என் துணைக்கு நீதான்
பரத் கூறிய செய்தியின் அதிர்வில் இருந்து தெளிந்த மது தன் முன்னே பத்திரத்தை வைத்துக் கொண்டு யாசிக்கும் பார்வை பார்த்துக் கொண்டு நிற்கும் சந்தன லட்சுமி பார்த்துவிட்டு,
என்ன செய்ய என்று தன் மாமனையும் ரிஷியையும் மாறி மாறி பார்க்க இருவரின் பார்வையும் வாங்கிக் கொள் என்பதாகத்தான் இருந்தது.
தயக்கத்துடனே அந்த பத்திரத்தை மது பெற்றுக் கொண்ட பிறகு, தான் மானவ்வின் குடும்பத்திற்கு சற்று மன நிம்மதியாக இருந்தது.
கிளம்பும் போது மாணவ் மதுவிடம் “இது சம்பிரதாயமான விசிட் இல்ல மது நிஜமாவே இனி நீயும் எங்க குடும்பத்தில் ஒருத்தி தான் இது தான் இனி உன் அம்மா வீடு” என்றவன்
“அப்பா அளவுக்கு உன்னை பார்த்துபோமா தெரியாது. ஆனா அப்பா ஆன்மா நிம்மதியாகும் அளவுக்கு நாங்க உன்னை இனி பார்த்துப்போம்” என்று கூறி விடை பெற்றான் .
சந்தன லட்சுமிக்கு மனது மிகவும் அமைதியாக இருந்தது. இந்த குடும்பத்தில் மது நிம்மதியாக இருப்பாள் என்று தோன்றியதால் வந்த அமைதி .
மானவ்வின் குடும்பம் கிளம்பியதும் ரிஷிக்கு கடுகடுவென வந்தது. ஆனாலும் அமைதியாக தான் இருந்தான்.
பரத் சிவசங்கரின் அருகில் சென்று அமர்ந்து அப்பாவை பேசத் தூண்ட சிவசங்கரன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தது.
அற்புதாவை அருகமர்த்தி கொண்டு அவளின் கையைப் பிடித்துக் கொண்டு “அப்பு, ரிஷி நம்ம ஹாஸ்பிடல் ஷேர்ஸ் பிரிச்சி இருக்கேன். அற்புத பேர்ல 30% ஷேர்ஸ். பரத் பேர்ல 30% ஷேர்ஸ்சும், மதுபாலா பேர்ல 30% ஷேர்ஸ்சும் ரிஜிஸ்டர் பண்ணி இருக்கேன்.
உங்க அம்மா பேர்ல 10% ஷேர் இருக்கு. அத யூஸ் பண்றதுக்கு மதுவின் பெயரில் பவர் எழுதி இருக்கோம் . இது முழுக்க நானும் தாமரையும் சுயநினைவோடும் எங்கள் விருப்பத்தோடும் எடுத்த முடிவு” என்று விட்டு தாமரையை பார்க்க
தாமரையும் “போதும் ரிஷி எங்களுக்கு இனி அமைதியான ஒரு குடும்ப சூழல் தான் தேவைப்படுது. நான் செய்த தவறால அதிகம் பாதிக்கப்பட்டது அற்புதா தான்.
இனி உங்களை விட்டு திரும்பவும் ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கை எங்களுக்கு வேணாம்” என்றவர்
“எல்லோரும் ஒண்ணா இருக்கலாம் அற்புதா. விலகி விலகி இருந்தது போதும் உங்க அப்பா உன்ன விட்டுட்டோமே என்ற குற்ற உணர்ச்சியிலேயே மருகி மருகி ஹார்ட் பிராப்ளத்தை இழுத்து வச்சி இருக்காரு.
அவருக்கு கடைசி காலத்துல கொஞ்சம் மன அமைதியும் உன்னோட மன்னிப்பையைம் குடும்மா. இது அவருக்கு கொடுக்கிற நிம்மதியாக இருக்கட்டும்” என்றார்
தாமரை அற்புதவிடம் “என்னதான் நீ உங்க அப்பாவோட இயல்பா பேசினாலும் உங்க அப்பா உள்ளுக்குள்ள குற்ற உணர்ச்சியில் புழுங்கிக்கிட்டு தான் இருக்காரு” அற்புதா
எங்களோட குழந்தை இறந்த உடனே எங்களுக்கு நாங்க எந்த இடத்தில தவறு செய்தோம் என்று நாங்க உணர்ந்துட்டோம் இனி எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு அன்பான குடும்ப சூழல் தான்.
இனி நீயும் ரிஷியும் தான் முடிவு எடுக்கணும். முடிவு எடுக்கிற உரிமை உங்க ரெண்டு பேருக்கும் தான் இருக்கு” என்று விட்டார்
இதெல்லாம் இவர்கள் உணர்ந்து பேசினாலும் இவர்களை இயக்குவது பரத் என்று உணர்ந்துதான் இருந்தனர் ரிஷியும் அற்புதாவும்.
அற்புதா என்ன செய்வது என்று கணவனை பார்க்க கமலும் “எனக்கு வேலை சென்னையில இருக்கே மாமா. அதோட பசங்க படிப்பும் அங்க தானே இருக்கு” என்று சொல்லி முடிப்பதற்குள்
பரத் “ஏனாம் எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டு உடனே துண்ட காணோம் துணிய காணோம்னு டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு போன உங்களுக்கு திரும்பவும் அவ சந்தோஷத்துக்காக ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்கிட்டு வர முடியாதா” என்று கமலிடம் வல்லென விழுந்தான்
ரிஷி “ஷட்டப் பரத்” என்று ஒரு அதட்டலிட பரத் அமைதியாகி விட்டான்.
ரிஷி அதோடு விடாமல் “பரத் இனி மாமா இங்கு வருவதும் வராததும் அவரோட விருப்பம். அதுலாம் அக்காவும் மாமாவும் தான் பேசணும். அப்படியே மாமா இங்க வந்தாலும் அவருக்கு ஒரு சின்ன மன கஷ்டம் கூட ஏற்படக்கூடாது. அத மனசுல வச்சுக்கிட்டு அடுத்த வார்த்தை பேசு” என்று சற்று கடுமையாக பேசி விட்டான்.
கமல் மனைவியின் முகம் பார்க்க அவள் ஆவலுடன் கணவன் முகம் பார்க்கவும் மனைவியின் விருப்பத்தை அவள் பார்வையிலே அறிந்தவன், இது நாள் வரையும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் அவள் கஷ்டப்பட்டது போதும் என்று மனதிலேயே முடிவெடுத்து அவளுக்கு சரி என்று விட்டான்.
பரத் “அக்கா உனக்கும் மதுவுக்கும் ஒரு மாசம் டைம். நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கு மூணு மாசம் கைட் பண்ணிட்டு நான் என்னோட ஒர்க்ஸ்ல இருந்து ரிலீவ் ஆகி எனக்கான வேலையை சரி செய்ய சரியா இருக்கும்” என்று எதிர்கால திட்டங்களை வகுத்துக் கொண்டே போக,
ரிஷி “பரத் மது எப்போ ஓகே சொன்னா? நீ அடிக்கிட்டே போற மதுவுக்கு வேற கமிட்மெண்ட் இருக்கு அத மறக்காத. அவ விருப்பம் முக்கியம் அவ விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்க கூடாது” என்று பேச
அதுவரையும் அமைதியாக இருந்த மதுவிடம் பரத் “சொல்லு மது பேபி உனக்கு இங்க இருக்க விருப்பமா” என்க
மது “எனக்கு ரிஷி எங்க இருக்காரோ அங்க ஓகே பரத். பட் என்றவள் பஷீரிடம் “மாமா மண்டபம் என்ன செய்வது” என்று மாமானிடம் ஆலோசனை கேட்க,
சிறிது நேரம் யோசித்த பஷீர் தங்களின் செல்ல மகள் வாழ்வு உறவுகளுடன் சிறக்க எண்ணி “மதுமா இனி மண்டபம் விஷயம் பற்றி நீ யோசிக்காதே அது என் பொறுப்பு. அதோட அங்க பெருசா உடல் உழைப்பு தேவையில்லை தானே நமக்கு நம்பிக்கையான மேற்பார்வை தான் வேணும் அது நானும் சல்மாவும் பார்த்துக்கிறோம்” என்றதும்
மது “அப்போ நாம ஒன்னா இருக்க முடியாதே மாமா” என்றவள் கண் கலங்கவும்,
சல்மா அவளை சமாதானப்படுத்தும் விதமாக “எங்க போக போறோம் சென்னையில் பிளைட் ஏறுனா ரெண்டு மணி நேரத்துல மதுரை வந்துருவோம் மது குட்டி”
“இங்க பாரு உன் ஒருத்தி சம்மதத்துக்கு ஒரு குடும்பமே காத்துட்டு இருக்கு. சரின்னு சொல்லேன் மது குட்டி” என்க மதுவும் மனதாரவே சம்மதித்தாள்.
எல்லோருக்கும் மகிழ்வு என்றால் பரத்திற்கு பேரானந்தம். சொன்னபடியே ரிஷி சென்னை சென்று அவன் வேலை செய்த மருத்துவமனையில் இருந்து மூன்று மாதத்தில் ரிலீவ் ஆகி இருந்தான்.
இதற்கிடையே சந்தானலட்சுமியின் வற்புறுத்தலின் பேரில் மதுவின் மண்டபத்திலேயே மிக மிக ஆடம்பரமாக ஒரு வரவேற்பு வைத்தார். சற்று தயங்கிய மதுவை இது உன் தந்தையின் மிகப்பெரிய ஆசை அவரை என்னிடமே இதை பல நாள் கூறி இருக்கிறார் என்று கூற,
மதுவிற்கும் தன் தாய் தந்தையின் ஆசை இதுதான் என்பது புரியும் ஆதலால் அந்த மண்டபத்தில் அவளுக்கான வரவேற்பிற்கு சம்மதம் தந்தாள் .
சஞ்சையும் ரிஷியும் இந்த வரவேற்பை தாங்களே முன்னின்று தங்கள் தந்தையின் தொழில் முறை நண்பர்கள் சொந்தங்கள் என்று அனைவரையும் வரவேற்று ஊர்மெச்ச தான் நடத்தினார்கள்.
மதுவிற்கு ஐந்தாம் மாதம் தொடங்கி இருந்தது. சல்மாவின் கவனிப்பில் இன்னும் மினுமினுப்பாக தாய்மையின் பூரிப்பில் நன்கு உடம்பு விழுந்து இருந்தது.
சும்மாவே மதுவின் மயக்கத்தில் திரிபவனுக்கு மதுவின் இந்த கொள்ளை அழகு பித்து பிடிக்க வைத்தது. மதுவுடன் வாழும் இந்த வாழ்வு அத்தனையும் நிறைவை தந்தது ரிஷிக்கு.
ஆழ் கடலின் பேரமைதி போல இந்த அமைதியான வாழ்வை ரசித்து வாழ்ந்தனர் மது ரிஷி தம்பதியினர். இடைப்பட்ட இரு மாதத்தில் சந்தன லட்சுமி மதுவின் வீட்டிற்கு வர ஆரம்பித்து இருந்தார்.
அவருடனே பூர்விகா அம்முலு குட்டி என்று வர ஆரம்பித்தவர்கள், அவள் முற்றும் முழுதாக மதுரைக்குப் போவதால் இன்று தனபாக்கியம் மானவ் சஞ்சய் என்று மொத்த குடும்பமும் வந்து அவளை பார்த்துச் சென்றனர்.
அற்புதா சல்மா லக்ஷ்மி என்று மூன்று குடும்பத்தாலும் கொண்டாடப்பட்டாள் மது . போதாததற்கு இந்த இரு மாதத்தில் மதுரை டு சென்னைக்கு ஐந்து முறை பறந்து வந்து சென்று விட்டார் தாமரை.
மதுரை. சொன்னது போலவே அற்புதாவும் மதுவும் அவர்களுக்கான பதவிகளில் வந்து அமர்ந்து விட்டனர். அமர்த்தி விட்டான் பரத். அவர்களுக்கு தேவையான ஆலோசனை பயிற்சி என்று நேரம் ரெக்கை கட்டி பறந்தது மது அற்புதா பரத் மூவருக்கும்.
இப்போது மதுவிற்கு ஒன்பதாம் மாதம் தொடக்கம். மயில்வர்ண நிற சேலையில் அழகு தேர் போல அசைந்தாடி மருத்துவ மனையில் மது ரவுண்ட்ஸ் வர, பிரசவார்டில் இருந்து வெளியில் வந்தவனுக்கு எப்போதும் போல அவளை பார்க்க பார்க்க மனம் நிறைந்து போனது.
அவளுடன் வந்த அற்புதா தன் தம்பியின் நிலைத்த பார்வையை கண்டு விட்டு “நீ முடிச்சிட்டு ரிஷி கூடவா மது”என்று விட்டு கிளம்பி விட்டாள் .
அற்புதா வேலையில் முதலில் திணறினாலும் அவள் கூட்டில் இருந்து வெளிவந்து மருத்துவமனை மேலாண்மையை கற்றுக் கொண்டாள். கமலுக்கு வேலை மாற்றம் கிடைக்க ஆறு மாதம் ஆகிப் போன வாரம் தான் மதுரை வந்து சேர்ந்தான்.
அற்புதா மூன்று மாதம் முன்பே மதுரை வந்திருந்ததால் குழந்தைகளுக்கும் பள்ளி மாறினார்கள்.
இவர்கள் மதுரை குடி பெயர்ந்ததில் மனைவி பிள்ளைகளின் அருமையை இந்த மூன்று மாத தனிமை கமலுக்கு உணர்த்தி இருந்தது.
மதுரை வந்த கமல் கண்ட இந்த புது அற்புதா கமலுக்கு மிகவும் புதியவள். அவளுக்கான பதவியும் வேலையும் அற்புதாவிடம் ஒரு நிமிர்வைத் தந்து இருந்தது. இந்த அற்புத கமலுக்கு நிரம்பவே பிடித்தமாக இருந்தாள்.
தான் அற்புதவை எந்த நிலையில் வைத்து இருந்து இருக்கிறோம் என்று உணர்ந்தான் கமல்.
அதிலும் தான் ஒரு ஆசிரியன் பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன் வெறும் பேச்சுவாக்கில் இருந்து, நிஜத்தில் தன் மனைவியை ஒரு கூட்டிற்குள் அடக்கி வைத்திருந்ததை உணர்ந்து தன் மேலே கோபம் வந்தது கமலுக்கு.
இன்று மதுவிற்கு வளைகாப்பு. மதுரை வீடே விழா கோலம் பூன்டு இருந்தது. மானவ்வின் வீட்டிலிருந்து தான் தாய் வீட்டு சீர் வந்தது.
மதுவும் அதை மனமாற ஏற்றுக் கொண்டாள். மதுவின் திருமண புடவையான பச்சை பட்டில் தலை நிறைய மல்லிகை பூவை வைத்து அவள் நடந்து வரும் காட்சியை வழக்கம் போல் அழகிய பிம்பமாக ரிஷி தன் மனதில் சேமித்துக் கொண்டான்.
நல்லபடியாக வளைகாப்பு முடிய, அனைவரும் ஹாலில் இருக்க ஆண்டாள் மதுவுடன் பேரப்பிள்ளை நிறுத்தி அனைவருக்கும் திருஷ்டி கழித்து போட்டார்.
எல்லாம் முடிந்து ஓய்வாக அமர்ந்திருக்கும் போது மதுவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்க, அதற்க்காக அவள் கிச்சனுக்குள் செல்ல,
மதுவின் பின்னோடு சென்ற ரிஷி சுற்றி முற்றி பார்த்துவிட்டு அவளை கிச்சன் திண்டில் தூக்கி அமர வைத்தவன் “மது குட்டி இந்த புடவையில் சும்மா ஆள அசத்துரடி பப்ளி.. என்று அவள் கை விரல்களில் முத்தமிட,
அடுத்த முத்தம் அவள் நெற்றி அவள் கண்கள் குண்டு கன்னங்கள் என்று ஊர்வலம் வந்தவன் அவள் இதழ்களில் இளைப்பாற நீண்ட நெடிய முத்தத்தில் அவர்கள் அன்பு பரிமாற்றம் நிகழ,
ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில் கமலின் சின்ன குட்டி ரம்யா கிச்சனுக்குள் ஒழிய வர இங்கே ரிஷி நடத்தும் இதழ் ஊர்வலத்தை ஹாலில் சென்று சத்தமாக,
“ரிஷி மாமா மது அக்காவுக்கு லிப்ஸ்ல முத்தா கொடுக்கிறார்” என்று சத்தமிட்டு கூற கேட்டிருந்த அத்தனை பேருக்கும் சிரிப்புதான்.
சின்னவளின் சத்தத்தில் தெளிந்த மதுவிற்கும் ரிஷிக்கும் வெட்கம் பிடிக்க தின்றது. கிச்சனிலிருந்து வெளியே போக கூச்சப்பட்டு உள்ளேயே இருந்தவர்களை கமலின் சீண்டல்கள் தான் வெளியோ வர வைத்தது.
வெளியே வந்தவனை கமல் விடாமல் “பச்சை சட்டைக்காரன் மீசையில என்னமோ ஒட்டி இருக்குடோய்” என்க
ரிஷியும் நொடி கூட யோசிக்காமல் மீசையை துடைக்க செய்ய மீண்டும் ஒரு சிரிப்பொலி அவர்களிடத்தில்.
கமலின் பேச்சு சேட்டையில் ரிஷி “யோவ் மாமா சும்மா இருக்க மாட்டீங்க” என்று சொல்லிக் கொண்டே ஒரே தாவளில் கமலை கட்டிப் பிடித்து அ
வன் கன்னத்திலும் ஒரு முத்தமிட
பார்த்த அனைவரிடத்திலும் ஒரு நிறைவான புன்னகை. இந்த புன்னகை அவர்களிடம் என்றென்றும் நிலைத்திருக்க நாமும் வாழ்த்தி விடை பெறுவோம். துணைகள் சேர்ந்தது
சுபம்