இதழ்:-30
வினியின் பேச்சைக் குறுக்கிடாமல் மௌனமாக கேட்டிருந்த தாரணி சற்று நேரம் எதுவுமே பேசவில்லை!!!!!!!
பின் நீண்ட நெடிய மூச்சை எடுத்துவிட்டவள்
ஹ்ம்ம்......அத்தானா இப்படி பேசினார் என்று இருக்கிறது வினிக்கா!!!!!!! நம்பவே முடியவில்லை!!!!!! அவருக்கு உங்களை மிகவும் பிடிக்கும் வினிக்கா.அவர் உங்களைப் பார்க்கும் பார்வையிலேயே உங்கள் மீதான அத்தானின் காதலை நான் பல முறை கண்டிக்கிறேன்.
அப்படிப்பட்டவர் இப்படி உங்களிடம் பேசி ஒதுங்கினார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கும் வினிக்கா.இந்த விடயம் முன்பே தெரிந்திருந்தால் நான் உங்களை அத்தானைப் பிரிந்து செல்லவே அனுமதித்திருக்க மாட்டேன்.நீங்கள் இங்கேயே அவர் அருகிலேயே இருந்திருந்தால் அவர் மனதில் உள்ளதை முன்பே கண்டுபிடித்திருக்கலாம்.
சரி விடுங்கள்.இப்போது தான் அத்தானின் மனது தெளிவாக தெரிந்துவிட்டதே.இனி சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும்.
தாரணியின் பேச்சைக் கேட்ட பூவினிக்கும் அவள் கூறுவது சரி என்றே பட்டது.தான் அவசரப்பட்டு அவன் மீது கோபம் கொண்டு அவனைப் பிரிந்து செல்லாமல் அருகிலேயே இருந்திருந்தால் அவன் மனம் முன்பே தெரிந்திருக்கும்.இத்தனை வருட துன்பமும் இல்லாது போயிருக்கும் என்று தோன்றியது.
நெஞ்சைப் பிளந்துகொண்டு ஒரு பெருமூச்சு வெளியேற எனக்கு ...எனக்கு அத்தானை உடனே பார்க்க வேண்டும் தரு என்றாள்.குரல் நெகிழ..
அத்தான் வெளியூர் சென்றிருக்கிறார் இல்லையா?? சீக்கிரமே வந்துவிடுவார் வினிக்கா.என்று சமாதானம் செய்தாள் தாரணி.
வினியோ ஹ்ம்ம்..அவர் இப்போதைக்கு வர மாட்டார் தரு.என்றாள்.
தமக்கையை விசித்திரமாக பார்த்த தாரணி ஏன் வினிக்கா அப்படிச் சொல்கிறீர்கள் என்றாள்.
ஒரு சோகப் புன்னகையுடன் அவர் வெளியூர் போனதே என்னைப் பார்ப்பதை தவிர்க்கத்தான் என்றாள் பூவினி.
ஒ என்று அதிர்ந்த தாரணி ஆனால் ஏன்?? என்றாள் குழப்பத்துடன்.
தங்கையிடம் எப்படி கூறுவது என்று தயங்கிய வினி சிறு தடுமாற்றத்துடன் அவர் நேசம் ஒரு இடத்தில் அவரை மீறி வெளிப்பட்டு விட்டது தரு.அதனால் தான் நான் ஏதாவது கேட்டு விடுவேனோ!!!!!!!!! என்னிடம் அதற்கு என்ன காரணம் கூறுவது என்ற தயக்கத்தில் ஓடி ஒளிந்துகொண்டார் என்றாள் சற்று கோபத்துடன்.
ஒ என்றபடி தாரணி தமக்கையை கூர்ந்து பார்க்கவும் பூவினியின் முகம் லேசாக சிவந்தது.அதைக்கண்டு கலகலவென வாய்விட்டு நகைத்தவள். சரி சரி பயப்படாதீங்க வினிக்கா.அத்தானின் நேசம் என்ன மாதிரி வெளிப்பட்டது என்று நான் கேக்கவே மாட்ட்ட்டேன்........என்று கூறி கண்சிமிட்டி முறுவலித்தவள்.
சட்டென ஏதோ சிந்தித்தபடி கவலைப்படாதீர்கள் வினிக்கா இன்னும் இரண்டு நாளில் அத்தான் இங்கு இருப்பார்.அதற்கு நான் பொறுப்பு என்றாள்.
எப்படி தரு?? உன்னால் முடியுமா? என்று வினி வியப்புடன் கேக்கவும்
ஹ ஹ......இந்த தாரணியால் முடியாதென்று ஏதாச்சும் உண்டா என்ன?? என்று கெத்துடன் கேட்டு விட்டு வாருங்கள் சொல்கிறேன் என்று அவளை அழைத்தபடி கீழே சென்றாள்.
மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலில் உடலை இதமாய் ஊடுருவும் குளிரில் ஓர் மரத்தின் மீது ஒற்றைக் காலையும் முதுகையும் சாய்த்தபடி இலக்கற்று வெறித்திருந்தான் நிலவன்.அவன் பார்வை வட்டத்துள் ஆணும் பெண்ணுமாய் கரம் கோர்த்து தோளணைத்து செல்லும் ஜோடிகள் தட்டுப்பட்டார்கள்.
அதைப் பார்த்த அவனின் மனதில் அவனும் வினியும் அதுபோல் உலவும் காட்சி மனதில் தோன்ற சட்டென தலையை உலுக்கி கொண்டான்.அவன் உதடுகளில் ஒரு விரக்திப் புன்னகை மலர்ந்தது.எப்போதுமே நடக்க முடியாத ஒன்று அல்லவா அது!!!!!!!
இங்கு வந்ததில் இருந்து அவளது நினைவுகளைத் துரத்தத்தான் அவன் எவ்வளவோ முயற்சி செய்கிறான்.ஆனால் முடியத்தான் இல்லை.எப்போதும் காதருகில் ஒலிக்கும் அவளின் கலீர்க் குரலும் கண்ணை மூடினாலே மனதில் வந்து உட்கார்ந்துகொள்ளும் அவளின் பூ முகமும்.குறும்பு விழிகளும் அவனை அணுஅணுவாக சிதைத்துக்கொண்டு இருந்தன.போதாத குறைக்கு அவன் அண்மையில் ஸ்பரிசித்த அவளின் மென்னுடலும் பட்டுக்கன்னங்களும் வேறு அவனைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் வருவது வரட்டும் என்று அவளிடம் உண்மை அனைத்தையும் கூறி தன நிலையை கூறிவிடலாமா என்று கூட தோன்றியது அவனுக்கு.
ஆனால் உடனேயே கண்மணியின் முகம் மனதில் வந்து உறுத்து விழித்து உன் மீது இவ்வளவு பாசத்தைக் காட்டும் குடும்பத்திற்கு நீ செய்யும் கைம்மாறு இது தானா என்று கேள்வி கேட்டது.
நிலவன் சோர்ந்து போனான்.அவனுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை!!!!!!!!!! எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாத நிலை!!!!!!!
காதலித்தவள் அவனைக் காதலிக்கவில்லை என்றால் கூட ஏதோ ஒரு விதத்தில் மனதை சமாதானப் படுத்திக்கொள்ளலாம்.ஆனால் அவன் உயிராய் நேசித்தவளே அவனை நேசித்து அந்த நேசத்தை அவனிடம் வெளிப்படுத்தியும் அதை அவனாகவே மறுக்க வேண்டிய நிலை...இது கொடுமை.
அவனுக்கு அம்மா இருந்தார் அப்பா இருந்தார் அண்ணா என்று அன்பு காட்ட அருமைத்தங்கை இருந்தாள்.அவனையே ஒவ்வொரு விடயத்துக்கும் உதாரணமாக எடுத்து செயற்படும் மாமா அத்தை சித்தி பிள்ளைகள் இருந்தார்கள்.பாசத்தையும் கனிவையும் மட்டுமே காட்டும் தாத்தா பாட்டி இருந்தார்கள்.அவன் மீது உயிரையே வைத்திருக்கும் அவன் காதலி இருந்தாள்.மாமா அத்தை சித்தி சித்தப்பா என்று அன்பான உறவினர்கள் இருந்தார்கள்.
“எல்லாமே இருந்தும் அவன் அநாதை.ஆம் அவன் ஒரு அநாதை.”
அவனுக்கு அன்று கண்மணி பேசியது நினைவுக்கு வந்தது.நெஞ்சம் வலிக்க மீண்டும் அதை அசைபோட்டான்.
அன்று பூங்காவின் உள்ளே சென்றதுமே உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என இறுகிய முகத்துடன் கண்மணி கூறவும்
அப்படி என்ன பேசப்போகிறார் அதுவும் தனியே என்று எண்ணியபடியே அவரைப் பார்த்தான்.
நீ வினியை நேசிக்கிறாயா???? என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டவர் அவன் அந்த கேள்வியின் அர்த்தம் உணர்ந்து அதிர்ந்து அதற்கு பதில் கொடுக்குமுன்பே
அப்படி ஏதேனும் எண்ணம் உன் மனதில் இருந்தால் அதைத் தூக்கி தூரப் போட்டுவிடு ஏனெனில் அது ஒரு போதும் நடக்காது என்றார் ஆணவத்துடன்.
அவரின் பேச்சு அவனுக்கும் கோபத்தைக் கொடுக்க அந்த கோபத்துடனேயே” ஏன்??” என்றான் ஒற்றை வார்த்தையாக.
அவனின் கோபத்தை அசட்டை செய்தவர் ஏனெனில் அவளை மணம் செய்யும் தகுதி உனக்கு இல்லை என்றார் அலட்சியத்துடன்.
அவரின் பேச்சு அவனின் தன மானத்தை சீண்டிவிட
எனக்கா தகுதியில்லை?? அப்படி என்ன தகுதியில்லை என்று கூறுகிறீர்கள்??? படிப்பில்லையா?? அழகில்லையா?? வசதியில்லையா?? அவள் மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன்.காலம் முழுதும் அவளை ராணி போல் என் உள்ளங்கையில் வைத்து தாங்க என்னால் முடியும்.என்னைத்தவிர வேறு ஒருவனாலும் அவளை என்னளவு பார்த்துக்கொள்ள முடியாது.தெரிந்து கொள்ளுங்கள்.என்றான் கர்வத்துடன்.
அவனின் பேச்சைக் கேட்டு கண்மணிக்கும் சுறுசுறு என்று ஏறியதோ!!!
சும்மா நிறுத்துடா!!!! அழகாம் பணமாம் படிப்பாம் ..ஹ்ம்ம் இது மட்டும் என் பேத்தியைத் திருமணம் செய்ய போதுமா?? இதை விட முக்கியமான ஒன்று தேவை தெரியுமா?? அது தான் குலம்!!! என்றார் மூச்சு வாங்க.
நிலவனுக்கும் கோபம் தலைக்கேறி இருந்தது.என் அத்தை பெண்ணை நான் மணம்முடிக்க எனக்கு எல்லா உரிமையும் உண்டு.என்ன சொன்னீர்கள் குலமா??? ஒரே குடும்பத்தில் பிறந்துவிட்டு நான் வேறு குலம் அவள் வேறு குலமாகவா இருக்க போகிறோம்!!! என்றான் நக்கல் குரலில்
அவனின் நக்கல் பேச்சு கண்மணியை இன்னும் தூண்ட ஹ்ம்ம் எல்லாம் அந்த குடும்பத்தைச் சொல்ல வேண்டும்..ஊர் பேர் குலம் கோத்திரம் எதுவும் தெரியாத அனாதைப் பயலை ஏதோ சொந்தப் பிள்ளைபோல் பாசம் காட்டி வளர்க்கிறார்கள் இல்லையா?? நீ இதுவும் பேசுவாய் இதற்கு மேலும் பேசுவாய்.என்றார் ஆத்திரத்துடன்
அவரின் பேச்சின் அர்த்தம் புரிய நிலவனுக்கு சில கணங்கள் எடுத்தது.அர்த்தம் புரிந்ததும் அவனுக்கு கோபம் தான் வந்தது.பூவினியை விட்டு தன்னை விலக்கி வைக்க இப்படி அபாண்டமாக பொய் சொல்லுவதாகவே நினைத்தான்.எனவே
சும்மா என் மேல் உள்ள ஆத்திரத்தில் உளறாதீர்கள் பாட்டி என்று சீறினான்.
அதைக்கேட்டு உளறலா?? ஹ இருக்கும் டா இருக்கும் உனக்கு என் பேச்சு உளறலாகத்தான் இருக்கும்.என்றவர் தன பையிலிருந்து ஒரு பத்திரத்தை எடுத்து நீட்டினார்.
என்னவென்று புரியாமல் அதை வாங்கி பார்த்த நிலவன் திகைத்தான்.அது சட்ட பூர்வமாக அவனைத் தத்தெடுத்த பத்திரம்.நிலவனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.யாரோ கிருஷ்ணன் என்ற நபர் கையெழுத்துப் போட்டு ஜெகநாதனுக்கு அவனைத் தத்துக்கொடுத்திருந்தார்.
நிலவனின் திகைத்த தோற்றம் அவருக்கு திருப்தியைக் கொடுத்ததோ!!! என்ன பேச்சே வரவில்லையா?? இப்போதாவது உன் நிலை என்னவென்று புரிந்ததா?? என்றார் எகத்தாளமாய்.
நிஜமாகவே நிலவனுக்கு பேச்சே வரவில்லைத்தான்.நெஞ்சையும் தொண்டையையும் ஏதோ இறுக்கிப் பிடிப்பதைப் போல் இருக்க தவித்தவன் தன்னைச் சிரமப்பட்டு சமாளித்துக்கொண்டு
இது......இது ........உ ... உண்மை இல்லைத்தானே??? என் மீதுள்ள கோபத்தில் பொய் தானே சொல்லுகிறீர்கள்??? அப்படித்தான் என்று சொல்லுங்கள் என்ற எதிர்பார்ப்பைக் கண்களில் தேக்கி. அவரைப் பார்த்துக் கேட்டான்.
நான் கூறியது உண்மைதான்.வேண்டுமென்றால் இரத்தத்தை எடுத்துக் கூட சோதித்து பார்.இப்போது தான். இதைக் கண்டுபிடிக்க ஆயிரம் வழி இருக்கே!!!! என்றார் கண்மணி அலட்சியத்துடன்.
கூடவே இனியாவது வினியை விட்டு விலகிவிடு.என்னதான் அந்த குடும்பம் உன்னை சொந்தப் பிள்ளை போல ஏற்றுக்கொண்டு அன்பு செய்தாலும் வினிக்கும் உனக்கும் திருமணம் நடப்பதென்பது இயலாத காரியம்.
என் பையன் ஒரு போதும் ஊர் பேர் தெரியாத ஒரு அனாதைக்கு தன் ஒரே ஒரு செல்ல மகளைக் கட்டித்தர மாட்டான்.அதற்கு நானும் அனுமதிக்க மாட்டேன்.
அப்படியே நீ உன் ஆசையை வீட்டில் சொன்னாலும் எதுவும் நடக்காது.இந்த குடும்பம் தான் உடையும்.ஜெகநாதன் உன் மேல் உள்ள பாசத்தில் உனக்காக வினியை பொண்ணு கேட்டாலும் என் மகன் கொடுக்க மாட்டான்.இதனால் மனஸ்தாபம் வந்து அவர்கள் நட்பு உடையும்.அப்படியே குடும்பமும் சிதைந்து போகும்.
உன்னை அனாதையாய் தெரிவில் பிச்சையெடுக்க விடாமல் இப்படியொரு மேல்தட்டுவர்க்க வாழ்க்கையை உனக்கு கொடுத்ததுடன் உன் மீது உண்மையான பாசத்தைப் பொழியும் அந்த குடும்பத்திற்கு நீ என்ன கைம்மாறு செய்யப் போகிறாய்??? உன் சொந்த மகிழ்ச்சிதான் முக்கியம் என்று சுயநலமாய் முடிவெடுத்து அந்த குடும்பத்தைச் சிதைக்கப் போகிறாயா?? இல்லை அந்த குடும்பத்தை மகிழ்ச்சியாய் இதே போல என்றும் இருக்க வைக்க உன் மகிழ்ச்சியைத் தியாகம் பண்ணப் போகிறாயா??
கண்மணியின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனின் செவிவழி நுழைந்து இதயத்தில் தைத்தது.எதுவும் சொல்லாமல் எழுந்து செல்லப் போனவனை இன்னுமொன்றைக் கேட்டுவிட்டுப் போ என்ற கண்மணியின் குரல் நிறுத்தியது.
பூவினிக்கும் உன்மேல் ஏதோ ஈடுபாடு இருப்பது போல் தோன்றுகிறது. மனச்சாட்சி உள்ளவனாய் இருந்தால் இனிமேல் அவள் புறம் கூட திரும்பமாட்டாய், அவள் மனதை குழப்ப மாட்டாய் என்று நினைக்கிறேன். என்றார்.
நிலவனுக்கு உள்ளே சுருக்கென்று வலித்தது.அவனின் வினுவும் அவனை நேசிக்கிறாள்.அது என்ன மாதிரி ஒரு தருணத்தில் தனக்கு தெரியவருகிறது என்று எண்ணியவனின் மனது வேதனையில் சுருண்டது.
அதன் பிறகு அந்த வாரம் முழுதும் தனிமையில் இருந்து மனது வலிக்க வலிக்க சிந்தித்து அவன் எடுத்த முடிவு தான் வினுவை விட்டு விலகுவது என்பது.முதலில் இந்த குடும்பத்தை விட்டே எங்கேயாவது கண் காணாமல் சென்று விடலாம் என்று தான் எண்ணினான்.ஆனால் அது தன மீது பாசத்தைச் சொரியும் அந்த குடும்பத்துக்கு தான் செய்யும் துரோகம் என்று தோன்றியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.இயல்பாகவே வினியை விட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போனான்.
ஒரு நாள் வினியே வந்து தன் நேசத்தைச் சொன்னபோது அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவள் தன்னை வெறுக்கும் படி பேசினான்.அவன் திட்டப்படி எல்லாமே நன்றாகத்தான் நடந்துகொண்டு வந்தது.வினி இங்கு வரும் வரை.
வினி இங்கு வந்த பின்பும் அவன் ஒதுங்கித்தான் போனான்.அவளைப் பார்க்க வேண்டுமென்று தோன்றினால் கூட எங்கேயாவது மறைந்திருந்து அவளைப் பார்த்துக்கொண்டான்.வினியும் அவனைக் கண்டுகொள்ளாமல் தான் இருந்தாள்.
இப்படியே போய்க்கொண்டிருந்தபோது முதலில் அவன் சறுக்கியது அவளைப் புடவையில் பார்த்த போதுதான்.அன்று அவன் தன்னையே மறந்துவிட்டான்.ஓர் மயக்க நிலையிலேயே இருந்தவன் அன்று தன்னை மீறி நடந்துகொண்டான்.
அந்த சம்பவத்தின் பின் ஒவ்வொரு காரணங்களால் வினிக்கும் அவனுக்குமான நெருக்கம் அதிகரித்து அதிகரித்து இதோ!!! இன்று இந்த நிலையில் வந்து நிற்கிறது!!!!
ஹ்ம்ம்ம்........ இனி அவன் என்ன செய்யப்போகிறான்.அவனுக்கு சத்தியமாகப் புரியவில்லை.அன்று அவளின் காதலைப் புறக்கணிக்க வேண்டி இருந்த காரணம் இன்றும் அப்படியே தான் இருக்கிறது.
இவ்வளவு தூரம் நடந்த பின் அவள் அவன் மனதில் இல்லை என்று அவனால் எப்படிக் கூற இயலும்.உன் மனதில் நான் இல்லாமலா என்னை அணைத்து முத்தமிட்டாய் என்று வினி கேட்டால் அவனால் என்ன பதிலைக் கூற முடியும்????
அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள பயந்து தானே அவன் இப்படி ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறான்.
சிறு பெருமூச்சுடன் ஒரு மரத்தின் கீழ் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடினான். மூடிய விழிகளுக்குள் பூவினியின் பூ முகம் வந்து நின்றது. அவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனையின் சாயல் படர.
என்னை அணு அணுவாய் வதைக்காதே வினும்மா.தயவு செய்து என்னைவிட்டு விலகி விடு.என்னை நெருங்கி என்னை கொல்லாதே!!! உன் விடயத்தில் நான் மிகவும் கோழையடி.தொழிலில் எவ்வளவோ சாதித்த நான் உன் நினைவுகளிடம் தோற்றுப்போய் நிற்கிறேன்.என்னால் உன்னை மறக்க முடியவில்லையே!!!!!!
உன்னை விட்டு விலகி இவ்வளவு தூரம் ஓடி வந்த பின்பும் உன் நினைவுகளை மட்டும் என்னால் துறக்க முடியவில்லையே!!! உன்னை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிக்கிறேனடி!!!!!! நீ வேண்டும் வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது!!!!! ஆனால் மூளை உன்னை நெருங்காதே அந்த குடும்பத்துக்கு உன் மீது அன்பை மட்டுமே சொரியும் உறவுகளுக்கு துரோகம் இழைக்காதே என்று எச்சரிக்கிறது.நான் என்ன தான் செய்வேன்!!!!
என்னால் என் காதல் மட்டுமே முக்கியம் என்று சுயநலமாய் முடிவெடுக்க முடியவில்லையே!!!!! அப்படி முடிவெடுத்தால் நான் மனிதனே இல்லை. எனக்கு என் மகிழ்ச்சியை விட என் காதலை விட ஏன் உன்னை விடவுமே அந்த குடும்பமும் அதன் ஒற்றுமையும் தான் முக்கியம் வினும்மா அதன காரணத்தை நீ அறியாய் நான் மட்டுமே அறிவேன்!!! இந்த ஜென்மம் மட்டுமல்ல ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அந்த குடும்பத்துக்கு நான் பட்ட நன்றிக்கடனை தீர்க்க முடியாது.
நெஞ்சைப் பிளக்கும் வலியுடன் நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினான் நிலவன்.
இதற்கு மேலும் ஒழிய முடியாது.வினியை சமாளிக்க ஏதாவது பதிலைத் தேடியே ஆகவேண்டும்.ஏனெனில் நாளை அவன் வீட்டில் நிற்க வேண்டும் இது அவனின் அன்புத்தங்கையின் கட்டளை.ஏனெனில் நாளை மறுநாள் அவனின் செல்லத்தங்கையின் பிறந்தநாள்.அவன் இல்லாமல் அவள் தன்னுடைய ஒரு பிறந்தநாளைக் கூட கொண்டாடியதில்லை.அவளின் பிறந்த நாளுக்கு அவன் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அவள் பிறந்தநாளே கொண்டாட மாட்டாள். அதனால் அவன் நாளை அங்கு போயே ஆக வேண்டும்.
அவனால் இனி வினியை நேரே சந்திக்க முடியுமா?? இனிமேலும் நீ என் மனதில் இல்லை என்று சாதிக்க முடியுமா??? அவனுக்கு புரியவில்லை.ஆனால் இது எல்லாம் முடியத்தான் வேண்டும்.
அவன் என்ன செய்யப் போகிறான்??????????