• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அஞ்யுகா ஶ்ரீ - புழுதியொரு பூவாகி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
புழுதியொரு பூவாகி

“சொன்ன வேலையை செய்யாமல் அங்க என்னடி பண்ற ? சீக்கிரமா வா… என்னால் பசி தாங்க முடியாதுன்னு தெரியாதா?” என தாயம்மா கத்தவும்.

“ஐந்தே நிமிஷத்தில் சாப்பாடு ஆகிடும் அத்தை… கொஞ்சம் பொறுத்துக்கோங்க ” என்று கூறிய வைரம் ஒன்பது மாத பானை வயிற்றை வைத்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க சமையலை செய்தார்.

அதில் கடுப்பான தாயம்மா, வெளியே இருந்து வந்த மகனிடம், “டேய் ராசு, இதெல்லாம் கேட்கவே மாட்டியா? எதையோ மனதில் வைத்துக்கொண்டு உன்னுடைய பொண்டாட்டி என்னைப் பட்டினி போட்டு கொல்றாளே” என்றவர்,

“உன்னுடைய அப்பா போனப்பவே நானும் போய் சேர்ந்திருந்தா இந்த கொடுமையெல்லாம் அனுபவிக்க வேண்டிய நிலை வந்திருக்குமா?” எனக்கூறி நீலி கண்ணீர் சிந்தினார்.

தாயின் கண்ணீரில் கோபம் கொண்ட ராசு, “வைரம்… வைரம்” என இரைந்தார்.

கணவனின் கோபத்தில் பயந்த வைரம், “வந்துட்டேங்க” எனக்கூறி வெளியே சென்றார்.

“அம்மா பசி தாங்க மாட்டாங்கன்னு உனக்குத் தெரியாதா? நேரமா எழுந்து சோத்தை வைக்கவேண்டியது தான? உன்னால் அதைக் கூட சரியா செய்ய முடியாதா?” என கேட்க.

“அவ்வளவு தான் ஆகிடுச்சுங்க” என்ற வைரம்,

“நைட் சரியா தூக்கமில்லை அதனால் தான் எழுந்துக்க நேரமாகிடுச்சு” என்றவளின் பார்வை கடிகாரத்தைப் பார்த்தது.

அதை உணர்ந்த தாயம்மா, “அங்கென்ன பார்வை? வெட்டியா இருக்கிற கிழவிக்கு எட்டு மணிக்கே என்ன அவசரம்னு நினைக்கிறியா?” என்றவர்,

மகனிடம், “பார்த்தியாடா இவளுடைய பார்வையை?” என்று கூறி மூக்கைச் சிந்தினார்.

அதற்கு ராசு மனைவியிடம், “அம்மாவுக்கு வேண்டியதை செய்வது தான் உன்னுடைய கடமை… அதைத் தவறாமல் சரியான நேரத்தில் செய்… இன்னொரு முறை இது மாதிரி நடந்தது நான் சும்மா இருக்கமாட்டேன் பார்த்துக்கோ” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

மகன் சென்றதும் தாயம்மா, “நான் யார்னு இப்பப் புரியுதா?” என்றவர்,

வைரத்தின் பானை வயிற்றை பார்த்து, “இது மட்டும் பெண்ணா இருக்கட்டும் அப்புறம் இருக்குது சேதி” என கேலியாக பேசிச் சிரித்தார்.

மாமியாரின் பேச்சில் எரிச்சல் வந்தாலும் எச்சியை விழுங்குவதைப் போல் துக்கத்தை விழுங்கிக்கொண்டு மாமியாரின் வயிற்றை நிரப்பும் வேலையை ஆரம்பித்தார்.

எதையோ சாதித்ததைப் போல் மருமகளைப் பார்த்தவரின் கண்களின் பேத்தி படவும், “ஏய்!... சின்ன சிறுக்கி இங்க வாடி” என அழைக்க.

அந்த வாண்டோ, “நான் ஒன்னும் சிறுக்கி இல்லை… என்னுடைய பேர் அழகி” என கூறினாள்.

“விளக்குமாத்துக்குப் பேர் பட்டுக்குஞ்சமாம்!” என நீட்டி முழங்கினார்.

அதற்கு அழகி, “எப்படி? உனக்கு தாயம்மானு பெயர் வச்சாங்களே அந்த மாதிரியா?” என அவரை திருப்பி கேட்டாள்.

பேத்தியின் பேச்சில் கோபம் கொண்ட தாயம்மா, “ஏன் சொல்லமாட்ட? நீ பிறந்தப்பவே சோலியை முடிக்கச் சொல்லி உன்னுடைய அப்பன் சொன்னான். நான் தான் வேண்டாம்ன்னு தடுத்தேன், இன்னைக்கு என்னையே எதிர்த்துப் பேசுறியா?” என வன்மத்துடன் கூறினார்.

பாட்டியின் பேச்சில் கண்களில் நீருடன் உள்ளே ஓடிய அழகி வேலை செய்து கொண்டிருந்த தாயை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

திடீரென மகள் அணைக்கவும் திடுக்கிட்ட வைரம், “அழகிக்கு என்ன ஆச்சு? ஏன் அழறாங்க?’ என வாஞ்சையாக கேட்க.

அழகி விசும்பலுடன் தாயம்மா கூறியதை ஒன்றுவிடாமல் கூறினார்.

அதில் மனம் துடித்து போன வைரம், “அப்படியெல்லாம் இல்லை அழகி” என்றவர்,

“அப்பாவுக்கு உங்களை பிடிக்கும்டா” எனக்கூறி மகளை சமாதானம் செய்யப்பார்த்தார்.

அதற்கு அழகி, “அப்புறம் ஏன்ம்மா அப்பா என்னிடம் பேசவே மாட்டேங்கிறார்? என்னுடைய தோழியின் அப்பா மாதிரி பைக்கில் ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டு போகமாட்டேங்கிறார்?” என்று கண்களில் கண்ணீருடன் கேட்க.

தவியாய் தவித்துப் போன வைரம், “அது பாட்டி முன்னால் உன்னைக் கொஞ்சினா இன்னும் திட்டுவாங்கனு தான் அப்பா உங்ககிட்ட பேசறதில்லை… பைக்கில் கூட்டிக்கிட்டுப் போறதில்லை” என்றவர்,

மகளின் முகம் தெளியாதிருப்பதை பார்த்து, “அழகிக்கு யார் டிரஸ், ஸ்வீட் எல்லாம் வாங்கிக் கொடுக்கிறாங்க? அப்பாதான? அப்புறம் எப்படி அவருக்கு உங்களை பிடிக்காமல் போகும்?” என கேட்க.

“ஆமாம் ம்மா! அப்பா தான் வாங்கி கொடுக்கிறார்… ஆனால் எங்கிட்ட கொடுப்பதில்லையே” என வருத்தமாக அழகி கூறினாள்.

அதற்குள் தாயம்மா கத்தவும் வைரம், “இருங்கடா பாட்டிக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரேன்” என்றவர் சிறிது எரிச்சலுடன் மாமியாருக்கு காலை உணவை எடுத்துச்சென்றார்.

தாயிற்காக காத்திருந்த அழகி, “அம்மா… இந்த பாட்டி நமக்கு வேண்டாம்… சந்தையில் வித்திடலாமா?” என கேட்க.

அதில் பதறிய வைரம் சுற்றியும் முற்றியும் பார்த்துவிட்டு மகளிடம், “இப்படி பேசுவதெல்லாம் ரொம்ப தப்பு அழகி… பாட்டி வயசானவங்க இந்த மாதிரி தான் பேசுவாங்க நாம தான் பொறுத்துப் போகணும்” என்று கூறவும்.

அழகி, “ஆனால் என்னுடைய ப்ரண்ட் பாட்டி இவங்க மாதிரி திட்ட மாட்டாங்க ம்மா… அவங்க ரொம்ப ஸ்வீட்… அப்பா வாங்கிவர அல்வா மாதிரி” எனக் கூறிச் சிரிக்க.

வைரம் புன்னகையுடன், “ஏன்னா அவங்க தாயம்மா இல்லை அழகி” என்றவரின் மனது மாமியாரை வசைபாடியது.

அழகி, “பாப்பா வந்தாலும் அவளையும் இப்படித் தான் திட்டுவாங்களா ம்மா?” என கண்கள் இடுங்க கேட்க.

தயங்கிய வைரத்தை பார்த்தும் அழகி, “அவள் என்னுடைய பாப்பா… பாட்டி திட்டினாங்க அடிச்சுடுவேன்” என கோபமாக கூறினாள்.

அதில் பூரித்து போன வைரம், “இதில் என்ன சந்தேகம்? அம்மா வயிற்றில் இருக்கும் பாப்பாவை அழகி குட்டி தான் பார்த்துக்கணும்… அம்மா எப்படி உங்களை பார்த்துக்கிறேனோ அதே மாதிரி… யாரும் அவளை தொந்தரவு பண்ணாமல் அக்கா தானே பார்த்துக்கணும்” என்று கூறவும், அந்த சின்னஞ்சிறு குருத்தின் மனதில் தாயின் வார்த்தைகள் ஆழமாக பதிந்து போனது.

இதையெல்லாம் தனது அறையின் வாயிலிருந்து கேட்ட ராசுவின் மனது பதைபதைத்துப் போனது.

மகளின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கேட்ட பின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டது.

அந்த சிறு சலனம் ஒரு நாள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தலாம்… சலனம் சத்தமின்றி அடங்கியும் போகலாம்.

“என்னிடம் கேட்ட மாதிரி வேற யாரிடமும் கேட்கக்கூடாது… அப்புறம் பாட்டி காதுக்கு போச்சு அவ்வளவு தான்” என கூறி வைரம் மகளை எச்சரித்தார்.

“சரி ம்மா” என்றவள்,

வயிற்றை தடவி, “ம்மா அழகிக்கு பசிக்குது” என்க.

“அச்சோ! அம்மா மறந்தே போயிட்டேன்” என்ற வைரம்,

“போங்க போய் குளிச்சுட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்துவைக்கிறேன்” என்க.

“சரிம்மா” என்ற அழகி குளிக்க ஓடினாள்.

“சின்னச் சிறுக்கி மெதுவாப் போடி… கீழே விழுந்து வைக்காதே” என்று கடிந்துகொண்டார் தாயம்மா..

அவரைப் பார்த்து முறைத்த அழகி, “உனக்குத் தான் என்னைப் பிடிக்காதே… விழுந்தா விழுந்துட்டு போறேன் போ” என மிடுக்காக கூறினாள்.

“இந்த வீராப்புக்கு ஒன்னும் குறைச்சலில்லை” என்றவர் பக்கத்துவீட்டு பாட்டியிடம் கடலை வறுக்க ஆரம்பித்தார்.

மகள் வந்ததும் வைரம், ராசு என மூவரும் சேர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.

சாப்பிடும் போது ராசுவின் பார்வை அடிக்கடி மகளை வருடியது.

கணவனின் மௌனம் பொறுக்காத வைரம், “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கேட்க.

“ஒன்னுமில்லை வைரம்” என்ற ராசு,

“அம்மா பேசினதை போட்டு அலட்டிக்காதடி… அவங்க முன்னாடி உனக்காகப் பேசினால் நான் இல்லாத நேரத்தில் பிடுங்கி எடுத்திடுவாங்க… அதனால் தான் கடுமையா நடந்துகிட்டேன்” என ஒரு மாதிரியான குரலில் கூறினார்.

அதற்கு வைரம், “எனக்குப் புரியுதுங்க… ஆனால் நம்ம அழகிக்கு அது புரியலை, அந்த வயசும் இல்லை” என்றதோடு பேச்சை நிறுத்திக்கொண்டார்.

மனைவியின் தயக்கம் புரிந்த ராசு, “உனக்குத் தெரியாதது ஒன்னும் இல்லை வைரம்… என்னுடைய ஐந்து வயதிலேயே அப்பா இறந்துட்டார், அம்மா தான் தனியாளா இருந்து எல்லாம் பார்த்தாங்க” என்றவர்,

“ஒரு முறை சித்தப்பா வீட்டுக்குப் போனேன் அன்னைக்கு கறி சமைத்திருந்தாங்க போல்… அப்பாவுடைய அம்மா என்னை சாப்பிட சொன்னாங்க, அந்த வயதில் எனக்கு ஒன்னும் தெரியலை… நானும் ஆசையா சாப்பிட உட்கார்ந்துட்டேன் அப்ப சித்தி என்ன சொன்னாங்க தெரியுமா?”…

“சோத்துக்கு வக்கத்து போய் சூடுசுரணை இல்லாமல் திங்க வந்துட்டான்… இதற்குப் பதிலா பிச்சை எடுத்து திங்க வேண்டியது தானனு வாய்க்கு வந்தபடி பேசிட்டாங்க… எனக்கு கோபம் வந்துடுச்சு, போங்கடா நீங்களும் உங்க சாப்பாடும்னு அந்த வயசிலையே வந்தவன் தான் இன்னும் அங்க போனதில்லை… இதைக் கேள்விப்பட்ட அம்மா மனதளவில் இறுகிப் போயிட்டாங்க… மாடு மாதிரி உழைச்சாங்க… கடைசி காலத்தில் அம்மம்மா அத்தையிடம் படாதபாடு பட்டு இறந்ததை பார்த்து மருமகள்னா கொடுமைக்காரினு நம்ப ஆரம்பிச்சுட்டாங்க, இப்பவரை அதை அவங்களால் மாத்திக்க முடியலை” என்று கூறவும் வைரத்தின் மனம் பாரமானது.

“விடுங்க பார்த்துக்கலாம்” என வைரம் கூறவும்.

அதைக் கேட்ட அழகி அன்னையை பார்த்து முறைத்தாள்.

அதைப் பார்த்த ராசுவின் மனம் லேசாக தானாக முகத்தில் புன்னகை மலர்ந்தது.

தந்தையின் சிரிப்பில் மேலும் கோபம் கொண்ட அழகி சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

“இந்தாடி சின்ன சிறுக்கி… என்ன சாப்பிடற? படிக்கிற கழுதை இப்படியா சாப்பிடுறது? நல்லா அள்ளி திங்க வேண்டாம்” என பேத்தியை கடிந்துகொண்டார்.

அதற்கு, “உனக்குத் தான் நான்னா ஆகாதே அப்புறம் என்ன? நீயே திண்ணு… திண்ணுட்டு நல்லா பேசு” என சிறுமியான அழகி கூறினாள்.

“ஆமாம்! எனக்கு பெண் குழந்தைங்கனா பிடிக்காது தான் அதுக்கு என்னடி?” என்ற தாயம்மா,

“ஆம்பிள்ளை பசங்க தான் கடைசி காலத்தில் கஞ்சி ஊத்துவாங்க நீயா ஊத்தப் போற? என்ன இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவ தான?” என்க.

“நானும் போடுவேன்” என்றாள் விரைப்பாக.

“நல்லா போடுவடி… கல்லை எடுத்து தலையில்” என்று தாயம்மா கூறினார்.

அதில் காண்டான அழகி, “முதலில் உன்னுடைய தலையில் தான் போடணும்” என முணுமுணுத்தபடி சென்றுவிட்டாள்.

“இந்த முணுமுணுப்பெல்லாம் வேணாம் ஸ்கூலுக்கு கிளம்பற வழியை பார்” என தாயம்மா கூறவும்.

அழகி, “அது எனக்குத் தெரியும் உன்னுடைய வேலையை மட்டும் பார்” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.

கடுப்பான தாயம்மா, “புழுதி மாதிரி சரசரக்காமல் கிளம்புடி” என்று பேத்தியை அதட்டினார்.

“நான் புழுதியா? ஒரு நாள் புழுதி புயலா மாறும். உனக்கு அப்ப இருக்கு கிழவி” என்றவள் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

ராசு, “வைரம்… நான் கொண்டு போய் விடுறேன் சொல்லு” என மனைவியிடம் கூறவும்.

அழகி, “இத்தனை நாளா நீங்களா கொண்டுவந்து விட்டீங்க? இல்லை தான? அதே மாதிரி இப்பவும் நானே போயிக்கிறேன்” என்று கூறியவள் பையை மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினாள்.

மகளின் கேள்வி ராசுவின் மனதை தாக்க இவ்வளவு நேரம் இருந்த இளக்கம் மறைந்து அழுத்தம் குடிகொண்டது.

கணவனின் வலியை உணர்ந்த வைரம், “ஏதோ தெரியாமல் பேசுறா விடுங்க” என்று ஆறுதலாக கூறினார்.

“விடு வைரம்... நீ ஜாக்கிரதையா இரு நான் கிளம்பறேன்” என்றவர்,

“ஏதாவதுன்னா உடனே போன் பண்ணு, சொல்லாமல் இருக்காதே… பயப்படாமல் தைரியமா இரு… எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யாதே… தூங்கி ரெஸ்ட் எடு, அம்மா சொன்னாங்கனு வேலையே கதின்னு இருக்காதே” என்று கறாராக கூறினார்.

“சரிங்க… நான் பார்த்துக்கிறேன்… நீங்க வேலையில் கவனமா இருங்க” என வைரம் கூறினாள்.

சிறிது நேரத்தில் ராசு கிளம்பிவிட தாயம்மா அமைதியாக பக்கத்துவீட்டு பாட்டியுடன் பேச்சில் ஐக்கியமாகிவிட்டார்… அதன் பின் மருமகளை அவர் தொந்தரவு செய்யவில்லை.

இதுதான் தாயம்மா… மகனின் முன் குரலை உயர்த்தி பேசுவார்… இல்லாத நேரத்தில் வீண் பேச்சு இருக்காது.

காரணம்... எல்லோரும் தன்னைத் தான் முன்னிருத்த வேண்டும், தான் சொல்வதுதான் வேத வாக்காக இருக்கவேண்டும் என்பதே.

தாயம்மாவின் இந்த குணத்துக்கு காரணம் தனியாளாக நின்று வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டத்தை அனுபவித்ததே… அதனாலே மனம் இறுகி கரடுமுரடானவராகிவிட்டார்.

இந்த கல் மனது எப்போது கரையுமோ? யார் தான் கரைப்பாரோ? தெரியவில்லை…. கண்டிப்பாக ஒரு நாள் கரையும் அதில் ஐயமில்லை.

பிஞ்சு பாதம் நோக நடந்து ஸ்கூலுக்கு சென்றாள் அழகி.

சோகமாக வரும் அழகியை பார்த்த அவளது தோழி மாயா, “ஏன் சோகமாக இருக்கடி? தாய் கிழவியிடம் இன்னைக்கும் திட்டு வாங்குனியா?” என கேட்க.

“ஆமாம் மாயா” என்ற அழகி,

“எனக்கும் கோபம் வந்திடிச்சா நானும் தாய் கிழவியை திட்டிட்டேன்” என பெருமையாக கூறினாள்.

“சூப்பர் அழகி… அதுக்கு தாய் கிழவி என்ன பண்ணுச்சு?” என மாயா ஆர்வமாக கேட்டாள்.

“நான் பேசவும் ரொம்ப திட்டிடுச்சு மாயா” எற அழகி வருத்தமாக கூற.

மாயா, “இது தாய் கிழவி இல்லை பேய் கிழவி” என கோபமாக கூறியவள்,

“பேசாமல் அதை நம்ம நாயர் கடையில் வித்திடலாமா அழகி?” என கேட்க.

“நாயர் தாத்தா பாவம் மாயா… அப்புறம் தாய் கிழவி அவருடைய சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிட்டுடும்” என அழகி கூறவும்.

“அச்சோ! அப்ப வேணாம்… வேற ஏதாவது பண்ணி பேய் கிழவிக்கு பயம்காட்டுவோம் அழகி… இல்லைனா உன்னுடைய தம்பி பாப்பா வந்ததுக்கு பிறகு அவங்களையும் திட்டும்” என மாயா வருத்தமாக கூறினாள்.

அதற்கு அழகி, “என்னுடைய தம்பி பாப்பாவை திட்டினாங்க அடிச்சுடுவேன்” என்றவள்,

தொடர்ந்து, “தம்பி பாப்பாவை நான் தான் பார்த்துக்கணும்… அவங்களை யாரும் கஷ்டப்படுத்த விடக்கூடாது… பாப்பாவை எனக்காகத் தான் கடவுள் கொடுத்தாராம் அம்மம்மா சொல்லியிருக்காங்க” என்க.

“அம்மம்மா சொன்னா சரியாத் தான் இருக்கும் அழகி” என்றவள்,

“இந்த பேய் கிழவியை பயப்படுத்தி தம்பி பாப்பாவை திட்டவிடாமல் பண்ணிடலாம்” எனக்கூறி தோழிக்கு தைரியமூட்டினாள்.

“பிளான் எப்ப ஸ்டார்ட் பண்ணலாம் மாயா?” என அழகி அழுத்தமாக கேட்க.

மாயா, “அதை ஏன் தள்ளிப் போடுவானே? நம்ம மிஸ் அடிக்கடி சொல்வாங்க இல்லை அது மாதிரி இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணிடலாம் அழகி” என்று உற்சாகத்துடன் கூறினாள்.

“நீ சொன்ன மாதிரி பண்ணிடலாம்… ஆனால் எப்படி மாயா?” என அழகி கேட்க.

“அதையும் நானே சொல்றேன் அழகி” என்றவள்,

“நேத்து நான் ஒரு படம் பார்த்தேன் அதில் வர மாதிரி பண்ணிணா பேய் கிழிவி நல்ல கிழவியா மாறிடும்” என சிரிப்புடன் கூறியவள் அதைப் பற்றி தோழியிடம் கூறினாள்.

மாயாவின் திட்டத்தைக் கேட்ட அழகி, “ இதை செய்தால் பேய் கிழவி நல்ல கிழவியாகிடுமா மாயா?” என ஆர்வமாக கேட்க.

“கண்டிப்பா” என்றவள் அழகியுடன் வகுப்புக்கு சென்றாள்.

மகளின் பேச்சை கேட்டதிலிருந்து மனம் நிலையில்லாமல் தவித்த ராசு முதல் முறையாக தாயை தள்ளிவைத்துவிட்டு மனைவி மற்றும் அழகியின் நிலையிலிருந்து யோசிக்க ஆரம்பித்தார்.

யோசனை செய்யவும் தான் அவருக்கு தன்னுடைய தவறு புரிய ஆரம்பித்தது… வாழ்ந்து முடித்த தாயாரின் மனதை… கஷ்டப்படுத்தக்கூடாது என நினைத்து வாழ வந்த மனைவி மற்றும் வாழவே ஆரம்பிக்காத மகளின் மனதை நோகடித்தது புரிய ஆரம்பித்தது.

புரிந்தாலும் அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை… இருந்தாலும் எதையாவது செய்து அனைவரின் நிம்மதியையும் கொண்டுவர நினைத்தவர் நிம்மதியாக வேலையை ஆரம்பித்தார்.

மகனின் மாற்றத்தையும் பேத்தி கொடுக்க இருக்கும் அதிர்ச்சியும் தெரியாமல் தாயம்மா தோழியுடன் சேர்ந்து புறணி பேசிக்கொண்டிருந்தார்.

மாயா கொடுத்த தைரியத்தில் மாலை உற்சாகமாக வீட்டிற்கு வந்த அழகி தாயிடம் சென்று, “ம்மா பசிக்குது… சாப்பாடு கொடுங்க” என கேட்டவள் முகம் கழுவ சென்றுவிட்டாள்.

இதைக் கேட்ட தாயம்மா வாய்க்குள் முணுமுணுத்தார்.

அதைக் கேட்ட அழகி கோபத்தில் புயலாக மாற ஆரம்பித்தாள்.

வைரம், “வந்து சாப்பிடுடா” என அழைத்தார்.

அழகி சாப்பிட்டுக்கொண்டே, “ம்மா… நம்ம மாயாவுடைய பெரியப்பா பொண்ணை போன வாரம் கடத்திட்டாங்களாம்… இன்னும் கிடைக்கலையாம் தெரியுமா” என கண்கள் உருட்டி கூறினாள்.

மகளின் முகத்தைக் கண்ட வைரத்திற்கு அவளின் கள்ளத்தனம் புரிய அழகியை முறைக்க ஆரம்பித்தார்.

தாயின் முறைப்பைக் கண்டுக்காத அழகி, “அந்த கடத்தல் காரனுங்க நம்ம ஊருக்குள்ள வந்துட்டாங்களாம்… போலீஸ் அவங்களை தீவிரமா தேடிகிட்டு இருக்காங்க” என்று வெடியை கொளுத்திப் போட்டாள்.

அதில் பயந்த தாயம்மா, “அடியே வைரம்… சட்டுன்னு சாப்பிட்டு படுங்க, அந்த வாண்டையும் அடக்க ஒடுக்கமா வீட்டிலேயே இருக்க சொல்லு, ராசு வேற ஊரில் இல்லை… நாளைக்கு தான் வருவேன் ரெண்டு பேரையும் பார்த்துக்கோன்னு சொல்லிட்டுப் போயிருக்கான்” என்றவர் உண்டதும் வாசலிலேயே அமர்ந்துவிட்டார்.

தாயம்மாவின் பயத்தைக் கண்டுகொண்ட அழகி சன்னமாக சிரிக்க வைரம் மகளை கடிந்துகொண்டார்.

அழகி சொன்ன சேதியில் பயந்திருந்த தாயம்மாவிற்கு நேரமாகப் படுத்தும் தூக்கம் வராததால் விழித்தபடியே படுத்திருந்தார்.

நேரம் செல்லச் செல்ல தாயம்மாவின் இடுப்பிலும் முதுகிலும் சிறிது சிறிதாக வலி ஏற்பட்டு பாடாய் படுத்தியது.

நிறைமாத மருமகளிடம் கூறி பயப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவர் அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டார்.

இயற்கை உபாதையை கழிக்க எழுந்த அழகி, பாட்டியின் நிலையை கண்டு பயந்து போய்விட்டாள்.

"பாட்டி என்ன ஆச்சு?" என அழகி பதறிப் போய் கேட்க.

"ஒன்னும் இல்லை... சத்தம் போடாதேடி… பாட்டிக்கு கொஞ்சம் முடியலை அவ்வளவு தான்" என்றவர்,

"அம்மாவை எழுப்பாமல் நான் சொல்றதை செய் அழகி" என வேதனை நிறைந்த குரலில் கூறினார்.

"சரி" என்ற அழகி அவர் சொன்னபடி கசாயம் செய்து கொடுத்தாள்.

அதை குடித்தவருக்கு வலி கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட ஆரம்பித்தது.

வலி குறைந்ததும் தாயம்மா, "எனக்கு இப்ப பரவாயில்ல நீ போய் படு" என்க.

"கொஞ்ச நேரம் கழித்துப் போறேன் பாட்டி" என்றவள் பயத்தில் தாயம்மாவின் அருகிலேயே அமர்ந்துகொண்டாள்.

"பயப்படாமல் படு… முடியலைனா பாட்டி கூப்பிடறேன்" எனக்கூறி கட்டாயப்படுத்தி பேத்தியை படுக்க அனுப்பிவைத்தார்.

திரும்பித் திரும்பிச் செல்லும் பேத்தியை பார்த்தவருக்கு தூக்கம் தூர போனது.

ஏனோ அந்த இரவு கடந்த கால நினைவுகள், சுழல் சக்கரமாக அவரின் நியாபகத்தில் சுழல ஆரம்பித்தது.

இத்தனை நாளாக அதையெல்லாம் மறந்திருந்தவருக்கு கற்களும் முற்களும் நிறைந்த பாதை மனதில் வரவும் தான் செய்த தவறுகள் மண்டையில் உரைக்க ஆரம்பித்தது.

எப்படா விடியும் என காத்திருந்த தாயம்மா விடிந்ததும் வலியைப் பற்றி கவலைப்படாமல் முதல் வேலையாக தான் வணங்கும் அங்காள பரமேஸ்வரியை காணச் சென்றுவிட்டார்.

உலகத்திற்கேப் படியளக்கும் அன்னையின் காலில் விழுந்தவர் இத்தனை நாளாகத் தான் செய்த பாவத்திற்கு கண்ணீர் வழிய மன்னிப்பை யாசித்தார்.

அந்த அங்காள பரமேஸ்வரி தான் உலகத்திற்கே அன்னையாவாளே... எப்படி தன் மகளை கைவிடுவார்? ஒரு வகையில் அவர் தானே தாயம்மாவின் மனதை மாற்றியவர்.

அவருக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்த ராசுவிடமும்,அம்மாவிடமும் இரவு நடந்ததை ஒன்றுவிடாமல் அழகி கூறிவிட்டாள்.

அப்பொழுது வந்த தாயைக் கண்டதும் ராசு, "அம்மா… உடம்புக்கு என்ன ஆச்சு? வாங்க ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்" என அழைத்தார்.

தாயம்மா மகனிடம், “அம்மாவுக்கு ஒன்னும் இல்லைடா" என்று சமாதானம் செய்தவர்,

"சின்னக் குட்டி… இங்க வா” என மென்மையான குரலில் அழகியை அழைத்தார்.

அதற்கு அவளோ, “நான் ஒன்னும் சின்னக் குட்டி இல்லை… நீங்க தான எப்பவும் சின்ன சிறுக்கி, புழுதினு சொல்லுவீங்க” என்க.

“இந்த கிழவி ஏதோ புத்தி இல்லாமல் சொல்லிட்டேன் அழகி… நீ புழுதி இல்லடி அந்த அம்மனை அலங்கரிக்கும் பூ… உன்னால் தான் இந்த கிழவிக்கு நல்ல புத்தி வந்திருக்கு… இனிமேல் புழுதினு சொல்லமாட்டேன்” என்று உணர்ந்து கூறினார்.

ராசு, “அப்பாவும் தப்பு பண்ணிட்டேண்டா.… பாட்டிக்காக உன்னை ஒதுக்கினது நான் பண்ண மிகப்பெரிய பாவம்… மன்னிச்சுடுடா” என மகளிடம் மன்னிப்பை யாசித்தார்.

அதற்கு அழகி, “இப்ப இப்படித் தான் ரெண்டு பேரும் சொல்வீங்க… அப்புறம் பாப்பா பிறந்தா மறுபடியும் திட்ட ஆரம்பித்துவிடுவிங்க” என வருத்தமாகக் கூறவும்.

தாயம்மா, “எல்லாமே நான் பண்ணின தப்பு தான்… ஒரு பொண்ணா இருந்துகிட்டு இன்னொரு பொண்ணை ஒதுக்கினது மிகப்பெரிய பாவம்” என்று கூறி கண்ணீர் சிந்தினார்.

“அவ சின்ன பொண்ணு அத்தை… என்ன தெரியும்?” எனக்கூறி வைரம் தாயம்மாவை சமாதானம் செய்தார்.

“பிறக்கப் போற குழந்தை எதுவாக இருந்தாலும் சரி அழகிக்கு கிடைக்காத அத்தனையும் அதுக்குக் கிடைக்கணும்” என உணர்வுப் பூர்வமாக கூறினார்.

ராசு மனதில், ‘என் பொண்ணுக்கு இதுவரை நான் கொடுக்காத பாசத்தை இனி கொடுப்பேன் ம்மா… யாருக்காவும் என்னுடைய கடமையை விட்டு விலகமாட்டேன்’ என உறுதி பூண்டார்.

பாட்டி மனம் மாறியதை அழகி தன் அன்னையை அணைத்து பகிர்ந்துகொண்டாள்.

இந்த பூவுலகில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

***

நன்றி.
 
Hariuma

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
25

Dharsini

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
20
வைரம் பொறுமைசாலிதான்..அழகியினால் தாயம்மா,ராசுவின் மனமாற்றம் ரசிக்கும்படி அமைந்தது...வாழ்த்துக்கள் சிஸ்
 
அஞ்யுகா ஸ்ரீ

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
6
வைரம் பொறுமைசாலிதான்..அழகியினால் தாயம்மா,ராசுவின் மனமாற்றம் ரசிக்கும்படி அமைந்தது...வாழ்த்துக்கள் சிஸ்
நன்றி சிஸ் 😍😍😍
 
Top