• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 27

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
இதழ்:- 27



முந்தைய இரவின் தாமதமான தூக்கத்தால் அன்று தாமதமாகவே கண்விழித்தாள் வினி.



காலையில் கண்விழிக்கும் போதே மனதில் உற்சாகம் நிரம்பி இருக்க இதழ்களில் புன்னகையுடனே குளித்து பனியில் நனைந்த ரோஜாவாய் கீழே சென்றாள்.



வா வினி.என்ன இவ்வளவு நேரம் தூக்கம்.இன்று அலுவலகம் போகவில்லையா?? என்றார் மேகலா.





தாயின் தோளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவள்.

ப்ச்..மணி ஆகிவிட்டதும்மா.இனி போக முடியாது நாளை பார்ப்போம் என்றாள்.



அதைக்கேட்டு சரி விடு.இன்று நிலவனும் இருக்க மாட்டான்.அங்கு தனியே போய் என்ன செய்வாய்.வீட்டில் இருந்து ஓய்வு எடு என்றார் மேகலா.





தாய் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த வினி.அதை மறைத்துக்கொண்டு ஏன் அத்தான் எங்கே போய்விட்டார்??என்று வினவினாள்.



அவனும் எத்தனை நாள் தான் தொழில் தொழில் என்று அதிலேயே மூளையை உழப்பிக்கொண்டிருப்பது.சற்று நாள் அமைதியான ஓய்வு தேவை என்று கொடைக்கானலுக்கு சென்றுவிட்டானாம்.



ம்ஹும்... யாரும்மா சொன்னது??



உன் அப்பா தான்.



ஒ...அப்பா எங்கேம்மா??? சாப்பிட்டுவிட்டாரா???



ம்ஹும்..உன்னையும் காணோம்.அதோடு உன் பாட்டி வேறு கோவிலுக்கு போகவேண்டும் என்று சொன்னார்கள்.அதனால் குளித்துவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு சாப்பிடாமலே கிளம்பிவிட்டார்.



ப்ச்.என்னம்மா நீங்கள் நான் வராவிட்டால் என்ன.அப்பாவை சாப்பிட்டு விட்டு செல்ல சொல்லியிருக்கலாம்ல.



எங்கே!! உன் அப்பா கேட்டால் தானே.சரி விடு கோவிலுக்கு தானே சென்றிருக்கிறார்.சீக்கிரமே வந்துவிடுவார்.



ம்ம்ம்..சரி மா.



மித்து சாப்பிட்டானா??



ஆமாம் டா.அவன் காலையிலேயே சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பிவிட்டான்.நீ சாப்பிடுகிறாயா??



ப்ச்..தேநீரே போதும்மா.மதியம் அப்பா வந்ததும் சேர்ந்து சாப்பிட்டுக்கொள்கிறேன்.



ஏன் வினி.இரண்டு தோசையாவது சாப்பிடுடா.காலை உணவு மிக முக்கியம் வினி.



பசிக்கவில்லைம்மா..ஒருநாள் சாப்பிடாமல் விடுவதால் எதுவும் ஆகிவிடாது.



என்னவோ போ.சொன்னால் கேட்கவா போகிறாய்!!



இன்னைக்கு மட்டும் தான் மா.ப்ளீஸ்.சரி என்ன சமையல்மா?? நான் ஏதாவது உதவி செய்யவா??



இல்லடா.முக்கால்வாசி வேலை முடிந்துவிட்டது.இன்னும் கொஞ்சம் தான்.நானே பார்த்துக்கொள்கிறேன்.நீ போய் ஓய்வெடு.



சரிம்மா.நான் போய் கொஞ்சம் தோட்டத்தில் உலவிவிட்டு வருகிறேன்.



ம்ம் சரி டா.



வீட்டில் இருந்து இறங்கி தோட்டம் நோக்கி நடந்தாள் வினி.முன்தினம் பெய்த மழையில் மரம் செடி கொடிகள் எல்லாம் குளித்து புத்துணர்வுடன் பச்சைப் பசேல் என்று இருந்தது.அந்த குளிர்மை கூட வினியின் மன வெம்மையை சற்றும் தணிக்கவில்லை.ஏன் அது அவள் கவனத்தில் கூட பதியவில்லை.மாறாக





அதுவரை மனதை உறுத்திக்கொண்டிருந்த விடயம் விஸ்வரூபம் எடுத்தது.



காலையில் எழும்போது இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்துவிட்டிருந்தது.இன்று அவனிடம் பேசியே ஆகவேண்டும் என அவள் எண்ணி இருக்க அவன் ஊரைவிட்டே ஓடியிருந்தான்.



முன்பு அவளை ஓடவைத்தான்.இன்று அவனே ஓடிவிட்டானா!!! வினிக்கு கோபம் கோபமாய் வந்தது.அப்படி அவனுக்கு என்னதான் பிரச்சனை???



பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள பயந்து ஓடும் கோழையா அவள் அத்தான்!!!!!!!!!! அவள் மனம் இல்லை என்றது.



நிலவன் எந்த சிக்கலாய் இருந்தாலும் அதை எந்த விதத்தில் கையாண்டால் சுலபமாக தீர்க்க முடியும் என்று கணக்கிட்டு அதை சுலபமாய் தீர்த்துவிடுவான்.அந்த திறமை இல்லாவிட்டால் அவன் தொழிலில் இவ்வளவு தூரம் சாதித்திருக்க முடியாதே.





அப்படிப்பட்டவன் தன் மனதை மறைத்து நிஜத்தை எதிர்கொள்ள பயந்து ஓடுகிறான் என்றால் என்ன காரணம்?? பிரச்சினை அவள் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் பெரிதோ!!!!!





தலை சுழன்றது.தலையை உலுக்கி கொண்டு எழுந்தவள்.வீடு நோக்கி நடந்தாள்.அவன் ஏதாவது ஒன்றை செய்வதும் இவள் அதற்கு என்ன காரணம் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பதுமே வேலையாக போய்விட்டது.





இனியும் சும்மா இப்படி மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.ஏதாவது செய்தே ஆக வேண்டும்.சிந்தித்தபடியே வீட்டினுள் நுழைந்தவளை தொலைபேசி அழைத்தது.





தாரணி தான் பேசினாள்.



சொல்லு தரு



வினிக்கா இன்று ஏதாவது வேலை இருக்கிறதா??



இல்லை தரு. ஏன் டி ??



கொஞ்சம் வெளியே போய்விட்டு வருவோமா??



பூவினிக்கும் அப்போதைய மனநிலையில் சற்று மனமாற்றம் தேவைப்பட



ம்ம் போகலாம் டா.என்றாள்.



சரி வினிக்கா.வரும் போது எந்த வாலையும் அழைத்துவந்துவிடாதீர்கள் என்றாள் தாரணி சற்று கடுப்புடன்.



வால்?? என்று ஒருகணம் திகைத்தவள் மறுகணம் வாய்விட்டு சிரித்தாள்.



ஏய் உனக்கு ரொம்ப கொழுப்புடி என்றாள்.சிரிப்புடனேயே.



அந்த மித்திரன் ஐ விட குறைவு தான் என்று கடுகடுத்த தாரணி சரி வைக்கிறேன் என்று வைத்துவிட்டாள்.



இவளுக்கு மித்து மேல் எதற்கு இவ்வளவு கடுப்பு என்று எண்ணியவாறே திரும்பியவளின் எதிரே மித்திரன் வந்தான்.



அவனைக்கண்டதும் தாரணி கூறிய வால் நினைவு வர தன் முதுகில் ஒரு கயிற்றைக்கட்டி அதைப்பிடித்தபடியே மித்திரன் தன் பின்னால் அலைவது போல ஒரு கற்பனை தோன்ற வாய்விட்டு சிரித்தாள்.





அவள் சிரிப்பைக் கண்டவன்.ஒய் எதற்கு இவ்ளோ சிரிப்பு. யார் தொலைபேசியில்??? என்றான்.



பூவினிக்கும் மறைக்க வேண்டிய தேவை இருப்பதாக தோன்றாததால்.தருவிடம் என்னடா வம்பு பண்ணினாய்?? உன் மேல் செம கடுப்பில் இருக்கிறாள்.என்றாள்.



ஒ..அந்த வானரமா பேசியது.என்றவன்.என்னவாம் உன் அருமைத்தங்கை என்றான் குறுகுறுப்புடன்.





அவள் தாரணி பேசியதைக் கூறவும் அவன் இதழ்களில் குறும்பு புன்னகை மலர்ந்தது.அந்த புன்னகையுடனேயே சரி வா கிளம்பலாம் என்றான்.



வினி திகைத்து எங்கேடா?? எனவும்.



நீ தானே சொன்னாய் தாரணியுடன் வெளியே செல்வதாக.



அது சரி தான்.ஆனால் உன்னை கூட அழைத்துவர வேண்டாம் என்று அவள் சொன்னதையும் சொன்னேன் தானே!!!





அதனால் தான் வருகிறேன்.என்று கண்சிமிட்டி கூறியவன் மேகலாவை அழைத்து அத்தை வினி வெளியே போகிறாளாம்.நானும் கூடச்சென்று வருகிறேன்.என்று கூறினான்.



மேகலா சரிப்பா பார்த்து போய் வாருங்கள்.எனவும் அதற்கு மேல் மறுப்பு கூற முடியாமல் தயாராகி தாயிடம் அம்மா அப்பாவும் பாட்டியும் வந்தால் எங்களை எதிர்பார்க்காமல் நீங்கள் சாப்பிடுங்கள்.நாங்கள் வெளியே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டு.தாரணியை தொலைபேசியில் அழைத்து வெளியே வா தரு என்றுவிட்டு மித்திரனுடன் காரில் ஏறினாள்.





கார் இவர்கள் வீட்டு கேட் ஐ தாண்டி தரு வீட்டு வாயிலில் போய் நின்றது.



தயாராகி வீட்டு வாசலிலேயே நின்றவள்.காரைக்கண்டதும்.ஓடிவந்து வினிக்கா என்று சிரிப்புடன் அழைத்தபடி கார்க் கதவைத் திறந்தவளின் சிரிப்பு வாயிலேயே உறைந்தது.



முன்பக்கம் டிரைவர் தாத்தா அருகில் அமர்ந்து கண்களில் லேசான விஷமச் சிரிப்புடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனைக் கண்டு.



அவள் பார்வை வினியை முறைக்கவும் எதுவும் பேசாமல் தன் பக்க கதவை திறந்துவிட்டு ஏறு தரு என்றாள்.



வேறு வழி!!!! இனி என்ன வரமுடியாது என்றா கூறமுடியும்.மனதில் பொருமியபடி எதுவும் பேசாமல் பல்லைக் கடித்தபடி ஏறி அமர்ந்து கதவை ஓங்கி சாத்தினாள்.



மித்திரனின் விழிகளில் இருந்த சிரிப்பு லேசாக இதழ்களுக்கு இடம்மாற எதுவும் பேசாமல் திரும்பி டிரைவர் தாத்தாவுடன் பேச ஆரம்பித்தான்.



உங்க சொந்த ஊரே இது தானா தாத்தா??? எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு???





மித்திரன் கவனம் முழுதும் பேச்சிலேயே இருக்கவும்.பூவினி தாரணியின் கையை பற்றி சாரிடி. நான் வேண்டாம் என்று தான் கூறினேன்.அவன் தான் பிடிவாதமாய் வந்துவிட்டான்.ஓரளவுக்கு மேல் மறுக்க முடியவில்லை.என்றாள் கெஞ்சல் குரலில்.



தாரணிக்கு தெரியும் அவன் வேண்டுமென்றே தான் வந்திருப்பான் என்று.அவன் தான் அவளிடம் வம்பு செய்வதையே தொழிலாக கொண்டு அலைகிறானே.எரிச்சலாக நினைத்த தாரணி

வினியிடம்



பரவால்லை வினிக்கா. அழகான ரெண்டு பெண்கள் தனியே போவதை விட ஒரு பாடிகார்ட் உடன் போவது சிறந்தது தானே என்றாள்.சற்று குத்தலாய் மித்திரனுக்கு கேட்கும் குரலில்.



அவனுக்கும் அது கேட்டது போலும் ஒருமுறை திரும்பி நோக்கியவன் அழகான பெண்களா??? என்றான் கேலி கலந்த வியப்பு குரலில் கூடவே டிரைவர் இடம் ஏன் தாத்தா உங்களுக்கு அப்படியாரும் தெரிகிறார்களா என்று கேலியாக வினவினான்.



இளவட்டங்களின் பேச்சு என்று டிரைவர் புன்னகையுடன் அமைதியாக பூவினி அவனின் கேலியை ரசித்து சிரிக்க தாரணி முகத்தை உர்ர் என்று வைத்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு ஜன்னல் வழியே ஓடும் மரங்களையும் கட்டடங்களையும் வேடிக்கை பார்த்தாள்.





சற்று நேரம் மௌனத்திலேயே கழிய டிரைவர் கார் பிளேயர் ஐ உயிர்ப்பித்தார்.அதில் தவழ்ந்து வந்த மெல்லிய இசை அவர்களைக் கட்டிப் போட அந்த இசையில் தம்மைத் தொலைத்து தத்தம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர் வினியும் தாரணியும்.





கார் சற்று தூரம் சென்றிருக்க தாரணிக்கு திடீரென ஏதோ உறுத்தவே நிமிர்ந்து பார்த்தாள்.மித்திரன் தான் தன் கைபேசியின் front வீடியோவை on பண்ணிவிட்டு அதில் ஏதோ நோண்டுவது போல அதில் தெரியும் அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தான்.இவள் அதைக்கண்டு கொண்டதை வீடியோவைப் பார்த்தே உணர்ந்தவன் சட்டென இவள் புறம் திரும்பி அவள் பார்வையைச் சந்தித்து கண்ணடித்தான்.



சட்டென முகம் சிவத்து உடல் விதிர்க்க பார்வையைத் திருப்பிக்கொண்டாள் தாரணி.அதன் பின் அவன் புறம் திரும்பவே இல்லை.



அவள் மனம் குதிரை வேகத்தில் ஓட இவன் ஏன் இப்படி என் உணர்வுகளோடு விளையாடிப்பார்க்கிறான் என்ற எண்ணம் தோன்ற தாரணியின் விழிகள் கலங்கியது.நான் ஏன் இப்படி மாறிப்போனேன்???? தாரணியின் மனம் கேள்வி கேட்டுக்கொண்டது.



ஆம் அவள் மாறிவிட்டாள் தான்.முன்பெல்லாம் தன் சம்பந்தப்பட்ட வரையில் எந்த ஒரு சிறுவிடயமாக இருந்தாலும் அதை உடனே தாயிடம் கூறி பகிர்ந்துகொள்பவள்.மித்திரன் அவ்வளவு தூரம் சீண்டிய பிறகும் அதைப் பற்றி தாயிடம் மூச்சுக்கூட விடவில்லை.அதுவும் தனி அறையில் அவன் அவளை அணைத்தது.அது எவ்வளவு பெரிய விடயம்.ஆனாலும் ஏனோ அதை தாயிடம் அவளால் கூற முடியவில்லை.அது ஏன் என்றும் அப்போது அவளுக்கு புரியவில்லை.



அன்று பீச்சில் நடந்த நிகழ்வு தான் அவள் மனநிலையை அவளுக்கே தெளிவாக்கியது.மித்திரனின் கைகளில் துவண்டதும் அவனின் முத்தத்தை விழிமூடி எதிர்பார்த்ததும்.ச்சே..அந்த சமயத்தில் அவன் முத்தம் இட்டிருந்தால் அவள் மறுப்பே இல்லாமல் ஏற்றுக்கொண்டு தானே இருப்பாள்.





அதுவும் ஒரு ஆணாக இருந்து கொண்டு அவன்தானே விலகி சென்றான்.இதுவே அவன் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.அதைவிட மித்திரனே அவளை விலக்கி கடலில் தள்ளியது அவளுக்கு பெருத்த அவமானத்தை கொடுத்திருந்தது.ச்சே..என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பான்.சற்றும் வெட்கமே இல்லாத ஒருத்தி என்று எண்ணியிருப்பான்.



நான் எப்படி அவனின் கரங்களுக்குள் சற்றும் மறுப்பே இல்லாமல் நின்றேன் என்று எண்ணிய போது தான் தன மனம் அவன் பால் ஈர்க்கப்பட்டிருப்பது புரிந்தது.புரிந்த உண்மை அவளுக்கு பயத்தையும் கொடுத்தது.



அவளுக்கு அவனைப் பிடித்தால் போதுமா??? அவனுக்கு அவளைப் பிடிக்க வேண்டாமா?? அவனே கூறினானே வினியைப் பெண் பார்க்கவே வந்தேன் என்று.காதலிப்பது ஒன்றும் பெரியவிடயமில்லை.இங்கிருந்து போவதற்கு முன்னால் வினிக்கா அத்தானின் காதல் தனக்கு உறுதியாக தெரியவேண்டும்.அப்படி இல்லாவிடில் நடப்பதற்கு நான் பொறுப்பில்லை என்றும் கூறினானே.



அப்படி என்ன நடக்கும் என்று கூறினான்.ஒருவேளை வினிக்காவை தானே திருமணம் செய்துகொள்வானோ!!! அப்படித்தான் இருக்கும்.



அவள் மேல் அவனுக்கு காதலே இல்லை.எப்போதும் மிரட்டிக்கொண்டோ சீண்டிக்கொண்டோ தான் இருக்கிறான்.வினிக்காவிடம் எவ்வளவு அன்பாக இணக்கமாக பேசுகிறான்.அப்படி ஒருபோதாவது அவளிடம் பேசி இருக்கிறானா?? இல்லையே!!!!!!



வேண்டாம் அவளுக்கு இந்த காதல் கத்தரிக்காய் எதுவும் வேண்டாம்.இந்த மனதை அழுத்தும் துன்பமும் வேண்டாம்.அவனைப் பார்த்தால் தானே தேவையில்லாத எண்ணங்களும் துன்பங்களும்.இனி அவனை பார்க்கவே கூடாது.அப்படியே பார்த்தாலும் அவன் அருகில் கூட செல்லக்கூடாது.அவனுடன் பேசவும் கூடாது.இப்படி தனக்குள்ளேயே ஆயிரமாயிரம் முடிவெடுத்துக்கொண்ட தாரணி.அதன் பின் வினி வீட்டுக்கு போவதையே முடிந்தளவு தவிர்த்தாள்.



பூவினிக்கு நிலவனின் கண்ணில் தெரியும் காதலைப் பற்றி கூறி நம்பிக்கையளித்த தாரணிக்கு மித்திரனின் விழிகளில் தெரியும் தன் மீதான நேசத்தை அறிந்துகொள்ள முடியவில்லை.ஏதேதோ எண்ணி தன்னைத் தானே குழப்பிக்கொண்டாள்.



ஒருவேளை அவரவர் காதல் என்று வரும் போது மூளை மங்கிவிடுமோ!!!!!







பீச்சுக்கு சென்று வந்து மூன்று நான்கு நாட்கள் ஆகியும் தாரணி அந்த பக்கம் எட்டிகூட பார்க்கவில்லை.வினியும் அலுவலக வேலை மற்றும் நிலவனின் மாற்றங்கள் என அதிலேயே மூழ்கி இருந்ததால் தாரணியின் வராமையை உணரவில்லை.



ஆனால் தாரணியின் விலகலை மித்திரன் உணர்ந்து இருந்தான்.அன்று பீச்சில் நடந்த சம்பவத்தின் விளைவு அது என்று அவனுக்கும் புரிந்தே இருந்தது.அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சற்று விலகியே இருந்தான்.ஆனால் மூன்று நாட்களுக்கு மேலும் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று மனம் தவிக்க தொடங்கவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டான்.





கார் ஒரு பெரிய மோல் இன் முன் சென்று நின்றது.அவர்களை இறக்கிவிட்டு காரை பார்க் செய்வதாக கூறி டிரைவர் காருடன் நகர்ந்துவிட இவர்கள் மூவரும் உள்ளே நுழைந்தனர்.



முதலில் தங்களுக்கான உடைகளைத் தேர்வு செய்வதற்காக வினியும் தாரணியும் இரண்டாவது மாடிக்கு செல்ல மித்திரன் ஆண்களின் முதல் தளத்திற்கு சென்றான்.



அங்கு சென்று சிலபல நிமிடங்கள் சுற்றி தனக்கு தேவையான உடைகளை தேர்வு செய்து பில் போட்டுவிட்டு அந்த தளத்திலேயே இருந்த பெர்பியும் கடைக்குள் நுழைந்து தன்னுடைய விருப்பமான ck brand ஒன்றை வாங்கினான்.இப்படியே சில மணி நேரம் சுற்றி அவன் தனக்கு தேவையான எல்லாவற்றையுமே வாங்கி முடித்த பின்பும் வினியையும் தாரணியையும் காணவில்லை.



அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாதவனாய் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்ற கோபத்துடன் அவர்களைத் தேடி பெண்களின் தளத்திற்கு சென்றான்.



அங்கே வினியும் தாரணியும் இன்னும் தேர்வு செய்தே முடிக்கவில்லை.அதுவரை சில டாப்களை மட்டுமே எடுத்து வைத்துவிட்டு சல்வார்களைத் தேர்வு செய்யும் பணியில் இருந்தனர்.



அடிப்பாவிகளா சினிமாவில் இதை வைத்து எத்தனை நகைச்சுவைக் காட்சிகள் எடுத்தாலும் நீங்கள் திருந்தமாட்டீர்களே என்றான்.மித்திரன்.



அவனின் கேலியைப் புரிந்துகொண்டு போ மித்து ஆண்களுக்கு ரசனை உணர்வு கம்மி.எங்களுக்கு அது அதிகம்.அதனால் தான் நாங்கள் தேர்வு செய்ய இவ்வளவு நேரம் எடுக்கிறது என்றாள் பூவினி.



அதைக் கேட்டு தலையிலடித்துக்கொண்டவன் ஹ்ம்ம்...என்னவோ சொல்லு என்று சலித்துக்கொண்டே.நகரு நான் உதவி செய்கிறேன் என்று அவர்களுக்கு தேர்வு செய்வதில் உதவினான்.அதிலும் சில உடைகளைத் தாரணிக்காக தேர்வு செய்யவும் அவளுக்கும் அவை பிடித்திருக்க அதையே எடுத்துக்கொண்டாள்.





மித்திரனின் தலையீட்டால் உடைத்தேர்வு சீக்கிரமே முடிய பில் போட எடுத்துச் சென்றனர் அங்கு பணத்தை வினி கட்டும் முன்பே மித்திரன் தன் கார்ட்டை நீட்டியிருந்தான்.



ஏய் மித்து வேணாம் என வினியும் இல்லை வேணாம் நானே கொடுக்கிறேன் என தாரணியும் சட்டென மறுக்கவே அதைக் காதிலேயே வாங்காமல் தானே பணத்தைக் கட்டினான்.



அதற்கு மேல் அங்கு வைத்து எதுவும் கூற முடியாமல் அவர்கள் மௌனமாக நகர்ந்தனர்.





சற்று தூரம் சென்றதும் ஏய் மித்து நீ ஏன்டா பணத்தைக் கட்டினாய் எனவும்.





நான் உனக்கு உடை வாங்கி தரக்கூடாதா வினி.எனக்கு அந்தளவு உரிமை இல்லையா என மித்திரன் அழுத்தமாக கேட்கவும் வினி வாயை மூடிக்கொண்டாள்.



அதன் பிறகு மூவரும் ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றனர்.அங்கே உண்பதற்கு ஓடர் கொடுத்துவிட்டு மூவரும் அமரவும் ஹாய் செம்பூவினி என்ற உற்சாகக் குரல் கேட்டது.



திரும்பி பார்த்தால் அங்கு அவளுடன் கல்லூரியில் படித்த ஒரு தோழி நின்றுகொண்டிருந்தாள். இவளும் கல்லூரித்தோழியை நீண்ட நாள் கழித்து சந்தித்த உற்சாகத்தில் ஹாய் ரூபா என்றபடி எழுந்து போய்விட மித்திரனும் தாரணியும் தனித்து இருந்தனர்.



சற்று நேரம் மௌனத்தில் கழிய தாரணி எதையோ அவனிடம் பேச விரும்பி சற்று தயங்குவதாக மித்திரனுக்கு பட என்ன தாரணி என வினவினான்.



இல்..இல்ல...என தயங்கியவள் சட்டென கையில் வைத்திருந்த நோட்டுக்களை அவன் முன் வைத்துவிட்டு தயவு செய்து இதை பெற்றுக்கொள்ளுங்கள்.வினிக்காவுக்கு நீங்கள் உடை வாங்கி கொடுக்கலாம்.அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.ஆனால் எனக்கு வாங்கி தர உங்களுக்கு உரிமை இல்லை.உங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள எனக்கும் உரிமை இல்லை.என்று படபடவென கூறி முடித்தாள்.



மித்திரனின் முகம் கோபத்தில் சிவந்து இறுக என்னை அவமதிக்கிறாய் தாரணி என்றான் இறுகிய குரலில்.



அந்த குரலில் லேசாக பயம் வந்தாலும் இதில் அவமதிக்க எதுவுமே இல்லை.இதை உங்களிடம் இருந்து நான் சும்மா பெற்றுக்கொண்டால் தான் அது அவமானம் என்றாள் தாரணி நிமிர்வுடனேயே.





எதுவும் பேசாமல் அவள் விழிகளை ஒருகணம் கூர்ந்து பார்த்தான்.தாரணி விழிகளைத் தாழ்த்திகொண்டாள்.சிறு பெருமூச்சுடன் எழுந்தவன் அந்த பணம் மொத்தத்தையும் எடுத்துச் சென்று வாசலில் இருந்த முதியோர் இல்லம் ஒன்றுக்கான பணம் சேகரிப்புப் பெட்டியில் போட்டுவிட்டு அப்படியே வெளியே சென்றான்.



தாரணி தோளைக் குலுக்கி கொண்டாள்.அவள் தன் கடனை அடைத்துவிட்டாள்.அந்த பணத்தை எடுத்துக்கொள்வதும் தானம் செய்வதும் அவன் இஷ்டம்.அவள் வரையில் அவனிடம் கடன் படவில்லை.அவளுக்கு அது போதும்.



சற்று நேரத்திலேயே தோழியிடம் பேசிவிட்டு பூவினி வந்துவிட மித்திரனும் வந்தான்.அதன் பின் பூவினி தான் அன்று சந்தித்த தோழியைப் பற்றி தன கல்லூரிக்காலத்தைப் பற்றி என பேசினாள். மித்திரனும் பேசினான்.தாரணியும் அந்த பேச்சில் இணைந்து கொண்டாள்.



ஆனாலும் எதோ ஒன்று குறைவதாகப் பட்டது தாரணிக்கு. அது மித்திரனின் விஷமச் சிரிப்பும் அவளைச் சீண்டும் குறும்பு நிறைந்த பேச்சும் தான்.அவன் இயல்பாக பேசுவது போல் இருந்தாலும் அவன் தாரணியுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவனின் முகத்தில் ஒரு இறுக்கம் வந்துவிட்டிருந்தது.அது தாரணிக்கு நன்றாகவே புரிந்தது.காரணமும் தான்.



அன்று வீடு திரும்பும் போதும் அதே நிலையே தொடர்ந்தது.தாரணி வீட்டு வாயிலில் கார் நிற்க தாரணி தன் பைகளை எடுத்துக்கொண்டு அனைவருக்கும் பொதுவான ஒரு bye உடன் இறங்கினாள்.



மித்திரனின் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்தாலும் அவன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் இறங்கி விடுவிடென உள்ளே சென்றுவிட்டாள்.



திமிர் திமிர்..உடம்பு மொத்தமும் திமிர்.பல்லைக் கடித்தபடி ஆத்திரத்துடன் முணுமுணுத்தான் மித்திரன்.



உள்ளே சென்ற தாரணிக்கும் மனதுக்குள் கஷ்டமாகத்தான் இருந்தது.என்னதான் தான் செய்தது சரிதான் என மனம் அடித்துக் கூறினாலும் மித்திரனின் கோபத்தில் இறுகிய முகம் கண்முன்னே வந்து அவளை சங்கடப்படுத்தியது.எவ்வளவு கேலியும் சிரிப்புமாய் பேசுபவன்.இப்படி அவனை வருத்தப்பட வைத்துவிட்டோமே என்று எண்ணி வருந்தினாள்.



ஆனால் உடனேயே இப்படி அவனின் கோபமும் வருத்தமும் தன் மனதைப் பாதிக்க விடுவது தனக்கு நல்லதல்ல. என்று புரிந்ததனால் முயன்று தன் மனதை வேறு விடயங்களில் திசை திருப்பினாள்.





நில் என்று சொன்னால் மனம்

நின்றா போகும்..........