நிலவு _ 9
இனியா வா டா என்றபடி ஆர்வமுடன் வாசலுக்கே விரைந்து வந்து தன்னை அணைத்துக்கொண்ட சேரனை கண்ட இனியன் திகைத்தான். இனியனின் கரங்கள் தாமாக நண்பனை அணைத்துக் கொண்டாலும் சேரனின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து போயிருந்தான்.
பின்னே கல்லூரிக் காலத்தில் கவர்சிகரமான முகமும் அதற்கேற்ற உடற்கட்டுமாய் கடந்து செல்லும் பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் வசீகர தோற்றத்துடன் இருந்த நண்பனின் இந்த மெலிவும் ஜீவனிழந்த கண்களும் ..
டேய் சேரா !! என்னடா இப்படி மாறிவிட்டாய்??
ப்ச்.. அதை விடு. நீ முதலில் உள்ளே வா.அம்மா காத்திருக்கிறார்கள்.அம்மா யார் வந்திருப்பது பாருங்கள். என்று குரல் கொடுத்தபடியே நண்பனை உள்ளே அழைத்து சென்றான் சேரவேந்தன்.நிலாவின் அண்ணன்.
இனியனைக் கண்டதும் ஆர்வமாக வாப்பா இனியா எத்தனை காலம் ஆயிற்று உன்னைப் பார்த்து. நன்றாக இருக்கிறாயா?? வீட்டில் அனைவரும் நலமா?? என்று வாஞ்சையுடன் நலம் விசாரித்த சகுந்தலா தொடர்ந்து
ஹப்பா நேற்று நீ போன் பண்ணியதில் இருந்தே அம்மா அவனுக்கு பிடித்த கறிக்குழம்பு வையுங்கள். அது செய்யுங்கள் இது செய்யுங்கள் என்று பரபரத்துக் கொண்டே இருக்கிறான் என்று கூறி புன்னகைத்தார்.
அவர் பேச்சைக் கேட்டு நண்பனின் தோளில் சிறு சிரிப்புடன் தட்டியவன் அவரின் பேச்சுக்கு உரிய பதிலாய் ஹ்ம்ம் நான் நலம் ஆன்டி.வீட்டிலும் அனைவரும் நலம் என்றான்.
அதன் பின் அவர்களின் பேச்சு மடை திறந்த வெள்ளமாய் பிரவகித்தது.அவரவர்களின் தொழில் வேலை வாழ்க்கை என்று அத்தனை வருடங்கள் பேசாததை எல்லாம் பேசி தீர்த்தனர்.இடையில் தொடர்பு அற்று போனதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் கூறி பின் இருவருமே உரிய சமாதானத்தை கூறி ஒருவரை ஒருவர் சமாதானப் படுத்திக் கொண்டனர்.
ஆக மொத்தம் காலத்தின் ஓட்டத்தில் பிரிந்த நட்பு ஒன்று மீண்டும் அங்கே உற்சாகத்துடன் புதுப்பொலிவுடன் சேர்ந்து கொண்டது.
தனது தொழில் விடயங்களை முடித்துவிட்டு இலகுவாகவே நண்பனை சந்திக்க இனியன் வந்திருந்ததால் எந்த அவசரமும் இன்றி நிதானமாக அமர்ந்து பேச முடிந்தது.
உனக்கு இன்று office இல்லையாடா??
ஹ்ம்ம்..அது அங்கே தான் இருக்கிறது.நான் தான் போகவில்லை.நீ இங்கு நிற்க போகும் இரண்டு மூன்று நாட்களும் ஸிக் லீவ் கொடுத்துவிட்டேன்.
டேய் ஏன் டா??
பின்னே எத்தனை காலம் கழித்து நாம் சந்தித்து இருக்கிறோம்.நிம்மதியாக உட்கார்ந்து பேச வேண்டாம்.
ம்ம் அதுவும் சரிதான்.
நண்பர்கள் இருவரும் தமது கல்லூரிக்கால பேச்சுக்கள் அதன் பின்னான வாழ்க்கை வேலை தொழில் என்று நேரம் போவது அறியாமல் பேசிக்கொண்டே இருக்கவும்
பேசியது போதும்பா.வந்து சாப்பிட்டுவிட்டு மீதிப் பேச்சை தெம்பாக பேசுங்கள் என்று சகுந்தலா வந்து உணவருந்த அழைத்தார்.
சிறு சிரிப்புடன் இருவரும் எழுந்து உணவருந்த சென்றனர்.
ஹப்பா உங்க கறிக்குழம்பை நான் ரொம்பவே மிஸ் பண்ணினேன் ஆன்டி.எவ்வளவோ இடத்தில் சாப்பிட்டாலும் இந்த டேஸ்ட் மட்டும் வரவே இல்லை.என்று சகுந்தலாவின் சமையலைப் புகழ்ந்த படியே இனியன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென சேரன் கேட்டான்.
ஆமாம் திடீரென்று எப்படிடா எங்களின் ஞாபகம் வந்தது.அன்றே கேட்க வேண்டும் என்று எண்ணினேன்.வீட்டு இலக்கத்தை இவ்வளவு காலம் ஞாபகம் வைத்திருப்பவன் ஏன் இவ்வளவு நாளும் தொடர்பு கொள்ளவில்லை?? என்னிடம் என்றாலும் உன் இலக்கம் மற்றும் வேறு எந்த தொடர்புமே இல்லை என்று கூறலாம்.நீ ஏண்டா இவ்வளவு நாளும் பேசவில்லை??
டேய் டேய் கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு பேசு.உணவு புரையேறப் போகிறது.ஆமாம் உன்னிடம் நிலா எதுவுமே கூறவில்லையா?
சேரனின் முகம் ஒரு மாதிரி மாறியதோ??கையில் எடுத்த உணவு கையிலேயே இருக்க ஒரு கணம் தயங்கி நிலாவா?? அவளை சந்தித்தாயா??? என்றான் வறண்ட குரலில்.
ஹ்ம்ம்..ஆமாம் டா. ஒரு இல்லத்து விழாவில் அவளைச் சந்தித்தேன்.அதன் பின் நேற்று ஒரு ஷாப்பிங் மாலில் சந்தித்தேன்.அவளிடம் தான் வீட்டு எண் கூட வாங்கினேன்.. நான் கூட முதல் முறை சந்தித்த போதே உங்களை எல்லாம் நலம் விசாரித்ததாய் கூறச் சொன்னேனே டா. பேசவில்லையா?? இனியனின் வியந்த பார்வை சேரனை கூர்ந்தது.
அ..அ..அது ..வேலை அதிகம் போல டா. மறந்துவிட்டாள்.
ஒ..என்ற இனியனின் முகம் எதனாலோ சிறு இறுக்கத்துடன் கூடிய யோசனையைக் காட்டியது. என்னை இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்தது அவளுக்கு ஒரு பொருட்டே இல்லையா?? அல்லது ......??
டேய் சேரா எதற்கு பாதியில் எழுந்து போகிறாய்?? தட்டில் போட்டது அப்படியே இருக்கிறது..என்ற சகுந்தலாவின் குரல் இனியனின் எண்ணவோட்டத்தை தடுத்தது.
பசியில்லம்மா என்றபடி சேரன் தனது அறைக்குள் நுழைந்துவிட இனியன் குழப்பத்துடன் சகுந்தலாவைப் பார்த்தான்.
ஹ்ம்ம் என்ற பெரு மூச்சுடன் திரும்பியவர் இவன் இப்படித் தான் பா அவளின் பேச்சை எடுத்தாலே மூட்அவுட் ஆகிவிடுவான்.அவளின் பிரிவு இவனை ரொம்பவும் disturb பண்ணுகிறது போல.இருக்காதா பின்னே அண்ணனும் தங்கையும் ஒரு கொடியில் பிறந்த இரு மலர்களாய் ஒன்னுக்கொன்னா இருந்துட்டு இப்படி ஒன்னு விலகி போனா ?? ஹ்ம்ம் இப்பவே இப்படி இருக்கிறானே நாளைக்கு அவளைத் திருமணம் செய்து அனுப்பி விட்டு என்ன செய்யப் போகிறானோ!!!!! தங்கை என்றால் ரொம்ப பாசம்.சகுந்தலா பெருமையாக சொல்லவும்
சிறு முறுவலுடன் அதை ஆமோதித்தவன். ஆனால் ஆன்டி நிலா எதற்கு இவ்வளவு தூரம் தள்ளி அதுவும் விடுதியில் தங்கி வேலை பார்க்க வேண்டும்.அவளின் படிப்புக்கு இங்கேயே நல்ல வேலை கிடைக்குமே??? என்றான்.
ஹ்ம்ம்..உனக்கு தெரிகிறது. எனக்கு தெரிகிறது. அண்ணனுக்கும் தங்கைக்கும் இது புரிய வேண்டுமே!!!!!!!! அது சொந்த காலில் தனியே நின்று அனைத்தையும் சமாளித்து பழக வேண்டும் அது இதுவென்று தையதக்கா என்று குதிக்க இவனும் அதற்கு ஆமாம் சாமி என்று தாளம் போட்டு அனுப்பி வைத்துவிட்டான்.
இப்போது படுவது யார் இரண்டும் தானே??? இங்கே நிலாவிற்கு பிடித்த உணவு எதையாவது மாறி சமைத்துவிட்டாலே அவளின் நினைவில் இவன் சாப்பிட மாட்டேன் என்று அன்று முழுதும் ரூமுக்குள்ளேயே அடைந்து கிடந்து விரதம் காக்கிறான்.
நான் போனில் சற்று பாசமாக பேசினாலே இப்படி பேசாதீர்கள் அம்மா உடனே உங்களைப் பார்க்க வேண்டும் போல இருகின்றது என்று அங்கேயிருந்து அது கண் கலங்குகிறது.
பெத்ததே இரண்டு இதில் ஒன்றை அங்கேயும் ஒன்றை இங்கேயும் வைத்துக்கொண்டு நான் நடுவே கிடந்து அல்லாடுகிறேன்.இருந்தாலும் இந்த பொண்ணுக்கு இவ்வளவு ராங்கி ஆகாதுப்பா!!!! மூன்று வருடம் உன் ஆசைப்படியே தனியே இருந்து அனைத்தையும் சமாளித்து சம்பாதித்தும் காட்டி விட்டாய் இனி போதும் வா என்றால் வருவேனா என்று அடம்பிடிக்கிறது.
இதில் பெரிய சந்நியாசி போல சேவை அது இதுவென்று அவளின் போக்கினை நினைத்தாலே பயமாய் இருக்கிறதுப்பா.....என்று தன் மனதில் உள்ளதையெல்லாம் யாரிடமாவது கொட்டிவிடும் நோக்கில் சொல்லிக்கொண்டே போனவர் சற்று நிறுத்தி உன்னை வேறு ரொம்ப போரடித்துவிட்டேன் சாரிப்பா என்றார்.
அட பரவாயில்லை ஆன்டி.என்னிடம் தானே கூறினீர்கள் என்று கூறி புன்னகைத்தவன் எழுந்து கை கழுவிவிட்டு சேரனை நாடிச் சென்றான்.
சேரா என்ற அழைப்பில் எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்த சேரன் சட்டென திரும்பினான்.சாரி டா. ப்ச்..ஏதோ மூட் அப்செட்.
ஹ்ம்ம்..பரவால்ல விடு.சரி வருகிறாயா எங்கேயாவது வெளியே சென்றுவிட்டு வரலாம்?? உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும்.
ஹ்ம்ம்..என்னுடைய பைக்ல போகலாம் டா.
ம்ம் ..ஓகே டா. டன். இரண்டு பேரும் இப்படி பைக்ல போய் எவ்வளவு காலம் ஆச்சு!!
அந்த பல்செர் அவர்கள் இருவரையும் சுமந்து கொண்டு பீச் நோக்கி விரைந்தது.
கடுங்கோபத்தில் இருந்த கதிரவன் உச்சியில் நின்று தன் கோபக் கனல்களை கதிர்களாய் வீசி அனைவரையும் சுட்டெரித்துக் கொண்டிருந்த மதிய நேரம். ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் குடைவிரித்து அமர்ந்திருந்த ஒரு சில காதல் ஜோடிகளைத் தவிர ஒரு ஈ காக்காய் இல்லை அந்த கடலோரத்தில்.
நண்பர்கள் இருவரும் அலை வந்து கால் தொடும் தொலைவில் நின்று சற்று நேரம் மௌனமாய் கடலை ரசித்தனர். நீலக்கடல் தன் வெண்ணிற அலைக்கரங்களை வீசி அவர்களின் பாதங்களை தழுவிச் சென்றது.சுட்டெரித்த சூரியனின் வெப்பம் கூட அந்த அலைகளின் வருடலில் சற்று தணிந்ததாய் தோன்றியது.
நிலாவிற்கு அப்படி என்னடா பிரச்சனை??
திடீரென அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அழுத்தமாக ஒலித்தது இனியனின் குரல்.
சேரனின் உடல் ஒரு கணம் அதிர்ந்ததோ?? இனியனை நிமிர்ந்து நோக்கியவனின் கண்களில் என்ன இருந்தது???
ஏன் இனியா இப்படிக் கேட்கிறாய்??
ப்ச்...நான் பெங்களூரில் சந்தித்த நிலா பழைய நிலாவே இல்லை டா. முதல் முறை அவளைச் சந்தித்த போது அவளின் மாற்றம் குறித்து பெரும் வியப்பு எழுந்தாலும் ஒரு வேளை பெண்களின் இயல்பான மாற்றமோ என்று தான் நினைத்தேன்.ஆனால் அப்புறம் தான் தெரிந்தது அது அப்படி இல்லையென்று.
அவள் கண்களில் முன்பிருந்த துறுதுறுப்பு மகிழ்ச்சி எதுவுமே இல்ல டா. அது இல்லை என்பதை விட அவள் விழிகளின் பின்னால் ஓடிய சோகம். முகத்தில் இருக்கும் வெறுமை. ஊப்ஸ் ....முடில டா சேரா. அவளை அப்படிப் பார்க்கவே முடியல.எவ்வளவு துறுதுறுப்பான பெண் அவள்.
பேசிக்கொண்டே சேரனின் முகத்தை ஏறிட்டு பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.ஆண்கள் அழுவதில்லை என்ற நம் சமூகத்தின் பொது நியதியையும் மீறி விழிகள் கலங்கிச் சிவந்து கண்ணீர் வடிக்க முகம் இறுக கேவல் வெடித்துவிடாமலிருக்க உதட்டை அழுந்தக் கடித்தபடி கரங்களை இறுக மூடி உடல் இறுக நின்றிருந்தான் சேரவேந்தன். நிலாவின் அண்ணன்.
டேய் சேரா என்றபடி இனியன் விரைந்து நண்பனை அணைத்துக்கொள்ள அவனின் தோள் சாய்ந்து குமுறினான் சேரன்.
என் நிலாக்குட்டியோட இந்த நிலைக்கு பாவி நான் தான் டா நான் மட்டும் தான் டா காரணம்.அவளுக்கு நல்ல அண்ணனாய் மட்டுமில்ல நல்ல அப்பாவாயும் இருக்க ஆசைப்பட்டேன். இப்போ அவள் முன்னால் நல்ல மனிதனாய் நிற்கும் தகுதியைக் கூட இழந்து நிக்கிறேன் டா. அவள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் நான் துரோகம் செய்துட்டேன் டா இனியா. எதை இழந்தாலும் திரும்ப பெறலாம்.ஒரு சில விடயங்களைத் தவிர. அதில நம்பிக்கையும் ஒன்று டா. என்னால நான் செய்த காரியத்தால அந்த நம்பிக்கை என்ற வார்த்தையையே அவ வெறுக்கிறா.நான் செய்த தப்புக்கு அவ தண்டனை அனுபவிக்கிக்கிறா டா. என்று நெஞ்சே வெடித்துவிடும் போன்ற குரலில் குமுறினான் சேரன்.
ஒரு கணம் இனியனுக்கு எதுவுமே புரியவில்லை. நிலாவிற்கும் சேரனுக்குமான பாசப்பிணைப்பு எத்தகையது என்பது இனியனுக்கு தெரியுமே.அப்படிப் பட்டவன் எப்படி அவளின் துன்பத்திற்கு காரணம் ஆவான்????
டேய் சேரா.. ப்ளீஸ் ரிலாக்ஸ் டா. என்று அவன் முதுகில் தட்டியவன் தன்னிடமிருந்து அவனைப் பிரித்து அழைத்துச் சென்றான். அண்ணா சமாதியைத் தாண்டி சற்று தள்ளியிருந்த வேப்ப மரத்தடிக்கு அவனை அழைத்து வந்தவன் அங்கிருந்த கல்லிருக்கை ஒன்றில் அவனை அமரச் சொல்லிவிட்டு ஐஸ் வாட்டர் பாட்டில் ஒன்று வாங்கி வந்து அவனிடம் கொடுத்தான்.எதுவும் பேசாமல் அந்த தண்ணீரை வாங்கி முகத்தை கழுவி விட்டு தொண்டையிலும் சரித்தான் சேரன்.
ஆனாலும் அவன் முகம் முற்றாக தெளியவில்லை.அதற்கு மேல் பேசி நண்பனின் மனதை காயப்படுத்த விரும்பாத இனியன் கிளம்பலாம் டா என்று எழவும் அவன் கைப் பிடித்து தடுத்த சேரன் நான் உன்னிடம் பேச வேண்டும். இத்தனை நாளாய் என் மனதை அழுத்தும் துயரை உன்னிடம் சொல்ல வேண்டும் டா. ப்ளீஸ்...என்றான் தழுதழுத்த குரலில்.
அவனின் குரல் இனியனை கட்டிப்போட்டாலும் இல்ல சேரா இப்போது நீ மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறாய். இப்போது என்னிடம் பேசியதைக் குறித்து பின்னாளில் உனக்கே எதிர்மறை எண்ணம் தோன்றலாம். கிளம்பலாம் டா.
டேய் ..இல்ல டா.நான் என் மன உணர்வுகளை யாரிடமாவது பகிர்ந்தே ஆகணும் .இல்லாவிடில் மூச்சு முட்டியே செத்துவிடுவேன். எனக்கு தெரியும் இனியா உன்னைப் பற்றி. உன்னைப் போல் ஒரு சிறந்த தோழன் கிடைக்கவே மாட்டான் டா.எனக்கு இப்போது இருக்கும் ஒரே நண்பன் நீ ஒருத்தன் தான் ப்ளீஸ் இனியா....
நண்பனின் தவிப்பைப் பார்த்த இனியன் என்ன பேச்சு சேரா இது என்ற சிறு கண்டிப்புடன் சரி சொல்லு என்ன சொல்லணும் என்றபடி அவன் அருகில் அமர்ந்தான்.
இனியனிடம் அனைத்தையும் பகிர வேண்டும் என்று அவனை வற்புறுத்தி அமரச் செய்த சேரனின் முகம் பேசத் தொடங்கும் முன் ஆயிரம் உணர்ச்சிகளைப் பிரதிபலித்தது.இறுதியில் ஒரு அவமானக் கன்றலுடன் நான் உன் பழைய நண்பன் இல்லை டா. நான் தப்புச் செய்தவன். ஒழுக்கம் தவறியவன். வழி மாறி தடம்மாறியவன். நான் செய்த தவறால் என் வாழ்க்கையை மட்டுமன்றி என் தங்கையின் வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சுட்டேன் டா. என்று உள்ளே சென்ற குரலில் தொடங்கியவன் நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.
கல்லூரிப்படிப்பை முடித்த சில மாதங்களிலேயே சேரனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது.கை நிறைய சம்பளம் நல்ல வேலை.அதுவரை நன்றாக படித்து நல்ல வேலையில் அமர வேண்டும்.தங்கையின் எதிர்காலத்துக்கு நிறைய சம்பாதிக்க வேண்டும் தாயின் சுமையை குறைக்க வேண்டும் என்ற பொறுப்புக்களுடனும் கனவுகளுடன் வாழ்க்கையை நகர்த்திய சேரனுக்கு அந்த வேலை கிடைத்ததுமே அனைத்தையும் சாதித்து முடித்து விட்டதாய் தோன்றியது.இனி என்ன நல்ல வேலையில் அமர்ந்தாகி விட்டது.கை நிறைய சம்பளம்.இனி பணம் ஒரு பிரச்சினையே அல்ல எந்த விடயத்துக்கும் என்ற எண்ணம் அவன் மனதில் அழுத்தமாய் வந்தமர கூடவே ஒரு அலட்சிய போக்கும் அவனிடம் வந்து சேர்ந்தது.
அதற்கேற்றாற் போலவே நாகரிகம் என்ற போர்வையில் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டிருக்கும் சில இளைஞர்களின் நட்பும் அவனுக்கு கிடைத்தது.அலுவலகத்தில் ஆரம்பித்த நட்பு பப், பார் என்று தொடர்ந்தது.
டேய் மச்சி....இப்போ இதையெல்லாம் enjoy பண்ணாம எப்படா பண்ணப் போற?? சும்மா சாமியார் மாதிரி இருக்கியே..என்ற நண்பர்களின் கேலிப்பேச்சும் ஆசை வார்த்தைகளும் ஓர் மாயையாய் அவனின் மூளையை மழுங்கடிக்க மெல்ல மெல்ல அவன் நரகப் படுகுழியில் இறங்கத் தொடங்கினான். மதுப்பழக்கம் எப்போவாவது ஒரு தடவை என்பது மாறி நண்பர்களின்(?? ) சேர்க்கையில் வாரத்துக்கு ஒரு தடவை என மாறிய போது அது நிலாவின் பார்வையில் பட்டது.
அதுவரை குட்டித் தங்கையாய் இருந்தவள் அந்த தருணத்தில் அவனுக்கும் மூத்தவளாகி அவனை அழைத்து பேசினாள்.
அண்ணா நான் உன்னிடம் சற்று பேச வேண்டும்.
ஸ்ஸ்...இப்போதா?? வெளியே செல்ல வேண்டுமே.நண்பர்கள் காத்திருப்பார்கள் டா. நாம் நாளை பேசலாமா??
ம்ஹும்..இப்போதே பேச வேண்டும்.
ஹ்ம்ம்..சரி சொல்லு.
அண்ணா நேற்று இரவு நீ வீட்டுக்கு வரும் போது உன் மேல் இருந்து மது வாடை வீசியது. என்ன அண்ணா இதெல்லாம்?? நீ எப்போது இப்படி மாறினாய்?? இதெல்லாம் அம்மாவுக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று எண்ணிப் பார்த்தாயா?? தன் வளர்ப்பில் தான் தவறென்று தன்னையே நொந்து கொள்வார்கள். உன்னிடம் இருந்து நான் இதை எதிர் பார்க்கவில்லைண்ணா.என்ற தங்கையின் கண்ணீர்க் குரல் அந்த நிமிடம் நெஞ்சைச் சுட தலை குனிந்து நின்றவன் பின் நிமிர்ந்து சாரி டா.தப்பு தான்.நண்பர்களின் வற்புறுத்தலால் மறுக்க முடியவில்லை.இனி இந்த தப்பு நடக்காது. என்று தங்கைக்கு வாக்களித்தான்.அவனின் அந்த வார்த்தைகளிலேயே பூரண நம்பிக்கை கொண்ட அவனின் செல்ல தங்கையும் இனி பார்த்து நடந்துகொள் அண்ணா என்ற சொல்லோடு விலகிச் சென்றாள்.
தங்கைக்கு வாக்களிக்கும் போது என்னவோ அவன் மனத்தால் உணர்ந்து இனி மதுவின் பக்கமே திரும்புவதில்லை என்று தானும் நூறு வீதம் நம்பித்தான் கூறினான்.ஆனால் அந்த உறுதி வீடு என்று இருந்தால் இப்படி நாலு பேச்சு வரத்தான் செய்யும்.அதையெல்லாம் பார்த்தால் இந்த இன்பம் கிட்டுமா என்ற நண்பர்கள் எனும் சாத்தானின் துர் போதனைகளால் கலைந்து விட அடுத்த வாரமே மீண்டும் மதுவின் சுவையை நாடிச் சென்றான்.
ஆரம்பத்தில் தங்கையிடம் இப்படி பொய் சொல்கிறோமே அன்னையை ஏமாற்றுகிறோமோ என்று மனதில் தோன்றிய உறுத்தல் கூட காலப்போக்கில் மதுவின் போதையில் மெல்ல மெல்ல கரைந்து போக அவன் எந்த உறுத்தலுமின்றி தப்பின் அடுத்த கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக முன்னேறினான்.
ஒரு கட்டத்தில் மதுவின் போதையையும் தாண்டி மங்கையின் போதை தேவைப்பட நண்பர்களின் தூண்டிவிடும் பேச்சுக்களும் துணை நிற்க அவன் அதல பாதாளத்தில் தலை குப்புற விழுந்தான். அவனுக்கு அதன் பின் ஓவர்டைம் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை அடிக்கடி ஏற்பட (??) வீட்டிற்கு வரும் நேரமும் பத்து , பன்னிரண்டு , ஒன்று என்று அதிகரித்து கொண்டே சென்றது. நிலாவும் கல்லூரி இறுதியாண்டின் பரீட்சைகளுக்காக மும்முரமாக படிப்பதில் கவனத்தை செலவிட்டதாலும் அண்ணன் மேலிருந்த அபார நம்பிக்கையும் அவள் அவன் மேல் எதுவித சந்தேகமும் கொள்ளவிடாமல் உதவியது.
சகுந்தலாவுக்கோ மகன் சொக்கத்தங்கம்.அவன் அரிச்சந்திரனின் பேரன் என்றொரு நினைப்பு.ஆதலால் அவன் சொல்லும் பொய்களைக் கூட சற்றும் சந்தேகமே இன்றி அப்படியே நம்பினார். அதனால் வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றுவது சேரனுக்கு மிகவும் இலகுவாக இருந்தது.
அப்படி இருந்தும் இடையில் ஒரு தடவை மிகவும் நேரம் சென்று வந்த சேரனை தூக்க கலக்கத்துடன் வழி மறித்த நிலா அண்ணா இப்போல்லாம் ரொம்ப late ஆகுதேண்ணா நீ வீட்டுக்கு வர. பழையபடி நண்பர்கள் மது என்று எந்த தப்பான வழிக்கும் நீ போகவில்லையே?? என்றாள் கவலையுடன்.
அவளின் அந்த கவலைக் குரல் அப்போது அவனின் மனதை எட்டவில்லை. அவளின் அந்த அக்கறையும் கவலையும் யாருக்கானது என்று கூட அவன் எண்ணிப் பார்க்கவில்லை.மாறாக அன்று சந்தித்துவிட்டு வந்த மும்பை அழகியே மனம் முழுதும் வியாபித்திருக்க தங்கையின் கேள்விக்கு அனிச்சையாக சற்றும் மனம் உறுத்தாமல்
ஹே என்னடி இந்த சேரனைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்.நான் சொன்னால் சொன்னது தான்.எந்த தப்பும் பண்ண மாட்டேன்.என்று அலட்சியமாக சற்று எரிச்சலுடன் கூறிவிட்டு தனது அறையினுள் புகுந்து கொண்டான்.
தான் அப்படி சற்றும் உறுத்தல் இல்லாமல் கூறிய பொய்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஒரு காலத்தில் தன்னையே அணு அணுவாக வதைக்கும் தன் தங்கை தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை அடியோடு துடைத்து எறிந்துவிடும் என அவன் கனவிலும் கருதவில்லை.
தவறு செய்யும் ஒவ்வொருவரும் எண்ணுவது போலவே தான் செய்யும் தவறும் யாருக்கும் தெரியவராது என்றே அப்போது எண்ணினான் சேரன்.ஆனால் தெய்வம் என்ற ஒன்று உண்டல்லவா???
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல ஒருநாள் அவனின் சுயரூபம் நிலாவிற்கு தெரிய வந்தது..
அன்று அவள் அவனைப் பார்த்த பார்வை.உலகின் ஒட்டுமொத்த அசிங்கத்தையும் அவன் உருவில் கண்டது போல பார்த்தாளே ஒரு பார்வை!!!! அந்த நொடி சேரன் செத்துவிட்டான். எப்போதும் அவனைப் பார்க்கும் பார்வையில் அளவு கடந்த பாசத்தையும் மதிப்பையும் மட்டுமே காட்டும் தங்கையின் கண்களில் தெரிந்த அந்த அருவருப்பினைக் கண்ட சேரனுக்குள் இருந்த அந்த கேவலமான மனிதன் அந்த நொடி செத்துவிட்டான்.
தங்கையின் முன்பு எப்போதுமே கம்பீரமாக நிற்கும் அவன் அந்த நொடி அவள் முன் கூனிக்குறுகி நின்றான்.நிலா அவனிடம் எதுவுமே பேசவில்லை.கண்களில் ஓர் வலி கலந்த அருவருத்த பார்வையுடன் அந்த இடத்தை விட்டே மௌனமாக நகர்ந்துவிட்டாள்.
அதன் பின் அவள் அவனிடம் பேசியது பெங்களூர் செல்ல முடிவெடுத்த பின் தான்.அதுவும் எப்படிப் பேசினாள்.யாரோ ஒரு மூன்றாவது மனிதனிடம் பேசுவது போல பார்வையில் ஓர் அந்நியத்தன்மையுடன்
எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருக்கிறது. நான் செல்ல வேண்டும்.அம்மாவிடம் பேசி என்னை அனுப்பி வை.என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.
பல நாள் கழித்து தங்கை பேசிவிட்ட மகிழ்ச்சியில் விழிகள் கலங்க ஏன் நிலாம்மா அவ்வளவு தூரம் இங்கேயே ....என்று அவன் தொடங்கவும்
வெறுப்புடன் ஒரு கரம் நீட்டி அவன் பேச்சினைத் தடுத்தவள் ப்ச்....நான் இங்கிருந்து செல்வதே வேண்டாதவர்களின் முகத்தையே பார்ப்பதைத் தவிர்க்கத் தான்.இங்கிருந்து பாசம் எனும் போர்வையில் வேசமிடும் நம்பிக்கைத் துரோகிகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தால் மூச்சு முட்டியே நான் இறந்துவிடுவேன்.
அதோடு என் நெஞ்சு கொதிக்கும் கொதிப்பில் இங்கிருந்தால் என்னை மீறி அம்மாவிடம் அனைத்தையும் கூறி அவர்களையும் வருத்தி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. சில பேரின் சுயரூபத்தை அறிந்து நான் படும் நரக வேதனையே போதும்.தன் மகன் உத்தமன் என்று நம்பிக்கொண்டிருக்கும் அம்மாவுக்கும் அந்த துன்பம் வேண்டாம் என்றாள்.
விழிகளை இறுக மூடி பெரும் துன்பத்தை அடக்க முயல்பவள் போல் தங்கை நின்ற கோலம் மனதைச் சுட
நிலாம்மா என்னை மன்னித்து விடும்மா.....தவறான நட்புக்களால் தடம் மாறி விட்டேன்.இனி நிச்சயம் எந்த தவறும் செய்ய மாட்டேன் டா.ப்ளீஸ் நம்பு...என்று கரகரத்த குரலில் மன்னிப்பு வேண்டியவனின் பேச்சு
ப்ளீஸ் ....போதும்..என்ற நிலாவின் வலி மிகுந்த வார்த்தைகளில் சட்டென நின்றது.கண்களில் இருந்து கண்ணீர் வழிய எந்த ஒரு தங்கைக்கும் என் நிலை வந்துவிடக் கூடாது. உலகத்திலேயே சிறந்த அண்ணன் என் அண்ணன் தான்.உலகத்திலேயே சிறந்த ஆண் மகன் என் அண்ணன் தான் என்று என் மனதில் உன் மேல் மிகப்பெரிய மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தேன்.அத்தனையையும் ஒட்டு மொத்தமாய் சிதைத்து விட்டாய். உலக்கத்தில் உள்ள சிறந்த ஆண்களுக்கு உதாரணமாய் உன்னைத்தான் கருதியிருந்தேன்.நீ சிதைத்தது நான் உன் மேல் கொண்ட நம்பிக்கையை மட்டும் அல்ல.ஒட்டு மொத்த ஆண் குலத்தின் மேலும் கொண்ட நம்பிக்கையையும் தான்.இனி நான் உன்னை மட்டும் அல்ல இந்த உலகத்தில் எந்த ஆணையுமே நம்ப மாட்டேன்.இந்த உலகத்தில் உள்ள ஆண்கள் எல்லோருமே துரோகிகள் நம்பிக்கைத்துரோகிகள் மனச் சாட்சி சிறிதுமற்ற ஜென்மங்கள்.
கண்களில் கண்ணீர் வழிய வலியும் கோபமும் ஆக்ரோஷமும் சம விகிதத்தில் கலந்த குரலில் பேசினாள் டா.அது தான் என் நிலா என்னிடம் பேசிய கடைசிப் பேச்சு. அதன் பின் இந்த மூன்று வருடத்தில் என்னிடம் பேசவே இல்லைடா. நானாக முயன்று பார்த்து தோற்றுவிட்டேன். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நேரில் சென்றால் யாரோ அந்நிய மனிதனைப் பார்ப்பதைப் போல் பார்த்துவிட்டு போகிறாள் டா. அண்ணா அண்ணாவென்று என்னையே சுற்றி வந்த அவளின் உதாசீனத்தில் அணுஅணுவாய் செத்துக்கொண்டிருக்கிறேன் டா இனியா!!!!!!
நான் தப்பு செய்து என் வாழ்க்கையை மட்டும் அல்ல அவள் வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்கி விட்டேன்.திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.அம்மாவிடம் அவள் தோழியின் வாழ்க்கையைக் காரணம் காட்டி ஆண்களையே நம்ப மாட்டேன்.திருமணமே செய்ய மாட்டேன் என்கிறாள். பழைய துள்ளல் துடிப்பு மகிழ்ச்சி எதுவுமின்றி கிட்டத்தட்ட ஒரு துறவியைப் போல் வாழ்கிறாள் டா. என் பூப்போன்ற தங்கையை இப்படி ஆக்கிவிட்டேன் டா. பாவி நான்.
உடல் குலுங்க கரங்களில் முகம் புதைத்து கண்ணீர் விடும் நண்பனின் முதுகையே வெறித்தான் இனியன்.அவனுக்கு சேரனைத் தேற்ற வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை.
ஆக அந்த பூவை இப்படி இறுகிப் பாறையாகியதின் காரணம் இது தானா?? இனியனுக்கு அவளின் நிலை புரிந்தது. அவன் நெஞ்சம் வலித்தது.
அவனுக்கு தெரியுமே நிலா சேரவேந்தன் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் என்று.ஒரு சமயம் விளையாட்டுப் பேச்சாய் சேரன் நிலாவிடம் உனக்கு எப்படி கணவன் அமைய வேண்டும் நிலா .விஜய் போலவா?? சூர்யா போலவா??? என்று சில திரைப்பட கதாநாயகர்களின் பெயரைச் சொல்லி கேட்க அதற்கு அவள் எல்லா பெண் குழந்தைகளும் தங்கள் அப்பா போல் தங்களை பாசமாய் பார்த்துக்கொள்ளும் கணவன் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களாம்.ஆனால் எனக்கு உன்னைப்போல் எல்லாவற்றிலும் பெர்பெக்ட் ஆக இருக்கும் என்னை அன்புடன் பார்த்துக்கொள்ளும் கணவன் வேண்டும்ணா.எனக்கு அப்பா அண்ணா எல்லாமே நீதானே என்று நெகிழ்ந்த குரலில் கூறியது நினைவு வந்தது.
அப்படிப் பட்ட பாசத்தை அண்ணன் மேல் கொண்டிருந்தவள் எப்படி இதை தாங்கி இருப்பாள். உலகத்திலேயே என் அண்ணன் தான் சிறந்தவன்.என்று எண்ணுபவள் எல்லாவற்றுக்கும் ரோல் மாடல் ஆக தன் அண்ணனையே கருதுபவள். தவறு என்ற வார்த்தையைக் கூட அண்ணனுடன் சேர்த்து பார்க்காதவள். எப்படி அவள் அண்ணனின் இந்த தவறை சகித்துக்கொண்டிருப்பாள். அதை சகித்துக் கொள்ள முடியாமல் தான் அந்த பூவை இறுகி பாறையாகிவிட்டாள் போலும்.......