இதழ்:- 46
வாசலில் வந்திறங்கிய மித்திரன் தாரணி ஜோடியை கங்கா ஆலம் சுற்றி வரவேற்றார்.உள்ளே வந்த தாரணியை வாம்மா என்று அன்புடன் கூறி கன்னம் வருடி பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார்.விளக்கேற்றி முடித்த பின் மித்திரன் தாரணியின் கரம் பற்றியபடி கண்மணியின் காலில் விழுந்து ஆசி வாங்கினான்.
தன் காலில் விழுந்தவர்களை நடுங்கும் கரங்களால் ஆசீர்வதித்தவர் தாரணியின் கரம் பற்றி இரு ஜோடி தங்க வளையலை அணிவித்த பின் அவள் கன்னம் வருடி இனிமேல் நீயும் என் பேத்தி தான்மா.இதுவரை நான் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு என்று குரல் தழுதழுக்க கூறினார்.
தாரணியின் மனதில் அதுவரை அவர் மேல் இருந்த சிறு மனஸ்தாபமும் விலகலும் விலகி ஓட அவள் மனம் அவர்பால் உருகியது.அவர் கரங்களைப் பற்றி ச்சே ச்சே..என்ன பாட்டி இதெல்லாம் நீங்கள் போய் என்னிடம் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டு.பேத்தியிடம் எந்த பாட்டியாவது மன்னிப்பு கேட்பார்களா என்று சிறு சலுகையுடன் அவரை கடிந்துகொண்டாள்.அவளின் பேச்சில் கண்மணியின் மனம் குளிர அவளின் அந்த செயலைக் கண்ட மித்திரனின் முகம் மலர்ந்தது.
அன்று இரவு கையில் பால் சொம்பும் முகத்தில் நாணப் புன்னகையுமாக அறைக்குள் நுழைந்த தாரணியை பின்னால் இருந்து அணைத்து அவள் காதோரம் முத்தமிட்ட மித்திரன் ரொம்ப நன்றி தரு என்றான்.ரகசிய குரலில்.
அவன் கரங்களும் உதடுகளும் ஏற்படுத்திய ஸ்பரிசத்தில் நெகிழ்ந்தவாறே எ..எதற்கு என்றாள்.உள்ளே சென்ற குரலில்.அவளைத் திருப்பி அவள் விழிகளோடு விழி கலந்தவன் என் பாட்டியின் தவறுகளை மன்னித்து மறந்து இயல்பாக அவர்களை ஏற்றுக்கொண்டதற்காக என்றான் கனிந்த குரலில்.
இடையை சுற்றி வளைத்து அணைத்த அவன் கரங்களுக்குள் அடங்கியவாறே தவறு செய்பவர்கள் அதை உணர்ந்து வருந்தும் போது அதை மறந்து மன்னிக்காமல் இருந்தால் தான் தப்பு.இதில் நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.என்றவள் தொடர்ந்து அவர்கள் இனிமேல் எனக்கும் பாட்டி தான் மித்து என்றாள் காதலுடன்.
அவள் பேச்சினைக் கேட்டு தனக்கேற்பட்ட மகிழ்ச்சியை ஓர் இறுகிய அணைப்புடன் அவள் நெற்றியில் ஓர் அழுத்தமான முத்தத்தை பதித்து வெளிப்படுத்தியவன்.தொடர்ந்து கிசுகிசுப்பான குரலில் இந்த இரண்டு வாரங்களும் உன்னைப் பார்க்காமல் ரொம்பவும் தவித்துப் போனேன்டி என்றான் அவள் செவியோரம் உதடுகளால் கோலமிட்டபடி அதில் உடல் சிலிர்க்க நாணத்துடன்
அவன் அணைப்பில் அடங்கி நெஞ்சில் முகம் புதைத்தவாறே நானும் தான் என்று கிசுகிசுத்த தாரணியின் குரல் வெளிப்படுத்திய ஏக்கம் அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சற்ற பேச்சுக்கள் தேவையற்ற ஒரு நிலையை உருவாக்க மித்திரனின் கரங்கள் அவளை தாபத்துடன் இறுக தழுவ அவன் உதடுகள் அவள் முகத்தில் ஒரு வேகத்துடன் ஊர்வலம் போய் அவள் இதழ்களில் வந்து அழுத்தமாக முடிய அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டப்பயணம் அங்கு அழகாக ஆரம்பித்தது.
*******************************************************************
இளஞ்சிவப்பு வர்ணப் பட்டுடுத்தி தலையில் சாந்தா சூடிவிட்ட மல்லிகைப் பூ தோளின் இருபுறமும் வழிய கையில் பால்சொம்புடன் அழகுப் பதுமையாய் நிலவனின் அறைக்குள் நுழைந்த பூவினி அதிர்ந்து போனாள்.அவள் முகம் நாணத்திலும் தவிப்பிலுமாக குங்குமமாக சிவந்தது.ஏனெனில் அன்றொருநாள் அவன் அறைக்குள் நுழைந்த போது நடந்தது போலவே நிலவன் அப்போது தான் குளித்துவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தான்.
எதிரே வினியைக் கண்டதும் ஒரு கணம் அவனுமே தடுமாறினாலும் வினியின் முகத்தில் தோன்றிய மாற்றம் அவனின் தடுமாற்றத்தை துடைத்தெறிய சிறு குறும்புச் சிரிப்புடன் அவளையே இமைக்காமல் நோக்கி அவளின் தடுமாற்றத்தை ரசித்தான்.தலை குனிந்து நின்றாலும் அவனின் பார்வையை உணர்ந்த வினிக்கு இதயம் படபடக்க அந்த நிலையை மாற்றி விடும் நோக்கத்துடன் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து நோக்கி சாரி அத்தான் கதவைத் தட்டாம .....என்றவள் அவனைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் முகம் சிவக்க மீண்டும் தலை கவிழ்ந்தாள்.
அவளின் அந்த நாணமும் பதட்டமும் அவனைக்கவர என்னதான் சொன்னாலும் நீ பண்ணினது தப்பு வினும்மா.அதுக்கு உனக்கு கண்டிப்பா தண்டனை தரணுமே என ஒரு மாதிரி குரலில் கூறியவன் நிதானமான நடையுடன் அவளை நெருங்கவும் பூவினி திகைத்து விழிவிரிய அவனை நோக்கியவாறே பின்னடைந்தாள். ஓரளவுக்கு மேல் நகர முடியாமல் இதயம் படபடக்க மருண்டு விழித்தவாறே பூவினி நிற்க அவளை மிகவும் நெருங்கி வந்தவன் நாக்கை சுழற்றி உதட்டுக்குள் நமுட்டாய்ப் புன்னகைத்தவாறே அவள் அருகில் இருந்த உடைமாற்றும் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டான்.
ஒரு கணம் திகைத்து விழித்த பூவினிக்கு ஏமாற்றம் தவிப்பு கோபம் சிரிப்பு வெட்கம் என அனைத்து உணர்வுகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றாய் வந்தது.இறுதியில் சிறு சிரிப்புடன் கதவைத் தாழிட்டுவிட்டு அங்கிருந்த மெத்திருக்கை ஒன்றில் வினி அமரவும் அவசரமாய் உடை மாற்றியவன் போல் டி_ஷர்ட்டினை இழுத்துவிட்டவாறே நிலவன் வரவும் சரியாய் இருந்தது. வந்தவன் சிறு சிரிப்புடன் வினியைப் பார்த்து கண்களில் சற்று அதிக வியப்பைக் காட்டி
ஹே ..நீ இன்னும் ஓடவில்லை??? இந்நேரம் நீ ஓடியிருப்பாய் உன்னை பிடிக்க வேண்டுமே என்று நினைத்தல்லவா நான் அவசரமாக வந்தேன்.என்றான் விழிகளில் குறும்புடன் வரிசைப் பற்கள் பளிச்சிட சிரித்தவாறே.
அவன் அன்றைய தருணத்தை நினைவூட்டுகிறான் என்று புரிந்துகொண்ட பூவினியின் முகம் சிவந்தது.அவள் அருகில் வந்து அவளை உரசினாற் போல அமர்ந்தவன் அவள் தோளில் இயல்பாக கை போட்டு அணைத்து அப்புறம் வினி மேடம் என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி குறும்புடன் வினவினான்.
அவனின் நெருக்கமும் பேச்சும் அவனில் இருந்து வெளிப்பட்ட அவனுக்கேயுரிய வாசமும் அவளை மயக்க மெல்ல தன் காதல் கணவனின் அகன்ற தோளில் தலை சாய்த்தாள் பூவினி.தோள் சாய்ந்தவளின் உச்சியில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்து மேலும் அணைத்த நிலவன் கொஞ்சநேரம் பால்கனியில் நிற்போமா வினும்மா என்றான்.அவள் சம்மதமாக தலையசைக்கவே ஒருவர் கரத்தை ஒருவர் கோர்த்தபடியே பால்கனியில் சென்று நின்றனர்.
பிறை நிலா மேகங்களுக்குள் ஒளிந்து மறைந்து நட்சத்திரத் தோழிகளுடன் கண்ணாமூச்சியாடிக்கொண்டிருந்தாள்.பூவினியின் தோளில் கரம்போட்டு தன்னுடன் சேர்த்து அணைத்தபடியே வானத்தை வெறித்த நிலவனின் மோனத்தைக் கண்டு ஏதோ தோன்ற
ஏன் அத்தான் உங்களுக்கு நிஜமாகவே உங்களைப் பெற்றவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இல்லையா??? என்றாள் பூவினி.
அவளின் கேள்வியில் கலைந்தவன் அவளை நோக்கி லேசாக புன்னகைத்து இல்லாமல் இருக்கும் என்று எண்ணுகிறாயா??? என்று பதில் கேள்வி கேட்டான்.
அவன் கேள்வியில் இருந்த பதிலைக் கண்டு திகைத்து அப்புறம் ஏன் அத்தான் அந்த புகைப்படங்களை பார்க்க மறுத்தீர்கள்??? என்று வினி வியப்புடன் கேட்கவும்
ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவன். பூவினியின் மீதிருந்த அணைப்பை இறுக்கி அவள் முகம் பார்த்து எனக்கு இந்த உண்மை தெரிந்த நாளில் இருந்தே அம்மாவிடம் ஒரு தவிப்பு சஞ்சலம் வினி.ஒரு வேளை உண்மை தெரிந்துவிட்டதால் நான் அவர்களிடம் பழைய பாசத்தோடு இருக்க மாட்டேனோ என்று எண்ணினார்களோ என்னவோ.அவர்களிடம் ஒரு சஞ்சலம் அலைபாய்தல் இருந்துகொண்டே இருந்தது.நானும் அதைப் போக்க எவ்வளவோ முயன்றேன் வினி.நேரடியாக அதைக் குறித்து எதுவும் பேசாமல் அவருடன் அதிக நேரம் செலவிடுவது.முன்பு போல் அவர் மடியில் படுப்பது.அவரையே எனக்கு உணவு பரிமாறச் சொல்வது.ஏன் சில சமயம் ஊட்டிவிடுங்கம்மா என்று கூறி உண்பது என்று என்னுடைய பாசத்தை என்னால் முடிந்தவரை அவர்களிடம் வெளிபடுத்தினேன்.
என்னதான் அந்த கணம் அவர்கள் விழிகளில் இருந்து அந்த சஞ்சலம் மறைந்தாலும் அடுத்த கணம் வந்து ஒட்டிக்கொள்ளும்.அப்பாவுக்கும் அந்த சஞ்சலம் இருந்தாலும் வெளி உலக அனுபவங்கள் மற்றும் தொழில் அனுபவங்களால் அதை மறைத்து வெளியில் உறுதியாய் காட்டிக்கொள்ளுவார்.ஆனால் பாவம் அம்மா அவர்களுக்கு நாங்கள் தான் உலகம்.
இன்று நீ கவனித்தாயோ என்னவோ.என்னதான் எனக்காக முயற்சி செய்து அந்த படங்களை எடுத்தாலும்.இதழ்களில் புன்னகையுடன் என்னிடம் கொடுத்தாலும் இருவர் முகத்திலும் விழிகளிலும் ஒரு தவிப்பு இருந்துகொண்டே இருந்தது.
அப்பா முயன்று அதை மறைத்தார்.ஆனால் அம்மா??? பாவம் அவர்களால் முடியவில்லை.அவர்கள் மனதின் சஞ்சலமும் தவிப்பும் அவங்க விழிகளில் எனக்கு தெரிந்ததடி.நான் அந்த புகைப்படத்தை பிரித்து பார்த்திருந்தால் நிச்சயம் அவர்கள் மனது உடைந்திருக்கும்.நான் அதை பார்க்க மறுத்ததும் அவர்கள் இருவரின் உணர்வுகளைப் பார்த்தாயா?? தன்னலமற்று என் மீது பாசத்தை சொரிபவர்கள் வினி.அவர்கள் மனம் காயப்படக்கூடாது என்று தான் அதை மறுத்தேன். நான் செய்த அந்த செயல் அதுவரை அவர்கள் மனதை உறுத்திய சஞ்சலங்களை முற்றாக விலக்கியிருக்கும் வினு.எனக்கு தெரியும் நான் எடுத்த இந்த முடிவைத் தான் என் பெற்றோரின் ஆத்மாவும் கூட விரும்பும்.
பூவினியின் உள்ளம் உருகியது.தன்னுடைய உணர்வுகளை விட தன மீது அன்புகொண்டவர்களின் உணர்வுகளுக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவம் அவளை பிரமிக்கச் செய்தது.
உங்களுக்கென்று எந்த ஆசையுமே இல்லையா அத்தான் என்றாள் நெகிழ்ந்த குரலில்.அவளின் அந்தக் குரலில் அவளை ஆழ்ந்து பார்த்தவன் சிறு சிரிப்புடன் அவளை மென்மையாக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஏன் இல்லை?? என் ஆசை விருப்பம் மகிழ்ச்சி என்று எல்லாமாகவும் எனக்கு நீ இருக்கிறாயேடி செல்லம் என்று கூறினான்.
அவனின் கழுத்தை கட்டியபடியே கவலைப்படாதீர்கள் அத்தான் உங்கள் அம்மா அப்பாவே நமக்கு குழந்தைகளாக வந்து பிறப்பார்கள் பாருங்களேன் என்று கூறியவள் எம்பி அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.சிறு சிரிப்புடன் ஒரு கையால் அவளின் இடையை வளைத்து மறு கையால் அவளின் இதழ்களை வருடியபடி வினும்மா நீ சொல்வது ரொம்பவும் சரி தான்.ஆனால் நாம் இப்படி இங்கேயே நின்றால் அதற்கு வழியே இல்லையே என்று குறும்பு சிரிப்புடன் கூறி அவன் கண் சிமிட்டவும் நாணத்துடன் அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டது அந்த செம்பூ.
தன்னுடைய செம்பூவை இனி யாரும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என்ற எண்ணத்துடன் அந்த மேகம் செம்பூவை இறுகத் தழுவிக்கொள்ள தனக்கே தனக்கான தன்னுடைய மேகத்திடம் வந்து சேர்ந்த நிம்மதியில் அந்த செம்பூ மலர்ந்து மேகத்தின் மார்பில் அழுத்தமாக புதைந்து கொண்டது.
செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ!!!!!!
சாந்தாடும் சங்கில் துளி பட்டாலும் _முத்தாகிடும்
முத்துண்டே!!!!!!
மலர் கொண்டு மயக்கும் மன்மதச் சிலையோ...ஓ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ..ஓ
இமைகளும் உதடுகள் ஆகுமோ..ஓஓ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ....!!!!!!!
செம்பூ மலர்ந்தது.
முற்றும்