இதழ்:- 21
குட் மோர்னிங் பாஸ்.....
மலர்ந்த முகத்தில் புன்னகையுடன் தன்னெதிரே வந்து நின்ற வினியை நிமிர்ந்து பார்த்தவன் “ம்ம்ம்” என்றபடி பார்வையை விலக்கினான்.
ஹலோ பாஸ் காலை வணக்கம் சொன்னால் பதிலுக்கு காலை வணக்கம் சொல்லவேண்டும்.அது தான் மரியாதை என்றாள் சீண்டும் குரலில் பூவினி.
மரியாதையை எனக்கு நீ கற்றுத் தருகிறாயா?? என்று நிலவன் ஒரு மாதிரி கேட்கவும்
யார் கற்று தந்தாலும் அது சரியானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அப்படித் தான் சிறுவயதில் என் அத்தான் சொல்லி கொடுத்தார் பாஸ் என்றாள் வினி குறும்புடன்
நிலவன் அவளை முறைக்கவும்
வந்த சிரிப்பை அடக்கியபடி வாயை கைகளால் பொத்தி கண்களால் சிரித்தாள்.
அவளின் ஒவ்வொரு செயலிலும் அவனின் மனம் நழுவிக்கொண்டே போக சட்டென அதை மறைத்து கோபமெனும் ஆயுதத்தை கைகளில் எடுத்தவன்.இப்படி அரட்டை அடிக்க தான் இங்கே வந்தாயா?? என்றான் கடுமையாக.
வினி எதுவும் பேசாமல் மௌனமாக நிற்கவும் சில கோப்புகளை எடுத்து அவள் கையில் கொடுத்தவன் நாங்கள் என்ன தொழில் செய்கிறோம் என்றாவது உனக்கு தெரியுமா?? என்றான் மட்டம் தட்டும் குரலில்.
அந்த குரலில் லேசாக கோபம் வர ஏன் தெரியாது.எங்கள் குடும்பம் இப்போது மின்னியல் சாதனங்களை தயாரிக்கிறது.ஆரம்பத்தில் தாத்தா சிறிய அளவில் தொடங்கி மிக்ஸ்சி மட்டுமே தயாரித்தார்.பிறகு அப்பா மாமாமார் எல்லோரும் சேர்ந்து அதை சற்று பெரிய அளவில் விரிவாக்கம் செய்தனர்.அவர்கள் எல்லோரும் மின்னியல் சாதனங்களுக்குரிய உரிய வெளிப் பாகங்களை தயாரித்து அதற்குரிய மோட்டார்களை இன்னொரு தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தி விற்பனை செய்தனர்.
கடந்த நான்கு வருடங்களாக நீங்கள் தலையெடுத்ததன் பின் மோட்டார்களை உருவாக்கும் தொழிற்சாலையையும் தனியே உருவாக்கி உள்ளீர்கள்.அதனால் இப்போது நாம் தயாரிக்கும் மின்னியல் சாதனங்களுக்கு தேவையான எல்லா உதிரிப்பாகங்களையுமே நாமே தயாரித்து பொருத்தி விற்பனை செய்கிறோம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.இப்போது kjp ஓட மின்னியல் சாதனங்கள் தான் முதலிடத்தில் இருக்கிறது.
வெறும் எழுபத்தைந்து பேருடன் தாத்தா தொடங்கியது இப்போது kjp குழுமமா வளர்ந்திருக்குன்னா அதுக்கு அப்பா மாமாமார்கள் உடைய அயராத உழைப்பு தான் காரணம்.அதோட முக்கியமா சொல்லவேண்டிய இன்னொரு விடயம் நீங்கள் தலையெடுத்த இந்த நான்கு வருடங்களில்தான் kjp உடைய வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கு.மின்னியல் இயந்திர உலகில் kjp உடைய சாதனங்கள் முதல் இடத்தை பெற்றதும் நீங்கள் பொறுப்பேற்றதன் பிறகு தான்.என்று சொன்னதுடன் தனக்கு தெரிந்த அளவில் சில புள்ளி விபரங்களையும் கூறினாள்.
வினியின் பேச்சைக் கேட்ட நிலவன் வியப்புடன் புருவத்தை உயர்த்தினான்.அவன் விழிகளில் பாராட்டுடன் கூடிய மெச்சுதல் தெரிந்தது.ஆனால் வெளியே எதுவும் கூறாமல் சரி.இந்த கோப்புகளில் எங்கள் தொழில் சம்பந்தமான விவரங்கள் இருக்கிறது.படித்து பார்.என்றவன் தானும் ஒரு கோப்பை எடுத்து விரித்துவைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.
எதுவும் பேசாமல் அந்த அறையின் ஓரத்திலேயே குட்டியாய் தடுப்பு போடப்பட்டு ஒரு கணனியுடன் அவளுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்துக்கு சென்று அமர்ந்தாள் வினி.
அவள் மனம் பொருமியது பெரிய அபிநய சரஸ்வதன் கண்களிலேயே பாராட்டை தெரிவிக்கிறாராம்.ஏன் வாயை திறந்து பரவால்லையே வினி என்று சொன்னால் குறைந்தா போய்விடுவாராம்.ஹ்ம்ம்.. என்று மனதுள் அவனை திட்டியபடி கோப்பை பிரித்தாள்.
லேசாக விழிகளை உயர்த்தி அவள் முகபாவனையை கவனித்த நிலவனுக்கு சிரிப்பு வந்தது.பரவால்லையே வினி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே என்று பாராட்ட வேண்டுமாக்கும்.அவனுக்கு தெரியாதா அவளைப்பற்றி ஒவ்வொரு சிறு விடயத்திற்கும் மேடமுக்கு பாராட்டு அவசியம்.
முன்பு அவன் பாடம் சொல்லி கொடுக்கும் போது இப்படி தான் ஏதாவது கேள்விக்கு சரியாக பதிலை சொல்லிவிட்டு மகா பெருமையாய் ஒரு பார்வை பார்ப்பாள்.உடனே கெட்டிக்காரி சமத்து என்று பாராட்டாக ஏதாவது கூற வேண்டும்.அப்படி கூற தவறினால் மேடம் முகமே சோர்ந்துவிடும்.அந்த குணம் இன்னுமே மாறவில்லை போலும்.
இப்போது அவன் இருக்கும் நிலையில் அவளைப் பாராட்டுவது ஒன்று தான் குறையா?? ஆனாலும் பரவாயில்லை தொழிலில் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கிறது.சீக்கிரமே அனைத்தையும் பிடித்துவிடுவாள்.மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.
அன்று மாலை வழக்கம் போல பூவினியை அழைக்க மித்திரன் வந்திருந்தான்.இங்கு வந்த புதிதில் சாலையின் வாகன நெருக்கடியையும் இயல்பாக போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவதையும் கண்டு பயந்து காரை ஓட்ட தயங்கியவன் ஒரே வாரத்தில் அதற்கு பழகிவிட்டிருந்தான்.அவனிடம் சர்வதேச லைசன்ஸ் இருந்ததால் அதன் பிறகு தன் தேவைக்கும் தானே காரை ஒட்டி செல்வதுடன் வினியை காலையும் மாலையும் அழைத்துச் செல்லும் பொறுப்பையும் தானே ஏற்றிருந்தான்.
அன்றும் அப்படித் தான் வினியை அழைக்க வந்தவன் கீழே அவளைக் காணாது அவளுக்கு தொலைபேசியில் அழைத்தான்.
மித்திரனின் அழைப்பை பார்த்தவள் நிலவனிடம் சென்று பாஸ் மித்து வந்துவிட்டார் நான் செல்லவா?? என கேட்டாள்.
எதற்கென்று தெரியாமல் எரிச்சல் வர என்ன பாஸ் பாஸ் என்று கொள்ளைக்கூட்டத் தலைவனை அழைப்பது போல் அழைக்கிறாய்.ஒழுங்காக சார் என்று அழை என்று எரிந்து விழுந்தான் நிலவன்.
அவனை அமைதியாக பார்த்தவள் “சார்” என்று அழைத்தால் அது ரொம்ப அந்நியமாக தெரிகிறது.இங்கு பணி புரியும் எல்லோருக்குமே நாம் உறவென்று தெரியும்.அப்படி இருக்கையில் இந்த அழைப்பே நமக்கிடையில் இருக்கும் விலகலை காட்டிக் கொடுத்துவிடும்.தேவையில்லாமல் அடுத்தவர்கள் வாய்க்கு நாம் அவலாவதை நான் விரும்பவில்லை.அதற்காக தான் இந்த அழைப்பு.இது உங்களையும் என்னையும் பொறுத்தவரையில் ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே இருக்கும் அழைப்பு தான்.ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரையில் நான் கேலியாக உரிமையுடன் உங்களை அழைப்பதாக தோன்றும்.என்றாள்.
எதற்கென்றாலும் மறுக்க முடியாமல் ஏதேனும் காரணம் வைத்திருக்கிறாள்.நன்றாக பேசப்பழகி இருக்கிறாள் என்று கடுப்புடன் நினைத்தவனுக்கு பேசாமல் அத்தான் என்றே அழை என்று கூறிவிடலாமா??? என்று தோன்றியது.
பின்பு வேண்டாம் அவள் அழைப்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது போல் தோன்றும்.எப்படியோ அழைக்கட்டும்.என்று எண்ணி எதுவும் பேசாமல் தோளைக் குலுக்கியவன் சரி கிளம்பு என்றான்.
அவள் சிறு தலையசைப்புடன் விடைபெற்று செல்லவும் அவன் கால்கள் இயல்பாக ஜன்னல் அருகே சென்றது.யன்னல் திரையை லேசாக விலக்கி கீழே பார்த்தான்.எப்போதும் செய்வது தானே.பூவினி செல்லவும் மித்திரன் விரிந்த முறுவலுடன் காரைவிட்டிறங்கி அவளுக்கு கார் கதவை திறந்துவிட்டு அவள் ஏறி அமர்ந்ததும் கார் கதவை சாத்திவிட்டு அவள் புறம் குனிந்து ஏதோ கூறுவதும் தெரிந்தது.அதைக் கேட்டு வியப்புடன் புன்னகைத்தவள் பார்வை எதேச்சையாக மாடி நோக்கி உயர்வதைப் போல் தோன்றவும் சட்டென யன்னலில் இருந்து விலகினான்.
விட்டால் அவள் நடக்கும் ஒவ்வொரு அடிக்கும் பூ போட்டு கும்பிடுவான் போல.சரியான வழிஞ்சான்..எவ்வளவோ முயன்றும் மனதில் எரிச்சல் தோன்றுவதை தடுக்க முடியவில்லை நிலவனால்.
................................
தூக்கம் வராமல் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓட படுக்கையில் புரண்ட சாந்தா ஒருகட்டத்துக்கு மேல் எழுந்தே அமர்ந்துவிட்டார்.
சில நாட்களாகவே அவர் மனது ஏதோ குழம்பிக்கொண்டு தான் இருக்கிறது.அதற்கு மேலும் பொறுக்க முடியாது கணவனிடம் பேசினாலாவது மனக்குழப்பம் தீருமோ என்று தோன்ற கணவனை அழைத்தார்.
என்னங்க.....
.............
என்னங்க.......
ம்ம் ..என்ன சாந்தா தூங்கலையா??
ப்ச் தூக்கம் வரவில்லைங்க.
ஏன்மா நன்றாக சாப்பிடவில்லையா?? அல்லது உடம்பு ஏதேனும் செய்கிறதா??
ப்ச்..அதெல்லாம் ஒன்னுமில்லைங்க மனசு தான் சரி இல்லை.
அதுவரை பார்த்துக்கொண்டிருந்த கோப்பை மூடி வைத்து விட்டு மனைவி அருகில் வந்து அமர்ந்த ஜெகநாதன் மனைவியின் கைகளைப் பற்றி ஏன் சாந்தா மனசு சரி இல்லை??? என்ன கவலை உனக்கு என்றார் கனிவுடன்.
என் கவலை எல்லாம் நம்ம பையனைப் பற்றித் தாங்க.
யார் நம்ம நிலவனைப் பற்றியா?? அவனுக்கு என்ன குறை சாந்தா.அவன் எவ்வளவு திறமைசாலி.நம்ம kjp உடைய பெயர் இன்று இவ்வளவு புகழ் பெற்றிருக்கிறது என்றால் எல்லாம் அவனால் தான்.
அது தாங்க என் கவலையே.நீங்கள் தொழில் தொழில் என்று இருப்பது போல் தான் அவனும் இருக்கிறான்.அவனுக்கு தொழிலைத் தவிர வேறு சிந்தனையே இல்லை.
அது சந்தோசப்பட வேண்டிய விடயம் தானே சாந்தா.நம்ம பையன் தான் நம்ம தொழில் வட்ட இளைய தலைமுறையின் நாயகன் தெரியுமா.இப்படி ஒரு திறமையான பையன் கிடைக்க நீ கொடுத்துவைத்திருக்க வேண்டும் ஜெகா என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
பேச்சு வேகத்தில் சொல்லிக்கொண்டே போன ஜெகநாதன் சட்டென பேச்சை நிறுத்தினார்.அவர் முகத்தில் ஒரு ஆழ்ந்த சோகம் தோன்றி மறைந்தது.அதை உணர்ந்த சாந்தாவின் கண்களும் கலங்கியது.
பயமா இருக்குங்க.நம்ம பையன் நம்மகிட்ட இருந்து விலகி போயிடுவானோ என்று.நீங்க அவன் தொழிலில் முன்னேறுவதை தான் பாக்குறீங்க.ஆனா எனக்கு அவனோட அந்த முன்னேற்றம் தெரியலங்க.அந்த முன்னேற்றத்துக்கு பின்னாடி உள்ள அவனோட அசாத்தியமான வெறித்தனமான உழைப்பு தான் தெரியுது.அவன் முகத்தில் முன்பிருந்த மகிழ்ச்சி துள்ளல் எதுவுமே இல்லைங்க.
கடந்த சில வருசங்களா தான் அவனிடம் இந்த மாற்றங்கள்.முன்பு போல் என் மடியில் படுத்து உறங்குவதற்கு தமிழோடு சண்டை போடுவதில்லை.அவசரமாக கிளம்புகையில் அம்மா ஊட்டிவிடுங்கன்னு சொல்லுவதில்லை.நான் ஏதாவது சொன்னால் எதிர்த்து வாயாடுவதில்லை.
ஏன் சாந்தா அவன் உன்னிடம் பாசமாக இருப்பதில்லை என்று சொல்லுகிறாயா??
ச்சே ச்சே அவனின் பாசத்தில் நான் குறை சொல்லவில்லைங்க.என் பிள்ளை எப்போதும் போல் என் மேல் பாசமாகத்தான் இருக்கிறான்.எனக்கு ஒன்று என்றால் தாங்க மாட்டான்.அன்று கூட லேசாக முட்டி வலிக்கிறது என்று தமிழிடம் கூறி தைலம் தேய்ச்சு விடச் சொன்னேன்.அதைக் கவனித்தவன் மறு நாளே மருத்துவரிடம் பதிந்துவிட்டு வந்து என்னை விடாப்பிடியாக அழைத்துச் சென்றுவிட்டான்.
அவன் பாசத்தில் குறை இல்லைங்க.ஆனால் அவன் நடத்தையில் ஏதோ விலகல் தெரிகிறது.முன்பு போல் உரிமையாக எதையும் பேசவோ கேட்கவோ மாட்டேனென்கிறான்.யாரோ போல் நடந்துகொள்வது போல் தோன்றுகிறதுங்க.
அட இவ்வளவு தானா?? சாந்தா நீ எப்போதுமே உன் பையன் உன்னிடம் சிறுபிள்ளையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்.ஆனால் பையன்கள் எப்போதுமே இப்படி ஒட்டுதலாக இருக்க மாட்டார்கள் சாந்தா.அவர்கள் நெஞ்சில் பாசம் இருக்கும்.ஆனால் பெண்பிள்ளைகள் போல் எப்போதும் அம்மாவுடன் ஒட்டி பழக மாட்டார்கள்.குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்கள் பெற்றவர்களை விட்டு சற்று எட்டி தான் நிற்பார்கள்.
ஹ்ம்ம்..அது என்னவோ தெரியவில்லைங்க.ஆனால் என் மனசே சரியில்லை.நம்ம பிள்ளையிடம் யாராவது எதையாவது கூறி இருப்பார்களோ என்று ஒரு சலனம் நெஞ்சை அரித்துக்கொண்டே இருக்கிறது.
சும்மா கற்பனை பண்ணாதே சாந்தா.நம்ம பையனைப் பற்றிய விடயம் இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது.இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருபோதும் அதை யாரிடமும் சொல்ல மாட்டார்கள்.அவ்வளவு சின்னப் புத்தி இங்கிருக்கும் யாருக்குமே இல்லை.
அய்யய்யோ அது எனக்கும் தெரியுங்க.நம்ம குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி எனக்கு தெரியாதா???
பின்னே எதற்கு தேவை இல்லாமல் கண்டதையும் ஜோசித்து மனதை குழப்புகிறாய்.நீ நினைப்பது போல் எதுவும் நடக்காது.நம்ம பையன் எப்போதுமே நம்ம பையன் தான்.
ஹ்ம்ம்....என்னவோங்க.வினி வந்தவுடன் இவன் சரியாகிவிடுவான்.இரண்டும் நல்ல ஓட்டாக இருந்துவிட்டு அவள் பிரிந்ததும் தான் அவன் பேச்சு குறைந்து விட்டது.அவனிடம் இந்த மாற்றங்கள்.அவள் வந்தவுடன் இயல்பாகிவிடுவான் என்று தான் இத்தனை நாளும் நினைத்திருந்தேன்.ஆனால் வினி வந்த பின்னும் அவன் நடத்தையில் மாறுதலைக் காணோம்.அதோடு வினியுடன் கூட அவன் முன்பு போல் பேசுவதில்லை.அவர்கள் இருவருக்குள்ளும் ஏதேனும் பிரச்சனையாய் இருக்குமோ என்றும் தோன்றுதுங்க.
கவலையுடன் பேசிக்கொண்டிருக்கும் சாந்தாவைப் பார்த்து வாய்விட்டு சிரித்த ஜெகநாதன்.
ஹையோ சாந்தா ...ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டுமா உனக்கு??? வினி இப்போது தொழில் பயிற்சி யாரிடம் பெறுகிறாள் தெரியுமா?? நிலவனிடம் தான்.நீ நினைப்பது போல் அவர்களுக்குள் பிரச்சனை என்றால் அவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா???
அவர்களுக்கும் வயதாகுதில்லையா? அதற்கேற்ற பக்குவத்துடன் நடந்துகொள்கிறார்கள்.அவர்கள் ஒன்றும் இன்னும் குழந்தைகள் இல்லை சாந்தா.நிலவனும் இயல்பாகத்தான் இருக்கிறான்.என்ன அவன் கவனம் சற்று அதிகமாகவே தொழிலில் செல்கிறது.அவ்வளவு தான்.மற்றும்படி நீ நினைப்பது போல் கவலைப்பட எதுவுமில்லை மா.
சும்மா கண்டதையும் யோசித்து மனதைக் குழப்பாமல் அமைதியாக தூங்குடா.என்று ஆறுதலாக பேசி மனைவியின் தலையை வருடிவிட்டார்.
நீர் எடுப்பதற்காக கீழே வந்த நிலவனின் காதில் அவர்களின் முழுப்பேச்சும் விழுந்துவிட அதிர்ந்து நின்றான்.
யாருக்கும் வருத்தம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எவ்வளவோ செய்தும் தன்னை மீறி தன்னுடைய சில செயல்கள் தாயை வருத்தப்படுத்தி இருப்பது புரிந்தது.நல்லவேளை தந்தைக்கு எதுவும் சந்தேகம் தோன்றவில்லை.அவர் அனைத்துக்கும் இயல்பாக விளக்கம் கொடுத்து தாயை சமாதானப்படுத்திவிட்டார்.இதே சந்தேகம் அவருக்கும் தோன்றியிருந்தால்!!!!!!!!!!! நல்லவேளை அப்படி எதுவும் தோன்றவில்லை.இனி தோன்றவும் கூடாது.
தனக்கு உண்மை தெரியும் என்பது தெரிந்தால் தன் மேல் மிகுந்த அன்பைச் சொரியும் அந்த குடும்பத்தவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று தெரிந்து தான் அவன் தனக்கு உண்மை தெரியும் என்பதை மறைத்து எப்போதும் போல இயல்பாக இருக்க முயன்றான்.ஏன் இதுவரை முன்பு போல் இயல்பாகவே நடந்துகொண்டதாகத்தான் நினைத்தான்.
ஆனால் தாயின் பேச்சைக் கேட்டபோது தான் தன்னையறியாமலே தன்னிடம் தோன்றிய மாற்றங்கள் தாயின் மனதை வருத்தப்படுத்தியுள்ளது என்பது தெரிகிறது.வினி சொன்னது சரி தான் யாரும் நம்மை கவனிக்கவில்லை என்று நினைத்திருக்க தாய்மார்கள் கவனித்திருக்கிறார்கள்.மற்றவர்களும் கவனித்து ஏதேனும் கேட்கும் முன் அதை சீர் செய்யவேண்டும்.வினி என்னிடம் பயிற்சி பெற வந்ததும் நல்லது தான்.
ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன் இனி சற்று கவனமாக இருக்க வேண்டும் என தனக்குள் முடிவெடுத்தான்.