• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 23

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,056
479
113
Tirupur
இதழ்:- 23



மறுநாள் காலையில் அலுவலகத்தில் நுழைந்த வினியை நிலவனின் கோப முகமே எதிர்கொண்டது.முந்தைய நாளின் சுவடுகள் எதுவும் அவன் முகத்தில் இல்லை.



குட்மோர்னிங் பாஸ் என்றவளை முறைத்தவன்



எத்தனை மணி என்றான்.கடுமையாக



ஏன் உங்கள் கடிகாரம் ஓடவில்லையா பாஸ்.நேரம் ஒன்பது முப்பது.



நான் ஒன்பது மணிக்கே வந்துவிட்டேன்.



ஒ...



என்ன ஒ?? நான் ஒன்றும் உனக்கு கதை சொல்லவில்லை.ஏன் தாமதம்??? காரணம் வேண்டும்??



ரொம்பதான் பாஸ் ஆகிறான்யா.மனதுக்குள்ளே முணுமுணுத்தவள் sorry என்றாள் வெளியே.



அப்போதும் அவன் கோபம் குறையவில்லை

நான் கேட்டது காரணம்???



அது.........அது மித்துவுடன் வரும் வழியில் அவனுக்கு ஏதோ சிறு வேலை இருந்தது.அதை முடித்துக்கொண்டு வர தாமதம் ஆகிவிட்டது பாஸ்.



நிலவனின் முகம் இறுகியது. ஆமாம் நீ ஏன் அவனுடன் வருகிறாய்??? உனக்கு தனியே வர முடியாதா?? மனதில் நினைத்தது அவனை மீறி வார்த்தையாக கொட்டியது.



நான் மித்துவுடன் வருவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை பாஸ்???



விழி பார்த்து வினவியவளின் கேள்வியில் நிலவனுக்கு உள்ளே நிரடியது.அவனுக்கு பிரச்சினை தான்.வினி மித்திரனுடன் நெருங்கி பழகுவது பிடிக்கவில்லைத் தான்.மித்திரன் அவளிடம் உரிமை கொண்டாடுவதை பார்க்கும் போது உள்ளே வலிக்கிறது தான்.ஆனால் இதை எல்லாம் வெளியே சொல்ல முடியாதே. ஒரு கணம் மௌனம் சாதித்தவன் பின்பு



எனக்கென்ன பிரச்சினை.நீ யாருடன் வந்தாலும் போனாலும் எனக்கு ஒன்றுமில்லை.ஆனால் அலுவலகத்திற்கு நேரத்திற்கு வர வேண்டும்.தொழில் மட்டும் பழகினால் போதாது அதனுடன் இன்னும் நிறைய விடயங்கள் பழக வேண்டும்.அதில் முக்கியமானது நேரம் தவறாமை.எனக்கு நேரம் தவறினால் பிடிக்காது.இது தான் முதலும் கடைசியுமாய் இருக்க வேண்டும்.என்று கறாராய் சொன்னவன் சரி வா என்றபடி எழுந்தான்.



எங்கே பாஸ்???



ஏன் எங்கே என்று சொன்னால் தான் வருவாயா?? சுள்ளென்று கேட்டவனின் கோபத்தைப் பார்த்து புருவம் சுளித்தவள் எதுவும் பேசாமல் எழுந்து கூடச் சென்றாள்.



அன்று நிலவன் அவளை அவர்களின் தொழிற்சாலைகளில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான்.போகும் வழி முழுதும் இருவருமே எதுவும் பேசவில்லை.அன்று தான் வினி முதன் முதலாக அவனுடன் தனியே பயணம் செய்கிறாள்.அவள் மனம் அந்த மௌனமான கார் பயணத்தை ரசித்துக்கொண்டிருந்தது.அருகில் திரும்பி பார்த்தாள் அவன் எப்போதும் போல் இறுக்கமான முகத்துடன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.இந்த இறுக்கமான முகத்திரையின் பின்பு இவன் எதை மறைக்க நினைக்கிறான்???



அவளுக்கு முந்தைய நாள் தான் கண்ட அவனின் தவிப்பு நிறைந்த முகமும் விழிகளும் நினைவு வந்தது.அந்த தவிப்பு பொய்யோ என்பது போல் இறுகியிருந்த அவன் முகத்தைக் கண்டவளுக்கு பெருமூச்சு தான் வந்தது.



அவளின் மூச்சு சத்தத்தில் அவளைத் திரும்பி நோக்கியவன் எதுவும் பேசாமல் காரின் வேகத்தை குறைத்து தொழிற்சாலைக்குள் காரைச் செலுத்தினான்.பூவினியும் எதுவும் பேசாமல் எதிரே தெரிந்த தொழிற்சாலையைப் பார்த்தாள்.



உள்ளே சென்று காரை நிறுத்தியவன் வா என அவளை அழைத்துச் சென்றான்.வினி அவனைப் பின் தொடர்ந்தாள்.



அன்று தான் முதன் முதலாக அங்கு செல்கிறாள்.அந்த தொழிற்சாலையின் பிரமாண்டத்தில் பூவினி திகைத்தாள்.அது மோட்டார்களை தயாரிக்கும் தொழிற்சாலை.அவளுக்கு தெரியும் அது முழுக்க முழுக்க நிலவனின் முயற்சியில் உருவானது என்று.



அங்கு சென்றதும் நிலவனின் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் காணாமல் போனது.உற்சாகத்துடன் அதன் ஒவ்வொரு பகுதியாக அவளை அழைத்துச் சென்று அங்கு நடக்கும் செயற்பாடுகளை விவரித்தான்.அங்கு வேலை செய்பவர்களுடன் இன்முகத்துடன் சில வார்த்தை பேசி அவர்களைத் தட்டிக் கொடுத்தான்.அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும் குரலில் தெரிந்த உற்சாகத்தையும் கண்டவளுக்கு அவனுக்கு தொழில் மேல் உள்ள ஈர்ப்பு புரிந்தது.



அந்த தொழிற்சாலையின் பிரமாண்டத்தையும் அது இயங்கும் நேர்த்தியையும் கண்டவளுக்கு பெருமையாக இருந்தது.இதை உருவாக்கியவன் அவளின் அத்தான் அல்லவோ!! பிரமிப்புடனே அதைச் சுற்றி வந்தவள் உற்சாகத்துடன் அவன் கூறியவற்றையும் அக்கறையுடன் கேட்டாள்.அந்த இயந்திரங்கள் குறித்தும் மோட்டார் தயாரிப்பு குறித்தும் தனக்கு தேவையான விபரங்களையும் அக்கறையுடன் கேட்டு குறித்துக்கொண்டாள்.அவள் கேட்ட விபரங்களை உற்சாகமாகவே வழங்கினான் நிலவன்.



அந்த தொழிற்சாலையை பார்த்து முடிக்கவும் மணி இரண்டாகி இருந்தது.பசி வயிற்றைக் கிள்ளியது.வரும் போது எங்கே செல்கிறோம் என்று தெரியாததனால் வினி உணவினை எடுத்துவர மறந்திருந்தாள்.



இப்போது என்ன செய்வது.ஏனோ நிலவனிடம் கேட்கவும் அவளுக்கு தயக்கமாக இருந்தது.ஹ்ம்ம்...அலுவலகம் போய்த்தான் சாப்பிட வேண்டும்.எப்படியும் அதற்கு மூன்றரை ஆகிவிடும் அதுவரை பசி தாங்க வேண்டும் என்று எண்ணியவள்



கிளம்பலாமா பாஸ் என்றாள்.



அதுவரை தொழில் சம்பந்தமாக பேசியதில் இருவருமே சற்று இலகுவாக பேசும் மனநிலையில் இருந்தனர்.



இப்போது கிளம்ப முடியாது வினி.கொஞ்சம் வேலை இருக்கிறது மாலை தான் கிளம்பலாம்.அதுவரை இப்போது பார்த்து கேட்ட விவரங்களை உன் மடி கணனியில் பதிவேற்றம் செய்து வை என்றவன்.அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை அழைத்து மேடமுக்கு என்னுடைய அறையைக் காட்டுங்கள் என்றான்.



அடப்பாவி!!!!!! உனக்கு தொழில் என்றால் பசி தூக்கம் மறந்துவிடும் சரி தான்.அதற்காக என்னை ஏன்டா பட்டினி போடுகிறாய்?? சும்மாவே நான் பசி தாங்க மாட்டேனே!! மனதில் புலம்பியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



என்ன வினி??? ஏதாவது வேண்டுமா??



இல்லை ஒன்றுமில்லை.காரில் தண்ணீர்ப் போத்தல் இருக்கிறது அது வேணும்.



சரி...நான் கொடுத்தனுப்புகிறேன்.நீ போ.



ம்ம்..



சோர்ந்த நடையுடன் செல்லும் வினியைப் பார்த்தவன்.பக்கத்தில் நின்ற ஒருவனை அழைத்து ஏதோ சொல்லிவிட்டு மறு பக்கமாக மீண்டும் தொழிற்சாலைக்குள் சென்றான்.



அந்த தொழிற்சாலையின் ஒரு மூலையில் இருந்த நிலவனின் அறைக்குள் சென்ற வினி.இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.அலுவலக அறையைப் போலவே இந்த அறையும் பெரியதாக சுத்தமாக இருந்தது.



மடிகணணியை எடுத்து மேசையில் வைத்தவள்.அதை உயிர்ப்பித்து வேலையை செய்ய ஆரம்பித்தாள்.ஆரம்பித்தாள் அவ்வளவு தான் பசியில் கணணி திரையே கலங்கலாக தெரிய அதை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு மேசையில் தலையைக் கவிழ்த்து படுத்துக்கொண்டாள்.



சற்று நேரத்திலேயே கதவு திறக்கும் ஒலி கேட்டது.வினி தலையை நிமிர்த்தவில்லை.அதற்கும் தெம்பு வேண்டுமே.



வினி..வினி..நிலவனின் குரல் தான்.



மெல்ல தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.நிலவன் தான்.கையில் ஏதோ பொட்டலத்துடன் நின்றிருந்தான்.



இவள் நிமிர்ந்து பார்க்கவும்.மேசையை சற்று ஒதுக்கு என்றவன் அவள் முன்பு உணவுகளைப் பரப்பினான்.



சாப்பிடு என்ற சொல் கூட வினிக்கு அதற்கு மேல் தேவைப் படவில்லை.மளமளவென காலி செய்யத் தொடங்கியவள் சற்று பசி அடங்கவும் தான் எதிரில் அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து நோக்கி நீங்கள் சாப்பிடவில்லையா?? என்று வினவினாள்.



அதுவரை கண்ணில் லேசான சிரிப்புடன் அவள் உண்ணும் வேகத்தைப் பார்த்தபடி இருந்தவன் அவள் வினவியதும் இதோ என்றபடி பார்சலைப் பிரித்தான்.கூடவே பசித்தால் சொல்வதற்கு என்ன?? என்றான் சற்று கண்டிப்பான குரலில்.



அவன் கண்களை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் உணவில் கவனத்தைச் செலுத்தினாள்.என்ன பார்வை அது?? உன்னிடம் அதை சொல்லுமளவு நெருக்கம் நமக்குள் இப்போது இருக்கிறதா?? என்று கேள்வி கேட்கும் பார்வை.அவனால் அதற்கு என்ன பதிலைக் கூறமுடியும்???



அதன் பின் இருவருமே எதுவும் பேசவில்லை.முதலில் சாப்பிட்டு முடித்த வினியின் தட்டில் சிறிதளவு உணவு மீதம் இருந்தது.அதைக் கவனித்த நிலவன் சட்டென நிமிர்ந்து வினியை பார்த்தான்.அவன் பார்வையில் என்ன இருந்தது.வியப்பா?? ஆச்சரியமா?? புரியவில்லை ஆனால் அவன் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது.



சிறுவயதில் இருந்தே நிலவனுக்கு ஒரு பழக்கம். எப்போதும் உணவு உண்ணும் முன்பு ஒரு கைப்பிடி உணவை எடுத்து தட்டின் ஒரு மூலையில் வைத்துவிடுவான்.எவ்வளவு பசியுடன் சாப்பிட அமர்ந்தாலும் அவனின் இந்த பழக்கம் மாறியதில்லை.உணவை முடித்த பின் அந்த ஒரு பிடி உணவை தோட்டத்தில் ஒரு தட்டில் சென்று போடுவான்.காகமோ அணிலோ குருவியோ எதுவோ ஒன்றிற்கு அது உணவாகும்.



சிறுவயதில் இருந்தே அவனின் பின்னே சுற்றி அவனின் பழக்கவழக்கங்களை பின்பற்றும் வினி இதையும் கற்றுக்கொண்டாள்.அது நிலவனுக்கும் தெரியும்.அவனை விட்டு பிரிந்திருந்த காலத்தில் கூட அவளின் அந்த வழக்கம் மாறியதில்லை.இன்றும் அதே வழக்கம் தொடர அதைக் கண்ணுற்றவனின் பார்வை வினியைத் துளைத்தது.



எங்கே இதை வைத்தே தன் மனதில் அவன் இருப்பதை அறிந்துவிடுவானோ. என்று பயந்தவள் வெளியே அலட்சியமாக தோளைக்குலுக்கி நல்லவிடயங்களை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாலும் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லையே என்றாள்.எங்கோ பார்த்தபடி



சட்டென அவன் முகத்தில் சிறு ஏமாற்றத்தின் சாயல் வந்துபோக எதுவும் பேசாமல் அவள் பாணியிலேயே தோளைக்குலுக்கிவிட்டு எழுந்தான்.



அதன் பின் ஐஸ்கிரீம் வந்தது.அவனுக்கு பட்டர் ஸ்காட்ச் பிடிக்கும்.அவளுக்கு சொக்கலேட் தான் பிடிக்கும்.அவளுக்கு பிடித்த சொக்கலேட் கிறீம் வந்தது.எதுவும் பேசாமல் ஐஸ்கிரீமைச் சுவைத்தாள்.ஆக அவளின் விருப்பங்களை கூட அவன் மறக்கவில்லை.மனதுக்குள் சாரல் அடித்தது.



அன்று தொழிற்சாலையில் இருந்து திரும்ப மிகவும் தாமதம் ஆகிவிட்டது.செல்லும் வழியிலேயே மித்திரனிடம் இருந்து வினிக்கு அழைப்பு வந்தது. அப்போதுதான் தான் வர தாமதமாகும் என்ற விடயத்தை மித்திரனிடம் தெரிவிக்காமல் விட்டது நினைவு வர.தலையில் தட்டியபடி தொலைபேசியை உயிர்ப்பித்தவள்



சாரி மித்து நான் பாஸ் உடன் தொழிற்சாலை வந்துவிட்டேன்.இப்போது தான் அலுவலகத்துக்கு வந்துகொண்டு இருக்கிறேன்.உனக்கு சொல்ல மறந்துவிட்டேன்.ரொம்ப சாரி டா.என்றாள்.



மறுபுறம் மித்து போடி எருமை.இதை முதலே சொல்வதற்கென்ன? என்றவன் கூடவே அதுசரி உன் அத்தான் அருகில் இருந்தால் தான் உலகமே உனக்கு மறந்துவிடுமே அப்புறம் எங்கே என் நியாபகம் உனக்கு வரப்போகிறது என்றான் கேலியாக.



அவன் கேலியில் முகம் லேசாக சிவக்க அப்படிலாம் ஒன்றுமில்லை என்றபடி நிலவனைத் திரும்பி பார்த்தாள்.அவன் முகத்தில் அதுவரை இருந்த இளக்கம் மாறி மீண்டும் இறுகி இருந்தது.



சாருக்கு நான் வேண்டாமாம்.ஆனால் நான் உரிமையுடன் இன்னொருத்தருடன் பழகுவதும் பிடிக்கவில்லையாம்.இதழ்க்கடையில் குட்டியாய் ஒரு சிரிப்பு மலர



கொஞ்சம் இரு மித்து என்றவள்.நிலவனிடம் திரும்பி பாஸ் எத்தனை மணிக்கு நாம் அலுவலகத்திற்கு போய் சேர்வோம்??? என்று கேட்டாள்.



ஒரு கணம் மௌனமாக இருந்தவன் பின் சரியாக சொல்ல முடியாது டிராபிக்கைப் பொறுத்து ஏழில் இருந்து எட்டு ஆகலாம் என்றான்.



ஒ என்றவள் மித்து இன்னும் ஒன்று ஒன்றரை மணிநேரம் ஆகும் போல இருக்குடா.அதுவரை நீ என்ன செய்யப்போகிறாய்?? வீட்டுக்கு போய்விட்டு மறுபடியும் வருகிறாயா??? என்று வினவியவளின் கையில் இருந்து சட்டென தொலைபேசியைப் பறித்தவன்



ஹலோ மித்திரன் நான் நிலவன் பேசுகிறேன்.நீங்கள் கிளம்புங்கள் நானும் வீட்டுக்கு தானே வருகிறேன் நானே வினியை அழைத்து வருகிறேன் என்றான் குரலில் ஒரு அழுத்தத்துடன்.



மறுமுனையில் சிலநொடி மௌனம் நிலவியது.பின்பு சரி நிலவன்.வினியை கவனமாக அழைத்து வாருங்கள்.என்றதுடன் தொலைபேசியை அணைத்தான் மித்திரன்.



என் வினியைப் பரத்துக்க எனக்கு தெரியும்.வந்துட்டான் எங்கிருந்தோ!! மனசுக்குள் பொருமிக்கொண்டே வினியிடம் திரும்பி தொலைபேசியை நீட்டினான்.அவன் கையில் இருந்து தொலைபேசியை பறித்ததுமே திகைத்தவள் அவன் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் குதித்தாள். நீயாகவே என்னிடம் வந்து உன் காதலைச் சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை கண்ணா!! மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.



அது எப்போதுமே நடக்க போவதில்லை என்று அவளுக்கு தெரியவில்லை.