நிலவு _ 1௦
இரவு நேரத்தின் மெல்லிய குளிர் தென்றல் வந்து மேனியை இதமாகத் தழுவிச் செல்ல தோட்டத்தில் இருந்த மல்லிகைப் பந்தலின் கீழ் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் ஒற்றைக்காலை மடித்து மறு காலினை நிலத்தில் ஊன்றி இரு கைகளையும் மடக்கி பின் கழுத்துக்கு கீழே கொடுத்தபடி இறுக்கம் தளர்ந்து இயல்பாக சாய்ந்திருந்தான் இனியன். அவன் விழிகள் வானத்தை வெறித்தபடியிருந்தன.வானமும் அவன் மனதைப் போலவே மழை மேகங்களால் சூழப்பட்டு சோகமாக காட்சியளித்தது.
முகில் கூட்டங்களுக்குள் மறைந்திருந்த நிலவுப்பெண் ஒளியிழந்து மங்கலாக காட்சியளித்தாள். ஏனோ அவனுக்கு அதைப் பார்த்ததும் துன்பத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு தன் இயல்பினைத்தொலைத்து பொலிவிழந்து நிற்கும் நிலாவின் மதிமுகமே மனத்திரையில் மின்னி மறைந்தது.அவனிடம் இருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று கிளம்பியது.
போன வாரம் சேரனைச் சந்தித்து விட்டு வந்ததில்…
[11:34 AM, 8/5/2023] Veeyes Dental Care: நிலவு _ 11
வந்தனா கிளம்பலாமா??
ஹே இப்போது தானே வந்தோம்.சற்று இரு சேரா. எனக்கு இன்னும் சிலது வாங்க வேண்டி இருக்கிறது.
சாரி வந்தனா.எனக்கு பயங்கரமாய்த் தலை வலிக்கிறது.நான் கிளம்புகிறேன்.நீ வாங்குவதை வாங்கிவிட்டு வா. என்ற நிலா வந்தனாவின் பதிலைக் கூட எதிர்பாராமல் அங்கிருந்து வெளியேறி ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஏறி விரைந்துவிட்டாள்.
இவ்வளவு நேரம் நன்றாகத்தானே இருந்தாள்.இப்போது என்ன ஆயிற்று?? ஹ்ம்ம் அந்நியன் மாதிரி இவள் எப்போது எப்படி மாறுவாள் என்று யாருக்கு புரிகிறது.
சிறு பெருமூச்சுடன் பார்வையைத் திருப்பிய வந்தனாவின் கண்களில் அப்போது தான் அவன் பட்டான். உயரமாய் கவர்ச்சியான முகத்துடன்...இவனை எங்கேயோ அவள் பார்த்திருக்கிறாளே !!!! எங்கே!!!!!
வந்தனாவின் பார்வை அவனிடம் நிலைக்கவும் அதை உணர்ந்தவன் போல மெல்ல அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லத்தொடங்கினான் அந்த நெடியவன்.
இவனை எங்கே பார்த்தோம்?? என்று அவள் மூளை தீவிரமாக ஆராயத்தொடங்கிய போதே அவள் கால்களும் அவனைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கியது. அந்த கூர்நாசியும் காந்தக் கண்களும்..... காந்தக் கண்கள்...காந்தப்புன்னகை
யெஸ்..யெஸ்..இவன் அவனே தான்.சேராவுடன் அந்த புகைப்படத்தில் சிரித்தபடி நின்றவன். சேரா இப்போது முகம் இறுக இங்கிருந்து கிளம்பியதற்கும் காரணம் இவன் தான போலும். நிச்சயம் சேராவிற்கும் இவனுக்கும் ஏதோ தொடர்புண்டு.இவனுடன் பேசியே ஆக வேண்டும்.
வந்தனாவின் கால்கள் வேகமெடுத்தன.அவள் தன்னைப் பின் தொடர்வதை உணர்ந்தாற் போல அந்த நெடியவனின் கால்களும் வேகமெடுத்தன.ஒருகட்டத்திற்கு மேல் அவனின் வேகத்துக்கு சென்று அவனைப் பிடிக்க முடியாது என்று தோன்றிவிட
ஹலோ பச்சை டீ ஷர்ட் ..ஹலோ ..என்று உரக்க அழைத்தாள்.
அவன் திரும்பி பார்க்கவே இல்லை.மாறாக அவன் நடையின் வேகம் அதிகரித்தது.
இவள் அழைத்ததைக் கேட்டு முன்னால் சென்ற ஒரு சிலர் திரும்பி பார்க்கவும் அந்த பச்சை டீ ஷர்ட்டை கொஞ்சம் அழையுங்களேன் என்றாள்.
அருகில் சென்ற யாரோ ஒரு பெரிசு கலிகாலம்பா முன்னாடியெல்லாம் பெண்களுக்கு பின்னால் பையன்கள் துரத்துவார்கள்.இப்போது பெண்களைக் கண்டு பையன்கள் பயந்து ஓட வேண்டியதாய் இருக்கு ஹ்ம்ம்.... என்று சத்தமாய் கூறி பெரு மூச்சு விடவும்
வந்தனாவுக்கு வந்ததே ஒரு கோபம் அவளே அந்த எருமைக்கு பின்னால் ஓடி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறாள் இதில் இந்த பெருசு வேற என்ன எதற்கு பின்னால் போகிறாள் என்று எதுவும் தெரியாமல் கமெண்ட் அடித்துக் கொண்டு....
யோவ்வ் ..சொட்டை ...உன்னைத் துரத்தவில்லை அல்லவா?? அந்த வகையில் புண்ணியம் என்று வீடு போய் சேர். அதை விட்டு சும்மா இங்கே நின்று கமெண்ட் அடிச்சுக்கொண்டு இருந்தாய் என்றால் உன் ஹெல்மெட் தலை உடைவது நிச்சயம்.எப்படி வசதி????
அந்த பெரியவரின் முகம் பேய் அறைந்ததைப் போல ஆக அதற்கு மேல் ஒரு கணமும் அங்கு தாமதியாமல் விரைந்து செல்வதைப் பார்த்தபடியே சும்மா தேவையில்லாமல் மூக்கை நுழைத்தால் வாங்கிக் கட்ட வேண்டியது தான் என்று முணுமுணுத்தபடி திரும்பிய வந்தனா தன்னெதிரே நின்றவனைக் கண்டு திகைத்தாள்.
அவனும் அவள் பேச்சைக் கேட்டுவிட்டான் போலும் அவன் விழிகளிலும் நொடிப்பொழுதில் ஒரு சிரிப்பு மின்னி மறைந்தது. மறுகணம் முகத்தை கடினமாக்கியவன் ஏய்..யார் நீ எதற்கு சும்மா பச்சை டீ ஷர்ட் மஞ்சள் டீ ஷர்ட்னு ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறாய்??? என்றான் கோபத்துடன்.
அவளோ அவனை மிஞ்சிய கோபத்துடன் ஹ்ம்ம்...நான் யார் என்பதெல்லாம் இருக்கட்டும். அது தான் நான் உங்களைத்தான் அழைக்கிறேன் என்று தெரிகிறதல்லவா??? பின்னும் எதற்கு பயந்து ஒடுகிறீர்கள்.என்றாள் நக்கலாக.
என்னது நான் உன்னைக் கண்டு பயந்து ஓடுகிறேனா??ஆனாலும் வாத்துக்கு தங்கைச்சி சைஸ்ல இருந்து கொண்டு உனக்கு இந்தளவு நினைப்பு கூடாதும்மா.என்றான் நக்கல் குரலில்.
வாத்துக்கு தங்கைச்சியா!!!!!!!! கொழுப்புத்தான்.
ஹ்ம்ம் ..ஒட்டகத்துக்கு அண்ணன் மாதிரி இருக்கிறவங்களுக்கு எங்களைப் பார்த்தால் இப்படித் தான் தெரியும்.என்றாள் வந்தனா அவனையும் மீறிய நக்கலைக் குரலில் தேக்கி.
ஒரு கணம் அவனின் முகத்தில் புன்னகையின் சாயல் பளிச்சிட்டதோ??? சிரிப்பில் துடித்த உதட்டோரத்தை முயன்று அடக்கியவன் முகத்தில் கடினத்தைக் கொண்டு வந்து
ஏய் யார் நீ?? சும்மா போகிறவனை இழுத்து வைத்து லந்து கொடுத்துக்கொண்டிருக்கிறாய்??
என்னது லந்தா?? ஹ்ம்ம்..சும்மா போகிறவர் எதற்கு எங்களை மறைந்து நின்று பார்க்கணும்.அப்புறம் எதுக்கு ஓடணும்??
என்னது நான் உன்னை மறைந்திருந்து பார்த்தேனா?? ஹ்ம்ம் அப்படி ஒரு ஆசை வேறு உன் மனசில இருக்கா??
ஹலோ நான் ஒண்ணும் என்னை என்று சொல்லல.எங்களை என்று சொன்னேன்.அதாவது சேராவையும் சேர்த்து.
சேராவின் பெயரைக் கேட்டதுமே அதுவரை அவனின் முகத்தில் இருந்த சிறு இலகு பாவனை மறைந்துவிட அந்த இடத்தில் ஒரு கணம் வேதனை குடியேறி மறுகணம் அவன் முகம் மொத்தமும் இறுக
நான் யாரையும் பார்க்கவில்லை.எனக்கு நீங்கள் யாரென்றும் தெரியாது.என்று இறுகிய குரலில் கூறியவன் அங்கிருந்து நகரப்போக சட்டென குறுக்கே கரம் நீட்டித் தடுத்தாள் வந்தனா.
உங்கள் பொய்யை நம்புவதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.உங்களை நான் சேராவுடன் ஓர் புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன்.சொல்லுங்கள் நீங்கள் சேராவிற்கு யார்??? அவள் காதலனா?? அவள் சிரிப்பைத் தொலைத்து இப்படி இறுக்கிப் போய் இருக்க காரணம் நீங்கள் தானே??
முட்டாள் உன் உளறலைக் கொஞ்சம் நிறுத்துகிறாயா??
அவனின் சீறலில் அதிர்ந்து விழித்தாள் வந்தனா.
ஒரு பெண் கூட புகைப்படத்தில் ஒன்றாக நின்றால் அவள் காதலனாகத் தான் இருக்க வேண்டுமா?? அண்ணனாக இருக்க கூடாதா??
வந்தனாவின் நெஞ்சில் அவளையும் அறியாமல் ஓர் பனிச் சாரல் அடிக்கும் போதே அவன் சொன்னான்.
நான் சேராவின் அண்ணன்.சேரவேந்தன்.
“உன்னைப் போல ஒரு புனிதமான பெண்ணால் நினைத்துப் பார்க்கக் கூட அருகதையற்றவன்டி என் அண்ணன்.”சேரநிலாவின் குரல் காதில் ஒலிக்கும் போதே அவள் விழிகள் அவனை ஆராய்ந்தது.அன்று அந்த புகைப்படத்தில் பார்த்த போது அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இப்போது அவனிடம் இல்லை.அவனின் முகம் கவர்ச்சியானதாக இருந்தாலும் அந்த முகத்திற்கு பின்னால் ஏதோ ஓர் சோகம் வலி குடிகொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.
ஹ்ம்ம் இவள் குடும்பத்தில் எல்லோருமே எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். என்று டயலாக் பேசுற மாதிரி தான் இருப்பாங்க போல!!! கொடுமை டி வந்தனா. தனக்குள் புலம்பியவள் ஓர் கூர் பார்வையுடன்
ஹ்ம்ம் ஆனால் அண்ணனே தங்கையை மறைந்து நின்று பார்க்க வேண்டிய அவசியம் தான் என்னவோ ?? என்றாள்.
நான் செய்த பாவம்.வேறு என்ன சொல்ல என்று முணுமுணுத்தவன். சரி நான் கிளம்புகிறேன் என்று முகம் இறுக கூறி செல்லப் போனான்.
சேரா இப்போது உங்கள் நண்பனின் கம்பெனியில் வேலை பார்க்கிறாள்.என்றாள் வந்தனா சட்டென தொடர்பற்று
ஒரு கணம் தயங்கியவன் ஹ்ம்ம் தெரியும் இனியன் சொன்னான் என்றவன் வேறு என்ன என்பது போல் பார்க்கவும்
உங்களுக்கும் உங்கள் தங்கைக்கும் இடையில் என்ன நடந்தது எதற்கு இப்படி ஒரு விரிசல் என்று நான் கேட்க மாட்டேன்.ஆனால் நான் அவளைப் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்.அவளைப் பற்றி நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை என்று முடித்தாள் வந்தனா.
சேரனின் முகம் லேசாக மலர்ந்தது தேங்க்ஸ் மா.என்றவன் சிறு தலையசைப்புடன் விடை பெற்றுச் செல்ல. செல்லும் அவனையே இமை சிமிட்டாது பார்த்தபடி நின்றாள் வந்தனா.