்யாவும் ரம்யாவும் உள்ளே வந்து விட்டிருந்தனர்.
“ஐஐ மது அக்கா” என்றவர்களின் சத்தம் கேட்கவும் தான்,
கதவை தாளிடத வந்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டான் ரிஷி.
ஆண்டாள் அதிர்ந்து “ரிஷி என்னடா இது? நீயாடா இப்படி” என
ரிஷி “ஷ்ஷ்ஷ் பாட்டி மூச்சு சத்தம் வரக்கூடாது” என்று கூறவும் மற்றவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவசரமாக ஆங்காங்கே கிடந்த உடைகளை பொறுக்கி எடுத்தவன் போர்வையோடு சேர்த்து அவளை தூக்கிக்கொண்டு அவன் அறையில் நுழைய, பின்னோடு நுழைய இருந்த ரம்யாவை அற்புதாப் பிடித்துக் கொண்டாள்.
இவ்வளவு கலாட்டாவிலும் மது தூங்க,அவளை அவன் கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்கவும் தூக்கத்திலேயே “லவ் யூ ரிஷி” என்று மெதுவாக முனங்கி விட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள் மது.
மதுவின் “லவ் யூ” என்ற வார்த்தை அவனை உல்லாசமான மனநிலைக்கு கொண்டு சென்றது.
கைக்கு கிடைத்த டி-ஷர்டை எடுத்து மாட்டிக்கொண்டவன் சிரித்த முகமாகவே வெளியே வர, ஆண்டாளுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது.
ரிஷி “அக்கா கால் பண்ணிட்டு வந்து இருக்கலாமே” என்க
அற்புதா “நீ டூட்டில இருப்பேன்னு நினைச்சேன் ரிஷி” என்று முடிப்பதற்குள் ஆண்டாள் இடைப் புகுந்து “ஏன் நீ அடிக்கிற கூத்து கன்றாவியை எங்களுக்கு தெரியாம மறைக்கவா” என
ஏன் “பாட்டி இப்ப இங்க என்ன மறச்சாங்க, அவளும் நானும் லவ் பண்றோம். மேரேஜ் பண்ணிக்க போறோம். இதுல எங்க இருந்து கன்றாவிய கண்டு பிடிச்ச பாட்டி.
இது என் பர்சனல் பாட்டி சோ ப்ளீஸ் அமைதியா இருங்க” எனவும்
இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பரத் “கங்கிராட்ஸ் அண்ணா” என்று அவனை அனைத்து விடுவிக்க
ஆண்டாளிற்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது.
மேலும் ஆண்டாள் “இதற்கு நான் ஒத்துக்கவே மாட்டேன் ரிஷி” எனவும்
ரிஷி “உங்க கிட்ட யாரும் பர்மிஷன் கேட்கல பாட்டி இன்னும் சொல்லப் போனால் உங்களையும் உங்க மகன் அவரோட மனைவின்னு யாரையும் கல்யாணத்திற்கு அழைக்க கூட விருப்பம் இல்லை.
எங்க சொந்த அக்கா கல்யாணத்துல கூட கலந்துக்க முடியாத வலி இன்னும் இருக்கு பாட்டி.
உங்களுக்கும் புரியட்டுமே மனசுக்கு நெருக்கமானவங்க நல்லது கெட்டதுல கலந்துக்கலைன்னா எவ்வளவு வருத்தம் இருக்கும்ன்னு தெரியனும் பாட்டி” என்று விட்டு கலங்க
பரத் “விடு அண்ணா” என்று ரிஷியை சமாதானம் செய்தான்.
இதற்கு மேல் ரிஷி இடம் பேச முடியாது என்று உணர்ந்த ஆண்டாள் அற்புதாவிடம் “இதற்கு தான் அவனை உன் வீட்டுக்கு அழைச்சி கொண்டு வந்தியா இதெல்லாம் உனக்கு தெரியாம நடக்குற மாதிரி இல்லையே” என்றவர் மேலும் ஏதோ பேச போக அவரை இடைவெட்டிய
அற்புதா “தெரியுமே பாட்டி என் தம்பி லவ் பண்றது என் கிட்ட சொல்லிட்டு தான் பண்ணான். லவ் பண்றது ஒன்னும் பெரிய தப்பு இல்லையே பாட்டி.
ஏன் என்னோட லவ்வ மட்டும் அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ணி வச்ச உங்களுக்கு ரிஷி லவ் பண்றேன்னு சொன்னது ஏன் ஏத்துக்க முடியல” என்றவள் சிறிது இடைவெளி விட்டு
நான் சொல்லவா என அதுவரை அமைதி காத்த கமல் இப்போதுதான் உறவு ஒன்றாக கூடி இருக்கும் நிலையில் பழையதை பேச வேண்டாம் “அற்புதா பேசாதே” என்றவன் அவளை தோளோடு அணைத்து விடுவித்தான்.
அற்புதாவின் பேச்சை கேட்டதும் கேட்ட தாமரையின் குற்ற உணர்வு கூடிக் கொண்டே தான் போனது.
என்னதான் சுமுகமாக பேசினாலும் அற்புதாவின் காயங்கள் பெரிதல்லவா அது சீக்கிரம் மாறாது என்பதை உணர்ந்தாள் தாமரை.
ஆனாலும் இவர்கள் மூவரின் பிணைப்பும் பார்த்த தாமரைக்கு நிம்மதியாகத்தான் இருந்தது தாமரைக்கு.
தாமரைதான் ஆண்டாளுக்கு நிதர்சனத்தை புரிய வைத்து அவரின் வாயை அடைத்தாள்
ரிஷிக்கு மருத்துவமனையில் இருந்து அவசரம் என்று அழைப்பு வர மதுவை விட்டு செல்ல மனமே இல்லை.
அவசரமாக குளித்து கிளம்பி மதுவிற்கு குரல் வழி செய்தி அனுப்பியவன் அக்காவின் இடம் வந்து மதுவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, கமலிடம் இந்த எதிர்பாராத சங்கடத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டான்.
மதுரையில் இருந்து வந்த அலுப்பில் தாமரையும் ஆண்டாலும் பிள்ளைகள் அறையில் உறங்க,
ஹாலில் பாயை விரித்து படுத்த கமலுடன் வந்து படுத்த பரத் போனில் அவன் காதலியுடன் இங்கு நடந்த நிகழ்வுகளை குசு குசுவென்று இங்கு நடந்ததை ரீ-டெலிகாஸ் செய்து கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் அவன் பேச்சு காதலியிடம் கொஞ்சலில் இறங்க பக்கத்தில் படுத்திருந்த கமலுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது. ஏதாவது கேட்க போனால் “நீ எங்க அக்கா கிட்ட இப்படி தானே கடலை போட்டாய் “ என்று நேரடியாய் கேட்பான்
இந்த விஷயத்தில் ரிஷியே பரவாயில்லை. இந்த பரத் நேரடியாக கேட்கக் கூடியவன். மெதுவாக எழ பார்த்த கமலை “அட இருங்க மாம்ஸ்” என்று கமலின் மேலேயே காலை போட்டுக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான் பரத் .
ஒரு மணி வாக்கில் எழுந்த மது ரிஷி அனுப்பிய குரல்வழிச் செய்தியை கேட்டுவிட்டு, அவன் அறையிலேயே குளித்து முடித்து நேற்றைய உடை உடன் வெளியில் வந்தவள்
தயக்கத்துடன் கிச்சனில் இருந்த அற்புதாவிடம் வந்து “எப்போ வந்தீங்க அக்கா” என்றவள் திக்கி திணறி “சாரிக்கா” என
அற்புதா “ச்ச்ச்சு லூசு மாதிரி பேசாத மது. இது உன் வீடும் கூட தான். நீயும் எங்க வீட்டு பொண்ணு தான் உனக்கு இல்லாத உரிமையா? என்று வாஞ்சையுடன் கேட்க நெகழ்ந்து போன மது அற்புதாவை அனைத்து கன்னத்தில் முத்தம் வைக்கவும்
இவர்களின் சத்தத்தில் ஹாலில் இருந்து கிச்சன் வந்த பரத் “ஹலோ பேபி இது எங்க ரிஷி அண்ணா இல்ல, எங்க அக்கா தூக்கத்துல ஆளை மாத்தி கட்டிப் பிடிக்கிறீங்க” என்ற விட்டு நகைக்க
வெட்கத்தில் பெண்ணிற்கு முகம் சிவந்து போனது. அற்புதா மதுவிற்கு பரத்தை அறிமுகம் செய்து வைத்தாள்.
பரத்தின் அணுகு முறை ஒரு நல்ல நண்பன் போல உணர்ந்தாள் மது. அற்புதா பரத்தையும் மதுவையும் அமர்த்தி சாப்பிட வைத்த பின்பே விட்டாள் .
மது “சரிக்கா நான் மாமா வீட்டுக்கு போய் டிரஸ் மாத்திக்கிட்டு ஹாஸ்பிடல் போறேன்” என்க
பரத் “எதுல போறீங்க” என கேட்க
மது “வண்டி புக் பண்ணனும் நோ ஃபார்மாலிட்டீஸ் பரத் நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்றதற்கு
பரத் “ஓகே பேபி நான் ட்ராப் பண்றேன் நீ கிளம்பி வா” என்றவன்
தன் அண்ணனிடமும் அவளுடன் மருத்துவமனை போவது பற்றி குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.
போகும் வழியில் கடையில் நிறுத்தி குழந்தைக்கு தேவையான பொருட்களையும், மது எவ்வளவு மறுத்துப் குழந்தைக்கு ஒரு சவரனில் குட்டியாக ஒரு கழுத்துச் செயினும் வாங்கிக் கொண்டு சென்றான்.
போகும் போதே பேச்சு கொடுத்து மதுவின் குடும்ப விவரங்களை தெரிந்து கொண்டான்.
அவன் இங்கு வந்ததற்கான காரணத்தை முற்றிலும் தவிர்த்து விட்டு தான் இங்கு இருக்கிறான்.
பரத் ஒரு காட்டாற்று வெள்ளம் அவனுக்கு இந்த கட்டுக்குள் வாழும் வாழ்க்கை சலிப்பாக இருந்தது.
பணம் இருக்கு, வயதிருக்கும் போதே வாழ வேண்டும் என்று நினைப்பவன். அவன் நட்பு வட்டமும் மிகப்பெரியது மருத்துவமனையின் ஓயாத வேலைகள் தொடர் ஓட்டமும் அவனுக்கு சலிப்பாக இருந்தது.
யாரையும் நம்பி நிர்வாகப் பொறுப்பை தர முடியாது. இம்முறை எப்படியாவது ரிஷியை சம்மதிக்க வைக்க தான் இந்த மகளிர் குழுவுடன் வம்படியாக ஒட்டிக் கொண்டு சென்னை வந்தான்.
வந்தவனுக்கு ரிஷியின் காதலும் அவன் முகத்தில் தெரிந்த தேஜஸ்சும் அவனின் மகிழ்வை குளைக்க மரத்திற்கு மனம் இல்லாமல் போனது .
துணை வரும்