• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 24

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur
இதழ்:- 24



அன்று இரவு “ஏய் எருமை come to vc “ என்று கைபேசியின் திரையில் ஒளிர்ந்த செய்தியை படித்த பூவினி தலையில் அடித்தபடி தனது கணணியை உயிர்ப்பித்தாள்.



அதற்காகவே காத்திருந்தது போல் சிந்துவிடம் இருந்து அழைப்பு வந்தது.



அழைத்துவிட்டு எதுவும் பேசாமல் உர்ர் என்று அவளைப் பார்த்தபடி இருந்த சிந்துவைக் கண்டதும் சிரிப்பு வந்தது பூவினிக்கு.



தனது இரண்டு காதுகளையும் பற்றியபடி sorry சிந்து என்றாள் சிரிப்புடன்.



அவளின் சிரிப்பைக் கண்டதும் கோபம் பொங்க உனக்கு என்னைப் பார்த்தால் சிரிப்பாய் இருக்கிறதா??? ஒரு வாரம் சரியாக ஒரு வாரம் call message எதுவுமே இல்லை.அங்கு போனதும் என்னை மறந்துவிட்டாய் இல்ல என்றாள் சிந்து.



அவள் கோபத்தில் இருந்த பாசத்தை புரிந்துகொண்ட பூவினி ஏய் கழுதை.உன்னை என்னால் எப்டி மறக்க முடியும்.என்றாள் அன்புடன்.



அது தான் மறந்துவிட்டாயே.



ஏய்... ஒரு வாரம் பேசாமல் விட்டால் மறந்ததாக அர்த்தமா.கொஞ்சம் வேலைடி.



ஆமா நாங்க மட்டும் வெட்டியாவா இருக்கோம்.



ஹே சிந்து செல்லம் உனக்கு பரீட்சை வருதில்ல அதான் உன்ன தொந்தரவு செய்ய வேணாம் என்று நினைச்சன் டா.



ஆமா நீ என் காதலன் பாரு.நீ கதைச்ச உடனே நான் உன்னப் பத்தியே கனவு கண்டுட்டு படிக்காம விடுறதுக்கு...சும்மா சப்பைக்கட்டு கட்டாத வினி.



ஆகா இவள் எந்தப்பக்கம் போனாலும் விடமாட்டாள் போலவே..



ஹ ஹ...சிந்துது ........சரி நான் பண்ணது தப்பு தான் மன்னிச்சுடு மன்னிச்சுடு போதுமா??



உன் மன்னிப்பு யாருக்கு வேணுமாம் போடி.



ஹே சிந்துமா இப்போ நீ மெசேஜ் பண்ணாம விட்டிருந்தாலும் இன்னைக்கு இரவு நான் உனக்கு call பண்ணி இருப்பன் டா.



நிஜமா??



ஹே நிஜமாத்தான் டி.



ஹ்ம்ம்...நம்பிட்டன்



நம்பு சிந்து நம்பு.நம்பிக்கை தானே எல்லாம்.



கல்யான் ஜுவல்லர்ரி விளம்பர பாணியில் பூவினி சொல்லவும் சிந்து சிரித்துவிட்டாள்.



ஹப்பா...சிரிச்சுட்டியா.உன்ன சிரிக்க வைக்க நான் என்னவெல்லாம் பண்ணவேண்டி இருக்கு.

சரி சொல்லு எப்டி இருக்க?? உன் படிப்பெல்லாம் எப்படி போகுது.



ம்ம் இருக்கன் டி.படிப்பு அது பாட்டில போகுது.நான் என் பாட்டில போறன்.



ஹே...ஒழுங்கா படி மகளே.இந்த வருசமும் கோட்டை விட்டா அடுத்த வருசமும் அங்கேயே தான்.



அய்யய்யோ..இன்னும் ஆறு மாதமே எப்படி சமாளிக்கிறதுன்னு முழிச்சுக்கிட்டு இருக்கன்.இதில அடுத்த ஒரு வருசமுமா! நம்மளால முடியாதும்மா.அதுக்காகவே கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்கிறன்.





ம்ம்ம்

இது நல்ல பொண்ணுக்கு அழகு.



அது சரி உங்க வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு வினி மேடம்??



ம்ம் ரொம்ப சந்தோசமா போய்கிட்டு இருக்கு.



அதான் உன் முகமே சொல்லுதே.தம்பிகள் தங்கைச்சிகளுடன் நேரம் இறக்கை கட்டிப் பறக்குமே.போதாத குறைக்கு அத்தை பையன் வேறு.ஹ்ம்ம் நடத்து நடத்து.



ஹேய்..உளறாதே.அவன் எனக்கு அண்ணன் டி.



அடிப்பாவி வந்த உடனேயே பாசமலரை வளர்த்துட்டியா? ஹ்ம்ம் நீ உருப்படவே மாட்டாய்.



ஈஈஈ.......நன்றி நன்றி.



போடிங்க்க்......ஆமாம் என்னவாம் உன் எருமை..ச்சே ..அருமை அத்தான்.



ஏய் மரியாதையா பேசு.



அவனுக்கெல்லாம் இந்த மரியாதையே போதும்.அலட்சியமாக உதட்டைச் சுளித்த சிந்துவை கோபத்துடன் முறைத்தாள் பூவினி.



அவரைப்பற்றி உனக்கு என்னடி தெரியும்??



அடுத்தவரின் மனதை உடைப்பவன் என்று தெரியும்.சிந்துவும் அசரவில்லை.



சிந்து.தயவு செய்து அவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசாதே.



த்தோடா ......என்ன விடயம் வினி வக்காலத்து எல்லாம் பலமா இருக்கு???? கூர்மையான பார்வையுடன் கேட்டாள் சிந்து.



ஒருகணம் மௌனம் சாதித்தவள் நான் இப்போது யாரிடம் தொழில் பயிற்சி பெறுகிறேன் என்று தெரியுமா?? என்று பதில் கேள்வி கேட்டாள்.



யாரிடம்??? அழுத்தமாக வந்தது கேள்வி.



அத்தானிடம் தான்.



என்ன????????????? சிந்துவின் அதிர்ச்சியை எதிர்பார்த்தவள் போல் புன்னகைத்தவள்.அதற்கான காரணத்தை தன் சந்தேகத்தை என எல்லாவற்றையும் கூறினாள்.



அனைத்தையும் கேட்டு சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள்.பின்பு



வினி இது நிஜமா?? நன்றாக சிந்தித்துப் பார் வினி. ஒருவேளை காதல் கொண்டவன் அருகில் இருக்கும் போது அவனின் சாதாரண செயல்கள் கூட உனக்கு இப்படி தோன்றுகிறதோ என்னவோ!!!!! என்றாள்.



இல்லை சிந்து அவரை மீறிய சில தருணங்களில் அவர் விழிகளில் கசிந்த நேசம் பொய் இல்லை.



ப்ச்...வினி இந்த விழியில் கசியும் நேசம்.மௌனம் பேசும் மொழி என்று வசனம் பேசுவதற்கு இது ஒன்றும் சினிமா இல்லைடி.வாழ்க்கை.முன்பும் ஒரு முறை இதே போல எண்ணி பட்ட துன்பம் போதாதா?? இன்னொரு ஏமாற்றத்தை தாங்க உன்னால் முடியுமா வினி.ஐந்தறிவுள்ள பூனைக்கு கூட ஒருமுறை பட்டால் புத்தி வரும்.உனக்கு?? தன் தோழி மீண்டும் காயப்பட்டு விடக்கூடாதே என்ற அக்கறையில் பொரிந்தாள்.





அவள் பேச்சை மௌனமாக கேட்ட வினி



இன்னொரு முறை நான் ஏமாற மாட்டேன் சிந்து.உன் கோபம் அதில் உள்ள பாசம் எனக்கு புரிகிறது.ஆனால் நான் கூறுவது தான் உனக்கு புரியவில்லை.காதல் என்பது ஒரு உணர்வு சிந்து அவர் விழிகளில் வழியும் நேசத்தை என்னால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.அதை என்னால் விவரிக்க முடியாது.அப்படியே விவரித்தாலும் அது உனக்கு புரியாது.என்றாள் அமைதியாக



அம்மா தாயே !!!!! எனக்கு அதை விவரிக்கவும் வேணாம்.எனக்கு அது புரியவும் வேணாம்.உன் காதலை பார்த்து எனக்கு காதல் என்ற சொல்லே வெறுக்கிறது.ஆனால் ஒன்று மட்டும் சொல்லு அப்படி உனக்கு அவரும் உன்னை நேசிப்பதாக தோன்றினால் எதற்கு இந்த நாடகம் என்று அவரிடமே நேரடியாக கேட்டுவிடவேண்டியது தானே???



லூசா சிந்து நீ??



ஹ்ம்ம் ..ஆமாம் டி.உன் தோழியாக இருக்கிறேன் இல்லையா??? நிச்சயம் வரவேண்டிய சந்தேகம் தான்.கடுப்புடன் சலித்துக்கொண்டாள் சிந்து.



ஏய்..பின்னே என்ன??? அவரே மனதை மறைத்து நடிக்கிறார் என்று சொல்கிறேன்.நேரே சென்று கேட்டால் ஆமாம் அப்படித்தான் என்று உடனே ஒத்துக்கொள்வாரா??



அட!! இப்படி ஒன்று இருக்கோ!!!!! சரி அதுக்கு நீ என்ன செய்ய போகிறாய்???



ஆதாரம் வேண்டும் சிந்து.அவரிடம் பேசும் போது அவரால் மறுக்கவோ வேறு விளக்கம் சொல்லவோ முடியாத ஆதாரம் வேண்டும்.



என்ன ஆதாரம் வினி???



ப்ச்....தெரியவில்லை.



சிந்துவின் முகம் அழுதுவிடுவாள் போல் மாறியது.



வினி நிஜமாக சொல்லு உனக்கு என்னைப் பார்த்தால் பைத்தியம் போல இருக்கிறதா??



ஏய்..ஏன் டி??



பின்னே நீ பேசுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா சொல்லு?? உன் அத்தானுக்கும் உன் மேல் காதல் இருக்கிறது.ஏனோ மறைக்கிறார் என்றாய்.சரி நேரே போய் கேட்டு பாரேன் என்றால் ஆதாரம் வேண்டும் என்கிறாய்.சரி அப்படி என்ன ஆதாரத்தை தேடுகிறாய் என்றால் அதுவும் தெரியாது என்கிறாய்.



வினி நீ தெளிவாகத்தானே இருக்கிறாய்???



நான் நூறு வீதம் தெளிவாகத்தான் இருக்கிறேன் சிந்து.அத்தானின் மனதில் எதுவோ இருக்கிறது.கூடிய சீக்கிரமே அது என்னவென்று கண்டுபிடித்து அவர் மனதில் உள்ள காதலை வெளியே கொண்டுவருவேன்.எனக்கு தெரியும் அத்தானுக்கு என் மேல் நேசம் இருக்கிறது.



ஹ்ம்ம்..இதில் என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை வினி.ஆனால் உன் மகிழ்ச்சி எனக்கு முக்கியம்.அப்படி உன் காதல் கை கூடினால் என்னைவிட அதிகமாக யாரும் சந்தோசப்படமாட்டார்கள்.



ஆனால் ஒன்று சொல்லு வினி அப்படி உன் அத்தான் மனதிலும் காதல் இருந்தால் அதை மறைத்து நடிக்க வேண்டிய தேவை தான் என்ன?? அதை சிந்தித்துப் பார்த்தாயா???



ப்ச்...தெரியவில்லையே சிந்து.ஒருவேளை காதலிப்பது எங்களை நம்பி சிறுவயது முதல் பழகவிடும் பெற்றோருக்கு செய்யும் துரோகம் என்று எண்ணுகிறாரோ என்று தோன்றுகிறது.



ஒ அப்படியாயின் நீ நேரே உன் பெற்றோரிடமே உன் விருப்பத்தை சொல்லிவிடேன்.



ப்ச்.அப்படி இருக்குமோ என்று தோன்றுகிறது என்றுதான் கூறினேன் சிந்து.இது தான் காரணம் என்று நூறு வீதம் உறுதியாக தெரியவில்லையே.நான் பெற்றோரிடம் கூறி அவர்கள் பேசிய பின் அப்படி இல்லை என அத்தான் மறுத்தால் அது எவ்வளவு பெரிய அவமானம்.அத்தோடு அது எங்கள் குடும்பத்தின் ஒற்றுமையையே குலைத்து விடுமே!.



ம்ம்ம்..இதற்கு முடிவு தான் என்னடி??



ஹ்ம்ம்..ஒன்று அவர் தன் தடையை உடைத்து தன் காதலைச் சொல்லவேண்டும்.இல்லை அவரின் காதல் ஏதோவொன்றில் எனக்கு நூறு வீதம் தெளிவாக தெரிய வேண்டும்.



அப்போது தான் என்னால் அவரிடம் பேச முடியும்.அதுவரை என் மனதில் அவர் தான் இப்போதும் இருக்கிறார் என்பதை அவரிடம் காட்டிக்கொள்ள மாட்டேன் என்றாள் வினி உறுதியுடன்.



நிலவன் தன் மனத்தடையை உடைத்து தன் காதலை சொல்வானா??