இதழ்:-35
அவன் அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்த வினியின் முகத்தில் தென்பட்ட பல்வேறு உணர்வுகளின் கலவையே அவள் தான் பேசியதை கேட்டுவிட்டாள் என்பதை மித்திரனுக்கு உணர்த்தியது.
அதைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் அது ஒருவிதத்தில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது.எப்படியோ இது அவளுக்கு தெரிந்தே ஆகவேண்டிய விடயம் தானே!! அவளிடம் எப்படி இதை கூறுவது என்று சிந்தித்தபடி இருந்தான்.இப்போது அவளுக்கே அந்த உண்மை தெரியவந்துவிட்டது.ஓர் நிம்மதிப் பெருமூச்சை எடுத்துவிட்டவன் உள்ளே வா வினி என்று அழைத்தான்.
அமைதியாக உள்ளே வந்தவள் அவன் முகம் பார்த்து நடுங்கிய குரலில் இ...இப்போது அத்தையிடம் நீ பேசியது எல்லாம் உ..உண்மையா மித்து??? என்றாள்.
ம்ம்ம்..உண்மைதான் வினி என்றான் மித்திரன் வருந்திய குரலில்.
உனக்கு ....உனக்கு இது எப்படித் தெரிந்தது?? என்றாள் அழுகையை உள்ளடக்கிய குரலில்
மித்திரன் பொய் சொல்ல மாட்டான் என்று அவளுக்கு தெரிந்தாலும் அவளின் மனம் அவன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது.எப்படி இது சாத்தியம்??? அவளின் அத்தான் எப்படி ஒரு அநாதையாய் இருக்க முடியும்??? அப்படி எண்ணிப் பார்க்க கூட அவளால் முடியவில்லையே! நிலவனின் விலகலுக்கு அவள் எத்தனையோ காரணங்களை எண்ணிப்பார்த்ததுண்டு.ஆனால் கனவிலும் கூட இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்ததில்லையே!!
அவளின் நிலை புரிந்தவன் போல அவளை அங்கிருந்த மெத்திருக்கையில் அமரச் செய்தவன் தானும் அமர்ந்து தமிழின் பிறந்ததினத்தன்று நிலவனின் வாயாலேயே அந்த உண்மையை தான் அறிந்துகொண்டதை அவளுக்கு விளக்கினான்.
அவன் சொல்லச் சொல்ல கண்களில் இருந்து கண்ணீர் வழிய விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள் வினி.அவள் நெஞ்சே வெடித்துவிடும் போல் வலித்தது.
அவள் அத்தான் ஒரு அநாதை.இந்தக் குடும்பத்திற்கும் அவனுக்கும் தொடர்பே இல்லை.கடவுளே இதை நினைக்கும் போது எனக்கே இப்படி வலிக்கிறதே.இந்த உண்மை தெரிந்தபோது அவள் அத்தான் என்ன பாடுபட்டிருப்பான். எப்படித் தவித்திருப்பான்!!!!!!
நெஞ்சு நிறைய என் மேல் நேசத்தை சுமந்துகொண்டு எங்கே அந்த நேசத்தை வெளிப்படுத்தினால் இந்த குடும்பத்தின் ஒற்றுமையை அது குலைத்துவிடுமோ என்று பயந்து காதலிப்பவளையே வெறுப்பது போல் நடித்து.....தன துன்பத்தை யாரிடமும் கூற முடியாமல் மனதிலேயே புதைத்து வெளியே சிரிப்பதாய் நடித்து..............என்ன ஒரு கொடுமை.அவனின் துன்பத்தை தனதாய் உணர்ந்த வினியின் மனம் தவித்து துடித்தது.
நெஞ்சின் பாரம் தாங்காமல் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு கண்ணீர் சொரிந்தாள்.
அவளின் நிலை அவனுக்கு புரிந்தது.சற்று நேரம் அவளை அழவிட்டவன் பின் மென்மையாக அவள் தலையை வருடி. உன் நிலை எனக்கு புரிகிறது வினி.எனக்குமே இது சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சிதான்.ஆனால் நீ ஒன்றை எண்ணிப்பார் இத்தனை நாட்கள் அவனின் விலகலுக்கு காரணம் தெரியாமல்.
தவித்தாய்.இப்போது அவனின் செயல்களுக்கு காரணம் தெரிந்துவிட்டது.
இனி எப்படி உன் அத்தானை உன்னிடம் கொண்டு வருவது. அவன் துன்பத்தை எப்படித் தீர்ப்பது என்று யோசிடா.இவ்வளவு நாளும் நீங்கள் இருவரும் அனுபவித்த துன்பமே போதும். இனிமேல் மகிழ்ச்சி மட்டும் தான் உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.என்றான் கனிந்த குரலில்.
மித்திரனின் பேச்சு வினியின் மனதையும் சற்றுத் தெளிய வைத்தது.கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவள்.
நான் என்ன பண்ணட்டும் மித்து?? இப்போவே அத்தானிடம் சென்று பேசட்டுமா??
ம்ஹும்..வேண்டாம் வினி.நீ சென்று என்ன பேசினாலும் நிச்சயம் அவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.அவன் மனதில் அவன் ஒரு அநாதை.அதனால் அவனை தன மருமகனாக உன் அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.அப்படி அவன் உன்னைத் திருமணம் செய்ய நினைத்தால் அதனால் இந்தக் குடும்பத்தின் ஒற்றுமையே சிதைந்துவிடும் என்ற எண்ணத்தை பாட்டி ஆழமாகப் பதிய வைத்திருக்கிறார்கள்.
அவனைப் பொறுத்தவரை தன மகிழ்ச்சியை விட இந்தக்குடும்பத்தின் மகிழ்ச்சிதான் முக்கியம்.இந்த குடும்பத்திற்கு தன்னால் சிறு துன்பம் கூட வந்துவிடக்கூடாதென்று நினைக்கிறான்.
அதனால் அவன் மனதில் என்னதான் காதல் இருந்தாலும் அவன் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டான்.அது அநாதையான தன மீது இத்தனை பாசத்தைப் பொழியும் இந்தக் குடும்பத்திற்கு தான் செய்யும் துரோகம் என்று எண்ணுகிறான்.
இதற்கு என்ன தான் தீர்வு மித்து?? இதற்கு மேலும் என்னால் அத்தானைவிட்டு இப்படி விலகி இருக்க முடியாதுடா.அவரின் காயங்கள் அத்தனைக்கும் மருந்தாக நான் அவர் அருகிலேயே இருக்க வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது.
வினி ஒன்று சொல்லு?? பாட்டி சொன்னது போல நிஜமாகவே மாமா அவனை அநாதை என்று மறுப்பார் என்று எண்ணுகிறாயா??
எனக்கு அப்படித் தோன்றவில்லை மித்து.தான் பெற்ற மகளான என்னிடம் கூட அத்தானைப் பற்றிய உண்மையைக் கூறாமல் ரகசியத்தைக் கட்டிக்காப்பவர் எப்படி அப்படிச் செய்வார்?? அதோடு அப்படி எண்ணுபவராய் இருந்தால் சிறுவயது முதலே என்னை அத்தானோடு பழக அனுமதித்திருப்பாரா சொல்லு.
ம்ம் நீ சொல்வது சரி தான் வினி.அவனைக்குறித்து மாமா பேசும் போது கவனித்திருக்கிறேன்.அவர் குரலில் அப்படி ஒரு பெருமை வழியும். அத்தோடு இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளிடம் கூட அவன் பற்றிய உண்மையை கூறாமல் இந்த குடும்பத்தின் மூத்த வாரிசாயே அவனை மதிப்புடன் நடத்துகிறார்கள்.இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பாட்டி சொன்னது போல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.பாட்டி அவனிடம் சொன்னது எல்லாமே உன்னையும் அவனையும் பிரிப்பதற்கு பாட்டி கையாண்ட யுக்தி.
ஆனால் ஏன் மித்து பாட்டி இப்படிச் செய்தார்கள்? என்றாள் தாள மாட்டாமல்.
ஏன் என்று மித்திரன் விளக்கவும்
வினியின் முகம் கோபத்தில் ஜொலித்தது.
என்ன முட்டாள்த்தனம் மித்து இது.அவர்கள் பிள்ளைகள் காலத்துக்கும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசைக்காக எங்கள் வாழ்க்கையை கெடுப்பார்களா??? எங்களுக்கென்று மனசு இல்லையா?? அதில் ஆசைகள் இல்லையா?? அவர்கள் ஆசைக்காக எங்கள் ஆசைகளை அழிப்பார்களா?? இவ்வளவு சுயநலமா அவர்களுக்கு ச்சே.அவர்களை என் பாட்டி என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது.
வினியின் கோபத்தை ஆமோதிப்பவன் போல சற்று நேரம் மௌனமாக இருந்தவன்.அவர்கள் செய்தது பெரிய தப்புத் தான் வினி.மூன்று பேருடைய வாழ்க்கையோடு விளையாடி இருக்கிறார்கள். அவர்கள் தப்பை சீக்கிரமே உணர்வார்கள் என்றான்.
ஹ்ம்ம் இவ்வளவு திட்டம் தீட்டி தன எண்ணத்தை நிறைவேற்ற முயல்பவர்கள் தன தவறை உணருவார்களா என்ன!!!
திட்டம் தீட்டி தப்பு செய்பவர்களை அதேபோல திட்டம் தீட்டி நாம் அவர்களின் தப்பை உணரவைக்க முடியாதா என்ன??
என்ன சொல்கிறாய் மித்து??
சொல்கிறேன் என்றவன் தீவிரமான முகத்தோடு ஏதோ கூறினான்.முதலில் குழப்பத்தோடு அவன் முகம் பார்த்து ஏதோ மறுத்துக் கூறியவள் பின் அவன் பேச்சில் தெளிந்தவளாய் தலையசைத்து சம்மதித்தாள்.
இதழ்:-36
பாட்டி..
வாடா கண்ணா
அடுத்தவாரம் கிளம்ப வேண்டும் பாட்டி.எண்ணிப்பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.உங்களை வினியை எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் என்று கூறி ஓர் ஏக்கப் பெருமூச்சுவிட்டான் மித்திரன்.
அடுத்தவாரமேவா??
ம்ம்
இன்னும் இரண்டு வாரம் இருக்கிறதென்றாயே ??
அது போன வாரம் சொன்னது பாட்டி.
கண்மணியின் முகம் ஏதோ சிந்தனையைக் காட்டியது.
என்ன பாட்டி சிந்தனை ??
ஒன்றுமில்லை.ஆமாம் உன் மாமா எங்கே??
அவரது அலுவலக அறையில் இருக்கிறார் பாட்டி.
ஒ என்றவர் ஏதோ சிந்தனையுடன் எழுந்து அலவலக அறை நோக்கி நடந்தார்.
அவரையே பார்த்திருந்த மித்திரனின் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது.
அந்த புன்னகை சற்று நேரத்தில் வினி உன்னை உன் அப்பா அழைக்கிறார் பார் என்று மேகலா அழைக்கவும் முறுவலாக மலர்ந்தது.
வினி கூடத்தைக் கடந்து தந்தையின் அறைக்குள் செல்லும் போது மித்திரனைப் பார்த்தாள்.அவன் கட்டை விரலை உயர்த்தி விழிகளை மூடித்திறந்து லேசாகப் புன்னகைத்தான்.இவளும் லேசாக தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே வா டா குட்டி என்றழைத்தவர்
உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும் டா என்றார்.
சொல்லுங்கப்பா
உனக்கும் வயது வந்துவிட்டது கண்ணம்மா.இவ்வளவு நாளும் படிக்கிறேன் அது இதுவென்று காலத்தைக் கடத்தியாகிவிட்டது.இனிமேலும் உன் திருமணத்தை தள்ளிப்போட முடியாது என்றவர் வினியைப் பார்த்தார்.
அவள் எதுவும் கூறாது அமைதியாய் இருக்கவே நீ எங்களுக்கு ஒரே பெண்.உன்னை வெளியிடத்தில் கொடுக்க எனக்கும் உன் அம்மாவிற்கும் விருப்பமில்லைடா. அதனால் நாங்கள் ஒரு முடிவு செய்திருக்கிறோம்.சொல்லப் போனால் உன் பாட்டியின் ஆசையும் கூட இது தான்.
பூவினி முகம் இறுக தலையை குனிந்தாள்.
அதை வெட்கம் என்று எண்ணிய பத்மனின் முகத்தில் புன்னகை பூத்தது.நான் சொல்லவருவது யாரையென்று உனக்கு புரிகிறது என்று நினைக்கிறேன்.இருந்தாலும் சொல்கிறேன் நம்ம மித்துவை உனக்கு மணமுடிக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம் டா.அவனுக்கு இதில் சம்மதமாம்.உனக்கு சம்மதமாடா?? என்று பத்மன் வினவவும்
மேகலா உனக்கு இதில் பூரண சம்மதம் என்றால் மட்டும் சரி சொல்லு வினி.எங்கள் ஆசைக்காக பார்க்காதே.உன் மனதில் வேறு எதுவும் இருந்தாலும் சொல்லு.நாங்கள் புரிந்துகொள்ளுவோம் என்றார் அர்த்தத்துடன்.
சற்று நேரம் மௌனம் காத்த வினி.பின் சிறு தயக்கத்துடன்.சம்மதம் என்று விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.பத்மனின் முகம் அந்த பங்கயம் போலவே மலர மேகலாவின் முகமும் ஒருவினாடி சுருங்கி பின் தெளிந்து மலர்ந்தது.
மீண்டும் வினி கூடத்தைக் கடக்கும் போது மித்திரன் என்னவென்பதாய் சைகை செய்யவும் சிறு சிரிப்புடன் அவனைப் போலவே கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு சென்றாள்.
அதன் பிறகு மித்திரனிடம் இருந்து தாய்க்கு அழைப்பு பறந்தது.அதன் தொடர்ச்சியாக கங்கா கண்மணிக்கு அழைத்தார்.
மித்திரன் அடுத்த வாரம் கிளம்புவதால் அவனுக்கு அவள் தான் என்று சிறு நிச்சயதார்த்தம் போல வீட்டோடு ஒன்றை நடத்திவிடுங்கள்.எதனையும் உறுதி செய்வது நல்லதல்லவா? என்று கூறினார்.
கண்மணிக்கும் அந்த எண்ணம் இருந்தது.என்னதான் பேசி வைத்தாலும் உறுதிப்படுத்தி வைப்பது நல்லது தானே.சும்மா பேசி வைத்தால் ஏதோ ஒரு சூழ்நிலையில் மாறவும் வாய்ப்பிருக்கும் ஒரு மோதிரத்தை மாற்றி நிச்சயம் செய்துவிட்டால் எதுவும் செய்ய முடியாதே.அதன் பின் வினியே மனசு மாறினால் கூட பத்மன் விடமாட்டான்.பத்மன் எவ்வளவு தூரம் அமைதியாய் விட்டுக்கொடுத்து போகிறாரோ சில விடயங்களில் அதே அளவு பிடிவாதத்துடன் இருப்பார்.
இதை எண்ணிப்பார்த்த கண்மணி மகனிடமும் மருமகளிடமும் நிச்சயத்தைக் குறித்துப் பேசினார்.மித்திரனுக்குத்தான் வினி என்று முடிவான பின் நிச்சயம் செய்துவிடுவதில் பிழையிருப்பதாக அவர்களுக்கும் தோன்றவில்லை.எனவே அதற்கு சம்மதம் சொன்னவர்கள் பெரியளவில் செய்வதற்கு கால அவகாசம் போதாது என்றதனால் தங்கள் குடும்பத்தோடு மட்டும் சிறியளவில் அதை நடத்துவதென தீர்மானித்தனர்.
அதன் முதற்கட்டமாக அன்று குடும்பத்தினர் அனைவருடனும் அது குறித்து பேசினர்.
வழக்கம் போல பெரிய வீட்டில் அனைவரும் கூடியிருந்தனர்.பத்மன் வினி மித்திரனின் திருமணம் குறித்து பேசியபோது பெண்களுக்கு முன்பே தெரியுமாதலால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் இப்படி ஒரு பேச்சு நடக்கிறது என்று முன்பே தெரிய வந்திருந்தது.எனவே அனைவரும் அதை இயல்பான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.அவர்களின் மகிழ்ச்சியில் அந்த கூடத்தின் ஓரம் நின்றுகொண்டிருந்த நிலவனின் உடல் ஒரு கணம் அதிர்ந்து இறுகியதை யாரும் கவனிக்கவில்லை.ஆனால் நொடிப்பொழுதில் அவனில் வந்து போன மாற்றத்தை வினி கண்டுகொண்டாள்.
அது அவளுக்கு மகிழ்ச்சியையும் துன்பத்தையும் ஒருங்கே அளித்தது.
வினி நிலவனைப் பார்த்துக்கொண்டிருக்க மித்திரனின் பார்வை தாரணியைத் தேடியது.அவளோ தாய்க்குப் பின்னே நின்று அவனை எரிப்பது போல் முறைத்துக்கொண்டிருந்தாள். அவளின் கோபத்துக்கான காரணம் புரியாமல் என்ன என்பதாய் புருவத்தை சுழித்து வினவவும் மீண்டும் அவனுக்கு ஓர் முறைப்பையே கொடுத்துவிட்டு சட்டென கூடத்தின் பக்கவாட்டுக் கதவின் மூலம் தோட்டத்தை நோக்கி நடந்தாள்.
சற்றுப் பொறுத்து மற்றவர்கள் கவனத்தைக் கவராமல் மித்திரனும் அந்த இடத்தைவிட்டு நழுவினான்.அவர்களின் வீட்டின் முன்புறம் வெறும் பூந்தோட்டம் என்றால் பின்புறம் பழத்தோட்டம்.
மா பலா வாழை சப்போட்டா மாதுளை எலுமிச்சை இப்படி ஏராளமான மரங்கள் வளர்ந்து சோலை போல் கூடலாய் இருக்கும்.உச்சி வெய்யில் வேளையில் கூட அந்த சோலைக்குள் ஒளிக்கீற்றுகள் நுழையாது சிலுசிலுவென்று காற்று வீச குளுமையாய் இருக்கும் அந்தப்பகுதி.
தாரணி அங்கு தான் இருந்தாள்.மித்திரன் அங்கு செல்லவும்
வாங்க சார் வாங்க
ஏதோ பாட்டியின் தவறை உணர வைப்பேன்.வினியையும் நிலவனையும் சேர்த்து வைப்பேன் அப்படி இப்படி என்று சவடால் விட்டீர்கள்.இப்போது கதையே மாறுகிறதே என்றாள் ஆத்திரத்துடன்.
அவளின் பேச்சை ரசித்துச் சிரித்தவன் ஒ இது தான் உன் கோபத்திற்கு காரணமா?? ஆனாலும் நீ இவ்வளவு புத்திசாலியாய் இருந்திருக்க வேண்டாம் தாரணி என்றான் நக்கலாய்.
அவனின் நக்கல் பேச்சு இன்னும் கோபத்தைக் கிளப்ப
ஹலோ இந்த நக்கல் பேச்செல்லாம் இங்கே வேண்டாம்.சொல்லுங்கள் என்னதான் நடக்கின்றது?? என்றாள்
எப்போவும் போல் கால் தான் நடக்கிறது.இதில் உனக்கென்ன சந்தேகம்.
அய்யே ஜோக்கு. சகிக்கல என்று முகத்தைச் சுளித்தவள்
இதோ பாருங்கள் சும்மா வினி அக்காவிடம் ஏதாவது சொல்லி ஏமாற்றி சம்மதம் என்று சொல்லச் சொல்லிவிட்டு வில்லன் வேலை பார்க்கலாம் என்று எண்ணாதீர்கள் அப்படி மட்டும் ஏதாவது நடந்தது நானே உங்களைக் கொன்றுவிடுவேன்.
தாரணியின் பேச்சைக் கேட்டு சிரிப்போடு சற்று கோபமும் வந்தது மித்திரனுக்கு அவனைபற்றி என்னதான் எண்ணியிருக்கிறாள் இவள்.அவனைப் பார்த்தால் அப்படிப்பட்ட வில்லன் போலவா இருக்கிறது.மகளே உன்னோட கொழுப்புக்கு இருக்குடி என்று பல்லைக்கடித்தவன்.
அதெப்படி தாரணி நீ சின்னவயசில இருந்தே இப்படியா இல்லை இப்போது தானா?? என்றான் தீவிரமான குரலில்
அவள் புரியாமல் எப்படி என்று வினவவும்
இப்படி லூசு போல பேசுவதைக் கேட்கிறேன் என்றான்.மட்டம் தட்டும் குரலில்
தாரணிக்கு ஆத்திரத்தில் முகம் சிவந்தது.எதுவும் பேசமுடியாமல் அவள் முறைக்கவும்
பின்னே என்ன எதையும் நல்லவிதமாக யோசிக்கவே மாட்டாயா?? அது சரி சிந்திப்பதற்கு சற்றாவது மூளை வேண்டுமே.இங்கே தான் மேல்மாடி காலியாச்சே என்று மேலும் மட்டம் தட்டினான்.
தாரணிக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது.நீ பண்ணுவதெல்லாம் வில்லன் வேலை.இதில் நான் உன்னை நல்லவிதமாக வேறு எண்ணவேண்டுமா?? என்றாள் அவன் அவளை மட்டம் தட்டிய ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல்.
அவள் பேச்சில் அவனுக்கும் சுர்ரென்று ஏற ஏய்...... என்று ஆத்திரத்தில் பல்லைக்கடித்தவன் சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தான்.
இழுத்த வேகத்தில் அவள் அவன் மேல் வந்து விழவும் அவள் கைகள் இரண்டையும் பின்பக்கமாய்ச் சேர்த்து முறுக்கியவன் ஏய் என்ன கொழுப்பா நானும் சின்னப் பெண் என்று பார்த்தால் நீ ரொம்பத்தான் துள்ளுகிறாய். என்னது வில்லன் வேலை பார்க்கிறேனா?? உனக்கு வில்லன் என்ன செய்வான் என்று தெரியுமா?? காட்டவா?? என்று விழிகள் சிவக்க ஆத்திரத்துடன் மொழியவும்
முதன் முறையாக அவனின் இத்தகைய கோபத்தைக் கண்ட தாரணிக்கு சர்வமும் நடுங்கியது.தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது.அவனின் சிவந்த விழிகளையும் இரும்புப் பிடியையும் உணர்ந்தவளின் உடல் நடுங்கியது.
தாரணியின் திகைத்த முகத்தையும் தன் கைகளுக்குள் இருந்த அவள் மென்னுடலின் அதிர்வையும் கண்ட மித்திரன் அவளை சட்டென விடுவித்துவிட்டு தலையைக் கோதி தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்.
இதோ பார் தாரணி நீ நினைப்பது போல ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்யும் அளவு நான் கேவலமானவன் இல்லை.அந்தத் தேவையும் எனக்கு இல்லை.இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள் வினி எனக்கு ஒரு தங்கை போல இங்கு வந்து பழகிய சில நாட்களிலேயே நான் அதை வினியிடம் கூறிவிட்டேன்.அவளும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள்.வினியின் காதலும் எனக்கு அப்போதே தெரியும்.
ஆனால் நீ வந்து அவளை விட்டு விலகியிரு என்று என்னை மிரட்டவும் உன்னை சற்று சீண்டிப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது.அதனால் தான் அப்படிப் பேசினேன். என்னுடைய அன்றைய பேச்சு இப்படி என்னை உன் மனதில் ஒரு வில்லன் போல பதியவைக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கவில்லை.
இப்போது எனக்கும் வினிக்குமான இந்த நிச்சயம் கூட ஒரு நாடகம் தான்.இதில் உன் பங்களிப்பும் எங்களுக்கு தேவை அதுகுறித்து உன்னுடன் பேசவே உன்னைத்தேடி வந்தேன்.ஆனால்..... என்றவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்த கல்லிருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டான்.
தாரணிக்கு தன் தவறு புரிந்தது. அவள் மனம் எப்போதும் அவனை தவறாக எண்ணியதில்லையே. வினியுடன் நிச்சயம் என்றதும் அவளுக்குள் எழுந்த இனம் புரியாத எரிச்சலில் தானே அவள் இப்படிப் பேசியது.
சற்று நேரம் மௌனமாக இருந்தவள் பின் என்னை மன்னித்துவிடுங்கள்.நான் அப்படிப் பேசியது தவறு தான் என்றாள் உள்ளே சென்ற குரலில்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் ப்ச்.. அதைவிடு நாம் இப்போது வினி விடயமாய் சற்றுப் பேசலாமா என்றான்.
அவள் சம்மதமாய்த் தலையசைக்கவும் தன்னுடைய திட்டத்தை விவரித்தான்.
அதைக்கேட்டு தாரணியின் விழிகள் விரிந்தது.நான் எப்படி அதை செய்ய முடியும்.
ஏன்?? அது அவ்வளவு கஷ்டமான விடயமா??
அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்றில் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.அவள் விழிகளை ஊடுருவிய அவன் பார்வையை சந்தித்ததும் முகம் லேசாகச் சிவக்க தலை குனிந்தவள்
வீட்டுப் பெரியவர்கள் என்னைப்பற்றி என்ன எண்ணுவார்கள் என்றாள் சங்கடமான குரலில்.
நீ எதுவும் பேசவே வேண்டாம்.அமைதியாகவே இரு.மற்றதை நான் பார்த்துக்கொள்வேன்.
அமைதியாக இருந்தாலும் நீங்கள் கூறுவதை நான் ஆமோதிப்பதாய்த் தானே அர்த்தம்.ம்ஹும்..என்னால் முடியாது.
பெரிதாக அக்கா அத்தான் என்று உருகினாய்.உன் அன்பு அக்காவின் வாழ்க்கைக்காக இது கூட செய்ய மாட்டாயா?? வெறும் வாய்ப்பேச்சு மட்டும் தானா??
ம்ம்....ஆனாலும்....
இதோ பார் தாரணி.நாங்கள் ஒன்றும் தவறு செய்யப்போவதில்லை.செய்வது எல்லாம் நன்மைக்கு தான்.எல்லாம் நல்லபடியாக முடிந்த பின் அது மற்றவர்களுக்கும் புரியும்.அவர்கள் ஒன்றும் உன்னைத் தவறாக எண்ண மாட்டார்கள்.இதில் உன்னுடைய பங்களிப்பு மிகவும் முக்கியம்.தயவு செய்து புரிந்துகொள்.
ம்ம் சரி வினிக்கா அத்தானுக்காக இதைச் செய்கிறேன்.
நீ இதைச் சொல்லாவிட்டாலுமே கூட நான் இதை நீ எனக்காகச் செய்கிறாய் என்று எண்ண மாட்டேன்.பயப்படாதே.என்றான் கேலிக்குரலில்.
மித்திரனின் பேச்சைக் கேட்டு வந்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியபடி சரி நான் செல்கிறேன் என்று கிளம்பினாள்.
இரு நானும் வருகிறேன் என்றபடி கூட நடந்தவன் தாரணி என்றழைத்தான்.
அவள் நிமிர்ந்து பார்க்கவும் நம்முடைய நாடகத்தில் உன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு உன்னை சற்று தயார்ப்படுத்திக்கொள்.நான் வேண்டுமென்றால் அதற்கு உதவவா??? என்றான் விழிகளைச் சிமிட்டி.
அவன் பேச்சைக் கேட்டு அவனை முறைத்தவள் அவன் விழிகளில் வழிந்த குறும்பைக் கண்டு சிரித்துவிட்டாள்.
மித்திரனும் சிரித்தபடியே எல்லாம் நன்றாக நடக்கும் எதையும் எண்ணிக் குழம்பாதே என்று மென்மையான குரலில் கூறியவன் சிறு தலையசைப்புடன் விலகி நடந்தான்.
பின்புறத்தோட்டத்தில் இருந்து ஒன்றாய் சிரிப்புடன் வெளியேறிய இருவரையும் எதேச்சையாக கண்டுவிட்ட நாகநாதனின் புருவங்கள் முடிச்சிட்டன.