• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -14

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
சென்னை, கேசவமூர்த்தி சந்தன லட்சுமி இல்லம். பேருக்கு கூட இங்கே மகிழ்ச்சி என்பது இல்லாமல் போய்விட்டது.


என்று மது வந்து மானவ்வின் உண்மை முகத்தை அவ்வீட்டிற்கு வெளிச்சத்தை போட்டு காட்டினாளோ, அன்றிலிருந்து மானவ்விடம் மற்றவர்களின் பேச்சு குறைந்து விட்டிருந்தது.


அதிலும் பூர்விதா அமுலுவை சுத்தமாக மானவ்விடம் நெருங்க விடுவதில்லை.


என்னதான் இருந்தாலும் மது சஞ்சய் மானவ்வின் தங்கை என்பது மாறாது தானே. பெரியவர்களின் விதி வழி விளையாட்டில் தன் சொந்த ரத்தத்தை பழிவாங்க மானவ் செய்த பூர்விதாவிற்கு கொஞ்சமும் ஏற்க முடியவில்லை.



மது வந்து சென்ற பிறகு பூர்விதாவின் கெடுபிடி சஞ்சயிடம் அதிகம் இருந்தது. சஞ்சயின் கைவசம் இருந்த அவர்களின் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் கூட மானவ்வின் தலையீட்டை அவள் விரும்பவே இல்லை .


இன்னும் சொல்லப்போனால் அலுவலகத்திற்கு மானவ் வருவதைக் கூட பூர்விதா விரும்பவில்லை. சிறிது நாட்களாக சஞ்சய் உடன் அவளும் ஆபிஸ் செல்ல பழகி இருந்தாள்.

மானவ்விற்க்கு உண்டான பங்குகளை அவன் எண்ணவும் செய்து கொள்ளட்டும். ஆனால் தங்களது சொத்து விஷயத்தில் அவன் தலையீடு தேவையில்லை என்பதில் பூர்விதா உறுதியாக இருந்தால்


மது வைத்துவிட்டு சென்ற அந்த திருமண மண்டபத்தின் பத்திரம் இன்று வரையில் மானவ் தொட்டு கூட பார்க்கவில்லை.

அந்த சொத்திற்காக தந்தையிடம் கருத்து வேறுபாடு வந்தது. அதற்காக மதுவை வறுத்தியது என்று அவன் தன் இயல்பு மீறி செயல்பட்டான்.


அந்த சொத்து பத்திரம் இன்று அவன் வீட்டில் அவன் கண்ணெதிரே இருந்தாலும் அது அவன் கருத்தில் பதியவே இல்லை.


இரண்டு மூன்று முறை மேனேஜர் கந்தன் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க கேஷவ மூர்த்தியின் வீட்டிற்கு வந்து போக, தனபாக்கியமோ மானவ்வோ இருவருமே அந்த கணக்கு வழக்குகளை கேட்பதற்கு கூட முன்வரவில்லை. கடைசியாக சந்தன லட்சுமி தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சந்தனலஷ்மி இடம் தான் கடந்த மூன்று மாதங்களாக கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தனபாக்கியம் மகன் செய்த தவறுக்கு அவரிடம் பேசாமல் இருந்ததை போல பேரனிடம் அவரால் கடைபிடிக்க முடியவில்லை. வீட்டில் இருக்கும் அனைவரும் அவனை ஒதுக்க அவராளும் அவனை தவிர்க்க முடியவில்லை.


மதுவிற்கு மானவ் செய்ததை அவள் இடத்தில் இருந்து அமுலு குட்டியை வைத்து அவள் பேசிய அந்த நொடியே அவன் கர்வம் இருந்த இடம் தெரியாமல் உடைந்து போனது.


மனம் திருந்தி மனமார அவளிடம் மன்னிப்பு வேண்ட காத்திருந்தவனுக்கு சரியான வாய்ப்பு அமைந்தது.


இந்த வார கணக்கு வழக்குகளை மேனேஜர் கந்தன் கொண்டு வந்து சந்தான லட்சுமியிடம் ஒப்படைத்தவர், போகும் போது மதுவிற்கு திருமணம் முடிந்ததுஎன்று அவர் சொல்லித்தான் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும்.


கேட்டுக் கொண்டிருந்த தனபாக்கியத்திற்கு எங்கோ எதுவோ உள்ளுக்குள் உடைந்தது. என்ன இருந்தாலும் மகன் இல்லாத சமயத்தில் யாரும் இல்லா அந்த சின்னவளை தனியாக விட்டது தவறு என்று காலம் கடந்து உணர்ந்தவர்,


மருமகளிடமும் பேரப் பிள்ளைகளிடமும் கலந்து பேசி அவர் விருப்பத்தைக் கூற, அவர்களும் தனபாக்கியத்தின் விருப்பத்தை மதித்து அவருடன் மதுரை புறப்பட்டு சென்றனர்.



திருமணம் ஆகி ஒரு வாரம் ஆகி இருந்தது. ஆனாலும் மணமக்களான மதுவுக்கும் ரிஷிக்கும் ஓய்வில்லை. தினம் ஒரு உறவினர் வீட்டிற்கு விருந்து என்று மதுரையை சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.


வீட்டில் அனைவரும் தேநீர் அருந்திக்கொண்டு இருந்த ஒரு மாலைப் பொழுதில் பஷீரை தொடர்பு கொண்டு வந்து இறங்கியவர்களை மது சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.


கேள்வியாய் தன் மாமனின் முகம் பார்க்க அமைதியா இருக்க சொல்லி கண்களை மூடித் திறந்தார் பஷீர்.


வந்தவர்களை வீட்டின் மூத்த மருமகளாக பொதுவாக “வாங்க” என்றவள் ரிஷியை பார்க்க அவனும் அவர்களை “வாங்க” என்று கூறிவிட்டு மதுவின் கைகளை பிடித்து சென்று தனபாக்கியத்திடமும் சந்தன லட்சுமியிடமும் காலில் விழுந்து வணங்கினர்.


“நல்லா இருங்க” என்று வாழ்த்திய லக்ஷ்மி மதுவை அணைத்து விடுத்தார்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு சந்தன லட்சுமி பேச ஆரம்பித்தார் “எங்களை மன்னிச்சிடு மது உன்னோட அப்பா இல்லைன்னு ஆன பிறகு அவர் இடத்தில் இருந்து நாங்க உன்ன பார்த்து இருக்கணும்.

ஆனா ஏதோ ஒரு தயக்கம். தயக்கம்ன்னு என்று சொல்றதை விட யார் மேலேயோ இருந்த கோபம், அதனால உன்னை தனியா விட்டுட்டோம். எங்களை மன்னிச்சிடுமா” என்று சந்தன லட்சுமி கையெடுத்து மதுவை கும்பிட,


ஏதோ சம்பிரதாயத்திற்கு வந்திருப்பார்கள் என்று நினைத்திருந்த மது அவர் மன்னிப்பு கேட்பதில் பதறி “இருக்கட்டும்மா அப்பா அம்மா என்னை தனியா விட்டுட்டு போகலையே, இதோ அப்பா அம்மா ஸ்தானத்தில் இருக்கும் மாமா கிட்டயும் மாமிகிட்டயும் தான் என்னை ஒப்படைச்சிருக்காங்க” எனவும்


கேட்டுக் கொண்டிருந்த தனபாக்கியத்திற்கு வருத்தமாகத்தான் இருந்தது. என்ன இருந்தாலும் அவளும் பேத்தியல்லவா? அவளை விட்டிருக்கக் கூடாது அல்லவா என்பதை நினைத்தவர் தயங்காமல் மதுவிடம்


“என்னையும் மன்னிச்சிடு மது. என்னை மன்னிச்சு பாட்டின்னு ஒரு முறை கூப்பிடுமா உன் அப்பா கிட்ட கேட்க முடியாத மன்னிப்பையும் சேர்த்து உன்கிட்ட கேட்டுக்குறேன்” இன்று அந்த பெரியவர் அழுக



மதுவும் “விடுங்க பாட்டி பழையத பேச வேண்டாம்” என்க

தனபாக்கியம் மானவ்க்கு கண்ணை காட்ட, அவனும் ஒரு நொடி கூட தயங்காமல் மதுவிடம் வந்து “சாரி மது நான் உனக்கு செய்தது ரொம்ப பெரிய பாவம்.


தெரியாமல் செஞ்சேன்ன்னு சொல்ல மாட்டேன் தெரிஞ்சே செய்த தப்புதான் ஏதோ நான் எனும் ஆணவம் அப்போ என்ன அப்படி பேச வச்சு தப்பான வேலையையும் செய்துட்டேன் மன்னிச்சுக்கோ மது” என்றவன் அவள் முன் கையெடுத்து கும்பிட



“இப்பவும் நான் உனக்கு அதே மானவ் அண்ணா தான்டா நான் தான் தப்பு நீ அதே மது தான் என்னைக்கு உனக்கு என்னை மன்னிக்க தோணுதோ அப்போ அன்னைக்கு கூப்பிட்ட மாதிரி மானவ் அண்ணா சொல்லி கூப்பிடு மது அது போதும் எனக்கு” என்றான்.


மானவ்வின் பேச்சை கேட்டாலும் மதுவிடம் எந்த மாறுதலும் இல்லை. கல் போன்று இறுகி தான் நின்றாள் .

இது அவளது இயல்பு இல்லை இப்படி இருக்கிறாள் என்றால் அவள் மனதில் விழுந்த காயம் ஆற காலம் எடுக்கும் என்று அனைவருக்கும் புரிந்தது.


சூழ்நிலை இலகுவாக்கம் பொருட்டு சஞ்சையும் பூர்விதாவும் மண மக்களுக்கு வாழ்த்தி அவர்கள் கொண்டு வந்திருந்த பரிசை கொடுக்க, வாங்கவா என்பது போல மது பஷிரை பார்க்க அவன் கண்களால் மிரட்டி வாங்க சொன்னான்.

அவள் அந்த பரிசினை வாங்க கூட தன் மாமனின் சம்மதம் கேட்டு நின்றது இன்னும் இன்னும் அங்கிருந்தவர்களுக்கு அத்தனை மனத்தாங்களாக இருந்தது.


இருந்தாலும் உண்மை புரிய அவர்கள் அந்த கசப்பை கடந்து தான் வந்தாக வேண்டும் என்று அமைதியாக இருந்தனர்.


அமுலு வந்து மதுவிடம் “மது அத்தை” என்க


அவளும் குழந்தைக்கு இணையாக குனிந்து என்னடா “அம்முலு குட்டி” எனவும்




“நீங்க மனாவ் சித்தாவை மன்னிச்சா தான் நான் சித்து கிட்ட பேசணும்னு அம்மா சொல்லிட்டா, நீங்க சித்தா கிட்ட எப்போ பேசுவீங்க” என்றது அந்த சின்ன சிட்டு


இதற்கு என்ன பதில் சொல்வது என்பதைப் போல பூர்விதாவை பார்க்க அவளிடம் சற்றும் இளக்கம் இல்லை.



ஒரு பெண்ணாக இன்னொரு பெண்ணின் உணர்வை மதித்து நிற்பவளிடம் எதுவும் கேட்க மனம் இல்லாத மது



குழந்தையிடம் “எனக்கும் உன் சித்தப்பாவுக்கும் ஒரு சின்ன சண்டை அம்முலு குட்டி இன்னும் கொஞ்ச நாள் போனா பிறகு அவர்கிட்ட பேச வாய்ப்பிருக்கு…



அதோட இந்த மது அத்தைக்கு கோவத்தை இழுத்து பிடிக்க தெரியாது” என்றவள் சின்னவளை முத்தமிட நீ போய் உன் சித்து கூட பேசு, நான் அம்மாகிட்ட பேசுகிறேன் எனவும் வில்லிலிருந்து புறப்பட்ட அன்பாக அம்முலு தன் சித்தப்பனிடம் ஓட்டம் எடுத்தாள்.



மது சொன்ன அடுத்த நொடி அமுலு மானவ்விடம் தாவி ஓடி வர தன்னிடம் ஓடிவந்து தூக்கு சித்தா என்ற குழந்தையை தூக்காத மாணவ் பூர்விதாவை பார்க்க அவள் இலகவே இல்லை.


குழந்தை தன் சித்தப்பா தன்னை தூக்கவில்லையே என்று உதட்டைப் பிதுக்கவும், மது தான் பூர்விதாவிடம் என்னை வச்சி யாரோட உறவையும் தடுக்காதீங்க பூர்வீ அந்த மாதிரி பண்ணீங்கன்னா அது என்னை மனதளவில் பாதிக்கும்” என்று கூற


பூர்விகா மதுவிற்கும் எந்த பதிலையும் கூறவில்லை. அவள் அவளுடைய முடிவில் உறுதியாக இருக்கிறாள். தன் மகளையும் மானவ்விடம் போகாதே என்று தடுக்கவில்லை. மானவ்வையும் குழந்தையை தூக்க வேண்டாம் என்றும் தடுக்கவில்லை.


நீ என்ன செய்தாலும் மதுவிற்கு நீ செய்த பாவ செயல் எனக்கு பிடிக்கவில்லை என்பதை பூர்விதாவின் கடினமான முக பாவத்திலிருந்து அவனுக்கு உணர்த்திவிட்டாள்.


அண்ணியிடமிருந்து எந்த வார்த்தையும் வராததால் எதற்கும் கலங்காத மாவ்வின் கண்களும் உடைப்பெடுத்துக் கொண்டது. தன் செய்த தவறுக்காக அழுதானா?,


இல்லை இத்தனை மாதங்கள் தன் செல்ல மகளை பிரிந்து இருந்த பிரிவிற்கா அழுதானா? என்பது அவன் மனம் மட்டும் அறிந்த ரகசியம் .


மானவ்வின் கண்ணீர் தனபாக்கியத்தை மிகவும் பாதித்தது. தன் செல்லப் பேரன் செய்தது தவறு என்பதை உணர்ந்து ஒரு அன்பிற்காக இத்தனை பேரின் முன்னிலையில் கண்ணீர் வடிப்பது அவருக்கு மிகவும் இரக்கமாக இருந்தது.


இருந்தாலும் அவன் செய்த தவறுக்கு தண்டனை என்றே நினைத்து அமைதியாகிவிட்டார் தனபாக்கியம்.


மானவ்வும் தனபாக்கியமும் இன்னும் ஒரு முறை பஷீரிடம் சென்று, தாங்கள் கேசவமூர்த்தியின் இறப்பின் போது நடந்து கொண்ட அநாகரிகமான முறைக்கு வருந்தி மனதார மன்னிப்பு கேட்டனர் .


வந்தவர்களை ஒரு குறையும் இன்றி உபசரித்தனர் ரிஷியின் குடும்பத்தினர்.


மதுவிடம் விடைபெறும்போது லஷ்மி திருமண மண்டபத்தின் பத்திரத்தை மதுவின் கையில் கொடுக்க அதுவரையிலும் இலகுவாக இருந்த மது கடினமா “இல்லம்மா இது வேண்டாம்” என்கவும்


சந்தான லட்சுமி “வேணாம்னு சொல்லாத மது. உன் அப்பாவோட கனவு இத வேணாம்னு சொல்லிட்டு இருக்காதடா. இது எங்க கிட்ட இருந்தா உன் அப்பா ஆன்மா கூட எங்களை மன்னிக்காது.



அதோட உனக்கும் பிடிப்பு வேண்டும். இது உன் எதிர்காலத்துக்காக உன் எதிர்கால வாழ்க்கைக்காக ஒரு பிடிப்பு” என்றதும் அதுவரை அமைதியாக இருந்த பரத்



“எங்க அண்ணிக்கு இந்த சொத்து வாங்கறதும் வேணாம்னு சொல்றதும் அவங்க இஷ்டம் ஆன்ட்டி.


ஆனா அண்ணி ஒன்னும் வாழ்க்கையில பிடிப்பில்லாம இல்ல. அவங்க பிடிமானம் இதோ இங்கேயே இருக்கு ஆன்ட்டி.


அவங்க அப்பா அம்மா ஸ்தானத்தில் இவங்களும்” என்று பஷீர் சல்மாவை காட்டியவன்,


“ அவங்க குடும்பமா நாங்களும் அதோட இன்னும் கொஞ்சம் மாசத்துல அவங்களுக்கே அவங்களுக்கா வரப்போற ஒரு குட்டி பாப்பாவுமா அவங்களுடைய எல்லாம்முமா நாங்க இங்க இருக்கோம் ஆன்ட்டி” என்று விட்டு


“அதோட எதிர்காலத்திற்காக அவங்க ஏன் ஆன்ட்டி கவலை படணும்” என்றவன், ஒரு பிரபலமா மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு


“மதுரையில் நம்பர் ஒன் ஹாஸ்பிடல் அதுல அவங்க தான் மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர்” என்றது அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஆச்சர்யம்தான்.


இது ரிஷி மதுவிற்கே புதிய செய்திதான்.


மேலும் பரத் தனபாக்கியத்தை பார்த்துக் கொண்டே “மது அண்ணி எங்க வீட்டு பொண்ணு அவங்களை இனி யாரும் கீழ ஒரு வார்த்தையோ ஏன் ஒரு பார்வையோ பாக்குறது கூட நாங்க விரும்ப மாட்டோம்”என்று விட்டான்



மதுவை மானவ்வின் வீட்டில் தனபாக்கியம் பேசிய பேச்சை தன் தம்பி பரத்திடம் அன்றே மனத்தாங்களாக கூறி இருந்தான் ரிஷி. அதன் வெளிப்பாடு தான் இன்றைய பரத்தின் பேச்சு.



அதோடு இப்போது மதுவை விட்டு விட்டால் ரிஷியை பிடித்து வைக்கவே முடியாது என்பதை அறிந்து வைத்திருந்தான் பரத்.


பரத்தின் எண்ணம் அறிந்த ரிஷி பல்லை கடித்தான். பாம்பின் கால் பாம்பறியுமே.


தன் அக்காவுக்கு சரியான நேரத்தில் கிடைக்காத அன்பு தனக்கும் வேண்டாம். அவர்களிடமிருந்து விலகி நிற்க ரிஷி நினைக்க,


ஆனால் பரத்திற்கு தன்னை உண்மை அன்புடன் வளர்த்த தாயையும் விட மனமில்லை.


இத்தனை வருடங்கள் உடன் பிறந்தவர்களின் பிணைப்பையும் பாசத்தையும் விட்டு விலகியே இருந்தவன் இதற்கு மேலும் அவர்களிடம் இருந்து பிரிந்து இருக்கவும் விரும்பவில்லை.




ஆகையால் சிவசங்கரனிடம் அவனின் விருப்பத்தின் பேரில் ஷேர்களை எழுதி வாங்கி இருந்தான். இன்னும் சில நாட்கள் கழித்து அற்புதாவிடமும் ரிஷியிடமும் சொல்லி விடலாம் என்று இருந்தவன், இன்று மதுவின் தந்தை வீட்டினரின் வரவால் இன்றே கூறி விட்டான்.


தன்னைப் பார்த்து கடுப்பில் முறைத்த தன் அண்ணனைக் கண்டு மெலிதாக இதழ் பிரித்து சிரித்து கண்ணடித்து விட்டு அமைதியாகி விட்டான் பரத்.

துணை வரும் 💞
 
  • Love
Reactions: Kameswari