இதழ்:-44
கட்டிலில் கிடந்து வாய்விட்டு அழுதபடி இருந்தவள் தன்னுடைய அறையின் கதவு மெல்ல திறந்து மூடியதை சற்றும் கவனிக்கவில்லை.
சற்று நேரத்திலே அத்தானை ரொம்ப மிஸ் பண்றியாடி செல்லம் என்ற மித்திரனின் குரல் கேட்கவும்
ஒருகணம் அதிர்ந்தாலும் தன்னுடைய நினைவோ என்று தோன்ற காதினை தேய்த்துவிட்டுகொண்டு மீண்டும் அழுகையை தொடர்ந்தாள்.
“அழுததெல்லாம் போதுங்கண்ணு மாமனை கொஞ்சம் கவனிக்கிறது”
என்று மீண்டும் அவன் குரல் கேட்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.மித்திரன் தான்.அவளது அறைக்கதவை மூடி அதன் மேல் கைகட்டியபடி குறும்புச் சிரிப்புடன் சாய்ந்து நின்றிருந்தான்.இவள் திகைப்புடன் அவன் முகம் பார்க்கவும் விழிகளைச் சிமிட்டி குறும்பாக புன்னகைத்தான்.
அவ்வளவு தான் அவன் ஒருவனைத் தவிர மற்றவை அனைத்தும் மறந்து போக அத்தனை நேரம் அனுபவித்த தவிப்பு வேதனை எல்லாம் காணாமல் காற்றோடு போக மித்து என்ற அழைப்புடன் தென்றலாய் விரைந்து சென்று புயலாய் அவனை அணைத்துக்கொண்டாள்.
அதே அளவு வேகத்துடன் தானும் அவளை அணைத்துக்கொண்ட மித்திரனின் கரங்கள் அவளைச் சுற்றிவளைக்க அவன் உதடுகள் அவனையும் மீறி அவள் முகத்தில் காதலுடன் ஊர்வலம் போயின.நெற்றி கண் கன்னம் என்று உதடுகளை அழுத்தமாகப் பதித்தவனின் உதடுகள் அவளின் இதழ்களை நெருங்கும் போது தான் தாரணிக்கு சுயவுணர்வு வர .விரைந்து அவனிடமிருந்து விலகினாள்.
ஏய் தரு ப்ளீஸ் என்று மித்திரன் காதலுடன் அவள் கரம் பற்றி இழுக்கவும் அவனிடமிருந்து கரத்தை உருவிக்கொண்டு நீங்கள் யார்?? உங்களுக்கு என்ன வேலை இங்கு என்றாள்.கோபத்துடன் தாரணி.
நான் யாரென்று தெரியாமல் தான் இவ்வளவு நேரம் என் அணைப்பில் அடங்கி முத்தத்தில் இசைந்து நின்றாயா?? என்று மித்திரன் வினவவும் தாரணி சொல்வது அறியாமல் முகம் சிவக்க மௌனமானாள்.
அவளின் முகத்தை பார்த்த மித்திரனின் முகம் கனிய ஹே தரு இன்னும் எதற்குடா தயக்கம்.நம் காதலை இதற்கு மேலும் மறைக்க முடியாது.எனக்கு தெரியும் என்னைப்போலவே நீயும் என்னை நேசிக்கிறாய் என்று என்று கூறிக்கொண்டிருக்கும் போதே தாரணிக்கு அவனால் சற்று முன் தான் பட்ட துன்பம் நினைவுக்கு வர அவளின் இயல்பான வீம்புக்குணம் தலைதூக்க காதலா?? என்று புருவம் உயர்த்தி வரவழைத்த வியப்புக் குரலில் கேட்டவள்.தொடர்ந்து நான் ஒன்றும் உங்களைக் காதலிக்கவில்லை என்றாள் வீம்பாக.
அவளின் சிறுபிள்ளைத்தனமான வீம்பில் மித்திரனுக்கு சிரிப்பு வந்தது.கூடவே கொஞ்சம் கோபமும்.இவ்வளவுக்கு பின்பும் இன்னும் வீம்பு பிடிப்பவளை என்ன செய்வது? அவன் வேறு இன்னும் சற்று நேரத்தில் கிளம்பியாகணும்.
அவள் கரத்தை பற்றி இழுத்து அவளை தன் கரங்களுக்குள் கொண்டுவந்தவன் திமிறியவளை ஒரு கையால் அடக்கி மறுகையால் அவள் முகத்தை அழுத்தமாக பற்றி நிமிர்த்தி அவள் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தவன் நீ என்னை காதலிக்கவில்லை??? என்றான்.அவள் இல்லை என்பது போல் தலையசைக்கவும் பார்வையை விலக்காமல் உன் மனதில் நான் இல்லை என்றான்.அப்போதும் அவள் வீம்புடன் இல்லை எனவும். அவள் விழிகளைப் பார்த்தவாறே அவள் முகத்தை நோக்கி குனிந்தான்.முதலில் லேசாக திமிறியவள் அவன் மூச்சுக்காற்று கன்னம் சுட்டதும் திமிறலை நிறுத்தி உடல் சிலிர்க்க எதிர்பார்ப்புடன் விழிகளை மூடிக்கொண்டாள்.
அவள் முகத்தருகே மிகவும் நெருங்கியவன் அவள் முகத்தை பார்த்து சிரிப்பு வர உன் மனதில் சற்றும் காதலில்லாத ஒருவனின் முத்தத்தை தான் இவ்வளவு ஆவலாக எதிர்பார்பாயா தாரணி?? என்றான்.
அவனின் கேள்வியில் உணர்வுகள் அறுபட அவனிடமிருந்து மூர்க்கமாக திமிறி விடுபட முயன்றவளை விடாமல் இறுக அணைத்தவன் இன்று மட்டும் இல்லை தாரணி அன்று பீச்சிலும் தான் அன்றே உன் காதல் எனக்கு நூறு வீதம் உறுதியாக தெரிந்துவிட்டது.எனக்கு தெரியும்டி. அன்று நான் செய்த அதே காரியத்தை வேறு ஒருவன் செய்திருந்தால் நிச்சயம் அவன் கன்னம் பழுத்திருக்கும் என்று.உன் மனதில் நான் இருந்ததால் தான் அன்றும் சரி இன்றும் சரி நீ என் கைகளில் மயங்கி நின்றாய்.அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.இன்னும் என்ன வீம்பு தாரணி.நான் இன்று புறப்பட வேண்டும் தாரணி. நான் இங்கிருந்து போவதற்கு முன் என் மனதை வெளிப்படையாக உன்னிடம் கூறிவிட வேண்டும் என்று நினைத்தேன்டி. தயவு செய்து புரிந்துகொள்.
அதுவரை அவன் பேசியதில் இன்று புறப்பட வேண்டும் என்றது அவள் மனதை ஆக்கிரமிக்க நிஜமாவே இன்று கிளம்புகிறீர்களா?? என்றாள் அதுவரை பிடித்திருந்த வீம்பை கைவிட்டு ஏக்கத்துடன்.
அவளின் ஏக்க குரல் அவனை என்னவோ செய்ய அவளை இறுக அணைத்தவன் வேறுவழியில்லை கண்ணம்மா போயே ஆக வேண்டும்.சரியாக ஒரே வருடத்தில் மொத்தமாக ஓடி வந்துவிடுவேன்.அதன் பின் உன்னைவிட்டு எங்கும் போகவே மாட்டேன் என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவன் அணைப்பில் அடங்கியவாறே நீங்கள் என்னிடம் சொல்லாமலே சென்றுவிட்டீர்கள் என்று எண்ணித் தவித்துப் போனேன் தெரியுமா?? என்று உள்ளே போன குரலில் கூறியவள் தொடர்ந்து ஏன் மித்து நீங்கள் இன்று கிளம்புகிறீர்கள் என்பதை என்னிடம் கூறவே இல்லை என்று வினவினாள் சலுகைக்குரலில்.
சிறு சிரிப்புடன் அவள் முகத்தை பார்த்த மித்திரன் அப்படி முன்பே சொல்லியிருந்தால் சற்று முன் கிடைத்த அந்த அணைப்பும் மித்து என்ற அழைப்பும் இவ்வளவு இலகுவாக கிடைத்திருக்காதே என்றான் இமைகளைச் சிமிட்டி.
அவன் பேச்சில் முகம் சிவந்தவள் வரவழைத்த கோபக்குரலில் அப்போ வேண்டுமென்றே தான் என்னைத் தவிக்கவிட்டீர்களா?? என்றாள்.
அவளை அணைத்தபடியே அருகில் இருந்த மெத்தையில் அமர்ந்தவன் பின்னே நீ என்னை எத்தனை நாள் தவிக்கவிட்டாய் அந்த தவிப்பை நீ உணரவேண்டாமா?? அதனால் தான் என்று சிரிப்புடன் கூறியபடியே அவள் தலையோடு தன் தலையை முட்டினான்.
அவன் பேச்சைக்கேட்டவள் நான் உங்களைத்தவிக்க விட்டேனா என்றாள் ஆச்சரியத்தோடு.
பின்னே இல்லையா?? உன்னை முதன் முதலில் பார்த்த பொழுதில் இருந்தே எனக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டது.உன் மீது தோன்றிய ஈர்ப்பு காதல் தான் என்பதையும் நான் உணர்ந்துவிட்டேன்.அதன் பின் எத்தனை விதங்களில் என் காதலை உனக்கு புரியவைக்க முயன்றேன்.நீ சற்றேனும் கண்டுகொண்டாயா??? அதைக்கண்டு கொள்ளாதது மட்டுமின்றி நீங்கள் எனக்கு அன்னியன் தான் என்று ஜாடைப் பேச்சுக்கள் வேறு.
ஹேய் நான் எப்போது அப்படிச் சொன்னேன்?
எப்போது சொன்னாயா?? அன்றொருநாள் நான் எடுத்துக்கொடுத்த ஆடைகளை நீ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கோபம் கொண்டேனே அப்போது என் கோபத்தை சமாதானம் செய்கிறேன் பேர்வழியென்று நீ அப்படிப் பேசவில்லை.அந்நியர்களிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்வது தப்பு என்பது மாதிரி.அன்று எனக்கு எப்படி இருந்தது தெரியுமா??
ஓஹோ அதான் அன்று சார் அப்படி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு போனீர்களா?? ஆனால் அன்று நான் சொன்னதில் தப்பு இல்லையே.அப்போது நிஜமாகவே நீங்கள் எனக்கு யாருமில்லையே என்றாள் நியாயம் பேசும் குரலில்.
அவள் பேச்சில் அவன் கோபத்துடன் முறைக்கவும்
காதலை நேரடியாக சொல்ல தைரியம் இல்லை.இதில் இவரின் காதலை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கோபம் வேறா.அப்படி காதல் என்றால் நேரடியாகவே சொல்லவேண்டியது தானே.என்று அவனுக்கு கேட்குமாறு முணுமுணுத்தாள்.
அவளின் பேச்சைக் கேட்டு கோபம் மறந்து சிரித்தவன் தைரியம் இல்லாமல் தான் இப்படி பகல் நேரத்தில் உன் அறைக்குள் நுழைந்து உன்னை அணைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறேனாக்கும் என்று குறும்புக் குரலில் கூறவும்
அப்போது தான் சுற்றுப்புறம் நினைவு வந்தவளாக அவனைவிட்டு விலகி துள்ளி எழுந்தவள் படபடப்புடன் ஐயோ நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்.அம்மா அப்பா யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றாள் தவிப்புடன்
அவள் பதட்டத்தை ரசித்தவன் சற்றும் அசராமல் அவள் கரத்தைப் பற்றி சுண்டி இழுத்தான்.அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் வந்து பூங்கொடியாய் விழுந்தவளை கரங்களால் சுற்றி வளைத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டு ம்ம் மாமாவும் அத்தையும் என்ன நினைப்பார்கள்...இன்னும் சற்று நேரத்தில் மருமகன் தான் கிளம்பிவிடுவானே அதன் பின் இருவரும் ஒரு வருடம் கழித்துதான் சந்திப்பார்கள்.அதனால் சற்றுநேரம் நிம்மதியாக பேசட்டும் நாம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணுவார்கள்.என்றான் குறும்புக்குரலில்.
அவன் பேச்சு புரியாமல் அவள் அவன் முகம் பார்த்து என்ன சொல்கிறீர்கள் என்று குழப்பத்துடன் வினவவும்
அவள் கன்னத்தில் இதழ்களை உரசியவாறே ம்ம்ம் ...நான் இங்கு வந்தது உன் பெற்றோருக்கு தெரியும் என்கிறேன்.உன் அறையை எனக்கு காட்டுமாறு மகனிடம் பணித்தது உன் அப்பா என்கிறேன்.என்னை இந்த அறை வாயில் வரை கொண்டுவந்துவிட்டுச் சென்றது உன் தம்பி என்கிறேன்.என்றான் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒவ்வொரு முத்தத்தை அவள் முகமெங்கிலும் அழுத்தமாக பதித்தவாறு
அவனின் முத்தத்திலும் அணைப்பிலும் கூசி சிலிர்த்த உடலையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தியவாறே அவனிடமிருந்து சற்றுவிலகியவள் எப்படி ??? என்றாள் வியப்புடன்
விலகியவளின் இடையைப் பற்றி இழுத்து தன்னுடன் அணைத்தவாறு நாமெல்லாம் யாரு!!!!!! காதலிகிட்ட காதலை சொல்றதுக்கு முன்னமே ரெண்டு வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கிட்டோம்ல.இப்ப என்ன சொல்ற ஐயாவோட தைரியத்தைப் பற்றி என்றான் கெத்தாக டி சேர்ட் கொலரைத் தூக்கி விட்டவாறே.
அவனை வியப்பும் மகிழ்ச்சியுமாக நோக்கியவள் உண்மையாகவே நீங்கள் சொல்வது நிஜமா மித்து என்றாள்.
அவள் தலையைப் பற்றி செல்லமாக ஆட்டியவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் விழிகளைப் பார்த்து என்னோட தருக்கு யாரிடமும் பொய் சொல்லப் பிடிக்காது.முக்கியமாக அவள் அம்மாவிடம் அவள் சம்மந்தப்பட்ட எந்த விடயத்தையும் மறைக்க முடியாது.அப்படி அம்மாவிடம் கூறாமல் எதையாவது மறைத்தால் அவளுக்கு மூச்சே முட்டிவிடும்.காதலித்தால் நிறைய பொய் சொல்லவேண்டி இருக்கும்.அம்மாவிடம் எதையும் கூற முடியாது.இதனாலேயே என் தருக்கு காதல் என்றாலே ஒத்துவராது.இதெல்லாம் தெரிந்த பின்னும் நான் எப்படி என் தருக்கு அந்த கஷ்டத்தைக் கொடுப்பேன்.அது தான் அவளுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காமல் காதல் திருமணத்தையே பெரியவர்களிடம் பேசி அவர்கள் ஏற்பாடு செய்த திருமணமாக மாற்றிவிட்டேன்.தங்கள் பிள்ளைகள் தங்கள் மேல் வைத்த பாசத்தை கண்டு மகிழ்ந்த பெற்றவர்களும் பிள்ளைகளின் மகிழ்ச்சி தான் தங்களுக்கு முக்கியம் என்று கூறிவிட்டனர்.என்று கூறி புன்னகைத்தான்.
வினி பிரமிப்புடன் அவனையே பார்த்தாள்.அவளின் மனநிலையைத் தெளிவாக தெரிந்துகொண்டு அவளுக்கு சிறு கஷ்டத்தைக் கூட தராமல் அனைத்தையும் தனி ஒருவனாய் நின்று சுமூகமாக முடித்த அவன் மேல அவளுக்கு காதல் பெருகியது.அவனை இறுக அணைத்துக்கொண்டவள் ரொம்ப நன்றி மித்து.ரொம்ப ரொம்ப நன்றி.என்றாள் நெகிழ்ந்த குரலில்
அவன் சிறு சிரிப்புடன் எனக்கு இந்த நன்றி போதாதே என்றான் குறும்புக் குரலில் அவள் என்னவென்பதாய்ப் பார்க்கவும் ஒரு விரலால் தன உதடுகளைத் தொட்டுக்காட்டி கண்சிமிட்டவும் அவன் கேட்பது புரிந்து முகம் சிவக்க ஆசைதான்....என்று சிரித்தவள் ஒன்று தோன்ற
ஏன் மித்து இப்படி இரு வீட்டிலும் சம்மதம் பெற்ற பின் உங்கள் காதலைச் சொல்ல வேண்டும் என்று தான் இவ்வளவு நாள் காத்திருந்தீர்களா?? என்றாள் ஆவலுடன்
அதைக்கேட்டு சிரித்தவன் ஆமாம் கண்ணே என்று கூறி உன்னிடமிருந்து இன்னுமோர் அணைப்பைப் பெற ஆசை தான்.ஆனால் அது உண்மையில்லையே என்று குறும்புடன் கூறியவன் தொடர்ந்து நான் முன்பே உனக்கு கூறியிருந்தேன் தாரணி வினி எனக்கு ஒரு தங்கை போல என்று அவளின் வாழ்க்கையில் ஓர் நல்ல முடிவு வராமல் நான் என்னுடைய வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஏன் எந்த முடிவையுமே எடுக்க விரும்பவில்லை.அதனால் வினியின் வாழ்க்கையில் ஓர் நல்லது நடக்கட்டும் என்று காத்திருந்தேன்.நாங்கள் எல்லாம் எதிர்பார்த்தது போலவே எல்லாம் நல்லபடியாக நடந்தது.வினியின் வாழ்க்கைக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தவுடனேயே நான் என் ஆசை குறித்து அம்மாவிடம் பேசிவிட்டேன்.அம்மாவுக்கும் மகிழ்ச்சி தான்.வினி நிலவன் பிரச்சினை தீர்ந்து அனைவரும் மகிழ்ந்திருந்த சமயம் நம் விடயம் குறித்து பெரியவர்களிடம் பேசி விட்டேன்.அவர்களும் புரிந்து கொண்டார்கள்.ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக நடந்தது.என்று கூறிப் புன்னகைத்தான்.
அதன் பின் செல்ல சீண்டலும் பொய்க்கோபமும் காதலும் ஆசையும் சிரிப்புமாக நிறையப் பேசினார்கள்.மித்திரன் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்க நெருங்க இருவருடைய நெருக்கமும் அதிகரித்தது.இப்போது விட்டால் அடுத்த ஒரு வருடத்திற்கு பார்க்கவே முடியாதே என்ற தவிப்பு இருவரையுமே ஆட்கொள்ள மித்திரனின் கரங்கள் அவளை தன்னுடன் சேர்த்து இறுக இறுக அணைக்க அவன் உதடுகளும் தாபத்துடனும் மோகத்துடனும் அவள் முகமெங்கும் பதிந்து மீண்டது.தாரணியும் விலகவில்லை அவன் கழுத்தில் கரங்களைக் கோர்த்துக்கொண்டு அவன் அணைப்பிலும் முத்தத்திலும் மயங்கி நின்றாள்.இப்போது விட்டால் இனி எப்போது கிடைக்குமோ என்று எண்ணமே அவளின் மனத்தடைகளை உடைத்தெறிந்தது.
அப்படியே போயிருந்தால் என்ன ஆகி இருக்குமோ அதற்கிடையில் மேனகாவின் குரல் தாரணியை அழைக்கவும் இருவரும் அந்த மோன நிலையிலிருந்து மீண்டு விலகினர். முகம் சிவத்து மூச்சுவாங்க விலகியவளின் தலையை வருடியவன்.அவள் முகத்தை இழுத்து அவள் இதழ்களில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்து நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் தரு.இந்த இதயத்தில் நுழைந்துவிட்ட உனக்கு என் உயிரின் கடைசி மூச்சிருக்கும் வரை விடுதலை கிடையாது. என்றவன் என் வாழ்நாளில் நான் மிகவும் வெறுக்கும் காலப்பகுதியாக உன்னைவிட்டு விலகியிருக்கும் இந்த ஒரு வருடமும் அமையும் என்றான் வெறுத்த குரலில்
அவனின் குரலில் இருந்த வேதனையைக் கண்டவள்.தனக்கும் அதே அளவு வேதனை தோன்றுவதை உணர்ந்து ஹ்ம்ம் ..நம் காதலை நாம் சற்று முன்பே பகிர்ந்துகொண்டிருந்தால் இந்த பிரிவுக்கு அவசியமே இருந்திருக்காது மித்து நானும் உங்களுடன் வந்திருப்பேன் என்றாள் தவிப்புடன்
அவளை வியப்புடன் பார்த்தவன் நிஜமாகத்தான் சொல்கிறாயா??? என்றான்.
அவள் ஆம் எனத் தலையசைக்கவும்
உன்னால் இந்த குடும்பத்தை விட்டு ஒரு வருடம் பிரிந்திருக்க முடியுமா?? என்றான்.
அப்போது தான் அதை நினைத்தவள் போல கண நேரம் தயங்கியவள் பின் உறுதியுடன் உங்களுக்காக இருப்பேன் மித்து என்றாள்.
அவளின் பதிலில் அவனின் கண்கள் மின்ன அவளை இறுக அணைத்தவன் உன்னை திருமணம் செய்து இங்கிருந்து அழைத்துப் போய்விடலாம் என்று தான் முன்பு எண்ணினேன் தரு ஆனால் இங்கு வந்து ஒரு மாதம் தங்கியிருந்த எனக்கே இங்கிருந்து செல்வது அவ்வளவு கஷ்டமாய் இருக்கிறதே பிறந்ததில் இருந்தே இந்த பாசக்கூட்டுக்குள் கலகலப்பாக அக்கா தம்பி தங்கை என்று உறவுகளுடன் வளர்ந்த உனக்கு எப்படி இருக்கும்.என்று எண்ணிப் பார்த்தேன். எனக்காக நீ அங்கு வந்தாலும் நிச்சயம் நீ உன் குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்படுவாய் என்று தோன்றியது.
உனக்கு கஷ்டம் என்று தெரிந்தும் உன்னை கஷ்டப்படுத்தும் ஓர் விடயத்தை நான் எப்படிச் செய்வேன்??? அதனால் தான் என்னுடைய மீதமுள்ள ஒரு வருட கான்ராக்ட் ஐ முடித்துவிட்டு இங்கேயே வந்துவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.இந்த ஒரு வருடம் பிரிந்திருப்பது கஷ்டம் தான்.ஆனால் அதன் பிறகு வாழப்போகும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எண்ணி இந்த ஒரு வருடத்தை ஓட்ட வேண்டியது தான்.என்று கூறி லேசாகப் புன்னகைத்தான்.
இவனின் காதலைப் பெற நான் என்ன தவம் செய்தேன் என்று தோன்றியது தாரணிக்கு. ஒவ்வொரு விடயத்தையும் அவளுக்காக சிந்தித்து செயற்படும் அவனின் காதலில் அவள் உள்ளம் நெகிழ்ந்தது.உள்ளே பொங்கிப் பெருகிய காதல் கண்களில் பிரதிபலிக்க அவனை இழுத்து அணைத்தவள் அவனே எதிர்பார்க்காதவாறு அவனின் இதழ்களில் முத்தமிட்டாள்.அது அவளின் ஆழமான நேசத்தின் வெளிப்பாடு என்று புரிந்துகொண்ட மித்திரனும் அவளை இறுக அணைத்துக்கொண்டு அந்த முத்தத்தில் கரைந்தான்.
மீண்டும் கீழே இருந்து அழைப்புக் குரல் கேட்கவும் எலும்பெல்லாம் நொறுங்கும் படியான ஓர் அணைப்புடன் அவளை விட்டு விலகியவன்.உன்னுடைய இந்த முத்தத்தின் நினைவுடனேயே இந்த ஒருவருடத்தை கழித்துவிடுவேன் டா. என்றவன் அதன் பின் அவளையும் அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.
மகளதும் வருங்கால மருமகனதும் முகத்தை பார்த்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மேனகா விமானத்துக்கு நேரமாகிறதே என்று அழைத்தேன் பா.என்றார்.
ஆமாம் அத்தை.நேரமாகிவிட்டது.இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்றவன்.மேனகாவிடமும் அவர் கணவனிடமும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு செந்தூரனை அணைத்து விடைபெற்றவன் தாரணியிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றான்.அவன் பிரிந்து செல்வதை தன்னால் பார்க்க முடியாது.தன்னை மீறி அழுதுவிடுவோம் என்று எண்ணிய தாரணி தான் விமான நிலையத்துக்கு வரமாட்டேன் என்று முன்பே அவனிடம் கூறிவிட்டாள்.அவனுக்கும் அவளைப் பார்த்துக்கொண்டே அவளை விட்டு பிரிவது முடியாத ஒன்றென்று தோன்ற மித்திரனும் அதற்கு சம்மதித்தான்.
எனவே தாரணியை தவிர மற்ற அனைவரும் விமான நிலையத்திற்கு சென்று சீக்கிரம் வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் அவனை வழியனுப்பினர்.நிலவனின் கையணைப்பில் நின்று கொண்டு அழுகையை அடக்கி புன்னகைக்க முயன்றபடி அவனுக்கு விடை கொடுத்த வினியைக் கண்டு உள்ளம் உருக அவளை இயல்பாக்கும் பொருட்டு தன்னை சமாளித்துக்கொண்டு
இவங்களை இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே விடப்போகிறீர்கள்.சீக்கிரமே திருமணத்தை முடித்துவிடுங்கள் அங்கிள்.இவர்களை நம்ப முடியாது.அதுவும் குறிப்பாக வினியை.என்று நக்கல் குரலில் கூறவும் அனைவரும் சிரிக்க
ஜெகநாதனும் சிரிப்புடன் நீ சொல்வதும் சரி தான்பா. சீக்கிரம் பண்ணவேண்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே நாள் பார்க்க சொல்ல வேண்டியது தான். என்ன பத்மா சரி தானே எனவும்.பத்மனும் சிரிப்புடன் நீ சொன்னால் சரி தான்டா என்றார்.
அவர்கள் பேச்சைக் கேட்ட வினி தவிப்புடன் நிலவனை நிமிர்ந்து பார்க்கவும் அவளின் விழிகளிலே அவளின் உணர்வைப் படித்தவன் அதெப்படி அப்பா வினியின் அண்ணன் இல்லாமல் திருமணத்தை செய்வது.வினிக்கு சீர் செய்து முன்னால் நின்று இந்த திருமணத்தை நடத்திக் கொடுப்பது வினியின் அண்ணன் பொறுப்பல்லவா?? என்ன மச்சான் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் எண்ணமா?? என்றான் மித்திரனைப் பார்த்து சீண்டலுடன்.
அவர்களின் பாசத்தில் நெகிழ்ந்தவன் விரைந்து நிலவனை அணைத்துக் கொண்டான்.நிலவனும் அவனை அணைத்து அவன் முதுகில் தட்டிக்கொடுக்க சிரிப்புடன் அவனிடமிருந்து விலகியவன் அருகில் நின்ற வினியின் தலையை பாசத்துடன் வருடி
நீங்கள் இருவரும் நீண்ட நாட்கள் காத்திருந்துவிட்டீர்கள்.இப்போது எனக்காக வேறு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டாமே.இப்போது திருமணத்தை செய்யுங்கள்.நான் என் தங்கையின் சீமந்தத்திற்கு ஓடி வந்து முன்னால் நின்று செய்கிறேன் என கூறவும் இடை மறித்த வினி.
டேய் மித்து மரியாதையா வாயை மூடிட்டு கிளம்பு.எங்களுக்கே காதலிக்க இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.இதில் நீ வேறு திருமணம் குழந்தையென்று.யார் என்ன சொன்னாலும் இந்த ஒரு வருடம் நாங்கள் இருவரும் இதுவரை இழந்ததற்கெல்லாம் சேர்த்து ஜாலியாக காதல் பறவைகளாக சிறகடிக்கப் போகிறோம்.நீ இங்கு வந்த பின்னர் தான் திருமணம்.இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.என்று கறாராக கூறியவள் நிலவனிடம் திரும்பி என்ன அத்தான்?? என்றாள்.
நிலவன் குறும்புச் சிரிப்புடனும் போலிப் பணிவுடனும் வாய்மேல் கரம் வைத்து தலை தாழ்த்தி உத்தரவு மகாராணி எனவும் அங்கிருந்த அனைவரும் அதைக் கண்டு வாய்விட்டு சிரித்தனர்.அனைவரின் புன்னகை முகத்தைக் கண்டு தானும் புன்னகைத்தபடியே மனம் முழுதும் காதலையும் பாசத்தையும் சுமந்தபடி விடை பெற்றான் மித்திரன்.