• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 40

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
இதழ்:-40



அதுவரை அந்த கூடத்தின் ஓரத்தில் இருந்து தான் செய்த தவறுக்காக வருந்தி கண்ணீர் வடித்த கண்மணி மெல்ல எழுந்து எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று குரல் தழுதழுக்க கூறிவிட்டு தளர்ந்த நடையுடன் அங்கிருந்து நகர்ந்தார்.





அப்போது கொஞ்சம் இருங்கள் பாட்டி என்று அவரைத் தடுத்த மித்திரன் அனைவரையும் பார்த்து நான் இப்போது உங்கள் அனைவரிடமும் ஒரு உண்மையைக் கூற வேண்டும் என்றவன்.







பாட்டி செய்தது மிகப் பெரிய தவறு தான்.அந்த தவறை சீர் செய்வதற்காகவே நானும் வினியும் தாரணியும் திட்டம் போட்டு அவர்கள் தவறை உணர வைத்து அவர்கள் வாயாலேயே அதை வெளியே கொண்டு வந்தோம்.மற்றப்படி எனக்கும் சரி வினிக்கும் சரி ஒருத்தர் மேல் ஒருத்தர் வேறு நோக்கம் எதுவுமே எப்போதும் இருந்ததில்லை.நான் அவளை என் சின்னத் தங்கையாகவே பார்க்கிறேன்.அவள் என்னை ஒரு அண்ணனாகத் தான் நினைக்கிறாள்.அவள் மனதில் எப்போதும் நிலவனுக்கு மட்டும் தான் இடம் இருக்கிறது.



இது அனைத்துமே பாட்டி தான் செய்த தவறை உணருவதற்காக நாங்கள் திட்டம் போட்டு நடத்திய நாடகம்.இது முன்பே என் அம்மாவுக்கும் ஜெகன் அங்கிளுக்கும் தெரியும்.அவர்களும் எங்களுக்கு உதவி செய்தார்கள்.என்றபடி ஜெகநாதனைப் பார்த்தான்.



தொண்டையைச் செருமிக்கொண்டு ம்ம் நேற்று இரவு தான் வினி மூலம் எனக்கு இது தெரிய வந்தது.அவர்களின் செயலில் ஒரு நியாயம் இருந்ததால் நானும் அதற்கு ஒத்துழைத்தேன்.அத்துடன் இதற்கு மேலும் நிலவனின் பிறப்பைக் குறித்து எதுவித சந்தேகங்களும் குழப்பங்களும் எழக்கூடாது.எப்போது இந்த உண்மை இப்படி வெளிப்பட்டதோ இதற்கு மேலும் அதை மறைத்து வைப்பதில் அர்த்தமில்லை.இதற்கு மேல் என் மகன் வருத்தப்படக் கூடாது என்றார் ஜெகன்.





இதைக் கேட்டு கண்மணி திகைத்து மித்திரனைப் பார்க்கவும் அவர் கரத்தைப் பற்றியவன் என்னை மன்னித்து விடுங்கள் பாட்டி உங்களை எல்லோர் முன்னும் அவமானப்படுத்த வேண்டும் என்று இதைச் செய்யவில்லை.நீங்கள் செய்த தவறை நீங்கள் உணரவேண்டும் என்று தான் இப்படிச் செய்தேன் பாட்டி.யார் என்ன செய்தாலும் வினி மனதில் இருந்து நிலவனை நீக்கவே முடியாது பாட்டி.அவனுடன் திருமணம் நடக்காவிடில் அவள் காலம் முழுதும் திருமணமே செய்யாமல் இருப்பாளே தவிர வேறு யாரையும் மனசால் கூட நினைத்துப் பார்க்க மாட்டாள் பாட்டி. அவள் மனதுக்கு பிடித்தவனுடன் அவள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் அதற்கு தான் இப்படிச் செய்தேன்.நான் செய்தது தவறாய் இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.என்றான்.





அவன் பேச்சைக் கேட்ட கண்மணி இல்லைக் கண்ணா சிறியவர்கள் உங்களுக்கு இருந்த தெளிவும் பரந்த மனமும் எனக்கு இல்லாமல் போய்விட்டது.என் தவறை நான் உணர்ந்துகொண்டேன் பா.நீங்கள் எல்லோரும் தான் என்னை மன்னிக்க வேண்டும் என்று நாத்தழுதழுக்க எல்லோரையும் பார்த்து கைகூப்பினார்.





மெல்ல அவரின் கரத்தைப் பற்றிய ஜெகநாதன் பரவாயில்லை விடுங்கள் மா.எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வோம்.இப்படி ஒரு சம்பவம் நடக்காவிடில் எங்கள் மனத்திலும் காலம் முழுதும் அவனிடம் உண்மையை மறைத்த ஒரு குற்றவுணர்ச்சியுடனேயே வாழ்ந்திருப்போம்.இப்போது அது இல்லாமல் மனம் மகிழ்ச்சியாய் இருக்கிறது.கெட்டதிலும் ஒரு நன்மை என எண்ணிக்கொள்வோம்.வருந்தாதீர்கள் என்று அவரை சமாதானப் படுத்தினார்.



மற்ற அனைவரும் அவர் பேச்சை ஆமோதித்த பாவனையில் அமைதியாய் நிற்க பத்மன் மட்டும் கோபத்தில் முகம் இறுக அங்கிருந்து சென்றுவிட்டார்.அதைக் கண்டு கண்மணியின் முகம் வாடவும் மேகலா வருந்தாதீர்கள் அத்தை.உங்கள் மகனின் கோபத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாதா?? சீக்கிரமே அது மறைந்துவிடும் என்று அவரை சமாதானப் படுத்தினார்.





என்னதான் கண்மணி செய்தது மிகப்பெரிய தவறாய் இருந்தாலும் தன் தவறை உணர்ந்து வருந்துபவர்களை மேலும் குத்திக் காட்டி வருத்த அங்கிருந்த யாருக்கும் மனசு வரவில்லை.எனவே பெரிய மனதோடு அவர் செய்த தவறை மன்னித்து பெருந்தன்மையாக பேசினர்.





அதுவரை அங்கு நடந்த பேச்சினை வியப்பும் திகைப்புமாக கவனித்துக் கொண்டிருந்த நிலவனுக்கு எல்லாமே பெரும் குழப்பத்தைக் கொடுத்தது.தான் மனதை மறைத்து குடும்பத்துக்காக நடிக்க தனக்கு தெரியாமலேயே தனக்காக ஒரு நாடகம் போடப்பட்டிருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது.





இப்படித் திட்டம் போட்டு பாட்டி வாயாலேயே உண்மையை வரவழைப்பதென்றால் இவர்களுக்கு முன்பே எல்லா உண்மையும் தெரியுமா?? நான் அவளை வெறுப்பது போல் நடித்தேன் என்று வினிக்கு தெரியுமா?? ஆனால் எப்படி??? அன்று காரில் முத்தமிட்டதை வைத்து சந்தேகம் கொண்டிருப்பாளோ??? அப்படியிருந்தாலும் அதற்கு காரணம் பாட்டி தான் என்று எப்படித் தெரிந்தது???



அவன் மூளைக்குள் ஆயிரம் வினாக்கள் முட்டி மோதி எழுந்தன.வினியிடம் கேட்கலாமா என்று தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தால் அவள் நின்ற இடம் காலியாக இருந்தது.அதற்கிடையில் எங்கே சென்றுவிட்டாள் என்று விழிகளைச் சுழற்றியவனின் பார்வையில் மித்திரன் விழ மெல்ல அவனை நெருங்கினான்.





நிலவனைக் கண்டு பற்கள் தெரியப் புன்னகைத்தவன் என்ன பாஸ். இவ்வளவு நாளும் சுஜம்வரத்துக்கு வந்த எதிரி நாட்டு மன்னனை முறைப்பதைப் போல் முறைத்துக்கொண்டிருந்தீர்கள்.இப்போது பார்வையாலேயே சாமரம் வீசுகிறீர்கள். என்ன விடயம் என்று கேலியாக வினவினான்.





அவனின் கேலியில் தானும் மகிழ்ச்சியாகப் புன்னகைத்தவன் அவனின் கையைப் பற்றி வெறுமையான என் வாழ்க்கை இப்படி ஒரே நாளில் வண்ண மயமானதாக மாறும் என்று நான் எண்ணவே இல்லை. எல்லாம் உங்களால் தான்.மிக்க நன்றி மித்திரன் என்றான்.





ஹலோ பாஸ் பாஸ் இந்த நீங்கள் வாங்கள் போங்கள் எல்லாம் இனி இங்கே வேண்டாம்.இப்போது தான் நான் உங்கள் எதிரியில்லை என்று தெரிந்துவிட்டதல்லவா.அதனால் இனி என்னுடன் நண்பன் போலவே பழகுங்கள் உங்களுக்கு மித்திரனாய் இருப்பதைத் தான் நானும் விரும்புகிறேன்.



ஹ ஹ ஹ....சரி என்னைச் சொல்லிவிட்டு நீ மட்டும் மரியாதைப் பன்மையில் அழைக்கிறாய்.



ஓஹோ அப்படி ஒன்று இருக்கிறதோ.சரிடா இனி நானும் அப்படியே பேசுகிறேன் என்றான்.



இருவர் முகத்திலும் மகிழ்ச்சியும் பாசமும் புன்னகையாய் பொங்கி வழிந்தது.



மித்திரன்



ம்ம்



எனக்கு ஒன்று சொல்கிறாயா??



என்ன??



இப்படி என் விலகலுக்கு உன் பாட்டி தான் காரணம் என்று எப்படித் தெரிந்தது. நான் வினியை வெறுப்பது போல் நடிக்கிறேன் என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்??



ஹ ஹ.....இந்தக் கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியும்.ஆனால் நான் அதைச் சொல்வதை விட உன் ஆள் சொன்னால் தான் சுவாரஸ்யமாய் இருக்கும்.அதனால் உன் ஆளிடமே கேட்டுக்கொள். அவள் உன் மேல் செம கோபத்தில் இருக்கிறாள் எதற்கும் நான்கடி தள்ளி நின்றே பேசு.



அட நீ வேறப்பா ஏற்கனவே கன்னம் பழுக்கும் அளவிற்கு வாங்கியாகிவிட்டது.என்று நிலவன் சோகத்துடன் கூறவும்





ஹ ஹ ஹ....நீ பண்ணின வேலைக்கு அவள் உன்னை அடிக்காமல் விட்டால் தான்டா ஆச்சரியம். இனி அவளை சமாளிப்பது உன் சாமர்த்தியம் என்று கூறவும்





சரி டா மச்சான் நான் என் ஆளை கரெக்ட் பண்ணி அவளிடமே கேட்டுக்கொள்கிறேன் என்று கிளம்பவும்





என்னது மச்சானா?????? என்றான் மித்திரன் வாய் பிளந்து.





என் வினியின் அண்ணன் எனக்கு மச்சான் தானே என்று கூறி நிலவன் சிரிப்புடன் கண்சிமிட்டவும்.



ஓஹோ அப்படி வருகிறாயா?? அப்படியென்றால் நீயும் எனக்கு மச்சான் தான்டா மச்சான் என்றான் மித்திரன் சிரிப்புடன்





நிலவன் புரியாது பார்க்கவும் தாரணி உன் தங்கை போலன்னு கேள்விப்பட்டேனே டா மச்சான் என்றான் மித்திரன் குறும்புடன்





அவன் கூறியது புரிந்து டேய் பாவி என்று நிலவன் அவனைப் பார்க்கவும்



ஹ ஹ..சரி சரி டென்ஷன் ஆகாம நீ முதல்ல போய் உன் ஆளப் பாருடா மச்சான்.அப்புறம் என்னைப் பார்த்துக்கலாம் என்று கூறி மித்திரன் சிரிக்கவும் நிலவனும் சிரித்தபடியே அவனின் தோளில் பலமாகத் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.