• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Teaser

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,391
443
113
Tirupur
“நான் என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சிருக்க.?” என்றான் கோபமாக.

“நான் ஒன்னும் தப்பு செய்யல..”என்றாள் அவளும் அழுத்தமாக.

“நீ தப்பு செஞ்சன்னு எப்போ சொன்னேன். ஆனா இப்போ செய்ய வேண்டாம் பொறுமையா இரூ. நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல.. ஏன் இந்த அவசரம். யார் உன்னை இந்த வேலை பார்க்க சொன்னது?”

“ஆமா எனக்கு அவசரம் தான். என் வெற்றி அண்ணா நாளைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி குஜராத் போறான். அவனை அனுப்பிட்டு உங்க அம்மாவும், தங்கச்சியும் சேர்ந்து யாழினிக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்க. கல்யாணம் செய்ய சொல்லி மிரட்டுவாங்க. ஒன்னு யாழி அவங்களுக்கு பயந்து கல்யாணம் செஞ்சிப்பா.. இல்ல சூசைட் பண்ணிப்பா.. இது எதுவும் நடக்கக்கூடாதுனு தான் நான் அவங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சேன். இதுல என்ன தப்பு..” என ஆத்திரமாக கேட்ட மனைவியை அதே அளவு ஆத்திரத்துடன் எதிர் கொண்டான் கர்ணன்.

“அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல அப்படித்தான. நான் இருக்கும் போது அப்படி என்ன நடந்துடும். இல்ல நான் தான் நடக்க விட்டுடுவேனா? அதையெல்லாம் நீ யோசிக்கவே இல்ல அப்படித்தான..” என்றான் அழுத்தமாக.

“இதுல நம்பிக்கை என்ற வார்த்தை ஏன் வருது. ஆக்சுவல்லா இதை நீங்க செஞ்சிருக்கனும். நீங்க செய்யாம விட்ட தப்பை நான் சரி செஞ்சிருக்கேன்.” என்றாள் வல்லபியும் அழுத்தமாக.

“அப்போ என் பேச்சுக்கு என்ன மரியாதை. நான் பொறுமையா இருன்னு சொல்லியும் கேட்காம எதுக்கு இந்தளவுக்கு பிரச்சினையை கொண்டு வந்து விட்டிருக்க. இனி இவங்களை எப்படி சரி செஞ்சு கொண்டு வர முடியும்..”

“நீங்க அவங்ககிட்ட ரொம்ப இறங்கி போயிட்டீங்க. அப்பவும் அவங்க சம்மதிக்கல. இதுக்கு பிறகு சம்மதிப்பாங்கன்னும் எனக்குத் தோனல. அதனாலத்தான் நான் இந்த முடிவு எடுத்தேன். இதுல நீங்க வருத்தப்பட என்ன இருக்கு?”

ஓ.. அப்ப இதுல நான் வருத்தப்பட ஒன்னுமே இல்ல அப்படித்தான. அதுவும் சரிதான். என் மானம் மரியாதை உனக்கு முக்கியமா இருந்திருந்தா, என்னோட ஃபீலிங்க்ஸ் உனக்கு புரிஞ்சிருந்தா நீ இவ்ளோ பேசியிருக்க மாட்ட..”

“இப்போ என்ன சொல்ல வர்ரீங்க.. நான் உங்களை புரிஞ்சிக்கலன்னு சொல்றீங்களா?”

“உண்மை அதுதான்..”

“ஓ.. நீங்க சொன்ன சரிதான். அப்போ நான் என்ன செய்யனும்..?”

“என்னை மதிக்காம, என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்காத நீ இனி இங்க இருக்க வேண்டாம்.” என்றான் பட்டென..

அவன் கூறியது புரியாமல் “என்ன சொல்றீங்க?” என்றாள் பெண்.

“ஆமா.. இனி நீ இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. பாண்டியன் கூட கிளம்பினாலும் சரி. இல்லை உன் அண்ணனை வரச் சொல்லி கிளம்பினாலும் சரி. நான் வரும் போது நீ வீட்டுல இருக்கக்கூடாது..” என இறுகிய குரலில் கூறியவன், அவளின் ஒன்பது மாத மேடிட்ட வயிற்றை அழுத்தமாக பார்த்துவிட்டு, அறையிலிருந்து வெளியேறி விட, இடிந்து போய் அமர்ந்துவிட்டாள் வல்லபி.


 
  • Like
Reactions: saru

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
413
6
28
Hosur
Adeiii Athukula 9masam agiducha
Po jollitane
Ana ethum reason irukumo
 

Anandi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2025
12
2
3
Chennai
Karna herova ? villanaa?Pl post episode