இதழ்:-41
அன்று மாலை அலுவலகத்தில் இருந்து சற்று சீக்கிரமே வீடு திரும்பியிருந்த நிலவன் வழக்கம் போல தன்னுடைய அறையின் பால்கனியில் இருந்து வினி வீட்டுத் தோட்டத்தை வெறித்தான்.
அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.மித்திரனிடம் வினியை சமாதானம் செய்து அவளிடமிருந்தே தான் அனைத்தையும் தெரிந்து கொள்கிறேன் என்று பெரிதாக கூறிவிட்டானே தவிர அதன் பின் அவனால் வினியை பார்த்து பேசவே முடியவில்லை.பேச என்ன அவளைக் காண்பதென்பதே குதிரைக்கொம்பாக இருந்தது.அவன் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அவள் வேண்டுமென்றே அவனைத் தவிர்த்துக்கொண்டிருந்தாள். அன்றைய சம்பவத்தின் பின் இந்த இரண்டு நாட்களாக அவனும் வினியை சந்தித்து சமாதானப் படுத்த எவ்வளவோ முயல்கிறான்.ஆனால் பலன் தான் முட்டையாக இருக்கிறது.
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவள் இவன் தலையைக் கண்டதுமே சட்டென தன்னுடைய அறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொள்கிறாள். கொஞ்சம் பேச வேண்டும் வினி என்றால் அவன் விழிகளை ஊடுருவுவது போல ஒரு கணம் ஆழ்ந்து பார்த்துவிட்டு உங்களுடன் பேச இஷ்டமில்லை என்று முகத்தில் அடித்தாற் போலக் கூறிவிட்டு விலகிப் போகிறாள்.
அவள் கோபம் நியாயமானது தான்.ஆனால் அதை எப்படிப் போக்குவது அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தான் அவனுக்கு புரியவில்லை.பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் அல்லவா அவன் தன் பக்க நியாயத்தை தன் உணர்வுகளைக் கூற முடியும் பேசுவதற்கே மறுத்தால் அவனால் என்ன தான் செய்ய முடியும்.நிலவனுக்கு தலை வெடித்தது.
அத்தனை வருட துன்பமும் தவிப்பும் அவளுக்கு மட்டும் தானா??? அவனுக்கில்லையா?? சொல்லப் போனால் அவளை விட அதிகமான மனவலியை அனுபவித்தது அவன் தானே???? எல்லா துன்பமும் தவிப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.என்று மகிழ்ந்தால் வினி புரிந்து கொள்ளாமல் இப்படி வீம்பு பிடிக்கிறாளே என்று கோபம் வந்தது அவனுக்கு.
இவளை என்னதான் செய்வது.எப்படி சமாதானம் செய்வது என்று குழம்பியபடியே தோட்டத்தை வெறித்தவனின் பார்வை பளிச்சிட்டது.
வினி தான்.தொலைபேசியில் யாருடனோ சிரித்துப்பேசியபடியே அவளுக்கேயான தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.அவளின் புன்னகை பூசிய பூ முகத்தை கண்டவனின் உள்ளே இன்று எப்படியாவது அவளிடம் பேசியே ஆக வேண்டும்.இதற்கு மேலும் அவளைவிட்டு விலகி இருக்க முடியாது என்ற உத்வேகம் எழ வேகமாக கீழே இறங்கி தோட்டத்தை நோக்கி விரைந்தான்.
தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்து லேசாக உந்தி ஆடியவாறே சிந்துவுடன் பேசிக்கொண்டிருந்தாள் பூவினி.அவள் குரலிலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. நிலவனின் தன் மீதான காதலையும் அவனின் விலகலுக்கான காரணம் மித்திரன் செய்த உதவி இப்போது எல்லாம் சரியானது தன் காதல் கை கூடியது என அனைத்தையும் சிந்துவுடன் பகிர்ந்தபடி இருந்தாள்.தன் தோழியின் வாழ்வு மலர்ந்ததை கேட்டு அவள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட அந்த அன்புத் தோழியும் மகிழ்ந்தாள்.
ச்சே பாவம் டி உன் ஆள்.நான் கூட உன் துன்பத்தைப் பார்த்து மனசுக்குள்ள அவருக்கு செம டோஸ் விட்டிருக்கன்.அவர் பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார்.உன்னை மனசுக்குள்ள உயிரா நேசித்துக்கொண்டு வெளியே வெறுக்கிற மாதிரி நடிச்சு..ஹ்ம்ம் கொடும..
பூவினி சற்று நேரம் மௌனமாக இருக்கவும் சரி விடுடி.நல்லவேளை எல்லா உண்மையும் தெரிஞ்சுதே.உங்க ரெண்டு பேரோட காதலும் உண்மைடி அதான் யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் கடைசில ரெண்டு பேரும் சேர்ந்துட்டீங்கள்.எனக்கு நிஜமாவே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குடி என்று மகிழ்ந்தவள் தொடர்ந்து
அது சரி இத்தனை வருசத்துக்குப் பிறகு இரண்டு பேரும் சேர்ந்திருக்கிறீர்கள் ஒரே love & romance வெள்ளம் ஓடிட்டிருக்கும் என்று சொல்லு.இதில என் கூட பேச எல்லாம் எப்படி மேடம் நேரம் கிடைக்குது??? என்று கேலியாக வினவவும்
மண்ணாங்கட்டி என்றாள் பூவினி சிறு கடுப்புடன்
ஏய் என்னடி???? எனவும்
இந்த உண்மை எல்லாம் தெரிஞ்ச பிறகு இந்த ரெண்டு நாளும் நாங்க பேசவே இல்லை தெரியுமா???
ஏய் ஏன் டி?? அது தான் எல்லாம் சரியாகி விட்டதே??? உன் அத்தான் மனதிலும் அன்றிலிருந்து இன்று வரை நீ மட்டும் தான் இருக்கிறாய் என்று தெரிந்துவிட்டதே.இனி என்ன? ரெண்டு பேரும் காதல் வானில் சிறகடித்துப் பறக்க வேண்டியது தானே??? என்ன யார் முதலில் பேசுவது என்ற தயக்கமா??
ச்சே அதெல்லாம் இல்லை.ஐயா பேச முயற்சி பண்ணிட்டு தான் இருக்கார்.இந்த ரெண்டு நாளும் நான் தான் கண்டுக்காம சுத்த விட்டுட்டிருக்கன்.
ஏய் ஏன் டி குரங்கே??
பின்னே என்ன?? இத்தனை வருஷம் மனசு முழுக்க என் மேல் காதலை வைச்சுக்கிட்டு அதை வெளியே சொல்லாமல் என்னை எப்படித் தவிக்க விட்டார்.போதாத குறைக்கு சுருக் சுருக் என்று வார்த்தைகள் வேறு.எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப எல்லாம் சரியான உடனே சார் பெரிய காதல் மன்னன் மாதிரி உருகி உருகி வசனம் பேசி ரொமான்ஸ் பண்ண வருவார் நான் ஈஈஈ என்று இளிச்சுக்கிட்டு இருக்கணுமா?? ஹ்ம்ம்....அவருக்கு தண்டனை வேணாம்?? அதான் இப்படி. இந்த ரெண்டு நாளும் சார் படுற பாட்டைப் பார்க்க உள்ளுக்குள்ள சிரிப்பு சிரிப்பா வருது.ஆனாலும் வெளில முறைச்சுகிட்டு இருக்கன்.
அடிப்பாவி அவர் காதல் தெரியும் வரை அத்தான் அத்தான்னு உருகி வழிஞ்ச இப்போ தெரிஞ்ச உடனே சுத்த விடுறியா??? ஹ்ம்ம் இது நல்லால்ல வினி சொல்லிட்டன்.
நான் சுத்த விட்டா அவர் ஏன் சுத்துறாராம்.நான் அவரோட வினி தானே.உரிமையா அதட்டி என்னைப் பேச வைக்கிறதுக்கு அவரை யார் தடுத்ததாம்.
ஓஹோ மேடம் அப்படி வாறீங்களோ??? என்று சிந்து கேலியுடன் வினவவும்
ம்ம் அப்படியே தான்.அவர் எப்போ பழைய மாதிரி உரிமையெடுத்து என் கூடப் பேசுறாரோ அப்போ பார்த்துக்கலாம்.சும்மா நான் பேசலைன்னு யாரோ மாதிரி தயங்கிட்டே இருந்தா இப்படியே இருக்கட்டும். என்றாள் வினி சிறு கோபத்துடன்
சிந்துவுடன் பேசிக்கொண்டே இருக்கும் போது பின்னால் மிக அருகில் சருகுகள் மிதிபடும் அழுத்தமான சத்தத்தில் பூவினியின் இதயத்துடிப்பு அதிகரித்தது.இது அவன் தான்.நான் பேசியதைக் கேட்டிருப்பானோ??? என்று பதட்டத்துடன் எண்ணும் போதே அழுத்தமான ஒரு கை ஊஞ்சலைப் பற்றி அதனின் ஆட்டத்தை நிறுத்தியது.
சி..சிந்து நான் அப்புறம் பேசுகிறேன் என்றபடி அவளின் பதிலைக் கூட எதிர்பாராமல் தொலைபேசியை அணைத்தவள் அங்கிருந்து செல்வதற்கு எழுந்தாள்.
அவள் ஓரடி எடுத்து வைக்கவும் அவன் கரம் நீண்டு வந்து அவள் கையை உரிமையுடன் பற்றியது.திரும்பி பார்க்காமலே கையை உருவ முயன்று முடியாமல் போகவே கையை விடுங்கள் என்றாள் பூவினி கோபம் பூசிய குரலில்.
விட முடியாது என்று அழுத்தமான குரலில் பதில் வந்தது அவனிடமிருந்து.
வினி திரும்பி அவனை முறைக்கவும் என்ன என்பதாய் புருவத்தை உயர்த்தி குறும்பாய் புன்னகைத்தான்.
அவனின் அந்த குறும்பு சிரிப்பிலும் பேச்சிலும் மயங்கிய மனதை மறைத்து பல்லைக் கடித்தவள் தோட்டத்தில் நின்று கொண்டு என்ன வேலை பார்க்கிறீர்கள் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று சீறவும்.
ஒ அப்போ இது தோட்டம் என்பது தான் உன் பிரச்சினையா?? அப்போ வெளியே போய் பேசுவோம் வருகிறாயா?? என்றான் சிரிப்புடன்.
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.எனக்கு உங்களிடம் பேச எதுவும் இல்லை என்றாள் பூவினி கடுப்புடன்.
அதைக் கவனிக்காதவனாய் ஆனால் எனக்கு உன்னிடம் பேச நிறைய இருக்கிறதே வினுச் செல்லம் என்றான் குறும்புடன்
அவனின் இப்படியான பேச்சுக்கள் அவளுக்கு புதிது.இந்த இரண்டு நாட்களாய் அவளின் புறக்கணிப்பைக் கண்டு முகம் வாட விலகிப் போனவன் இன்று இப்படி அதிரடியாய்ப் பேசுவது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.கூடவே மகிழ்ச்சியையும் ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் எனக்கு உங்களிடம் பேச இஷ்டம் இல்லை என்றாள் வேண்டுமென்றே.
ஆனால் அவனோ சளைக்காமல் எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டமாய் இருக்கிறதே என்று கூறி குறும்புடன் கண் சிமிட்டவும்
ஹும் இத்தனை நாள் இந்த இஷ்டம் கஷ்டம் எல்லாம் எங்கே போனதாம்.இவ்ளோ நாளும் வெறுக்கிறேன் இந்த மூஞ்சியைப்பார்க்கவே பிடிக்கலை அப்படி இப்படி என்று வசனம் பேசிக்கொண்டு இருந்து விட்டு இப்போ வந்து பெரிய காதல் மன்னன் போல வசனங்களை அள்ளி விடுவதைப் பார்.சகிக்கல கையை விடுங்கள் என்று திடீரென்று தோன்றிய கோபத்துடன் அவள் சீறவும்
அதுவரை இருந்த அவனின் இலகுவான முகபாவம் மாறியது.உன் கோபம் நியாயமானது தான் பூவினி.ஆனால் என் வரையில் நான் அப்படி நடந்து கொண்டதற்கு உனக்கு காரணம் தெரியும்.என் நிலையில் இருந்து சற்று சிந்தித்துப் பார் வினி.உன் பாட்டி நான் ஒரு அநாதை என்று சொன்னார்கள்.இந்த அநாதைக்கு உன் அப்பா தன் ஒரே செல்ல மகளைத் தரமாட்டார்கள் என்று சொன்னார்கள்.அப்படி நான் உன்னைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டால் இந்த குடும்பத்தின் ஒற்றுமையே சிதைந்துவிடும் என்று சொன்னார்கள்.
அனாதையாக தெருவில் வளர வேண்டியவனை இப்படி அன்பைக் கொட்டி பார்த்துக்கொள்ளும் இந்த குடும்பம் உடைய எப்படி வினி நானே காரணமாக முடியும்.அது நான் இந்த குடும்பத்துக்கு செய்யும் துரோகம் இல்லையா?? என்னால் எப்படி இந்த குடும்பத்துக்கு துரோகம் செய்ய முடியும்.எனக்கு என் மகிழ்ச்சியை விட இந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி தான் பெரிதாக தெரிந்தது வினி.
உன்னை விட்டு விலகுவது எனக்கும் வலி தான்.ஆனால் நான் அதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.ஒவ்வொரு முறை உன்னை வார்த்தையால் காயப்படுத்தும் போதும் உன்னை விட அதிகமாய் நான் அந்த வலியை உணர்ந்தேனடி.இந்த குடும்பத்துக்காக உன்னிடம் இருந்து விலகினேன் தான்.இந்த குடும்பத்தின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று எண்ணினேன் தான். ஆனால் ஒரு போதும் நான் மனதளவில் உன்னை விட்டு விலகவே இல்லைடி. இப்படி ஒரு திருப்பம் நடந்து நாம் இணையும் சந்தர்ப்பம் அமையாமலே போயிருந்தால் கூட நான் உன்னை மறந்திருக்க மாட்டேனடா. காலம் முழுதும் உன் நினைவுகளுடனே கழித்திருப்பேன்.
அது தான் அவளுக்கு தெரியுமே அன்று அவனின் கையெழுத்திலேயே பார்த்தாளே “உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே” என்று அந்த ஓவியத்தின் கீழ் எழுதியிருந்ததை.
அதை எண்ணியதும் அவள் கண்கள் கலங்கியது அதை அவனுக்கு காட்ட மனமின்றி தலையை மறுபக்கம் திருப்பினாள் அதைக் கண்ணுற்ற நிலவனின் முகம் அதை அவள் கோபத்துடன் முகம் திருப்புவதாய் எண்ணி வாடியது.
ஓர் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவன் உன் கோபம் எனக்கு புரிகிறது வினி.இதற்கு மேல் என்னால் என்ன சொல்லி உன்னை சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை.காலம் தான் உன் கோபத்தை ஆற்றும் எப்போது உன் கோபம் ஆறுகிறதோ அது வரை உனக்காக நான் காத்திருக்கிறேன்.உன்னை மட்டுமே நெஞ்சில் சுமந்து கொண்டு என்றவன் அதுவரை பற்றியிருந்த அவள் கையை விடுவித்து விட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
விரைந்து செல்லும் அவனின் பரந்த முதுகையே வெறித்திருந்த பூவினியின் முகம் கோபத்தில் சிவத்தது.
இவன் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான்?? தான் பெரிய உத்தம புத்திரன் என்றா?? கடமை கண்ணியம் கட்டுப்பாடு பருப்பு பொறுப்பு..மண்ணாங்கட்டி.என்று எல்லாம் அவனுக்கு மட்டுமே சொந்தம் என்றா?? என்னடா இப்படி அதிரடியாய் குறும்பாக பேசுகிறானே என்று எண்ணி அதை ரசித்து உள்ளுக்குள்ளேயே மகிழ்ந்து இன்னும் சற்று நேரம் அதையே தொடர வைக்கலாம் என்று பார்த்தால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கணக்காய் பக்கம் பக்கமாய் வசனம் பேசிவிட்டு காத்திருப்பேன் என்று வேறு சொல்லிவிட்டு போகிறது.எருமை.
இத்தனை வருடங்கள் காத்திருந்தது போதாதாமா?? இதற்கு மேலும் காத்திருக்க வேண்டுமா?? ஹ்ம்ம் இதெல்லாம் வேலைக்காகாது.மவனே இருக்குடா இன்றைக்கு உனக்கு.
வீட்டினுள்ளே சென்றவள் நேரே தன்னுடைய அறைக்கு சென்று குளித்துவிட்டு இளம் சிவப்பு நிறத்தில் ஒரு டாப் ஐயும் ஜீன்சையும் எடுத்து அணிந்து கொண்டாள்.எதுவித முகப்பூச்சும் இன்றி பளீரிட்ட முகத்தில் ஒரு சிறு கருப்பு பொட்டை எடுத்து ஒட்டியவள் முடிகள் மொத்தத்தையும் ஒட்டு மொத்தமாக ஒரு பான்டினுள் அடக்கிவிட்டு கீழே சென்றாள்.
வினும்மா எங்கேயாவது வெளியே செல்கிறாயா?? என்று கேட்ட தாயிடம் சிறு தயக்கத்தின் பின் ஆமாம்மா அத்தை வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன் என்று கூறவும் அங்கு வந்த மித்திரன் எதுக்கு சுத்தி வளைச்சு சொல்றே வினி?? நேராக உன் அத்தானை சைட் அடிக்கப் போகிறேன் என்று சொல்வது தானே என்று கேலி செய்யவும் வெட்கத்தில் முகம் சிவந்தாலும் ஆமாம் அப்படித்தான் போடா என்றாள் சிரிப்புடன்.
மேகலா வியப்புடன் மகளைப் பார்த்து ஹப்பா உன் கோபம் எல்லாம் போய்விட்டதா பாவம் அவனை இந்த ரெண்டு நாளாய் என்ன பாடு படுத்தினாய் என்று செல்ல முறைப்புடன் கூறவும்
ஆமாம் உங்கள் மருமகன் ரொம்ப பாவம் தான்.என்று முறைப்புடன் சொன்னவள் டிபன் சாப்பிட்டு விட்டுப் போடா என்று சொன்ன தாயிடம் வேண்டாம் என்று மறுத்தவாறு விரைவும் மடிகணனியில் ஏதோ நொண்டியபடி அங்கே அமர்ந்திருந்த மித்திரன் வினி உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல அதை நியாபகம் வைச்சுக்கோடி நீ போற வேகத்தைப் பார்த்தா....................என்று கண்சிமிட்டி ராகத்துடன் இழுக்கவும் அவனின் கேலியைப் புரிந்து கொண்டு சிரிப்புடன் போடா எருமை என்று அவன் தலையில் கொட்டிவிட்டு சென்றாள்.
அவளின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பார்த்த மித்திரனின் அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தது.